Saturday 31 March 2012

உலகில் அதிகூடிய ஜாக்பாட் பரிசுத்தொகை வெல்லப்பட்டுள்ளது



உலகிலேயே அதிகூடிய ஜாக்பாட் தொகை, அதிஷ்ட லாபச்சீட்டில் வெற்றிபெற்றுள்ளது.

 மெகா மில்லியன் Prize சார்பில் நேற்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட இக்குலுக்களில் 2,4,23,38,46 மற்றும் Mega Ball 23 எனும் இலக்கங்கள் வெற்றி இலக்கங்களாக அறிவிக்கப்பட்டன. அமெரிக்காவின் 42 மாநிலங்களுக்கான இந்த ஜாக்பாட் லாட்டரியில், மேரிலாண்டில் இதே இலக்கங்களுடன் ஒரு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்ததை அடுத்து இப்பரிசுத்தொகை வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



வெற்றியாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்களாக இருப்பின் பணப்பரிசு பகிர்ந்தளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஜாக்பாட்டின் மொத்த பரிசு தொகை 640 மில்லியன் அமெரிக்க டாலர்கள். கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தொடர்ந்து நடைபெற்ற 18 லாபச்சீட்டு குழுக்களில் எவரும் வெற்றி பெறாததால் பரிசுத்தொகை இவ்வாறு பல மடங்காக அதிகரித்துள்ளது.

இப்போது ஜாக்பட் வெற்றியாளர், தனது மொத்த பணப்பரிசுத்தொகையை, 26 கட்டங்களில் அதாவது வருடத்திற்கு 24 மில்லியன் என்ற கணக்கில் பெற்றுக்கொள்ளலாம். அல்லது 460 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒரே தடவையில் காசாக பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2007இல் 390 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வெற்றிப்பெற்றதே இதுவரை உலகில் ஜாக்பாட்டில் வெல்லப்பட்ட அதிகூடிய பரிசுத்தொகையாக இருந்தது.
இப்போது ஜாக்பட் வெல்லப்பட்டவர் தன்னை வெளியில் அடையாளப்படுத்திக்கொள்ளாமல் இருப்பதே நல்லது. வெற்றி பெற்ற பணத்தை என்ன செய்யலாம் என நண்பர்களிடம் ஆலோசனை கேட்காதீர்கள். உங்களிடம் உண்மையில் ஒரு திட்டமில்லை எனில் உடனடியாக ஒரு நிதி ஆலோசகரை நியமித்து கொள்ளுங்கள் என அவருக்கு அறிவுரை வழங்குகிறார்கள் நிதி ஆலோசகர்கள்.

இதுவரை ஐரோப்பாவில் வெல்லப்பட்ட அதிகூடிய ஜாக்பாட் தொகை 257.8 மில்லியன் அமெரிக்க டாலர் (ஜூலை, 2011)
சீனாவில் வெல்லப்பட்ட அதிகூடிய ஜாக்பாட் தொகை : 79.8 மில்லியன் (ஜூலை, 2011)

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பதவி விலகவுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.



இலங்கையின் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர்; ஜி.எல்.பீரிஸ் பதவி விலகவுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.



ஜெனிவாவில் மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேறிய பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளை அடுத்து அவர் பதவி விலகவுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தமக்கு நம்பிக்கையான மூத்த அமைச்சர்களுடன் அமைச்சர் பீரிஸ் மனந்திறந்து பேசியதாகவும் அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக கூறியதாகவும் தெரியவருகிறது.

முன்னாள் வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகம மீண்டும் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்படலாமென தெரிவிக்கப்படுகிறது. அதற்காக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த ரோஹித போகொல்லாகம தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவாரென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டன.

இதேவேளை அமைச்சர் ரெஜனோல்ட் கூரே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை கடந்த அமைச்சரவை கூட்டத்தில் கடுமையாக விமர்சித்தாரெனவும், இதனால் அவரது அமைச்சர் பதவி பறிபோகலாமெனவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Friday 30 March 2012

காதலியுடன் சுற்றும் பேஸ்புக் உரிமையாளர்



பில்லியன் கணக்கான ரூபாய்களுக்கு அதிபதியான இவர் மிகச் சாதாரணமாக தனது பெண் தோழியுடன் சீனத் தெருவொன்றில் சுற்றுவது எல்லோருக்கும் ஆச்சரியத்தைத் தருகின்றது.

மிகச் சாதாரணமாக உடை அணிந்து உள்ளூர்க் காதலர்கள் போல நடமாடும் இவர்களை ஒரு புகைப்பட நிரூபர் இவர்களுக்குத் தெரியாமலே புகைப்படம் எடுத்துள்ளார்.

இன்று சமூக ஊடகங்களிலேயே ராஜாவாக இருக்கும் பேஸ்புக்கின் நிறுவனரான Mark Zuckerberg உம் அவரது காதலியான Priscilla Chan உம் ஜோடியாகச் சுற்றும் காட்சிகளே இவை.

காதலியான Priscilla Chan சீனா -அமெரிக்கப் பெற்றோருக்குப் பிறந்தவராவர் . நேற்று மதியம் சீனாவின் Fuxing வீதியில் உள்ள நிதி வர்த்தக மையத்தில் தான் மேற்படி ஜோடிகள் இருவரும் காணப்பட்டார்கள்.

பேஸ்புக்கை தற்போது உலகெங்கிலும் இருந்து 845 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகின்றார்கள்.

ஆனால் உலகில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட சீனாவில் பேஸ்புக் தடை செய்யப்பட்டுள்ளது.

காதலர்களாக உள்ள இருவரும் எட்டு வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் புகழ் பெற்ற பல்கலைக்கழகமான Harvard இல் கல்வி பயின்றவர்கள். அந்த நேரத்தில் இருவரும் சாதாரண மாணவர்கள் தான்.
ஆனால் பேஸ்புக்கின் நிறுவனர் தற்போது இளவயதில் கோடீஸ்வரராக உள்ள பெருமையைப் பெற்றுள்ளார்.

வட கடலில் சிங்கள தேசத்தால் திறக்கப்படும் புதிய போர்க் களம்!



முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தி முடிக்கப்பட்ட தமிழின சங்காரம் தொடர்பாக ஜெனிவா ஐ.நா. மன்றத்தில் அமெரிக்கா முன்மொழிந்த குற்றப் பிரேரணை சிங்கள தேசத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

அமெரிக்காவின் குற்றப் பிரேரணை தொடர்பான அறிவித்தல் வெளியானதைத் தொடர்ந்து, சிங்கள ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட அத்தனை பிரயத்தனங்களும் அமெரிக்காவின் தலைமையிலான மேற்குலகினால் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. ஈழத் தமிழர்களது அவல வாழ்வுக்கு இந்தத் தீர்மானத்தால் பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்து விடாது என்றாலும், ஒரு சிறு நம்பிக்கைக் கீற்று தென்படுவதை யாரும் நிராகரித்து விட முடியாது.

அமெரிக்காவின் குற்றப் பிரேரணையை முறியடிக்க சிங்கள ஆட்சியாளர்கள் அத்தனை பிரயத்தனப்பட்டார்கள் என்பதிலிருந்தே அவர்களது நிகழ்ச்சிநிரலில் எங்கோ தடுப்பரண்; விழுந்துவிட்டது என்பதைப் புரிந்து கொள்ளலாம். தட்டிக் கேட்க முடியாத தமிழினத்தின்மீதான சிங்கள ஆட்சியாளர்களின் வன் கொடுமையைத் தன் போக்கில் தொடர முடியாத அமெரிக்கக் கடிவாளத்தை அறுத்தெறியும் முயற்சியில் சிங்கள தேசம் தீவிரமாக இறங்கியுள்ளதைப் பார்க்க முடிகின்றது.

மிருக வதைச் சட்டம் நடைமுறையில் உள்ள நாகரிக உலகில் சிங்கள தேசத்தின் மனித வதை கேள்விக்குள்ளாக்கப்படவது சிங்களப் பெருந்தேசியவாதத்திற்கு உவப்பானதாக இருக்க முடியாது. தமிழின அழிப்பின் பங்காளனாக இறுதிவரை இணைந்து பயணித்த இந்திய ஆட்சியாளர்கள் இந்தத் தடவை அமெரிக்காவை மீறுவது ஆபத்தானது என்று உணர்ந்தார்களோ, அல்லது தமிழகத்தில் குமுறிய எரிமலைகளின் வெடிப்புக்கு முந்தய எச்சரிக்கையை உணர்ந்தார்களோ, எதுவாயிருந்தாலும் சிங்கள தேசத்தின் தண்டிக்கப்படாத போர்க் குற்றங்களிலிருந்து விடுபட்டுக் கொண்டுள்ளது.

இந்தியாவின் தர்மசங்கடமான நிலையை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மிகப் பணிவாக விளக்கிக் கண்ணீர்க் கடிதம் எழுதிய பின்னர் சிங்களத்தின் கோபம் தமிழகத்தை நோக்கித் திரும்பியுள்ளது. இதனால், சற்றுக் கொந்தளிப்பான நிலையில் உள்ள வட கடலில் ஒரு போர்க் களத்தைத் திறந்து இரு கரை மீனவர்களையும் மோத விடும் முயற்சியில் சிங்கள தேசம் இறங்கியுள்ளது.

தமிழக மீனவர்கள் தடை செய்யப்பட்ட மடி வலைகளைப் பயன்படுத்துவதுடன், எல்லை கடந்து வந்து மீன் வளங்களை அள்ளிச் செல்வது என்ற குற்றச்சாட்டு மோதலுக்குரிய விடயம் அல்ல. அது புரிந்து கொள்ளப்பட வேண்டிய கலந்துரையாடல்களாலும், அவரவர் பிரதேச அதிகாரிகளின் கட்டுப்படுத்தல்களாலும் முடிவுக்கு வரவேண்டியவை. இதனைப் பூதாகரமாக்கிப் புயலைக் கிளப்பிவிட சிங்கள ஆட்சியாளர்கள் வட கடல் தொழிலாளர்களுக்கு கொம்பு சீவிவிட முயல்கின்றது. தமிழக மீன்வர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கும், போராட்டங்களுக்கும் சிங்கள ஆட்சியாளர்கள் ஊக்கம் கொடுத்து வருகின்றார்கள்.

எதிர்வரும் நாட்களில் வட கடலில் இரு நாட்டு மீனவர்களுக்குமிடையே மோதல்கள் உருவாகினாலும் ஆச்சரியப்பட முடியாது. இந்த விடயத்தில் இரு கரைத் தமிழர்களுக்கும் அதிக அளவிலான பொறுமைகள் தேவைப்படுகின்றது. ஏனென்றால், சிங்கள தேசத்தின் கரங்களில் ஏராளமான டக்ளஸ்களும், கருணாக்களும் கைவசம் உள்ளார்கள். எப்போது, எங்கே வேண்டுமானாலும் கடலிலும் போர்க் களத்தைத் திறக்க அவர்களால் முடியும்.

இதுவரை காலமும் சிங்களப் படைகள் நேரடியாகச் செய்த தமிழக மீனவர் மீதான படு கொலைகளையும், தாக்குதல்களையும் மீனவர்களாகத் தயார் படுத்தப்பட்ட ஒட்டுக் குழுக்கள் மூலம் தொடர்வதற்கு சிங்களப் படைகள் முயலும் என்பதை இரு கரை மீனவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். புலிகளின் காலம் மீண்டும் வரும்வரை பொறுமையும் எச்சரிக்கையும் நமக்கு வேண்டும்.

- இசைப்பிரியா

சோனியாவை உறைய வைத்த பாலச்சந்திரனின் ஒளிப்படம் – அதுவே இந்தியாவின் முடிவை மாற்றியதாம்



ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தியே இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கூறியதாகவும், அவர் அவ்வாறு கூறியதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் கொல்லப்பட்டுக் கிடந்த ஒளிப்படமே காரணம் என்றும் ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா‘ தகவல் வெளியிட்டுள்ளது.

வாக்கெடுப்புக்கு சில நாட்கள் முன்னதாக சனல்-4 வெளியிட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் கொல்லப்பட்டது உள்ளிட்ட தமிழர்களின் அவலங்கள் பற்றிய காட்சிகள் சோனியாகாந்திக்கு கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக தோன்றுவதாக தம்மை அடையாளம்காட்ட விரும்பாத காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன.

தமிழ் ஊடகங்களில் வெளியான இந்தப் படங்கள் ஒரு புயலையே தோற்றுவித்தன.

வாக்கெடுப்புக்கு இரண்டு நாட்கள் முன்னதாக, மார்ச் 22ம் நாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனும், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் காங்கிரஸ் உறுப்பினர்களிடம் தனியொரு நாட்டுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க முடியாது என்று கூறியிருந்தனர்.

இதனால் அதிருப்தியடைந்த சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சோனியாகாந்தியை அணுகி அவரிடம் முறையிட்டனர்.

சிறிலங்காவில் தமிழர்கள் கொல்லப்பட்ட படங்களை அவர்கள் சோனியாகாந்தியிடம் காண்பித்து நியாயம் கேட்டனர்.

குறிப்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் மார்பில் சுடப்பட்டுக் கிடக்கும் காட்சி அவரை உறைய வைத்தது.

இதையடுத்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தான் நடவடிக்கை எடுப்பதாக சோனியாகாந்தி உறுதி வழங்கினார்.

உடனடியாகவே, அவர் பிரதமர் மன்மோகன்சிங்கிடம், ராஜபக்ச அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடாது என்று கூறினார்.

ஒரு குழந்தையின் மரணம் இந்திய - சிறிலங்கா உறவையே மாற்றி விட்டது என்று ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா‘ மேலும் கூறியுள்ளது

Thursday 29 March 2012

ஜேஆரை அடக்கிவைந்த இந்திராவும் மகிந்தவிடம் மன்றாடும் இந்தியாவும்:-



ஆகஸ்ட் 22 ஆம் திகதி எழுதப்பட்ட தங்களது கடிதம் கிடைக்கப்பெற்றேன். அக்கடிதத்துடன் இணைக்கப் பட்டிருந்தவைகளைப் பார்த்தபோது நான் அதிர்ச்சியடைந்தேன்.

இந்திய ஜனதாக் கட்சி அரசாங்கம் நடப்பு இலங்கை அரசுக்கு ஆதரவாக இருக்கும் முகமாகத் தடம் மாறிப் போய்க்கொண்டிருக்கிறது. இலங்கைத் தமிழர்களின் துன்பங்களை ஒரு பிரச்சினையாக எடுத்துக் கொள்ள அவர்கள் விரும்புவார்கள் என நான் கருதவில்லை. இன்றைய நிலையில் எங்களது எல்லாக் கவனமும் தேர்தலில்தான் இருக்கிறதேனினும் வேறு ஏதேனும் ஒரு வழியில் இப்பிரச்சினையைப் பொதுமக்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்கான சாத்தியம் இருக்கிறதா எனப் பார்க்கிறேன்..

இப்படிக்கு உங்கள் உண்மையுள்ள,
இந்திரா காந்தி

1978 ஆம் அண்டு ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி ஐக்கியநாடுகள் சபையில் தன்னை தமிழீழத்தின் பிரதிநிதியாக அறிவித்துத் தமிழீழப் பிரகடனம் செய்து உலகை ஒரு கணம் அதிர வைத்த திரு வைகுந்தவாசனுக்கு மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அனுப்பி வைத்த கடிதம் இது.

இந்திரா காந்தியின் மறைவுக்குப்பிற்பாடு இந்திய அரசியல் கொள்கை வகுப்பாளர்கள் படிப்படியாக ஈழத் தமிழர்களுக்கெதிரான நிலைபாட்டிற்குச் சென்றார்கள். இந்த நிலைப்பாட்டின் வளர்ச்சியும் புலிகளின் அரசியல் முதிர்ச்சியற்ற செயற்பாடும் இராஜீவ்காந்திகொலையில் முடிந்த போது இந்தியாவினது ஈழத்திற்கெதிரான வன்மம் உச்சமடைந்தது.

இன்றைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு தமிழகத்தில் எழுந்த கடுமையான அழுத்தங்கள் காரணமாகவும்; அமெரிக்காவின் மறைமுக அழுத்தம் காரணமாகவும் இந்தியா ஆதரவாக வாக்களித்தது.

ஆனாலும் இந்தியா மகிந்த ராஜபக்ஸவிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கோரி உடனே கடிதம் எழுதியமை, இந்திய அரசியலிலும் இந்திய மனித உரிமை வட்டங்களிலும் பலத்த விமர்சனங்களைத் தோற்றுவித்திருக்கிறது. அரசியல் கொள்கை வகுப்புக்களிலும் அயல்நாட்டுறவுகளிலும் இந்தியா கொண்டிருக்கிற உறுதியற்ற தொலைநோக்கற்ற தன்மையையே இது வெளிப்படுத்துகிறது என அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

1956 ஆம் ஆண்டு பண்டா செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து கண்டிப் பாத யாத்திரையை மேற்கொண்ட ஜே.ஆர் ஜெயவர்த்தனா 1978 ஆண்டுத் தேர்தலில் அறுதிப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்று இலங்கையின் சனாதிபதியானார். அந்தப்பலத்தைப் பயன்படுத்திய ஜே.ஆர் அரசியலமைப்பை மாற்றி நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையைத் தோற்றுவித்து ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றுவதை தவிர மற்ற அனைத்தையும் தன்னால் செய்ய முடியும் என மார்தட்டிய வேளை அவரை அடக்கிவைக்க இந்திராகாந்தி வகுத்துக்கொண்ட கொள்கைக்கும் இன்றைய ஆட்சியாளர்களின் ஊசலாட்டக் கொள்கைக்கும் இடையில் எத்தனை வேறுபாடு....?


குறிப்பாக மன்மோகன் சிங்கின் மன்றாட்டம் இலங்கை அரசாங்கத்தின் 'இறுமாப்பை' அதிகரித்துள்ளதோடு குறைந்த பட்சம் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளையாவது அமுல்படுத்துவதற்கு அழுத்தங்களை வழங்க முடியாத கையாலாகாத தனத்துக்கு இந்தியாவைத் தள்ளிவிட்டுள்ளது என இடது சாரி முன்னணியின் தலைவரும் தெஹிவளை, கல்கிசை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்திருக்கிறார்.

இந்தியா ஆட்சியாளர்களின் நலன்களும் நோக்கமும் முழுக்க முழுக்க ஈழத்தமிழர்களுக்கு சாதகமானவையோ அல்லது ஒடுக்கப்படும் மக்கள் கூட்டத்திற்கு நன்மை பயப்பவையோ அல்ல என்ற போதும் தந்திரோபாய ரீதியில் இந்தியா ஈழத்தமிழர்களை நட்புசக்தியாக கருதுவது இருபக்கத்தினருக்கும் பல தளங்களில் நன்மை பயப்பதாக இருக்கும்.

இதனை உணர்ந்ததால்தான் 1979ல் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி எதிர்கட்சியாக இருந்த நிலையிலும் கூட இலங்கை இனப்பிரச்சனையில் சிங்கள அரசாங்கத்திற்கு தலையிடி கொடுக்கும் கொள்கையை கொண்டிருந்தார்.

Wednesday 28 March 2012

ச‌சிகலா‌வி‌ன் ‌திடீ‌ர் பாச அ‌றி‌க்கையா‌ல் அ‌.தி.மு.க‌.வின‌ர் அ‌‌தி‌ர்‌ச்‌சி



''எனவாழ்க்கையஏற்கனவஅக்காவிற்கு (ஜெயல‌லிதா) அர்ப்பணித்தவிட்டேன். இனியும், எனக்கெவாழாமலஅக்காவுக்காஎன்னாலஇயன்அளவிற்குபபணி செய்தஅக்காவுக்கஉதவியாஇருக்கவநானவிரும்புகிறேன்'' எ‌ன்று முத‌ல்வ‌ர் ஜெய‌ல‌லிதா‌வி‌ன் மு‌ன்னா‌ள் தோ‌ழி ச‌சிகலா ‌திடீரென ஒரு பாச அ‌றி‌க்கையை இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு அ.‌‌தி.மு.க.‌வினரை அ‌‌தி‌ர்‌ச்‌சி அடைய வை‌த்து‌ள்ளா‌ர்.

''கடந்மூன்றமாகாலமாபலதரப்பட்பத்திரிகைகளிலஎன்னைபபற்றிபலவிதமாசெய்திகளதொடர்ந்தவந்தகொண்டிருப்பதாலஇந்அறிக்கையவெளியிவேண்டிகட்டாயமஎனக்கஏற்பட்டுள்ளது. 1984-ஆண்டிலமுதனமுதலாஅக்காவை (முதல்வ‌ர் ஜெயலலிதா) நானசந்தித்தேன். அதனபின்னரஎங்களுக்குளநட்பவளர்ந்தது. அவருமஎன்னதனததங்கையாஏற்றுககொண்டார்.

1988-ஆண்டிலிருந்தஅக்காவினபோயஸகார்டனஇல்லத்திலேயஅவருடனவசித்தவந்தேன். அ.ி.ு.க.வினபொதுசசெயலாளராகவும், தமிழ்நாட்டினமுதல்வராகவுமஇரவு-பகலபாராமலகடுமையாஉழைத்தவந்அக்காவினபணிச்சுமையஓரளவிற்காவதகுறைக்குமவகையிலஅவருக்கஉதவியாஇருந்து, என்னாலஇயன்பணிகளைசசெய்வேண்டுமஎன்றுதானவிரும்பினேனதவிர, வேறஎந்தவிதமாஎண்ணங்களுமஎனக்கில்லை.

போயஸகார்டனஇல்லத்திலஅக்காவுடனஇருந்தவரை, வெளியிலஎன்நடக்கிறதஎன்பதகுறித்தஓரளவிற்குத்தானஎனக்குததெரிந்தததவிர, முழவிவரமுமதெரியவில்லை.

24 ஆண்டுகளஅக்காவுடனஒரவீட்டிலவாழ்ந்தவந்நான், கடந்டிசம்பரமாதமஅக்காவபிரிந்து, அவரதவீட்டவிட்டவெளியவந்தவேறஇடத்திலவசிக்வேண்டிசூழ்நிலஉருவாபின்னர்தான், நடந்உண்மைகளமுழுமையாஎனக்குததெரியவந்தன.

கடந்டிசம்பரமாதமஅக்கமேற்கொண்சிஒழுங்கநடவடிக்கைகளுக்குபபிறகுதான், அதற்கஎன்காரணம், அதனபின்னணி என்என்பதெல்லாமஎனக்குததெரிவந்தது. என்னுடைஉறவினர்களமற்றுமநண்பர்களசிலர், நானஅக்காவுடனஒரவீட்டிலவாழ்ந்தவந்ததஅடிப்படையாவைத்து, எனதபெயரதவறாகபபயன்படுத்தி, சிவிரும்பத்தகாசெயல்களிலஈடுபட்டனரஎன்பதையும், அதனாலகட்சிக்கபாதிப்புகளஏற்படுத்தப்பட்டஎன்பதையும், அவர்களினதவறாநடவடிக்கைகளாலகுழப்பங்களஉண்டாக்கப்பட்டஎன்பதையும், கழகத்தினநற்பெயருக்ககளங்கமவிளைவிக்கப்பட்டதஎன்பதையும், அக்காவுக்கஎதிராசிசதிததிட்டங்களுமதீட்டப்பட்டஎன்பதையுமஅறிந்தபோதநானபெரிதுமஅதிர்ச்சியுற்றேன். மிகுந்வேதனஅடைந்தேன்.

இவையெல்லாமஎனக்கதெரியாமலநடந்தவஎன்பதுதானஉண்மை. சந்தித்நாளமுதலஇன்றவரை, அக்கநன்றாஇருக்வேண்டுமஎன்றுதானஒவ்வொரவினாடியுமநானநினைத்திருக்கிறேனதவிர, கனவிலுமநானஅக்காவிற்குததுரோகமநினைத்ததில்லை.

என்னுடைஉறவினர்கள், நண்பர்களஎன்றசொல்லிக்கொண்டஅக்காவிற்கஎதிராநடவடிக்கைகளிலஈடுபட்டவர்களசெய்ததமன்னிக்முடியாதுரோகம். அக்காவிற்கதுரோகமபுரிந்தவர்களயாராஇருந்தாலும், அவர்களஎனக்குமவேண்டாதவர்கள்தான். 

இவ்வாறஅக்காவிற்கஎதிராநடவடிக்கைகளிலஈடுபட்டஅவருக்குததுரோகமபுரிந்தவர்களுடனாதொடர்புகளநானதுண்டித்துவிட்டேன். அக்காவிற்கதுரோகமசெய்தவர்களயாராஇருந்தாலும், இனிமேலஅவர்களுடனஎனக்கஎவ்விஒட்டுமில்லை, உறவுமில்லை.

என்னைபபொறுத்தவரை, அரசியலிலஈடுபவேண்டுமஎன்றோ, கட்சியிலபெரிபொறுப்பவகிக்வேண்டுமஎன்றோ, சட்டமன்ற - நாடாளுமன்உறுப்பினரவேண்டுமஎன்றோ, அமைச்சரபதவியஅடைவேண்டுமஎன்றோ, ஆட்சியிலபங்கேற்வேண்டுமஎன்றஎனக்குததுளியுமஆசையில்லை.

பொதவாழ்விலபங்கபெறவேண்டுமஎன்விருப்பமஎனக்கில்லை. அக்காவிற்கஉண்மையாதங்கையாஇருக்கவநானவிரும்புகிறேன். எனவாழ்க்கையஏற்கனவஅக்காவிற்கஅர்ப்பணித்தவிட்டேன். இனியும், எனக்கெவாழாமலஅக்காவுக்காஎன்னாலஇயன்அளவிற்குபபணி செய்தஅக்காவுக்கஉதவியாஇருக்கவநானவிரும்புகிறேன்'' எ‌ன்று ‌ச‌சிகலா தனது அ‌றி‌க்கை‌யி‌ல் கூ‌றியு‌ள்ளா‌ர்.

ஆனா‌ல் ச‌சிகலா‌வி‌ன் இ‌ந்த ‌திடீ‌ர் அ‌றி‌க்கை‌க்கு பல‌விர கார‌ண‌ங்க‌ள் கூற‌ப்படு‌கிறது. ஏ‌ற்கனவே ‌நிலமோசடி, பணமோசடி உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு வழ‌க்குக‌ளி‌ல் சச‌ிகலா கணவ‌ர் நடராஜ‌ன், த‌ம்‌பி ‌திவாகர‌ன், உற‌வின‌ர் ராவண‌ன், ச‌சிகலா நட‌த்‌தி வரு‌ம் ‌‌மிடா‌ஸ் மதுபான ‌நிறுவன‌த்தை ‌நி‌ர்வ‌கி‌த்து வரு‌ம் மோக‌ன் ஆ‌கியோ‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு ‌சிறை‌யி‌ல் உ‌ள்ளன‌ர்.

போதா‌க்குறை‌க்கு ச‌‌சிகலா‌வி‌ன் அ‌க்கா‌ள் மக‌ன் மகா தேவனை போ‌லீஸா‌‌ர் கட‌ந்த 4 நா‌ட்களாக ‌தீ‌விரமாக தேடி வரு‌கி‌ன்றன‌ர். இ‌ந்த ‌நிலை‌யி‌ல் ‌மிடா‌ஸ் மதுபான‌ம் தொட‌ர்பாக ச‌சிகலா கைது செ‌ய்ய‌ப்படலா‌ம் எ‌ன்று வார‌ப் ப‌த்‌தி‌ரிகைக‌ளி‌ல் செ‌ய்‌தி வெ‌ளியா‌கி உ‌ள்ளது.

கணவ‌ர், உற‌வினரை தொட‌ர்‌ந்து தாமு‌ம் கைது செ‌ய்ய‌ப்படலா‌ம் எ‌ன்று கரு‌திய ச‌சிகலா, ‌திடீரென ஜெயல‌லிதா‌வை புக‌ழ்‌ந்து‌ம், '' உறவினர்கள், நண்பர்களஜெயல‌லிதாவு‌க்கு மன்னிக்முடியாதுரோகம் செ‌ய்து‌வி‌ட்டன‌ர், ஜெயல‌லிதாவு‌க்கு துரோகமபுரிந்தவர்களயாராஇருந்தாலும், அவர்களஎனக்குமவேண்டாதவர்கள்தான்'' எ‌ன்று ஒரு பாச அ‌றி‌க்கையை இ‌ன்று வெ‌ளி‌‌யி‌ட்டு‌ள்ளா‌ர். இ‌ந்த அ‌றி‌க்கையை பா‌ர்‌த்து அ.‌‌தி.மு.க.‌வின‌ர் அ‌தி‌ர்‌ச்‌சி அடை‌ந்து‌ள்ளன‌ர்.

மீ‌ண்டு‌ம் ச‌சிகலா ஜெயல‌லிதா‌விட‌ம் சே‌ர்‌ந்து ‌‌விடுவாரோ எ‌ன்று‌ம் அ.‌தி.மு.க. உட‌ன்‌பிற‌ப்புக‌ள் கவலை அடை‌ந்து‌ள்ளன‌ர். ஆனா‌ல் அ‌ம்மா எடு‌த்த நடவடி‌க்கை‌யி‌ல் இரு‌ந்து எ‌ப்போது‌ம் ‌பி‌ன்வா‌ங்க மா‌ட்டா‌ர், ‌ச‌‌சிகலாவை ‌மீ‌ண்டு‌ம் சே‌ர்‌ப்பது எ‌ன்பது கன‌விலு‌ம் நட‌க்காத ஒ‌‌ன்று உட‌ன் ‌பிற‌ப்பு ‌நினை‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ர்க‌ள்.

24 ஆ‌‌ண்டு கால தோ‌ழியை ‌‌மீ‌ண்‌டு‌ம் ஜெயல‌லிதா சே‌ர்‌ப்பாரா எ‌ன்பது அவரு‌க்கே வெ‌ளி‌ச்ச‌ம்! 

கால்களை உறுதியாக வைத்திருந்தால் கைகள் எங்கும் பற்றலாம்



ஒரு தோல்விக்கு, ஒரு பின்னடைவுக்கு என்ன என்ன காரணங்கள் எல்லாம் அடுக்க முடியுமோ அத்தனை காரணங்களும் சொல்லப்பட்டு முடிந்துவிட்டது. இதற்கு முன்னர் ஆயிரம் ஆண்டுகால உலக வரலாற்றில் சாம்ராஜ்ஜியங்களும், உரிமைப் போராட்டங்களும் தோற்றதற்கான அனைத்து காரணங்களையும் எமது தோல்விக்கும் கொண்டுவந்து காரணங்களாக காட்டியாயிற்று.

தோற்றுவிட்டோமே என்ற ஆதங்கங்கத்துடன் கதைக்கும் காரணங்கள் என்ற நிலைமாறி இப்போதெல்லாம் இந்த தோல்விக்கு வித்தியாசமாக மற்றவர்கள் இதுவரை சொல்லாத ஏதும் காரணத்தை சொல்வதன் மூலம் தமது புத்திசீவித்தனத்தை முகவரிப்படுத்தும் தன்மையாகவே மாறிக்கொண்டிருக்கிறது. இப்படியும் சிந்திப்பார்களா என்று மலைக்கும் அளவுக்கு சிலரது காரணங்கள் அமைந்திருக்கும்.

இதற்கென்றே பிரத்தியேகமாக ‘ரூம்’ போட்டு சிந்தித்திருப்பார்களோ என்னவோ...! அரசியலை(?) வடிவாக செய்திருக்கவில்லை என்றும், ‘மாஸ் வேர்க்’ ஆழமாகச் செய்யவில்லை என்றும், ‘சர்வதேச நகர்வு (சர்வதேசம் என்ன தனியாக ஒரு வரையறையான பாதையிலா நகர்கிறது) பற்றி சரியாக புரிந்துகொள்ளவில்லை என்றும், மணலாற்றுக்குள்ளே வைத்து வெளுத்திருந்தால் முல்லைத்தீவுக்கு வந்திருக்கமாட்டாங்கள் என்றும் இப்படி இப்படி ஆயிரம் காரணங்களுடனும், 2003ல் தலைவர் அழைத்திருந்தபோது போயிருந்தால் நான் காப்பாத்தி இருப்பேன்’ போன்ற ‘One man army ரம்போ’ தனமான காரணங்களும் அவிழ்ந்து பரவிக்கொண்டிருக்கின்றன.

கூந்தலுக்கு நறுமணம் இயற்கையானதா? என்ற செண்பகபாண்டியனின் வினாவுக்கு விடையுடன் வந்திருந்த தருமி போல இப்போது தோல்விக்கு சரியான காரணம் எதுவென்ற இரவல் விடைகளுடன் ஆயிரமாயிரம் தருமிகள். தோல்விக்கான காரணத்தை தேடுவதோ அதற்கான ஆய்வுகளைச் செய்வதோ கூடாது என்பதல்ல.

தோல்விக்கான காரணம் என்ற போர்வையில் முப்பதாண்டு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த அமைப்பின் மீதும் அதன் தலைமை மீதும் விசமங்களை தொடுப்பதுதான் தவறு. அப்படியான ஒருவரை போனவாரம் எதேச்சையாக சந்திக்க நேர்ந்தது. அவரும் அடிக்கடி அல்லது  இடைக்கிடை தொலைக்காட்சி, வானொலி என்று குரலும் முகமும் காட்டுபவர்தான். மிகவும் ‘உச்‘சுக்கொட்டியபடியே இருந்தார், நடைபெற்ற அழிவுகளுக்கும் பின்னடைவுக்கும். கடந்த மூன்று வருடமாக இத்தகைய கதைகள் கேட்டுகேட்டு இவர் எங்கு வரப்போகிறார் என்பது தெரிந்தாலும் காட்டிக்கொள்ளவில்லை. ஒரே ரகமான இப்படியான கதைகள்தான் வித்தியாசம் வித்தியாசமான வாய்களில் இருந்து வித்தியாசமான குரல்களில் கேட்டுக்கொண்டு இருக்கின்றோமே.

முதலில் முள்ளிவாய்க்கால் தோல்வியை கவலைதரும் முகத்துடன் வர்ணித்து ஆரம்பிப்பார்கள். எப்பிடி இருந்த இயக்கம் இப்பிடி ஒண்டுமில்லாமல் போயிட்டுது என்று சோகப்படுவார்கள். இனி ஒண்டும் எழும்ப ஏலாது என்று குடுகுடுப்பைக்காரனின் எதிர்வுகூறல்
போலச் சொல்லுவார்கள். இதெல்லாம் சொல்லும்போது அவர்களின் உடல்மொழி ஒரு இராசதந்திரியின் சாயல் போலவே குறுகி, நீண்டு, தோள்குலுக்கி, புருவம் நெளித்துத் தொடரும்.

பிறகுதான் விசயத்துக்கு வருவார்கள். ‘இவர்கள் இதைச் செய்திருந்தால் பிரச்சினை வந்திருக்காது’ என்று ஏதோ ஒரு காரணத்தை சொல்லுவார்கள். நான் சந்தித்து வரும் ஒரு காரணத்தை சொன்னார். ஆறு வித்தியாசம் காட்டுங்கள் போல அவரும் பீடிகையுடன்தான் சொன்னார். இதுக்கு முன்னர் யாருமே இப்படி ஒரு காரணம் தேடி இருக்கமுடியாது என்ற நம்பிக்கையுடன் அவர் சொன்ன காரணம். ‘விடுதலைப் புலிகள் மற்ற உலக விடுதலை இயக்கங்களுடன் தொடர்புகளைப் பேணி இருந்தால் இந்த நிலை வந்திருக்காது’ என்பதுதான்.

அவர் சொல்லிவிட்டுப் போய்விட்டார். ஆனால் இதனைப் போன்றவர்களுக்கு ஒன்று மட்டும் ஏன் புரிவதில்லை என்ற சிறு ஏக்கம் எனக்குள் ஏற்பட்டது. ஒரு விடுதலை இயக்கத்தை முப்பது ஆண்டுகளுக்கு மேலாக கட்டியமைத்து போராடிக்கொண்டிருந்தவர்கள். இத்தகைய தொடர்புகளை தவறவிட்டிருப்பார்களா என்று ஏன் யோசித்துப் பார்க்கவில்லை.

உண்மையில் ஒரு விடுதலை இயக்கம் தோன்றுவதற்கு பலபல அகபுற காரணங்கள் இருந்தாலும் அவற்றில் மிக முக்கியமானது இன்னொரு விடுதலை இயக்கத்தின் வரலாறு தந்த உணர்வுதான். ஒரு விடுதலை இயக்கத்துக்கு எப்போதுமே மனதளவில் மிகமிக அண்மையானவர்கள் மிக நெருக்கமானவர்கள் அவர்களை போன்றே விடுதலைக்காக உண்மையாக போராடும் உலக அமைப்புகள்தான்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் இதனை நன்கே பார்க்கமுடியும். அயலில் தமிழ்நாட்டில் பெரியார் தலைமையில் நடைபெற்ற சமூக மாற்றத்துக்கான போராட்டங்கள், சமூக சீர்திருத்தங்களுக்கான எழுச்சிகள், அதனைப் போலவே சிங்களத் தேசத்தில் 71ல் நடைபெற்ற சிங்கள இளைஞர்களின் அரசு எதிர்ப்பு ஆயுதக்கிளர்ச்சி, வியட்நாமில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக நடாத்தப்பட்டபோர், பாலஸ்தீனத்தில் கொழுந்துவிட ஆரம்பித்திருந்த பாலஸ்தீன விடுதலைப் போராட்டம் என்று பல காரணங்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆரம்பப் புள்ளிகளாக வரலாற்றை அசைய வைத்தன. இது இயல்பானதே. இயற்கையானதுதான்.

தேசியத் தலைவரை விடுதலைப் போராட்டத்துக்கு உந்தி தள்ளிய பாடமாக அவர் தனது பேட்டிகளிலும் ஒளிக்காட்சிகளிலும் கூறும்விடயம் கவனிக்கதக்கது. இந்திய தேசிய இராணுவத்தை ஆரம்பித்து இந்திய சுதந்திரத்துக்காக வேறு நாட்டில் இருந்து இந்தியாவை நோக்கி படை நடாத்திய சுபாஸ் சந்திரபோஸின் வரலாறும், உரைகளும், இந்தியாவை ஆண்டுகொண்டிருந்த பிரித்தானிய ஆட்சியாளர்கள் மீது இந்தியாவுக்குள் தாக்குதலை நடாத்தி அவர்களை விரட்டலாம் என்றும் இந்தியாவை ஒரு சோசலிச தேசமாக மாற்றலாம் என்றும் ஆயுதம் தரித்துப் போராடிய பகத்சிங்கின் வரலாறும் அவரின் உரைகளும் தன்னை மிகவும் பாதித்தாக தேசிய தலைவர் சொல்லி இருக்கிறார்.

இப்படி உலக விடுதலை இயக்கங்களின் வரலாறுகளில் இருந்து முகிழ்ந்தெழுந்து வந்த ஒரு அமைப்பு, எப்படி அத்தகைய விடுதலை இயக்கங்களுடன் தொடர்புகளைப் பேணாமல் விட்டிருக்க முடியும். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைப் பொறுத்தவரையில் அது தனது ஆரம்ப நாட்களில் இருந்தே இத்தகைய தொடர்புகளை தேடுவதிலும், கிடைத்த தொடர்
புகளை இறுக்கமாக்குவதிலும் மிக நேர்த்தியாக செயற்பட்டுவந்துள்ளது.

தேசியத் தலைவர் பற்றி அறிந்தவர்களுக்கு தெரிந்திருக்கும் அவர் இத்தகைய விடுதலை அமைப்புகளுடன் தொடர்புகளைப் பேணுவதில் காட்டும் ஆர்வமும் அதற்கான தேடலும். விடுதலை அமைப்புகள் எமது விடுதலை இயக்கத்தை நெருங்கி வரவேண்டும் என்பதற்காகவே அவர்கள் எந்தவொரு சந்தேகமும் இன்றி விடுதலைப் புலிகள் அமைப்பை நட்புடன் நோக்க வேண்டும் என்பதற்காகவே ஆரம்பத்திலிருந்து அவர் செயற்பட்டவர். அது பற்றி அடுத்த வாரம் பார்ப்போம். அதற்கிடையில் இதனை வலியுறுத்தும் ஒரு சம்பவத்தை பார்க்கலாம்.

கிட்டு பிரித்தானியாவில் வந்திருந்து சிறிது காலத்திலேயே அவருக்கு எதிரான தகவல்களை இந்தியப் புலனாய்வு அமைப்பும் அதன் தொடர்பாளர்களும் பரப்ப ஆரம்பித்திருந்தனர். இதனால் கிட்டு பிரித்தானியாவைவிட்டு வெளியேறவேண்டிய சூழ்நிலை, வலிந்து அரசு மட்டத்திலும் பலவேறு மட்டங்களிலும் ஏற்படுத்தப்பட்டது. அங்கிருந்து சென்று வேறு நாடுகளில் தங்குவதற்கான விண்ணப்பங்கள் பலவும் அந்த அந்த நாடுகளால் நிராகரிக்கப்பட்டு இருந்தன. அந்த நேரம் மிக கடுமையானது.

ஏற்கனவே கிட்டுவுக்குள் இருந்த தாயகத்துக்கு மீண்டும் போய் விடுதலைப் போராட்டத்தில் நேரடியாக ஈடுபடும் ஆர்வம் இதனால் இன்னும் வீச்சானது. இதனையும் தனது மன
குமுறல்களையும் தலைவருக்கு எழுதி அனுப்பி இருந்தார். எந்த நாட்டிலும் நிரந்தமாகத் தங்கி இயக்கவேலை செய்யமுடியவில்லை என்றும் எழுதி இருந்தார்.

அதற்கு சிறிது காலத்துக்கு பின்னர் பெரியமகேஸ் அண்ணா தலைவரை சந்திக்க போயிருந்தபோது தலைவர் ‘கிட்டு ஏன் நாடுகளுடனே மட்டும் இன்னும் கதைத்து கொண்டு திரிகிறான். அங்கேதான் லத்தீன் அமெரிக்காவிலும், ஆபிரிக்காவிலும் உலகம் முழுதும் ஏராளம் விடுதலை இயக்கங்கள் இயங்குகின்றனவே. அவர்களுக்கு எங்கள் வலி தெரியும்.

அவர்களுடன் கதைத்து அவர்களுடன் போய் இருந்து எமக்கான வேலைகளை செய்யலாம்தானே’ என்று சொல்லி இருக்கிறார். கிட்டு இதனை மிகவும் ஆச்சரியத்துடன் ஒருநாள் குறிப்பிட்டிருந்தார். ‘தலைவர் அங்கை ஆயிரம் வேலைகளுடன் களத்தில் நின்றாலும் அவர் இப்படி ஒரு பார்வையையும் எப்போதும் வைத்திருக்கிறார்’ என்று.

விடுதலைப் புலிகள் முன் காலங்களில் 79ல் வெளியிட்ட துண்டு பிரசுரத்தில் ‘சோசலிச தமிழீழம் நோக்கி’ என்று தலைப்பு அமைத்ததும், 78ல் விடுதலைப் புலிகள் இலட்சினையுடன் அதுவரை செய்யப்பட்ட தாக்குதல்கள் பத்துக்கு உரிமை கோரியதும், 85ல் அமெரிக்காவில் மருத்துவர் பஞ்சாட்சரம் கூட்டிய தமிழீழ மாநாட்டுக்கு வரமுடியாத காரணங்களை விளக்கி தலைவர் எழுதிய கடிதத்தை விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகையான விடுதலைப் புலிகளில் வெளியிட்டதும் உலக விடுதலை இயக்கங்களுடன் கரம்கோர்ப்பதற்கு விடுதலைப்புலிகள் விடுத்த சமிக்ஞைகளே.

நன்றி : ஈழமுரசு

இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் USன் பிரம்மாண்ட கடற்படை தளம்



இந்தியப் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான கோக்கோஸ் தீவில் ஆளில்லா வேவு விமான தளத்துடன் கூடிய பிரம்மாண்ட கடற்படை தளத்தை அமைக்க அந்நாடு அனுமதி அளித்துள்ளது.

கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆஸ்திரேலியா பயணத்தின் போது இருநாடுகளிடையே ராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பதுடன் ஆஸ்திரேலியாவின் டார்வின் தீவில் அமெரிக்க படைகளை நிலைநிறுத்தவும் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடைப்பட்ட இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான காக்கோஸ் தீவில் பிரம்மாண்ட கடற்படை தளத்தை அமெரிக்கா அமைக்க உள்ளது.

ஆளில்லா வேவு விமானங்கள்

கோக்கோஸ் தீவிலிருந்து நவீன வேவுவிமானங்களை அமெரிக்கா பறக்கவிட திட்டமிட்டுள்ளது.

அமெரிக்கா பல வகையான ஆளில்லா வேவு விமானங்களை வடிவத்திலும் திறனிலும் தம் வசம் வைத்துள்ளது. 40 ஆயிரம் அடி உயரத்தில் 20 மணிநேரம் தொடர்ந்து பறந்து வேவு பார்க்கக் கூடிய இஸ்ரேலிய தயாரிப்பான ஈடன் ஆளில்லா வேவு விமானமும் இதில் அடக்கம்.

நானோ ஹம்மிங்பேர்டு என்றழைக்கப்படும் ஆளில்லா விமானம் பார்ப்பதற்கு உண்மையான ஹம்மிங்பேர்ட் பறவையைப் போலவே இருக்கும். 6.5 இஞ்ச் இறக்கை கொண்ட இந்த விமானம் பேட்டரி உதவியுடன் 8 நிமிடங்கள் வானில் பறந்து திரும்பும்.

பிரிடேடர் பி ஆளில்லா வேவு விமானங்களானது 66 அடி நீள இறக்கைகளைக் கொண்டது. இவை 50 ஆயிரம் அடி உயரத்தில் 30 மணிநேரம் தொடர்ந்து இயங்கி வேவு தகவல்களை சேகரிக்கும்.

இவை தவிர ஆப்கானிஸ்தானில் பயன்படுத்தப்படக் கூடிய வழக்கமான ஆயுதங்களுடன் கூடிய ஆளில்லா வேவு விமானங்களும் உண்டு. ஆப்கானிஸ்தானில் 289 தாக்குதல்களை இதுவரை நடத்தி 2224 தலிபான், அல்குவைதா தலைவர்களை படுகொலை செய்ய இவையே பயன்படுத்தப்பட்டன.

இவை அனைத்தையும் கோக்கோஸ் தீவில் களமிறக்கினால் தென்கிழக்காசிய நாடுகள் முழுவதுமே அமெரிக்காவின் கண்காணிப்பில்தான் இருக்கும்.

இடம்பெயரும் டிகாகோ கார்சியோ

இந்தியப் பெருங்கடலில் டிகாகோ கார்சியோ தீவில் அமெரிக்கா கடற்படைத் தளத்தை ஏற்கெனவே அமைத்திருக்கிறது. இத்தீவுக்கான குத்தகை உரிமையை 50 ஆண்டுகாலத்துக்கு இங்கிலாந்திடமிருந்து அமெரிக்கா பெற்றிருந்தது. இந்த ஒப்பந்தம் எதிர்வரும் 2016-ம் ஆண்டு முடிவுக்கு வருகிறது.

இதனால் இந்தியப் பெருங்கடலில் தென்கிழக்காசிய நாடுகள் பலவற்றையும் கண்காணிக்கக் கூடிய வகையில் சீனாவுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் கோக்கோஸ் தீவுக்கு டிகாகோ கார்சியோ தீவு கடற்படை தளத்தை ஒட்டுமொத்தமாக இடம்பெயரவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிர்ச்சியில் சீனா

ஒபாமா பயணத்தின் போது அமெரிக்க படைகள் ஆஸ்திரேலியாவில் குவிக்கப்படும் என்ற நிலைப்பாட்டுக்கு சீனா எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சீனா உரிமைகோரி வரும் எண்ணெய்வளம் மிக்க தென்சீனக் கடலை எளிதில் கண்காணிக்கக் கூடிய கோக்கோஸ் தீவில் கடற்படை தளத்தை அமைக்க முடிவு செய்திருப்பது சீனாவிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

தென்சீனக் கடலில் ஏராளமான தீவுகளுக்கு ஆசியான் நாடுகளான புருனே, பிலிப்பைன்ஸ், மலேசியா,வியட்நாம் போன்றவை உரிமை கொண்டாடி வருகின்றன.

வியட்நம் அரசின் ஒத்துழைப்புடன் தென்சீனக் கடலில் இந்தியா எண்ணெய் அகழாய்வுப் பணியில் ஈடுபட தொடர்ந்து சீனா எச்சரித்து வரும் நிலையில் அமெரிக்காவும் தென்சீனக் கடலை முற்றுகையிட்டு நிற்க உள்ளது.

மேலும் வளைகுடா நாடுகளிலிருந்து சீனாவுக்கு எண்ணெய் எரிபொருள் கொண்டுவரப்படும் மிக முக்கியமான மலாக்கா ஜலசந்தியை கோக்கோஸ் தீவிலிருந்து போர்க் கப்பல்கள் எளிதில் சென்றுவிட முடியும்.

எதிர்காலத்தில் இந்தியா-சீனா அல்லது அமெரிக்கா-சீனா இடையே ஒரு போர் அல்லது பதற்ற நிலை உருவானால் மலாக்கா ஜலசந்தியை போர்க்கப்பல்கள் வழிமறித்தாலே சீனாவுக்கு பெரும் சிக்கல் ஏற்படும் வகையில் பூகோள முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்தியாவின் நிலை

சர்வதேச அரங்கில் இந்தியா இனி அமெரிக்காவின் நட்புநாடாகத்தான் திகழவேண்டிய நிலை உருவாகிவிட்டது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் அமைப்பில் இந்தியாவை சேர்க்க வேண்டும் என்ற விவாதத்தை அமெரிக்கா தொடங்கி வைத்திருக்கிறது.

நேட்டோ அமைப்பில் இந்தியா இணைந்தால் தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியாவில் சீனாவுக்கு கடும் சவாலாக இரண்டு நாட்டு படைகளும் இணைந்து நிற்க வேண்டிய நிலைமை உருவாகும்.

அமெரிக்கா தற்போது முகாமிட உள்ள கோக்கோஸ் தீவு அந்தமான் தீவுகளுக்கு சற்று கீழே உள்ளவைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

கோக்கோஸ் தீவில் முகாமிடுவதன் மூலம் இந்தியா,சீனா ஆகிய இருநாட்டு கடற்படை செயற்பாடுகளை முழுவதுமாக அமெரிக்கா வேவு பார்க்கும்.

ஹோர்முஸ்-மலாக்கா ஜலசந்திகள்

வளைகுடா பிரதேசத்தில் ஈரானுக்குச் சொந்தமான ஹோர்முஸ் ஜலசந்தியைத்தாண்டிதான் அரபிக் கடலுக்கோ பெர்சிய வளைகுடாவுக்கோ செங்கடலுக்கு எண்ணெய் எரிபொருள் கப்பல்கள் செல்ல முடியும்.

இதேபோல் தென்கிழக்காசிய நாடுகளும் மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையேயான மலாக்கா ஜலசந்தியைத்தாண்டித்தான் எண்ணெய் எரிபொருள் கப்பல்களை நகர்த்த முடியும்.

ஹோர்முஸ் ஜலசந்தியை மூடப்போவதாக ஈரான் மிரட்டி வருவதால் அங்கு போர்மேகம் சூழ்ந்து அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் நிற்கின்றன. இங்கிலாந்தும் ஹோர்முஸ் ஜலசந்திக்கு போர்க்கப்பல்களை அனுப்பப் போவதாக அறிவித்துள்ளன.

மலாக்கா ஜலசந்தி ஒட்டிய தென்சீனக் கடலில் சுற்றியிருக்கும் வியட்நாம் போன்ற சிறுசிறு நாடுகள் சீனாவை எதிர்த்து நிற்கின்றன. இப்பொழுது தம் பங்குக்கு அமெரிக்காவும் களமிறங்கி நிற்கிறது.

3-ம் உலகப் போர் என்பது மூளுமேயானால் ஹோர்முஸ் ஜலசந்தியிலோ அல்லது மலாக்கா ஜலசந்தியை அண்மித்த தென்சீனக்கடலிலோதான் என்பது சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் தொடர்ந்து தெரிவித்து வரும் கருத்து.

நன்றி ஒன்லைன் இந்தியா

அமெரிக்காவின் பிரமாண்டமான போர் விமானங்களின் உற்புறம் எப்படி இருக்கும்…?





அமெரிக்க வல்லரசின் போர் விமானங்கள் பிரமாண்டமானவை. பார்ப்பதற்கே எதிரியை கதிகலங்க வைக்கக்கூடியவை. ஒரே தடவையில் பல்லாயிரக்கணக்கான படைவீரர்களையும் (அண்ணளவாக 15000), யுத்த தளபாடங்களையும் காவி செல்லக்கூடியவை.

அத்தகைய போர் தேவைகளுக்கு பயன்படும் விமானங்களின் உட் புறம் எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்…!

பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளின் போது பொதுமக்கள் இழப்புக்களை ஏற்க முடியாது என்றார் பிளக் -



தமிழீழ விடுதலைப் புலி பயங்கரவாத இல்லாதொழிப்பு நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ளக்கூடியது என்ற போதிலும், பொதுமக்கள் இழப்புக்களை அனுமதிக்க முடியாது என தற்போதைய அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஒ பிளக் தெரிவித்திருந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
 
பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனினும், அதற்காக பொதுமக்கள் கொல்லப்படவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என பிளக், தற்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கைக்கான அமெரிக்க தூதரக அதிகாரிகளினால், அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை அமைதியான
முறையில் சரணடையச் செய்வதற்கு அமெரிக்கா முயற்சி மேற்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
விசேட பிரதிநிதி ஒருவரின் ஊடாக சரணடைதல் தொடர்பில் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என பிளக் குறிப்பிட்டுள்ளார்.
 
எனினும், விசேட பிரதிநியை புலிகள் பணயக் கைதியாக சிறைபிடிக்க மாட்டார்கள் என்பதனை எவ்வாறு உறுதி செய்ய முடியும் என பெசில் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.
 
பொதுமக்கள் உயிரிழப்புக்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டமென பிளக் வலியுறுத்தியுள்ளார்.
 
விசேட பிரதிநிதி ஒருவரை யுத்த வலயத்திற்குள் அனுப்பி பிரபாகரனுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அமெரிக்காவின் கோரிக்கை என அவர் தெரிவித்துள்ளார்.
 
2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் திகதி இந்தக் குறிப்பு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
48 மணித்தியாலங்களுக்கு படையினரின் நடவடிக்கைகளை தற்பாதுகாப்பு நோக்கங்களுக்கு மட்டும் வரையறுக்க முடியும் என இலங்கை அரசாங்கம் உறுதிமொழியளித்திருந்ததாக பிளக் தெரிவித்துள்ளார்.

Tuesday 27 March 2012

ஐக்கிய நாடுகள் சபை ஏன் இலங்கையை போர்க் குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறச் சொல்கிறது?ஜே.எஸ்.திசைநாயகம்



 வரலாற்றில் நிகழ்ந்த சில சம்பவங்களை அவதானிக்கும் போது இலங்கை விடையத்தில் ஐக்கியநாடுகள் சபையின் நடுநிலைத்தன்மை கேள்விக்குட்படுத்தப்படவேண்டியதாக  இருப்பதை விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்


கடந்த வியாழக்கிழமை ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை தொடர்பான பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறது.  இந்தப் பிரேரணை இலங்கையினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களுக்கு இலங்கையைப் பொறுப்பு கூற நிர்ப்பந்திக்கும் சர்வதேசத்தின் நம்பிக்கை தரக்கூடிய முதன் முயற்சியாக மனித உரிமை ஆர்வலர்கள் கொண்டாடுகிறார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சில் 2009 லேயே முழுமையான அங்கத்துவ நாடாக வந்த அமெரிக்காவினால் இந்தப் பிரேரணை முன்மொழியப்பட்டிருப்பது கவனத்திற்குரியது.  இலங்கையின் சிங்கள மற்றும் தமிழ்ச் சமூகங்களுக்கிடையில் நடந்துவந்த 27 வருடச் சிவில் யுத்தம் 2009 இல் இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளைத் தோற்கடித்ததுடன் முடிவுக்கு வந்தது.

யுத்தம் முடிவடைந்த பிற்பாடு யுத்தம் நடந்த இறுதி மாதங்களில் அரசும் விடுதலைப்புலிகளும் யுத்த விதி மீறல்களிலும் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டமை வெளிச்சத்திற்கு வந்தது.

ஜெனிவாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானமானது அரசினால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களுக்கும் இன நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவின் (LLRC) பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு கோருகிறது.

இந்த ஆணைக்குழு போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதே ழுத்தங்களைத் தணிக்கும் நோக்கிலேயே இலங்கை அரசினால் நியமிக்கப்பட்டது.

LLRC  2011 டிசம்பரில் தனது பரிந்துரைகளைப் பகிரங்கப்படுத்தியது.  ஆனால் பொதுமக்கள் இராணுவத்தால் கொல்லப்பட்டதை ஏற்றுக் கொண்ட போதும் இந்தக் கொலைகள் பரந்துபட்டு நிகழவில்லை எனவும் இவை திட்டமிடப்பட்டுத் தீர்மானிக்கப்பட்டு செய்யப்பட்டவை அல்ல எனவும் கூறி இராணுவத்தைக் குற்றக் கூண்டில் ஏற்றுவதைத் தவிர்த்து விட்டது. ஆனால் விடுதலைப்புலிகள் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக  LLRC தெளிவாகக் குற்றம் சாட்டியது.

இந்த ஆணைக்குழுவின் அறிக்கை இலங்கை அரசாங்கத்தை உள்ளுரிலேயே ஒரு விசாரணைக் குழுவை நியமித்துத் தவறு புரிந்தவர்களைத் தண்டிக்குமாறு கூறியது.

LLRC இன் இந்தப் பரிந்துரைகளுக்கு சர்வதேச சமூகமும் தமிழ்க் குழுக்களும் மனித உரிமைக் குழுக்களும் வலுவான எதிர்ப்பைத் தெரிவித்தனர்.  வர்கள் இந்த விசாரணைகளைச் சர்வதேசப் பொறிமுறை ஒன்றுக்கூடாகவே நடாத்த வேண்டும் என்றும் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைகள் பாரபட்சமற்றவையாகவோ அரசின் தலையீடு அற்றவையாகவோ இருக்காதென்றும் குறிப்பிட்டனர்.

இவ்வாறு சர்வதேசமும் மனித உரிமைவாதிகளும் கோரிக்கொண்டு இருக்கும் போதே இலங்கை அரசாங்கம் தான் நியமித்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்குக் கூடத் தயக்கத்தைக்காட்டியது. இதன் விளைவாக ஜெனிவாவில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் பிரேரணை ஒன்றை முக்கியத்துவப்படுத்தாமல் LLRC இன் பரிந்துரைகளை நிறைவேற்க் கோருவதென்ற சமரசம் ட்டப்பட்டுக் குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

LLRC இனால் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானம் தொடர்பாக மனித உரிமைக்குழுக்கள் ஓரளவுக்குத் திருப்தி அடைந்துள்ளன எனலாம்.  ஏனெனில் தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சரத்து ஒன்றில் LLRC இன் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை செய்யும் நடைமுறைகளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக்கவுன்சில் (UNHRC) கண்காணிக்கும் எனவும் இதனை இலங்கையுடன் இணக்கப்பாட்டுடனேயே அது செய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.
 
அதேவேளை மனித உரிமைவாதிகள் இலங்கையில் இருக்கும் ஜக்கிய நாடுகள் சபையின் நிறுவனக் கட்டமைப்பில் இருக்கும் குறைபாடுகள் அல்லது பற்றாக்குறைகள் காரணமாக இலங்கையானது இந்த விடையத்தில் தனது கடமைகளைச் சரியாகச் செய்கிறதா எனக் கண்காணிப்பது முழுவதும் சாத்தியமாக இருக்காது என்றும் அஞ்சுகிறார்கள்.

UNHRC  ஆனது இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தினூடாகவே  இலங்கை LLRC இன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துகிறதா எனக் கண்காணிக்கவேண்டும். ஆனால் இலங்கையில் இருக்கும்  ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் இலங்கையில் நடக்கும் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களுக்கு நன்கொடை வழங்கும் அலுவலகமாகவும் அவற்றைப் பராமரிக்கும் அலுவலகமாகவும் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் மனித உரிமைக் கண்காணிப்பகம் ஒன்றையும் அதனுள் திறப்பதன் மூலம் வினைத்திறனுடன் அதனால் பணியாற்றமுடியுமா என மனித உரிமைவாதிகள் அச்சமடைகிறார்கள்.

இலங்கையில் தொழிற்படுகிற ஐக்கிய நாடுகள் சபையின் நிர்வாகம் தான் இலங்கையில் கொண்டுள்ள செயற்பாட்டு முறைமையை, புதிதாக பெற்றுக்கொண்ட பணியை(மனித உரிமைக்கண்காணிப்பு) நிறைவேற்றுவதற்குரிய முறையில் மாற்றுவதற்குத் தேவைப்படுகின்ற வளங்களைக் கொண்டிருக்கிறதா? அதற்கும் மேலாகத் தனது புதிய பணியையும் செவ்வனே செய்யக்கூடிய வகையில் தன்னைத் தனது நிர்வாக ஒழுங்குகளை மாற்றி அமைக்கக் கூடிய விருப்பத்தையும் கொண்டிருக்கிறதா? என்கிற கேள்விகள் எழுகின்றன.

கடந்த கால அனுபவங்களைப் பார்க்கும் போது ஐக்கிய நாடுகள் சபை இத்தகைய விருப்பத்தைப் புலப்படுத்தி இருக்கவில்லை என்பது புலனாகும்.   உதாரணமாக இலங்கை அரசாங்கமானது 2009 இல் தனது இறுதித் தாக்குதலுக்குத் தயாரானபோது விடுதலைப்புலிகளின் சிறிய கட்டுப்பாட்டுப் பிரதேசத்துள் ஏறத்தாள 300000 அதிகமான மக்கள் அடைபட்டுப்போயிருந்தனர்.  இலங்கை அரசானது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்த சகல அரச சார்பற்ற அமைப்புக்களையும் வெளியேறுமாறு அப்பொழுது கட்டளையிட்டது.  அப்பொழுது பொதுமக்கள் தங்களை அனாதரவாகக் கைவிட்டுச் செல்லவேண்டாம் என ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலர்களை மன்றாடிய போதும் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலர்கள்  அந்தப் பகுதியில் தொடர்ந்தும் இருப்பதற்காக இலங்கை அரசுடன் எந்தச் சமரசப் பேச்சுவார்த்தைகளையும் நடாத்த முனையாமல் மக்களை கைவிட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளராக இருந்த கோட்டொன் வைஸ் இந்த நிகழ்வைப் பின்னர் தவறான முடிவென்று கூறியிருந்தார்.
நெருகடியான நிலமைகளில் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் ஏந்தச் சமசர முயற்சியிலும் ஈடுபடாமல் கைவிட்டுச் செல்வது என்பது ஐக்கிய நாடுகள் சபையின் நடைமுறை விதிகளுக்கு முரணானது என்ற போதும் சூடானின் டாவூரிலும் கூட சூடான் அரசின் உத்தரவை அடுத்து எந்த விதமான சமரசப்பேச்சுக்களிலும் ஈடுபடாமல் அங்கிருந்து ஐ. நா வெளியேறியிருந்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் இன்னொரு தவறான அணுகுமுறையும் இங்கு குறிப்பிடவேண்டும் இலங்கையில் நிகழ்ந்த இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை அறிவிக்க ஐக்கிய நாடுகள் சபை றுத்துவிட்டது.  ஐக்கிய நாடுகள் சபை தாங்கள் உடல்களை எண்ணுவதில்லைஎனவும் வாதிட்டது.

ஆனால் மனிதாமிமான விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் இணைப்பாளரிடம் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை பற்றிய விபரங்கள் இருந்ததை ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் இருந்து இரகசியமாகப் பெறப்பட்ட ஆவணம் ஒன்றினூடாக உறுதிப்படுத்திக்கொள்ள முடிந்ததாக 2009 மார்ச் 18 ல் இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்தது.  எனவே இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் தொடர்பான எண்ணிக்கை ஐக்கிய நாடுகள் சபையிடம் இருந்த போதும் அதனை அது திட்டமிட்டு மறைத்திருந்தது.
டாவூர் தொடக்கம் காசா வரையும் நிகழ்ந்த பல்வேறு போர்களில் ஐக்கிய நாடுகள் சபை கொல்லப்பட்டவர்கள் தொடர்பாஎண்ணிக்கைகளைத் தெரிவித்திருந்த போதும் இலங்கை விடையத்தில் அது இலங்கையைக் காப்பாற்றும் விதமாக கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை திட்டமிட்டு மறைத்திருந்தது என்பதை இன்னர் சிற்றி பிரஸ் வெளிப்படுத்தி இருந்தது.

இத்தகைய சம்பவங்கள் காரணமாக விமர்சகர்கள் இலங்கை விடையத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் நடுநிலைத் தன்மையைக் கேள்விக்குட்படுத்துகிறார்கள்.

இப்படியான சூழ்நிலையில் ஜெனிவாவில் கிடைத்த லாபங்களை எப்படிப் பேணிக்கொள்வது என்பது இங்கு கேள்வியாகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின்  மனித உரிமைகளுக்கான தூதுவரும் ஐக்கிய நாடுகள் சபையின்  அரசியல் விவகாரங்களுக்கான திணைக்களமும் இதுவரை காலமும் இலங்கையில் மேற்கொண்டு வரும் பணிகளைப்போலல்லாது  மிகவும் தீர்மானகரமான பணிகளை மேற்கொள்ள வேண்டியது முக்கியமானதொரு தேவையாகிறது.

ஐக்கிய நாடுகள் சபை தனது சரத்துக்ளில் கூறப்பட்டுள்ளபடிக்கு உண்மையிலும் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் அமைதிக்கு விடுவிக்கபடும் அச்சுறுத்தல்களை நீக்குவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும்  கூட்டு முயற்சிகளையும் எடுக்க விரும்பினால் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் இலங்கையில் அது முன்னெடுக்கவுள்ள செயற்பாடுகளை மிக நெருக்கமாகக் அவதானிக்க வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையில் இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அதிகாரமளிக்கப்பட்ட நோக்கங்களை உள்ளடக்கி இருக்கும் இலங்கைக்கான செயற்திட்டத்தைப் பலமாக்கி நிறைவேற்றுவதற்கு முன்னிற்கவேண்டும்.  இதன் மூலமே ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை நடைமுறைச் சாத்தியமானதாக மாறும்.

இலங்கையில் இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பை இந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்குரியதாக மாற்றாத விடத்து அது தொடர்பான அக்கறைகளை எடுக்காவிடத்து இலங்கையானது தனது கடமைகளில் இருந்து வழுவிச் செல்வதையே காணமுடியும்.

ஜே.எஸ்.திசைநாயகம்