Friday 8 May 2015

இரத்தம் சிந்தாப் புரட்சி மூலம் வீழ்த்தப்பட்ட மஹிந்த!

இரத்தம் சிந்தாப் புரட்சி மூலம் ஏகாதிபத்திய ராஜபக்ஷ ஆட்சியை தோற்கடிக்க முடிந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 
டியுனீசியா, எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் இரத்தம் சிந்தி, உயிரிழப்புகள் மூலம் ஏகாதிபத்திய தலைவர்களின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு அரபு வசந்தம் உருவானது என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
 
கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற வெற்றியை உலக நாடுகள் வியப்புடன் நோக்குகின்றன. ஏனெனில் மக்கள் புரட்சியின் மூலம் ஏகாதிபத்திய ராஜபக்ஷவை தோற்கடிக்க முடியாது என்றிருந்த நிலையில், தேர்தலின் மூலம் ராஜபக்ஷ ஆட்சியை தோற்கடித்துள்ளனர்.
 
மத்திய கிழக்கில் இடம்பெற்ற அரபு வசந்தம் அந்நாடுகளில் பாரிய எதிர்ப்புக்கு மத்தியிலே ஆட்சி மாற்றம் இடம் பெற்றது. இரத்தம் சிந்தப்பட்டது. பொதுமக்கள் கொல்லப்பட்டனர். கல்வீச்சு, துப்பாக்கிச்சூடு, போராட்டத்துக்கு மத்தியில் அரபு வசந்தம் உருவானது. ஆனால், சிறிலங்காவில் அவ்வாறான எந்தவொரு சம்பவங்களும் இடம்பெறாமல் ஏகாதிபத்திய ராஜபக்ஷ ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
 
இந்த வெற்றியானது தனியொரு கட்சியினால் ஏற்படுத்தப்படவில்லை. சகல கட்சிகளினதும் கூட்டிணைப்பினால் பெற்றுக் கொள்ளப்பட்டதாகும். ஐக்கிய தேசியக்கட்சிக்கோ, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கோ உரித்தானதல்ல. இது அரசியல் கட்சி ஒன்றுக்கு கிடைத்த வெற்றியல்ல. மாற்றமாக அரசியல் செயற்பாடுகளினால் பெறப்பட்ட வெற்றியாகும்.
 
அடாவடித்தனம், ஆள்மாறாட்டம், அரச பயங்கரவாதம் உட்பட சகல சக்தி களையும் பயன்படுத்தி ஏகாதிபத்திய ஆட்சி நடத்திய மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க இந்நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு தேர்தலின் மூலம் தோற்கடித்துள்ளார்கள்.
 
வரலாற்றில் முதல் தடவையாக 83 வீதமான மக்கள் வாக்களித்து இந்நாட்டு அரசியலில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார்கள். தமிழர் பிரதேசங்களில் 90 வீதமான மக்கள் வாக்களித்துள்ளார்கள். மஹிந்த ராஜபக்ஷ பிறந்த தேர்தல் தொகுதியிலும் தோல்வியடைந்தார். பல்வேறு சவால்கள், அர்ப்பணிப் புகளுக்கு மத்தியில் இந்த வெற்றி பெறப்பட்டுள்ளது. 63 இலட்சம் மக்கள் வாக்களித்து ஏகாதிபத்திய ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தார்கள் என தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment