Saturday 31 March 2012

உலகில் அதிகூடிய ஜாக்பாட் பரிசுத்தொகை வெல்லப்பட்டுள்ளது



உலகிலேயே அதிகூடிய ஜாக்பாட் தொகை, அதிஷ்ட லாபச்சீட்டில் வெற்றிபெற்றுள்ளது.

 மெகா மில்லியன் Prize சார்பில் நேற்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட இக்குலுக்களில் 2,4,23,38,46 மற்றும் Mega Ball 23 எனும் இலக்கங்கள் வெற்றி இலக்கங்களாக அறிவிக்கப்பட்டன. அமெரிக்காவின் 42 மாநிலங்களுக்கான இந்த ஜாக்பாட் லாட்டரியில், மேரிலாண்டில் இதே இலக்கங்களுடன் ஒரு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்ததை அடுத்து இப்பரிசுத்தொகை வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



வெற்றியாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்களாக இருப்பின் பணப்பரிசு பகிர்ந்தளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஜாக்பாட்டின் மொத்த பரிசு தொகை 640 மில்லியன் அமெரிக்க டாலர்கள். கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தொடர்ந்து நடைபெற்ற 18 லாபச்சீட்டு குழுக்களில் எவரும் வெற்றி பெறாததால் பரிசுத்தொகை இவ்வாறு பல மடங்காக அதிகரித்துள்ளது.

இப்போது ஜாக்பட் வெற்றியாளர், தனது மொத்த பணப்பரிசுத்தொகையை, 26 கட்டங்களில் அதாவது வருடத்திற்கு 24 மில்லியன் என்ற கணக்கில் பெற்றுக்கொள்ளலாம். அல்லது 460 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒரே தடவையில் காசாக பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2007இல் 390 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வெற்றிப்பெற்றதே இதுவரை உலகில் ஜாக்பாட்டில் வெல்லப்பட்ட அதிகூடிய பரிசுத்தொகையாக இருந்தது.
இப்போது ஜாக்பட் வெல்லப்பட்டவர் தன்னை வெளியில் அடையாளப்படுத்திக்கொள்ளாமல் இருப்பதே நல்லது. வெற்றி பெற்ற பணத்தை என்ன செய்யலாம் என நண்பர்களிடம் ஆலோசனை கேட்காதீர்கள். உங்களிடம் உண்மையில் ஒரு திட்டமில்லை எனில் உடனடியாக ஒரு நிதி ஆலோசகரை நியமித்து கொள்ளுங்கள் என அவருக்கு அறிவுரை வழங்குகிறார்கள் நிதி ஆலோசகர்கள்.

இதுவரை ஐரோப்பாவில் வெல்லப்பட்ட அதிகூடிய ஜாக்பாட் தொகை 257.8 மில்லியன் அமெரிக்க டாலர் (ஜூலை, 2011)
சீனாவில் வெல்லப்பட்ட அதிகூடிய ஜாக்பாட் தொகை : 79.8 மில்லியன் (ஜூலை, 2011)

No comments:

Post a Comment