Saturday, 27 June 2015

அமெரிக்க இராணுவவாதமும், சார்லெஸ்டன் படுகொலையும்

புதனன்று இரவு தெற்கு கரோலினா மாநிலத்தில் சார்லெஸ்டன் நகரில் உள்ளதேவாலயம் ஒன்றில் ஒன்பது ஆபிரிக்க-அமெரிக்க ஆண்கள் மற்றும் பெண்களின்படுகொலைபல சிக்கலான கேள்விகளை எழுப்பியுள்ள ஒரு சம்பவமாகும்.அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள்,ஊடகங்கள் மற்றும் உத்தியோகப்பூர்வ அரசியல் வாட்டாரங்களால் வழங்கப்பட்டமேலோட்டமான உதிரித்தகவல்களை விட ஓர் ஆழ்ந்த விளக்கத்தைவிரும்புகின்றனர்.



மனரீதியில் பாதிக்கப்பட்ட ஒரு தனிநபரால் நடத்தப்பட்ட முட்டாள்தனமானவன்முறை என்ற ஆரம்ப ஊடக குணாம்சப்படுத்தல்கள் எதையும்விளங்கப்படுத்தவில்லைவியாழனன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டஜனாதிபதி ஒபாமாவால் அவரது தேசிய உரையில் முன்னெடுக்கப்பட்ட முயற்சி,இமானுவேல் AME தேவாலயத்தின் படுகொலையை 1963 பேர்மின்ஹாம்தேவாலய குண்டுவெடிப்பில் நான்கு இளம் கருப்பின பெண்களின்கொல்லப்பட்டதைப் போன்றகுடியுரிமைகள் சகாப்தத்தினது அட்டூழியங்களின்ஒரே நேர்கோட்டில் நிறுத்துவதற்கு சற்றே சிறந்த முயற்சியாக உள்ளது.

நகைச்சுவையாளர் ஜொன் ஸ்ருவார்ட் அவரது வியாழக்கிழமை தொலைக்காட்சிநிகழ்ச்சியின் தொடக்கத்தில் பெரிதும் விவாதித்த கருத்துரையில் தெரிந்ததைப்போலஇனவாதமே சார்லெஸ்டன் துயரத்தின் அடிப்படையான மற்றும்பிரத்யேகமான காரணமாகவும் கூட இருக்கிறது என்ற நிலைப்பாடுஒருதீவிரமான உருக்குலைந்த முன்னோக்கிற்கு இட்டுச் செல்கிறதுஸ்ருவார்ட் அந்தபடுகொலையை "ஆறமுடியாத பிளவடைந்துசெல்லும் இனவாத காயமாகவும்,ஆனால் நாம் அவ்வாறு ஒன்று இல்லாததைப் போல நடிக்கிறோம்என்றுகுற்றம்சாட்டினார்.

இனவாத அணுகுமுறைகளும் மற்றும் உறவுகளும் இனப்பாகுபாடுகாட்டப்பட்டதெற்கில் இருந்ததுபோல் மாற்றமடையாது இருப்பதுடன் மற்றும் கடந்த அரை-நூற்றாண்டாக முற்றிலும் பயனற்றமுறையில் வாழ்ந்திருந்ததைப் போலவும்,இங்கே இனவாதம் என்பது அதன் சமூக மற்றும் வரலாற்று வேர்களிலிருந்துபிரித்தெடுக்கப்பட்டுஅமெரிக்க சமூக உளவியலின் ஒரு சுதந்திரமான மற்றும்நிரந்தரமான அம்சமாக மாற்றப்பட்டுள்ளது.

சார்லெஸ்டன் படுகொலைக்கு பொதுமக்களின் எதிர்வினைமூர்க்கமானசீற்றங்களில் ஒன்றாக இருந்தது

1960களில் அங்கே Klan இன் குற்றங்களுக்குஇருந்ததுபோல்அங்கே Roof இன் நடவடிக்கைகளுக்கு எவ்வித குறிப்பிடத்தக்கஆதரவும் இல்லைமேலும் அவரது காரை அடையாளம்கண்ட மற்றும்அவரையும் பின்தொடர்ந்த ஒரு வெள்ளையின பெண்மணி அவரின்வெள்ளையின தொழில்வழங்குனரின் அழுத்தம் காரணமான வழங்கிய குறிப்புதான் அவரை கைது செய்ய இட்டுச் சென்றது.
சார்லெஸ்டன் படுகொலை பற்றிய ஓர் ஆழ்ந்த விளக்கத்தைமாற்றமடைந்திராதமற்றும் வரலாற்றுக்குப்புறம்பான வடிவத்தில்இனப்பாகுபாடு அணுகுமுறையின்உயிர்தப்பியிருப்பதாக கூறப்படுவதிலிருந்து இல்லாமல்மாறாக 21ஆம்நூற்றாண்டின் சமகாலத்திய அமெரிக்க சமூகம் மற்றும் உலகளாவியமுதலாளித்துவத்தின் முரண்பாடுகளில் இருந்து காண வேண்டும்.

Dylann Roof இன் உள்நோக்கத்தை வேண்டுமானால் இனவாதமாக சித்தரிக்கலாம்.ஆனால் அங்கே கடந்த இரண்டு தசாப்தங்களாக டஜன் கணக்கான அதுபோன்றபாரிய படுகொலைகள் நடந்துள்ளன. அதில் தனிநபர்களின் உள்நோக்கங்கள்வேறுவேறாக இருந்துள்ளன. ஆனால் கொலம்பைன் உயர்நிலை பள்ளி மற்றும்வெர்ஜீனியா தொழில்நுட்ப பயிலகத்தின் மாணவர்கள் மீதுஅரோராவின்கொலோராடோவில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மீதுநியூயோர்க்கின் பின்ஹாம்டன் சேவை மையத்தில் புலம்பெயர்ந்தவர்கள் மீது,கொன்னெக்டிகட் நியூடவுனில் பள்ளிக்கூட குழந்தைகள் மற்றும் அவர்களின்ஆசிரியர்கள் மீதுஅரிஜோனா துக்சனில் ஒரு காங்கிரஸ் பெண்மணியைச் சந்திக்கவந்திருந்த அரசியலமைப்பு அதிகாரிகள் மீது என அப்பாவி மக்கள் கூட்டத்திற்குஎதிராக முக்கியமாக அந்நியப்படுத்தப்பட்ட தனிநபர்கள்வழமையாக தனித்துசெயல்பட்டஆக்ரோஷமான மனிதபடுகொலை நடவடிக்கையின் அதிகரிப்பானதுஒரேமாதிரியான சமூக நிகழ்வுபோக்கை எடுத்துக்காட்டியுள்ளன.

பாரிய படுகொலைகள் என்பது தனிநபர் சம்பந்தபட்டதல்லஅதுவொரு சமூகநிகழ்வுபோக்கு என்பதுடன்அது அமெரிக்க முதலாளித்துவத்தின்ஆழமடைந்துவரும் முரண்பாடுகள்மற்றும்அனைத்திற்கும் மேலாகஅமெரிக்கஅரசாங்கத்தின் பாகத்தில் எல்லா மட்டங்களிலும் அதிகரித்தளவில்வன்முறையில் தங்கியிருப்பது என ஒரு சமூக துன்பியலின் வெளிப்பாடாகபுரிந்துகொள்ளப்பட வேண்டியதாகும்.

வியாழனன்று ஜனாதிபதி ஒபாமா அவரது கருத்துக்களில் குறிப்பிடுகையில், “இதுபோன்ற பாரிய வன்முறை ஏனைய முன்னேறிய நாடுகளில் நடப்பதில்லை,”என்றார்பரந்தளவில் துப்பாக்கி வைத்திருப்பதே பிரச்சினை என்பதுடன்சம்பந்தப்படுத்துவதுதாராளவாத மற்றும் ஜனநாயக கட்சிக்கு ஆதரவாகவழங்கப்படும் மற்றொரு மேலோட்டமான மற்றும் வெற்று விளக்கமுமாகும்.

அமெரிக்காவை ஏனைய எல்லா நாடுகளில் இருந்தும் மிகவும் வேறுபடுத்துவதுஎன்னவென்றால் அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்து உலகெங்கிலும் "பாரியவன்முறையில்ஈடுபட்டுள்ளது என்பதே யதார்த்தமாகும்.

முதல் வளைகுடா போர் (1991); சோமாலியா (1992-94); போஸ்னியா மற்றும்கொசோவோ (1995-1999); ஆப்கானிஸ்தான் (2001 இல் இருந்து இப்போதுவரையில்); இரண்டாம் வளைகுடா போர் (2003-2011); லிபியா (2011); மற்றும்இப்போது ஈராக்கில் மூன்றாம் போர்அத்துடன் இந்த முறை சிரியாவிலும் (2014இல் இருந்து இப்போது வரையில்என கடந்த கால்-நூற்றாண்டாகஅமெரிக்கஇராணுவ படைகள் ஏறத்தாழ தொடர்ந்து போர்முறைகளில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனஅதற்கு கூடுதலாக இப்போது அதன் 15ஆம் ஆண்டைநெருங்கி கொண்டிருக்கும்காலம் மற்றும் இட வரையறையற்ற ஒரு மோதலான"பயங்கரவாதத்திற்கு எதிரான போர்", வெளிநாட்டிலும் சரி அதிகரித்தளவில்உள்நாட்டிலும் சரி இரண்டிலும் கொடூரமான ஒடுக்குமுறைக்குபோலிக்காரணமாக மாறியுள்ளது.

இத்தகைய போர்களில் மற்றும் உள்நாட்டு போர்களில் மில்லியன்கணக்கானவர்கள் இறந்துள்ளனர். இவை அமெரிக்க ஜனாதிபதிகள் ஜோர்ஜ்டபிள்யூபுஷ் மற்றும் பராக் ஒபாமாவை 21ஆம் நூற்றாண்டின் முன்னணி பாரியபடுகொலையாளர்களாக ஆக்குகின்றனடிரோனிலிருந்து வீசப்படும் கப்பற்படைஏவுகணைகளைக் கொண்டு படுகொலை செய்ய வேண்டியவர்களின் பட்டியலில்கையெழுத்திட சிஐஏ மற்றும் இராணுவ அதிகாரிகளை ஒபாமா வாரந்தோறும்சந்தித்து வருகிறார்.

ஒரு கால்-நூற்றாண்டு அமெரிக்க போர்களின் விளைவுகள் தான் என்ன?உலகெங்கிலும், 60 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இப்போதுஅகதிகளாக்கப்பட்டுள்ளார்கள்அவர்களில் பெரும் பெரும்பான்மையினர் மத்தியகிழக்கின் எண்ணெய் வளங்கள் மீது ஆக்கிரமிக்கும் நோக்கில் மற்றும் அமெரிக்கஏகாதிபத்தியத்தின் உலகளாவிய அந்தஸ்தை பேணும் நோக்கில் வாஷிங்டனால்தூண்டிவிடப்பட்டு எரியூட்டப்பட்ட உள்நாட்டு போர்களால் அல்லது அமெரிக்கபடையெடுப்பால் செயல்படும் சமூகங்களாக இருந்து சீரழிக்கப்பட்ட சிரியாஈராக்,யேமன்லிபியா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள்ஆவர்.

உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யா மற்றும் தெற்கு சீனக் கடல் விவகாரத்தில் சீனாஉடன் அமெரிக்காவால் தூண்டிவிடப்பட்ட மோதல்கள் அணுஆயுத சக்திகளுக்குஇடையே இராணுவ மோதல்களாக வெடித்தால் அதிலிருந்து விளையும்உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னும் பல மடங்காக இருக்கும்.

அமெரிக்காவிற்குள்இதுவரையில் ஒருபோதும் இருந்திராத அளவுக்குஒவ்வொன்றையும் விஞ்சிவிடக்கூடிய ஓர் இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின்வளர்ச்சியுடன் சேர்ந்துமேலும் அது அதிகரித்தளவில் அமெரிக்க மக்களையே ஓர்எதிரியாக இலக்கில் வைக்க பார்க்கின் நிலையில்ஜனநாயக ஆட்சி வடிவங்கள்ஒரேசீராக அழிக்கப்பட்டுள்ளனஇந்த உள்ளடக்கத்தில் தான் எல்லா இனங்களைச்சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிரான பொலிஸ்வன்முறையின் பாரியளவிலான அதிகரிப்பைப் புரிந்துகொள்ள வேண்டும்கடந்தஆண்டு மிசோரி ஃபேர்குஷன் நிகழ்வுகள் தெளிவாக எடுத்துக்காட்டியதைப் போல,ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்முறைகள் அமெரிக்க தொழிலாளவர்க்கத்திற்கு எதிராக உள்நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு வருகின்றன.

ஒரு கால்-நூற்றாண்டு போரானதுஅமெரிக்க அரசியல்கலாச்சாரம்இராணுவவன்முறையைப் பெருமைப்படுத்தும் ஊடகங்கள்ஓயாது அச்சமூட்டல்கள்,மற்றும் புலம்பெயர்ந்தோர் விரோத மற்றும் முஸ்லீம்-விரோத உணர்வுகளைஅதிகரிப்பது ஆகியவற்றால் மாசடைந்துள்ளது.

அந்த படுகொலையை அரசியல்வாதிகளின் பிரச்சார தளத்தில்எடுத்துக்காட்டுவதற்காக அவர்களோடும் மற்றும் மக்களோடும் "பேசுவதே"இப்போது ஊடக பண்டிதர்களின் வழமையான ஒன்றாக ஆகியுள்ளது.இமானுவேல் AME தேவாலயத்தில் இந்த கொடூரமான சம்பவங்கள் நடப்பதற்குவெறும் மூன்று வாரங்களுக்கு முன்னர்தெற்கு கரோலினா செனட்டர் லிண்ட்செகிரஹாம் பின்வரும் பெருமைபீற்றல்களுடன் அவரது ஜனாதிபதி பிரச்சாரத்தைத்தொடங்கினார்: “நான் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்திருந்தால்நீங்கள் அல்கொய்தா அல்லது ISIL இல் சேர்வது குறித்து சிந்தித்து கொண்டிருக்கிறீர்கள்என்றால்நான் ஒரு நீதிபதியை அழைக்க மாட்டேன்ஒரு டிரோனுக்கு தான்அழைப்புவிடுபேன்நாங்கள் உங்களை கொன்றே விடுவோம்,” என்றார்

இராணுவவாதத்தின் வளர்ச்சியானது அமெரிக்க முதலாளித்துவ முட்டுச்சந்தின்ஒரு வெளிப்பாடாகும்பொருளாதார வளர்ச்சிஇதுவரையில் முற்றிலும்எந்தளவிற்கு இருந்தாலும்அது உழைக்கும் மக்களின் வேலைகள் மற்றும்வாழ்க்கை தரங்களை விலையாக கொடுத்து முன்பினும் பெரியளவில் தனிநபர்செல்வவளத்தைக் குவித்துக் கொண்டுள்ள பெரும் பணக்காரர்களின்ஆதாயத்திற்காகவே உள்ளதுஅமெரிக்க பொருளாதாரம் உலகத்தின் வேகத்தைஅமைத்த அல்லது அமெரிக்க தொழிலாளர்கள் மிகச்சிறந்த வாழ்க்கை தரங்களைஅனுபவித்த அந்த நாட்கள் எல்லாம் நீண்டகாலத்திற்கு முன்னரே போய்விட்டன.அமெரிக்க சமூகம்அதன் பள்ளிக்கூடங்கள்அதன் ஸ்தூலமான உள்கட்டமைப்பு,அதன் அமைப்புகள் முடமாகியிருப்பது தெளிவாக தெரிகிறது.

அமெரிக்கா “எதனை அர்த்தப்படுத்துகின்றது”? போர்டிரோன் படுகொலைகள்,சித்திரவதைஅன்னியநாடுகளிடம் ஒப்படைப்புபொலிஸ் வன்முறை,சமத்துவமின்மைஉள்நாட்டிலேயே அரசு உளவுபார்ப்பது என புறநிலை சமூகயதார்த்தம்சுதந்திரம் மற்றும் வாய்ப்புகளின் தேசம் என்ற உத்தியோகப்பூர்வஅமெரிக்க புராணத்திற்கு முற்றிலும் எதிர்பதமாக உள்ளது.  



சமூக சீரழிவுவன்முறை மற்றும் பிற்போக்குத்தனத்தால் குணாம்சப்பட்ட ஒருஅமெரிக்கா என்பதைத் தவிர வேறொன்றையும் அறிந்திராத இளம்தலைமுறையின் மீதே இந்த சமூக நெருக்கடியின் படுமோசமான தாக்கம்உள்ளதுமக்களின் எந்தவொரு பிரிவினரையும் விட அதிகமாகஇளைஞர்களுக்கே முன்மாதிரிகள்நம்பிக்கைவாய்ப்பு அவசியப்படுகிறதுவோல்ஸ்ட்ரீட் மற்றும் CIA க்கு ஆதரவாகஅத்தகைய வார்த்தைகளைச்சிடுமூஞ்சித்தனமாக காட்டிக்கொடுப்பதற்கு மட்டுமே ஒபாமா அவற்றைகையாள்கின்றார்.

ஒரு விரல்விட்டு எண்ணக்கூடிய மிகவும் நோக்குநிலை பிறழ்ந்தவர்கள் மட்டுமேஇந்த சமூக நெருக்கடிக்கு Dylann Roof பாணியில் விடையிறுப்பார்கள்.ஏனையவர்கள்பிற்போக்குத்தனத்தின் கரங்களில் விழுந்தவர்கள்அரசியல்குண்டர்களாக மற்றும் சிஐஏ படுகொலையாளர்களாக மற்றும் எதிர்காலமுதலாளித்துவ அரசியல்வாதிகளாக ஆவார்கள்ஆனால் பரந்த பெரும்பான்மைஇளைஞர்களும் மற்றும் தொழிலாள வர்க்கமும் ஒட்டுமொத்தமாகமுதலாளித்துவ அமைப்புமுறை மற்றும் அதன் ஆட்சியாளர்களுக்கு எதிரானபாரிய போராட்டங்களுக்குள் இடதை நோக்கிநகர்ந்து வருகிறது.   

இந்த வரவிருக்கின்ற இயக்கத்தைமனிதயினத்திற்கு உண்மையானநம்பிக்கையை மட்டுமே வழங்கும் ஒரு புரட்சிகர முன்னோக்கைக் கொண்டு,அதாவது முதலாளித்துவ வன்முறைஒடுக்குமுறை மற்றும்சமத்துவமின்மைக்கு முடிவுகட்டிசமத்துவம் மற்றும் மனித ஐக்கியத்தின்அடிப்படையில் ஓர் உலக சோசலிச சமூகத்தை ஸ்தாபிப்பதற்கானபோராட்டத்தைக் கொண்டுஆயுதபாணியாக்குவதே கடமையாகும்.

No comments:

Post a Comment