Wednesday 11 April 2012

ராஜபக்சவுடன் விருந்தா? எம்.பிக்கள் குழுவில் அ.தி.மு.க., இடம்பெறாது: ஜெயலலிதா



ராஜபக்சேவின் விருந்தில் இந்திய எம்.பிக்கள் கலந்து கொள்ளுமா என்பது தொடர்பில் விளக்கம் இல்லாத நிலையில் இலங்கை செல்லும் இந்திய எம்.பி.,க்கள் குழுவில் அ.தி.மு.க., இடம்பெறாது என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைக்கு செல்லும் இந்திய எம்.பி.,க்கள் குழு அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷேவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் எம்.பி.,க்கள் குழு ராஜபக்ஷே அளிக்கும் விருந்தில் கலந்து கொள்ளும் என தெரிகிறது. எனவே இலங்கை செல்லும் எம்.பி.,க்கள் குழுவில் அ.தி.மு.க., இடம்பெறாது என கூறியுள்ளார்.  இதனிடையே இலங்கை செல்லும் எம்.பி.,க்கள் குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த குழு சுஷ்மா சுவராஜ் தலைமையில் செல்கிறது. 
 
இந்தக் குழுவில் சுஷ்மா சுவராஜ்(பா.ஜ.,), ரவி பெர்னார்ட்(அ.தி.மு.க.,), டி.கே.எஸ்.இளங்கோவன்(தி.மு.க.,),  சித்தார்த்மொகபத்ரா(பீஜூ ஜனதா தளம்), சைலேந்திர குமார்(சமாஜ்வாடி), ஹல்தார்( திரிணமுல் காங்கிரஸ்), ஜேசுதாஸ் சீலம்(காங்.,), எம்.கிருஷ்ணசாமி(காங்.,), சுதர்சன நாச்சியப்பன்(காங்.,)  மாணிக் தாகூர்(காங்.) என்.எஸ்.வி.சித்தன்(காங்.,), டி.கே.ரங்கராஜன்(சி.பி.எம்), பல்பீர் பஞ்சி ( பா.ஜ.,) பிரகலாத் வெங்கடேஷ்ஜோஷி, சிவானந்த் திவாரி ஆகியோர் செல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது

Monday 9 April 2012

லண்டன் ஒலிம்பிக் இணையத்தளத்தை முடக்கியுள்ளது ஈரான்?



லண்டனில் நடைபெறவுள்ள கோடை ஒலிம்பிக் போட்டிகளின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தை
ஈரான் தடை செய்துள்ளதாக முறைப்பாடு எழுந்துள்ளது. London2012.Com எனும் குறித்த இணையத்தளத்தை தேடுபொறிகளில் தேடினால் தானாக Peyvandha.ir எனும் மாற்றுத்தளத்திற்கு செல்வதாக ஈரானியர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பில் ஈரானின் வெளிவிவகார அமைச்சிடம் முறையிடப்பட்டுள்ள போதும் அவர்கள் பதில் அளிக்க மறுத்துள்ளனர். ஈரானின் அரச தலைமைகள் அண்மையில் விடுத்த உத்தரவின் படி சைபர் கஃபேக்களில் இணையத்தை உபயோகிக்கும் ஈரானியர்கள், அவர்களுடைய ID, மற்றும் பெயர் விபரங்களை பதிவிட வேண்டிய விதிமுறை கொண்டுவரப்பட்டது.

மேலும் லண்டன் ஒலிம்பிக்கின் லோகோவில் Zion எனும் வார்த்தை பிரயோகம் தோன்றுவதாகவும், இது இஸ்ரேல் அல்லது ஜெருசேலத்தை குறிப்பதாக இருப்பதாகவும், ஈரான் சர்ச்சை எழுப்பியிருந்ததுடன், இந்த லோகோவை மாற்றும் படி லண்டன் ஒலிம்பிக் கமிட்டியிடம் முறையிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

எனினும் இந்த சர்ச்சைகள் ஈரானிய வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதை பாதிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. உலக பாரம்தூக்கல் போட்டிகளில் சிறந்து விளங்கும் ஈரானியரான பெஹ்தாத் சலிம்கொர்டசியாப் ஒலிம்பிக் போட்டிகளில் இம்முறை சாதிப்பார் என ஈரானியர்கள் நம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Sunday 8 April 2012

இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம்: அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கை



கொழும்பு, ஏப்.8: இலங்கைக்கு எதிராக உலக நாடுகள் பொருளாதாரத் தடையை விதிக்க கூடிய சாத்தியம் அதிகரித்து வருவதாக அரசியல் வல்லுநர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிறிய நாடு ஒன்று ஐ.நா. தீர்மானத்தை கொச்சைப்படுத்தும் வகையில் செயற்படுவது அவ்வளவு நல்லதல்ல என்ற அடிப்படையிலும், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்தமைக்காக, இந்தியாவுக்கு எதிராக சீனாவுடன் நெருங்கிய தொடர்பை வலுப்படுத்த இலங்கை அரசு முயற்சிப்பதையும் அடுத்து, இலங்கை மீது பொருளாதாரத் தடையை விதிக்க அமெரிக்கா உத்தேசித்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிப்பதன் மூலம் இலங்கை மக்கள் தற்போது உள்ள ஆட்சியை மாற்றி அமைக்க முற்படுவர். எனவே எந்நேரமும் பொருளாதாரத் தடைபற்றிய அறிவித்தல் வெளியாகலாம் என்பதால் இலங்கை அரசு தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என அரசியல் வல்லுநர்கள் அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் மிகச்சிறிய நகரை கைப்பற்றிய இரு வியட்நாம் குறு நில மன்னர்கள்?



ஒரே ஒரு நபர் வசித்து வந்த அமெரிக்காவின் மிகச்சிறிய நகரத்தை இரு வியட்நாம் வர்த்தகர்கள் ஏலத்தில் எடுத்துள்ள விவகாரம் ஊடகங்களில் இப்போது அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அமெரிக்காவின் வுயோமிங் மாநிலத்தில் உள்ள புஃபோர்ட் (Buford) எனும் குறித்த  நகரம் மூன்று படுக்கை அறைகள் கொண்ட ஓர் வீடு, எரிபொருள் நிரப்பு நிலையத்துடன் கூடிய ஓர் வர்த்தக நிலையம், மேலும் சில அனாதரவான சிறிய கட்டிட தொகுதிகளை கொண்ட சிறிய நகரமாக இருந்துள்ளது. இங்கு வசித்தவர்கள் பெருநகரங்களை நோக்கி இடம்பெயர்ந்ததை அடுத்து,  தனது மனைவி மற்றும் மகனுடன், டோன் சமொன்ஸ் எனும் நபர் மட்டும் இறுதியாக வாழ்ந்துவந்தார்.
  இந்நிலையில் அவருடைய மனைவி 15 வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்ததை அடுத்து மகனும் தனது 18 வயதில் தந்தையைவிட்டு தனியாக சென்றுவிட்டான். இறுதியாக சாமொன்ஸ் மட்டுமே அக்கிராமத்தில் வாழ்ந்துவந்ததால் அவருக்கெனெ அமெரிக்க அரசினால் தனியான தபாள் அடையாள அட்டை இலக்கம்  கூட கொடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் இப்போது அவரும்  அந்நகரத்தை விட்டு செல்ல முடிவெடுக்கவே புஃபோர்ட் நகரம் ஏலத்தில் விடப்படுவதாக ஆன்லைன் மூலம் அறிவிக்கப்பட்டது. இதை கேள்விப்பட்ட இரு வியட்நாமிய செல்வந்த வர்த்தகர்கள் அங்கு சென்று ஏலத்தில் பங்கெடுத்ததுடன், 900,000 அமெரிக்க டாலர்களுக்கு அக்கிராமத்தை வாங்கிக்கொண்டனர். எனினும் அவ்வர்த்தகர்களின் பெயர், விபரங்கள் ஏதும் வெளிவிடப்படவில்லை. அவர்கள் அக்கிராமத்தை வைத்து என்ன செய்ய போகிறார்கள் என்பதும் தெரியவில்லை.

அமெரிக்காவின் மிகச்சிறிய நகரமாக இதுவரை வரலாற்றில் பதியப்பட்டிருந்த புஃபோர்ட் நகரம் இந்த ஏலத்தின் மூலம் தனது பெருமையை இழந்துள்ளதாக கருதும் டான் சாமொன்ஸ், தனது வாழ்நாளில் பாதியை இங்கு வாழ்ந்திருந்ததால் இக்கிராமத்தை விட்டு தன்னால் பிரிய முடியாதுள்ளதாக உணர்ச்சிவசப்பட்டுள்ளார்.

தனியொரு நகரத்தையே ஏலத்திற்கு விடும் இப்புதிய வர்த்தக முறை வருங்காலத்தில் பிரபலமாக தொடங்கினால், அவற்றை வாங்கும் நபர்கள், குறு நில மன்னர்கள் போல தனி ஆட்சியே நடத்த முடியும் நிலை தோன்றக்கூடும் என்கிறார்கள் விமர்சகர்கள்.

ஈழத் தமிழரின் காலை வாரிய "கம்யூனிச நாடுகள்" - ஓர் ஆய்வு



ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானங்களை, கியூபா, சீனா போன்ற "கம்யூனிச நாடுகள்" எதிர்த்து வந்துள்ளன. தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப் படும் பொழுது, இந்த நாடுகள் எதிர்த்து வாக்களித்து வந்துள்ளன. கம்யூனிஸ்ட் நாடுகள் என்று அறியப்பட்டிருக்கும் சீனாவும் கியூபாவும் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருப்பதற்கு என்ன காரணம்? உலகில் எங்கு மக்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டிய கம்யூனிஸ்ட் கட்சிகள், ஏன் இன்று ஆதிக்கச் சக்திகளுக்குத் துணை போகின்றன? இலங்கை அரசின் போர்க் குற்றங்களை கியூபா அறிந்திருக்கவில்லையா? குறிப்பாக, வலதுசாரித் தமிழ்தேசியவாதிகள், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, "கம்யூனிச நாடுகள் தமிழ் மக்களின் விரோதிகள்" என்ற தொனியில் பிரச்சாரம் செய்கின்றனர். தமிழ் கம்யூனிச எதிர்ப்பாளர்களின் பிரச்சாரம் ஒரு புறமிருக்க; ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில் எதிர்த்து வாக்களிக்கும் நாடுகளின் நோக்கம் என்ன? இந்தக் கட்டுரை, அந்த நாடுகளின் அரசியல் நிலைப்பாட்டை புரிந்து கொள்ளும் முயற்சியே அன்றி, அவர்களின் செயலை நியாயப் படுத்தும் நோக்கம் கிடையாது என்பதை, முதலிலேயே தெளிவு படுத்த விரும்புகின்றேன்.

இலங்கையில் இனப்படுகொலை, நீதிக்கு புறம்பான படுகொலைகள், மனித உரிமை மீறல்கள்... இவை எல்லாம் ஈழப்போரில் மட்டுமே முதல் தடவையாக நடந்துள்ளன என்று நினைப்பது எமது அறியாமை. ஏற்கனவே, 1971 ம் ஆண்டு தெற்கில் எழுந்த ஜேவிபி கிளர்ச்சி அடக்கப் பட்ட பொழுதே இவை எல்லாம் நடந்திருக்கின்றன. அப்பொழுதெல்லாம், யாரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில், அது பற்றி கேள்வி எழுப்பவில்லை. இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப் படவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, சோஷலிச நாடுகள் எல்லாம் ஓரணியில் நின்று, இலங்கையில் சோஷலிசத்திற்காக எழுச்சி பெற்ற மக்களை அழிக்க உதவி செய்தன. அன்று, உலகில் எந்தவொரு நாடுமே, ஜேவிபியின் கிளர்ச்சியை ஆதரிக்கவில்லை. முதலாளித்துவ மேற்குலக நாடுகளைப் பொறுத்த வரையில், அவர்களின் நிலைப்பாடு தெளிவானது. உலகில் எங்கெல்லாம் சோஷலிசத்தின் பெயரில் கிளர்ச்சி நடக்கின்றதோ, அவற்றை அழித்தொழிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், சோஷலிச நாடுகள் அப்படி நடந்து கொள்ளலாமா?

அன்று, "ஆயுதப் போராட்டம் மூலமே சோஷலிசம் சாத்தியம்." என்று ஜேவிபி கூறி வந்தது. சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்த இளைஞர் அணி என்பதால், மார்க்ஸ் முதல் ஸ்டாலின் வரையிலான உருவப் படங்களை வைத்திருந்தது. சேகுவேராவின் தத்துவங்களை நடைமுறைப் படுத்துவதாகவும் கூறிக் கொண்டது. நாட்டுப்புற மக்கள் அவர்களை "சேகுவேரா காரர்கள்" என்றும் அழைத்தனர். இவ்வளவும் இருந்தும், சோவியத் யூனியன், மாவோவின் சீனா, காஸ்ட்ரோவின் கியூபா போன்ற கம்யூனிச நாடுகள் எல்லாம், இலங்கை அரசை தான் ஆதரித்தன! ஜேவிபி உறுப்பினர்களை தேடி அழித்த, அரச படைகளுக்கு ஆயுதங்கள் வழங்கின. இந்தியப் படைகள் நேரடியாக களத்தில் இறங்கி, அழித்தொழிப்பில் ஈடுபட்டன.

அந்த வருடம் மட்டும், எண்பதாயிரம் பேர் அளவில் கொல்லப் பட்டதாக தெரிய வருகின்றது. இத்தனைக்கும் இலங்கை ஒரு போதும் சோஷலிச நாடாக இருக்கவில்லை. உள்நாட்டு முதலாளித்துவ சக்திகளின் ஆதிக்கத்தில் இருந்தது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக நிற்க வேண்டிய கம்யூனிச நாடுகள், ஒடுக்கப்பட்ட மக்களின் இயக்கத்தை அடக்க துணை போனார்கள். ஜேவிபி யின் தலைமையும், அதன் கொள்கைகளும் எமக்கு ஏற்புடையதல்ல என்பது வேறு விடயம். ஆனால், அந்த இயக்கம், இலங்கையின் பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினரை பிரதிநிதித்துவப் படுத்தியது என்ற உண்மையை எவராவது மறுக்க முடியுமா? ஒரு உயர்சாதியினரின் அரசு, தாழ்த்தப்பட்ட சாதி மக்களை கொன்று குவித்தது இனப்படுகொலை ஆகாதா?

எழுபதுகளில் நடந்த இனப்படுகொலையில், இலங்கை அரசுக்கு உறுதுணையாக நின்ற இந்தியாவும், கம்யூனிச நாடுகளும், 2009 ம் ஆண்டு, முள்ளிவாய்க்காலில் மீண்டும் ஒன்று சேர்ந்தன. "கம்யூனிச நாடுகளை தமிழர்களுக்கு மட்டுமே எதிரானதாக" காட்டுவது, குறுகிய மனப்பான்மை கொண்ட தமிழ் இனவாதிகள் மட்டுமே. அவர்களுக்கு எழுபதுகளில் நடந்த சம்பவங்கள் எதுவும் தெரியாது. தெரிந்து கொள்ள விருப்பமும் கிடையாது. தெரிந்தாலும் புறக்கணிப்பார்கள். ஆனால், தமிழ் மக்கள் மீது உண்மையான பரிவு கொண்டோர், அப்படி நடக்க முடியாது. எல்லாவற்றையும் அலசி ஆராய்வது அவசியம். உலகில் எங்கெல்லாம் மக்கள் ஒடுக்கப்பட்டாலும், அதற்கு உறுதுணையாக நிற்க வேண்டிய கம்யூனிச நாடுகள், ஏன் இன்று ஆதிக்க சக்திகளுக்கு துணை போகின்றன? அது "இன்று" மட்டும் நடக்கவில்லை. ஐம்பதுகளில், கம்யூனிச இயக்கத்தில் ஏற்பட்ட பாரிய மாற்றத்தின் விளைவு. ஸ்டாலினின் மறைவு, இரண்டாவது கம்யூனிச அகிலத்தின் சீர்குலைவு, இவற்றின் பின்னர் ஆரம்பமாகியது. சோவியத் யூனியனுடன் பகை முரண்பாடுகள் ஏற்பட்ட பின்னர், டிட்டோவின் யூகோஸ்லேவியாவும், மாவோவின் சீனாவும் மூன்றாமுலக முதலாளித்துவ நாடுகளுடன் நட்புறவை புதுப்பித்துக் கொண்டன.

ஸ்டாலின் காலத்தில், உலகில் எந்த நாட்டில் கம்யூனிஸ்டுகளின் போராட்டம் நடந்தாலும், அதற்கு உதவ வேண்டும் என்ற கொள்கை பின்பற்றப் பட்டது. (அப்பொழுதும் கிரேக்கத்தில் போராடிய கம்யூனிஸ்ட் கட்சிக்கு உதவவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது.) ஆனால், குருஷேவின் பதவிக் காலத்தில் அந்தக் கொள்கை மாற்றப் பட்டது. "சமாதான சகவாழ்வு", "முதலாளித்துவ நாடுகளுடன் நட்புறவு", "அனைத்து பிரஜைகளுக்குமான அரசு" போன்ற கொள்கைகள் பின்பற்றப் பட்டன. ஸ்டாலினின் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் நிராகரிக்கப் பட்டது. கம்யூனிச இயக்க வழக்கத்திற்கு மாறாக, ஒரு முதலாளித்துவ நாடான இந்தியாவுடன் நெருக்கமான நட்புறவு ஏற்பட்டது. உலகம் இரண்டு முகாம்களாக பிரிந்து நின்றன. ஒவ்வொரு நாடும், ஒன்றில் அமெரிக்க முகாமில், அல்லது சோவியத் முகாமில் சேர்ந்து கொண்டன. அப்படிச் சேரும் நாடுகள், கொள்கை அடிப்படையில் ஒத்துப் போக வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அன்று இந்திரா காந்தியின் இந்தியாவும், சிறிமாவோவின் சிறிலங்காவும் சோவியத் முகாமில் தான் சேர்ந்திருந்தன.

மனித உரிமைகள், போர்க்குற்ற விசாரணை, இவை எல்லாம் எண்பதுகளுக்கு பின்னர் தான் சூடு பிடித்தன. இன்னும் சொல்லப் போனால், சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் தான், அதைப் பற்றி உலகம் அக்கறைப் பட்டது. பனிப்போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், இதைப் பற்றி யாரும், ஐ.நா. சபை உட்பட, கவலைப் படவில்லை. இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், இவை எந்த நாட்டில் நடந்தாலும், அந்த நாட்டின் மேல் நடவடிக்கை எடுக்கப் படவில்லை. அந்த நாடு, அமெரிக்க முகாமை சேர்ந்தது என்றால், அமெரிக்கா வீட்டோ பிரயோகிக்கும். சோவியத் முகாமை சேர்ந்த நாடென்றால், சோவியத் யூனியன் வீட்டோ பிரயோகிக்கும். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின்னர், பாதுகாப்புச் சபையில் நடந்து வந்த பலப்பரீட்சை ஒரு முடிவுக்கு வந்தது. ஆனால், அமெரிக்காவின் ஏக வல்லரசு அபிலாஷைக்கு எதிரான நாடுகள் உதிரிகளாக நின்று எதிர்ப்புக் காட்டின. எப்போதெல்லாம் ஐ.நா. அவையில், ஒரு நாட்டுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப் படுகின்றதோ, அப்பொழுதெல்லாம் ஒருமித்த கருத்து ஏற்படுவது அரிதாகவே நடந்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் கூடும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டத்தில், கொண்டு வரப் படும் தீர்மானங்கள் எல்லாமே, அரசியல் சார்புத் தன்மை கொண்டிராதவை என்று கூற முடியாது. குறிப்பாக, சர்வதேச கவனம் பெற்ற, யூகோஸ்லேவியா, ஆப்கானிஸ்தான், ஆகிய நாடுகளுக்கு எதிரான தீர்மானங்கள், அமெரிக்காவின் நலன்களுக்காக கொண்டு வரப்பட்டவை என்ற விமர்சனங்கள் எழுந்தன. ரஷ்யா, சீனா, கியூபா போன்ற நாடுகள் அவற்றை எதிர்த்து வந்துள்ளன. உலகெங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளும், பிற இடதுசாரி அமைப்புகளும், அமெரிக்காவின் மனிதாபிமான இராணுவ நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தன. "அந்த நாடுகளில் அடக்கப்படும் சிறுபான்மை இனங்களை பாதுகாப்பதற்காகவே," இந்த தீர்மானங்களை கொண்டு வருவதாக அமெரிக்கா கூறிக் கொண்டது.

யூகோஸ்லேவியாவில் ஒடுக்கப்பட்ட கொசோவோ அல்பேனியர்களும், ஈராக்கில் ஒடுக்கப்பட்ட குர்தியர்களும், அமெரிக்காவின் ஐ.நா. தீர்மானங்களை வரவேற்றார்கள். அதே நேரம், "தமக்கு எதிராக வாக்களித்த" ரஷ்யா, சீனா, கியூபா, போன்ற நாடுகளை மிகவும் வெறுத்திருப்பார்கள். ஆனால், இதற்கு மறுபக்கம் ஒன்றுண்டு. கொசோவோ அல்பேனிய மக்களுக்கு ஆதரவான ஐ.நா. தீர்மானத்தை, அல்பேனிய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்தது. ஈராக் குர்து மக்களுக்கு ஆதரவான ஐ.நா. தீர்மானத்தை, துருக்கி குர்திய விடுதலை இயக்கமான பி.கே.கே. எதிர்த்தது. இந்த முரண்பாட்டை எப்படி விளக்குவீர்கள்?

"கம்யூனிச நாடுகள், ஐ.நா.வில் தமிழர்களுக்கு எதிராக வாக்களித்ததாக," நமது வலதுசாரித் தமிழ் தேசியவாதிகள் கூறி வருகின்றனர். அதே மாதிரியான பிரச்சாரங்கள் கொசோவோவிலும், குர்திஸ்தானிலும் நடந்துள்ளன. "கம்யூனிச கொள்கைக்கு விரோதமாக, ஒடுக்கப் பட்ட மக்களுக்கு எதிராக, சர்வாதிகாரிகளின் கொடுங்கோல் ஆட்சிக்கு ஆதரவாக துணை போன கம்யூனிச நாடுகள்," என்றெல்லாம் மேற்கத்திய நாடுகளில் பிரச்சாரம் செய்யப் பட்டது. அப்பொழுதெல்லாம், நமது தமிழ் தேசியவாதிகள் ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்பதாக பிரகடனம் செய்தார்கள். மிகவும் நல்லது. இதேயளவு ஆர்வம் பாலஸ்தீனப் பிரச்சினையில் காணப்படவில்லையே? அது ஏன்?

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில், இஸ்ரேலுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படும் போதெல்லாம், அமெரிக்கா எதிர்த்து வாக்களித்ததே, அது ஏன்? "உலகமெல்லாம் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கு ஆதரவளிக்கும்," தேசியவாதிகள் எங்கே போய் ஒளிந்தார்கள்? அறுபதாண்டுகளாக ஒடுக்கப்படும் பாலஸ்தீன சிறுபான்மை இனம் அவர்கள் கண்களுக்கு அகப்படாமல் போனது எப்படி? மேற்கத்திய நாடுகளின் ஆசீர்வாதம் பெற்ற அரசுகள், சிறுபான்மை இனங்களை ஒடுக்கினால், நாம் கண்டுகொள்ளக் கூடாதா? ஈழத் தமிழர்களை அழித்த ராஜபக்சே அரசுக்கும் மேற்கத்திய நாடுகளின் ஆசீர்வாதம் கிடைத்தை, தமிழ்த் தேசியவாதிகள் எப்படி மறந்தார்கள்? இதையே காரணமாகக் காட்டி, மேற்கத்திய நாடுகளை தமிழர்களின் விரோதியாக சித்தரிக்காத மர்மம் என்ன? டாலர்களும், பவுன்களும் வாயடைக்க வைத்து விட்டனவா?

கியூபாவின் நிலைப்பாடு சம்பந்தமாக எனக்கும், எல்லோருக்கும் விமர்சனங்கள் உண்டு. என்ன காரணம் இருந்தாலும், சிறிலங்கா பேரினவாத அரசின் பக்கம் நின்றது தவறு தான். "இரண்டு பக்கமும் கண்டித்து விட்டு நடுநிலை வகிக்கும் தெரிவும்", அவர்களுக்கு இருந்தது. தமிழ் மக்களின் வலதுசாரித் தலைமையை நிராகரிக்கும் உரிமை அவர்களுக்குண்டு. அதே நேரம், தமிழ் மக்கள் பாதிக்கப் பட்டதையும் சுட்டிக் காட்டியிருக்க வேண்டும். "உலகில் பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடாக் கொள்கையை" பின்பற்றும் சீனாவுக்கும் இது பொருந்தும். அவர்களது செயற்பாடுகள், தமிழ் மக்களை மென்மேலும் மேலைத்தேய விசுவாசிகளாக மாற்றி வருவதை கவனத்தில் எடுக்க வேண்டும்.

சேகுவேரா கியூபாவை விட்டு வெளியேறியவுடன், தூய்மையான கம்யூனிசக் கொள்கையும் அவரோடு விடை பெற்றுச் சென்று விட்டது. பிடல் காஸ்ட்ரோ, குருஷோவின் உலக அரசியலுக்கேற்ப ஆடத் தொடங்கினார். தமது அதிகாரத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்ட ஆப்பிரிக்க தலைவர்களை பாதுகாக்கும் பொறுப்பை, குருஷோவ் கியூபாவிடம் ஒப்படைத்தார். அங்கோலாவில் கியூபாப் படைகள் சென்றதால், நிறவெறி தென்னாபிரிக்காவின் படையெடுப்பு முறியடிக்கப் பட்டது. அதே நேரம், அங்கோலாவில் சில சிறுபான்மை இனங்களின் பிரதிநிதியான யுனிட்டா கிளர்ச்சிப் படையையும் எதிர்த்துப் போரிட்டது. அங்கோலா அரசை சோவியத் யூனியனும், யுனிட்டாவை சீனாவும் ஆதரித்தன. அதாவது, ஒடுக்குபவனின் பக்கம் நின்றதும் ஒரு கம்யூனிச நாடு. ஒடுக்கப்பட்டவர்கள் பக்கம் நின்றதும் இன்னொரு கம்யூனிச நாடு. இந்த முரண்பாடு எதனால் ஏற்பட்டது? இந்தக் கேள்விக்கு தமிழ் தேசியவாதிகளிடம் பதில் உண்டா?

"எத்தியோப்பியா விவகாரம்", தனது வெளிவிவகாரக் கொள்கையில் ஏற்பட்ட மாபெரும் தவறு என்று, கியூப அரசு பிற்காலத்தில் ஒத்துக் கொண்டது. எத்தியோப்பியாவில் கியூபாப் படைகளின் பிரசன்னத்தால், நன்மையை விட தீமையே அதிகமாக விளைந்தது. எத்தியோப்பியாவின் ஒகடான் பிரதேசத்தில் வாழும் சோமாலிய சிறுபான்மையினரின் எழுச்சியை அடக்குவதற்காகத் தான், கியூபப் படைகள் தருவிக்கப் பட்டன. அயல்நாடான சோமாலியாவில் இருந்து படையெடுப்பு நடத்தப் பட்டதை மறுப்பதற்கில்லை. என்ன இருந்தாலும், ஒரு சிறுபான்மையினத்தை ஒடுக்குவதற்கு, கியூபா ஏன் துணை போனது? ஆப்பிரிக்காவில் எங்கேயும், கம்யூனிச நாடு என்ற ஒன்று இருக்கவில்லை. பனிப்போர் காலத்தில், ஒரு பக்கம் அமெரிக்காவையும், மறுபக்கம் ரஷ்யாவையும் ஏமாற்றி பிழைத்தவர்கள் பலர். ஒரு காலத்தில் சோவியத் முகாமில் இருந்த சோமாலியா, அமெரிக்க முகாமுக்குள் போய்ச் சேர்ந்து கொண்டது. செங்கடல் பிராந்தியத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த சோவியத் யூனியன், எத்தியோப்பியாவை கைக்குள் போட்டுக் கொண்டது.

அன்று எத்தியோப்பியாவை ஆண்ட மெங்கிஸ்டுவும் ஒரு "கம்யூனிஸ்ட்" தான். அவரின் ஆட்சிக் காலத்தில் தான், தனி நாடு கோரிய எரித்திரியர்களின் போராட்டம் கடுமையாக அடக்கப் பட்டது. அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த ஒராமோ சிறுபான்மையினரை அடக்குவதற்கு, பஞ்சம் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப் பட்டது. இந்தப் பிரச்சினைகள் நடந்து கொண்டிருந்த போதெல்லாம், கியூபப் படைகள் எத்தியோப்பியாவில் நிலை கொண்டிருந்தன. சிறுபான்மை இனங்களை ஒடுக்கிய மெங்கிஸ்டுவின் சர்வாதிகார ஆட்சிக்கு, சோவியத் யூனியன் ஆயுதங்கள் கொடுத்து ஆதரித்தது. அப்பொழுதெல்லாம், ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்து நிற்க வேண்டிய கம்யூனிசக் கடமை பற்றி, யாரும் சோவியத் யூனியனுக்கு பாடம் எடுக்கவில்லை. அது ஏன்?

"ஐ.நா. அவையில், கியூபா இலங்கை அரசுக்கு சார்பாக வாக்களித்தது," என்ற ஒரே காரணத்திற்காக, நமது வலதுசாரித் தமிழ் தேசியவாதிகள் இந்தக் குதி குதிக்கிறார்கள். அப்படிப் பார்த்தால், சோமாலிய, ஒரோமோ, எரித்திரிய சிறுபான்மையின மக்கள், கியூபாவை எந்தளவுக்கு வெறுத்திருக்க வேண்டும்? அது போகட்டும். தமிழர்களின் அயலில் வாழும் சிங்கள இன மக்கள், 1971 கிளர்ச்சியை ஒடுக்க உதவிய கம்யூனிச நாடுகள் மீது எந்தளவு வெறுப்புக் கொண்டிருக்க வேண்டும்? மேற்குறிப்பிட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் எவரும், சில "கம்யூனிச" நாடுகளின் தவறான முடிவுகளுக்காக, கம்யூனிசத்தை வெறுக்கவில்லை. ஜேவிபி யை ஆதரிக்கும் சிங்களவர்கள், கணிசமான தொகை உறுப்பினர்களும், இப்பொழுதும் சோஷலிசத்தில் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்கள் இன்று சோஷலிசப் புரட்சிக்கான புதிய கட்சியை (Progressive Socialist Party) ஸ்தாபித்துள்ளனர். எரித்திரியாவின் விடுதலைக்காக போராடிய EPLF உறுப்பினர்கள், மார்க்சியத்தை மறக்கவில்லை. ஒரோமோ, சோமாலிய சிறுபான்மையின மக்கள் யாரும் சோஷலிசத்தில் குறை காணவில்லை. ஆனால், தமிழர்கள் மட்டும் ஏன் இப்படி தடுமாறுகிறார்கள்? தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம், எந்த வர்க்கத்தின் நலன்களுக்காக முன்னெடுக்கப் படுகின்றது என்பதில் தான், இந்தக் கேள்விக்கான விடை மறைந்துள்ளது. அவர்களது எஜமானர்களை திருப்திப் படுத்துவதற்காக, கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்கின்றனர்.

அரசியல் சித்தாந்தங்களுக்கு அப்பால் பூகோள அரசியல் என்ற ஒன்றுண்டு. ரஷ்யப் புரட்சி நடந்த காலத்தில், குரோன்ஸ்டாத் (Kronstadt) சோவியத் அமைப்பை நிர்மூலமாக்கிய செம்படையின் இராணுவ நடவடிக்கையை எப்படி நியாயப் படுத்துவீர்கள்? சோவியத் யூனியனும், சீனாவும் எல்லைகளில் படைகளை குவிக்கவில்லையா? ஹங்கேரி, செக்கோஸ்லோவாக்கியா ஆகிய கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் மிதவாத கம்யூனிஸ்ட் தலைவர்களின் ஆட்சியைக் கவிழ்க்க, சோவியத் படைகளை அனுப்பவில்லையா? கம்யூனிச சீனாவுக்கும், கம்யூனிச வியட்நாமுக்கும் இடையில், எதற்காக எல்லைத் தகராறு காரணமாக போர் மூண்டது? கம்போடியாவில் பொல்பொட்டின் கம்யூனிச அரசை கவிழ்ப்பதற்காக, கம்யூனிச வியட்னாம் படையெடுத்த காரணம் என்ன? அத்தகைய சந்தர்ப்பங்களில், கம்யூனிச சகோதரத்துவம் எங்கே காணாமல் போனது?

ஒரு கம்யூனிஸ்ட் நாட்டினால் தாக்கப் பட்டோம் என்பதற்காக, அந்த நாடுகளின் மக்கள் யாரும் கம்யூனிசத்தை வெறுக்கவில்லை. போர் முடிந்த பின்னரும், அந்த நாடுகளில் சோஷலிசம் தொடர்ந்து இருந்தது. பூகோள அரசியல் வேறு, கம்யூனிச சித்தாந்தம் வேறு என்ற அரசியல் தெளிவு அந்த மக்களுக்கு இருந்தது. மேற்குறிப்பிட்ட சம்பவங்களைப் பற்றி, சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தினுள் விவாதங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்த காலங்களில், முதலாளித்துவ நாடுகள் கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத்தை முடுக்கி விட்டன. உணர்ச்சிகரமான பேச்சுகளால் இனவாதத்தை தூண்டி விட்டு, கம்யூனிச வெறுப்பை விதைத்தார்கள். வலதுசாரித் தமிழ்த் தேசியவாதிகளும், சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரம் செய்கின்றனர். தமிழ் மக்கள் விழிப்பாக இருந்து, மக்கள் விரோதிகளின் பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும்.

சில கேள்விகளுக்கு விடை தேடினால், உங்களுக்கு குழப்பமே மிஞ்சும். சோவியத் யூனியனால் ஆதரிக்கப் பட்ட சியாட் பாரெயின் சோமாலியா, எவ்வாறு அமெரிக்காவினால் அரவணைக்கப் பட்டது? கம்யூனிச அங்கோலா, சோவியத் ஆயுதங்கள் வாங்கவும், கியூபா படைகளை பராமரிக்கவும் பணம் எங்கிருந்து வந்தது? அமெரிக்க கம்பனிகளுக்கு எண்ணை விற்ற வருமானத்தில் இருந்து செலவிடப் பட்டது! அங்கோலாவின் கம்யூனிச அரசை வீழ்த்த போராடிய கிளர்ச்சிப் படையான யுனிட்டாவுக்கு அமெரிக்கா தாராளமாக உதவி வந்தது. பின்னர் அதே அமெரிக்கா, யுனிட்டாவை அழிக்கும் இராணுவ நடவடிக்கையில், அங்கோலா அரசுக்கு உதவியது. அமெரிக்கா ஒரு காலத்தில், யூகோஸ்லேவியா, ரொமேனியா, சீனா போன்ற கம்யூனிச நாடுகளுடன் உறவு வைத்திருந்தது. கம்போடியாவில் இருந்து விரட்டப்பட்ட பொல்பொட்டின் படைகளுக்கு உதவியது. அதே போன்று, சோவியத் யூனியனும் இந்தியா, இந்தோனேசியா, எகிப்து, ஈராக் போன்ற நாடுகளுடன் எல்லாம் சிறந்த நட்புறவைப் பேணியது. இதெல்லாம் அவர்களின் கொள்கைகளுக்கு விரோதமாகத் தெரியவில்லையா? ஐயா பெரியவர்களே, கம்யூனிசம், முதலாளித்துவம் போன்ற தத்துவங்களை விட, எண்ணை, இயற்கை வளங்கள், பிராந்திய பாதுகாப்பு போன்றவை முக்கியமாக கருதப்படும் காலம் இது. எல்லாவற்றிகும் மேலே பூகோள அரசியல் என்ற ஒன்றுண்டு.

ரஷ்யாவும், சீனாவும், கியூபாவும், இலங்கையுடன் நெருங்கி வர வைத்த காரணி எது? ஐ.நா. அவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற விடாமல் தடுக்கும் நோக்கம் என்ன? ஐரோப்பிய காலனியாதிக்கம் முடிவுக்கு வந்த பின்னர், அமெரிக்க முகாம், சோவியத் முகாம், இரண்டிலும் சேர விரும்பாத நாடுகள் பல இருந்தன. சில நாடுகள் வெளிப்படையாக அப்படிக் காட்டிக் கொள்ள விரும்பவில்லை. அவை எல்லாம் ஒன்று சேர்ந்து, மூன்றாவது அணியை உருவாக்கின. அவை தம்மை "அணிசேரா நாடுகள்" என்று அழைத்துக் கொண்டன. மார்ஷல் டிட்டோ (யூகோஸ்லேவியா), ஜவஹர்லால் நேரு (இந்தியா), சுகார்னோ (இந்தோனேசியா), பிடல் காஸ்ட்ரோ (கியூபா), இவர்களுடன் சிறிமாவோ (இலங்கை) போன்ற முக்கிய தலைவர்கள், அந்த சர்வதேச அமைப்பை உருவாக்க முன் நின்று பாடுபட்டார்கள். சோவியத் யூனியனும், சீனாவும் வெளியில் இருந்து கொண்டு ஆதரவு வழங்கின.

அணி சேரா நாடுகளும், ரஷ்யா, சீனா ஆகிய வல்லரசுகளும், மேற்கத்திய நாடுகளின் ஒவ்வொரு அசைவையும் சந்தேகக் கண் கொண்டு நோக்கினார்கள். மேற்கத்திய நாடுகள் மனித உரிமைகள் பற்றிப் பேசும் பொழுதெல்லாம், தமது நாட்டின் இறையாண்மையில் தலையிடுவதாக சந்தேகப் பட்டார்கள். அந்த நாட்டின் அரசு மிகத் தீவிரமான அமெரிக்க விசுவாசியாக இருந்தாலும், அவர்கள் மனதில் எச்சரிக்கை உணர்வு ஓடிக் கொண்டிருக்கும். ஏனென்றால், இந்த நாடுகள் எல்லாம், ஏதோவொரு உள்நாட்டுப் பிரச்சினையை தீர்க்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றன. மறு பக்கத்தில், மேற்கத்திய நாடுகள், "எந்தவொரு உள்நாட்டுப் பிரச்சினையுமற்ற" அமைதியான நாடுகளாக காட்சியளிக்கின்றன. அந்த நாடுகளிலும் பிரச்சினை இருந்தாலும், போர் வெடிக்குமளவிற்கு கொந்தளிப்பான நிலைமை காணப்படவில்லை. அவர்கள், பிற நாடுகளின் இனப்பிரச்சினைகளை தீர்க்கும் மத்தியஸ்தர்களாக, தம்மை நியமித்துக் கொள்கின்றனர். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். மூன்றாமுலக நாடுகளின் இனங்கள் பிளவு பட்டு மோதிக் கொண்டிருக்கும் வரையில், மேற்கத்திய நாடுகளுக்கு கொண்டாட்டம்.

எது எப்படி இருப்பினும், மூன்றாம் உலக நாடுகளின் மனித உரிமைகள் விவகாரம், மேற்கத்திய நாடுகளால் அளவுக்கு அதிகமாகவே கவனிக்கப் படுகின்றது. நாங்கள் அதனை ஒரு நல்ல விடயம் என்று வரவேற்கலாம். ஆனால், இன்னொரு பக்கத்தில் விரும்பத் தகாத எதிர் விளைவுகளையும் உண்டாக்குகின்றது. நேரெதிர் கொள்கைகளை கொண்ட அரசுகளைக் கூட, பொது எதிரிக்கு எதிராக ஒன்று சேர வைக்கின்றது. ஈரானுக்கும், வெனிசுவேலாவுக்கும் இடையில் எந்தக் கொள்கையில் உடன்பாடு? சீனாவுக்கும், சூடானுக்கும் இடையில் எந்த விடயத்தில் ஒற்றுமை காணப்படுகின்றது? ரஷ்யா, சீனா, கியூபா போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக நிற்பதற்கு காரணமும் அது தான். அமெரிக்கா இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த பொழுது, இஸ்லாமிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், சில ஆசிய நாடுகளும் எதிர்த்து வாக்களித்தன. அமெரிக்காவின் தீவிர விசுவாசிகளான சவூதி அரேபியா, உகண்டா போன்ற நாடுகளும் எதிர்த்து தான் வாக்களித்தன.

ஐரோப்பிய நாடுகள் தமது பிரச்சினைகளை தாமே தீர்த்துக் கொண்டது போல, ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. ஆயினும் குறுகிய கால நலன்களை மட்டுமே சிந்திக்கும் அரசியல் தலைவர்கள், அத்தகைய வளர்ச்சிக்கு தடையாக இருக்கின்றனர். உதாரணத்திற்கு, இலங்கை ஆட்சியாளர்கள், இன்னமும் சிங்கள-தமிழ் இனப்பிரச்சினை நீடிப்பது தமது நலன்களுக்கு சாதகமானது என்று நினைக்கிறார்கள். மறு பக்கத்தில் தமிழ்த் தேசியவாதிகளும் அதையே விரும்புகின்றனர். இனப்பிரச்சினை தீர்க்கப் பட்டு விட்டால், அவர்களின் பிழைப்புக்கு வழியேது? இலங்கையில் மட்டுமல்ல, வேறு பல ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளிலும் இது தான் நிலைமை.

"ஆப்பிரிக்க நாடுகளுக்கு தமிழரின் பிரச்சினை பற்றிய போதுமான அறிவு கிடையாது. அதனால் தான் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தார்கள், அல்லது வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை." என்று சிலர் சப்பைக் கட்டு கட்டலாம். தமிழ் தேசியவாதிகள் பலருக்கு ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள இனப்பிரச்சினைகள் குறிந்து எந்த அறிவும் கிடையாது. சர்வதேச ஊடகங்களின் கவனத்தைப் பெற்ற, நைஜீரியா, எத்தியோப்பியா, மாலி ஆகிய நாடுகளில் நடந்த இன ஒடுக்குமுறை போர்களைப் பற்றி, நம்மில் எத்தனை பேர் அறிந்து வைத்திருக்கின்றனர்? அது சம்பந்தமான பிரச்சினை ஐ.நா. அவையில் விவாதிக்கப் பட்டால், யாருக்கு ஆதரவளிப்பார்கள்? ஏற்கனவே, பெரும்பாலான தமிழ்த் தேசியவாதிகள், பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்த இஸ்ரேலுக்கு ஆதரவாக பேசி வருவது எமக்குத் தெரிந்தது தானே? வட அயர்லாந்தை ஒடுக்கும் பிரிட்டன் குறித்து அவர்களது நிலைப்பாடு என்ன?

இன்றைய உலகமயமாக்கப் பட்ட உலகில், ஒரு நாட்டின் பிரச்சினை பற்றிய தகவல்களை இணையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம். அந்த வகையில், தமிழர் பிரச்சினை தெரியாமல் தான் இலங்கை அரசை ஆதரித்தாக கூறுவது ஏற்கத் தக்கதல்ல. முதலில், "இலங்கையை எதிர்த்த நாடுகள் அல்லது ஆதரித்த நாடுகள்" என்று கூறுவது சரியாகுமா? ஐ.நா. போன்ற சர்வதேச அரங்கில் விவாதிக்கப் படும் பொருளானது, சர்வதேசத்தின் பொறுப்புணர்வை வேண்டி நிற்கின்றது. அந்த இடத்தில், வல்லரசுப் போட்டிகள், ஆதிக்க அரசியல், பொருளாதார நலன்கள், இவை யாவும் கருத்தில் எடுத்துக் கொள்ளப் படும். எந்தவொரு நாடும், அமெரிக்கா உட்பட, தமிழர் சார்பாகவோ, அல்லது சிங்களவர் சார்பாகவோ நடந்து கொள்வதில்லை. அப்படி நாங்கள் தான் நினைத்துக் கொள்கிறோம். நியாயம் என்று பார்த்தாலும், "பொது நியாயம்" என்ற ஒன்று உலகில் கிடையாது. ஒவ்வொரு குழுவும், தமக்கு சார்பான நியாயம் பேசுவதில் தான் முனைப்புக் காட்டுகின்றனர்.

பனிப்போர் காலத்தில் அமெரிக்காவும், சோவியத் யூனியனும் உலக மேலாதிக்கத்திற்காக போட்டி போட்டன. ஐ.நா. சபையில் தமக்கு ஆதரவான தேசங்களை பாதுகாத்தன. இன்று மீண்டும் புதியதொரு வல்லரசுப் போட்டி, புதியதொரு பனிப்போர். "ஐ.நா. விலும் உங்கள் நலன்கள் பாதுகாத்து தரப்படும்" என்ற வாக்குறுதி கொடுத்து ஆதரவாளர்களை சேர்க்கிறார்கள். முன்னொரு காலத்தில், ஒரு கொள்கைக்காக போராடிய காலம் இன்று இல்லை. இப்பொழுது சொந்த தேசம், சொந்த இனம் ஆகியவற்றின் நலன்கள் மட்டுமே முக்கியமாக கருதப் படுகின்றன. அதிலிருந்து தான் உலகத்தைப் பார்க்கிறார்கள். அது அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, இலங்கை, கியூபா எந்த நாடாகவிருந்தாலும், தமது தேச நலனை தான் முதன்மையாக கருதுகின்றனர். இரண்டு நாடுகளின் நலன்கள் ஒன்று சேரும் பொழுது, கூட்டாகச் செயற்படுகின்றனர். "தேசியம்" நமக்குத் தேவையா?

ரஷ்யா, சீனா, கியூபா போன்ற நாடுகளைப் பார்த்து, "கம்யூனிச நாடுகள்" என்று விளிப்பதும் காலத்திற்கு ஒவ்வாதது. "தமிழர்கள் எல்லோரும் இன அடிப்படையில் ஒன்று சேர வேண்டும்," என்று தேசியம் பேசும் தமிழ் தேசியவாதிகள், வெளி உலகத்தை, "கம்யூனிச நாடுகள்", "இஸ்லாமிய நாடுகள்" என்று பிரித்துப் பார்ப்பதன் தார்ப்பரியம் என்ன? அந்த நாடுகளுக்கென்று "தேச நலன்" இருக்க முடியாதா? முதலில் "கம்யூனிச நாடு" என்று அழைப்பது சரியாகுமா? மார்க்சிய சித்தாந்தத்தின் படி, கம்யூனிச நாடு இன்னும் உலகில் தோன்றவில்லை. இதுவரை இருந்தவை எல்லாம் சோஷலிச நாடுகள். அதன் அர்த்தம், அவற்றிற்கென்று தேசியம், இறைமை எல்லாம் உண்டு. தனது உரையின் முடிவில் பிடல் காஸ்ட்ரோ முழங்கும், "தந்தையர் நாடு இன்றேல் மரணம்" என்பது ஒரு கம்யூனிச சுலோகமா? "பாட்டாளிகளுக்கு தாய்நாடு கிடையாது" என்ற மார்க்சின் கூற்றோடு முரண்படவில்லையா?

நுணுக்கமாகப் பார்த்தால் தான், இங்கேயுள்ள தேசியங்களுக்கு இடையிலான முரண்பாடு வெளித் தெரியும். தேசியம் என்ற கோட்பாட்டின் குறைபாடும், அதற்குள் தான் மறைந்திருக்கின்றது. அதனால் தான் மீண்டும் மீண்டும் ஒன்றை ஞாபகப் படுத்த வேண்டியுள்ளது. உழைக்கும் மக்களுக்கு தேசியம் கிடையாது. தேசங்களுக்கு இடையிலான எல்லைகளை உடைத்து, அனைத்துலக உழைக்கும் மக்களை ஒன்று சேர்ப்போம்.

சஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை



உலகில் இன்னொரு தனி நாடு கோரும் விடுதலைப் போராட்டம், உலகின் கண்களில் இருந்து மறைக்கப் படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் கண்டும் காணாதது போல நடந்து கொள்கின்றன. ஆப்பிரிக்காவில், மாலி நாட்டில், அசாவாத் (Azawad ) என்ற தனி நாடு கோரும், துவாரக் இனத்தவர் பற்றி, நம்மில் எத்தனை பேர் கேள்விப் பட்டிருப்பார்கள்? இத்தனைக்கும் அந்த விடுதலைப் போராட்டம், தொன்னூறுகளில் ஆரம்பித்து இன்று வரை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இடையில் சில வருடங்கள், அமைதி உடன்படிக்கை ஏற்பட்டு, சமாதானம் நிலவுவது போலக் காணப் பட்டது. இருப்பினும், அயல் நாடான லிபியாவில், கடாபியின் வீழ்ச்சி, இரண்டாவது அசாவாத் போரை தூண்டி விட்டுள்ளது. இதை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில், வட மாலியின் முக்கிய நகரங்களில் ஒன்றான கவோ (Gao), விடுதலைப் போராளிகளால் கைப்பற்றப் பட்டுள்ளது. நகரில் இருந்த மிகப் பெரிய இராணுவ முகாம், போராளிகளின் தாக்குதலால் நிர்மூலமாக்கப் பட்டது. அசாவாத் விடுதலைக்கான மக்கள் இயக்கம் (Mouvement Populaire de Libération de l'Azawad, MPLA) கவோ நகரை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது. யார் இந்த அசாவாத் விடுதலைப் படை? அவர்களது குறிக்கோள் என்ன? துவாரக் இனத்தவரின் பிரச்சினை என்ன? எதற்காக, சர்வதேச சமூகம் அவர்களை புறக்கணிக்கின்றது?

"துவாரக் இன மக்கள் குறைந்தது ஐந்து ஆப்பிரிக்க நாடுகளில் பரந்து வாழ்கின்றனர். ஆனால், அவர்களுக்கு என்றொரு நாடில்லை." ஆப்பிரிக்காவில் அனைத்து மக்களும் ஒரே இனத்தை (race) சேர்ந்தவர்களாக கருதுவது தவறு. வட ஆப்பிரிக்காவில் வாழும் அரேபியர்கள், பெர்பர்கள் மட்டுமல்ல, துவாரக் இனத்தவர்களும் தம்மை பிற ஆப்பிரிக்க இனங்களில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கின்றனர். அவர்களது தோற்றமும் நிறமும் கூட வித்தியாசமாக இருக்கும். சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர், நான் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்த காலத்தில், என்னோடு ஒரு மாலி நாட்டு அகதி தங்கியிருந்தார். "இந்தியர்களைப் போன்ற தோற்றமுடைய இனம் ஒன்று மாலி நாட்டில் இருப்பதாக," அவர் என்னைப் பார்த்து கூறினார். "ஆப்பிரிக்காவில் இந்தியர்களைப் போன்ற தோல் நிறம், முகத் தோற்றம் கொண்ட மக்கள்" என்ற தகவல், அன்று எனக்கும் புதிதாக இருந்தது. அது குறித்து துருவித் துருவிக் கேட்டதில், துவாரக் மக்களின் விடுதலைப் போராட்டம் எனக்கு அறிமுகமானது. என்னோடு தங்கியிருந்த நண்பர், தென் மாலியை சேர்ந்த பம்பாரா மொழி பேசும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர். வழமையான ஆப்பிரிக்கர்களைப் போன்ற தோற்றம் கொண்டவர்.

ஆப்பிரிக்கா கண்டத்தில், ஏறக்குறைய அனைத்து நாட்டு எல்லைகளும், ஐரோப்பிய காலனிய ஆட்சியாளர்களால் கீறப் பட்டவை தான். ஆமாம், ஆப்பிரிக்க வரைபடத்தை மேசையில் வைத்து, அடிமட்டத்தால் அளந்து கோடு கீறப் பட்டவை தான், ஆப்பிரிக்க நாடுகளின் எல்லைகள். அந்த எல்லைகளுக்குள், ஒரே மொழி பேசும் மக்களின் வாழ்விடங்கள் துண்டாடப் பட்டன. வேற்றினத்தவர்களுடன் ஒன்று சேர்த்து வைக்கப் பட்டனர். அவ்வாறு தான், மாலியின் வடக்கே வாழும் துவாரக் இன மக்கள், தெற்கே வாழும் பம்பாரா இன மக்களுடன் சேர்த்து வைக்கப் பட்டனர். பிரெஞ்சு காலனியாதிக்கவாதிகளின் நிர்வாக எல்லைக்குட்பட்ட அந்தப் பிரதேசம் தான் இன்றைய மாலி குடியரசு.

நாற்பதுக்கும் அதிகமான மொழிகளை பேசும் இனங்கள் வாழ்ந்தாலும், பம்பாரா மொழியை இரண்டாம் மொழியாக பேசக் கற்றுக் கொண்டுள்ளனர். அதனால், காலனிய கால பிரெஞ்சு மொழி, படித்தவர்கள் மட்டத்தில் மட்டுமே பேசப் பட்டு வருகின்றது. பல்வேறு இனங்களை சேர்ந்த மக்களில், 90 வீதமானோர் இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்டவர்கள். மாலி ஒரு காலத்தில், ஆப்பிரிக்கக் கண்டத்தில் பெரிய இஸ்லாமிய சாம்ராஜ்யமாக திகழ்ந்தது. அதன் தலைநகரான திம்புக்டுவில், ஆயிரம் ஆண்டு கால பழமையான பல்கலைக்கழகமும், நூலகமும் இன்றைக்கும் உள்ளன. அந்தக் காலத்தில், ஐரோப்பாக் கண்டத்தில், எந்தவொரு நாட்டிலும், பல்கலைக்கழகமோ அல்லது நூலகமோ இருக்கவில்லை!

பண்டைய திம்புக்டு நகரம் அமைந்துள்ள, மாலியின் வட பகுதி தான், உள்நாட்டு யுத்தத்தால் அதிகமாகப் பாதிக்கப் பட்டுள்ளது. அந்தப் பகுதியில் பெரும்பான்மையாக வாழும் துவாரக் இன மக்கள், அந்தப் பிரதேசத்தில் அசாவாத் என்ற தனி நாடு அமைக்க விரும்புகின்றனர். அதே வட பிராந்தியத்தில் வாழும் சொங்கை என்ற இன மக்களுக்கும், துவாரக் இனத்தவர்களுக்கும் ஒத்துப் போகாது. சொங்கை என்பது தனியான மொழி பேசும் மக்களை குறிக்கும் சொல் அல்ல. அவர்கள் பண்டைய சாம்ராஜ்யம் ஒன்றை ஆண்ட மக்கட் பிரிவினர்.

"ஆண்ட பரம்பரைக் கனவு" அவர்கள் மனதில் ஆழப் பதிந்துள்ளது. பிரிந்து செல்லும் தனி நாடொன்றில், "நாடோடிக் கூட்டமான" துவாரக் இனத்தவரால் ஆளப் படுவதை வெறுக்கின்றனர். இலங்கையின் வட-கிழக்கு பிராந்தியத்தில் ஈழம் கோரும் தமிழர்களுக்கும், அதே பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் போன்றது அது. மாலி அரசும், துவாரக் மக்களின் போராட்டத்தை அடக்குவதற்காக, சொங்கை ஆயுதக் குழுக்களை பயன்படுத்தியது. தற்பொழுது மாலியில், இராணுவ சதிப்புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் அது போன்ற உள்நாட்டுப் போர் வெடிக்கும் அபாயம் தோன்றியுள்ளது.

துவாரக் இனத்தவர்கள், தமக்கென தனியான கலாச்சாரங்களை கொண்டுள்ளனர். சுருக்கமாக அவர்களை பாலைவன மக்கள் என்று அழைக்கலாம். சஹாரா பாலைவனப் பிரதேசம் தான் அவர்களது வாழ்விடம். துவாரக் இன மக்கள் மாலியில் மட்டுமல்லாது, நைஜர், லிபியா, அல்ஜீரியா, மொரிட்டானியா, பூர்கினா பாசோ, ஆகிய நாடுகளில் வாழ்கின்றனர். ஆதி காலத்தில் இருந்தே, சஹாரா பாலைவனத்தின் ஊடான வர்த்தகம் தான் அவர்களது முக்கிய தொழில் என்பதால், அவர்கள் ஒரு நாடோடி சமூகமாகவே வாழ்ந்து வந்துள்ளனர். ஒட்டகங்களில் பொதிகளை சுமந்த படி, பாலைவனத்தை ஊடறுத்து ஆயிரக்கணக்கான மைல்களைக் கடந்து சென்று வர்த்தகம் செய்யும் துவாரக் மக்களை, இன்றைய வணிக கப்பல் போக்குவரத்து கம்பெனிகளோடு ஒப்பிடலாம். ஐரோப்பியரின் வருகையினால், பாலைவன வர்த்தகம் தடைப்பட்டது மட்டுமல்ல, நிரந்தரமாக ஒரு நாட்டில் தங்க வேண்டியேற்பட்டது. துவாரக் இனத்தவர்கள், வட ஆப்பிரிக்க பேர்பர் இனத்திற்கு நெருக்கமானவர்கள். ஆனால் இவர்களின் தோல் நிறம் கறுத்திருக்கும். பெர்பர்கள் பேசும் தமாஷிக் மொழியுடன், அரபியும் பேசுகின்றனர். அநேகமாக, அனைத்து துவாரக் மக்களும் இஸ்லாமிய மதத்தவர்கள்.

லிபியாவில் கடாபி ஆட்சிக்கு வந்த பின்னர் தான், துவாரக் இனத்தவரின் ஆயுதப் போராட்டம் ஆரம்பமாகியது. தீவிரமான அரபு தேசியவாதியாகவிருந்த கடாபி, பிற அரபு நாடுகளின் ஒத்துழைப்பு கிட்டாததால், அரபு தேசியத்தை கைவிட்டார். அதன் பிறகு ஆப்பிரிக்க தேசியத்தை கையில் எடுத்தார். அதிலும் கடாபி ஒரு இஸ்லாமியவாதியாகவும் இருந்ததால், கணிசமான தொகை முஸ்லிம்கள் வாழ்ந்த ஆப்பிரிக்க நாடுகளின் அரசியல் விவகாரம் அவருக்கு உவப்பானதாக இருந்தது. மாலியில் அவாசாத் என்ற தனி நாடொன்றை உருவாக்கும் கனவை நனவாக்க காத்திருந்தவர்கள், கடாபியின் உதவியைப் பெற முடிந்தது. லிபியாவிலும் துவாரக் இன மக்கள் வாழ்ந்தததினால், இந்த தொடர்பு இலகுவாக ஏற்பட்டது.

லிபிய இராணுவத்துடன் சேர்ந்தியங்கிய, ஆப்பிரிக்கர்களின் துணைப் படையிலும், துவாரக் போராளிகளே அதிகமாக காணப்பட்டனர். மாலியில் தொன்னூறுகளில் வெடித்த அசாவத் விடுதலைப் போரிலும், லிபியாவில் பயிற்சி பெற்ற துவாரக் போராளிகளே பங்குபற்றினார்கள். அவர்களுக்கு தேவையான ஆயுதங்களை, அன்று கடாபி அனுப்பிக் கொண்டிருந்தார். சில வருடங்களின் பின்னர், போராளிக் குழுக்களுக்கும், மாலி அரசாங்கத்திற்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அதற்கும் லிபியா மத்தியஸ்தம் வகித்தது! இலங்கையில் ஈழ விடுதலை இயக்கங்களுக்கு ஆயுதம் கொடுத்து உதவிய இந்தியா, பின்னர் சமாதானப் பேச்சுவார்த்தைகளிலும் அனுசரணையாளராக செயற்பட்டமை உங்களுக்கு நினைவுக்கு வரலாம். வீட்டுக்கு வீடு வாசற்படி இருந்தால், நாட்டுக்கு நாடு இருக்காதா?

மாலியில் மீண்டும் ஏற்பட்டுள்ள யுத்தத்திற்கும், லிபியாவில் நடந்த ஆட்சி மாற்றத்திற்கும் நேரடித் தொடர்புண்டு. லிபியாவில் கடாபி இருக்கும் வரையில், துவாரக் போராளிகளுக்கு புகலிடம் கிடைத்து வந்தது. கடாபிக்கு எதிராக கிளர்ச்சி செய்து ஆட்சியைப் பிடித்த லிபியர்கள், (கறுப்பின) ஆப்பிக்கர்களை வெறுக்கும் இனவெறியர்கள். இதனால், துவாரக் போராளிகள், கடாபியின் இராணுவத்துடன் சேர்ந்து போரிடுவதைத் தவிர வேறு தெரிவு இருக்கவில்லை. நேட்டோ விமானக் குண்டுவீச்சின் பின்னர், கடாபியின் இராணுவம் பின்வாங்கி ஓடிக் கொண்டிருந்தது.

அதே நேரத்தில், லிபியாவில் தங்கியிருந்த துவாரக் போராளிகள், தமது தாயகமான மாலிக்கு திரும்பினார்கள். அவர்கள் போகும் பொழுது, வெறுங் கையை வீசிக் கொண்டு செல்லவில்லை. லிபிய இராணுவத்தின் ஆயுதக் கிடங்குகளை கொள்ளையடித்து, நவீன ஆயுதங்களை திரட்டிக் கொண்டு ஓடினார்கள். போகும் வழியில், அதிர்ஷ்டம் ஆகாயத்தில் இருந்து விழுந்தது! லிபிய கிளர்ச்சியாளர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக, நேட்டோ விமானங்கள் ஆயுதங்களை பாரசூட் மூலம் போட்டனர். இவ்வாறு போடப்பட்ட நேட்டோ ஆயுதங்களில் சில துவாரக் போராளிகளின் வசம் சிக்கின. அவர்கள் அதையும் சேகரித்துக் கொண்டு, மாலியில் குவித்து வைத்திருந்தனர்.

சில தினங்களுக்கு முன்னர், கவோ நகர இராணுவ முகாம் மீதான தாக்குதலில் பல்குழல் எறிகணைகளை ஏவும் பீரங்கிகள் பாவிக்கப் பட்டுள்ளன. நவீன ஆயுதங்களை கொண்டு தாக்கிய துவாரக் போராளிகளின் தாக்குதகளை சமாளிக்க முடியாத மாலி இராணுவம் நிலைகுலைந்தது. ஏற்கனவே, கிடால் மாகாணம் போராளிகளின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. துவாரக் இனத்தவர் தனி நாடு கோரும் அவாசாத் மாநிலத்தில், அரைவாசிப் பகுதி அவர்கள் கட்டுப்பாடுக்குள் இருக்கிறது. இனி, திம்புக்டு மாகாணம் மட்டுமே மிச்சம் இருக்கின்றது. அதையும் கைப்பற்றி விட்டால், வட பிராந்தியம், மாலியுடன் துண்டிக்கப் பட்டு விடும்.

துவாரக் விடுதலை இயக்கங்களுடன், இஸ்லாமியவாத இயக்கங்களும் சேர்ந்து போரிடுகின்றன. இதனால், சஹாரா பாலைவனத்தில் உருவாகும் தனி நாடு, சர்வதேச இஸ்லாமியவாத சக்திகளுக்கு தளமாக அமையலாம் என்று மேற்குலகம் அஞ்சுகின்றது. ஆப்கானிஸ்தானில் மேற்குலகின் தலையீடானது, மத்திய ஆசிய நாடுகளில் இஸ்லாமியவாத சக்திகளை ஊக்குவித்தது போன்று தான் இங்கேயும் நடக்கின்றது. லிபியாவில் கடாபி கொல்லப்பட்ட பின்னர், கடாபியின் ஆவி வட ஆப்பிரிக்காவை அச்சுறுத்துகின்றது. ஏற்கனவே துவாரக் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட நைஜர், நைஜீரியா போன்ற நாடுகளிலும் ஆயுத வன்முறை ஆங்காங்கே தலைகாட்டி வருகின்றது.

மாலியில் இராணுவத்தில் ஒரு பிரிவினர் சதிப்புரட்சி செய்து, மாலியின் ஆட்சியைப் பிடித்துள்ளனர். ஜனாதிபதி அமடு துமானி துரே, பிரிவினைவாத இயக்கத்தை அடக்க முடியவில்லை என்று காரணம் காட்டியே சதிப்புரட்சி இடம்பெற்றுள்ளது. இதனை அவர்கள் "அன்னையர் எழுச்சி"யின் விளைவு என்றும் கூறுகின்றனர். அதாவது, போதுமான அளவு பயிற்சியற்ற மாலி இராணுவ வீரர்கள், வடக்கே சென்று சவப் பெட்டிகளில் திரும்பி வருகின்றனர். நாளாந்தம் பலியாகிக் கொண்டிருக்கும் இராணுவ தரப்பிலான இழப்புகளினால், தென் மாலி மக்களின் அரசின் மீதான வெறுப்பு அதிகரித்தது. தமது பிள்ளைகளை போர்க்களத்திற்கு அனுப்பிய தாய்மார், தலைநகர் பமாகொவில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இராணுவத்திற்குள் இருந்த கடும்போக்காளர்கள், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஆட்சிக் கவிழ்ப்புக்கு மக்கள் ஆதரவை பெற்றுக் கொண்டனர். சதிப்புரட்சிக்கு தலைமை தாங்கும் கேப்டன் அமடு சனக்கோ, அமெரிக்காவில் பயிற்சி பெற்றவர் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. வருங்காலத்தில் நிலைமை எப்படி மாறும் என்பதை இப்பொழுது கணிக்க முடியாமல் உள்ளது. எனினும், இராணுவ சதிப்புரட்சிக்கு பின்னரே, கவோ நகரம் துவாரக் கிளர்ச்சிப் படைகளால் கைப்பற்றப் பட்டது. இதனால், மாலி இராணுவத்தில் உள்ள கடும்போக்காளர்களால் அசாவாத் விடுதலைப் போராட்டத்தை அடக்க முடியுமா, எனது கேள்விக்குறி தான். நிலைமை மோசமடைந்தால், மேற்கத்திய நாடுகளின், குறிப்பாக பிரான்சின், நேரடித் தலையீடு இடம்பெறலாம். கடாபி இறந்த பின்னரும், கடாபியின் ஆவி வந்து தொல்லை கொடுக்கும் என்று யார் நினைத்திருப்பார்கள்?


நன்றி : கலையகம் 

Saturday 7 April 2012

சிங்களவரின் போருக்கான செலவை புலம்பெயர் தமிழ் மக்கள் கட்டி முடித்தனர் ?



இலங்கை அரசானது தான் HSBC வங்கியிடம் வாங்கிய 500 மில்லியன் டாலர் கடனை, முழுதாகக் கட்டி முடிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. போர் உக்கிரமடைந்த காலகட்டமான 2007ம் ஆண்டு, சுமார் 500 மில்லியன் டாலர்களை அபிவிருத்தி என்ற போர்வையில், இலங்கை அரசு கடனாப் பெற்றது. இத்தொகையானது முழுதும் பணமாகவே இலங்கை அரசுக்கு குறிப்பிட்ட வங்கியால் வழங்கப்பட்டது யாவரும் அறிந்த விடையம். இதனைக் கொண்டு இலங்கை அரசு பெரும் ஆயுதத்தளவாடங்களை வாங்கியிருந்தது. இச்செய்தியானது 2007ம் ஆண்டு பல ஊடகங்களால் வெளியானது மக்களுக்கு நினைவிருக்கலாம். ஆனால் தற்போது இத்தொகையை வட்டியும் முதலுமாக முழுமையாகத் தாம் செலுத்தவுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாது, தமது கையிருப்பில் சுமார் 6.1 பில்லியன் டாலர்கள் நிலுவையில் உள்ளதாகவும் இலங்கை தெரிவித்துள்ளது. இலங்கை அரசின் தேயிலை ஏற்றுமதி தொடக்கம், ஆடை ஏற்றுமதிவரை வீழ்ச்சி கண்டுள்ள நிலையில் இலங்கை எவ்வாறு லாபம் ஈட்டிவருகிறது என்று பலரும் எண்ணலாம். இலங்கைக்கு முன்னெப்போதும் இல்லாதவாறு சுற்றுலாப் பயணிகள் செல்ல ஆரம்பித்துள்ளனர். லட்சக்கணக்கில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் இலங்கையின் தேசிய விமானசேவையைப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் இலங்கைக்கு கொண்டுசென்று செலவுசெய்யும் பணம், இலங்கையின் அன்னியச்செலாவணியை அதிகரித்துள்ளது. போதாக்குறைக்கு புலம்பெயர் தமிழ் மக்களும் இலங்கைக்குச் சென்றுவருவதை அதிகரித்துள்ளனர்.

இதனால் இலங்கை அரசானது தமிழர்களுக்கு எதிராக போர் நடத்த வாங்கிய கடனின் ஒரு பகுதியை அடைக்க, புலம்பெயர் தமிழ் மக்களே பணத்தைக் கொடுத்து உதவும் நிலை தோன்றியுள்ளது எனலாம். இலங்கைப் பொருட்களைப் புறக்கணித்தல், இலங்கைக்குச் செல்வதை தவிர்த்தல் என்பது போன்ற போராட்டங்களை புலம்பெயர் தமிழர்கள் மெல்லமெல்ல கைவிடும் நிலைதான் தற்போது தோன்றியுள்ளதும் சுட்டிக்காட்டத்தக்கது.

சிரியா விவகாரத்தில் இலங்கை போன்று பான் கீ மூன் இரகசிய சரணாகதி?



ஐ.நா.: ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் சிரியாவை பாராட்டியிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. இது இலங்கையைப் போன்று இரகசியமான முறையில் அதிகளவுக்கு சாதகமாக செயற்படும் விடயமா? என்று நியூயோர்க்கில் ஐ.நா.வை தளமாகக் கொண்ட இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக இன்னர் சிற்றி பிரஸின் மத்தியூ ரஸல் லீ தனது செய்தி ஆய்வில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தெரிவித்திருப்பதாவது;

இன்றைய ஐ.நா.வில் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பங்களிப்பு பலவழிகளில், (சிலர் கூறுகின்றனர் வெட்கக் கேடான) ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. சிரிய அரசாங்கத்தை பான் கீ மூன் தனிப்பட்ட முறையில் பாராட்டியிருந்தார் என்று ஐ.நா.வுக்கான சிரியாவின் நிரந்தரவதிவிடப் பிரதிநிதி பஸார் ஜவாரி இன்னர் சிற்றி பிரஸுக்குக் கூறியுள்ளார்.

சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாட் தனது மனிதத்துவ உணர்வை இழந்துவிட்டார் என்று பான் கீ மூன் தெரிவித்த பகிரங்க அறிக்கைகளுக்கு இந்த விடயம் அசௌகரியமானதாகும். ஆனால், சாந்தப்படுத்துவதுஆனால், சிலர் இதனை சரணாகதி என அழைக்கின்றனர். சக்திவாய்ந்த மனிதர்களை பான் கீ மூனின் தன்மையையொத்ததாக உருவாக்குகிறது. 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் நியாயமற்ற குற்றச்சாட்டு என்று தனது சொந்த அலுவலர்களை பான் கீ மூன் கடிந்து கொண்டதை இன்னர் சிற்றி பிரஸ் பிரத்தியேக செய்தியாக வெளியிட்டிருந்தது.

கட்டாரி அரசிற்கு சொந்தமான விமானங்களில் பயணம் செய்வதை பான் கீ மூன் ஏற்றுக்கொண்டிருந்தார். அவரின் பங்களிப்பு குறித்து ஜவாரி என்ன நினைக்கிறார் என்று இன்னர் சிற்றி பிரஸ் கேட்டது.

ஏனைய விடயங்கள் குறித்து இவை உறுப்பு நாடுகளைப் பொறுத்தது என்று அவர் கூறுகிறார். ஆனால், இந்த விடயத்தில் அவர் வேறுவிதமாக செயற்படுகிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அப்படியானால் அது ஏன்? என்று இன்னர் சிற்றி பிரஸ் கேட்டது. சிரியாவிடம் பான் கீ மூன் இரகசியமாக சரணாகதி வாலென்று வகைப்படுத்தியதை நினைவுகூர்ந்த ஜவாரி அவரை நியாயப்படுத்தியுள்ளார். பான் கீ மூன் பல வீனமாக இருக்கிறார் என்று சகல தரப்பும் கூற முடியுமென இதனை சிலர் எடுத்துக்கொள்வார்கள்.
பான் கீ மூனை பகிரங்கமாக முபாரக்கின் தூதுவர் மகெட் அல்டெலாஸிஸ் சாடியிருந்தார். தனிப்பட்ட முறையில் அதிகார மோசம் என்று அவர் கூறியிருந்தார். 


ஆபிரிக்காவுக்கான விசேட தூதுவர் பதவி அவருக்கு வெகுமதியாக வழங்கப்பட்டுள்ளதென இன்னர் சிற்றி பிரஸுக்குக் கூறப்பட்டுள்ளது. வியாழக்கிழமை காலை சிரியா தொடர்பாக இடம்பெற்ற பொதுச் சபைக் கூட்டத்தில் எகிப்தின் ஆசனத்தில் மகெட் அமர்ந்திருந்தார். அக்கூட்டத்தை ஐ.நா. தொலைக்காட்சி காண்பித்தது. ஆனால், சிரியா பற்றி ஜவாரி பேச ஆரம்பித்ததும் தொலைக்காட்சி ஒளிபரப்பு துண்டிக்கப்பட்டது. இதனைத் தணிக்கையின் ஒரு வடிவமென பலர் பார்க்கின்றனர்.

சிரியாவில் பாதிக்கப்பட்ட சகலருக்குமாக ஒருநிமிட மௌனாஞ்சலி செலுத்துமாறு ஜவாரியின் கோரிக்கைக்கு பான் கீ மூன் அனுமதி அளித்திருந்தாரா என்று வியாழன் நண்பகல் செய்தியாளர் மாநாட்டின் போது இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியது. பான் கீ மூனின் பேச்சாளரால் பதிலளிக்க முடியவில்லை. பொதுச் சபையின் தலைவருடைய பெண் பேச்சா ளரிடம் இக்கேள்வியை அவர் பாரப்படுத்தினார். ஆனால், இது பான் கீ மூனுக்கான கேள்வியாகும். சிரிய அரசினால் விடுக்கப்பட்ட இந்த மௌனாஞ்சலியை பான் கீ மூன் அனுட்டித்தாரா? இல்லையா? என்பதே கேள்வியாகும். ஏனைய விடயங்கள் தொடர்பான கேள்விகளுக்கு அவை உறுப்பு நாடுகளைப் பொறுத்த விடயம் என்பது பான் கீ மூனின் பதிலாக உள்ளது. அமைதி காக்கும் பணியில் விசேட ஆலோசகராக இலங்கையின் சவேந்திர சில்வாவை வைத்திருக்க வேண்டுமென அவர் நினைக்கிறார் என்பது பான் கீ மூனின் பதிலாக இருக்கிறது. ஆனால், அவர் இது பற்றி கருத்துத் தெரிவிக்கவில்லை. இது உறுப்பு நாடுகளை பொறுத்த விடயம் என்று அவர் கூறுகிறார்.

விசேட ஆலோசனைகள் குழுக்கூட்டங்களில் சில்வா இப்போதும் கலந்துகொள்கிறாரா என்பது பற்றி உறுதிப்படுத்திக் கொள்வதற்கு அண்மையில் அவரின் செயலகம் கடுமையாக முயற்சித்திருந்தது.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் காலூன்றும் விடுதலைப் புலிகள் – உயர்மட்ட இராஜதந்திரி எச்சரிக்கை



லத்தீன் அமெரிக்க நாடுகளில் விடுதலைப் புலிகளின் அரசியல் செயற்பாடுகள் அதிகரித்து வருவதாக, சிறிலங்காவின் உயர்மட்ட இராஜதந்திரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜெனிவாவுக்கான, சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி தாமரா குணநாயகம், கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே, இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் விடுதலைப் புலிகளின் அரசியல் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளதால், அந்தப் பிராந்தியத்தில் உள்ள தூதரகங்களை வலுப்படுத்தி, சிறிலங்கா எதிர்ப் பரப்புரைகளை வலிமையுடன் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

“உலகில் எல்லா பிராந்தியங்களையும் கவனிக்கத்தக்க வகையில், சிறிலங்காவின் தூதரகங்கள் அமைய வேண்டும்.

இந்த நடவடிக்கையில் லத்தீன் அமெரிக்க, ஆபிரிக்க நாடுகளின் முக்கியத்துவம் சிறிலங்காவுக்கு அதிகரித்து வருகிறது.

போர் முடிவுக்கு வந்த பின்னர், விடுதலைப் புலிகள் தமது கடல் கடந்த செயற்பாடுகளை அதிகரித்து வருகின்றனர்.

அவர்கள் தற்போது லத்தீன் அமெரிக்க நாடுகளில் நுழைந்துள்ளனர்.

ஆர்ஜென்ரீனாவில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளது எனக்குத் தெரியும்.

நாம் அந்தப் பிராந்தியத்தை தனிப்படக் கவனிக்க வேண்டும்.

அவர்களின் செயற்பாடுகள் பற்றிய அறிக்கைகள் அந்த நாட்டின் பிரதான ஊடகங்களில் வெளிவருகின்றன.

அந்த நாட்டு மக்கள் சிறிலங்காவைப் பற்றி மேற்குலக ஊடகங்களில் தான் படிப்பார்கள்“ என்றும் தாமரா குணநாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கப்பல்களையும் விட்டு வைக்காத மெதமுலனே ராஜபக்ஸ



ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ஷ சர்வதேச துறைமுகத்திற்கு கப்பல்களை அரசாங்கம் பலவந்தமாக அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அண்மைய உதாரணமாக வாகனங்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் அனைத்தையும் அந்த துறைமுகத்திற்கு அனுப்பி வைக்குமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த துறைமுகத்தில் மணல் குவிந்து காணப்படுவதால், கப்பல்கள் உள்ளே செல்வதில் பிரச்சினைகள் காணப்படுகின்றன.  கப்பல்கள் மற்றும் துறைமுகங்களை காப்புறுதி செய்யும் லோயிட் நிறுவனம், மகிந்த ராஜபக்ஷ துறைமுகத்திற்கு செல்லும் கப்பல்களை காப்புறுதி செய்வதை நிராகரித்துள்ளது.

இதனால் அந்த துறைமுகத்தில் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக காட்டுவதற்கே அரசாங்கம், கப்பல்களை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு திசைத் திருப்பி விட உத்தரவிட்டுள்ளது. 

இந்த நிலையில், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் கார்கள் இறக்கப்பட்டால், அவற்றை கொழும்புக்கு கொண்டு வர மேலதிக செலவு ஏற்படும் எனவும்  ஒரு வாகனத்தை கொழும்புக்கு கொண்டு செல்ல 40 ஆயிரம் ரூபா வரை செலவாகும் எனவும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

Friday 6 April 2012

நல்லிணக்க ஆணைக்குழுவின் அரசியல் முன்மொழிவுகளை அமுல்படுத்த முடியாது: - இனப்பிரச்சினைக்கு தீர்வு காண புதிய யோசனை முன்வைப்பு! கோத்தபாய



கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அரசியல் ரீதியான முன்மொழிவுகளை அமுல்படுத்த முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழுவின் சில முன்மொழிவுகளையும் அமுல்படுத்த முடியும். அவற்றுக்கான நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சிலர் மாகாணசபைகள் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை கோரி நிற்கின்றனர். காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

தேசிய கீதத்தை தமிழில் இசைக்கும் முன்மொழிவானது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண புதிய யோசனை முன்வைப்பு!

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வை காண்பதற்காக வடபகுதி மக்களை தேசிய அரசியல் கட்சிகளூடாக அரசியலில் பிரவேசிக்கச் செய்ய வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்­ச தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் என்பன சர்வதேச சமூகத்திற்கு பொய்யான சித்திரம் ஒன்றை வடிவமைத்துக் காட்டுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக பிரதான கட்சிகள் வடபகுதிக்குச் செல்ல வேண்டும். புலம்பெயர் தமிழர்கள் வடிவமைக்கும் போலிச் சித்திரங்களை வடபகுதி மக்களாலேயே பொய்ப்பிக்க முடியும்.

தேசிய பட்டியல் மூலம் வட பிரதேசத்திற்கு அதிக இடம் ஒதுக்கப்படல் வேண்டும்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்காக வட பகுதி மக்களை தேசிய அரசியல் கட்சிகளின் ஊடாக அரசியலில் பிரவேசிக்கச் செய்தல் வேண்டும்.

தமிழ் மக்கள் சார்பாக பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் என்பன சர்வதேசத்திற்கு பொய்யான சித்திரம் ஒன்றை வடிவமைத்துக் காட்டுகின்றன.

இத்தகைய போலிப் பரப்புரைகளை வட பகுதியில் வாழும் மக்களால் மாத்திரமே முறியடிக்க முடியும். அதற்காக தேசிய அரசியல் கட்சிகள் சார்பாக அவர்கள் அரசியலில் பிரவேசிக்க இடமளிக்கப்பட வேண்டும்.

வடக்கிலே அரசாங்கம் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளது. இத்தகைய அபிவிருத்தி திட்டங்கள் தற்போதும் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.இதன்மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இலாபம் தேடி வருகின்றது.

தமிழ் மக்கள் போரை விரும்பவில்லை.சமாதானம் நிலைநாட்டப்பட்டுள்ள இச்சந்தர்ப்பத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன வடபகுதி மக்களிடம் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. இது குறித்து நாட்டின் மீது பற்றும் அன்பும் கொண்ட அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.

இதனூடாக சர்வதேச ரீதியில் நாட்டிற்கு எதிராக போலிப் பரப்புரைகளை மேற்கொண்டு வருவோரின் முயற்சிகளை செயலிழக்கச் செய்ய முடியும்.

தேசிய பட்டியல் மூலம் உறுப்பினர்களை நியமிக்கும்போது வட பிரதேசத்திற்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம் தேசிய பிரச்சினைக்கு இலகுவில் தீர்வு காணமுடியும் என கோத்தபாய ராஜபக்ச­ மேலும் தெரிவித்துள்ளார்.

2050 இல் நகர சனத்தொகை வளர்ச்சியில் இந்தியா, சீனா முன்னிலை பெறும் : ஐ.நா



உலக மக்கள் தொகை பற்றிய ஐ.நாவின் புதிய கணிப்பின் படி எதிர்வரும் 40 ஆண்டுகளில், நகர சனத்தொகை வளர்ச்சி வீதம்  கூடிய நாடுகளில் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் முன்னிலை பெறும் என தெரிவிக்கப்படுகிறது.
2010-2050 வரையிலான காலப்பகுதியில் இந்திய நகர மக்கள் தொகையில் கூடுதலாக 49.7 கோடி பேர் புதிதாக இணைந்து கொள்வார்கள் எனவும், அடுத்து சீனாவில்  34.1 கோடி பேர் இணைந்து கொள்ளாவர்கள் என
 உலக நகரமயமாக்கல் பற்றிய ஐ.நாவின் மறுபார்வை அறிக்கை கணிப்பிட்டுள்ளது.






இம்மக்கள்  தொகை வளர்ச்சியான அந்நாடுகளுக்கு பெரும் சவாலாக விளங்கும் எனவும், வேலைவாய்புக்கள், எரிசக்தி, உட்கட்டமைப்பு, விட்டு வசதி  என்பவற்றை அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுப்பதில் பாரிய பிரச்சினைகள்  தோன்றலாம் எனவும் ஐ.நா எச்சரித்துள்ளது.

இந்தியாவுக்கு அடுத்து சீனா, நைஜீரியா, அமெரிக்கா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் மக்கள் தொகை பெருக்கம் அதிகமாக இருக்கும் எனவும் அப்புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

ஆபிரிக்காவில்,'அசாவாத்' ஐ தனிநாடாக பிரகடனப்படுத்தியுள்ள கிளர்ச்சிக்குழுவினர்



ஆப்பிரிக்காவில், மாலி நாட்டின் வட பகுதியில் "அசாவாத்" என்ற தனி நாட்டுக்காக போராடிய
துராக் விடுதலை இயக்கம் (MNLA) தனது இலக்கை அடைந்து விட்டதாக அறிவித்துள்ளது.

அந்தப் பிராந்தியத்தில் முக்கிய நகரமான திம்புக்டுவின் வீழ்ச்சியின் பின்னர், தான் உரிமை கோரிய பகுதிகள் யாவும் தனது கைக்கு வந்து விட்டதாகவும் 'அசவாத்' ஐ தனிநாடாக பிரகடனப்படுத்தி இராணுவ நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதாகவும் அவ்விடுதலை இயக்கம் நேற்று (ஏப்ரல் 05) அறிவித்துள்ளது.

தற்போது அந்தப் பிரதேசத்தில் இஸ்லாமிய ஷரியா சட்டத்தை அமுல் படுத்தியுள்ளதுடன், உலக நாடுகள் 'அசாவாத்' ஐ ஓர் தனிநாடாக அங்கீகரிக்குமாறு வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளது.



ஐ.நாவின் பாதுகாப்பு மற்றும் அமைதி நடவடிக்கைகளுக்கான சபை, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் தமது அண்டைய நாடுகளுக்கு ஆகியவற்று National Movement for the Liberation of Azawad (MNLA) இக்கோரிக்கையை வலியுறுத்தி உத்தியோகபூர்வ அறிக்கையையும் அனுப்பியுள்ளது.

அத்துடன் தமக்கு எதிராக மாலி நாட்டு படைகள் நடத்தும் இராணுவ தாக்குதலில் இருந்து தமை பாதுகாக்குமாறும் சர்வதேச நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

துவாரெக் இனத்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் அசவாத் பகுதி பிராந்தியம் இதுவரை மாலியின் திம்பக்து, கிடால், காவோ மற்றும் மோப்தி ஆகிய மாகாணங்களை உள்ளடக்கிய பிரதேசமாக இருந்து வந்தது.

இப்பகுதியில் எண்ணெய் வளம் மற்றும் யுரேனியம் உட்பட கனிம வளம் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Thursday 5 April 2012

படிச்சு முடிச்சுட்டு ஊருக்கு போங்க... மாணவர்களை விரட்டும் இங்கிலாந்து.



இங்கிலாந்தில் படிக்கும் இந்திய மாணவர்கள், தங்கள் படிப்பு முடித்த உடன் சொந்த நாடு திரும்ப வேண்டும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளில் இருந்து மாணவ விசாவில் இங்கிலாந்திற்கு வந்து உயர் கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் படிப்பு முடிந்த உடன், மேலும் 2 ஆண்டுகள் அங்கேயே தங்கி வேலையும் செய்யலாம்.

இந்த வசதியால் சுயநிதியில் படிக்கும் மாணவர்கள் தங்கள் படிப்பு செலவை ஈடுகட்ட 2 ஆண்டுகள் வேலை செய்து சரிக்கட்டலாம்.

அதுமட்டுமல்லாது, இங்கிலாந்தில் வேலை செய்த அனுபவம், இந்தியாவில் வேலை வாய்ப்பு பெற பெரிதும் உதவும்.

ஆனால், இந்த சலுகைகளை நாளை (6-4-2012) முதல் நிறுத்தப்படுவதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

இதனால், மாணவ விசாவில் வந்தவர்கள் படித்து முடித்து உடனே நாடு திரும்ப வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

அரசின் இந்த முடிவுக்கு இங்கிலாந்து நாட்டு பல்கலைக்கழகங்கள், பிரிட்டிஷ் கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்தியாவுக்கு சீனா கடும் எச்சரிக்கை



தெற்கு சீனக் கடல்பகுதியில் எண்ணெய்வளம் குறித்த ஆய்வுக்காக இந்தியாவுக்கு எதிராக சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.தெற்கு சீன கடல் பகுதி குறித்த சர்ச்சை ஏசியன் உச்சிமாநாட்டில் விவாதிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதை தடைசெய்ய சீனா பலவழிகளிலும் முயன்றது. ஆனால் அதையும் மீறி விவாதிக்கப்பட்டதையடுத்து சீனா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

தெற்கு சீனா கடல்பகுதியில் இந்தியா 2 தொகுப்புகளை பெற்றுள்ளது. ஒரு தொகுப்பில் முன்னதாக ஓஎன்ஜிசி விதேஷ் நிறுவனம் வியட்நாம் எண்ணெய் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து ஆய்வு மேற்கொண்டுவந்தது. அதில் எண்ணெய் இல்லை என்பது பின்னர் தெரியவந்தது.எனினும் இந்த விவகாரத்தை தில்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின்போது பிரதமர் மன்மோகன் சிங்குடன் சீன அதிபர் ஹூ ஜிந்தாவோ விவாதிக்கவில்லை.

வியட்நாம் தொகுப்புகளில் எண்ணெய்வளம் குறித்து ஆய்வை மேற்கொள்வது குறித்து மார்ச்சி்ல்கூட இந்தியாவுக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது.சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட வேண்டும் என்று இந்தியாவை சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் கேட்டுக் கொண்டிருந்தார்.தெற்கு சீன கடல்பகுதி முழுவதும் தங்களுக்கே சொந்தம் என சீனா உரிமை கொண்டாடி வருகிறது. 

ஆனால் அதற்கு வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருணை மற்றும் தைவான் ஆகிய நாடுகள் தங்களுக்கும் அந்த பகுதியில் பங்கு உண்டு என்று சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

Wednesday 4 April 2012

கச்சதீவில் கடற்படைத் தளம். - ஆய்வு



மார்ச்சு31ம் நாளன்று கிடைத்த தகவலின்படி தமிழக மீனவர்கள் மீதான சிங்களக் கடற் படையின் தாக்குதல்கள் தொடர்வதாக அறியமுடிகிறது. கச்சதீவுக் கடற் பிராந்தியத்தில்  நடுக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் விரட்டியடிக்கப் பட்டுள்ளனர்.
 
ஊமைக் கோட்டான் போன்ற பிரதமரும், ஆயுதக் கொள்வனவில் ஊழல் தொடர்பான விவகாரத்தில் கவனஞ் செலுத்தும் பாதுகாப்பு அமைச்சரும், தெலுங்கானப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாமல் தவிக்கும் உள்துறை அமைச்சரும் தமிழக மீனவர்கள் பற்றி கவலைப் படுவதாகத் தெரியவில்லை.

வெளிவிவகார அமைச்சரோ இந்த பிரச்சனையைப் பேசித் தீர்க்கப் போவதாக அடிக்கடி கூறுகிறார். ஆனால் கொழும்பு சென்று திரும்பிய பின் இது பற்றிக் கேட்டபோது மீனவர் பிரச்சனை பற்றிப் பேசுவதற்கு அவகாசம் கிடைக்கிவில்லை என்று சொல்கிறார்.

தமிழக அரசு கடிதப் போக்கு வரத்தோடு மீனவர் பிரச்சனையை நிறுத்தியுள்ளது. மக்களின் வாழ்வாதாரம் மாத்திரமல்ல தமிழகத்தின் பொருளாதாரமும் பெருமளவில் முடக்கப்பட்டுள்ளது. மீன் உள்நாட்டு நுகர்ச்சிக்கும் வெளிநாட்டு ஏற்றுமதிக்கும் ஆதாரமாக  அமைகிறது.

இந்த விவகாரத்திற்கு தமிழக ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இந்த மனக் குறை எமது மீனவர்கள் நெஞ்சில் நெடுகாலமாகக் குடி கொண்டுள்ளது. மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டிய ஊடகங்கள் மீனவர் விவகாரத்ததை வெறும் செய்தியாக மாத்திரம் பார்க்கின்றன.

இந்த விவகாரத்தின் அடிப்படை வேறோர் இடத்தில் இருக்கிறது. கச்சதீவுக் கையளிப்பு தொடர்பான உடன்படிக்கைக்கு முரணான விதத்தில் இலங்கைக் கடற்படை கச்சதீவில் நிரந்தர கடற்படைத் தளம் அமைத்துள்ளது.

கடற்படைத் தளத்தின் ஒரு பகுதி நிழற்படத்தை இதனோடு இணைத்துள்ளோம். அண்மையில் கச்சதீவில் நடந்த அந்தோணியார் திருவிழாவுக்குச் சென்ற தமிழகப் பொது மக்கள் இலங்கைத் கடற்படையின் கட்டிடத் தொகுதிகளைக் கண்டுள்ளனர்.

மக்களோடு மக்களாகச் சென்ற இந்திய உளவுத்துறையினர் சிங்களக் கடற்படையினரின் கட்டுமானங்களையும் படையினரின் பிரசன்னத்தையும் படம் பிடித்துள்ளனர். இதற்கு மேல் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறது.

கச்சதீவில் நிறுவப்பட்ட சிங்களக் கடற்படையின் கட்டமைப்பு சீன உதவியுடன் செய்யப்பட்டுள்ளது. இதை மறைப்பதற்கு முயற்சி எடுக்கப்படவில்லை. அங்கே பயன்பாட்டில் உள்ள உபகரணங்கள், தளபாடங்களில் சீனமொழி எழுத்துக்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன.
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் கச்சதீவில் நிலைகொண்டுள்ள சிங்களக் கடற்படை, அவர்களோடு இணைந்து செயற்படும் சிங்கள மீனவர்கள் அடங்கிய துணைப் படை ஆகியவற்றால் நடத்தப்படுகிறது.

இலங்கை கடற்படையும் இலங்கை மீனவர்களும் தமிழக மீனவர்களைத் தாக்கிக் காயப்படுத்துகிறார்கள் என்று கூறும் எமது தமிழக ஊடகங்கள் பெரும் தவறிளைக்கின்றன. இலங்கை மீனவர்கள் என்று பொதுப்படையாகக் கூறும் போது ஈழத் தமிழ் மீனவர்களும் தாக்குதலில் ஈடுபடுகிறார்கள் என்ற தவறான கற்பிதம் எழ வாய்ப்பு இருக்கிறது.

இலங்கைத் தீவின் தென் பகுதியில் வாழும் சிங்கள மீனவர்கள் கடற்படையின் பாதுகாப்புடன் வடக்கு நோக்கி நகர்த்தப்பட்டுள்ளனர். இளைஞர்களுக்குப் பயிற்சி வழங்கும் கடற்படையினர் “சோமாலியாக் கடற் கொள்ளையர்கள்” என்ற தாக்குதல் அணியை உருவாக்கியுள்ளனர்.

தமிழக மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசுதல், கற்களால் தாக்குதல், இரும்பு கம்பிகளால் அடித்துக் காயம் விளைவித்தல், பெறுமதியான பொருட்களையும் பிடித்த மீன்களையும் சூறையாடுதல் போன்ற அநாகரிகமான நடவடிக்கைகளை தம்மைத் தாமே கடற் கொள்ளையர்கள் என்று அழைப்பவர்களே செய்கிறார்கள்.

மத்திய மாநில அரசுகளின் அலட்சியப் போக்கைக் கண்டிக்கச் சொற்கள் போதாது. ஒரு கண்ணுக்கு வெண்ணெய்யும் மறு கண்ணுக்கு சுண்ணாம்பும் என்று ஓரவஞ்சகத்திற்கு உதாரணம் கூறுவார்கள். இத்தாலிக் கப்பல் கேரள மீனவரைச் சுட்டுக் கொன்ற போது கேரள அரசு உடனடி நடவடிக்கை எடுத்தது.

இந்திய பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். கேரள அரசுடன் இணைந்து அவர்கள் இத்தாலி கப்பலையும் சிப்பந்திகளையும் சிறைப் பிடித்தார்கள்.

ஆனால் இது வரை 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்களப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கைப் போர் முடிந்த பிறகு இயல்பு நிலை திரும்பி விடும் என்ற நம்பிக்கை தகர்ந்து விட்டது.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களைக் கைவிட சிங்களப் படை மறுக்கிறது. அதே போல் இந்திய மத்திய மாநில அரசுகளும் பாதுகாப்பு வழங்க மறுக்கின்றன. இனியாவது தமிழக மீனவர்களுக்கு விடிவு கிட்டுமா என்று கேட்கிறோம்.

போர்குற்றங்கள் தொடர்பில் அமெரிக்காவின் அறிக்கை தயார்!



முள்ளிவாய்க்கால் இறுதிநேர மோதலில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிடுவதற்கு அமெரிக்க வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துவருகிறது.

இன்னும் ஒருவாரத்திற்குள் இந்த அறிக்கை வெளிவரும். அறிக்கையைப் பகிரங்கப்படுத்தப்படுவதற்கு முன்னர் அமெரிக்க காங்கிரஸ் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்படுமென அமெரிக்கத்தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த அறிக்கை மார்ச் மாத முற்பகுதியில் வெளியிடப்படவிருந்தது.

அதே காலத்தில் ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் சிறீலங்காவிற்கு எதிரான தீர்மானமொன்றை அமெரிக்கா கொண்டு வந்திருந்தது. எனவே ஒரேநேரத்தில் இரண்டு பாரதூரமான விடயங்களைக் கையாள அமெரிக்கா விரும்பவில்லை. ஆகையால் ஜெனிவா மாநாடு முடிந்த நிலையில் இப்போது இந்த அறிக்கையை வெளியிட தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.போர்க் குற்றங்கள் தொடர்பில் இதேபோன்ற ஓர் அறிக்கையை 2009ஆம் ஆண்டு அமெரிக்க வெளிவிவகார அமைச்சு வெளியிட்டிருந்தது.

இப்போது வெளிவரவுள்ள அறிக்கையில் போர்க்குற்றங்கள் தொடர்பில் பல புதிய ஆவணங்களை அமெரிக்கா முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tuesday 3 April 2012

ஜெனிவாவில் இறுதிக் கணங்கள்!- அம்பலத்துக்கு வரும் மேலதிக தகவல்கள்



ஜெனிவாவில் அரசு பிரகடனப்படுத்திய இராஜதந்திரப் போரில் அது தோற்றுவிட்டாலும், அங்கே நடந்த அரசியல், இராஜதந்திர முயற்சிகள் குறித்த தகவல்கள் தொடர்ந்து  அம்பலமாகி வருகின்றன.


அப்படி ஜெனிவாவில் நடைபெற்ற மேலும் பல விடயங்களின் தொகுப்பு வருமாறு:

தீர்மான இறுதி வரைபு வெளியாவதற்கு பல நாட்கள் முன்னதாகவே, ஜெனிவாவில் இந்திய அமெரிக்க இராஜதந்திரிகள் இரகசியமான ஆலோசனைகளில் மூழ்கியிருந்தனர். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகளுடன் இலங்கை அரசு நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தீர்மான வாசகம் திருத்தப்படவேண்டும் என் பதில் இந்தியா ஒற்றைக்காலில் நின்றது.

இந்தப் பேரத்தில் மிகவும் முக்கிய பங்கை ஆற்றியவர், ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கான இந்தியாவின் புதிய தூதர் திலிப் சின்கா ஆவார். ஜெனிவாத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு 5 நாட்கள் முன்னதாகவே அவர் ஞாயிற்றுக்கிழமை புதுடில்லியில் இருந்து ஜெனிவாவுக்கு வந்திருந்தார். அமெரிக்க அதிகாரிகளுடன் உடனடியாகவே அவர் ஆழமான ஆலோசனைகளை நடத்தினார்.

இலங்கைக்கு எதிரான தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக செவ்வாய்க்கிழமை இரவு சின்காவுக்கு இரவு விருந்தளித்தார் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ். ஜெனிவாவில் உள்ள இலங்கைத் தூதரகம் இந்த விருந்தை ஒழுங்கு செய்தது. அதற்குக் காரணம், இந்தியாவை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலையாவது வகித்து ஒதுங்கி நிற்குமாறு வலியுறுத்துவதேயாகும்.

ஜெனிவாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட முன்னர், இந்திய வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலராக இருந்தவர் திலிப் சின்கா. இலங்கைக்கு ஆதரவாக இந்தத் தடவை இந்தியா நடந்துகொள்ளாது என்பதை அந்த இரவு விருந்தின்போதே சின்கா, பிரீஸுக்குத் தெளிவுபடுத்திவிட்டார்.

உள்நாட்டு விவகாரங்களினால் இந்தமுறை இலங்கையைக் காப்பாற்ற முடியாது என்று அவர் கைவிரித்து விட்டார். விருந்து முடித்து வெளியே வந்த இலங்கை அமைச்சர் ஒருவர், தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கப் போகிறது என்பதைப் பகிரங்கமாகக் கூறினார். அதேவேளை, வாக்கெடுப்புக்கு முதல்நாளான புதன்கிழமை இரவு மிகக் கடுமையான இராஜதந்திர பேரம் பேசல்கள் இலங்கை அமெரிக்க இந்தியத் தரப்புகளில் இடம்பெற்றன.

தீர்மானத்தில் திருத்தம் செய்வதற்கு அமெரிக்கப் பிரதிநிதி எலின் டொனஹேயுடன் பேரம் பேசுமாறு திலிப் சின்காவுக்கு புதுடில்லியில் இருந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தீர்மானத்தைத் திருத்துவதற்கு அமெரிக்காவும் அதன் தோழமை நாடுகளும் விரும்பவில்லை. அப்படிச் செய்வது இலங்கையை வழிப்படுத்துவதாக அமையாது என்று அவை கருதின. ஆனால், திலிப் சின்கா மிகக் கடுமையாக, விடாப்பிடிப் போக்குடன் இருந்தார்.

ஒரு கட்டத்தில் அவர், திருத்தமாட்டேன் என்று அமெரிக்கா பிடிவாதம் பிடித்தால் இந்தியா தீர்மானத்தை எதிர்க்கும் என்று மிரட்டினார். 2009ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா முன்னின்று தோற்கடித்ததையும் அவர் நினைவுபடுத்திச் சுட்டிக்காட்டினார்.

கடைசியாக இந்தியாவின் வழிக்கு வந்தது அமெரிக்கா. தீர்மான வாசகங்கள் திருத்தப்பட்டன. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசின் ஒப்புதலுடன், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் ஆலோச்னை மற்றும் தொழில் நுட்ப உதவிகளை வழங்கலாம் என்ற இந்தியாவின் திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அமெரிக்கா கொண்டு வந்த இந்தத் தீர்மானத்துக்கு ஹங்கேரி, ருமேனியா, நெதர்லாந்து, அவுஸ்திரேலியா, மொனாக்கோ, ஸ்பெயின், லித்வேனியா, பின்லாந்து, சைப்ரஸ், குரோசியா, பல்கேரியா, ஸ்லோவேனியா, எஸ்தோனியா, செக் குடியரசு, லக்சம்பேர்க், கிறீஸ், இஸ்ரேல், ஸ்லோவாக்கியா, மோல்டா, ஜோர்ஜியா, சுவிற்சர்லாந்து, சோமாலியா, கனடா, கமரூன், லிச்சன் ஸ்டைன், நோர்வே, டென்மார்க், சுவீடன், அயர்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், போர்த்துக்கல், ஆஸ்திரியா, போலந்து, பிரித்தானியா, ஜெர்மனி, இத்தாலி, ஐஸ்லாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய 40 நாடுகள் துணை அனுசரணை வழங்கியிருந்தன.

இவற்றில் 13 நாடுகள் மட்டுமே ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இந்த முறை வாக்களிக்கும் உரிமையைக் கொண்டிருந்தன. 40 நாடுகளின் ஆதரவுடன் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்திருந்தாலும், இந்தியாவின் அழுத்தங்களுக்கு அமெரிக்கா பணிந்து போக வேண்டியிருந்ததால், முன்னைய வரைபின்படி அதிக நெருக்குதல்களைக் கொடுக்கும் வகையிலான தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது போனது என்று அமெரிக்க இராஜதந்திரிகள் கூறுகிறார்கள்.

கொழும்பில் எந்த நேரமும் இனக் கலவரம் வெடிக்கலாம்



தென் பகுதித் தமிழர்கள் நிம்மதி இல்லாத இரவுகளைக் கழிக்கின்றனர். கடந்த சில நாட்களாக நிலவும் அசாத்திய சூழல் அவர்களுடைய அமைதியைக் கெடுக்கின்றது. இராணுவ வாகனங்கள் தெருக்களில் இரவு பகலாகச் சுற்றுகின்றன. இப்படித் தான் 1983 இனக் கலவரம் தொடங்கியது.

முதலில் இராணுவ வாகனங்கள் ஒடித்திரியும். அடுத்ததாகப் புத்த பிக்குகள் விகாரைகளில் அமர்ந்தவாறு மக்களுக்கு தர்ம உபதேம் செய்வார்கள். புத்த மதத்தினர் அல்லாதோரைப் படுகொலை செய்வது பாபச் செயல் அல்லவாம். இது மகாவம்ச இதிகாசத்தில் வழங்கப்பட்ட உத்தரவாதம் என்று பிக்குகள் உபதேசிக்கிறார்கள்.

இரவில் தமிழர்கள் வாழும் வீட்டுச் சுவர்களில் இரகசிய அடையாளங்களைச் சிங்களக் காடையர்கள் வண்ணக் கட்டிகளால் போடுகிறார்கள். தமிழர்களின் இருப்பிடங்களையும் எண்ணிக்கைகளையும் மக்கள் கணக்கெடுப்புப் பதிவேடுகளில் இருந்து பெற்றுக் கொள்கிறார்கள்.

தமிழர்கள் அண்மையில் உள்ள பொலிஸ் நிலையங்களில் தங்கள் சுய விபரம், குடும்பத்தினர் சுய விபரம், எண்ணிக்கை, முகவரி, அடையாள அட்டை இலக்கம் போன்றவற்றைப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் பதிவு செய்ய வேண்டும்.


இந்தப் பதிவுகளும் தமிழர்கள் வாழ்விடங்களை அடையாளம் காண உதவுகின்றன. வீடு வீடாகச் சென்று பொருள்களை விற்பனை செய்யும் வர்த்தகப் பிரதிநிதிகளும் தமிழர்களை அடையாளம் காண உதவுகிறார்கள். தமிழர்களுக்கு பொருள்களை விற்பனை செய்வதாலும் இலாபம் இனக் கலவரத்தின் போது கொள்ளை அடிப்பதாலும் இலாபம்.

இந்த மாதத்தில் நடத்தத் திட்டமிடப்பட்ட இனக் கலவரத்தை படு வேகமாக நடத்தி முடிக்க வேண்டும் என்று அரசு விரும்புகிறது. அரசு இனக் கலவரத்தைத் தொடக்கி அதை முடித்து வைக்கும். குறுகிய காலத்திற்குள் படுகொலைகளையும் தீ வைத்தலையும், சூறையாடல்களையும் நடத்தி முடிப்பதற்கு ஏன் திட்டமிடுகிறார்கள்.?

காலம் நீடித்தால் வெளி நாடுகள் தலையிடலாம். குறுகிய காலத்திற்குள் முடித்து விட்டால் தலையீடுகளைத் தவிர்க்கலாம். இழப்புக்கள் பெரிதாக இல்லை என்றும் பிரசாரம் செய்யலாம். 2009ம் ஆண்டில் நடந்த வன்னிப் படுகொலைகளை நடத்தியதைப் போல் சாட்சிகள் இல்லாமலும் நடத்தி முடித்து விடலாம்.

அரசுடன் இணைந்து செயற்படும் ஜாதிக ஹெல உறுமைய என்று சிங்கள இனவாத அமைப்பின் தலைவர் சம்பிக்க றணவக்க அமைச்சரவையில் முக்கிய பதவி வகிக்கிறார். ஜாதிக விமுக்தி பெரமுன என்ற ஜேவீபி கட்சிப்  பிரமுகர் விமல் வீரவன்ச பாதுகாப்புச் செயலர் கொத்தபாய ராஜபக்சவின் உயிர் நண்பர்.

சம்பிக்க றணவக்கவும் விமல் வீரவன்சவும் மீண்டுமொரு இரத்தக் களரியை நடத்தித் தமிழர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று மேடை போட்டுப் பேசுகிறார்கள். இப்படியான அமைதியைக் குலைக்கும் பேச்சுக்களைத் தடை செய்யச் சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் அவை அரசு ஆதரவு பெற்ற இனவாதிகளைப் பாதிப்பதில்லை.

1983ம் ஆண்டில் இனக் கலவரத்தை நடத்திய ஜக்கிய தேசிய கட்சி இப்போது ஆட்சி நடத்த வலுவில்லாத எதிர் கட்சியாகச் சுருங்கி விட்டது. இலங்கையில் எதிர் கட்சிகள் நல்ல பிள்ளை வேடம் போடுவதும் அரசுரிமையைப் பெற்றவுடன் இனக் கலவரங்களை நடத்துவதும் அரசியல் சாசனத்தில் இடம்பெறாத வழமை.

இப்போது ஜக்கிய தேசிய கட்சி அரசுக்கு உபதேசம் செய்கிறது. அதனுடைய மூத்த உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இனக் கலவரத்தைத் தூண்டாதீர் என்று அரசை எச்சரிக்கிறார். வெளி நாட்டுத் தலையீட்டுக்கு அது வழிவிட்டு விடும் என்பது அவர் வாதம். அவர் சொன்னால்  என்ன  சொல்லாவிட்டால் என்ன மீண்டுமொரு தமிழர்களுக்கு எதிரான இனக் கலவரம் வெடிக்கத் தான் போகிறது.

இலங்கைத்தீவில் வாழும் தமிழர்கள் ஏற்கனவே உயிராகவும் உடமையாகவும் பெருவிலை கொடுத்து விட்டார்கள். இன்னுமொரு இரத்தப் போக்கிற்கு அவர்களால் முகங் கொடுக்க இயலாது. இதற்கு முடிவே இல்லையா என்று முதியோரும் இளையோரும் தவிக்கின்றனர்.

முடிவில்லாத பயணங்கள் போல் இலங்கைத் தமிழர்களின் துன்ப துயரம் நீண்டு செல்கிறது. இலங்கையில் இனக் கலவரங்கள்  1956ம் ஆண்டு தொடக்கம் விட்டு விட்டுத் தொடர்கின்றன. இலங்கை இனக் கலவரங்கள் தீடீர் விபத்துக்கள் அல்ல. அவை அரசும் இராணுவமும் இணைந்து செயற்படுத்தும் உயிர்ப் பலி அடங்கிய வேள்வி.

Monday 2 April 2012

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ராக்கெட் வேக கோல்.




வெட்ட வரும் வாளை மாலையாக்கும் விபரீதம்



இலங்கையின் அரசியல் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் மதிக்கப்படும் தலைவர்களைத் தண்டிக்கிறது. அவர்கள் அவர்களின் அரசியல் எதிரிகளால் கூட கௌரவமாக நோக்கப்படுமளவுக்கு ஆளுமையும் உறுதியும் கொண்டவர்களாக விளங்கினர்.

சேர்.பொன்னம்பலம் இராமநாதன் சிங்கள முஸ்லிம் மக்களால் மட்டுமன்றி பிரிட்டிஸ் அரசினாலேயே மிகவும் மதிக்கப்படும் ஒரு தலைவராக விளங்கினார். எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா இலங்கை மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட ஒரு தலைவராகவும் நடுநிலைமை நாடுகளால் மதிக்கப்பட்ட தலைவராகவும் அவரை விரும்பாத மேற்குலகத்தால் கூட மதிக்கப்படும் ஒரு தலைவராக விளங்கினார். திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா சாதாரண விவசாயிகள் தொழிலாளர்களின் அன்பைப் பெற்றவராகவும் மூன்றாம் உலக நாடுகளை வழிநடத்தும் ஆளுமையுள்ள தலைவியாகவும் விளங்கினார். ஜ.ஜி.பொன்னம்பலம்  தனது விவாதத் திறனாலும் அரசியல் சாணக்கியத்தாலும் உலகப் புகழ் பெற்றிருந்தார். நேர்மைக்கும் சத்தியத்துக்கும் அஹிம்சைக்கும் உலகமே மதிக்கும் ஒரு தலைவராக விளங்கினார் தந்தை செல்வா. மேற்குலகின் விசுவாசியாக இருந்த போதிலும் அவர்களையும் எதிர்கொண்டு வெற்றி பெறும் அரசியல் சாணக்கியராக விளங்கினார் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா.

இவ்வாறு இலங்கையின் பாராளுமன்ற அரசியல் காலம் காலமாக ஏதோ ஒரு விதத்தில் ஆளுமை கொண்ட அரசியல் சாணக்கியம் மிக்க அரசியல்வாதிகளால் வழிநடத்தப்பட்டது. இன்று இலங்கை அரசியலில் தலைமை தாங்கும் சக்திகளாகவும் எதையும் தீர்மானிக்கும் வல்லமை பெற்றவர்களாகவும் ஏனைய அரசியல் வாதிகளை மடக்கி தம்பின்னால் வரவைப்பது மறுப்பவர்களைச் சிதைத்துச் சின்னாபின்னப்படுத்தி பலவீனப்படுத்துவது போன்ற கைங்கரியங்களில் ராஜபக்ச சகோதர்கள் திறமை பெற்று விளங்குகின்றனர். பாதுகாப்பு, நிதி, பொருளாதாரம் ஆகிய துறைகளைத் தமது அதிகாரத்தின் கீழ் வைத்து ஒரு சர்வாதிகாரப் பாணியிலான ஆட்சியை நடத்தி வருகின்றனர். ஏனைய அமைச்சர்களும் அரச சார்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இவர்களுக்குத் துதிபாடும்,  திருப்திப்படுத்தும் பாரிய பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னைய தலைவர்களைப் போன்று இவர்களிடம்  அரசியல் தலைமைக்குரிய தனித்துவங்கள் இல்லாத போதும், அவர்களிடம் இல்லாத பிரத்தியேக ஆற்றல் ஒன்று இவர்களிடம் உண்டு.

அதாவது தமக்குப் பாதகமாக எழும் பிரச்சினைகளை வெகு லாவகமாக தமக்குச் சாதகமாக மாற்றியமைப்பது. இதற்கென இவர்கள் கையில் எடுத்திருக்கும் ஆயுதங்கள் தேசப்பற்று, இனவாதம், மதவெறி போன்ற இலகுவில் மக்களை உணர்வேற்றக் கூடிய அம்சங்களையே! ஆனால் இவை அனைத்தும் உண்மையான அடிப்படையில் கையாளப்படாமல் வெறியூட்டப்பட்டு தம்மைப் பாதுகாக்கும் கவசங்களாக மாற்றப்படுகின்றன.

‘இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்க முடியும். அரசின் கடந்த கால நடவடிக்கைகள் தான் இந்த விசாரணைகள் கவனம் செலுத்தும் கருப்பொருள். எனவே அவர்கள் புதிய முயற்சிகளுக்கு அதாவது விசாரணைகளுக்கு ஒத்துழைக்க மாட்டார்கள். எனவே இந்த அரசு மாறும் வரை நாம் பொறுத்திருக்க வேண்டும்.
 ஐ.நா. பாதுகாப்புச் சபையில் ரஸ்யா, சீனா போன்ற நாடுகள் ஒத்துழைக்காத நிலையில் ஐ.நா. சபையில் நடவடிக்கை எடுக்க முடியாது’
இப்படிக் கூறியவர் மனிதாபிமான விவகாரங்களுக்கான முன்னாள் உதவிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் அவர்கள். இவர் இலங்கை அரசு தரப்பு பற்றியும் இலங்கை விவகாரங்கள் தொடர்பாகவும் நீண்ட அனுபவங்களைக் கொண்டவர்.

அவர் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படாமல் போர்க் குற்றங்கள் தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட முடியாது என்பதும் அவரால் இதற்குக் கூறப்பட்ட காரணங்களும் முக்கியமானவை.
இதே விசயத்தை அதாவது ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை போர்க்குற்றங்கள் தொடர்பான நடவடிக்கைகளைச் சரியான முறையில் முன்னெடுக்க முடியாது என்ற விசயத்தை இலங்கை அரசு ஏற்கனவே புரிந்து கொண்டு நடவடிக்கையில் இறங்கிவிட்டது.

அதாவது தான் இறுதிக் காலம் வரை ஆட்சியில் இருக்கும் வரையில் அரசியலமைப்புச் சட்டங்களில் திருத்தம் கொண்டு வந்தும் மக்களின் மனநிலையை மாற்றியும் சகல தயாரிப்புகளையும் மேற்கொண்டு வருகிறனர். அதாவது தன்குப் பாதகமாக எழும் விசயங்களைச் சிங்கள மக்களை ஏமாற்றி தனக்குச் சாதகமாக மாற்றுவதில் அவர்கள் பெரும் வெற்றி பெற்று வருகின்றனர்.

போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்பு அதன் வெற்றி விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணப்போவதாகவும் இனங்களுக்கிடையே ஒரு நல்லிணக்கத்தை உருவாக்கப் போவதாகவும் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் இங்கு விஜயம் செய்த இந்திய அரசு தரப்பினரிடம் 13வது திருத்தச் சட்டமுமஇ; அதற்கு மேலதிகமாகவும் இனப்பிரச்சினைத் தீர்வாக முன்வைக்கப் போவதாக வாக்குறுதி வழங்கினார்.

ஆமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சாத்தியப்பட முடியாத கோரிக்கைகளை முன்வைப்பதாகவும்  பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்துடன் மேலதிகமாக வழங்கப் போவதாகவும் ஜனாதிபதி தனக்கு வாக்குறுதி தந்ததாகவும் முழங்கினார். இன்றுவரை இந்தியாவுக்கோ டக்ளஸ் தேவானந்தாவுக்கோ வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

ஆனால் 18வது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் பொதுநிர்வாகம் பொலிஸ் அதிகாரம் என்பன தொடர்பாக மாகாண சபைகளுக்கு 13வது திருத்தச் சட்டம் மூலம் வழங்கப்பட்ட அதிகாரம் பறிக்கப்பட்டது. அதேவேளையில் ஒருவர் இரு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டம் மாற்றப்பட்டது. அதாவது சிங்கள மக்கள் மத்தியில் சிங்களக் கடும் போக்காளர்கள்,  மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் பொது நிர்வாக சேவை அதிகாரம் என்பவற்றை வழங்கினால் தமிழர்களுக்கு எதையோ உரிமைகளை  வழங்கி விட்டதாக எதிர்ப்பைக் கிளப்புவார்கள். ஏன்பதைப் புரிந்து கொண்டு 13வது திருத்தச் சட்டத்திலிருந்து அவற்றை நீக்கும் வகையில் இன்னொரு சட்டம் கொண்டு வந்தர் மகிந்தராஜபக்ச ஒருபுறம் தமிழ் மக்களின் உரிமையைப் பறித்துக் கொண்டு சிங்களக் கடும் போக்காளரைத் திருப்திப்படுத்திக் கொண்டு இதே சட்டத்தின் மூலம் தான் உயிருள்ள வரை ஜனாதிபதியாகும் ஏற்பாட்டை செய்து கொண்டார்.

அன்றோ ஒரு நாள் போர்க்குற்றங்கள் தன் கழுத்தை நெரிக்கும் என்பதை முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்த மஹிந்த ராஜபக்ச அதிலிருந்து தப்பிக்கொள்ள தான் என்றுமே ஜனாதிபதியாகும் ஏற்பாட்டை செய்து கொண்டார்.

இதே போன்று இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்து ஐ.நா. செயலருக்கு அறிக்கை சமர்;ப்பிக்க ஒரு நிபுணர் குழு நியமிக்கப்பட்டது. உடனடியாகவே அந்நியத் தலையீடு எனவும் இலங்கையின் இறைமை, சுயாதிபத்தியம் என்பன மேல் தொடுக்கப்படும் அகௌரவம் எனவும் கூச்சல் எழுந்தது. ஐ.நா.வுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் முற்றுகைப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அமைச்சர் விமல் வீரவன்ச உண்ணாவிரதப் போராட்டத்தையும ;நடத்தினார். எனினும் நிபுணர்குழு தன் பணியைத் தொடர்ந்து தனது விசாரணை அறிக்கையை ஐ.நா. செயலரிடம் சமர்ப்பித்தது. சில நாட்களில் அது பகிரங்கப்படுத்தப்பட்டது.

அவ்வறிக்கையை நிராகரித்த அரசாங்கம் உள்ளுரிலேயே விசாரணை நடத்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவை நியமித்தது. அதுவும் ஒன்றரை வருடங்கள் கடந்து ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. அதுவும் இன்றுவரை அமுல்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் தான் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடரில் அமெரிக்க நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு கோரி ஒரு பிரேரணையை முன்வைத்தது. இப்பிரேரணைக்கு எதிராக உறுப்பு நாடுகளை அணிதிரட்ட இலங்கை உச்ச கட்ட பிரயத்தனங்களில் ஈடுபட்டது அதுமட்டுமன்றி இப்பிரேரணை கொண்டு வரப்படுவது இலங்கையின் இறைமை மீதும் இ சுயாதிபத்தியம் மீதும் அமெரிக்கா மேலாதிக்கம் செலுத்தும் ஒரு முயற்சி என்பனவும் இலங்கயால் வர்ணிக்கப்பட்டது.

இலங்கை அதிபரால் நியமிக்கப்பட்ட ஒரு ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசையே நடைமுறைப்படுத்தும் படி கேட்பது எவ்விதத்தில் அந்நியத் தலையீடு என்பது இலங்கையின் கொள்கை விடுப்பாளர்களுக்கு மட்டும் விளங்கக் கூடிய இரகசியமாகும். சில சமயங்களில் இப்பரப்புரைகளை  சுமந்து உலகெங்கும் செல்லும் டக்ளஸ் தேவானந்தா, ரிசாத்; பதியுதீன் போன்ற சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த அமைச்சர்களுக்கு விளங்கக் கூடும்.

எப்பிடியிருப்பினும் தனக்கு எதிராக எழும் போர்க்குற்ற விவகாரங்களைத் தனக்குச் சாதகமாகப் பாவிப்பதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பெரும் வெற்றி பெற்று வருகிறார் என்பது மட்டும் உண்மை. இதில் இரண்டு விசயங்களில் அவர் வெற்றியடைந்து வருகிறார்.

ஒன்று எரிபொருள் விலையுயர்வு, போக்குவரத்துக் கட்டணம் அதிகரிப்பு, மின்சாரக் கட்டண உயர்வு, பாவனைப் பொருட்களின் விலையுயர்வு, ஊதிய உயர்வு கோரி பல்வேறு தொழிற்சங்கங்கள் நடத்தும் போராட்டங்கள் என்பன காரணமாக அரசாங்கத்தின் மீது மக்கள் எதிர்ப்பு ஆரம்பமாகியது. அவற்றை திசை திருப்ப அமெரிக்க எதிர்ப்பு என்ற மாயையைக் காட்டி மக்கள் கவனம் திசை திருப்பப்படுகிறது. நாட்டைக் காப்பதற்காக பிரார்த்தனை அமெரிக்கத் தலையீட்டுக்கு எதிரான போராட்டங்கள் என மக்கள் வீதியில் இறக்கப்படுகின்றனர். எனவே வாழ்க்கைச் செலவு உயர்வு காரணமாக எழக்கூடிய நெருக்கடிகள் அரசாங்க எதிர்ப்புணர்வு அனைத்தும் மழுங்கடிக்கப்பட்டு விட்டன.

அடுத்தது நாடு என்றால் மஹிந்த ராஜபக்ச. மஹிந்தராஜபக்ச என்றால் நாடு என்ற ஒரு மாயை உருவாக்கப்படுகிறது. புயங்கரவாதத்தை ஒழித்த மாபெரும் வீரராக அவர் காட்டப்படுகிறார். மீண்டும் பயங்கரவாதம் எழுச்சி பெறாமல் தடுக்கும் ஆற்றல் அவருக்கே உண்டு எனவும் கற்பிக்கப்படுகிறது. எனவே என்றும் நாட்டின் தலைவராக அவரே இருக்க வேண்டும் என்பது மக்கள் மத்தியில் பதிய வைக்கப்படுகிறது.

அதாவது 18வது திருத்தச் சட்டத்தின் மூலம் மஹிந்த ராஜபக்ச எத்தனை தரமும் ஜனாதிபதியாக வரும் வாய்ப்பு உருவாக்கப்பட்டது. புலி எதிர்ப்பு தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் சிங்கள மக்களை இனவெறி சிந்தனைப் போக்கில் வைத்துக் கொண்டு தான் ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு வாதியாகக் காட்டி என்றும் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறும் வகையில் திட்டமிட்டு காய்கள் நகர்த்தப்படுகின்றன.

தனது இறுதி காலம் வரை ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு போர்க்குற்றங்களிலிருந்து  தப்பும் வகையில் மஹிந்த ராஜபக்ச அவர்கள் தனக்குப் பாதகமான அம்சங்களையே சாதகமாக மாற்றி காய்களை நகர்த்தி வருகிறார்.

இப்படியான நயவஞ்சக நோக்கத்தில் எந்த ஒரு சர்வாதிகாரியும் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை என்பதே உண்மை. வேட்ட வரும் வாளை தற்காலிகமாக மாலையாக்கிப் போடலாம். ஆனால்  வாள் வாள் தான். மாயை மாயை தான்.

-அக்கினீஸ்வரன்-

Sunday 1 April 2012

புரட்சி பீதி: சீனாவில் இணைய தளங்கள் மூடல்



சீனாவில் மீண்டும் இணைய தளங்கள் மூலம் புரட்சி தீயை உண்டாக்க சிலர் தொடர்ந்து முயன்று வருகின்றனர். இதனால் சீனாவில் புரட்சி பீதி பரவியுள்ளது. இதை தொடர்ந்து இணையதளங்கள் சினா.காம், டென்சென்ட் என்ற 2 இணையதளங்கள் கண்காணிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன.

லிபியா, எகிப்து, சிரியா உள்ளிட்ட நாடுகளில் சர்வாதிகாரிகளின் அடக்கு முறையால் மக்கள் புரட்சி ஏற்பட்டது. அதை தொடர்ந்து கடுமையான சட்டதிட்டங்கள் கொண்ட சீனாவிலும் புரட்சி ஏற்படலாம் என்ற அச்சம் கம்யூனிஸ்டு ஆட்சியாளர்களிடம் ஏற்பட்டது. அவர்கள் எதிர்பார்த்த படியே அரசுக்கு எதிராக ஆங்காங்கே மக்கள் பிரசாரம் தொடங்கியது.

லிபியா, எகிப்து, சிரியா ஆகிய நாடுகளில் இணைய தளங்களின் மூலம் கருத்துக் களை பரிமாறி அதன் மூலம் மக்கள் ஒன்று திரண்டனர். அதேபோல் சீனாவிலும் தொடங்கியது. அதை அறிந்த அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு புரட்சி அலையை தொடக்கத்திலேயே அடக்கியது. இருந்தாலும் அது முழுமையாக அடங்கவில்லை. நிரூபூத்த நெருப்பாக உள்ளது. இந்த நிலையில் சீனாவில் மீண்டும் இணைய தளங்கள் மூலம் புரட்சி தீயை உண்டாக்க சிலர் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.

இதனால் சீனாவில் புரட்சி பீதி பரவியுள்ளது. இதை தொடர்ந்து இணையதளங் கள் கண்காணிக்கப்பட்டன. அதை தொடர்ந்து புரட்சியை விதைக்க கூடிய 2 லட்சத்து 8 ஆயிரம் செய்திகள் பரப்பப்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் வரை 1065 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், 16 இணைய தளங்கள் மூடப்பட்டன. தற்போது மேலும் சினா.காம், டென்சென்ட் என்ற 2 இணைய தளங்கள் மூடப்பட்டுள்ளன. இதில், புரட்சி சம்பந்தமான செய்திகளை பரப்பியதாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.