போஸ்டர் போடுவதிலும், அதில் வித்தியாசமான வாசகங்களை இடம் பெறச்
செய்வதிலும் நமது திராவிடக் கட்சிகளுக்கு நிகர் அவர்கள்தான்.
இப்படியெல்லாம் வசனம் எழுத அவர்களுக்கு யார்தான் ஐடியா கொடுக்கிறார்களோ..
அப்படி இருக்கின்றன ஒவ்வொன்றும்.
ஜெயலலிதாவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தண்டனை விதித்துத்
தீர்ப்பளித்தபோது விதம் விதமான வாசகங்களுடன் போஸ்டர் போட்டு தமிழகத்தின்
மானத்தை அகில உலக அளவில் வாங்கிய பெருமைக்குரியவர்கள் அதிமுகவினர்.
காவிரியை வச்சுக்கோ அம்மாவைத் திருப்பிக் கொடு என்று கேட்டு காவிரி
விவசாயிகளின் மனதில் ரத்தம் கசிய விட்டவர்கள் இந்த அரசியல்வாதிகள்.
இந்த நிலையில் தற்போது அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலையாகி
விட்டார். விரைவில் முதல்வராகப் பதவியேற்கப் போவதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து விதம் விதமாக தினுசு தினுசாக போஸ்டர்களைப் போட்டு பயமுறுத்தி
வருகின்றனர் அதிமுகவினர்.
மதுரையில் நீதி தேவதைக்கு நீதி வழங்கிய நீதி மானே என்ற பெயரில் நீதிபதி
குமாரசாமியை வாழ்த்தி போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
அதே மதுரையில், சிங்கம்லே என்ற தலைப்பில் ஒரு போஸ்டர் போட்டுள்ளனர்
அமைச்சர் செல்லூர் ராஜுவின் ஆதரவாளர்கள்
அதே கோஷ்டி அந்த சிங்கம் படத்தில் வரும் வசனத்தை உல்டா செய்து போட்டு
இன்னும் உசுப்பேத்தியுள்ளது.
அந்த வசனம் இதுதான்..
"சிங்கத்தைக் காட்டுல பார்த்திருப்ப
கர்நாடக கோர்ட்டுல பார்த்திருப்ப
ஏன் பரப்பன அக்ரஹாரா சிறையில் கூட பார்த்திருப்ப
அது வெறித்தனமா வெளியேறி
தொகுதி வாரியா ஓட்டு வேட்டையாடி
பார்த்திருக்கியா.. பார்த்திருக்கிறியா...
அது ஓங்கி அடிச்சா 234 டன் வெயிட்டுவே...
எதிரியும் கிடையாது, எதிர்க்கட்சியும் கிடையாது
பார்க்கிறியா பார்க்கிறியா.. பார்ப்பவே!"
No comments:
Post a Comment