Saturday 24 March 2012

எந்தவொரு வெளிநாட்டு சக்தியையும் அனுமதிக்கப் போவதில்லை – சிறிலங்கா அதிபர் உறுதி



ஐ.நா மனிதஉரிமைக்ள பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தினால், நாட்டின் இறைமைக்கோ அல்லது ஒருமைப்பாட்டுக்கோ அச்சுறுத்தல் ஏற்படாது என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்நேற்று இடம்பெற்ற பொதுநிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“நாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த எந்தவொரு வெளிநாட்டு சக்தியையும் அனுமதிக்கப் போவதில்லை.அதேவேளை சிறிலங்கா அரசின் நல்லிணக்க மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

நாட்டின் பிரச்சினைகளை உள்ளக வழிமுறைகள் மூலமே தீர்க்க வேண்டும்.
சதிகாரர்கள், சந்தர்ப்பவாதிகள், தேசத்துரோகிளுக்கு நாடு இரையாகாமல் இருப்பதற்கு நாடெங்கும் மக்கள் ஒன்றுபட வேண்டும்.

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை 15 நாடுகள் எதிர்த்துள்ளன. 47 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் மேலும் 8 நாடுகள் இந்தத் தீர்மானத்தை ஆதரிக்காமல் நடுநிலை வகித்துள்ளன.

சிறிலங்காவுக்கு எதிராக வாக்களித்த நாடுகள் எதிர்காலத்தில் தீவிரவாதத்தின் விளைவுகள் குறித்து கவலைப்பட வேண்டியிருக்கும்“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment