Sunday 25 March 2012

சிரியா – போராளிக்குழுக்களை ஒற்றுமைப்படுத்த முயற்சிசிரியாவில் உள்ள போராளிக்குழுக்களை ஒற்றுமைப் படுத்துவதற்கான முயற்சியில் படைத்துறை ஜெனரல் றியாட் அல் ஆஸாட் ஈடுபட்டுள்ளதாக இன்று துருக்கியில் இருந்து வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.

சிரியாவில் தற்போது இருபதுக்கும் மேற்பட்ட போராளிக் குழுக்கள் சர்வாதிகாரி ஆஸாட்டுக்கு எதிராக களமிறங்கியுள்ளன. ஆனால் இவர்களுக்கிடையில் ஒற்றுமை நிலவாத காரணத்தால் ஆஸாட்டுக்கு எதிரான போராட்டத்தை அடுத்த படிக்கு முன்னேற்ற முடியாமலிருக்கிறது. இந்தப் பின்னடைவில் மாற்றத்தை ஏற்படுத்த சிரிய போராளிக் குழுக்களில் சர்வதேச ஆதரவு பெற்ற, அல் குவைடா தொடர்பற்ற நான்கு சிரிய போரானிக்குழு முயன்றுள்ளது.

எப்படி லிபியாவில் பல்வேறு போராளிக் குழுக்களும் ஒரு ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி, பணிகளை பிரித்தெடுத்து போராடி வெற்றி பெற்றனவோ அதேபோல சிரியாவிலும் ஓர் போராட்டக்குழு உயர் ஆணையம் அமைக்கப்பட்டு, அதனடிப்படையில் பணிகள் முடுக்கிவிடப்பட வேண்டுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சிரியாவில் உள்ள நான்கு பிரிகேட் படையணிகளின் ஜெனரல்கள் இப்போது போராளிக் குழுக்களுடன் இணைந்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சிரிய போராட்டக் குழுக்களுக்கு சவுதி, கட்டார் போன்ற நாடுகள் தேவையான நவீன ஆயுதங்களை வழங்குவதற்கு சம்மதித்துள்ளன. ஆயுதங்கள் இருந்தாலும் போராட்டம் சரியான பாதையில் நெறிப்படுத்தப்பட்டால் மட்டுமே அடுத்த கட்டத்திற்குள் நுழைய முடியும் என்பது தெரிந்ததே. சரியாக நெறிப்படுத்துவார்களாக இருந்தால் சிரிய அதிபர் ஆஸாட்டுடைய நாட்கள் எண்ணப்பட ஆரம்பித்துவிடும்.

இதேவேளை தென்கிழக்கு துருக்கியில் குர்டிஸ்தானிய போராளிகளுக்கு எதிரான தாக்குலை துருக்கியப் படைகள் மேற்கொண்டு சுமார் 15 குர்டிஸ்தானிய போராளிகளை சுட்டுக் கொன்றுள்ளன. மேலும் ஆப்கான் கந்தகார் நகரில் நேற்று இடம் பெற்ற வீதிக்கண்ணி வெடியில் ஒன்பது படையினர் கொல்லப்பட்டனர். இவர்களில் ஒருவர் மட்டும் நேட்டோவுடன் சிறிய தொடர்புடையவர் மற்றவர்கள் அனைவரும் ஆப்கான் படையினராகும்.
தற்போது தென்கொரியாவில் உலகின் ஐம்பது முக்கிய நாடுகள் பங்கேற்கும் அணு ஆயுத ஆபத்துத் தடை மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அணு ஆயுதத்ததை எதிர் காலத்தில் மனிதன் எப்படி பாவிக்கப் போகிறான். அதனால் வரக்கூடிய ஆபத்துக்கள் என்ன.. அவற்றில் இருந்து உலகத்தை மீட்பது எப்படியென்ற கோணத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் சென்றுள்ளார். இவர் அங்கிருந்து புறப்பட்டு வடகொரியா – தென் கொரியா எல்லைப் பகுதிக்கு போகிறார். அங்கிருந்து தொலை நோககி மூலம் வடகொரியாவை பார்ப்பார் என்றும் தென்கொரிய தொலைக்காட்சி தெரிவித்தது.

அதேநேரம் வடகொரியா தனது புதிய ராக்கட்டை நாட்டின் வடமேற்கு புறம் நோக்கி சற்று முன் நகர்த்த ஆரம்பித்துள்ளது. வடகொரிய ஏவுகணைகளை நெறிப்படுத்தும் முயற்சிக்கான சற்லைற்றை இந்த ராக்கட் ஏந்திச் செல்லவுள்ளது. வரும் ஏப்ரல் 15ம் திகதி இந்த ராக்கட் பறக்கவுள்ளது. வடகொரியாவை தாபித்த கிம் இல் சுங்கின் 400 வருட நினைவாக இந்த சற்லைற் ஏவப்படுகிறது.

வடகொரியாவின் இந்த முயற்சி தீய நோக்கத்துடன் தொடர்புடையது என்று சற்று முன் தென் கொரியாவில் வைத்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார். இந்த சற்லைற்றானது அமெரிக்காவின் மேற்குப்பகுதி அலாஸ்காவை நோக்கி அணு ஆயுத ஏவுகணையை செலுத்த உதவும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. தீய நோக்கம் எப்போதுமே நல்ல பலனைத் தருவதில்லை என்று பராக் ஒபாமா தெரிவித்தார். இந்த ஆபத்தை சந்திக்க வசதியாக தற்போது 30.000 அமெரிக்கப் படையினர் வடகொரியாவில் நிறுத்தப்பட்டுள்ளனர். வடகொரியாவுக்கான உதவிகளை நிறுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

இது இவ்விதமிருக்க சென்ற ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி காரணமாக அறுத்துக் கொண்டு தொலைந்துபோன மீன்பிடி ரோலர் ஒன்று கடந்த ஒரு வருட காலமாக பசுபிக் பெரும் சமுத்திரத்தில் மிதந்து, கறள் கட்டி, கனடாவின் மேற்குக் கரையில் உள்ள பிரிட்டீஸ் கொலம்பியாவை வந்தடைந்துள்ளது. படகு நல்ல நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். ஒரு வருடமாக சற்லைற்றுக்களை ஏமாற்றி இந்த ரோலர் பயணித்துள்ளமை அதிசமான விடயமாகும்.

No comments:

Post a Comment