சிறிலங்காவின் உயர்மட்ட தலைவர் ஒருவரை கொலை செய்ய சதித்திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சர்வதேச புலனாய்வு அமைப்பொன்று, சிறிலங்கா அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
சர்வதேச புலனாய்வு பிரிவின் தகவல்களுக்கு அமைய
மஹிந்த அரசாங்கத்தில் பல மோசடிகளுடன் தொடர்புபட்ட நபர்கள்,
சதித்திட்டத்தின் பின்னணியில் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.
ஊழல் மோசடியில் தொடர்புபட்ட பாதுகாப்பு பிரிவு
மற்றும் நபர்களின் நல்லாட்சி அரசாங்கத்தின் வருகையால் வாழ்வாதாரம்
பாதிக்கப்படுவதால் இந்த சதித் திட்டத்தினை மேற்கொண்டிருப்பதாக சர்வதேச
புலனாய்வு தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
சிறிலங்காவின் சமகால ஜனாதிபதி மைத்திரிபால
மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு உயிர் அச்சுறுத்தல்
இருப்பதாக, புலனாய்வு அமைப்பு எச்சரித்துள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவின் விசுவாச இராணுவ அதிகாரிகளால்
இந்த சதித்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான ஆதாரங்கள்
இருப்பதாக சர்வதேச புலனாய்வு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, மைத்திரி அரசாங்கத்தினால்
வகுக்குப்படும் அனைத்து திட்டங்கள் பற்றி, உடனடியாக ராஜபக்ஷ சகோதரர்களுக்கு
அறிவிக்கப்படுகிறது. அரசாங்க அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகளால் இந்த
தகவல்கள் பரிமாற்றம் செய்யப்படுகிறது.
இது தொடர்பில் சரியான பாதுகாப்பு நடவடிக்கை பேண
தவறும் பட்சத்தில், எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்
என்பது நிச்சயம் என சர்வதேச புலனாய்வு சேவை எச்சரித்துள்ளது.
கடந்த ஜனவரி 8ம் திகதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச
தோல்வியடைவார் என முன்னதாக இந்த சர்வதேச புலனாய்வு சேவை
குறிப்பிட்டிருந்தாக கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.
அண்மையில் மைத்திரிபால சிறிசேன தலைமையில்
நடைபெற்ற கூட்டமொன்றில், நாமல் ராஜபக்ஷவின் மெய்பாதுகாவலர் ஒருவர்
ஆயுதங்களுடன் சென்றமையால் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.
குறித்த மெய்பாதுகாவலர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment