Tuesday 17 July 2012

இலங்கை பிரச்சனையை 'முடித்துவிட்ட' கருணாநிதிக்கு திடீரென மலேசிய தமிழர்கள் மீது அக்கறை!சென்னை: தமிழ் கலாசாரம் தொடர்பான நூல்களை மலாய் மொழியில் மொழிபெயர்க்க மலேசிய பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் டெசோ அமைப்பை மீண்டும் தொடங்கிய கருணாநிதி, தனி ஈழத்தை வலியுறுத்தி ஆகஸ்ட் 5ம் தேதி விழுப்புரத்தில் மாநாடு நடைபெறும் என முதலில் அறிவித்தார். தற்போது இந்த மாநாடு, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஆகஸ்ட் 12ம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளார்.

இந்நிலையில், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை உத்தரவிட்டது. ஆதரவு இயக்கங்கள் மூலமாக இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஆதரவு திரட்ட புலிகள் முயல்வதாகவும், தமிழீழ கோரிக்கை இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானது எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது. மேலும் கருணாநிதியை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் சந்தித்துப் பேசினார்.

இதையடுத்து தனி ஈழ கோரிக்கை இப்போதைக்கு இல்லை; தனி ஈழத்துக்காகப் போராட்டமோ, கிளர்ச்சிகளோ நடத்தும் எண்ணமும் இல்லை என்று கருணாநிதி அறிவித்துவிட்டார்.

இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், மலேசிய தமிழர்கள் தமிழ் கற்பதற்காக புதிதாக குரல் எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், மலேசியாவில் சுமார் 20 லட்சம் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். 50 முதல் 60 சதவிகித மலேசிய தமிழ் குழந்தைகள் மலாய் வழி பள்ளிக் கூடங்களில் படித்து வருகின்றனர். வெகு சிலரே தமிழ் வழி பள்ளிக் கூடங்களில் படிக்கின்றனர்.

தமிழ்க் கலாசாரம், பண்பாட்டை மலேசிய தமிழ் குழந்தைகள் அறிந்து கொள்வதற்காக தமிழ் இலக்கியங்களை மலாய் மொழியில் மொழிபெயர்க்கும் பணியில் மலேசிய பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வுத் துறை ஈடுபட்டுள்ளது.

இந்தப் பணிக்கு மலேசிய மதிப்பில் 8 லட்சம் ரிங்கிட்டுகள் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பணிக்குத் தேவையான நிதியை இந்திய அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Monday 9 July 2012

செயல்படாத பிரதமர் மன்மோகன் சிங்ஒரநிதியமைச்சராசுமார் 20 ஆண்டுகளுக்கமுன்னரஇந்தியாவினபொருளாதாவளர்ச்சிக்கவித்திட்மன்மோகனசிங், இன்றபிரதமரபதவியிலஇரண்டாவதமுறையாநீடித்தாலுமஅவரதிறமையுடனசெயல்படவில்லஎன்றஅமெரிக்காவினமுன்னணி பத்திரிக்கையாகருதப்படுமடைமபத்திரிககருத்ததெரிவித்துள்ளது.

இந்வாடைமபத்திரிகையினஆசிபதிப்பிலவெளியாகியுள்பிரதாகட்டுரமன்மோகனசிங்கபற்றி எழுதபட்டுள்ளது. அதில், மன்மோகனசிஙஅரசிலநிலவுமபணவீக்கம், ஊழலாலமக்களஅதிருப்தி அடைந்துள்ளனர். தெளிவாபொருளாதாரததிட்டமஎதுவுமஇல்லை; நிதிபபற்றாக்குறஏற்பட்டுள்ளது; ரூபாயினமதிப்பகுறைந்தவருகிறது.

அரசமீதாநம்பகத்தன்மகுறைந்துவிட்டது. உள்நாடமட்டுமின்றி வெளிநாட்டமுதலீட்டாளர்களுமஅதிருப்தியிலஉள்ளனர். இதனால், மன்மோகனசிஙசெல்வாக்கஇழந்தவருகிறார். கடந்த 3 ஆண்டுகளாதனதநம்பிக்கைதததும்புமசாந்தமாமுகத்தமன்மோகனசிஙஇழந்துவிட்டார். அவரதனதஅமைச்சரவசகாக்களகட்டுப்பாட்டிலகொண்டுவமுடியாமலதிணறுகிறார்.

தற்காலிகமாநிதியமைச்சரபொறுப்பையுமஅவரகவனித்தவந்தாலும், தானகொண்டமுயற்சிக்குமசீர்திருத்தங்களமேற்கொள்முடியாநிலையிலஇருக்கிறார். வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புகளபெருக்குவதற்குமஉதவக்கூடிசட்டங்களநாடாளுமன்றத்திலநிறைவேற்றப்படாமலமுட்டுக்கட்டபோடப்படுகின்றன.

கடந்த 20 ஆண்டுகளாதனததொலைநோக்குததிட்டங்களினமூலமஇந்தியாவினநம்பிக்கநட்சத்திரமாகததிகழ்ந்மன்மோகனசிங், 1990-களிலபொருளாதாசீர்திருத்தங்களைககொண்டவந்ததனமூலமநாட்டவேகமாவளர்ச்சிபபாதைக்கஅழைத்துசசென்றார். அவரதபொறுமை, நேர்மையாநடத்தையாலபலரினநன்மதிப்பைபபெற்றுள்ளார். பிரதமராதனதமுதலபதவி காலத்திலநாட்டினவளர்ச்சியை 9.6 சதவீதமாஉயர்த்திககாட்டினார்.

ஆனால், 2ி அலைக்கற்றஒதுக்கீட்டிலமுறைகேடஉள்ளிட்பல்வேறஊழலாலஅவரதஅரசுக்கஇப்போதகெட்பெயரஏற்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்ஒதுக்கீடமுறைகேட்டிலபிரதமரமற்றுமமத்திஅமைச்சர்களமீதசமூஆர்வலரஅண்ணஹசாரபுகாரதெரிவித்துள்ளார்.

பணவீக்கமஅதிகரித்துள்நிலையில், கூட்டணிககட்சிகளதிருப்திப்படுத்துவதற்காமானியங்கள், சமூநலததிட்டங்களிலஅரசஅதிபணத்தைசசெலவிடுகிறது. அதநேரம், வளர்ச்சியஅதிகரிக்குமவகையிலதொழிற்சாலைகளுக்கஉகந்சட்டங்களநிறைவேற்றுவதிலதாமதமஏற்பட்டுள்ளது.

தொழிலதிபர்களதெரிவிக்குமயோசனைகளாமானியங்களகுறைத்தல், டீசலவிலநிர்ணயத்தசம்பந்தப்பட்நிறுவனங்களமேற்கொள்அனுமதித்தல், மல்டி பிராண்டசில்லறவர்த்தகத்திலஈடுபடுமவால்மார்டபோன்வியாபாநிறுவனங்களுக்கஇந்தியாவிலஅனுமதியளிப்பதஉள்ளிட்சீர்திருத்தங்களமேற்கொள்முடியாநிலையிலமன்மோகனசிஙஉள்ளார்.

அவரதஅரசினசெயல்பாடுகளமீதாமக்களினமதிப்பீட்டவரும் 2014-ஆண்டிலநடைபெறவுள்மக்களவைததேர்தலமுடிவுகளபிரதிபலிக்கும். காங்கிரஸதலைவரசோனியகாந்தியிடமதனதஅதிகாரத்தஅதிகாரப்பூர்வமற்முறையிலமன்மோகனசிஙபகிர்ந்துகொள்வேண்டிநிலையிலஇருப்பதால், சீர்திருத்தங்களமேற்கொள்ளமுடியாமலஅவரதகைகளகட்டப்பட்டுள்ளஎன்று "டைம்' பத்திரிகையினகட்டுரையிலதெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday 1 July 2012

ஒலிம்பிக்ஸின்போது அமெரிக்க விமானத்தை வெடிக்கவைக்க அல்காய்தா சதிலண்டன் ஒலிம்பிக்ஸ் போட்டியின்போது அமெரிக்க விமானத்தைக் கடத்தி வெடிக்க வைக்க அல்காய்தாவினர் திட்டமிட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதற்காக விமானநிலைய பாதுகாப்பை முறியடிக்கும் முயற்சியில் நார்வே நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

அபு அப்துர்ரஹ்மான் என்ற முஸ்லிம் பெயரில் நார்வே நாட்டைச் சேர்ந்த ஒருவரை அல்காய்தாவினர் பணியில் அமர்த்தியுள்ளனர். அவருக்கு 30 முதல் 40 வயதுக்குள் இருக்கலாம். மேலும் இதற்கு முன்னதாக குற்றப் பதிவேடுகளில் அவருடைய பெயர் இருக்காது என உளவுத் துறை வட்டாரத் தகவலை மேற்கோள்காட்டி சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.


2008-ம் ஆண்டு அவர் முஸ்லீமாக மதம் மாற்றப்பட்டார், பின்னர். ஏமனுக்குச் சென்று அங்கு பல மாதங்களாக தங்கியிருந்து பயிற்சியை முடித்தார் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்காவை விடமாட்டோம்... தொடர்ந்து துரத்துவோம் என்கிறார் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர்வடக்கில் உள்ள தமிழர்கள் பாகுபாடு காட்டப்படுவதாக குற்றம்சாட்டியுள்ள அமெரிக்கா, அவர்களையும் அரவணைத்து நடக்க வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்கா உள்ளிட்ட உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளின் செய்தியாளர்களுடன் காணொலி மூலம் நேரலையாக நடத்தப்பட்ட கலந்துரையாடலின்போது, ஜனநாயகம், மனிதஉரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் மைக்கல் போஸ்னர் இவ்வாறு கூறியுள்ளார்.

“சிறிலங்காவில் மிகப்பெரிய செயற்திட்டம் ஒன்று முடிக்கப்படாமல் உள்ளது குறித்து அமெரிக்கா முடிந்தளவு கரிசனை காட்டி வருகிறது.

சிறிலங்கா அரசாங்கத்துடன் நாம் அந்த விவகாரங்கள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புவோம்.“ என்று சிறிலங்கா ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு போஸ்னர் பதிலளித்தார்.

இந்த நேரலை காணொலிக் கலந்துரையாடல், அண்மையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்ட பூகோள மனிதஉரிமைகள் நிலை அறிக்கையை மையப்படுத்தியே இடம்பெற்றது.

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனும், தானும் அண்மையில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுடன் நடத்திய பேச்சுத் தொடர்பாக கருத்து வெளியிட்ட மைக்கல் போஸ்னர்,

“கரிசனைக்குரிய பலதரப்பட்ட விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன. அந்த விவகாரங்கள் தொடர்பாக அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும்.

நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பாக நாம் மகிழ்ச்சியடைகிறோம்.

ஆனால், வடக்கில் இன்னமும் தொடரும் பாகுபாட்டை தீர்ப்பதற்கும், தமிழ் மக்களை அரவணைத்துக் கொள்வதற்கும் நல்லிணக்க விவகாரங்களை கையாள்வதற்கான செயற்திட்டம் ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் கொண்டிருக்க வேண்டும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.