Monday 25 May 2015

மாணவி வித்தியா படுகொலை! வரலாற்றுத் துயரமா? - திருப்பமா?

புங்குடுதீவில் மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்மக்கள் மத்தியில் மட்டுமன்றி முஸ்லிம் மக்களிடையேயும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது முக்கியமானதொரு மக்கள் எழுச்சிக்கு காரணமாக அமைந்திருக்கிறது.



போருக்குப் பின்னர், வடக்கு, கிழக்கின் நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவுகள், தமிழ்ச் சமூகத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாகவும், கவலையாகவும் மாறியிருந்தன. இத்தகைய சூழலில் தான் இந்தச் சம்பவம் புதியதொரு திருப்பமாக மாறியிருக்கிறது.

கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் திகதி இரவு, தனது நண்பனுடன் திரைப்படம் பார்த்து விட்டுத் திரும்பிய ஜோதி சிங் பாண்டே என்ற, கல்லூரி மாணவி புதுடில்லியில் ஓடும் பேருந்துக்குள் வைத்து ஆறு பேர் கொண்ட கும்பலால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பின்னர், வீதியில் தூக்கி வீசப்பட்டார்.

பல நாட்கள் உயிருக்காகப் போராடிய � நிர்பயா என்று அறிவிக்கப்பட்ட அந்த மாணவி, சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்தார். அந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.

இந்தியாவில் அதற்கு முன்னர் வல்லுறவுச் சம்பவங்களோ, கூட்டு வல்லுறவுச் சம்பவங்களோ நிகழ்ந்திருக்கவில்லை என்று கூற முடியாது. ஏராளமான சம்பவங்கள் நிகழ்ந்திருந்தாலும், ஜோதி சிங் பாண்டேக்கு நிகழ்ந்த கொடூரம் இந்தியாவையே உலுக்கியது, கொந்தளிக்க வைத்தது.

அவருக்கு நீதி கோரும் போராட்டங்கள், காஷ்மீர் தொடக்கம் கன்னியாகுமரி வரை நடந்தன. வெளிநாடுகளில் இருந்து கூட ஆதரவுக் குரல்கள் எழுந்தன. இதன் விளைவு, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான சட்டங்கள் இறுக்கமாக்கப்பட்டன.

ஜோதி சிங் பாண்டேக்கு நிகழ்ந்த கொடூரம் தான், இந்தியாவில் பாலியல் வன்புணர்வுக் குற்றவாளிகளுக்கு எதிரான சட்டங்களுக்கு கூடுதல் தண்டனையை உறுதி செய்யக் காரணமாகியது. அது இந்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனைக்கு வித்திட்டது.

அதுபோலத் தான், புங்குடுதீவு மாணவி பலரால் கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட கோரம், இலங்கையில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வையும், திருப்பத்தையும் ஏற்படுத்தக் காரணமாகியுள்ளது. அதற்கும் அப்பால் தமிழ்மக்களுக்கு சில படிப்பினைகளையும் சொல்லிக் கொடுத்திருக்கிறது.

போர் முடிவுக்கு வந்த பின்னர், வழிமாறி, திசைமாறி சென்று கொண்டிருந்த இளைஞர் சமூகத்தை சரியான வழிக்குத் திசை திருப்புவதற்கான ஒரு திருப்புமுனையாக இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. அதற்காக, ஒரு மாணவி சிதைக்கப்பட்ட கொடூரத்தை, தமிழ்ச்சமூகம் விலையாக கொடுக்க நேரிட்டுள்ளது.

துரதிர்ஷ்டம். போர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கிலும் கிழக்கிலும் இளைஞர் சமூகத்தில் மது, உள்ளிட்ட தவறான பழக்கவழக்கங்கள் மோசமாகப் பரவியுள்ளன. இது ஆபத்தான திசையில் சென்று கொண்டிருப்பதாக அண்மைக்காலங்களாக பலராலும் சுட்டிக்காட்டப்பட்டு வந்தது.

பாடசாலை மாணவர்களைச் சீரழிக்கும் வகையில், போதைப்பொருட்கள் பரவி வருவதாக தமிழ் அரசியல் தலைவர்கள், சமூகத் தலைவர்களால் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும், அதனைக் கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகள் சரியான முறையில் முன்னெடுக்கப்படவில்லை என்பதே உண்மை.
இளைய சமுதாயத்தை திட்டமிட்டுச் சீரழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதான சந்தேகம், தமிழ்ச்சமூகத்துக்கு இருந்து வந்த சூழலிலேயே, வித்தியா என்ற மாணவி அதற்குப் பலியாக நேரிட்டுள்ளது. வித்தியாவுக்கு நிகழ்ந்த கொடூரம், அவரது சுற்றத்தாராலேயே நிகழ்த்தப்பட்டது,

ஆனால் அனைவருமே, போதையில் இதனைச் செய்திருக்கின்றனர் என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. ஒருவகையில் இந்தக் குற்றம் திட்டமிட்ட ஒன்றாக இருந்தாலும், இதனைப் போதைக்கு அடிமையான ஒரு கும்பலின் வெறிச்செயலாகவும் பார்க்க வேண்டியது அவசியம்.

போதையில்லாத ஒரு சூழலில், இவ்வளவு பேர் இந்தக் குற்றத்துக்குத் துணைபோயிருப்பார்களா என்ற சந்தேகம் இருக்கவே செய்கிறது. இந்தச் சம்பவத்துக்கு ஆணாதிக்க வன்முறை மட்டும் காரணமில்லை. அவர்களிடம் இருந்த போதைப்பொருள் பழக்கமும் முக்கிய காரணம்.

போர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கு கிழக்கிலுள்ள இளைஞர்களை திசை திருப்பி விடுவதற்காக, அவர்கள் திட்டமிட்டே போதைப்பொருளுக்கு அடிமையாக்கப்பட்டுள்ளனர். திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு இன அழிப்பு முறையாக இது கையாளப்பட்டு வருகிறது.

இதன் உண்மையையும், தார்ப்பரியத்தையும் புரிந்து கொண்டிருந்தாலும், பெற்றோர்கள் தமது பிள்ளைகளை கட்டுப்படுத்தாமலோ அல்லது கட்டுப்படுத்த முடியாமலோ உள்ளனர் என்பதே யதார்த்தம். வெளிநாடுகளில் இருந்து வந்து குவியும் பணம் அல்லது, திட்டமிட்டே சமூகத்துக்குள் ஊடுருவச் செய்யப்பட்டுள்ள புல்லுருவிகளால், பாய்ச்சப்படும் நிதி, இளைய சமூகத்தை, தவறான வழிக்கு இட்டுச் செல்லும் காரணமாகியுள்ளன.
பெரும்பாலான பெற்றோர் பிள்ளைகள் மீதான கட்டுப்பாட்டை பேண முடியாத நிலையில் இருப்பது துரதிர்ஷ்டம். போர் முடிந்து ஆறு ஆண்டுகளாகி விட்ட நிலையில் தான் பலரும் இப்போது விடுதலைப் புலிகளின் காலத்தில் இப்படியெல் லாம் நிகழ்ந்ததில்லையே என்று ஏங்குகின்ற போக்கு அதிகரித்திருக்கிறது.

பாராளுமன்றத்தில் கூட, தமிழ் உறுப்பினர்களால் இதுபற்றி வெளிப்படையாக பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. புலிகள் இருந்த காலகட்டத்தில், கடுமையான தண்டனைகள் நடை முறையில் இருந்ததால், வடக்கில் குற்றங்களின் எண்ணிக்கை குறைவடைந்து போயிருந்தது.

ஆனால், இப்போது குற்றம் செய்தவர்கள் இலகுவாகத் தப்பிக்கும் பொறிமுறைகள் இருப்பதாலும், குற்றங்களை ஊக்குவிக்கும் வகையில் செயற்படுவோர் அதிகரித்திருப்பதாலும் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

புங்குடுதீவு மாணவிக்கு நேர்ந்த கொடுமைக்கு சட்டம், ஒழுங்கு சீரழிவு மற்றொரு காரணம். மாணவி காணாமற்போனவுடன், காவல் நிலையத்துக்கு முறையிடச் சென்றிருந்த பெற்றோரை, உளவியல் ரீதியாக நோகடித்து, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திருப்பி அனுப்பியிருந்தனர் பொலிஸார்.

சடலமாக மாணவி மீட்கப்பட்டு மூன்று மணிநேரம் கழித்தே பொலிஸார் அவ்விடம் வந்து சேர்ந்திருந்தனர். இதுபோன்ற சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறிமுறைகளில் உள்ள பெரும் ஓட்டைகள், குற்றங்களுக்கு ஏதுவாக மட்டுமன்றி, குற்றவாளிகளுக்கு சாதகமாகவும் அமைந்து விடுகிறது.

புங்குடுதீவு சம்பவத்துக்கு பொலிஸாரின் அசமந்தப் போக்கு முக்கிய காரணம். பொலிஸாரின் பொறுப்பற்ற தனத்துக்கு தமிழ்ச் சமூகம் பெரிய விலைகளைக் கொடுக்க நேரிட்டுள்ளது. இதன் விளைவாக, மாணவி வித்தியா படுகொலைக்கு நீதி கோரி தமிழ்மக்கள் வீதிக்கு வர நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
மாணவர்களும், பொது அமைப்புகளும் வீதியில் இறங்கி அமைதியாக எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டங்களை நடத்தினர்.யாழ்ப்பாணத்தில் தொடங்கிய போராட்டங் கள், பின்னர் வடக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் பரவலாக நடந்தேறியதுடன், மலையகம் உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளிலும், போராட்டங்கள் நடந்தன. இந்தப் போராட்டங்களில் முஸ்லிம் சமூகமும் ஒன்றிணைந்து கொண்டது மற்றொரு திருப்பம்.
சவூதியில் அநியாயப் பலியெடுக்கப்பட்ட ரிஸானாவுக்கு ஆதரவாக தமிழ்ச் சமூகம் குரல் கொடுத்தது போன்று, புங்குடுதீவு வித்தியாவுக்கு நீதி கேட்டு முஸ்லிம்கள் பரவலாக நடத்திய போராட்டங்கள், நீடித்து நிற்கும் சகோதர இனப்பிணைப்புக்கு சாட்சியாகும்.

வடக்கு கிழக்கில் பெரும் கொந்தளிப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்திய வித்தியா படுகொலை, தமிழ்ச் சமூகத்தின் தன்னெழுச்சியை அடக்குவதில், காட்டப்படும் தீவிர அக்கறையையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறது. இந்தச் சம்பவத்தைச் சாட்டாக வைத்துக் கொண்டு யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட வன்முறைகளே இதற்கு சாட்சி.

நீதிகோரும் போராட்டங்கள் அமைதியாக நடந்து கொண்டிருந்த போது, அவற்றைக் குழப்பும் வகையில், யாழ்.நீதிமன்றம் முன்பாக வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன. இந்தச் சம்பவம் திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்டதாகவே பெரும் சந்தேகம் தோன்றியிருக்கிறது. இந்த வன்முறைகளை அடுத்து, பாதுகாப்புக்காக இராணுவத்தை அழைக்கும் சதித்திட்டம் ஒன்று இருந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

அண்மைய அரசியல் மாற்றங்களுக்குப் பின்னர், வடக்கின் சிவில் நிர்வாக செயற்பாடுகளில் இருந்து, இராணுவம் கணிசமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு சூழலில், அவர்களை மீண்டும் பாதுகாப்புக்காக அழைக்கும் முயற்சிகளும் இடம்பெற்றிருந்தன.

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தை மீண்டும் இறக்குவதற்காக வன்முறைகள் தூண்டிவிடப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. இதன் பின்னணியில் இருந்தவர்கள் பற்றிய கேள்விகள் மக்களிடையே எழுந்திருக்கின்றன.
ஒரு பக்கத்தில் வித்தியாவுக்கு நீதி வேண்டிய போராட்டங்கள் அமைதி வழியில் நடந்து கொண்டிருக்க, அத்தகைய போராட்டங்களை சிதைக்கும் நோக்கிலேயே, அது வன்முறையாக மாற்றப்பட்டிருக்கிறது.

இந்த வன்முறைக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் முற்றிலும் தொடர்பில்லை என்று கூற முடியாது. ஒரு பகுதி தமிழ் மக்கள் இதற்குத் தெரிந்தோ தெரியாமலோ துணைபோயிருக்கின்றனர். எங்கிருந்தோ இயக்கப்பட்ட ஒரு செயலுக்கு தமிழ்ச் சமூகமும் கருவியாக்கப்பட்டது.

அதன் விளைவாக, கடுமையான சட்டங்களின் ஊடாக அந்த வன்முறை அடக்கப்படும் நிலை ஏற்பட்டது. அதுமட்டுமன்றி, இந்த வன்முறைகளை, தெற்கிலுள்ள சிங்களப் பேரினவாத சக்திகள், இன்னொரு ஆயுதப் போராட்டத்துக்கான அடித்தளமாக பிரசாரம் செய்யத் தொடங்கியுள்ளன. இது ஆபத்தான நிலைக்குத் தமிழர்களைத் தள்ளிவிடும் அபாயமும் உள்ளது.

முள்ளிவாய்க்காலில் மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதை, வைத்துக் கொண்டு அங்கு புலிக்கொடி ஏற்றப்பட்டதாக கதை கட்டிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இந்த வன்முறைகளை அடுத்து, இப்படித் தான் புலிகள் ஆரம்பத்தில் தாக்குதல்களைத் தொடங்கினர், எனவே பொலிஸார் கவனமாக இருக்க வேண்டும் என்று விஷம் கக்கத் தொடங்கியிருக்கிறார்.

இவையெல்லாம் இந்த வன்முறைச் சம்பவத்தின் அடிப்படை நோக்கத்தை விளங்க வைக்கின்றன. சிங்களப் பேரினவாத சக்திகளின் சதித்திட்டத்துக்கு தமிழ்ச் சமூகம் பலியாகவும் துணைபோகவும் நேரிட்டுள்ளது பரிதாபம். தமிழ் மக்களிடையே இயல்பான எழுச்சி ஏற்படுவதை தடுக்க துரித கதியில் எப்படிச் செயற்படுவதென்று தயாரிப்புகளுடன், அதிகாரச் சக்கரம் இயங்கிக் கொண்டிருப்பதை இது வெளிப்படுத்தியிருக்கிறது.

அதேவேளை, தமிழ்மக்களின் அமைதிவழிப் போராட்டங்கள் தீவிரம் பெறவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு வித்தியாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே காரணமல்ல. வழிதவறும் தமிழ்ச் சமூகத்தை சரியான வழிக்குத் திருப்ப வேண்டும் என்ற ஆதங்கமும் தான் என்பதை மறுக்க முடியாது.

தமிழ் மக்களை சீரழிக்கும் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸ் தரப்பு உரிய நடவடிக்கை எடுத்திருக்கவில்லை. இதனால், சரியான முறையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை தமிழ் மக்களிடம் இல்லாமல் போயுள்ளது.

தமிழ் மக்களுக்கு சட்ட ரீதியாக சரியான நிவாரணங்கள் கிடைப்பதில்லை என்ற ஆதங்கம் பல தசாப்தங்களாக இருந்து வருகிறது. இப்போதும், அந்த நிலை மாறவில்லை. மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு, சட்டம், ஒழுங்கைப் பேணும் அதிகாரம் அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் இந்தச் சம்பவங்கள் எடுத்துக்காட்டியிருக்கின்றன.

அந்த வகையில், தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வின் அவசியத்தையும், புங்குடுதீவுச் சம்பவம் வலியுறுத்தியிருக்கிறது.

வித்தியா படுகொலை என்பது ஒரு வரலாற்றுத் துயராகவே நிகழ்ந்திருந்தாலும் வரலாற்றுத் திருப்பம் ஒன்றுக்கான வாய்ப்பாகவும் அமைந்திருக்கிறது போலவே தெரிகிறது.

என்.கண்ணன்

Thursday 21 May 2015

சத்தமில்லா யுத்தம்!

தட்டிக் கேட்க ஆள் இல்லை என்றால் தம்பி சண்டப் பிரசண்டன் என்றொரு பழமொழி தமிழ் மக்களிடையே உண்டு. அப்பழமொழியின் தாக்கம் இப்பொழுது இலங்கையின் வடபுலத்திற்கு நன்றாகவே ஒத்துப்போகின்றன.




யுத்தம் முடிந்து ஆறு ஆண்டுகள் கடந்த நிலையில் வடக்கில் நிகழும், நிகழ்த்தப்படும் ஒவ்வொரு சம்பவங்களும் ஏதோ ஒரு வகையில் தமிழினத்தின் அடையாளங்களையும், பண்பாட்டு கலாச்சார சீரழிப்பின் உந்துதலாகவே காணமுடிகின்றது.

இதை சற்று ஆழமாக ஆராய வேண்டிய தார்மீகக் கடமையில் நாம் இருக்கின்றோம்.யுத்தம் முடிந்த 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் வடக்கில் தமிழர்களை அடக்கி, பயமுறுத்தி வைக்க வேண்டிய தேவை அரச தரப்பிற்கு உடன் அவசியமாயிற்று. அதன் அங்கமாகவே கோத்தபாய ராஜபக்சவின் வழிகாட்டலில் வெள்ளைவான் கும்பல்கள் அட்டகாசம் புரிந்து கொண்டிருந்தன.

இந்த காலப்பகுதியில் அரசாங்கத்தை எதிர்த்தவர்களும், விமர்சித்தவர்களும், முன்னாள் போராளிகளும், பல்கலைக்கழக மாணவர்களும் என அத்தனை பேரும் ஏற்றப்பட்டார்கள்.

அதே சமகாலத்தில் கிறீஸ் பூதமும், மர்ம மனிதன் நடமாட்டமும் மக்களை அச்சுறுத்தி பயப்பீதிக்குள் வைத்திருந்தது ஆளும் தரப்பு. அதன் தொடர்ச்சியாய் நீண்டு சென்றதுதான் ஆவா குரூப். இது வடக்கில் வாள்வெட்டு சம்பவங்களில் முக்கிய பங்காற்றியிருந்தது.

இவையெல்லாம் ஒரு இனத்தின் இருப்பை கேள்விக்குறியாக்குவதில் முதன்மை பெறும் காரணிகள்.

2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் அதாவது வடக்கில் புலிகள் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டியிருந்த வேளை, வாள்வெட்டுக்களும், கற்பழிப்புக்களும், போதைப் பொருட்களின் பயன்பாடும் அறவே ஒழிக்கப்பட்டிருந்தன.

அன்றைய காலகட்டங்களில் மாணவர் சமுதாயத்தின் எதிர்காலத்தினையும், தமிழ் இனத்தின் போக்கினையும் புலிகள் தீர்மானித்திருந்தார்கள். இதனால் குற்றங்கள் குறைந்து இருந்தது அல்லது இல்லாமல் போயிருந்தன. இதனால்தான் புலிகள் ஒரு கட்டுக்கோப்பான அமைப்பு என்று சர்வதேசமே ஒத்துக்கொண்டது.

இவ்வாறான ஒரு சூழமைவில் புலிகளின் ஆயுதப் போராட்டம் வடக்கில் மௌனிக்கப்பட்டதன் பின்னர் இப்பொழுது வடக்கின் நிலையானது தமிழ் சினிமா மாதிரியிருக்கின்றது.

இப்பொழுது வடக்கில் தாராளமாக போதைப்பொருட்களை அதன் தரகர்கள் மூலம் அரசாங்கம் உள்நுழைத்துள்ளது. இது கோத்த பாயவின் காலத்தில் முளைவிடத் தொடங்கிவிட்டது. இப்பொழுது அது பெருவிருட்சமாக வளர்ந்து சாதாரணமாக மாறியுள்ளது.

வாள்வெட்டுக்கள் அடிக்கடி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இளைஞர் குழுக்கள் தமக்குள் முரண்பட்டுக் கொண்டும், வன்முறையில் இறங்கி விடுகின்றார்கள். இதை காவல்த்துறை தட்டிக் கேட்பதாக இல்லை.

அதேவேளை பெண்களின் பாதுகாப்பு என்பது இப்பொழுது கேள்விக் குறியாக மாறியுள்ளது. தற்போது புங்குடுதீவில் ஒரு மாணவி கற்பழிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு காட்டில் வீசப்பட்டிருக்கின்றாள்.

இவ்வன்புணர்விற்கும், கொலைக்கும் குடும்பப்பகைதான் காரணம் என்று ஆகப் பிந்திக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இதனை சாதாரணமான கோணத்தில் நாம் நோக்குவது நல்லதல்ல. வடக்கில் இப்பொழுது மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருப்பது போதைப் பொருட்களின் பயன்பாடு.

இது எங்கிருந்து வடக்கிற்கு செல்கின்றது. இதை யார் எப்படி விநியோகிக்கின்றார்கள். இதற்கான இடைத்தரகர்கள் யார் என்பதெல்லாம் அரசாங்கத் தரப்பிற்கும், பொலிஸாருக்கும் தெரியாமல் இல்லை. ஆனால் இவை யாவும் திட்டமிட்ட வகையிலான ஒரு இன வழிப்பின் மறுவடிவம் என்பது தான் உண்மை.

ஆயுத ரீதியில் போராடிய தமிழ் இனத்தினையும் அதன் போராட்டத்தினையும், பேரம் பேசும் சக்தியையும் நிர்மூலமாக்கிய பின்னர், தமிழ் இனத்தின் அடுத்த சந்ததியை குறிவைத்து செயலாற்றும் காரியத்தை தொடங்கியுள்ளது பேரினவாத அரசாங்கம்.

ஒரு இனத்தின் இளைய தலைமுறை சிந்திக்கும் ஆற்றலும், தன் இனத்தின் பற்றையும் கொண்டு இருக்குமாயின் அது தனக்கும் தனது இனத்தின் மீதும் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளையும், அடக்குமுறையினையும் தட்டிக் கேட்க துணிந்து எழும்.

ஆனால் அந்த இளைய தலைமுறையின் வாழ்வில் சில திசை திருப்பல்களை செய்தால் தமக்கு தலையிடி குறையும் என நினைக்கின்றார்கள் சிலர்.

ஆம் போதைப்பொருட்கள் வடக்கிற்கு கடத்தப்படுவதற்கான காரணங்களில் முதன்மை பெறுவது இனத்தின் வேரையே அழிப்பதற்கான முதன்மை காரணியாக திகழ்கின்றது.

நமது இளைஞர்களை போதைப் பொருட்களுக்கு அடிமைப்படுத்தி விட்டால் அவர்கள் தம் இனம் சார்ந்தோ தமது எதிர்காலம் சார்ந்தோ சிந்திக்க மாட்டார்கள் என்பது அவர்களின் முடிவாக இருக்கின்றது.

இதனால்தான் போதைப்பொருட்களை வடக்கில் விநியோகிக்கும் கும்பல்களை கட்டுப்படுத்தவோ, கைது செய்யவோ காவல்துறை துணிந்து செயற்படவில்லை.

மாவீரர்களுக்கும், யுத்தத்தில் பலியானவர்களுக்கும் விளக்கேற்றியவர்கள் யார் என்று கண்டறிந்து உடனேயே கைது செய்யும் அரசாங்கத்திற்கு ஏன் இவர்களால் போதைப்பொருள் விநியோகஸ்தர்களை கைது செய்ய முடியவில்லை.?

பல்கலைக்கழகத்தில் துண்டுப்பிரசுரம் ஒட்டியவர்களுக்கும், ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கும் தண்டனை வழங்க முன்நிற்பவர் ள் சட்டவிரோத, தடை செய்யப்பட்ட இவ்வாறான போதைப்பொருட்களை வைத்திருக்க அனுமதிப்பது ஏன் என்று யோசித்தால் எல்லாமே பதில் ஒன்றுதான், இனவழிப்பை நேர்த்தியாக அரசாங்கம் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது.

இப்பொழுது வடக்கில் நிகழும் பாதி சீரழிவுக்கு காரணமே இவ்வாறான போதைப் பொருட்களின் பயன்பாடுதான். ஆரம்பத்தில் போதைப் பொருட்களினை இலவசமாகவே இக்கும் பல்கள் வழங்கியதாக முன்னர் கிடைத்த தகவல்கள் உறுதிப்படுத்தியிருந்தன.

ஆக அடிப்படையில் மாணவர்களையும், இளைஞர்களையும் இலக்கு வைத்து நிகழ்த்தப்படும் திட்டமிட்ட இந்த செயற்பாடுகளை கட்டுப்படுத்த இப்பொழுதே தயாராக வேண்டும்.

யுத்தத்திற்கு பின்னர் தமிழர்களுக்கு என்று ஒரு தமிழர்களின் சக்தியாக திகழ்வது வடமாகாண சபை. இது ஆட்சிப் பொறுப்பை ஏற்று இரண்டு ஆண்டுகளை கடக்கப் போகின்றது.

ஆனால் இவ்வாறான குற்றங்களை தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நிகழ்வதனை தடுக்காமல் தமிழ் இனத்தின் அரசியல் அபிலாசைகளை வென்று எடுக்கலாம் என்று தப்பு கணக்கு போட்டுக் கொண்டு இருக்க முடியாது.

அப்படி இனத்தின் விடுதலையை பெறவும் முடியாது. புலிகளின் இடத்தில் வடமாகாண சபை இருந்தாலும், (புலிகளின் பலத்தோடு) இல்லை என்றாலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வடமாகாண சபை இருக்கின்றது.  ஆக, கடமையை சரியாக உணர்ந்து செயற்பட வேண்டிய காலத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும், மாகாண சபை உறுப்பினர்களும் இருக்கின்றார்கள். இப்படியே நிலைமைகள் கட்டுப்படுத்தப்படாமல் இருக்குமானால் இன்று புங்குடுதீவில் நடந்ததைப் போல இன்னும் எத்தனையோ நிகழ்வுகளை தமிழ் இனம் சந்திக்க வேண்டியிருக்கும்.

அதற்கு வடக்கில் அத்தனை பேரும் ஓரணியில் திரண்டு செயலில் இறங்க வேண்டும். சத்தமாக நிகழ்த்தப்பட்ட போர் நின்றுவிட்டது. இப்பொழுது சத்திமில்லாத போர் தமிழ் இனத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ளது. அது எதிர்காலத்தில் இன்னும் வீரியம்பெறும்.காலத்தின் தேவை அறிந்து செயலாற்ற வேண்டியது நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

இல்லேயேல் 2009 அழிவை விட மிகப்பெரிய அழிவு காத்திருக்கின்றது. அதையும் இந்த தமிழ் இனம் சந்திக்கப் போகின்றதா?

ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஒருநாள் வருமானம் எவ்வளவு? வெளியான தகவல்

ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஒரு நாள் வருமானம் மட்டும் ரூ.6 கோடியே 37 லட்சம் என நியூயோர்க் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.



ஈராக் மற்றும் சிரியாவில் அட்டூழியங்களை அரங்கேற்றி  வரும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு இன்று உலகின் சக்திவாய்ந்த மற்றும் பணக்கார தீவிரவாத அமைப்பாக உள்ளது.

மேலும் இவர்கள் தங்கள் வசமுள்ள நகரங்களில் வசிக்கும் மக்களை மிரட்டி பணம் பறிப்பது, வரி விதிப்பதன் மூலம் மட்டும் அந்த அமைப்புக்கு நாள் ஒன்றுக்கு ரூ.6 கோடியே 37 லட்சம் வருமானம் கிடைக்கிறது.

நிலங்கள் கட்டிடங்களை அபகரிப்பது, ராணுவ உபகரணங்களை கொள்ளையடிப்பது, மேலும் குறைந்த அளவு ஊதியம் வழங்குவதன் மூலம் தங்கள் செலவை குறைத்துக்கொள்கிறார்கள்.

ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு மாதாமாதம் ஏற்படும் பெரிய செலவே உறுப்பினர்களுக்கு ஊதியம் அளிப்பது தான்.

ஊதியத்திற்கு மட்டும் மாதாமாதம் ரூ.19 கோடி முதல் ரூ. 63 கோடி செலவாகிறது.

மேலும் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை குறி வைத்து தாக்கி வருகின்றன.

இதனால் தீவிரவாதிகளுக்கு வருமானம் பாதித்தாலும் அவர்கள் எண்ணெய்யை மட்டும் நம்பி இல்லை.

ஏனெனில், அவர்கள் தங்களுக்கு கிடைக்கும் எண்ணெய்யை விற்பனை செய்வதை விட தங்கள் பயன்பாட்டுக்கு வைத்துக் கொள்கிறார்கள் என்று அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

Monday 18 May 2015

பிரான்ஸிஸ் ஹரிசன் டுவிட்டரில் வெளியிட்ட முக்கிய போர்க் குற்ற ஆதாரம் - விடுதலைப்புலிகளின் 110 முதன்மை உறுப்பினர்கள் எங்கே?

புலிகளின் மூத்த போராளி பாலகுமாரனும் மகனும் மற்றும் ஒருவரும் இராணுவத்தின் பிடியில் இருப்பதைப் போன்ற ஒரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.


இப் புகைப் படத்தினை பிரான்ஸ்சிஸ் ஹரிசன் தனது டுவிட்டர் தளத்தில் பதிவேற்றியுள்ளார்.



சிறீலங்கா படையினரிடம் கையளிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் முதன்மை உறுப்பினர்கள் எங்கே?

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட கடந்த 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி நூற்றுக்கணக்கான விடுதலைப் புலிகள் அமைப்பின் முதன்மை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் படையினரிடம் உறவினர்களால் கையளிக்கப்பட்டனர். இவ்வாறு கையளிக்கப்பட்டவர்களில் 110 பேருடைய விபரங்கள் தொகுக்கப்பட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

படையினரிடம் கையளிக்கப்பட்டு காணாமற்போனவர்கள் தொடர்பிலான ஆய்வுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் யஸ்மின் சுக்கா தலைமையிலான சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்திட்டம் – சிறீலங்கா (International Truth and Justice Project – Sri Lanka (ITJP)) என்ற அமைப்பு இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.

இலங்கைத்தீவில் இடம்பெற்ற போரின் போது போர்குற்றங்களும், மனித குலத்திற்கு எதிரான கொடூரங்களும் இடம்பெற்றதாகவும், அது தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திய ஐ.நா செயலாளர் நாயகம் பான்கீ மூனினால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய நிபணர் குழுவின் உறுப்பினராக இருந்தவரே யஸ்மின் சுக்கா ஆவார்.

அவரது தலைமையிலான இந்தக் குழு வெளியிட்டுள்ள இந்த பெயர் பட்டியல் அடங்கிய அறிக்கை, கண்ணால் கண்ட சாட்சியங்கள் மற்றும் சரணடைந்த சந்தர்ப்பத்தில் பதிவுசெய்யப்பட்ட பெயர் விபரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

யத்தம் நிறைவுபெற்று இன்றுடன் ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையில், இவர்கள் தொடர்பில் எந்தவித தகவல்களும் இல்லை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. கையளிக்கப்பட்டவர்களில் பலர் சிறைகளில் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் ஐயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கையளிக்கப்பட்டவர்கள் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த, வட்டுவாகல் பாலத்திற்கு தெற்கு பகுதியில் அமைக்கப்பட்ட முள்வேலிக்குள் தங்கவைக்கப்பட்டதோடு அவர்கள் தொடர்பிலான தகவல்கள் பதிவுசெய்யப்பட்டன.

இந்நிலையில், அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப்பின் தலைமையில் பெரும்பாலான மக்கள் படையினரிடம் கையளிக்கப்பட்டதாக  அறியக்கிடைக்கின்றது. அவர்கள் அதன் பின்னர் பேரூந்துகள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த 110 விடுதலைப்புலி அமைப்பின் முதன்மை உறுப்பினர்கள் மற்றும் முதன்மை நபர்கள் தொடர்பிலான பெயர் விபரங்களை வெளியிட்டுள்ள குறித்த அமைப்பு அவர்கள் குறித்த தகவல்கள் தெரிந்தவர்கள் தற்போது இலங்கையில் வசிக்கவில்லை என்ற தகவலையும் வெளியிட்டுள்ளது.

பலர் இது தொடர்பில் தகவல் தெரிந்திருந்தும் தங்களுடைய பாதுகாப்புகருதி தகவல்களை வழங்கமறுத்து வருவதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.  கடந்த 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி படையினரிடம் கையளிக்கப்பட்ட பலரது உறவினர்கள் தற்போது வெளிநாட்டில் வசித்து வருகின்றனர்.

பாலகுமாரனும் அவரது மகனும் படையினரிடம் கையளிக்கப்பட்ட பின்னர் பிடிக்கப்பட்ட படம்

கையளிக்கப்பட்டவர்களை நேரில்கண்ட சாட்சிகளாக அவர்கள் இருக்கின்ற போதும் பாதுகாப்புக்கருதி அவர்கள் தகவல்கைளை வழங்கமறுத்துள்ளனர். எனினும் பெயர் விபரங்களை வெளியிடவிரும்பாத பலர் இது தொடர்பிலான தகவல்களை வழங்கியுள்ளனர்.

ஒரு சிலர் விடுதலை செய்யப்பட்டிருப்பதோடு, கையளிக்கப்பட்டு காணாமற்போனவர்கள் தொடர்பில் பல்வேறு முறறைப்பாடுகள் மற்றும் வழக்குகள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், 2009 ஆம் ஆண்டுக்கும் 2015க்கும் இடையில் காணாமற் போகடிக்கப்பட்ட்வர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பதில் கூறவேண்டுமென பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் அது தொடர்பிலான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

உலகம் முழுதும் இடம்பெயர்ந்து வாழும் காணாமல் போகடிக்கப்பட்ட்வர்களது உறவினர்கள் தங்களது உறவுகள் உயிருடன் இருக்கின்றார்களா? இல்லையா? என்பது தொடர்பில் அறிந்துகொள்ள எதிர்ப்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மனிதனும் சட்ட ஆளுகைக்குள் அங்கீகரிப்பதோடு, சித்திரவதைக்கு உள்ளாதல் அல்லது மனித நேயமற்ற கொடுமையான தண்டனைகள் வழங்கப்படக்கூடாது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கையளிக்கப்பட்ட பின்னர் காணாமல் போகடிக்கப்பட்ட்வர்கள் தொடர்பிலும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னர் இலங்கை படையினரிடம் கையளிக்கப்பட்ட பின்னர் காணாமல் போகடிக்கப்பட்ட்வர்கள் தொடர்பிலும் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்திட்டம் – இலங்கை அமைப்பு, இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கட்டாயமாக காணாமற்போகச் செய்யப்படும் அனைவரது பாதுகாப்பையும் உறுதிசெய்வதோடு, காணாமற்போகடிக்கப்பட்ட்வர்களின் குடும்பங்களிடம் விபரங்களை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை்கு விஜயம் செய்து விசாரணைகளை மேற்கொள்ள, குறித்த குழுவிற்கு அனுமதி வழங்கவேண்டுமென்பதோடு, இதற்கு அரசாங்கம் பூரண ஒத்துழைப்பினை வழங்கவேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட 110 பேரின் பெயர் விபரங்கள் வருமாறு:

01    ஆதவா ( செயற்பாடு தெரியாது)
02    அகிலன் மாஸ்டர் (புலனாய்வுப் பிரிவு),
03    அம்பி ( செயற்பாடு தெரியாது)
04    அராமுதன் ( இம்ரான் பாண்டியன் படை அணியின் பிரதி தளபதி),
05    ஆர்யன் ( செயற்பாடு தெரியாது)
06    பேபி சுப்பிரமணியம் (இளங்குமரன் ) ( கல்வித் துறை பொறுப்பாளர்),
07    பாலச்சந்திரன் பிரபாகரன் ( பிரபாகரனின் இளைய மகன் ),
08    V.பாலகுமாரன் ( மூத்த உறுப்பினர் )
09    Lt.Col.அருன்நம்பி ( இம்ரான் பாண்டியன் படை அணியின் தளபதி)
10    பாலகுமாரின் மகன் தீபன் ( சூரியதீபன் )
11    பாலதாஸ் ( சிரேஷ்ட உறுப்பினர், நிதித் துறை )
12    பாரி (வெளியக கணக்காய்வு பொறுப்பாளர்)
13    பாபு +1 ( நகை விற்பனை பொறுப்பாளர், மனைவியுடன் சரணடைந்ததாக சொல்லப்படுகிறது),
14    பாபு – இளம்பரிதி (சேரன் வாணிப பொறுப்பாளர் )
15    பவன் கமில்டன் (கடாபியுடன் இருந்தவர், ஆனால் அங்கவீனமானவர்களை பராமரித்தவர்)
16    பாஸ்கரன் ( மணலாறு தலைமையக பொறுப்பாளர்)
17    பாஸ்கரன் ( சொர்ணத்துடன் பனியாற்றியவர், கிளிநொச்சியில் பிறந்தவர் )
18    Lt.Col.சந்திரன் ( இராணுவ புலனாய்வு)
19    எழிலன் (திருகோணமலை அரசியல் பொறுப்பாளர் )
20    எழில்வாணன் மாஸ்ரர் ( பாடசாலை ஆசிரியர் )
21    வன பிதா.பிரான்சிஸ் ஜோசப் ( கத்தோலிக்க பாதிரியார் )
22    கோபி அக்கா (வீரபாண்டியன்) ( ஒரு கையை இழந்தவர், சொத்து மேற்பார்வை)
23    கரிகரன் ( செயற்பாடு தெரியாது)
24    இளம்திரையன் (மார்ஷல்) ( இராணுவ பேச்சாளர் )
25    இளம்பரிதி ( சின்னத்தம்பி மகாலிங்கம்) ( யாழ் மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர்)
26    இளம்பரிதி (மகாலிங்கம் சிவாஜினி) ( இளம்பரிதியின் மனைவி)
27    இளம்பரிதி – மகாலிங்கம் மகிழினி ( 10 வயது )
28    இளம்பரிதி – மகாலிங்கம் தமிழொளி (8 வயது)
29    இளம்பரிதி – மகாலிங்கம் எழிலினி (3 வயது)
30    இளம்குமரன் (மணலாறு, கட்டளை அதிகாரி )
31    இளவேங்கை மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)
32    இன்தமிழ் ( செயற்பாடு தெரியாது)
33    இரும்பொறை மாஸ்டர் ( சினைப்பர் அணி பொறுப்பாளர்)
34    இசைபிரியா ( ஊடக பிரிவு)
35    ஜவான் ( புலிகளின் குரல் வானொலி)
36   ஜெயராஜ் ( நிதிப் பிரிவு )
37    காந்தி ( புலனாய்வு பிரிவு, சிறைப் பொறுப்பாளர்)
38    கண்ணன் (அரசியல் பிரிவு, மாணவர் அமைப்பு பொறுப்பாளர்)
39    கங்கன்/ கனகன் ( லோகநாதன் அருணாசலம் ) (அரசியல் பிரிவு, பாதுகாப்பு)
40    கரிகாலன் ( முன்னாள் கிழக்கு மாகாண அரசியல் துறை பொறுப்பாளர்)
41    கருவண்ணன் ( மா வீரர் பணிமனை வாகன பொறுப்பாளர் )
42    கினி ( யோகியின் உதவியாளர், முரண்பாட்டு ஆய்வு நிறுவன பிரதிப் பொறுப்பாளர்)
43    கிருபா மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)
44    குயிலன் ( இராணுவ புலனாய்வு)
45    குமரன் ( பால்ராஜின் மைத்துனர்)
46    குணம் ( சிரேஷ்ட படைத் தளபதி , அனேகமாக திருகோணமலையின் முன்னாள் தளபதி)
47    குட்டி (பாண்டியன் வாணிப பொறுப்பாளர்)
48    லோரன்ஸ் ( வவுனியா மாவட்ட கட்டளை அதிகாரி )
49    மாதவன் ( காவல் துறை பிரதி பொறுப்பாளர் )
50    மஜீத் ( இராணுவ புலனாய்வு- நிர்வாக அதிகாரி )
51    மலரவன் (நிர்வாக சேவை )
52    மனோஜ் ( ஏற்பாடுகள் – ரூபனின் பிரதி)
53   மணியரசன் ( சிரேஷ்ட இராணுவ தளபதி)
54    மாது ( திருகோணமலை இராணுவ பிரிவு )
55    மிரேஷ் ( நிதர்சனம் தொலைக்காட்சி )
56    மோகன் அங்கிள் (கடற்புலிகள் )
57    முகிலன் (இராணுவ புலனாய்வு)
58    முகுந்தன்/ஐந்து ஒன்பது=code ( வட போர் முனையில் தீபனின் பிரதி )
59    நடேசன் (அரசியல் துறைப் பொறுப்பாளர்)
60    நாகேஷ் ( ஒரு கால் இல்லை, நிர்வாக பிரிவு பொறுப்பாளர் )
61    நளாயினி ( பொறுப்பாளர், ஆங்கில கல்லூரி )
62    நளாயினி /நளாகினி (மாலதி படைப்பிரிவு )
63    நேயன் (புலனாய்வு)
64    நீதன் ( தலைமையக பொறுப்பாளர், சொந்த இடம் திருகோணமலை )
65    நிலவழகி (மருத்துவ பிரிவு மருத்துவர், இரு குழந்தைகளின் தாய் )
66    நிஷாந்தன் (கடாபியுடன் இருந்தவர், பின்னர் அங்கவீனமானவர்களை பராமரித்தார்)
67    நிஷாந்தன் மாஸ்டர் (இராணுவ விநியோகம் )
68    பஞ்சன் புலனாய்வு (மகாதேவன் ஞானகரன்) (முக்கியஸ்தர்களில் ஒருவர் )
69    பரா ராதா ( நீதித் துறை பொறுப்பாளர்)
70    Dr.பத்மலோஜானி (கரிகாலனின் மனைவி, மருத்துவ பிரிவு)
71    Lt.Col.பிரபா (புலனாய்வு பிரிவு)
72    பூவண்ணன் (நிர்வாக பிரிவு பொறுப்பு)
73    பூவண்ணன் மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)
74    பிரியன் (சுவாமிநாதர் தயாசிறி) ( நிர்வாகத்துறை பிரதி)
75    புலித்தேவன் (சமாதான செயலகம்)
76    புலிமைந்தன் (யோகியின் சாரதி)
77    புரச்சிகா (அம்பியுடன் கூட இருந்தவர், மேலே பார்க்க )
78    புரட்சி மாஸ்டர் (ஆர். பி.ஜி சினைப்பர் பிரிவு)
79    ரூபன் ( ஏற்பாடுகள் பொறுப்பாளர்)
80    ராகுலன் (யாழ்ப்பாண படைப்பிரிவு பிரதி )
81    ராஜா ( விளையாட்டு துறை, பாப்பாவின் பிரதி, 4 பிள்ளைகளுடன் காணவில்லை)
82    புதுவை இரத்தினதுரை ( கவிஞர், கலை மற்றும் கலாசார பொறுப்பாளர்)
83    Col.ரமேஸ் (இளங்கோ) ( காவல் துறை)
84    Col.ரமேஸ்(சிரேஷ்ட இராணுவ தளபதி)
85    ரேகா மகேந்திரராஜா ( மருத்துவ பிரிவு பொறுப்பாளர்)
86    ரஜித்தன் (மணலாறு மாவட்டம் )
87    ரூபன் ( யாழ்ப்பாண படைப்பிரிவு 3 ஆவது பொறுப்பாளர்)
88    S.தங்கன் (சுதா ) சோமசுந்தரம் சுதாகரன் (அரசியல் துறை பிரதி)
89    சக்தி (வனப் பிரிவு ஒரின்கினைப்பாளர்)
90    சத்யன் ( வளப் பாதுகாப்பாளர்)
91    செல்வராசா (யாழ் மாவட்ட தளபதி )
92    சிலம்பன் (ராதா விமான எதிர்ப்பு பொறுப்பாளர்)
93    சின்னவன் (புலனாய்வு)
94    சித்திரங்கன் (மணலாறு மாவட்டத்துக்கான தளபதி)
95    Lt.Col.சுடரவன் (இராணுவ புலனாய்வு)
96    Lt.Col.தணிகையரசு (இம்ரான் பாண்டியன் படைப் பிரிவு)
97    திலக் (திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி செயலக பொறுப்பாளர்)
98    திலகர் (நிதிப் பிரிவு,விவசாயம், பண்ணைகளை கவனித்து வந்தார் )
99    துவாரகன் வயிரவமூர்த்தி (மாவீரர் துயிலும் இல்லம் மன்னார்)
100    வாகிசன் (ராமநாதன் நிமலநாதன்) ( செயற்பாடு தெரியாது)
101    வீரதேவன் (மகாலிங்கம் ஜெயகாந்தன்) (வங்கிகள் பொறுப்பாளர்)
102    Lt.Col.வைதி (இராணுவ புலனாய்வு)
103    Lt.Col.வள்ளுவன் மாஸ்டர் (ராதா விமான எதிர்ப்பு பிரிவு)
104    வேலவன் (சிரேஷ்ட தளபதி, இம்ரான் பாண்டியன் படை அணி)
105    வேல்மாறன் (கேணல் பிரபாவின் பாதுகாப்பாளர்)
106    வினிதா (நடேசனின் மனைவி )
107    வீமன் (கட்டளை தளபதி)
108    விபுலேந்திரன் (நிதிப் பிரிவு)
109    யோகன் / சேமணன் (அரசியல் துறை)
110    யோகி (முரண்பாட்டு ஆய்வு நிறுவன பொறுப்பாளர்)

Sunday 17 May 2015

ஓங்கி அடிச்சா.. பாக்குறியா பாக்குறியா....??

போஸ்டர் போடுவதிலும், அதில் வித்தியாசமான வாசகங்களை இடம் பெறச் செய்வதிலும் நமது திராவிடக் கட்சிகளுக்கு நிகர் அவர்கள்தான். 
 
 
 
இப்படியெல்லாம் வசனம் எழுத அவர்களுக்கு யார்தான் ஐடியா கொடுக்கிறார்களோ.. அப்படி இருக்கின்றன ஒவ்வொன்றும். 
 
ஜெயலலிதாவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தபோது விதம் விதமான வாசகங்களுடன் போஸ்டர் போட்டு தமிழகத்தின் மானத்தை அகில உலக அளவில் வாங்கிய பெருமைக்குரியவர்கள் அதிமுகவினர்.
 
 காவிரியை வச்சுக்கோ அம்மாவைத் திருப்பிக் கொடு என்று கேட்டு காவிரி விவசாயிகளின் மனதில் ரத்தம் கசிய விட்டவர்கள் இந்த அரசியல்வாதிகள். 
 
இந்த நிலையில் தற்போது அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலையாகி விட்டார். விரைவில் முதல்வராகப் பதவியேற்கப் போவதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து விதம் விதமாக தினுசு தினுசாக போஸ்டர்களைப் போட்டு பயமுறுத்தி வருகின்றனர் அதிமுகவினர். 
 
மதுரையில் நீதி தேவதைக்கு நீதி வழங்கிய நீதி மானே என்ற பெயரில் நீதிபதி குமாரசாமியை வாழ்த்தி போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதே மதுரையில், சிங்கம்லே என்ற தலைப்பில் ஒரு போஸ்டர் போட்டுள்ளனர் அமைச்சர் செல்லூர் ராஜுவின் ஆதரவாளர்கள் அதே கோஷ்டி அந்த சிங்கம் படத்தில் வரும் வசனத்தை உல்டா செய்து போட்டு இன்னும் உசுப்பேத்தியுள்ளது. 
 
அந்த வசனம் இதுதான்..
 
 "சிங்கத்தைக் காட்டுல பார்த்திருப்ப 
கர்நாடக கோர்ட்டுல பார்த்திருப்ப 
ஏன் பரப்பன அக்ரஹாரா சிறையில் கூட பார்த்திருப்ப 
அது வெறித்தனமா வெளியேறி தொகுதி வாரியா ஓட்டு வேட்டையாடி பார்த்திருக்கியா.. பார்த்திருக்கிறியா... 
அது ஓங்கி அடிச்சா 234 டன் வெயிட்டுவே...
 எதிரியும் கிடையாது, எதிர்க்கட்சியும் கிடையாது 
பார்க்கிறியா பார்க்கிறியா.. பார்ப்பவே!"

Friday 15 May 2015

இறந்தவர்களை நினைவுகூர்தல்




சில ஆண்டுகளுக்கு முன் ஜே.வி.பியின் முன்னாள் மூத்த உறுப்பினர் ஒருவரோடு உரையாடும் போது அவர் சொன்னார், “ஜே.வி.பியின் இரண்டாவது கிளர்ச்சி நசுக்கப்பட்ட பின் அதில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்வது என்பது உடனடுத்து வந்த ஆண்டுகளில் மிகவும் ஆபத்தாக இருந்தது. ஆனால், சந்திரிக்காவின் வருகைக்குப் பின் நிலைமை மாறத் தொடங்கியது. 90களின் முன்கூறில் ஓரளவுக்கு இரகசியமாக இறந்தவர்களை நினைவுகூரக் கூடியதாக இருந்தது. அப்பொழுது அது மிகவும் புனிதமானதாகவும் ஒரு வழிபாடாகவும் இருந்தது. அந்த வழிபாட்டிற்கு ஓர் ஆத்மா இருந்தது. பின் வந்த ஆண்டுகளில் நிலைமைகள் மேலும் இறுக்கம் குறைந்தன. இதனால், இறந்தவர்களை நினைவு கூர்வது ஆபத்தற்ற ஓர் அரசியல் நிகழ்வாக மாறியது. அந்நாட்களில் பொருந்திரளானோர் அந்நிகழ்வுகளில் உணர்வெழுச்சியோடு கலந்துகொண்டார்கள். அதன் பின் பகிரங்கமாகவே அந்நிகழ்வு நடாத்தப்பட்டது. பெருந்திரளானோர் அதில் கலந்துகொண்டார்கள். ஆனால், அடுத்தடுத்து வந்த ஆண்டுகளில் படிப்படியாக பங்கு பற்றுவோரின் தொகை குறையத் தொடங்கியது. இப்பொழுது அது ஒரு சடங்கைப் போலாகிவிட்டது. அது அதன் ஆன்மாவை இழந்துவிட்டது. அது ஏறக்குறைய நாட்காட்டிக்குள் வரும் ஒரு திகதி போல் ஆகிவிட்டது…” என்று.
ஜே.வி.பியின் தியாகிகள் நாள் அதன் ஆன்மாவை இழந்ததற்கு முக்கிய காரணம் அதற்கிருந்த தடைகள் அகற்றப்பட்டதல்ல. மாறாக, மிதவாத அரசியலில் ஜே.வி.பியின் செயற்பாடுகள் அவற்றின் அரசியல் ஆன்மாவை எப்பொழுதோ இழந்துவிட்டது. ஓர் அமைப்பின் அரசியலானது புனிதமிழக்கும் போது அதன் தியாகிகள் வழிபாடும் ஆன்மாவை இழக்கிறது. இது சிங்கள மக்கள் மத்தியில் தோன்றிய ஓர் ஆயுதப் போராட்டம் நசுக்கப்பட்ட பின்னரான நிலை. ஆனால், தமிழ் மக்களின் நிலை?

இறந்தவர்களை நினைவு கூரும் விவகாரத்திலும் இச்சிறிய தீவு இனரீதியாக இரண்டாகப் பிளவுண்டே இருக்கிறது. சிங்கள மக்கள் மத்தியில் தோன்றிய ஓர் ஆயுதப் போராட்டம் நசுக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே அதன் தியாகிகளை நினைவுகூரக் கூடிய சூழல் உருவாகியது. குறிப்பாக ஆட்சிமாற்றத்தோடு அப்படியொரு நிலைமை தோன்றியது. ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளாக அவர்களால் இறந்தவர்களை நினைவு கூர முடியவில்லை. இப்பொழுது ஆட்சி மாறிவிட்டது. இனிமேலாவது தமிழர்கள் இறந்தவர்களை நினைவு கூரக் கூடியதாக இருக்குமா?
கடந்த 5 ஆண்டுகளாக தமிழ் மக்களால் இறந்தவர்களை நினைவுகூர முடியவில்லை என்பது மட்டுமல்ல, இறந்தவர்களையும் காணாமற் போனவர்களையும் எண்ணிக் கணக்கெடுக்கவும் முடியவில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இறந்தவர்களை நினைவுகூர்தல், இறந்தவர்களையும் காணாமல் போனவர்களையும் கணக்கெடுத்தல் ஆகியவை எல்லாமும் ஒரு மக்கள் கூட்டத்தின் கூட்டுரிமையின் பாற்பட்டவை. அவ்வாறு நினைவு கூர்வதற்கும் கண்கெடுப்பதற்கும் உரிய அரசியற் சூழல் நிலவவேண்டும். அப்படிப்பட்ட அரசியல் சூழலை உருவாக்குவது முழுக்க முழுக்க ஓர் அரசியற் தீர்மானம்தான். அப்படியொரு தீர்மானத்தை எடுப்பதற்கான அரசியற் திடசித்தம் மைத்திரி அரசிடம் உண்டா?
சில மாதங்களுக்கு முன்பு ஒரு மேற்கத்தேய தூதுவரோடு உரையாடும் போது அவர் சொன்னார், “போரில் இறந்தவர்கள், காணாமற் போனவர்கள் தொடர்பில் எந்தவொரு நாடும் மிகச் சரியான கணக்கு விபரத்தை வைத்திருப்பதில்லை” என்று. இங்கு பிரச்சினை, எது சரியான கணக்கு விபரம் என்பதல்ல. தமிழ் மக்களால் இன்னமும் சுதந்திரமாக கணக்கெடுக்க முடியவில்லை என்பதுதான். நம்பகத்தன்மை மிக்க, சுயாதீனமான, அனைத்துலக நியமங்களுக்கு ஏற்புடைய எந்தவொரு அமைப்பும் அப்படியொரு கணக்கெடுப்பை இன்னமும் செய்யத் தொடங்கவில்லை என்பதுதான்.

ஆட்சி மாற்றத்தின் பின் வடக்குக்கு விஜயம் செய்த அமெரிக்கப் பிரதிநிதிகளிடம் ஒரு வட மாகாணசபை உறுப்பினர், காணாமல் போகச்செய்யப்பட்டவர்கள் குறித்து கதைத்திருக்கிறார். அப்பொழுது அமெரிக்கப் பிரதானிகள் இது தொடர்பான புள்ளி விபரங்களைக் கேட்டிருக்கிறார்கள். ஆனால், மாகாணசபையிடம் அப்படியொரு புள்ளிவிபரமும் இருக்கவில்லையாம். அமெரிக்கப் பிரதிநிதிகள் கேட்டபோது புள்ளிவிபரங்ளைக் கொடுக்கமுடியவில்லை என்பது இணையத் தளங்களில் குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டது.

ஆனால், இங்கு விவகாரம் எதுவெனில், எந்தவொரு தமிழ்த் தரப்பினாலும் திருத்தமான புள்ளிவிபரங்களைக் கணக்கெடுக்கத் தேவையான ஓர் அரசியல் சூழல் உருவாகவில்லை என்பதுதான். அதைத்தான் வெளிநாட்டுத் தூதுவர்களிடம் சுட்டிக்காட்ட வேண்டும்.

மேலும், அவ்வாறு கணக்கெடுப்பது என்பதையே ஒரு சிவில் போராட்டமாக, ஒரு சிவில் செயற்பாட்டியக்கமாக முன்னெடுக்க முடியும். ஆட்சிமாற்றத்தின் பின் கிடைத்திருக்கும் ஒப்பீட்டளவில் அதிகளவிலான சிவில் வெளிக்குள் மேற்சொன்ன போராட்டத்தை ஒரு பரிசோதனையாக தமிழ்க் கட்சிகளோ அல்லது செயற்பாட்டியக்கங்களோ முன்னெடுத்திருக்கலாம். இது விடயத்தில் அனைத்துலக மனித உரிமை நிறுவனங்களிடமும் மனிதநேய நிறுவனங்களிடமும் ஒத்துழைப்பைப் பெற முயற்சிக்கலாம். தமிழ் கட்சிகள் கிராமங்கள் தோறும் தமது வலையமைப்பை விஸ்தரிப்பதற்கும் தமது ஆதரவாளர்களோடு உயிர்த்தொடர்பைப் பேணுவதற்கும் இது உதவக்கூடும். ஆனால், எந்தவொரு தமிழ்க் கட்சியிடமும் அப்படியொரு அரசியல் தரிசனம் இருப்பதாகத் தெரியவில்லை.

இத்தகையதோர் பின்னணியில் ஆட்சி மாற்றத்தின் பின்னரான முதலாவது நினைவுநாள் அடுத்த கிழமை வருகிறது. தமிழ்க் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் செயற்பாட்டியக்கங்களும் என்ன செய்யப்போகின்றன? வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காகக் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் தமிழ்க் கட்சிகள் கடந்த 5 ஆண்டுகளாகக் கடந்து சென்றது போல இம்முறையும் மே 18ஐ கடந்து செல்லப்போகின்றனவா? சில மக்கள் பிரதிநிதிகள் தனிப்பட்ட முறையில் நினைவு கூர்வது வேறு. அதைக் கட்சிகள் தமது கொள்கைத் தீர்மானமாக நிறைவேற்றி கட்சிச் செயற்பாடாக முன்னெடுப்பது என்பது வேறு. அவ்வாறு முன்னெடுப்பதில் சட்டச் சிக்கல்களும் பாதுகாப்புப் பிரச்சினைகளும் இருப்பதாக ஒருவிளக்கம் கூறப்படுகிறது. ஏனெனில், 2009 மே மாதமளவில் கொல்லப்பட்டவர்களில் பொதுமக்களும் விடுதலைப் புலிகள் இயக்கப் பிரதானிகளும் அடங்குவர். அந்த இயக்கத்தின் உயர் மட்டத்தினர் கூட்டாக இல்லாமற் செய்யப்பட்ட ஒரு காலகட்டம் அது. எனவே, இறந்தவர்களை நினைவு கூர்தல் என்பது புலிகள் இயக்கத் தலைவர்களையும் நினைவு கூர்வதாக அமைந்துவிடலாம் என்பதே கடந்த 5 ஆண்டுகளாக அதைத் தடுப்பவர்கள் கூறும் காரணமாக இருந்து வந்துள்ளது.

புலிகள் இயக்கத்திலிருந்து இறந்தவர்களை நினைவு கூருமிடத்து அது அந்த இயக்கத்தை மகிமைப்படுத்துவதாகவும், அதை மீள உயிர்ப்பிப்பதாகவும் அமைந்துவிடும் என்றுமோர் விளக்கம் கூறப்படுகிறது. இந்த இடத்தில் சில கேள்விகளைக் கேட்கலாம்.
  1. கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்வதால் ஒரு குறிப்பிட்ட அமைப்பின் அரசியலானது மீளத்துளிர்க்கலாம் என்ற ஓர் அச்சம் உண்டெனில் குறிப்பிட்ட அந்த அமைப்பை அழித்ததன் மூலம் அதன் அரசியலை அழிக்க முடியவில்லை என்றா பொருள்?
  2. ஆயின் மே 19ஆம் திகதி முடிவுக்குள் கொண்டுவரப்பட்டது ஓர் இயக்கமா அல்லது அது முன்னெடுத்த அரசியலா?
  3. அந்த அரசியல் அப்படியே நீறு பூத்திருக்கின்றதென்றால் இனப்பிரச்சினையின் மூல காரணங்கள் தீர்க்கப்படவில்லை என்பது தானே பொருள்?
  4. இறந்தவர்களை நினைவுகூர்வது என்பது ஒரு கூட்டுரிமை. அக்கூட்டுரிமையானது இலங்கைத்தீவில் இரண்டு இனங்களுக்கும் சமமானது இல்லையா?
ஆட்சி மாற்றத்தின் பின்னரான ஓர் அரசியற் சூழலில் இக்கேள்விகளின் மீதான வாதப்பிரதிவாதங்கள் மாற்றத்தின் உண்மையான உள்ளடக்கத்தையும் மாற்றத்தின் பின் தமிழ் மக்களின் நிலைமைகளையும் விளங்கிக்கொள்ள உதவக் கூடும்.

தமிழ்ப் பெரும்பரப்பில் நவீன வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய உயிர் இழப்பை கடந்த 5 ஆண்டுகளாக நாட்டுக்குள் வாழும் ஈழத்தமிழர்களால் நினைவு கூர முடியவில்லை. இறந்தவர்களை நினைவு கூர்வது என்பது மனித நாகரிகத்தின் மிக ஆதித் தொடக்கங்களில் ஒன்றாகும். இறந்தவர்களுக்கு மரியாதை செய்தல், மூதாதையரை வழிபடுதல், பூதவுடலுக்கு மரியாதை செய்தல் போன்றவை மனிதன் நாகரீகமடையத் தொடங்கியதன் பிரதான குறிகாட்டிகளாகக் கொள்ளப்படுகின்றன. மிருகங்களிடமிருந்து மனிதர்கள் துலக்கமாக வேறுபடும் இடங்களில் இதுவும் ஒன்று. சில மிருகங்கள் பறவைகளின் மத்தியில் இறந்த தமது இனத்தவரைச் சுற்றியிருந்து துக்கம் கொண்டாடும் சில நடைமுறைகளைக் காணமுடியும். ஆனால், மனிதர்களே அதனைச் சடங்காகவோ வழமையாகவோ பேணி வருகிறார்கள். மனிதன் நாகரீகமடையத் தொடங்கியதன் ஒரு முக்கிய குறிகாட்டியாக அது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அப்படிப் பார்த்தால் அது ஓர் அரசியல் உரிமை மட்டுமல்ல, அது ஒரு பண்பாட்டுரிமையும் கூட.

மனித நாகரிகத்தின் ஆதித்தடங்களைத் தேடிச் சென்றால் மனித குலத்தின் முதலாவது நிரந்தரக் குடியிருப்புக்களில் ஒன்றாக கருதப்படும் ஹெற்றல்கியூக்கிலும், ஜெரிக்கோவிலும் மனிதர்கள் மூதாதையர்களை வழிபட்டிருப்பதைக் காணலாம். மனித நாகரிகமானது நதிக்கரைகளில் எண்ணோடும் எழுத்தோடும் கட்டியெழுப்பப்படுவதற்கு சில நூற்றாண்டுகளுக்கும் முன்னரே உருவாக்கப்பட்ட நிலையான குடியிருப்புக்கள் அவை. நீர்ச்சுனைகளை மையமாகக் கொண்டிருந்த அந்நிலையான குடியிருப்புக்களில் மூதாதையர் வழிபாட்டுக்குரிய சான்றாதாரங்கள் கிடைத்திருக்கின்றன. அதாவது, மனித நாகரீககத்தின் ஆதித் தொடக்கங்களைக் கண்டுபிடித்த போது அங்கே இறந்தவர்களை மரியாதை செய்ததற்கான சான்றாதாரங்களும் காணப்பட்டன.

இறந்தவர்களை நினைவு கூர்வதைத் தடுப்பது நாகரீகமற்றது என்று நம்பியதாலேயே மேற்கத்தேய நாடுகளைச் சேர்ந்த ராஜதந்திரிகள் அதற்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக சில ஆண்டுகளுக்கு முன் ஒரு ஐரோப்பிய பிரதானி ஆனையிறவுக்கு அருகே மலர் வணக்கம் செலுத்தினார். அதைப் போலவே சில மாதங்களுக்கு முன்பு ஒரு அமெரிக்கப் பிரதிநிதியும் முள்ளிவாய்க்காலுக்குச் சென்று மலர்வணக்கம் செலுத்தியிருக்கிறார். இவைகள் யாவும் குறியீட்டு நடவடிக்கைகளே. ஆனால், தமிழ் மக்களுக்குத் தேவையாயிருப்பது குறியீட்டு நடவடிக்கைகள் அல்ல. மாறாக தமது கூட்டு உரிமையை உறுதி செய்யும் ஓர் அரசியல் சூழலே. அதற்கு வேண்டிய ஓர் அனைத்துலக அழுத்தமே. ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி அதை பின்னிருந்து பலப்படுத்தும் மேற்கு நாடுகள் முன்னைய ஆட்சி காலத்தில் அதை ஒரு குறியீட்டு நடவடிக்கையாகச் செய்தது என்பது வேறு. ஆட்சி மாற்றத்தின் பின்னரும் அப்படிச் செய்வது என்பது வேறு. மாற்றத்தைக் குறித்து தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் ஐயங்களையும் அச்சங்களையும் விரக்தியையும் போக்குவது என்றால் இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.

நவீன தமிழ் வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய உயிரிழப்பை நினைவு கூர்வதற்கு 5 ஆண்டுகளுக்குப் பின்னராவது தமிழ் மக்கள் அனுமதிக்கப்படுவது என்பது மாற்றத்தின் மீது அவர்களுக்கு ஏதாவது ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தக் கூடும் என்பது மட்டுமல்ல பின்வரும் காரணங்களுக்காகவும் அது மிக அவசியமானது.
  1. இலங்கைத் தீவில் நல்லிணக்கத்தை நடைமுறைச் சாத்தியமான வழியில் சிந்திப்பதற்கு அது ஒரு தவிர்க்கப்படவியலாத நுழைவுப் புள்ளியாக இருக்கும்.
  2. அது ஒரு கூட்டுச்சிகிச்சை. வெளிப்படுத்தப்படாத கூட்டுத்துக்கமானது உளவியல் அர்த்தத்தில் தீங்கானது. கூட்டுக்காயங்களிலும், கூட்டு மனவடுக்களிலும் உழன்று கொண்டிருக்கும் ஒரு சமூகத்துக்குக் கூட்டு சிகிச்சை அளிப்பது பற்றி சிந்திக்கும் எல்லா உள மருத்துவ நிபுணர்களும் இதைச் சுட்டிக்காட்டுகிறார்கள். அதாவது, ஒரு சமூகத்தின் கூட்டுத்துக்கம் எவ்வளவுக்கு எவ்வளவு வெளிப்படுத்தப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது சிகிச்சைக்கு உதவியாக அமையும் என்று.
  3. அது ஒரு கூட்டுவழிபாடு. மத நம்பிக்கைகளுக்கூடாக சிந்திப்பவர்களை பொறுத்தவரை இது இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைவதோடு தொடர்புடையது. இறந்தவர்களுக்குரிய இறுதி கிரியைகளை அச்சமின்றி செய்வதன் மூலம் அந்த ஆத்மாக்கள் மட்டும் சாந்தியடைவதில்லை. ​அந்தத் துக்கத்தை அடைகாத்துக்கொண்டிருக்கும் அவர்களுடைய உறவுகளும் சாந்தியடைகிறார்கள் என்பது மதம் சார்ந்த ஒரு நம்பிக்கை.
  4. அது தமிழ் மக்களின் கூட்டு உரிமைகளில் ஒன்றாக இருக்கிறது என்பதும் அதை மேற்கு நாடுகளும் இந்தியாவும் பகிரங்கமாக நிராகரிக்கத் தயாரில்லை என்பதும்.
  5. அது ஒரு பண்பாடு. அதை ஏற்றுக்கொள்வது ஒரு அரசியல் நாகரீகம். மனிதகுலம் நாகரீகம் அடைந்ததற்குரிய முக்கிய குறிகாட்டிகளில் ஒன்றாக இறந்தவர்களை மதித்தல் காணப்படுகிறது. எனவே, தமிழ் மக்கள் மத்தியில் உள்ள அனைத்துத் தரப்பினரும் ஈழப்போரில் கொல்லப்பட்டவர்களையும் காணாமல்போகச் செய்யப்பட்டவர்களையும் நினைவு கூர அனுமதிக்கப்படும் போது அது முழு இலங்கை தீவின் அரசியலையும் நாகரீகமடையச் செய்யும்.
இலங்கைத் தீவின் நவீன அரசியலில் அது ஒரு புதிய அரசியல் நாகரீகத்தின் தொடக்கப்புள்ளியாகவும் அமையும்.

இலங்கையை சிங்கள நாடாக மாற்ற, தமிழர்களின் மீதமிருக்கும் கலாச்சார அடையாளங்களையும் அழிக்க முயற்சி

இலங்கையை சிங்கள நாடாக மாற்ற, தமிழர்களின் மீதமிருக்கும் கலாச்சார அடையாளங்களையும் அழிக்க முயற்சி

வீக்கெண்ட் லீடர் பத்திரிக்கை

Vol 2 Issue 31

வடக்கு இலங்கையில் தமிழ் பிரதேசங்களில் பயணம் செய்யும்போது, எவ்வாறு அந்த நிலத்தின் மக்கள்தொகை மாற்றம் நடந்திருக்கிறது என்பதை பார்க்கும்போது அதிர்ச்சியே மிஞ்சும். முழுக்க முழுக்க தமிழர்கள் வாழ்ந்த பிரதேசமாக இருந்து, தமிழ் கலாச்சாரம் பாரம்பரியத்தை சொல்லி வந்த நிலம் இன்று சிங்கள ஆக்கிரமிப்பில் புத்த சிலைகள் எங்கும் தென்படும் நிலமாக மாறிவருகின்றன. இங்கு புத்தசிலைகள், விகாரங்கள், ஸ்தூபங்களும் காணப்படும் அதே வேளையில் ஆங்காங்கே உடைந்த தமிழ் வீடுகளும், தமிழ் அகதிகள் தங்கும் புதியதாக கட்டப்பட்ட சேரிகளும் காணப்படுகின்றன. 

சிங்களமும், சிங்களமயமாக்கலும் இன்று வட இலங்கையின் தமிழ் பகுதிகளில் முக்கிய வார்த்தைகளாக ஆகியிருக்கின்றன. வவுனியா தொடங்கி, தமிழ் பகுதிகளுக்குள் நுழையும்போதே இது முகத்தில் அறைவது போல காணக்கிடக்கிறது.

aug5-11-lanka Kanagarayankulam Buddhist stupa
கனகராயன்குளத்தில் சமீபத்தில் கட்டப்பட்டுள்ள புத்த ஸ்தூபம்.
வடக்குக்குச் செல்ல நுழையும் ஒவ்வொருவரும் ஓமந்துரையை கடந்துதான் செல்லவேண்டும். இப்போது அந்த இடத்துக்கு சிங்கள பாணியில் ஓமந்தா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது A9 தேசிய சாலையில் ஒரு முக்கிய சாவடி. இந்த இடத்தில் கடந்து செல்லும் பயணிகளில் 90 சதவீதத்தினர் தமிழ் பேசுபவர்களே. ஆனால், யாராவது சிங்களம் தெரிந்த ஒருவரோடு சென்று சிங்கள ராணுவ வீரர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

தமிழ் பிரதேசங்கள் அனைத்திலும், சிங்கள வெற்றிகுரலை உணர முடிகிறது.
தமிழ் பகுதிகளில் ராணுவ முகாம்களும், சிங்கள ராணுவ வீரர்களும் எங்கும் காணக்கிடைக்கிறார்கள். 65619 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சுமார் 18.880 சதுர கிலோமீட்டரில் வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். மே 2009க்கு பிறகு ராணுவம் இந்த தமிழ் பிரதேசங்களில் சுமார் 7000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவை ஆக்கிரமித்துள்ளது.

சுமார் 2500 இந்து கோவில்களும் சுமார் 400 சர்ச்சுகளும் அழிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. சிங்கள ராணுவம் இந்த கோவில்களை கட்ட அனுமதி தருவதில்லை. ஆகையால் பெரும்பாலானவை சிதிலமடைந்து கிடக்கின்றன.
இதன் மறுபுறத்தில், இந்த பிரதேசங்களில் காணக்கிடைக்கும் சிங்களர்கள் சிங்கள ராணுவ வீரர்களே என்றாலும், சுமார் 2500 புத்த ஸ்தூபங்களும், சிலைகளும் தமிழர்கள் இடங்களில் உருவாக்கப்பட்டுள்ளன.

???????????????????????????????
முந்தைய தமிழ் போராளிகளின் தலைமையகமாக இருந்த கிளிநொச்சியில் இருக்கும் பெரிய புத்தர் சிலை.
மன்னார் மாவட்டத்தில் இருக்கும் புகழ்பெற்ற திருக்கேத்தீஸ்வரம் கோவிலுக்கு சுமார் 50 மீட்டர் தொலைவில் மஹாதோதா ராஜ மஹா விஹாரா என்ற புத்த விஹாரம் உருவாக்கப்பட்டுள்ளது. 

திருக்கேத்தீஸ்வரத்தின் பழைய பெயர் மஹாதோட்டம்.

வடக்கின் வசந்தம் என்ற பெயரில் (சிங்களத்தில் உதுரு வசந்தயா) தமிழ் பகுதிகளில் அரசாங்கம் வளர்ச்சி திட்டங்களை செய்வதாக பெரும் விளம்பரம் செய்யப்படுகிறது. 

உட்கட்டமைப்பு அபிவிருத்தி, மின்சாரம், நீர் வழங்கல் மற்றும் துப்புரவு, விவசாயம், நீர்ப்பாசனம், கால்நடை அபிவிருத்தி, நன்னீர் வளர்ச்சி திட்டம், உள்நாட்டு மீன் வளர்ப்பு, சுகாதாரம், திடக் கழிவு அகற்றுதல், கல்வி, விளையாட்டு, கலாசார அலுவல்கள் மற்றும் போக்குவரத்து ஆகியவை இந்த திட்டத்தின் கீழ் செய்யப்படுகின்றன என்று அரசாங்கம் கூறுகிறது.

இருப்பினும், இந்த திட்டங்களின் உண்மையான பயனாளர்கள் தமிழர்களாக இருப்பதில்லை. வேலையில்லா சிங்கள இளைஞர்களே இந்த திட்டங்களின் கீழ் சிங்கள ஒப்பந்தக்காரர்களால் வேலை தரப்படுகிறார்கள்.

எளிதாக ராணுவ வீரர்களை கொண்டு செல்வதற்காக சாலை வளர்ச்சிக்கு கொடுக்கப்படும் பணம் பெரும்பாலும் பாதுகாப்புப் படைகளுக்குத்தான் செல்கிறது ஏனெனில், அவர்கள் இதனை எளிதாக ராணுவ வீரர்களை இடப்பெயர்வு செய்வதற்கு என்று எடுத்துகொள்கிறார்கள்.

aug5-11-lanka signboard in sinhalaPuthukudiirrupu - oddusudan road indicating
புதுக்குடியிருப்பு பகுதியில் சிங்களத்தில் மட்டுமே இருக்கும் பலகை
போர்க்காலத்தில் தமிழ் பகுதிகளிலிருந்து சென்ற சிங்களர்கள் திரும்பி வருவதற்கு ஆரம்பிக்கப்பட்ட வீட்டு வசதி திட்டம் செட்டிக்குளம் பகுதியில் உள்ளது. இங்கிருந்து சென்ற அந்த 13 குடும்பங்கள் திரும்பி வந்தால், வரவேற்கலாம். ஆனால், இங்கே புதிய 75 சிங்கள குடும்பங்கள் வந்திருக்கின்றன.

ஏற்கெனவே 165 சிங்கள குடும்பங்கள் கொக்கச்சாங்குளத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இப்போது அதன் பெயர் கலபோவாஸேவா.
மது ரோடு அருகே சிங்கள மீடியம் பள்ளி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அருகே இருக்கும் நூற்றுக்கணக்கான தமிழ் பள்ளிகள் சிதிலமடைந்து கிடக்கின்றன.

அங்கே இருக்கும் தமிழ் மக்களின் செய்திகள்படி பார்த்தால், தெற்கிலிருந்து வரும் சிங்களர்கள் ராணுவத்தின் அனுமதியுடன் தமிழர்கள் பகுதியில் உள்ள காட்டுவளத்தை சூறையாடிக்கொண்டிருக்கிறார்கள். 

சிங்கள பௌத்த அகழ்வாராய்வாளர்கள் இந்த தமிழ்நிலங்களில் சிங்களமயமாக்கும் வேலையில் ஈடுபட்டு வருவதாக மக்கள் குறைகூறுகிறார்கள். முன்னால் இவர்களே புதைத்து வைத்த புத்த சிலைகளை தோண்டிஎடுத்து வருகிறார்கள். இந்த நிலங்களை சிங்கள பௌத்த நிலங்கள் என்று அறிவிக்கவே இந்த வேலைகளில் ஈடுபட்டு வருவதாக குறை கூறுகிறார்கள்.

ஒரு சில பழைய சிங்களம் அடையாளம் பலகைகள் திசைகளில் குறிக்கும் இடங்களில் பெயர்களை அங்கு, இன்று ஒரு தமிழ் பகுதிகளில் புதிய சிங்களம் பெயர் / திசையில் பலகைகள் சுத்த எண் மணிக்கு dumbstruck உள்ளது.
முன்பு தேவைக்காக இருந்த ஒரு சில சிங்கள பலகைகளை ஒப்பிட்டு பார்த்தால், இன்று தமிழ் பிரதேசங்களில் எங்கங்கும் கிடக்கும் சிங்கள பலகைகள் அதிர்ச்சியையே தரும்.

aug5-11-lanka military outpost in puthu with name board in engl and sinhala
புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள இலங்கை பாதுகாப்பு படைகள் முகாமில் சிங்களத்திலும் ஆங்கிலத்திலுமே உள்ளது.
முல்லைத்தீவு, மற்றும் வடக்கில் உள்ள பல இடங்களில் தமிழர்கள் கடலுக்குள் செல்வது தடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தெற்கிலிருந்து வரும் சிங்கள மீனவர்கள் இவர்களின் இடங்களில் மீன்பிடிப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்கும், மற்ற நிறுவனங்களுக்கும் கொடுக்கும் கொடுக்கும் மனுக்கள் 2009இலிருந்து சிங்களத்திலேயே இருக்கவேண்டும் என்று கூறப்படுவதாக மக்கள் கூறுகிறார்கள்.

முன்பு தமிழ் போராளிகளின் நிர்வாக தலைநகரமாக இருந்த கிளிநொச்சி நகரத்தின் மையத்தில் சிங்கள பெயர்களே தெருக்களுக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. மஹிந்த ராஜபக்‌ஷே மாவாதா, அலுத் மாவாதே (புது ரோடு) ஆகியவை.

A9 சாலையின் அருகே கனகராயன்குளத்தின் அருகே உள்ள மூன்று சாலைகளும் சிங்கள பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. கோசலா பெரேரா ரோடு, அனுரா பெரேரா ரோடு, ரெவ யதிரவனா விமலா தேரோ சாலை. முதல் இரண்டு பெயர்களும் அந்த போரில் இருந்த போர்வீரர்களின் பெயர்கள். கடைசி ஒரு புத்த சாமியாரின் பெயர்.

இவை அனைத்தும் எங்கே கொண்டு செல்லும்? காலம் மட்டுமே பதில் சொல்லும்.

பிறநாடுகள் மீது போர்தொடுக்க யப்பான் முனைவு -பதட்டத்தில் அண்டைய நாடுகள் -மூன்றாம் உலக போர் வெடிக்குமா ..?

ஆக்கிரமிப்புக்கு அதிகாரமளிக்கின்றது ஐப்பானின் அமைச்சரவை !! பிராந்திய ரிதியில் பதட்டம் !!!

அந்நிய மண்ணில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் புதிய வகை சட்டமூலங்களுக்கு ஜப்பான் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த முடிவு பிரதமர் ஷின்சோ அபே தலைமையில் நேற்று நடைபெற்ற ஜப்பான் அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்டுள்ளது.

இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு அமைச்சர்கள் பரிபூரண ஆதரவு வழங்கியுள்ளனர். இதேவேளை ஐப்பானின் தற்போதைய பொருளாதார நிலைமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

2ஆம் உலகப் போருக்கு பின்னர் அந்நிய மண்ணில் ஜப்பான் இராணுவ நடவடிக்கைகளை இதுவரை மேற்கொண்டதில்லை. இந்நிலையில், அந்நிய மண்ணில் முப்படைகளையும் ஒருங்கிணைத்த இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வகை செய்யும் 2 சட்டமூலங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

இந்த இராணுவ நடவடிக்கையின் நோக்கம் என்ற என்று கூறப்படாத நிலையில் காலத்தின் தேவை கருதி இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக ஜப்பான் அரசாங்கம் கூறியுள்ளது.

japan-military
இதேவேளை, ஜப்பானின் இந்த நடவடிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள சீனா, வரலாற்றுத் தவறுகளிடமிருந்து ஜப்பான் இன்னமும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்று கூறியுள்ளதுடன் தேவையற்ற இராணுவ நடவடிக்கைகளை முறியடிக்க தங்களால் முடியும் என்றும் கூறி எச்சரித்துள்ளது.

இந்த முடிவுகளும் பேச்சுக்களும் பிராந்திய ரீதியில் நாடுகளிடையே பெரும் பதட்டத்தை தோற்றுவித்துள்ளது

ரஷ்ய தயாரித்த ஆமட்டா டாங்கி -போட்டுடைத்த இரகசியத்தால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உலகநாடுகள்


அமைதியாக இருப்பினும் எந்தவேளையிலும் எதிரியை அடித்து துவைத்து நாசம் பண்ணுவதில் அக்கறை கொள்ளுவதில் உலக நாடுகள் தங்கள் ஆர்வத்தை விட்டுவிடவில்லை.

இந்த நிலையில் இராணு டாங்கிகளில் பெரும் இரகசியமாக இருந்துவருகின்ற ரஷ்ய தயாரிப்பான ஆமட்ட இராணுவ பிரதான சமர் டாங்கி பற்றிய படங்களை டாங்கியையும் வெளியே விட்டுள்ளது ரஷ்யா.

இவை கவசங்களை பிய்த்து எறியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன. மேலும் 152 மில்லி மீற்றர் விட்டம் கொண்ட பீரங்கி பொருத்தப்பட்ட ஆமட்டா டாங்கி அறிமுகமாகின்றது.

ஆமட்டா வகை இராணுவ டாங்கிகள் அறிமுகமான நிலையில் அவற்றை களத்தில் பாவித்து சண்டை செய்யும் வண்ணம் எந்த சந்தர்ப்பமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் அந்த ஆமட்ட ரி 14 வகையே மிகவும் தரமானதும் இராணுவ சம பலத்தில் சர்வதேச அளவில் முன்னிற்கின்றது என்றும் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இது இவ்வாறு இருக்க ஏற்கனவே இருப்பதனை விட மேலும் மேம்படுத்தப்பட்ட வடிவம் மாற்றியமைக்கப்பட்ட அடுத்த வகை ஆமட்டாவை ரஷ்யா வெளியிடவுள்ளது. இந்தவகையில் இந்த புதிய வகை பீரங்கி உச்சக்கட்ட பாதுகாப்பை தருவல்ல மீற்றர் கணக்கிலான இரும்பையும் துளைத்து எதிரியை துவம்சம் செய்யும் என்று ரஷ்யா பயமுறுத்துகின்றது.

றிமோட் கண்ரோலர் மூலம் இயக்கப்படும் வண்ணம் அமைந்த இந்த டாங்கியை கடந்த வாரம் 9 ஆம் திகதி கொண்டாடப்பட்ட இரண்டாம் ஆண்டின் 70 ஆம் ஆண்டு வெற்றி விழாவில் முதன் முறையாக களம் இறக்கி காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலையில் உலக நாடுகளில் இதுவே சிறந்த படைப்பு என்றும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளிடம் இந்த வகை டாங்கி எந்த நாட்டிடமும் இல்லை என்றும் அடித்துக்கூறுகின்றது ரஷ்யா

13
14.si

Wednesday 13 May 2015

மைத்திரியை கொலை செய்ய மஹிந்த முயற்சி! சதி நடவடிக்கை அம்பலம்

சிறிலங்காவின் உயர்மட்ட தலைவர் ஒருவரை கொலை செய்ய சதித்திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.


 
இது குறித்து சர்வதேச புலனாய்வு அமைப்பொன்று, சிறிலங்கா அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
 
சர்வதேச புலனாய்வு பிரிவின் தகவல்களுக்கு அமைய மஹிந்த அரசாங்கத்தில் பல மோசடிகளுடன் தொடர்புபட்ட நபர்கள், சதித்திட்டத்தின் பின்னணியில் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.
 
ஊழல் மோசடியில் தொடர்புபட்ட பாதுகாப்பு பிரிவு மற்றும் நபர்களின் நல்லாட்சி அரசாங்கத்தின் வருகையால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் இந்த சதித் திட்டத்தினை மேற்கொண்டிருப்பதாக சர்வதேச புலனாய்வு தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
 
சிறிலங்காவின் சமகால ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக,  புலனாய்வு அமைப்பு எச்சரித்துள்ளது. 
 
மஹிந்த ராஜபக்ஷவின் விசுவாச இராணுவ அதிகாரிகளால் இந்த சதித்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான ஆதாரங்கள் இருப்பதாக சர்வதேச புலனாய்வு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. 
 
இதேவேளை, மைத்திரி அரசாங்கத்தினால் வகுக்குப்படும் அனைத்து திட்டங்கள் பற்றி, உடனடியாக ராஜபக்ஷ சகோதரர்களுக்கு அறிவிக்கப்படுகிறது. அரசாங்க அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகளால் இந்த தகவல்கள் பரிமாற்றம் செய்யப்படுகிறது.
 
இது தொடர்பில் சரியான பாதுகாப்பு நடவடிக்கை பேண தவறும் பட்சத்தில், எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்பது நிச்சயம் என சர்வதேச புலனாய்வு சேவை எச்சரித்துள்ளது.
 
கடந்த ஜனவரி 8ம் திகதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைவார் என முன்னதாக இந்த சர்வதேச புலனாய்வு சேவை குறிப்பிட்டிருந்தாக கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.
 
அண்மையில் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற கூட்டமொன்றில், நாமல் ராஜபக்ஷவின் மெய்பாதுகாவலர் ஒருவர் ஆயுதங்களுடன் சென்றமையால் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.
 
குறித்த மெய்பாதுகாவலர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதாவால் பா.ஜ.க.வில் 'தண்ணி தெளித்துவிடப்படும்' சு.சுவாமி

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை அ.தி.மு.க. தொண்டர்கள் எத்தனை உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்களோ கிட்டத்தட்ட அதே மனநிலையில்தான் பிரதமர் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் இருக்கின்றனர்.. 
 
 
இதனால்தான் ஜெயலலிதாவை வரிசை கட்டிக் கொண்டு அவர்கள் அனைவரும் வாழ்த்தினார்கள்... இப்படி ஜெயலலலிதாவுடன் பாரதிய ஜனதா தலைவர்கள் நெருக்கம் காட்டுவதால் சொத்துக் குவிப்பு வழக்கை கையிலெடுத்துக் கொண்டு நீதிமன்றப் படிகளேறும் சுப்பிரமணியன் சுவாமி அக்கட்சிக்குள்ளேயே தண்ணி தெளித்துவிடப்படுகிற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். 

 லோக்சபாவில் பெரும்பான்மையாக இருந்தாலும் ராஜ்யசபாவில் சிறுபான்மையாக இருக்கும் தங்களுக்கு அ.தி.மு.க. ஆதரவு தேவை என்பதை பாரதிய ஜனதா மேலிடம் உணர்ந்தே செயல்பட்டு வருகிறது. இதனால்தான் அ.தி.மு.க.வை விமர்சிப்பதை விட நெருக்கம் பாராட்டுவதில் மும்முரமாக இருக்கிறது பா.ஜ.க. தமிழக பாரதிய ஜனதா தலைவர்கள் என்னதான் விமர்சித்தாலும் அதை அண்ணா தி.மு.க. மேலிடமும் கண்டுகொள்வதில்லை.. பா.ஜ.க.வும் கவலைப்படுவதில்லை..

இதனை பகிரங்கப்படுத்தும் வகையில்தான் ஜெயலலிதா விடுதலையான உடன் பிரதமர் மோடி உள்ளிட்ட அமைச்சர்கள் ஜெயலலிதாவை வாழ்த்தினர். அதே நேரத்தில் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்குக்கு காரணமாக இருந்த சுப்பிரமணியன்சுவாமியோ, நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் என்று சொல்லியிருந்தார்..

உண்மையில் அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்ததுதான் அதிர்ச்சியாக இருந்திருக்க முடியும்.. அதனால்தான் ஜெயலலிதாவை விடுதலை செய்த தீர்ப்பை எதிர்த்து உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதில் அப்படி ஒரு பம்மோ பம்மென பதுங்கினார் சுவாமி.

ஏனெனில் ஜெயலலிதாவை எதிர்த்து முன்னைப் போல தீவிரமாக போராடினால் இப்போது பாரதிய ஜனதாவில் இருக்கும் நண்பர்கள் பலரும் எதிரிகளாகிவிடக் கூடும்.. அப்படியே தன்னை தண்ணிதெளித்து அனாதையாக்கிவிடுவார்கள் என்ற அச்சம் சுப்பிரமணியன் சுவாமிக்கு இருக்கவே செய்யும்... இதனாலேயே மிகவும் உஷாராக ஜெயலலிதா விவகாரத்தில் பதுங்கிக் கொண்டிருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.

Tuesday 12 May 2015

பிரான்ஸ் இராணுவ மீள்ஆயுதமயமாக்கல் திட்டத்திற்கு பில்லியன்கள் செலவு செய்ய இருக்கிறது

y Kumaran Ira
4 May 2015 




புதன்கிழமை அன்று ஜனதிபதி எலிசே அரண்மனையில் நடைபெற்ற பாதுகாப்பு கூட்டத்திற்குப் பின்னர், பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலண்ட் பாதுகாப்பு செலவினங்களில் ஒரு பாரிய அதிகரிப்பை அறிவித்தார். வெளிநாடுகளில் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் பிரான்ஸ் முழுவதும் துருப்புக்ளை நிலைநிறுத்துவதை உள்ளடக்கிய பணியைக் கவனிக்க, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு பாதுகாப்பு செலவினங்களில் கூடுதலாக 3.8 பில்லியன் யூரோக்களை அவர் அறிவித்தார்

ஆயுதப்படைகளின் தலைவர் என்ற வகையில் தான் பேசுவதாக அழுத்தமாகக் குறிப்பிட்டு, “பல முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்றார். 31.4 பில்லியன் யூரோ நடப்பு பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டம், அடுத்த ஆண்டு கூடுதல் 600 மில்லியன் யூரோக்கள் சேர்த்து அதிகரிக்கப்படும், இது 2019ல் 1.5 பில்லியன் யூரோக்கள் அளவுக்கு சென்றடையும். ஹோலண்டின் படி, “நான்கு ஆண்டுகளுக்கு கூடுதலாக உரிமையாக்கிக் கொள்வதற்கு 3.8 யூரோக்களை ஒதுக்குவதற்கு” 2014-2019 இராணுவ செலவின சட்டத்தை மீள்பார்வை செய்ய பாரிஸ் தயாரிப்பு செய்துவருகிறது.

இந்த கூடுதல் இராணுவ செலவானது, ஹோலண்டின் சோசலிஸ்ட் கட்சி (PS) யால் முன்னெடுக்கப்படும் சிக்கனக் கொள்கைகள் மற்றும் சமூகச் செலவினங்களில் வெட்டுக்கள் மூலம் தொழிலாள வர்க்கத்தை மேலும் சூறையாடுவதிலிருந்து பெறப்படும். ஹோலண்ட் இராணுவ செலவின அதிகரிப்பை ஒரு பெரும் முயற்சி, பிரதான முயற்சியும் கூடஎன்று குறிப்பிட்டார்.

வியாழனன்று நிதி அமைச்சர் மிஷேல் சபான் (Michel Sapin) சுகாதாரப் பராமரிப்பு மற்றும் வீட்டுத்திட்டங்களில் வெட்டுக்களை அறிவித்தார். அவர் Europe1 வானொலியில், “பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுப்பது நியாயபூர்மாதாகும்என்றார்.

குடும்பங்கள் மற்றும் மாணவர்களுக்கான உதவிக்கொடைகள் அதேபோல வீடு கட்டுபவர்களுக்கான ஊக்கத்தொகைகள் உள்ளடங்கலான, வீட்டுவசதி வரவு-செலவு திட்டம் குறைக்கப்பட இருக்கிறது, அதற்குப் பொறுப்பாய் இருக்கும் அமைச்சகம் அதன் வளங்களை சிறந்த முறையில் ஒதுக்கீடு செய்யுமாறு கேட்கப்பட்டிருக்கிறது என்று, நிதி அமைச்சகத்தை மேற்கோள்காட்டி புளூம்பேர்க் குறிப்பிட்டது. இந்த ஆண்டு பெரும் செலவின வெட்டுக்களை ஏற்கனவே எதிர்கொண்டு வரும் சுகாதாரப் பராமரிப்பு, 2016ல் செலவினங்களில் வெட்டுவதற்கான முயற்சிகளில் மையமாக இருக்கும்.

இந்த மசோதா பிரெஞ்சு மக்களை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் என்று ஹோலண்ட் கூறுவதன் மூலம், இரண்டாவது உலகப் போருக்குப் பிந்தைய, பிறரால் மிகவும் விரும்பப்படாத பிரெஞ்சு ஜனாதிபதியாக அவரை ஆக்கிய, யுத்தம் மற்றும் சிக்கனக்கொள்கை பற்றிய அவரது பிற்போக்கு வேலைத்திட்டத்தை நியாப்படுத்த முயன்றார். இந்த ஜனவரியில் சார்லி ஹெப்டோ துப்பாக்கிச்சூட்டிற்குப் பின்னர் பிரான்சுக்குள்ளேயே 10,000 துருப்புக்களை நிறுத்தியதை மறைமுகமாக சுட்டிக்காட்டினார்.

ஹோலண்ட் இராணுவ ஆட்திறன் வளங்களையும் கூட விரிவுபடுத்துகிறார். ஹோலண்டின் படி, சார்லி ஹெப்டோ தாக்குதலுக்குப் பின்னர் பிரான்ஸ் நெடுகிலும் நிறுத்திய 10,000 துருப்புக்களில் 7000 சிப்பாய்கள் நிரந்தரமாக நிறுத்தப்பட இருக்கிறார்கள். முன்னர் இராணுவத்தில் அகற்றப்பட இருந்த 18,500 வேலைகள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் துருப்புக்களை இறக்குவதை ஊக்கப்படுத்தும்பொருட்டு நிறுத்திவைக்கப்பட்டு இருக்கிறது.

மில்லியன் கணக்கான வேலையற்ற இளைஞர்களுக்கு, ஆளும் வர்க்கம் ஒன்றும் வழங்காத நிலையின் கீழ், பாரிஸ் அதன் ஏகாதிபத்திய போர்களில் பீரங்கித் தீனியாக அவர்களை பயன்படுத்த தயாரிப்பு செய்து வருகிறது. எந்த தகுதிகளும் இல்லாமல் 18 முதல் 25 வயதிற்கு இடையிலான இளம் வயதினருக்கான தன்விருப்பத்தோடு இராணுவச்சேவைஎன்பதை ஹோலண்ட் முன்னிலைப்படுத்துகிறார். அரசாங்கம், தன்னார்வ இராணுவ சேவை”  மையங்கள் 7 நிறுவுவதன் மூலமாக அடுத்த ஆண்டு சுமார் 2000 இளைஞர்களை திரட்டக்கூடியதாக இருக்கும் என அண்மையில் அறிவித்தது.

அவை பிரெஞ்சு மக்களை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் மற்றும் வெளிநாடுகளில் இராணுவத் தலையீடுகளை முன்னெடுப்பதற்கு அனுமதிக்கும் என்று கூறி ஹோலண்ட் இக்கொள்கைகளை நியாயப்படுத்தினார்.

நான் இந்த தேர்வை செய்தேன், ஏனெனில் அது பிரான்ஸ் பற்றியது, அதனை பாதுகாத்தல், அதன் பாதுகாப்பு பற்றியது, நான் அறிவேன் பிரெஞ்சு மக்கள், அவர்கள் எதிர்காலத்தில் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்க விரும்பினால், அவர்கள் கட்டாயம்  பாதுகாப்பாக இருப்பதாக மற்றும் எங்கும் பாதுகாக்கப்பட்டிருப்பதாக கட்டாயம் உணர வேண்டும். இந்த முடிவினை நியாயப்படுத்தும் ஒரு காரணம், அது பிரெஞ்சு மக்களுக்கு நம்பிக்கையை வழங்குகிறது.... அவர்கள் இராணுவத்தில், முடிவுகளை எடுக்கும் அரசியல் அதிகாரிகளில் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர், ஆனால் இந்த நோக்கங்களுக்கு சேவைசெய்ய தேவையான செலவு செய்யப்படுகிறது என்று அவர்கள் கட்டாயம் அறிய வேண்டும்என்று ஹோலண்ட் கூறினார்.
எமது துருப்புக்களை வெளியில் நிறுத்துதலானது, உயர்த்தப்பட்ட மட்டத்தில் கட்டாயம் வைக்கப்பட வேண்டும் என்று நான் விவாதித்தேன்என்று மேலும் அவர் கூறினார்.

தனது அரசாங்கத்தின் மீது பிரெஞ்சு மக்களின் நம்பிக்கையை ஊக்குவிப்பதற்குத்தான் இராணுவத்தை கட்டுவதாக கூறும் ஹோலண்ட்டின் கூற்று ஒரு அரசியல் மோசடி ஆகும். ஹோலண்ட் நிர்வாகத்துடன் தொழிலாள வர்க்கத்திற்கு உள்ள கோபம் மற்றும் வளர்ந்துவரும் சமூக அதிருப்தி தொடர்பாக பிரெஞ்சு ஆளும் வர்க்கம் கிலி அடைந்திருக்கிறது. தனது முன்னாள் காலனித்துவ பேரரசில், தன் ஏகாதிபத்திய யுத்தங்களை வெடிப்புறச்செய்யும் அதேவேளை, சமூக அதிருப்தியை அச்சுறுத்தவும் ஒடுக்கவும் வடிவமைக்கப்பட்ட போலீஸ் அரசு நடவடிக்கைகளை, தீவிரமாக விரிவுபடுத்தி வருகிறது.

சிரியா, லிபியா மற்றும் ஈராக் உட்பட, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தலைமையிலான யுத்தங்களில் பங்கெடுத்துக்கொண்டு, பிரான்ஸ் முன்னாள் பிரெஞ்சு காலனிகளான மாலி மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரசு போன்றவற்றிலும் யுத்தத்தைத் தொடுத்து வருகிறது. பிரான்சின் கடல்கடந்த நடவடிக்கைகளில் சுமார் 10,300 துருப்புக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
சோசலிஸ்ட் கட்சியின் மீளஆயுதமயப்படுத்தும் திட்டமானது, சர்வதேசரீதியாக தொழிலாள வர்க்கத்திற்கு சாத்தியமுள்ள கடும்அபாயங்களை முன்வைப்பதுடன், இது உலகம் முழுவதும் ஏகாதிபத்திய சக்திகளால் முன்னெடுக்கப்படும் இராணுவவாதத்திற்கும் யுத்தத்திற்கும் பரந்த அளவில் திரும்புதலின் ஒரு பகுதியும் ஆகும். அது ஒரு புரட்சிகர சோசலிச முன்னோக்கின் அடிப்படையில், யுத்தத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒன்றிணைந்த சர்வதேச போராட்டத்தின் மூலம் மட்டுமே தீர்க்கப்பட முடியும்.

பிரதான ஏகாதிபத்திய சக்திகளுக்கிடையிலான பதட்டங்கள், ஐரோப்பிய மற்றும் உலக மக்களை ஒரு அழிவுகரமான யுத்தத்தில் மூழ்கடிக்கும் அச்சுறுத்தலைக் கொண்டிருக்கிறது. கடந்த பெப்ரவரியில், கியேவில் நடைபெற்ற நேட்டோ ஆதரவு பாசிச ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப்பின்னால், உக்ரேனில் வெடித்த உள்நாட்டுயுத்தத்தின் மீதாக ஐரோப்பாவானது ரஷ்யாவுடன் ஒரு மோதலுக்குள் இறங்கி வருகிறது, இந்த மோதல் முழு யுத்தத்திற்குஇட்டுச்செல்ல முடியும் என்று ஹோலண்ட் கூறுகிறார். “ஆசியாவை நோக்கிய முன்னெடுப்புஎன்பதன் கீழ், சீனாவை நோக்கிய ஒரு யுத்த உந்தலை வாஷிங்டனானது தூண்டி விடுகிறது, மற்றும் பிரெஞ்சு ஊடகங்கள் இந்தியப் பெருங்கடலில் உள்ள மத்திய கிழக்கிலிருந்து சீன எண்ணெய் இறக்குமதிகளை தடுப்பதற்கு அழைப்பு விடுக்கின்றன.

இருபதாம் நூற்றாண்டின் இரண்டு உலகயுத்தங்களில் வரலாற்று ரீதியாக வேரூன்றி உள்ள, பிரதான ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான பதட்டங்கள், கவனிக்கத்தக்க வகையில் ஜேர்மன் மற்றும் பிரான்சுக்கு இடையில் வெடித்து வருகின்றன. பிரான்சில் ஐரோப்பிய ஒன்றிய-எதிர்ப்பு தேசிய முன்னணியின் நவ-பாசிஸ்டுகள் எழுந்துவருகையில், பேர்லின் பரந்த மறு ஆயுதமயமாக்கல் வேலைத்திட்டத்தை தொடங்கி இருப்பதானது, பிரெஞ்சு ஆளும் தட்டால் பதட்டத்துடன் கவனிக்கப்படுகிறது.

ஜேர்மனி அதன் பாதுகாப்பு வரவு-செலவு திட்டத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் 6.2 சதவீதமாக ஊக்குவிப்பதற்கு, 2019 அளவில் பாதுகாப்பு செலவினங்களை 35 பில்லியன் யூரோக்களுக்கும் அதிகமாக அதிகரிப்பதற்கு மற்றும் விரிவானமுறையில் அதன் தரைப்படையை நவீனப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. 2010லிருந்து 2014 வரை, பேர்லின் பாதுகாப்பு செலவினத்தை 7 சதவீதமாக 32.4 பில்லியன் யூரோக்களாக உயர்த்தி இருக்கிறது. அதேவேளை பிரெஞ்சு பாதுகாப்பு செலவினம் அதே காலகட்டத்தில் 2.5 சதவீதம் குறைவாக, 31.4 பில்லியன் யூரோக்களாக ஆகியுள்ளது.

ஜேர்மன் மீள் ஆயுதமயமாக்கல் தொடர்பாக பிரெஞ்சு ஊடகத்தின் கவலைகள் பற்றிய ஆரம்ப விமர்சனங்கள் இடம்பெறத்தொடங்கியுள்ள. அதுவும் குறிப்பாக, பேர்லின் மேலாதிக்க பாத்திரம் வகிக்கவுள்ள ஐரோப்பிய ஒன்றிய இராணுவத்தை உருவாக்குவதற்கான முன்மொழிவுக்கு சாதமாக பேர்லின் பதிலிறுத்த பின்னர், இவை இடம்பெறத் தொடங்கின. Le Monde இந்த கொள்கையை ஐரோப்பாவில் ஜேர்மன் மேலாதிக்கத்திற்கான திட்டங்களை மறைப்பதற்கான ஒரு முயற்சி என தாக்கியது. அது பேர்லின் கணக்கீடுகளை பின்வருமாறு விவரிக்கிறது: “நாம் மீள் ஆயுதமயமாக்குகையில் அயலவர்களைப் பார்த்து பீதியுறக் கூடாது. எமது மீள் ஆயுதமயமாக்கலுக்கும் ஐரோப்பிய பூச்சு கொடுப்பது சிறந்தது.” ஆயினும், பிரெஞ்சு கொள்கை வகுப்பாளர்கள் ஜேர்மனியரை சீருடையில் காண்பதற்கு அவசரப்படவில்லைஎன மேலும் கூறியது.

ஹோலண்ட் இன் கொள்கை தெளிவாக காட்டுகிறவாறு, ஐரோப்பாவில் ஆயுதப்போட்டியை தொடங்குவதில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் பிரதிபலிப்பானது பேரழிவுடன் மனிதகுலத்தை அச்சுறுத்துகிறது.