Thursday 14 June 2012

முள்ளிவாய்க்காலில் தடயங்களை அழிக்க சீனாவிடமிருந்து திரவத்தை இறக்குமதி செய்த இலங்கை!





முல்லைத்தீவு: இலங்கை இராணுவத்தினரால் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் எலும்புகளை மக்க வைக்க சீனாவிலிருந்து சிறப்பு திரவத்தை இலங்கை அரசு இறக்குமதி செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரின் போது ஆனந்தபுரம், சாலை, புதுமாத்தளன், மாத்தளன், இரட்டை முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம் உள்ளிட்ட பகுதிகளில் புதைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் எச்சங்கள் எதையும் விட்டுவைக்காமல் அழிக்க இலங்கை அரசு முடிவு செய்தது.

இதனால்தான் போர் முடிவடைந்து 3 ஆண்டுகள் ஆன நிலையிலும் அங்கு தமிழர்கள் குடியேற்றப்படவில்லை. இந்நிலையில் அந்தப் பகுதிகளை அங்குலம் அங்குலமாக இராணுவம் தோண்டி வருகின்றது. ஆயுதங்களையும் கண்ணி வெடிகளையும் மீட்பதாகக்கூறி முள்ளிவாய்க்கால் நிலப்பகுதியை சல்லடை போட்டுத் தேடும் இராணுவம் அங்கு இறுதிப் போரில் கொல்லப்பட்டோரின் எச்சங்களை அழிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒருவேளை ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது சர்வதேச விசாரணைக் குழுவோ விசாரணை நடத்தினாலும் எந்த ஒரு எச்சமும் இருக்கக் கூடாது என்பதற்காகவே இலங்கை இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் இதற்காகவே அதிக சக்தி கொண்ட திரவத்தை சீனாவிடமிருந்து இலங்கை இறக்குஅம்தி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment