Sunday 29 November 2015

அமெரிக்க இராணுவத்தை பற்றிய சில வியக்கவைக்கும் தகவல்கள்!!!

அமெரிக்கா, உலகின் மாபெரும் வல்லரசு நாடு. யார் வீட்டுக்குள்ளும் புகுந்து அட்டூழியம் செய்யும் உரிமத்தை தங்களுக்கு தாங்களே அளித்துக் கொண்டு, அ….’ராஜ’கம் செய்யும் பண்புடைய முடிசூடா மன்னர்கள். தொழில்நுட்பத்தை அவ்வளவு நுட்பமாக கையாளும் திறன் கொண்டவர்கள்.உலகின் முதன்மை தொழில்நுட்பங்கள் மற்றும் வேறு யாரும் அறிந்திராத அறிவியலை எல்லாம் தங்களது இராணுவப்படையில் வைத்திருக்கும் ஆணவம் தான் அவர்களை, அழையா விருந்தாளியாக போர் தொடுக்க வைக்கிறது.

திமிர் மட்டுமின்றி திறமையும் நிறைய உள்ளவர்கள். அமெரிக்க இராணுவத்தைக் கண்டு அஞ்சும் படை நிறையவே உண்டு. இனி, அமெரிக்க இராணுவத்தை பற்றிய சில வியக்கவைக்கும் தகவல்கள் குறித்துப் பார்க்கலாம்….

“ரே பேன்” – Ray Ban கண்ணாடிகள்

“ரே பேன்” – Ray Ban கண்ணாடிகள் கடந்த 1929ஆம் ஆண்டு அமெரிக்க வான்படை லெப்டினன்ட் ஜெனரல் ஜான், ஓர் நிறுவனத்திடம், விமான ஓட்டும் விமானிகளுக்கு தலைவலி, குமட்டல் வராமல் இருக்க, சூரிய கதிர்களை எதிர்க்க ஓர் சிறப்பு கண்ணாடி வடிவமைக்க கேட்டுக்கொண்டார். அந்த கண்ணாடி தான் இப்போது உலக புகழ்பெற்று திகழும் “Ray-Ban” ஆகும், கதிர்களை தடுப்பது என்பது இதன் பொருள்.

சத்தம் குறைவான வெல்க்ரோ

பொதுவாக நாம் அணியும் செருப்பகளில் இருக்கும் பொருள் தான் வெல்க்ரோ (ஒட்டப பயன்படுவது). இதில் நல்ல சத்தம் வரும். ஆனால், அமெரிக்க இராணுவத்தில் 95% குறைவான சத்தம் வரும் ஸ்பெஷல் வெக்ரோவை பயன்படுத்துகின்றனர்.

அதிக இராணுவவீரர்கள் டிசம்பர் 31, 2013 வரை 1,369,532 பேர் அமெரிக்க இராணுவத்தில் இருந்துள்ளனர் மற்றும் 850,880 பேர் ரிசர்வ் படையில் இருந்துள்ளனர். மொத்தமாக சேர்த்தால் 2.2 மில்லியன் பேர் ஆவார்கள். இது, வெர்மான்ட் (Vermont), அலாஸ்கா (Alaska) மற்றும் வியோமிங் (Wyoming) போன்ற பகுதிகளின் மக்கள் தொகையை விட அதிகமானது ஆகும்.

சொந்தமான நிலம்

அமெரிக்க இராணுவத்திற்கு மட்டுமே 24,000 சதுர மைல் தூர அளவு நிலம் சொந்தமாக இருக்கிறது. இதை ஒன்று சேர்த்தல், அமெரிக்காவில் இதுதான் 42வது மாபெரும் பகுதியாக இருக்கும்.

அதிக செலவு

2014 ஆம் ஆண்டின் கணக்கின்படி, அமெரிக்கா தங்கள் நாட்டின் இராணுவத்திற்காக 580 பில்லியன் டாலர்கள் செலவு செய்துள்ளது. இதுவே, உலகில் ஓர் தனி இராணுவப்படைக்கு செய்யப்பட்ட அதிகபட்ச செலவாகும். இதற்கு அடுத்த இடத்தில சீனா உள்ளது (129 பில்லியன் டாலர்கள்)

“டாப் கன்” திரைப்படம்

கடந்த 1986ஆம் ஆண்டு வெளிவந்த “டாப் கன்” (TOP GUN) என்ற திரைப்படத்தை கண்டு, 500% அதிகமானவர்கள் கடற்படை விமானிகளாக சேர முன் வந்தார்களாம்.

சிறப்பு ஆணுறை

அமெரிக்க இராணுவத்தில் சிறப்பு ஆணுறை ஒன்று வழங்கப்படுகிறதாம். அது ஒரு லிட்டர் தண்ணீரை கொள்ளும் அளவு திறன் வாய்ந்ததாம் (அதுல எதுக்கு தண்ணி… புடிக்கணும்!!!!)
உலகம் முழுதும் உள்ளது

சமீபத்திய தகவல்களின் படி, அமெரிக்க இராணுவத்தின் அமைப்பிடம் உலகம் முழுதும் 74 நாடுகளில் இருக்கிறதாம்

ரோபோட்

கடந்த 1968ஆம் ஆண்டு, அமெரிக்க இராணுவம் “வாக்கிங் டிரக்” என்ற ஓர் ரோபோட்டை உருவாக்கியது. இதன் வலிமையைக் கொண்டு ஓர் காரையே தூக்கிக்கொண்டு ஐந்து மைல் வேகத்தில் நடக்க முடியுமாம். ஆனால், இதை அவர்கள் பயன்படுத்தவே இல்லை என கூறப்படுகிறது.

ரோபோட் கடந்த 1968ஆம் ஆண்டு, அமெரிக்க இராணுவம் “வாக்கிங் டிரக்” என்ற ஓர் ரோபோட்டை உருவாக்கியது. இதன் வலிமையைக் கொண்டு ஓர் காரையே தூக்கிக்கொண்டு ஐந்து மைல் வேகத்தில் நடக்க முடியுமாம். ஆனால், இதை அவர்கள் பயன்படுத்தவே இல்லை என கூறப்படுகிறது.

அதிக உயிர்சேதம் ஏற்பட்ட போர்

அமெரிக்க உள்நாட்டு போர் தான் மிகவும் கோரமானது என்று கருதப்படுகிறது, இந்த போரில் ஏறத்தாழ 7,50,000 போர் வீரர்கள் உயிரிழந்தனர். அதிகபட்சமாக போர் வீரர்கள் இறந்த போராக இது கருதப்படுகிறது.

ரூ.55 கோடி திருமணம் : யார் இந்த ரவி பிள்ளை?


அண்மையில் கேரளத்தில் ரூ. 55 கோடியில் ஒரு திருமணம் நடைபெற்றது. மகள் திருமணத்தை பிரமாண்டமாக மட்டும் நடத்தவில்லை. இதையொட்டி பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.10 கோடி ரூபாய்க்கு மேல் நிதியுதவி செய்துள்ளதாக ரவி பிள்ளை தெரிவித்துள்ளார்.

                               ravi.jpg


நாட்டில் பல திருமணங்கள் கோடி கணக்கில் செலவழித்து நடத்தப்பட்டாலும் அண்மையில் நடந்த திருமணங்களில் அனைவரையும் ஈர்த்தது, இந்த திருமணம்தான். சரி யார் இந்த ரவி பிள்ளை என்பவர் யார்? 
கேரளத்தில் கொல்லம் அருகேயுள்ள சாவாரா என்ற கிராமத்தில் சாதாரண விவசாயிக்கு மகனாக பிறந்த இவர், அங்குள்ள கல்லூரி ஒன்றில் டிகிரி படித்தார். பின்னர் கொச்சியில் எம்.பி.ஏ படிப்பு.சேமிப்பில் அக்கறை கொண்ட கேரள மக்களை பார்த்து முதலில் சீட்டு தொழிலில்தான் ரவி பிள்ளை இறங்கினார். தொடர்ந்து கான்டிரக்ட் தொழில், கட்டுமானத் தொழிலில் கால் பதித்த ரவி பிள்ளை, திருவாங்கூர் பெர்டிலைசர், ஹிந்துஸ்தான் நியூஸ் பிரிண்ட் மற்றும் கொச்சின் ரிஃபெரனைரிஸ் நிறுவங்களுக்காக சில பணிகளை மேற்கொண்டார்.

எனினும் தொழிலாளர் பிரச்னை காரணமாக இந்த தொழில்களை கைவிட்டு விட வேண்டிய நிலை.  பின்னர் 1978ஆம் ஆண்டு சவுதிக்கு சென்ற ரவி பிள்ளை, முதலில் சவுதியில் நாஸர் அல் ஹாஜ்ரி என்ற கட்டுமான நிறுவனத்துடன் இணைந்து தொழிலை தொடங்கினார். 150 பணியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் படிப்படியாக வளர்ந்தது. பின்னர்  ஆர்.பி என்று பெயர் மாற்றப்பட்டு, இன்று 70 ஆயிரம் ஊழியர்கள் பணி புரியும் ஆர்.பி குழுமமமாக வளர்ந்து நிற்கிறது. பஹ்ரைன்,கத்தார், அமீரகம் மற்றும் கிழக்காசிய நாடுகளில் 26க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இன்று வளைகுடா நாடுகளிலேயே, இவரது ஆர்.பி குழுமம்தான் முன்னணி கட்டுமான நிறுவனம் ஆகும்.

கடந்த 2014ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் இதழ், உலகின் 988ஆவது பணக்காரராக இவரை தேர்வு செய்தது. இந்தியாவை பொறுத்தவரை 30வது பணக்காரர் ஆவார். வளைகுடா நாடுகளை பொறுத்தவரை மிகவும்  சக்தி வாய்ந்த 4வது இந்திய பிரமுகர் ஆவார். கடந்த 2010ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. தற்போது 62 வயது நிரம்பிய ரவி பிள்ளை கீதா தம்பதியருக்கு கணேஷ், ஆர்த்தி என இரு குழந்தைகள். இதில் ஆர்த்தி- மருத்துவர் ஆதித்யா விஷ்ணு திருமணம்தான்  கொல்லத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன் நடைபெற்றது.

                 
                                            marr.jpg


இந்த திருமணத்திற்காக கொல்லம் ஆஷ்ரம் மைதானத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் 3.50 லட்சம் சதுரடியில் பிரமாண்டமான செட் போடப்பட்டது. 'பாகுபலி 'பட புகழ் ஆர்ட் டரைக்டர் சாபு சிரில், மூன்று மாதங்களாக உழைத்து இந்த பிரமாண்ட செட்டினை வடிவமைத்தார். இதற்காக மும்பையில் முதலில் இந்த செட்கள் அனைத்தும் களிமண்ணால் வார்படமாக உருவாக்கப்பட்டது. பின் ‘பிளாஸ்டர் ஆப் பாரிஸ் ‘மூலம் அவைகள் இணைக்கப்பட்டன. இதற்கே 40 நாட்கள் பிடித்துள்ளது.
திருமண செட் போடுவதற்கு மட்டுமே ரூ.23 கோடி செலவாகியுள்ளது. அதோடு 30 ஆயிரம் விருந்தினர்கள் அமரும் வகையில் பிரமாண்டமான பந்தலும் போடப்பட்டிருந்தது. மணமேடை மட்டும் விரிந்த தாமரை இதழ் போல அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

சவுதி, அமீரகம், குவைத்,கத்தார் அரச குடும்பத்தினர் பலர் தனி விமானங்களில் திருமணத்தில் பங்கேற்க வந்திருந்தனர். மற்றும் ஏராளமான வெளிநாட்டு பிரதிநிதிகளும் திருமணத்தில் பங்கேற்றனர். ஹாலிவுட், பாலிவுட் நட்சத்திரங்கள் மம்முட்டி உள்ளிட்ட கேரள நட்சத்திரங்களும் திருமணத்தில் பங்கேற்றனர். நடிகைகள் மஞ்சு வாரியார், ஷோபனா ஆகியோரது நடன நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. கர்நாடக இசை புகழ் காயத்ரியின் பக்தி இசை கச்சேரியும் நடைபெற்றது.

திருமணத்திற்காக பாதுகாப்புக்காக மட்டும் கேரள போலீசாருடன் இணைந்து தனியார் பாதுகாப்பு நிறுவனம் மேற்கொண்டிருந்தது. அந்த வகையில் 600 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருமண விருந்தில் உள்நாட்டு உணவுவகைகளுடன் வெளிநாட்டு உணவுகளும் இடம் பெற்றிருந்தன.இந்ததிருமணத்திற்காக மொத்தம் ரூ.55 கோடி செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது. 

இது குறித்து ரவிபிள்ளை கூறுகையில், ''எனது மகள் திருமணத்தை பிரமாண்டமான நடத்தி காட்ட வேண்டுமென்பது மட்டும் எனக்கு நோக்கமில்லை. இந்த திருமணத்தையொட்டி பல்வேறு மக்கள் நலப்பணிகளையும் மேற்கொண்டுள்ளேன். முக்கியமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அறக்கட்டைகள், பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு ரு.10 கோடிக்கு மேல் நிதியுதவி அளித்துள்ளேன்'' என்றார். 

பிரபாகரனுக்கு நிகரான போராளியாகத் தன்னை நிரூபித்தவர்.....பொட்டு அம்மான்......

விடுதலைப் புலிகள் இயக்கத்தின்  தலைவரான பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்லி, விதவிதமான படங்களைக் காட்டி முடித்த  ராணுவம், இப்போது பொட்டு அம்மான் பற்றிய செய்திகளைச் சிதறவிட்டுக்கொண்டு இருக்கிறது.புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு தலைவரான பொட்டு அம்மான், பிரபாகரனுக்கு நிகரான போராளியாகத் தன்னை நிரூபித்தவர்.

போரின் முடிவில் பிரபாகரன், சார்லஸ் ஆண்டனி, சூசை உள்ளிட்ட புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களைக் கொன்றுவிட்டதாகச் சொன்ன  ராணுவம், பொட்டு அம்மான் குறித்து எந்தத் தகவலையும் சொல்லவில்லை.

அதனால் ‘கண்டிப்பாக பொட்டு அம்மான் தப்பியிருப்பார். தலைவர் பிரபாகரனையும் காப்பாற்றியிருப்பார். புலிகளின் போராட்டம் மறுபடியும் தொடங்கும்’ என்றெல்லாம் உலகத் தமிழர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

ஆனால், இப்போது பொட்டு அம்மானை கொன்று விட்டதாகவும் அவருடைய பிரேதம் கிடைக்காமல் போய் விட்டதாகவும் இலங்கையின் பாதுகாப்பு செயலாளரான கோத்தபய ராஜபக்ஷே சொல்லி இருப்பது, தமிழர்களின் நம்பிக்கையை அசைத்துப் பார்த்திருக்கிறது!
பொட்டு அம்மான் குறித்துப் பரபரப்பைக் கிளப்பும் புள்ளிகளிடம் பேசியபோது,
”பொட்டு அம்மானுக்கு உலகம் முழுக்க உளவு சம்பந்தமான ஆட்கள் பழக்கத்தில் இருக்கிறார்கள். கொள்முதல் செய்த ஆயுதங்களை பத்திரமாகக் கொண்டு வருவது தொடங்கி, உலகளாவிய தொடர்புகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு நாடுகளின் நிலைப்பாடுகளை உணர்வது வரை பொட்டு அம்மானுக்கு செல்வாக்கு உண்டு.

ராஜீவ் காந்தி கொலையின் போது சின்ன சாந்தன், ‘பொட்டு’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்திக் கடிதம் எழுதியதை வைத்துத்தான் பொட்டு அம்மான் என்பவர் பிரபாகரனோடு இருக்கிறார் என்பதே இந்திய உளவுப் பிரிவினருக்குத் தெரிந்தது.
அதன் பிறகுதான் இந்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் ‘பிரபாகரனின் பாதி பலம் பொட்டுதான்’ என்று சொல்லி, அவரை ராஜீவ் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்த்தார்கள்.

யார் கண்ணுக்கும் சிக்காமல், சர்வதேசத் தொடர்புகளில் கில்லாடியாக இருந்த பொட்டு அம்மான், புலிகளின் இறுதிப் போர் வரை களத்தில் இருந்திருக்கிறார். கடைசிக் கட்ட நெருக்கடிகள் பொறுக்காமல், புலிகள் பெரும் சிரமத்துக்கு ஆளானபோது, சிலர் பொட்டு அம்மானிடம் சமாதானம் பேசியிருக்கிறார்கள்.

பொட்டு அம்மானுக்கு நெருக்கமான உளவு ஆட்கள் மூலமே அவரை வளைத்து, நினைத்துப் பார்க்க முடியாத சதித் திட்டத்தைத் தீட்டியிருக்கிறது இராணுவம். அதன் பிறகுதான் நம்பிக்கையின் அடிப்படையில் நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோரை பொட்டு அம்மான் இராணுவ முகாமுக்கு அனுப்பியிருக்கிறார்.

ஆனால் அதன் பிறகு நடந்த கொடூரங்கள் புலிகளின் மொத்த தலைவர்களையும் வீழ்த்தி விட்டது. தனது பிரேதம்கூட இராணுவத்தின் கையில் சிக்கக் கூடாது என எண்ணிய பொட்டு கரும்புலியாக மாறி வெடித்துச் சிதறி விட்டார். அதனால்தான் அவருடைய உடலை இராணுவத்தால் கண்டறிய முடியவில்லை…” என்கிறார்கள்.

புலிகளுக்கு நெருக்கமான தொடர்பில் இருப்பவர்களோ, இதை அடியோடு மறுக்கிறார்கள். ”இராணுவத்திடம் சுலபமாகச் சிக்குகிற அளவுக்கு பொட்டு சாதாரண ஆள் இல்லை. போரின் ஆரம்பத்திலிருந்தே உலகளாவிய நெட்வொர்க் மூலமாக பன்னாட்டு எண்ணங்களையும் கச்சிதமாக அறிந்துவைத்திருந்த பொட்டு அம்மான், ‘எந்த நாடும் நமக்கு உதவும் எண்ணத்தில் இல்லை!’ என்று பிரபாகரனிடம் சொல்லியிருக்கிறார்.

அதன்பிறகு புலிகளின் போர்த் திட்டம் வேறு திசையில் பயணித்திருக்கிறது. போராளிகள் இலங்கையின் பல பகுதிகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

கட்டுநாயக்கா விமான நிலையம் மற்றும் கொழும்புப் பகுதிகளைப் புலிகளின் இராணுவம் தாக்கிய தினத்தன்றே பன்னாட்டு உளவு அமைப்புகளையும் ஒருசேர திசைதிருப்பி, அடுத்தகட்ட தளபதிகளாக உருவெடுத்திருக்கும் பல போராளிகளை வெளியிடங்களுக்கு அனுப்பிவிட்டார் பொட்டு அம்மான். பிரபாகரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் குடும்பத்தினரும் அன்றைக்கே கடல் வழியாகத் தப்பிவிட்டார்கள்.

எச்சரிக்கை உணர்வில் பொட்டுவை யாருமே மிஞ்ச முடியாது. இந்திய உளவு அமைப்பான ‘ரா’, இரு போராளிகள் மூலமாக மாத்தையாவின் மனதை மாற்றி, பிரபாகரனைக் கொல்ல முயன்றது. அப்போது மாத்தையாவையே கொன்று, ‘ரா’வின் திட்டத்தைத் தவிடுபொடி ஆக்கியவர் பொட்டு.

கருணா, சிங்கள அரசோடு லேசான தொடர்பில் இருந்த போதே, அது குறித்துப் பிரபாகரனிடம் எச்சரித்திருக்கிறார் பொட்டு. ஆனாலும், கருணாவின் போர்த் திறமை மீது அசாத்திய நம்பிக்கை வைத்திருந்த பிரபாகரன், அதைப் பொருட்படுத்தாமல் விட்டுவிட்டார்.
அந்தளவுக்குக் கில்லாடியான பொட்டு, போரின் முடிவு எந்தளவுக்கு எதிர்மறையாக இருக்கும் என்பதை முன்கூட்டியே அனுமானித்திருக்கிறார். அதன்படிதான், பிரபாகரனின் மகனான சார்லஸ் ஆண்டனி களத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார்.

பிரபாகரன் போலவே இருந்த ஒருவரின் சடலத்தை இராணுவத்தின் கண்ணில் படும்படி பொட்டுவின் ஆட்கள்தான் போட்டிருக்கிறார்கள். அதை சிங்கள இராணுவமும் நம்பிவிட்டது.
பிரபாகரனின் உடலைப் பார்வையிட வந்த கருணா, இராணுவத்தைப் பொட்டு நல்லா ஏமாத்திட்டான். அவன் பத்து பிரபாகரனுக்கு சமம்’ என்று கலவரத்தோடு சொன்னதாக சிங்களத் தரப்பிலிருந்தே செய்திகள் கசிகிறது.

புலிகள் அமைப்பில் இருந்த முக்கியத் தளபதிகளில் 27 பேரின் உடல்களைத்தான் இராணுவம் இதுவரை அடையாளம் கண்டிருக்கிறது. இதர தளபதிகள் இருக்கிறார்களா, இல்லையா என்பது இராணுவத்துக்கே புரியாத புதிர்தான்.

ராஜீவ் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கும் பொட்டுவின் இறப்புச் சான்றிதழைக் கேட்டு இந்திய அரசு, இராணுவத்தை நச்சரித்து வருகிறது.

பொட்டுவின் இறப்புச் சான்றிதழ் கிடைத்தால் ராஜீவ் கொலை வழக்கு விசாரணையை ஒரேயடியாக மூடிவிடலாம் என்கிற ரீதியிலும் இந்திய அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது.
ஆனாலும்,  அரசால் பொட்டு குறித்த எந்த விவரத்தையும் சேகரித்து இந்தியாவிடம் கொடுக்க முடியவில்லை.

இதற்கிடையில், இதர போராளிகளையும் தளபதி களையும் ஒருங்கிணைத்து, பொட்டு மறுபடியும் போராட்டத்தைத் தொடங்கப் போவதாகவும் பலமான பேச்சு இருக்கிறது. அதனால்தான் கஞ்சிகுடிச்சாறு மற்றும் வன்னிக் காடுகளுக்குள் இராணுவம் திடீரென தேடுதல் வேட்டையைத் தொடங்கியிருக்கிறது.

இராணுவத் தரப்பிலேயே இருக்கும் வேறு சில அதிகாரிகள், ‘பொட்டு உயிருடன் தப்பியிருக்க வாய்ப்பிருக்கிறது’ என பகிரங்கமாகவே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். பொட்டு பற்றிய விவரங்கள் வெளியே வரும் நாள், புலி களின் மறு அவதார நாளாக இருக்கும்!” என்கிறார்கள் புலி ஆதரவுப் புள்ளிகள்.

மிகச் சிறந்த எழுத்தாளராக புலிகள் அமைப்பில் உருவெடுத்த பொட்டு அம்மான், இள வயதிலேயே தன் தங்கையைக் களபலி கொடுத்தவர். இரு முறை பிறநாடுகளின் தூண்டுதலில் பிரபாகரன் கொல்லப்படவிருந்தஎபோது, அதை முறியடித்து, பன்னாட்டு உளவு அமைப்புகளாலேயே ‘புலிகளின் பெரிய மூளை’ என்று குறிப்பிடப்பட்டவர்.

பொட்டு அம்மானை பற்றிய புதிர் நீடிக்கும்வரை  இராணுவத்தின் படபடப்பு தணியாது என்பது தான் நிஜம்!

Tuesday 17 November 2015

இந்தியாவின் உதவி கேட்டு 'க்யூ'வில் நிற்கும் உலக நாடுகள்..!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ, சமீபத்தில் அமெரிக்கவின் 9 நானோ மற்றும் மைக்ரோ செயற்கைகோள்களையும், அதை தொடர்ந்து இந்தோனேஷியாவின் செயற்கை கோள்களையும் விண்ணில் செலுத்த உதவி இருந்தது.

அது மட்டுமின்றி 2015 தொடங்கி 2016 வரை என்ற ஓராண்டு கால இடைவெளியில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த இந்தியாவின் உதவியை அமெரிக்கா நாடியுள்ளதும் குறிப்பிடத்தக்கது..!

17-1447744079-25-1443170042-04-144135856

இந்தியாவின் உதவி :

பிற நாட்டு செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவதில் இந்தியாவின் இஸ்ரோ புதிய மைல்கல் சாதனையை நிகழ்த்தி இருக்கும் நிலையில் மேலும் சில உலக நாடுகள் இந்தியாவின் உதவியை நாடிய படி தான் இருக்கிறது.

17-1447744062-25-1443170041-04-144135856

விண்வெளி தொழில்நுட்பம் :

இந்தியாவுடன் இணைந்து செயற்கைகோள்களை செலுத்துவது மிகவும் சுலபம் என்பதை விட இந்தியாவின் விண்வெளி தொழில்நுட்பத்தில் தோல்வி என்பதே கிடையாது என்பதற்காகவே பிற உலக நாடுகள் இஸ்ரோவின் உதவியை நாடுகின்றனர்.

17-1447744100-25-1443170047-06-143883486

மொத்தம் : 

அப்படியாக இதுவரை மொத்தம் 75 இந்திய செயற்கைகோள்களையும், 53 அந்நிய நாட்டு செயற்கைகோள்களையும் இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

17-1447744087-25-1443170044-06-143883486

பட்டியல்:

அந்நிய நாட்டு செயற்கைகோள்கள் என்ற பட்டியலில் அமெரிக்க இந்தோனேஷியா போன்ற நாடுகளை தொடர்ந்து இப்போது சிங்கப்பூரும் இணைய உள்ளது.

17-1447744140-25-1443170056-23-144299305

சிங்கப்பூர் :

வரும் டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி சிங்கப்பூர் நாட்டின் 5 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த இருக்கிறது இஸ்ரோ.

17-1447744160-main-qimg-8143da45d170d365

ஜிபிஎஸ் :

சிங்கப்பூரின் செயற்கைகோள்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ள ஜிபிஎஸ் சேவைகளுக்காக (GPS Service) விண்ணில் செலுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

17-1447744147-fl02-kiran-kumar-2548586g.

இஸ்ரோ தலைவர் :

இந்த தகவலை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் ஏஎஸ் கிரண் குமார் தெரிவித்துள்ளார்.

17-1447744131-25-1443170053-23-144299304

சேவை :

மேலும் இஸ்ரோ, இதுவரை ஒலிபரப்பு, கல்வி, தகவல் தொடர்பு, அளவியல் சேவை மற்றும் பல என ஆகிய காரணகளுக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதிக கவனம் :

முக்கியமாக பேரிடர் பாதுகாப்பு முன்னெச்சிரிகைக்கு (Disaster management) அதிக கவனம் செலுத்தப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

17-1447744113-25-1443170048-06-143883486

வெற்றி :

அப்படியாக, ஆழ்துளை கிணறுகள் தோண்டுவதில் 95% - 96% வரை வெற்றிகரமாக செயல்பட செயற்கைகோள்கள் உதவிக்கொண்டிருக்கிறது.

நஷ்டம் :

இந்தியாவின் 7,000 கிலோ மீட்டர் நீள கடலோர பகுதிகளில் சரியான மீன்பிடி இடங்களை கண்டறிந்து, மீனவர்களுக்கு உதவி செய்து. ஆண்டுதோறும் சுமார் 20,000 கோடி ரூபாய் நஷ்டத்தை செயற்கைகோள்கள் தவிர்த்து கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐ.எஸ் தீவிரவாதிகளும் அதன் காரணகர்த்தாவும்

பாரிஸ், பாக்தாக், பெய்ரூட் என ஒரு நாளில் (14-11-2015) தன் மொத்த பயங்கரவாத நடவடிக்கையால் பல நூறு பேர் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது அவர்களின் விருப்பம் இல்லாமல்.

உலகம் இன்று மும்பை தாக்குதலின் போதோ, இரட்டை கோபுர தகர்ப்பின் போதோ, செங்கன்யா குண்டு வெடிப்பின் போதோ அடையாத சோகம் பூண்டுள்ளது. ஏனெனில் இன்று சர்வதேச பயங்கரவாத இயக்கங்களே பயப்படும் அளவுக்கு மத்திய கிழக்கில் ஒரு கொலைவெறியுடைய இஸ்லாமிய தீவிரவாத இயக்கமாக மாறிவிட்டது அந்த இயக்கம்.

isis_600
ஐ.நா அவைக்கு 70 ஆண்டுகள் வயதாகி விட்டது. பனிப்போர் காலகட்டத்தை கூட புத்திக்கூர்மையுடன் சமாளித்த அந்த அமைப்புக்கு இந்த இஸ்லாமிய ஸ்டேட் தீவிரவாதிகளை சமாளிக்க முடியவில்லை. வெறும் வங்கிக் கணக்கு முடக்கம், பயணம் செய்யத் தடை, பாதுகாப்பு சபையில் தீர்மானம், செல்லும் இடமெல்லாம் தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என சொல்வது என ஒன்றுக்கும் உதவாத செயல்களை செய்து கொண்டிருக்கிறது.

காலம் மாறிவிட்டதை உணரவில்லை போலும் இந்த ஐ.நா. தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் நாடே இருக்க வங்கி கணக்கு முடக்கமாம், மத்திய கிழக்கு நாடுகளின் எல்லைகள் அத்துமீறி சத்தமில்லாமல் உள்நுழையும் அளவுக்கு பாதுகாப்பில்லாமல் இருக்க பயணம் செய்ய தடையாம். இன்னும் டிவிட்டர், பேஸ்புக் என தீவிரவாதிகள் பிராச்சாரம் செய்யும் போது ஐ.எஸ் இயக்கத்தில் சேரக்கூடாதாம்.

எவ்வளவு வேடிக்கை. அமெரிக்கா இலவசமாக மில்லியன் டாலர் கணக்கில் பணம் தருகிறது என்பதற்காக அமெரிக்காவுக்கு எதற்கெடுத்தாலும் ஆமாம் சாமி போடுவதும் என மாறிவிட்டது ஐ.நாவின் பிழைப்பு.

மத்திய கிழக்கு நாடுகளில் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் செல்வ செழிப்பு உள்ளவர்கள். ஆனால் சன்னி பிரிவினர் இன்னும் பழங்குடியினர் போல வறுமையில் வாழ்ந்து வருபவர்கள். அதிகமாக பல நாடுகளில் ஷியா பிரிவைச் சார்ந்தவர்களே ஆட்சியில். இதுவே பிரச்சினைக்கு காரணமாக இருந்தது. இதில் தான் முதல் பிரச்சினை ஆரம்பமானது. அமெரிக்கா தனது நாட்டின் தேவைகளுக்குகாக பணக்கார ஷியா முஸ்லீம்களுக்கு ஆதரவு வழங்க, சன்னி பிரிவினர் புறக்கணிக்கப்பட, காழ்ப்புணர்ச்சி ஆரம்பமானது.

ஏற்கனவே மத்திய கிழக்கே தன் தீவிர விசுவாசியான இஸ்ரேல் உடன் பகை போக்கைக் கொண்டுள்ள இரான், சிரியா போன்ற நாடுகளை சமாளிக்க வழி தேடிக்கொண்டிருந்த அமெரிக்காவுக்கு இந்தப் பிரிவினை ஒரு வாய்ப்பாக அமைந்தது. ரஷ்யாவை கட்டுப்படுத்த வழி தேடிக்கொண்டிருந்த அமெரிக்காவுக்கு ரஷ்யாவின் கடற்படை தளம் சிரியாவில் இருப்பதும் சிரியா, இரான் போன்றவை ரஷ்யாவுடன் நெருங்கி உறவாடுவதும் எரிச்சலை ஏற்படுத்தியது.

இதற்கிடையே அமெரிக்காவின் சென்ட்காம்(CENTCOM)இன் பரவலைத் தடுக்கும் விதமாக ரஷ்யாவின் செல்வாக்கு உயர்ந்து வருவதும், அமெரிக்காவை கவலையடைய வைத்தது. மேலும் தென் அமெரிக்கா நாடுகள் பலவும் கம்யூனிசத்தை ஆட்சி முறையாக தேர்ந்தெடுக்க, அமெரிக்காவின் செல்வாக்கு குறைய ஆரம்பிக்க, இறுதியில் தனது உளவு அமைப்பான சி.ஐ.ஏவை பயன்படுத்தி தன்னைப் பிடிக்காத நாடுகளின் ஆட்சியைக் கவிழ்த்து, தன் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பொம்மை ஆட்சியை நிறுவ ஆரம்பிக்க, ஹியுகோ சாவேஸ் மரணம், அரபு வசந்தம் புரட்சிகள், கடாபி படுகொலை, எகிப்தில் ஆட்சி மாற்றம் என மத்திய கிழக்கில் பெரிய ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த, இறுதியில் சிரியாவில் அந்த முயற்சியை ஆரம்பிக்க, இராக்கில் அமெரிக்கப் படைகள் நிலைத்திருக்க ரகசியமாக பயிற்சியளிக்கப்பட்ட அல்-கொய்தாவின் ஒரு பிரிவாக தொடங்கப்பட்டது தான் இந்த ஐ.எஸ் அமைப்பு. இது ரகசியமாக அமெரிக்க, இஸ்ரேல் ஆதரவைப் பெறுகிறது என தாய் இயக்கமான அல்-கொய்தாவுடன் மோதல். இதுவரை பெரிய அளவில் இஸ்ரேலை தாக்காமல் இருப்பதிலிருந்து இது ஒரளவுக்கு அமெரிக்க ஆதரவைப் பெறுவதை அறியலாம்.

மேலும் இந்த அமைப்பானது அமெரிக்காவின் ஒரு அதிகாரபூர்வமற்ற கருவியாக செயல்படுவதைக் காணலாம். பிரான்ஸ் தனது சக்தி மிக்க ஆயுதங்களையும், போர்க்கப்பலையும் ரஷ்யாவுக்கு விற்பதாக இருந்தது. இதற்கு ஒரு மறைமுக மிரட்டல் விடுக்கும் விதமாகத் தான் இந்த பாரிஸ் தாக்குதல் அரங்கேறியிருக்க வேண்டும். மேலும் தன் படைகளை ஆப்பிரிக்காவில் நிலைநிறுத்த எபோலா வைரஸ்ஸைப் பரப்பி, மக்களை காப்பாற்ற என நுழைந்த படை அங்கேயே ராணுவ தளம் அமைத்து தங்கிவிட்டதும் நாம் கவனிக்க வேண்டியது.

இராக், சிரியாவில் இயங்கி வரும் இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாதிகளின் ராணுவ நடவடிக்கைகளைக் காணும் போது முறையாக பயிற்சியளிக்கப்படாமல் இந்த மாதிரியான ராணுவ யுக்திகளைக் கையாள முடியாது. அவர்களுக்கு ஸ்டிங்கர் ரக ஏவுகணைகளை ஏவத் தெரிந்திருக்கிறது. பீரங்கிகளை பயன்படுத்தத் தெரிந்திருக்கிறது. இத்தனையும் எப்படி சாத்தியம்? உயர் ராணுவ ஆயுதங்களை பயன்படுத்த யார் பயிற்சி அளித்தது?

இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாதிகள் மூலம் சிரியாவின் ரஷ்யா ஆதரவு அல்-பசாத் ஆட்சியைத் தூக்கி எறிவது, சிரியாவில் உள்ள ரஷ்ய கடற்படை தளத்தை அழிப்பது, ஷியா முஸ்லீம்களின் ஆதரவைப் பெறுவது, இரானை தனிமைபடுத்துவது, மத்திய கிழக்கு நாடுகளில் யூத நாடான இஸ்ரேலை பலப்படுத்துவது, இராக் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றுவது, சர்வதேச பயங்கரவாத இயக்கமான அல்-கொய்தாவுக்கு மாற்றாக தன் ஆதரவில் ஒரு தீவிரவாத இயக்கத்தை உருவாக்குவது என பல கனவுகள், ராஜதந்திர நடவடிக்கைகள் இந்த இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாதிகளுக்கு பின்னணியில் இருக்கிறது என எண்ணத் தோன்றுகிறது.

சோவியத் ரஷ்யா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து இருந்தது. எப்படியாவது சோவியத் ரஷ்யாவை விரட்ட வேண்டும் என்பதற்காக அங்கு போராடிக் கொண்டிருந்த உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களை ஒன்றிணைத்து தாலிபான் இயக்கத்தை வளர்த்துவிட்டு, அதனுடன் இணைந்து போரிட்டு சோவியத் ரஷ்யாவை விரட்டியது என வரலாறு சொல்கிறது. உலகமெங்கும் உள்ள பல தீவிரவாதக் குழுக்களின் ஆரம்பம் அமெரிக்கா என அறியவும்.

தன் தோழமை நாடுகளையே உளவு பார்த்ததாகவும், தொலைபேசி அழைப்புக்களை ஒட்டு கேட்டதாகவும் பல ஆவணங்களை விக்கிலீக்ஸ், எட்வர்டு ஸ்நோடன் போன்றவர்கள் வெளியிட்டதும் உலகறியும். அந்த அளவுக்கு ஏகாதிபத்ய வெறிகொண்ட நாடாக அமெரிக்கா நிலவிவருகிறது.

அமெரிக்கா என்றென்றும் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டைத்தான் எடுத்துள்ளது. ரஷ்யா தனது பழைய ராணுவ ஒப்பந்தங்களான வார்சா உடன்படிக்கையை கைவிட்டாலும் அமெரிக்கா இன்னும் அந்த நேட்டோ உடன்படிக்கையை கைவிட்டதாக இல்லை. சோவியத் யுனியன் சிதறலைத் தொடர்ந்து ரஷ்யா பல பாடங்களை கற்றுக்கொண்டு தனது மிகப்பெரிய உளவு அமைப்பான கே.ஜி.பி(KGB) ஆகியவற்றை கலைத்துவிட்ட பின்பும் அமெரிக்கா விடுவதாக இல்லை.

உலகில் ஏற்பட்ட பல உள்நாட்டு போர்களுக்கும், யுத்தங்களுக்கும் முக்கிய காரணம் அமெரிக்கா என்பதை யாரும் மறுக்க முடியாது. சீனா அணு ஆயுதம் வைத்திருந்தால் ஏன் அமெரிக்காவிற்கு வலிக்கிறது? இரான், சிரியா அணு ஆயுதங்களை வைத்திருந்தாலோ, அல்லது ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்கினால் அமெரிக்காவிற்கு என்ன பிரச்சினை? இந்தியா-பாக்கிஸ்தான் மோதிக்கொண்டால் அமெரிக்காவிற்கு என்ன கவலை? உலகமெங்கும் தன் ராணுவத்தையும், ஆயுதங்களையும், கப்பற்படையையும் குவித்து வைக்க அமெரிக்காவிற்கு என்ன உரிமை உள்ளது?

“அதுவும் ஒரு நாடு தான்; இராக்கும் ஒரு நாடுதான். அமெரிக்கா ஒன்றும் உலகமில்லை. 196 நாடுகள் சேர்ந்ததே உலகம். அந்த அந்த நாட்டின் எல்லை, பரப்புக்கள் அவர்களுக்குரியது. மேலும் அந்த நாட்டின் இறையாண்மையை மதிக்கவேண்டும். சும்மா எல்லா நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைக்கக் கூடாது” போன்ற பாடங்களை அமெரிக்கா கற்றுக்கொள்ள வேண்டும் .

உலகில் அதிக பகைவர்கள் உள்ள நாடு அமெரிக்கா என்றே சொல்ல வேண்டும். இரான், சிரியா, கியூபா, வெனிசுலா, பொலிவியா, சீனா, ரஷ்யா என பட்டியல் நீளுகிறது. இவை அனைத்தும் மறைமுகமாக அமெரிக்காவின் மீது பகைமை கொண்ட தேசங்களாகும். எந்த விவகாரங்களிலும் அமெரிக்காவிற்கு எதிரான நிலைப்பாட்டை உடையவை. இது போதாது என அமெரிக்காவின் எண்ணெய் வள பேராசையால் பகைவர்களாக மாற்றப்பட்ட மத்திய கிழக்கு நாடுகளின் தீவிரவாதக் குழுக்கள் என இந்தப் பட்டியல் நீளுகிறது.

ஒன்று மட்டும் அமெரிக்கா உணர்ந்து கொள்ள வேண்டும். இப்படி பல தீவிரவாத இயக்கங்களை உருவாக்கி விட்டு, அதை எதிர்க்க மற்ற தீவிரவாத குழுக்களுக்கு கொம்பு சீவி விடுவதுமாக, தொடர்ந்தால் நிச்சயம் அமெரிக்கா ஒரு பல்முனை பெரிய தீவிரவாத தாக்குதலுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். இதன் வெள்ளோட்டம் தான் பாரிஸ் தாக்குதல். கொஞ்சம் தன் நாட்டு விவகாரங்களை மட்டும் கவனித்து வந்தால் நலம். இல்லை நான் சர்வதேச போலிஸ் என பிதற்றிக்கொண்டு திரிந்தால் நிச்சயம் ஒரு பிடிபடாத திருடன் தோன்றுவான். கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு. படிப்பவர்கள் புரிந்து கொள்ளட்டும் ஏகாதிபத்ய அமெரிக்காவை.

– நேதாஜிதாசன்

26 ஆண்டுகளுக்கு பின் 'விழித்துள்ள' பிளாக் ஹோல்..!

மாபெரும் அண்டவெளி புதிர்களில் ஒன்று தான் பிளாக் ஹோல் எனப்படும் கருங்குழிகள். உள் சென்ற ஒளி கூட வெளியேற முடியாத ஒற்றை வழிப்பாதையான பிளாக் ஹோல்களின் வலுவான ஈர்ப்புச் சக்தியானது கற்பனைக்கு அடங்காததாகும். 

1*XJ68DBhH_oJIBEHih98IUA.jpeg
Add caption

கண்களுக்கு புலப்படாத பிளாக் ஹோல்களின் இருப்பை தாக்கங்கள் மூலமாகவே உணர்ந்து கொள்ள முடியும் அதனால் தான் இவைகளை கருங்குகுழி என்று அழைகின்றனர். அந்த அளவு ஆபத்தான பிளாக் ஹோல்களில் ஒன்று 26 ஆண்டுகள் கழித்து சமீபத்தில் விழித்து கொண்டுள்ளதை விண்வெளி வீரர்கள் கண்டறிந்துள்ளனர்.

16-1447650986-1.jpg

பிளாஸ்மா வெடிப்பு : 

சுமார் 26 ஆண்டுகளுக்கு பின் இயங்க ஆரம்பித்துள்ள பிளாக் ஹோல் ஒன்று விண்வெளியில் மாபெரும் பிளாஸ்மா வெடிப்பு ஒன்றை கட்டவிழ்த்து விட்டுள்ளது.

Hyperspace.jpg

அளவு :

மேலும் அந்த வெடிப்பானது ஒளியின் வேகத்தோடு ஒப்பிடும் அளவு நிகழ்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

16-1447650990-3.gif

பதிவு : 

மிகவும் அரிதான இந்த செயலின் நம்பமுடியாத காட்சிகளை நிகழ்விற்கு பின், விண்வெளி வீரர்கள் வீடியோ பதிவு செய்துள்ளனர்.

16-1447650991-4.jpg

பகுதி : 

வி404 சிக்னி (V404 Cygni) என்ற நட்சத்திர அமைப்பின் ஒரு பகுதி தான் இந்த பிளாக் ஹோல் என்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

16-1447650993-5.jpg

12 மடங்கு :

மேலும் இந்த குறிப்பிட்ட பிளாக் ஹோல் ஆனது சூரியனை விட 12 மடங்கு பெரியது என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

16-1447650999-30-1443585792--85199721-c0

46 க்வாட்ரில்லியன் மைல்கள் : 

மேலும் இந்த பிளாக் ஹோல் ஆனது பூமியில் இருந்து சுமார் 46 க்வாட்ரில்லியன் மைல்கள் (quadrillion miles) தொலைவில் உள்ளது என்பதையும் கண்டறிந்துள்ளனர்.

16-1447651012-30-1443585807-black-hole-i

அமைதி : 

கடந்த சில ஆண்டுகளாக தனது நட்சத்திர அமைப்பில் இருக்கும் நட்சத்திரங்களிடம் இருந்து பிளாஸ்மாக்களை அமைதியாக உறிஞ்சு கொண்டுருந்துள்ளது.

16-1447650995-8.jpg

வெப்ப வாயு : 

விளைவாக பிளாக் ஹோல் தனை சுற்றி அளவுக்கு அதிகமான வெப்ப வாயு சுருளாயமைந்து (hot gas spiraled) கொண்டதால் வெடிப்பை நிகழ்த்தியுள்ளது.

16-1447650996-9.jpg

பிளாக் ஹோல் ஜெட் : 

இது போன்ற வெடிப்பை வான்வெளி ஆராய்ச்சியாளர்கள் பிளாக் ஹோல் ஜெட் (black hole jet) என்று குறிப்பிடுவார்கள்.

16-1447651005-30-1443585797-article-1277

பாய்ச்சசப்பட்டன : 

அந்த வெப்பமான பிளாஸ்மாவில் வெடிப்பில் இருந்து ரேடியோ அலைகள், எக்ஸ்-ரே ஒளி, மற்றும் புலப்படும் ஒளி பாய்ச்சசப்பட்டன.

16-1447651007-30-1443585799-back-hole-ga

தொலைநோக்கி : 

இந்த வெடிப்பானது மிகவும் பிரகாசமாக புலப்படும் என்பதால் இதை பூமியில் இருந்து கொண்டு 14 இன்ச் தொலைநோக்கி மூலம் கூட பார்க்க முடியும் என்று கூறியுள்ளது ஆக்ஸ்போர்டு அறிவியல் வலைப்பதிவு பல்கலைக்கழகம்.

16-1447651010-30-1443585806-black-hole.j

செயற்கைகோள் எச்சரிக்கை : 

விண்வெளி வீரர்கள் இந்த பிளாக் ஹோல் வெடிப்பின் ஆரம்பத்தை தவறவிட்டனர் என்பதும், வெடிப்பில் இருந்து வெளியேறிய எக்ஸ்-ரே தாக்கத்தினை பதிவு செய்து செயற்கைகோள் ஒன்று எச்சரிக்கை செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆய்வு : 

எச்சரிக்கை கிடைத்ததும் அனைத்து வான்வெளி ஆராய்ச்சியாளர்களின் கவனமும் அதன் மீது திரும்பி, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

16-1447651019-30-1443588190-supermassive

சம்பவம் : 

சுமார் 7800 ஆண்டுகளுக்கும் முன் இதே போன்று வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.

16-1447650998-15.jpg

வெளிப்பாடு : 

வி404 சிக்னி நட்சத்திர அமைப்பு 1989, 1956, மற்றும் 1938 ஆகிய ஆண்டுகளில் சில வெளிப்பாடுகளை நிகழ்த்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

30 நாட்கள் : 

மேலும் இந்த பிளாக் ஹோல் இன்னும் 30 நாட்களுக்கு பிளாஸ்மா வெடிப்பை நிகழ்த்திக் கொண்டே இருக்கும் என்றும் வான்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

30 நாட்கள் கழித்து இந்த பிளாக் ஹோல் மீண்டும் பழைய நிலைக்கு அதாவது அமைதியான தூக்கத்திற்க்கு சென்று விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது, இது போன்ற பிளாக் ஹோல் ஜெட் சம்பவங்களை சூப்பர்மாசிவ் பிளாக் ஹோல்களோடு ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்ய விஞ்ஞானிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

16-1447651003-30-1443585795-652349main-a

புரிதல் : 

அதன் மூலம் தான் நமது பால்வெளி மண்டலம் பற்றிய அதிகப்படியான புரிதலை பெற முடியும் மற்றும் வருங்கால நிகழ்வுகளை அதிகம் கணிக்க முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

நடுப்பகுதி : 

நமது பால்வெளி மண்டலத்தின் நடுப்பகுதியிலும் ஒரு மாபெரும் பிளாக் ஹோல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

சுமந்திரனின் குற்றச்சாட்டுகளுக்கு விக்னேஸ்வரனின் பதில்!

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி. சுமந்திரன் அவுஸ்திரேலிய வானொலி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்த குற்றச்சாட்டுக்களுக்கு முதலமைச்சர் அறிக்கை ஒன்றின் மூலம் பதிலளித்துள்ளார்.

முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையின் முழுவிபரமும் பின்வருமாறு,

இனப்படுகொலையும் நாமும் 
 
எனது அன்பிற்குரிய மாணவன் சுமந்திரன் அவர்கள் பல குற்றச் சாட்டுகளை அண்மைக் காலமாக முன்வைத்து வந்துள்ளார்.

அவை அனைத்திற்கும் பதில் கூற வேண்டிய காலம் கனிந்துள்ளது.  முதலில் அவர் இனப்படுகொலை பற்றிய வடமாகாண சபைத் தீர்மானம் பற்றி விமர்சித்தார்.
உண்மையில் இந்தத் தீர்மானத்தைத் தயாரித்துத் தரவேண்டும் என்று திரு.சுமந்திரன் அவர்களிடம் கோரிய போது அதற்கு அவர் மறுப்புத் தெரிவிக்கவில்லை.

ஆனால் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் எதுவும் சொல்லாமல் வெளிநாடு சென்று விட்டார் என்று நினைக்கின்றேன். அவரோடு தொடர்பு கொள்ள முடியவில்லை.

எனவேதான் கடைசி நேரத்தில் நானே தயாரிக்க வேண்டிய கடப்பாடு என்னைச் சார்ந்தது. தீர்மானம் வெளிவந்தவுடனே அதனை வரவேற்று அறிக்கை தந்த அவர் பின்னர் அப்பேர்ப்பட்ட தீர்மானம் பிழையானது என்றார்.

காரணம் அதன் ஊடாக எவரையும் சட்டப்படி குற்றவாளிகள் ஆக்க முடியாது என்றும் அதனால் அந்தத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்றும் தெரிவித்தார்.
பல மக்கட் பிரச்சனைகள் தம்முன் வரும் போது சட்டத் தரணியான அவர் இந்த இந்த விடயங்களில் வழக்குப் பதிய முடியாது, சாட்சியங்கள் போதாது என்றெல்லாம் கூறியிருப்பார்.
அதற்காகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீங்கு இழைக்கப்படவில்லை என்றோ பாதிப்பு ஏற்படவில்லை என்றோ மனக் கிலேசம் ஏற்படவில்லை என்றோ அர்த்தமில்லை.

எமது தீர்மானம் இந் நாட்டில் இதுவரை நடந்ததைப் பிரதிபலிக்கும் தீர்மானம். அத்தீர்மானம் எவ்வெவற்றை இனப்படுகொலைச் சட்டம் இனப்படுகொலையாக ஏற்றுக் கொண்டுள்ளதோ அவை எம் நாட்டில் நடைபெற்றுள்ளன என்பதைப் பிரதிபலிக்கும் தீர்மானம்.

அது ஒரு சமூக ஆவணம். சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது ஐ.நா செயலாளரினால் தீர்மானிக்கப்பட வேண்டியது. 

உண்மையும் நல்லிணக்கமும் 

மேலும் இதனை இவ்வருடம் ஜனவரி 8ந் திகதிக்குப் பின்னர் கொண்டு வந்ததும் கௌரவ சுமந்திரன் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் உண்மையில் ஜனவரி 8ந் திகதிக்குப் பின்னர் தான் இத் தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டிய அவசியம் எழுந்தது.

எம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசாங்கந்தான் நல்லிணக்கம் பற்றிக் கூறிவருகின்றது. தென்ஆபிரிக்காவில் உண்மையும் நல்லிணக்கமும் சார்ந்த ஆணைக்குழுவே நியமிக்கப்பட்டது.
உண்மை தெரிந்தால்த்தான் நல்லிணக்கத்தை எய்தலாம். உண்மை தெரியாமல் நல்லிணக்கம் எப்படி உருவாகும்?

உலகத்திற்கு மட்டும் எங்கள் தீர்மானம் உண்மையை விளம்பவில்லை. இலங்கை மக்களுக்கும் அத்தீர்மானம் உண்மையை விளம்பியது. முக்கியமாகச் சிங்கள மக்கள் அதில் கூறப்பட்டவை உண்மை என்று தெரிந்து ஏற்றுக் கொண்டால்த்தான் நல்லிணக்கத்திற்கான அடுத்த அடியை எடுத்து வைக்க முடியும்.

அவை எதுவும் நடக்கவில்லை என்று சிங்கள மக்கட் தலைவர்கள் கூறினால் நல்லிணக்கத்தை எவ்வாறு உருவாக்கப் போகின்றோம்?

எனவே இனப்படுகொலை பற்றிய வட மாகாண சபையின் தீர்மானம் கௌரவ பிரதமர் இரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் அவருடன் நெருங்கிய உறவை வைத்திருக்கும் மற்றையவர்களுக்கும் கோபத்தைத் தருவதாக இருந்தாலும் அத்தீர்மானத்தின் உள்ளடக்கங்கள் எங்கள் உறுப்பினர்கள் அனைவரதும் ஏகோபித்த கருத்தையே வெளிக்காட்டி நின்றன. உண்மையைச் சுட்டிக் காட்டி நின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தெரிவே முதலமைச்சர் பதவி 

அடுத்த குற்றச்சாட்டு என்னைத் தமது கட்சியே அரசியலுக்கு அழைத்து வந்ததென்றும் வடமாகாண சபையை நிர்வகிக்கின்ற பொறுப்பை கட்சியே கொடுத்தது என்றும் கூறியுள்ளார்.
இது தவறு. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பல கட்சிகள் கொண்ட ஒரு கூட்டணி. அது பதிவு படுத்தப்படாத கட்சி. என்னை வலிந்து பலரும் அரசியலுக்குள் அழைத்த போது சகல கட்சிகளும் சேர்ந்து என்னை அழைத்தால் அவர்களின் கோரிக்கையைப் பரிசீலிப்பதாகக் கூறினேன்.

சகல கட்சித் தலைவர்களும் என்னை முதலமைச்சராக முன்னிறுத்துவது என்பதை ஏற்றுக் கொண்டார்கள். அதாவது இலங்கைத் தமிழரசுக் கட்சியும், ஏனைய கட்சித் தலைவர்களும் இணைந்து கூட்டாகவே குறித்த தீர்மானத்தை எடுத்திருந்தார்கள்.

அதன் அடிப்படையில் தேர்தல் நடந்தது. 1,33,000க்கு மேலதிகமான வாக்குகள் கிடைத்தன. அதனால்த்தான் நான் வடமாகாண முதலமைச்சர் பதவி கிடைக்கப்பெற்றேன்.
ஏற்றுக் கொண்டேன். கௌரவ சுமந்திரன் கூறுவது போல் அவரின் கட்சி என்னைக் கூப்பிட்டு நாங்கள் இந்தப் பதவியை உங்களுக்குத் தருகின்றோம்.

எங்கள் கட்சிக்கு விஸ்வாசமாக நீங்கள் நடக்க வேண்டும் என்று நிபந்தனை இட்டு எனக்கு இப் பதவியை வழங்கவில்லை. ஆகவே கௌரவ சுமந்திரனின் 2ம் குற்றச் சாட்டு அஸ்திவாரமற்ற குற்றச் சாட்டு.

பொதுத் தேர்தலும் நிதி சேகரிப்பும் 

அடுத்த குற்றச் சாட்டு நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் போது கட்சிக்குச் சார்பாகச் செயற்படவில்லை என்பது. நான் ஏதாவது ஒரு கட்சியின் நடைமுறை உறுப்பினராக இருந்தால்த்தானே கட்சி என்னைக் கட்டுப்படுத்தலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பதிவுபடுத்தப்படாத கட்சி. இலங்கைத் தமிழரசுக் கட்சியோ வேறேதேனுங் கட்சியோ என்னைத் தமது கட்சிக் கூட்டங்களுக்கு அழைக்கவுமில்லை.
நான் போகவுமில்லை. திருகோணமலையில் நடந்த ஒரு கூட்டத்திற்கு அழைக்கப்பட்டேன். போனேன். என்னைப் பொறுத்த வரையில் வடமாகாண மக்களே. பெருவாரியாக எனக்கு வாக்களித்த அவர்களே, எனது கட்சி.

அவர்களின் நன்மையே எனது கட்சிக் குறிக்கோள். ஆகவே கட்சியே எனக்குப் பதவியைக் கொடுத்தது என்பதிலும் பார்க்க மக்களே எனக்கு அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்கள் என்பதே உண்மையாகும்.

நான் கேட்டு கட்சி எனக்கு ஒரு பதவியை வழங்குவதையும் கட்சி கேட்டு நான் மக்களிடம் வாக்குப்பெற்று பதவி பெறுவதையும் ஒன்றாகக் கருத முடியாது.
அடுத்து கனடா செல்லாமை பற்றிய குற்றச்சாட்டு. முதலில் பலர் கேட்ட போது எனக்கு முழங்கால் வலி இருந்தது உண்மை.

எமது வைத்தியர்கள் காலக்கிரமத்தில் எனக்கு சிகிற்சை அளித்து அதிலிருந்து விடுவித்ததும் உண்மை. அதன்பின்னர் எனக்குச் சுகமாக இருக்கவே நான் அமெரிக்கா சென்றதும் உண்மைதான்.

அமெரிக்கா சென்ற போது பல விடயங்களைக் கவனிக்க வேண்டியிருந்தது. அதே நேரம் இங்கிலாந்தில் உயிருடன் இருக்கும் எனது ஒரேயொரு சகோதரி நான் இங்கிலாந்து வந்து செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க இங்கிலாந்து செல்ல வேண்டி வந்ததும் உண்மை.

அதனால் என்னால் கனடா செல்ல முடியாது என்று கூறியதும் உண்மை. அமெரிக்காவில் இருக்கும் போதே சில சரீர உபாதைகளுக்கு நான் உட்பட்டு இருந்தேன்.

எனவே கனடா சென்று வருவது என்பது எனக்குத் தேக அசௌகரியத்தையே தந்திருக்கும்.

அத்துடன் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பணம் திரட்ட வேண்டுமானால் அப்பணத்தைச் செலவழிக்கப் போகும் பாராளுமன்ற வேட்பாளர்களே அதைப் போய் கனேடிய மக்களிடம் கேட்டுப் பெற வேண்டுமே ஒளிய வடமாகாண சபையைச் சேர்ந்த நான் எப்படிக் கேட்பது?
பணத்தைச் செலவு செய்யப் போகின்றவர்கள், அதற்குக் கணக்குக் காட்டப் போகின்றவர்கள், பணத்தை இலங்கைக்கு எடுத்துவரப் போகின்றவர்கள் ஒரு புறம் இருக்க என்னை அங்கு செல்ல வைப்பதற்கு கௌரவ சுமந்திரன் அவர்கள் ஊக்கம் காட்டியது எதற்காக என்று எனக்குத் தெரியவில்லை.

உண்மையில் அவரின் கூற்றின்படி தேவையற்ற இனப்படுகொலைத் தீர்மானத்தை ஏக மனதாக வடமாகாணசபை நிறைவேற்றிய பின்னர் என்னைக் கனேடிய மக்கள் ஒதுக்கித்தள்ளியிருப்பார்கள் என்ற அவர் கருத்துப்படியான விதத்தில் அவர் என்னைக் கனடா செல்ல அழைத்ததே பிழையென்றுதான் கருத வேண்டும்.

தேர்தல்கால அறிக்கைகள் 

அடுத்த குற்றச்சாட்டு கட்சிக்கு எதிராக அறிக்கை விட்டிருந்தேன் என்பது. அவ்வாறு நான் எந்தத் தருணத்திலும் அறிக்கை விடவில்லை. கட்சிகளைச் சேராத நான் நடுநிலையாக இருந்ததில் எந்தத் தவறும் இல்லை.

ஐந்து அல்லது நான்கு கட்சிகள் சேர்ந்திருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அபிமானிகள் தமக்குள் போட்டி போட்டுக் கொண்ட ஒரு தேர்தலில் நான் எவ்வாறு பாரபட்சம் காட்டி இன்னாருக்கு வாக்குப் போடுங்கள் என்று கேட்பது?

அப்படியானால் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்குப் போடுங்கள் என்று கூறியிருக்கலாமே என்ற கேள்வி எழுகின்றது.

இங்கு சில விடயங்களை நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். இவ் வருடம் ஜனவரி மாதம் 8ந் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடந்தது. அடுத்த நாள் கௌரவ இரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

கௌரவ சம்பந்தன், கௌரவ சுமந்திரன் சகிதம் நானும் சேர்ந்து கொழும்பு புலர்ஸ் லேனில் இருக்கும் கௌரவ மலிக் சமரவிக்கிரம அவர்களின் வீட்டில் கௌரவ ரணில் அவர்களைச் சந்தித்து அவருக்கு எமது பாராட்டுக்களைத் தெரிவித்தோம்.

அப்போது ஜேவிபியைச் சேர்ந்தவர்கள் கூட அங்கு வந்து அவருடன் கை குலுக்கினார்கள்.

வடக்கிலிருந்து இராணுவ வெளியேற்றம் 

நாங்கள் அங்கிருந்து செல்கையில் கௌரவ ரணில் அவர்கள் என்னைப் பார்த்துக் கூறினார் - “நான் நாளைக்கு மகாநாயக்க தேரருக்கு வடக்கிலிருந்து இராணுவத்தினர் எவரையும் அகற்றப் போவதில்லை என்று கூறப் போகின்றேன்” என்றார்.

பக்கத்தில் கௌரவ சம்பந்தன் அவர்களும் கௌரவ சுமந்திரன் அவர்களும் இருந்தார்கள். நான் அந்த நேரத்தில் எதையும் கூறவிரும்பவில்லை. சிரித்துவிட்டுத் திரும்பி வந்து விட்டேன்.
கௌரவ ரணில் அவர்களின் கூற்றின் தாற்பரியம் எனக்குப் புரிந்தது. அதாவது “இராணுவத்தைப் பொறுத்த வரையில் தமிழ் மக்களுக்கு உதவுவதாக நான் முன்னர் உங்களுக்குக் கூறியிருந்தாலும் அதற்கு மாறாக நான் மகாநாயக்கருக்குத் தெரிவிக்கப் போகின்றேன்” என்பதே அது.

அதாவது தமிழர்களுக்கு ஒரு முகம் காட்டிய நான் மகாநாயக்கருக்கு என் மறு முகத்தைக் காட்டப் போகின்றேன் என்பதே அவரின் கூற்றின் உள்நோக்கம்.

நான் அதன்பின் அதைப் பொருட்படுத்தவில்லை. அவரின் உறவினர் கௌரவ ருவான் விஜேவர்த்தன வடக்கு வந்து அதே கருத்தைத் தெட்டத் தெளிவாக இராணுவத்தினர் மத்தியில் கூறிய போதுதான் அதற்கு மறுமொழி கொடுத்தேன்.

அதாவது இந்தக் கருத்தை ஏற்கனவே எனக்குக் கௌரவ ரணில் அவர்கள் கூறிவிட்டார் என்றேன். யுஎன்பிஐ மாமன் மருமகன் கட்சி என்று முன்னர் அழைப்பார்கள். அதேபோன்று மாமன் கூறியதை வடக்கு வந்து மருமகன் கூறினார் என்றேன்.

ஆனால் உண்மையில் பல வயது வித்தியாசம் இருந்தாலும் கௌரவ ரணில் அவர்களின் ஒன்று விட்ட சகோதரரே தான் என்று கௌரவ ருவான் விஜேவர்தன எனக்குப் பின்னர் கூறியிருந்தார்.

நான் அவர் கூற்றை விமர்சித்துக் கூறியதில் கௌரவ ருவான் அவர்களுக்கு எந்தவித கோபமும் இல்லை. 

கௌரவ ரணிலும் நம்மவர்களும் 

அதன் பின் கௌரவ ரணிலிடம் இந்தியாவில் இராணுவம் பற்றி இவ்வாறு வடமாகாண முதலமைச்சருக்குக் கூறினீர்களா என்று கேட்டபோது என்னைத் தான் சந்திக்கவுமில்லை பேசவுமில்லை என்று தொலைக்காட்சி ஒன்றுக்கு மறுமொழி அளித்தார்.

அதையுந் தாண்டி “விக்னேஸ்வரன் ஒரு பொய்யர்” என்றும் கூறினார். அது பற்றி என்னுடன் இருந்த கௌரவ சம்பந்தனோ, கௌரவ சுமந்திரனோ உண்மை என்ன என்பதைக் கூற முன்வரவில்லை.

பேசா மடந்தைகளாக இருந்தார்கள். நான் மட்டும் இரண்டு மூன்று கிழமைகள் கழித்து “நான் பொய்யரா இல்லையா என்பது பிரச்சனை இல்லை.

இராணுவத்தினரை ஒரு திட்டத்தின் கீழ் குறைத்து வடமாகாணத்தில் இருந்து படிப்படியாக வெளியேற்றுவேன் என்று கௌரவ ரணில் அவர்கள் கூறட்டும். நான் அடுத்த நிமிடமே அவருக்குக் கைலாகு கொடுக்கின்றேன்.” என்றேன்.

இவ்வளவுக்கும் கட்சிக்கு நான் சார்பாக நடந்து கொள்ளவில்லை என்று கூறும் கௌரவ சுமந்திரன் தமது கட்சி உறுப்பினர் என்று அவர் கருதும் எனக்குச் சார்பாக ஒரு வார்த்தைதானும் கூறினாரா?

பணம் சேர்க்க நான் வேண்டும். பழி ஏற்கவும் நான் தான் வேண்டும் என்ற நிலையில், கௌரவ ரணிலின் நெருக்கமே தமக்குக் கூடிய முக்கியத்துவம் உடையது, உறுப்பினர் உறவு முக்கியமில்லை என்ற நிலையில் நான் நடுநிலை வகித்ததில் என்ன தப்பு?

கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் கௌரவ சுமந்திரனுடையதுதான் 

மேலும் அண்மைய பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் கௌரவ சுமந்திரன் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் வரைவை எனக்கு அனுப்பிவிட்டு,
அது சம்பந்தமாக நான் எனது அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து எமது கருத்துக்களைத் தரவேண்டும் என்று நான் கூறியதன் பிற்பாடுகூட எம்மைப் புறக்கணித்து அடுத்த நாளே தனது வரைவைப் பத்திரிகைகளுக்கு “இதுதான் எமது தேர்தல் விஞ்ஞாபனம்” என்று வெளியிட்ட பின் நான் நடுநிலை வகித்ததில் என்ன தப்பு?

அத்துடன் ஐக்கிய இராஜ்யத்திற்குப் போன போது கௌரவ சுமந்திரன் அவர்கள் வடமாகாண  சபையினருடன் கலந்தாலோசிக்காமல் அவர்களை மதிக்காமல் தான்தோன்றித்தனமாக மீள்குடியேற்றம் பற்றித் தமது கருத்துக்களை வெளியிட்ட பின் நான் நடுநிலை வகித்ததில் என்ன தப்பு?

தான்தோன்றித்தனமான வேட்பாளர்கள் தெரிவு 

மேலும் வடமாகாண சபையை உருவாக்கியபோது ஒவ்வொருவரின் திறமைகளையும் அனுபவத்தையும் தகைமைகளையும் அத்துடன் அரசியல் பின்னணிகளினால் ஏற்பட்ட சில கட்டுப்பாடுகளையும் மனதில் வைத்தே நான் எனது அமைச்சர்களைத் தெரிவு செய்தேன்.
அண்மைய பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் வேட்பாளர்களின் தகைமைகள், வாக்காள மக்களின் போரின் பின்னரான அவர்களின் தேவைகள், முன்னுரிமைகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு அலசி ஆராய்ந்து,

வடமாகாண சபையினரின் இருவருட அனுபவத்தின் அடிப்படையில் எவ்வெவர்களை நியமிப்பது என்ற விடயத்தை வெறும் சம்பிரதாயத்திற்காகவேனும் எமது வடமாகாண சபையினருடன் கலந்தாலோசிக்காமல் தான்தோன்றித்தனமாகவே வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அந்தச் சூழ்நிலையில் நான் நடுநிலை வகித்ததில் என்ன தப்பு?

அரசியல் தீர்வு பரம இரகசியம் 

மேலும் வடமாகாண சபையினருடன் கலந்தாலோசியாமல் தான்தோன்றித்தனமாக சிங்கப்பூரில் தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றியும் அரசியல் தீர்வு பற்றியும் கௌரவ சுமந்திரன் அரசாங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டார்.

அது பற்றி இது வரையில் எந்த விதமான கருத்துப் பரிமாற்றமும் நடைபெறவில்லை. தான்தோன்றித்தனமாக அவர் நடக்கையில் நான் நடுநிலை வகித்ததில் என்ன தப்பு?
உள்ள+ராட்சி அமைச்சர் என்ற வகையில் நான் ஊழல் நிறைந்த சில உள்ள+ராட்சி மன்றங்களைச் செயலற்றதாக்க வேண்டியிருந்தது.

செயலாளரைத் தாக்கிய ஒரு பிரதேசசபைத் தலைவர் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது. பிழையான வேட்பாளர்களைத் தேர்தல்களில் நிறுத்துவதால்த்தான் இப்பேர்ப்பட்ட நிகழ்வுகள் நடக்க வேண்டி வந்தது.

தகைமை, தரம், அறிவு, நேர்மை போன்றவை வெறும் வாய்ச் சொற்களாக இருக்கப்படாது. தகைமையுடையோரையே நாங்கள் வேட்பாளர்களாக நியமிக்க வேண்டும். ஆகவே அவ்வாறான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுங்கள் என்று கூறியதில் என்ன தப்பு?

மாண்புமிகு ஜனாதிபதி சிறிசேன அவர்கள்கூட பல கட்சிகள் சேர்ந்த தமது கூட்டணியினரின் தேர்தலில் நடுநிலைமை காத்தார். அதில் என்ன தப்பு?

பத்திரிகையாளர்கள் விடுத்து விடுத்து ஏன் நடுநிலைமை வகிக்கின்றீர்கள் என்று கேட்ட போது இவற்றைக் கூற விரும்பாமல்த் தான் “நான் ஊமை” என்று கூறினேன்.

அடுத்த குற்றச்சாட்டு என்னுடைய தேர்தலின் போதான இரு அறிக்கைகள் தெளிவாக மாற்றுக் கட்சிகளைச் சுட்டிக் காட்டுபவையாக அமைந்தன என்பது.

நல்லவர்களைத் தேர்ந்தெடுங்கள், வல்லவர்களைத் தேர்ந்தெடுங்கள், நேர்மையானவர்களைத் தேர்ந்தெடுங்கள் என்று கூறியது மாற்றுக் கட்சியையே சுட்டிக் காட்டியது என்றால் எமது கூட்டுக் கட்சியில் நல்லவர்களும் வல்லவர்களும் நேர்மையானவர்களும் இல்லை என்றா கௌரவ சுமந்திரன் அவர்கள் கூறுகின்றார்?

பாராளுமன்றத் தேர்தலும் நாமும் 

ஒரு வேளை வீட்டில் முடங்கிக் கிடக்காது வேளைக்குச் சென்று வாக்களியுங்கள் என்று நான் கூறியதற்கு அவர் தானாக அளித்த வியாக்கியானத்தை அவர் குறிப்பிடுவதாக இருந்தால் எனக்கு அப்பேர்ப்பட்ட எண்ணம் எதுவும் அவ் அறிக்கையை வெளியிடும் போது இருக்கவில்லை என்பதே உண்மை.

அவ்வாறு இருந்திருந்தால், நான்; எவ்வாறு கூறியிருக்க வேண்டும்? உங்கள் வீடுகளை விட்டுச் சைக்கிளில் பிரயாணஞ் செய்து சென்று வாக்களியுங்கள் என்று கூறியிருக்க வேண்டும்.
கௌரவ சுமந்திரன் அவர்கள் தான் தரும் வியாக்கியானந்தான் உண்மை நான் கூறும் உண்மை உண்மையல்ல என்று அடம் பிடிப்பது அவருக்கு அழகல்ல.

ஜூலை மாதம் 17ந் திகதி இங்கிலாந்து ஹரோவில் பல தரப்புக்கள் இணைந்து என்னை அழைத்திருந்தார்கள். எனது செவ்வி படமாக்கப்பட்டு பல நாடுகளிலும் காட்டப்பட்டது.
மாற்றுக் கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பீர்களா என்ற கேள்விக்குத் திட்டவட்டமாக நான் கூறிய பதில் “நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு எந்தக் கட்சிக்கும் ஆதரவு கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை” என்பது.

இது வரையில் அவ்வாறே நான் இருந்து வருகின்றேன். கட்சித் தலைமைத்துவம் தாம் எண்ணுவதே சரியென்று நினைக்க, அதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாதென்றால் எமது கருத்து கட்சியைப் புறக்கணித்ததாக அமையாது.

ஒரு வேளை கட்சி சில விடயங்ளை அபிமானிகளிடையே அல்லது அனுசரணையாளர்களிடம் ஒரு முறையான நியாயமான தீர்மானத்திற்கு விட்டால் அவர்களில் பெரும்பான்மையோர் கட்சித் தலைமையின் கருத்து பிழையென்று கூறக் கூடிய சந்தர்ப்பங்கள் கூட எழலாம்.
கொள்கைகளில் இருந்து பிறழாத வலுமிக்க நேர்மையான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுங்கள் என்று கூறியது ஒரு போதும் கட்சிக்குப் பாதகமான கருத்தாக எடுக்கப்பட முடியாது. அது கட்சியை வலுவேற்றும் ஒரு அப்பியாசமாகவே கருதப்பட வேண்டும்.

உட்கட்சி ஜனநாயகமே கட்சியை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் 

பொதுவாகக் கட்சிகள் பற்றி எனக்குப் பல கருத்துக்கள் உண்டு. கட்சி என்பது அதன் உறுப்பினர்களின் கருத்துக்களைப் பிரதிபலிக்க வேண்டும்.

சில கருத்துக்களைப் பெரும்பான்மையினரின் வாக்கின் மூலம் நிராகரிக்கலாம். ஆனால் ஒரு கட்சியானது அதன் உறுப்பினர்களின் கருத்தறிந்து நடக்க வேண்டும்.

கட்சியின் தலைமைத்துவம் தான்தோன்றித்தனமாக நடக்க முனைவது கட்சிக்குப் பாதிப்பையே ஏற்படுத்தும்.

மேலும் வடமாகாணம் பற்றிய கருத்துக்களைக் கட்சி வெளியிட முன்னர் வடமாகாணசபை உறுப்பினர்களுடன் தலைமைத்துவமானது கலந்துறவாட வேண்டிய ஒரு கடப்பாடும் அதற்கு உண்டு.

வடமாகாண சபையின் அலுவலர் நியமனங்கள் பற்றி நேரடியாக எமது அலுவலர்களுக்கு கட்சி சார்பில் கருத்துக்களை வழங்கி வடமாகாண மக்கட் பிரதிநிதிகளை உதாசீனம் செய்வதும் வரவேற்கத்தக்கதல்ல.

இவை அனைத்தையும் நான் கட்சித் தலைவருக்கு எழுத்து மூலம் சென்ற ஏப்ரல் மாதந் தொடக்கம் தெரிவித்து வந்துள்ளேன்.

ஒரு கடிதத்திற்கு அவர் பதிலும் அளித்துள்ளார். மேலும் அண்மையில் கௌரவ சம்பந்தன் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட போது அவருக்கு என் மனமுவந்த வாழ்த்தைத் தெரிவித்த கடிதத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களும் வடகிழக்கு மாகாண சபைகளின் உறுப்பினர்களும் சேர்ந்து ஒருமித்து,

எமக்கு வாக்களித்துத் தெரிவு செய்த மக்களின் தேவைகளைப் பெற்றுக் கொடுக்க ஆவன செய்யவேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்திருந்தேன். இப்பொழுதும் அக் கடிதங்களுக்கு அவரிடம் இருந்து பதிலை எதிர்பார்த்தே இருக்கின்றேன்.

ஆகவே கௌரவ சுமந்திரன் அவர்கள் தமக்குக் கட்சியில் இதுகாறும் இருந்த மதிப்பு குறைகின்றதே என்ற ஆதங்கத்தில் அதற்கு என்னைப் பலிக்கடாவாக்க முனைவது வருத்தத்திற்குரியது.

எனினும் அவர் எனது பழைய மாணவர் என்ற விதத்தில் அவருக்கு இறைவன் ஆசி என்றென்றும் இருப்பதாக என்று பிரார்த்திக்கின்றேன்.

நன்றி. வணக்கம்.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

Sunday 15 November 2015

தமிழினியை முன்வைத்து ஈழத்தமிழர்கள் சிந்திக்க வேண்டியவை

2009 மே18 இற்குப்பின் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் மத்தியில் அதிகம் பிரபல்யமான ஒருவராக தமிழினி காணப்பட்டார். இதுவரை தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களுள் ஒப்பீட்டளவில் உயர் மட்ட பிரதானிகளில் ஒருவராகவும் அவர் காணப்பட்டார். இவை காரணமாகவே அவருடைய மறைவும் அதிகம் கவனிப்பைப் பெற்றிருக்கிறது.

அவருடைய இறுதி நிகழ்வை உற்றுக் கவனித்தவர்களும் அவரோடு நெருங்கிப் பழகியவர்களும் பின்வரும் அபிப்பிராயங்களைத் தெரிவித்திருக்கிறார்கள்.

01.ஒப்பீட்டளவில் அதிக தொகை மக்கள் இறுதிநிகழ்வில் பங்குபற்றியிருக்கிறார்கள்;. இது தடுப்பில் இருந்து வந்தவர்கள் மீது தமிழ் மக்களுக்குள்ள அன்பை வெளிகாட்டுவதாயுள்ளது.
02.அதிக தொகை அரசியல் பிரமுககர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். ஆனால் ஒரேயொரு அரசியல்வாதி -திருமதி பத்மினி சிதமம்பரநாதன் -மட்டும் இடுகாடு வரை சென்றிருக்கிறார். மற்றவர்கள் இடையிலேயே சென்றுவிட்டார்கள் என்று தமிழ் மிரர் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்;.

03.தமிழினியின்; தாயாhருடைய வீடு அதாவது இறுதி நிகழ்வு நிகழ்ந்த வீடு கீழ்மத்தியதர வர்க்கத்துக்குரிய குறைந்த வளங்களுடனேயே காணப்பட்டது.

04.தமிழினியின் ஒரு சகோதரி நோர்வேயில் வசிக்கிறார். எனினும் அவருடைய குடும்பத்தின் நிதி நிலை அப்படியொன்றும் பெரிய செழிப்பாகக் காணப்படவில்லை. அதாவது தமிழனி புலிகள் இயக்கத்தில் பெற்றிருந்த முதன்மையைப் பயன்படு;த்தி அவருடைய குடும்பம் தன்னை வுளர்த்துக் கொள்ள முற்படவில்லை. அதுமட்டுமல்ல அவர் தடுப்பிலிருந்து வந்த பின்னரும் அவருடைய குடும்பத்திற்கு போதிளவு உதவிகள் கிடைத்திருக்கவில்லை.
05. அவர் தடுப்பிலிருந்து வந்த பின்னர் அவரை அரசியல் பிரமுகர்கள் என்று கூறத்தக்கவர்கள் பெரும்பாலும் சந்தித்திருக்கவில்லை.

06. அவர் நோய்வாய்ப்பட்டிருந்த நாட்களில் அரசியற் பிரமுகர்கள் எவரும் அவரை வைத்தியசாலைக்குச் சென்று பார்த்திருக்கவில்லை.

07. இறுதிக்கட்டத்தில் அவருக்குரிய மருத்துபவச் செலவுக்காக பெருந்தொகைப் பணம் தேவைப்பட்டிருக்கிறது. அதைத் திரட்டுவதற்கு அவருடன் நெருக்கமான சிலர் முயற்சித்திருக்கிறார்கள். நோர்வேயைச் சேர்ந்த ஒரு மகளிர் அமைப்பும் ஒரு இணையத்தளமும் சில தனிநபர்களும் நிறுவனங்களும் உதவியுள்ளன.

08. நோர்வே ஒஸ்லோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு பேராசிரியரும், “எனது மகள் ஒரு பயங்கரவாதி” என்ற படத்தைத் தயாரித்த ஒரு நோர்வீஜிய பெண் திரைப்படவியலாளரும் தமிழினிக்கு தனிப்பட்டமுறையில் உதவியுள்ளார்கள்.

09. அவருடைய சிகிச்சைக்குத் தேவையான நிதியைத் திரட்ட முற்பட்டபோது ஒரு பகுதியினர் உதவியிருக்கிறார்கள். ஒரு பகுதியினர் மறுத்திருக்கிறார்கள். அவர் சயனைட் அருந்தாமல் சரணடைந்தது ஒரு வீழ்ச்சி என்ற தொனிப்படக் குற்றம் சாட்டும் ஒரு தரப்பினர் அவருக்கு உதவிகள் எதையும் செய்ய விரும்பவில்லை.

10.அவருடைய இறுதி நிழ்வில் புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலகம் மலரஞ்சலி செலுத்தியிருந்தது. இது ஜனவரி 08 இற்குப் பின்னரான ஒரு புதிய தோற்றப்படாகும்.
11.செஞ்சோலை படுகொலை மற்றும் கட்டாய ஆட்சேர்ப்பு தொடர்பில் தமிழினியின் மீதும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. ஆனால் தடுப்பில் இருந்து வந்தபின் அவர் தனது இறந்தகாலத்தை எப்படி சுயவிமர்சனம் செய்துகொண்டார் என்பது எங்கேயும் பதிவு செய்யப்படவில்லை. அவரைப் போன்ற அரசியல் விளக்கமுடைய , உயர் பிரதானியாக இருந்த ஒருவர் தனது இறந்த காலத்தைக்குறித்து மனம் திறந்து பேசும் போது அதிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருந்திருக்கும். ஆனால் தமிழினி அவ்வாறு மனம் திறந்து பேசமுன்பே இளவயதில் இறந்துபோயுள்ளார். அண்மையிவ் வெளியான பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில் செஞ்சோலை வளாகத்தில் கொல்லப்பட்டது பாடசாலை மாணவிகளே என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இவை யாவும் தமிழினியின் மறைவின் பின் அவருடைய இறுதி நிகழ்வில் அவதானிக்கப்பட்ட மற்றும் அவருடன் பரிவோடு பழகியவர்கள் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பாகும்.
அவர் புலிகள் இயக்கத்தின் உயர் மட்டப் பிரதானியாக இருந்தவர். ஆதிக பிரபல்யத்தோடுமிருந்தவர். எனவே அவருடைய பிரிவு, அதிகரித்த ஊடக அவதானிப்பைப் பெற்றது ஆனால் அவரைப் போல பிரபல்யம் அடைந்திராத தடுப்பிலிருந்து வந்த முன்னாள் புலிகள் இயக்கத்தவர்களின் கதி எவ்வாறுள்ளது? அவர்களுக்கு யார் உதவுகிறார்கள்?

அவர்களுக்கு யார் ஆதரவாகவும் ஆறுதலாகவும் இருக்கிறார்கள்? இலங்கை அரச புலனாய்வுத்துறை தவிர வேறு எந்த ஒரு தமிழ் அமைப்பாவது அவர்களுடன் உறவை பேணுகிறதா? புடைத்துறைப், புலனாய்வாளர்களிடம் தடுப்பால் வந்தவர்கள் பற்றிய துலக்கமான புள்ளிவிபரங்கள் இருக்க முடியும். இதுதவிர வேறு எந்த தமிழ் அமைப்பிடமாவது அல்லது கட்சியிடமாவது இது தொடர்பான புள்ளிவிபரங்கள் உண்டா? நாட்டுக்குள்ளேயும் வெளியேயும் இருந்து தனிப்பட்ட முறையில் கிடைக்கும் உதவி மற்றும் ஆறுதலைத் தவிர நிறுவனமயப்பட்ட உதவிகள் அல்லது ஆறுதல் ஏதும் அவர்களுக்குக் கிடைக்கின்றதா? இக்கேள்விகளுக்கு யார் பதில் சொல்லுவது? தமிழ்க்கட்சிகளா? மாகாணசபையா? சிவில் அமைப்புக்களா, மதநிறுவனங்களா? தொண்டுநிறுவனங்களா? புத்திஜீவிகளா, ஊடகங்களா? படைப்பாளிகளா? யார் பதில் சொல்வது;?

2009 மே இக்குப் பின் நோர்வே ஒஸ்லோப் பல்கலைக்கத்தைச் சேர்ந்த கலாநிதி சர்வேந்திரா ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். கத்தோலிக்கத் திருச்சபையின் ஆன்மீகத் தலைவரான பாப்பரசர் தனது பொறுப்புக்களைக் துறந்ந்துவிட்டு திருச்சபையைக் கலைத்துவிட்டால் குருவானவர்களின் நிலை எப்படியிருக்கும்? அப்படியொரு நிலைதான் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு இப்பொழுது ஏற்பட்டிருக்கிறது என்று.

அது உண்மைதான். புலிகள் இயக்கம் ஒரு நடைமுறை அரசை நிர்வகித்தது. தனது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் மிகப் பெரிய தொழில் வழங்குனராக அது காணப்பட்டது. அதன் இயக்க உறுப்பினர்களின் இருப்புக்கும் பாதுகாப்பிற்கும் கௌரவத்துக்கும் வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் அந்த இயக்கம் தன்னாலியன்ற அளவுக்குச் செய்து கொடுத்திருந்தது. ஆனால் அந்த இயக்கம் தோற்கடிக்கப்பட்டதோடு அதன் உறுப்பினர்கள் அரசியல் அனாதைகள் அல்லது பாவித்த பின் கழற்றி எறியப்பட்ட உதிரிப்பாகங்களை போலாகிவிட்டனர். ஒரு காலம் அதிகாரத்தோடு ஆளணிகள், வாகன வளங்களோடு மதிக்கப்படும் ஒரு நிலையிலிருந்த பலரும் 2009 மேக்குப் பின் தடுப்பால் வநதவர்கள் என்ற ஒரு புதிய வகுப்பாக மாறினர்..

அரச புலனாய்வுத்துறை அவர்களை விடுதலை செய்த பின்னரும் தொடர் கண்காணிப்பில் வைத்திருந்தது. இதனால் இலங்கைத் தீவின் அரசியல் அரங்கில் மிகவும் பாதுகாப்பிழந்த ஒரு பிரிவாக அவர்கள்; மாறினர். ஏந்த ஒரு சமூகம் அவர்களை ஒரு காலம் மதித்துப் போற்றயதோ அந்த சமூத்தின் ஒரு பகுதியினர் அவர்களை சந்தேகிக்கலாயினர். ஒரு பகுதியின் அவர்களை நெருங்கி வரவே அஞ்சினர். கடந்த தேர்தலின் போது போட்டியிட முயற்சித்த தடுப்பிலிருந்து வந்தவர்களில் ஒரு பகுதியினரை எல்லாக் கட்சிகளுமே சந்தேகித்தன..

தடுப்பிலிருந்து வந்தவர்கள் முக்கியமாக மூன்று சவால்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. முதலாவது அரச புலனாய்வுத்துறையினரின் கண்காணிப்பும் இடையீ+டுகளும.; இரண்டாவது அரசியல் மயப்படுத்தப்படாத ஒரு சமூகத்துக்குள் தடுப்பிலிருந்து வந்த இணைந்து கொள்வது. மூன்றாவது அரசியல் விலங்குகுளை எதிர்கொள்வது.

முதலாவது – அரச புலனாய்வுத்துறையினரிடமிருந்து வரக் கூடிய நெருக்கடிகள.; அவர்கள் எப்பொழுதும் சந்தேகிக்கப்பட்டார்கள். அடுத்தகட்டம் எப்படியிருக்கும் என்ற நிச்சயமின்மை எல்லாருக்கும் முன் விகாரமாகத் தொங்கிக் கொண்டிருந்தது. ஜனவரி 8 இற்குப் பின் இந்த நிலைமைகள் சற்று மாறி வருவதாக அவதானிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு தொடர்கிறதுதான் என்றாலும் அது அதிகபட்சம் மெருகானதாக மாறியிருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்தவிதமான ஆபத்து இலங்கைத் தீவுக்குள் மட்டும்தானுண்டு என்பதல்ல. இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் கூட இந்த விதமான அச்சங்கள் வெவ்வேறு வடிவங்களில் உண்டு. முன்னால் புலி இயக்கத்தவர்களை இந்திய புலனாய்வுக் கட்டமைப்பும் பின் தொடர்கிறது. அதேசமயம் மேற்கத்தேய புலனாய்வுக் கட்டமைப்புக்கள் அதை மிகவும் நாகரிகமான, மெருகான விதங்களில் முன்னெடுக்கின்றன. போர்க்குற்ற விசாரணைகள் என்று வரும்போது தடுப்பிலிருந்து வந்தவர்களும் விசாரிக்கப்படலாம் என்ற ஒரச்சம் எங்குமுள்ளது. தமிழ்த்தரப்பு போர்க்குற்ற விசாரணைகளை கோரும்போது அந்த விசாரணைகள் தடுப்பிலிருந்து வந்தவர்களின் மீதும் பாயும் என்ற ஒரு அச்சுறுத்தலைப் பேணுவதன் மூலம் போர்க்குற்ற விசாரணைகளுக்கான தமிழ்த்தரப்பு கோரிக்கைகளை அடக்கி வாசிக்கச் செய்யலாம் என்பது ஓர் உத்தியாகப் பயன்படுத்தப்படுகின்றது.. எனவே, தடுப்பிலிருந்து வந்தவர்களுக்கு இலங்கைத்தீவில் மட்டும்தான் பயமுண்டு என்பதல்ல. உலகுபூராகவும் அந்தப் பயம் உண்டு.

இரண்டாவது அரசியல் மயப்படுத்தப்படாத ஒரு சமூகத்துக்குள் திரும்பி வருவது. தடுப்பில் இருந்து வந்த ஒரு பெண் சொன்னார் தனது வீட்டு மதிலுக்கு அருகே நின்ற ஒரு பப்பா மரத்தில் பழம் பிடுங்குதற்கக கதிரையை வைத்து மதிலில் ஏறியிருக்கிறார். வீட்டிலிருந்த தயார் கத்தினாராம் “இறங்கு இறங்கு பக்கத்து வீட்டுக்காரர் பார்த்தால் என்ன சொல்லுவினம்” என்று. அந்தப் பெண் தனது நண்பர்களிடம் சொன்னாராம் “நாங்கள் தென்னைமரம் ஏறி இளனி பிடுங்கினாங்கள்.; இஞ்ச வந்து மதில் ஏறிப் பப்பாப்பழம் பிடுங்க சமூகம் ஒரு மாதிரிப் பார்க்கிறது ஏன்று.

இது ஒரு குரூரமான யதார்த்தம். தடுப்பில் இருந்து வீடு திரும்பும் பலருக்கும் வீடு புரட்சிகரமான ஒரு புகலிடமாக இல்லை. அவர்களில் பலர் இயக்கத்துக்குப் போகும் போது இருந்த அதே வீடுதான் அப்படியே மாறாமல் இப்பொழுதம் இருக்கிறது. அங்கு சாதியுண்டு, சமயம் உண்டு, மூட நம்பிக்கைகள் உண்டு. பால் அசமத்துவமுண்டு. இல்லத்துவன்முறைகள் உண்டு. ஆக மொத்தம் போரிலிருந்து எதையும் கற்றுத் தேறாத வீடுகளே அதிகம். ஆதாவது அரசியல் மயப்படுத்தப்படாத வீடுக்கள், அரசியல் மயப்படுத்தப்படாத கிராமங்கள் இந்த வீடுகளும் கிராமங்களும் தடுப்பிலிருந்து வருபவர்களை எப்படி எதிர்கொள்ளும?;. குறிப்பாக பெண் பிள்ளைகளே இதில் கூடுதலாக நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள்.

2009 மேக்குப் இற்குப் பின் பிரபல்யமடைந்துவரும் எழுத்தாளர்களில்; குறிப்பாக தடுப்பு முகாம் அனுபவங்களை அதிகம் வெளிப்படுத்திய ஓர் எழுத்தாளர் இப்பொழுது ஐரோப்பாவில் வசிக்கிறார். இவர் தடுப்பில் இருந்து வந்த பின் தனக்கு நெருக்கமானவர்களுக்கு பின்வருமாறு கூறியிருக்கிறார். “சாதாரண சனங்கள் எங்களோடு அன்பாகப் பழகுகிறார்கள். ஆனால் அரச அதிகாரிகள்தான் அவமதிக்கிறார்கள்.ஒருகாலம் எங்களுடைய அதிகாரத்திற்குக் கீழ் இருந்த அதிகாரிகளிடமே இப்பொழுது எல்லாத் தேவைகளுக்கும் தங்கியிருக்க வேண்டியிருக்கிறது” என்று.

பெரும்பாலான ஆயுதமேந்திய இயக்கங்கள் மக்களை ஆட்சேர்ப்புத் தளங்களாகவே பார்த்தன. மிகக் குறைந்தளவு சனங்களே அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளார்கள். போதிய பட்டறிவு உண்டுதான். ஆனால் அரசியல்மயப்படுத்தப்படவில்லை. ஈழத்தமிழர்கள் மிகக்குறைந்தளவு அரசியல் மயப்படுத்தப்பட்ட ஆனால் அதேசமயம் ஆகக்கூடியளவு அரசியல் விலங்குகளைக் கொண்ட ஒரு சமூகமாகக் காணப்படுகிறார்கள்.

மூன்றாவது அரசியல் விலங்குகளை எதிர்கொள்வது. இங்கு அரசியல் விலங்குகள் என்ற வார்த்தை அரிஸ்ரோட்டல் கூறியதைவிட விமர்சனபூர்வமான அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. சமூகத்தின் முன்னேறிய பிரிவினராகக் காணப்படும் படித்த நடுத்தவர்க்கத்தில் ஒரு பகுதியினரையும் அரசியல் வேட்கை கொண்ட பிரிவினரையும் இது சுட்டுகிறது. இதற்குள் அரசியல்வாதிகள் புத்திஜீவிகள், செயற்பாட்டாளர்கள், மத குருக்கள், படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள் போன்ற எல்லாத் தரப்பினரும் அடங்குவர். அரசியலை அதிகம் விளங்கி வைத்திருப்பவர்கள் போலத் தோன்றுமிவர்கள் தமது அரசியல் இலக்குகளுக்காக எதையும் இதுவரையிலும் அர்ப்பணித்ததில்லை. மிகப்பாதுகாப்பான இறந்தகாலத்தைப் பெற்றதனால் நிகழ்காலத்தின் பேச்சாளர்களாக மாறிய பலரும் இதில் அடங்குவர். தமது பிள்ளைகளை பத்திரமாக வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு , அல்லது தமது பிள்ளைகளை போதியளவு படிப்பித்து உயர்நிலைகளில் பத்திரப்படுத்திவிட்டு மிகத் தீவிரமாக அரசியல் கதைப்பவர்கள் இவர்கள். 2009 மே க்கு முன்பு வரை படுகோழைகளாக இருந்த இவர்களிற் பலர் இப்பொழுதும் வீரர்களாகக் காட்சியளிக்கிறார்கள். தமது இறந்தகாலத்தைக் குறித்த குற்றவுணர்ச்சியே இவர்களை ஆட்டுவிக்கிறது. அக்குற்றவுணர்ச்சியிலிருந்து நீதியுணர்ச்சி ஊற்றெடுத்திருந்தால் அவர்கள் அரசியல் விலங்குளாக மாறியிருந்திருக்கமாட்டார்கள். மாறாக அவர்களுடைய குற்றவுணர்;ச்சியை மறைக்க அவர்களில் பலர் நீதிபதிகளாக மாறிவிட்டார்கள். குற்றவுணர்ச்pயின் மீது கொழுவப்பட்டிருக்கிறது நியாயத்தராசு.

மிகக் குறைந்தளவு அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தில் மிகக் கூடுதலான அளவு அரசியல் விலங்குகள் பெருகிவிட்டார்கள். கடந்த ஆறு ஆண்டுகளாக சமூக மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களுக்காக தமிழ் மக்கள் காத்துக் கொண்டிருக்க, ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை அரசியல் விலங்குகளே இட்டு நிரப்புகின்றன. தடுப்பிலிருந்து வருபவர்களைத் தமது தராசுகளில் வைத்து நிறுக்கும் பலரும் இந்த வகையினர் தான்.
தமிழினியை வைத்தியசாலைக்குச் சென்று பார்க்காதவர்களும் இவர்கள்தான். துமிழினி தடுப்பில் இருந்து வந்தபொழுது ஊகச் செய்திகளை உருப்பெருக்கிப் போட்டவர்களும் இவர்கள்தான். ஆனால் தமிழினியின் இழப்பை வைத்து பிழைப்பை பெருக்கிக் கொண்டவர்களும் இவர்கள்தான்.

தடுப்பிலிருந்து வருபவர்களை மட்டுமல்ல 2009 இற்குப் பின் நலன்புரி நிலையங்களிலிருந்து வந்தவர்களையும் மேற்படி அரசியல் விலங்குகள் தமது நியாயத்தரசுகளில் வைத்து நிறுத்தார்கள். ஆனால் கேவலம் என்னவென்றால் நலன்புரி நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த தமது உறவுகளை அல்லது நண்பர்ளை போய்ப்பார்த்தவர்கள் மத்தியில் இவர்களை அநேகமாக் காண முடியவில்லை. யாழ்ப்பாணத்தில் இருந்த நலன்புரி நிலையங்களில் வைக்கப்பட்டிருந்தவர்களை அவர்களுடைய உறவினர்களான சாதாரண சனங்கள் வாஞ்சையோடு வந்து சந்தித்தார்கள். வகை தொகையாகச் சமைத்துக் கொண்டு வந்து கொடுத்து விருந்தோம்பினார்கள். ஆனால் இப்பொழுது தீவிர தேசியர்களாகக் காட்சியளிக்கும் பலரும் நலன்புரி நிலையங்களின்; பக்கம் வரவேயில்லை. இவர்களு ள் அரசியல்வாதிகளும், புத்திஜீவிகளும் பிரபல மூத்த படைப்பாளிகளும் அடங்குவர்.
போதிய அரசியல் விளக்கமற்ற அப்பாவிச் சனங்கள் நலன்புரி நிலையங்களுக்குத் தவிப்போடு ஓடி வந்தார்கள். தடுப்பிலிருந்த வருபவர்களை ஒப்பீட்டளவில் பரிவுடன் அணுகுவதும் அவர்கள்தான். ஆவர்களுடைய மூளைகள் அதிகம் அரசியல் சித்தாந்தங்களால் நிரப்பப்பட்டிருக்கவில்லை. ஆனால் அவர்களுடைய இதயமோ பரிசுத்தமான அன்பினால் நிரப்பப்பட்டிருக்கிறது.

இதுதான் நிலமை. தடுப்பிலிருந்து வந்தவர்களும் 2009 மே18 இற்குப் பின் வன்னியிலிருந்து வந்தவர்களில் ஒரு தொகுதியினரும் எதிர்கொள்ளும் முப்பெரும்சவால்கள் இவை. தமிழினியும் இவற்றையெல்லாம் எதிர்கொண்டவர்தான். அவரைப்பற்றி தீர்ப்பெழுதிய பலரும் அவரைத் தடுப்பில் சென்று பார்க்கவில்லை. வைத்தியசாலைக்கும் சென்று பார்க்கவில்லை. தடுப்பில் இருந்தபோது அவருக்குச் சுவையாகச் சமைத்துக் கொண்டுபோய் கொடுப்பதற்கு யாருமற்ற நிலமைகளே அதிகமிருந்ததாக அவருடன் தடுப்பில் இருந்த ஒரு மருத்துவர் சொன்னார்.
2009 மே 18 இற்குப் பின் புலிகள் இயக்கத்தவர்கள் எதிர்கொண்டுவரும் அதே விதமான சவால்களைத்தான் 1990 களில் புலிகள் அல்லாத இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் எதிர்கொள்ள நேர்ந்தது என்று லண்டனில் வசிக்கும் ஈழம் ஹவுஸ் என்ற அமைப்பைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளரான வரதக்குமார் சில ஆண்டுகளுக்கு முன்பு சுட்டிக்காட்டினார். முன்னாள் இயக்கத்தவர்களை குறிப்பாகத் தடுப்பில் இருந்து வந்தவர்களை ஒரு சமூகம் எப்படி மதிக்கிறது என்பதை வைத்தே அந்த சமூகத்தின் அறநெறித் தளத்தை நீதி உணர்ச்சியை குறிப்பாக நன்றியுணர்ச்சியை மதிப்பிட வேண்டியிருக்கும்.

தடுப்பில் இருந்து வந்தவர்களுக்கும் முன்னால் இயக்க உறுப்பினர்களுக்கும் சம்பளம் வழங்குவதும் நிவாரணம் வழங்குவதும் இரண்டாம்பட்சமானவை. முதலில் செய்யப்பட வேண்டியது. எந்த சமூகத்திற்காக அவர்கள் தமது இளமையை, கனவுகளை, படிப்பைத் துறந்து சென்றார்களோ அந்தச் சமூகம் அதைக் குறித்து நன்றி மறவாமல் இருக்கிறது என்பதை நிரூபிப்பதுதான்.

அரசியல் கைதிகளின் விவகாரம் எப்படி முடியும்?

அரசியல் கைதிகளின் விவகாரம் எனப்படுவது அதன் ஆழமான பொருளில்  ஓர் அரசியல் விவகாரமே. ஆனால் அதை ஒரு சட்ட விவகாரமாகச் சுருக்கிவிட  அரசாங்கம் முற்படுகின்றது.ஆயுத ப்போராட்டத்தை எப்படி பயங்கரவாதப் பிரச்சினையாக காட்டினார்களோ தமிழ்த்தேசியப் பிரச்சினையை எப்படி அதிகாரப் பரவலாக்கலுக்குரிய பிரச்சினையாகக் காட்டினார்களோ அப்படித்தான் கைதிகள் விவகாரத்தையும் ஒரு சட்ட விவகாரமாகக் காட்ட முற்பகிறார்கள்.  இவ்வாறு  ஒரு விவகாரத்தின்  மையத்தைச் சிதைத்து  அதை வேறொன்றாகக் காட்டுவதன் மூலம் அதை ஒத்தி வைக்கலாம் அல்லது அதைத் தீர்க்காமலே விடலாம். அதற்குரிய மிக நீண்ட பாரம்பரியம் இலங்கைத் தீவின் அரசாட்சி முறைமைக்குள் உண்டு. அதற்குத் தேவையான முதிர்;ச்சியும், நிபுணத்துவமும், உத்திகளும் அவர்களிடம் உண்டு.

இவ்வாறு ஓர் அரசியல் விவகாரத்தை  சட்ட விவகாரமாக  சுருக்கும் ஓர் அரசியல் சூழலில் நிலைமைகளை எதிர்கொள்ளத் தேவையான துறைசார் நிபுணத்துவமும், தீர்க்கதரிசனமும்,அர்ப்பணிப்பும் தமிழ் மக்களிடம் உண்டா?

அரசியல் கைதிகளின் விவகாரம் அதன் முதற் பொருளில் ஓர் அரசியல் விவகாரம்தான் என்றாலும்  இலங்கை அரசாங்கம்  அதை ஓர் சட்ட விவகாரமாகக் காட்டும் ஒரு பின்னணியில் அதைச் சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ளவேண்டிய தேவை தமிழ் மக்களுக்கு உண்டு. எனவே இந்த விவகாரத்தை தமிழ் மக்கள் சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. பரந்தகன்ற தளத்தில் ஓர் அரசியல் போராட்டமாகவும் முன்னெடுக்க வேண்டியிருக்கிறது. முதலில் அதைச் சட்டத்தளத்தில் எதிர்கொள்வதற்குரிய தயாரிப்புக்களோடு தமிழ் மக்கள் காணப்படுகிறார்களா என்று பார்க்கலாம்.

அரசியல் கைதிகளின் விவகாரத்தைப் பொறுத்தவரை ஆயுத மோதல்கள் நிகழ்ந்த கால கட்டத்திலும் சரி அதற்குப் பின்னரும் சரி அதை அமைப்பு ரீதியாக அணுகும் போக்கு தமிழ் மக்களிடம் காணப்படவில்லை. சட்டவாளர்களான சேவியர், குமார்பொன்னம்பலம் போன்ற வழக்கறிஞர்கள் கைதிகளின் விவகாரத்தை ஒரு சட்டத்துறைச் செயற்பாடாக முன்னெடுத்திருக்கிறார்கள்.  இப்பொழுது மனித உரிமைகள் இல்லம்(ர்ர்சு), மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையம் (ஊர்சுனு) போன்ற சில   அமைப்புக்களும்  சில தனி நபர்களும்  இந்த விவகாரத்தைக் கையாண்டு வருகிறார்கள்.  குறிப்பாக  2009 இற்குப் பின்னரான  அரசியல் கைதிகளை விடுவிக்கும்  செயற்பாடுகளில்  புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதிப்பங்களிப்புடன்  ஒரு தொகுதிக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.  இவர்களுக்குரிய வழக்குச் செலவுகளை  புலம்பெயர்ந்து வாழும் சில தனிப்பட்ட நபர்கள் பொறுப்பேற்றதன் மூலம்  இவர்களைச் சட்ட ரீதியாக விடுவிக்க முடிந்திருக்கிறது. ஆனால் இவை  தனிப்பட்ட உதவிகள் மட்டுமல்ல. விவகாரத்தை சட்ட ரீதியாகவே அணுகி தீர்வைப் பெற்ற முயற்சிகளும்தான்.

இவ்வாறு  குறைந்தபட்சம்  சட்டப்பரப்பிலாவது  இது போன்ற விவகாரங்களை கையாளவல்ல   சட்டச் செயற்பாட்டுக்குழுக்களையோ அல்லது சட்ட உதவி மையங்களையோ அல்லது    சட்டத்துறை சார்ந்த புலமைசார் செயற்பாட்டுக் குழுக்களையோ அல்லது தன்னார்வக் குழுக்களையோ மிகக் குறைந்தளவே ஈழத் தமிழ்ப்பரப்பில் காணமுடிகிறது. இந்தியாவோடு ஒப்பிடுகையில் இங்குள்ள நிலைமை  அப்படி ஒன்றும் பிரமாதமாக இல்லை.  மனித உரிமைகள் இல்லம்,மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையம், தேவைநாடும்; மகளிர்  போன்ற  மிகச் சில சட்ட உதவி மையங்களே தமிழ் மக்கள் மத்தியில் உண்டு. தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக் கூடிய செயற்பாட்டு வெளியை வரையறைக்கு உட்படுத்தியதில் ஆயுதப் போராட்டத்திற்கும் கணிசமான பங்கு உண்டு.  ஆயுதப் போராட்டத்தின் கட்டுப்பாட்டு நிலப்பரப்பிற்குள் செயற்பாட்டுக்குழுக்கள் பெருமளவிற்கு மேலெழவில்லை. இப்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் பெரும்பாலான செயற்பாட்டுக் குழுக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் தோன்றியவைதான். அவை கூட பரந்தன்ற தளத்தில் மனித உரிமைகள் , பால்சார் வன்முறைகள், காணாமல் போனவர்கள் விவகாரம் போன்றவற்றைக் கையாளும் செயற்பாட்டு அமைப்புக்கள்தான்.  குறிப்பாக அரசியல் கைதிகளின் விவகாரத்தை  கையாளுவதற்கு என்று எந்த ஒரு அமைப்பையும் காண முடியவில்லை.

தமிழ் அப்புக்காத்துமார்களின்  அரசியலானது 2009 மேக்குப் பின் அதன் இரண்டாவது  சுற்றில் நிற்கிறது. ஆயுதப் போராட்டத்திற்கு முந்தியது முதலாவது சுற்று. 2009 மே க்குப் பிந்தியது இரண்டாவது சுற்று. எல்லாத் தமிழ் கட்சிகளிலும் சட்டத்துறை சார்ந்தவர்களே பெருமளவிற்கு முன்னுக்கு நிக்கிறார்கள். சில  அருந்தலான விதிவிலக்குகளைத் தவிர சட்டத்துறைக்கூடாக வந்தவர்கள்  அரசியலில் காட்டும் அதேயளவு ஆர்வத்தை ஏன்  சட்டச் செயற்பாட்டு இயக்கங்களில் காட்டுவதில்லை?.

அரசாங்கம் கைதிகளின் விவகாரத்தை ஒரு சட்ட விவகாரமாகவே அணுகும் பொழுது  தமிழ் சட்டத்துறை நிபுணர்கள் அதை அந்தத் தளத்திலேயே வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்ததா? கைதிகளின் விவகாரம் தொடர்பில் ஒரு சிரே~;ட சட்டத்தரணியுடன் உரையாடிய போது அவர் பின்வருமாறு சொன்னார். “பிணை வழங்குவது என்பது கைதிகளை குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவித்தாக அர்த்தமாகாது. அது மறைமுகமாக குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவே கருதப்படும். குற்றத்தின் தன்மை பொறுத்து தண்டனைக் காலத்தைக் குறைப்பது என்பதும் குற்றத்தில் இருந்து விடுவிக்கப்பட்டதாக அர்த்தமாகாது.  புனர்வாழ்வுக்குப் போவதாக ஒப்புக் கொண்டு  உரிய ஆவணங்களில் கையொப்பம் இடுவது என்பதும் குற்றத்தை ஒப்புக் கொள்வதுதான். எனவே, கைதிகளை குற்றங்களில் இருந்து விடுவிக்காமல் அவர்களுக்கு  தற்காலிகமான  ஓர் அசுவாசச் சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக  சிறையில் இருந்தவர்கள் இனிக் குடும்பத்துடன் சேர்ந்து வாழலாம் என்ற ஒரு நிலைமை வரும் போது ஒப்பீட்டளவில் அது அவர்களுக்கு ஆறுதலான விடயமே. ஆனால்  உத்தியோகபூர்ப ஆவணங்களில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர்கள் விடுவிக்கப்படப்போவதில்லை. இது முதலாவது விடயம்…… இரண்டாவது விடயம்- கைதிகளைக் குற்றத்தின் தன்மை பொறுத்தும்  தண்டனையில் தன்மை பொறுத்தும்  வகைப்படுத்தும்பொழுது கைதிகளுக்கிடையிலான ஐக்கியம் உடைக்கப்படுகிறது. விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்ப்படும் கைதி மற்றவர்களுக்காக போராடத் தயங்கக் கூடும். இவ்வாறு கைதிகளை வகைப்படுத்தும் போது அது அவர்களுக்கிடையிலான ஒற்றுமையையைக் குறைக்கும். இது அவர்களுடைய போராட்டத்தின்  ஓர்மத்தைக் குறைக்கும் என்று”

அதாவது  இப்பொழுது கிடைக்கப்போவது ஒரு வித தற்காலிகமான இடைக்காலத் தீர்வுதான்.  அதுவும்  ஒரு சட்டத்தீர்வுதான். நிச்சயமாக ஒரு  அரசியல் தீர்வு அல்ல. ஆனால் கைதிகளைப் பிணையில் விடுவதா இல்லையா  என்பது கூட ஓர் அரசியல் தீர்மானம்தான். அவர்களுக்கு மன்னிப்பு அளிப்பதில்லை என்ற முடிவும் ஓர் அரசியல் தீர்மானம்தான்.அதேசமயம் போர்க்குற்றம் சாட்டப்படும் தமது பிரதானிகளை தண்டிப்பதற்குப் பதிலாக  மன்னிக்கும் ஒரு விசாணைப் பொறிமுறையை தந்திரமாகக் கொண்டுவந்ததும் ஓர் அரசியல் தீர்மானம்தான். ஆட்சி மாற்றம் நிகழ்ந்து  பத்து மாதங்களின் பின்னரும் நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற ஒரு அரசாட்சிக்குக் கீழேயும் பெரும்பாலான எல்லா சிங்கள அரசியல்வாதிகளும் யோர்க்குற்றம் தொடர்பிலும் அரசியற்கைதிகள் விவகாரத்திலும் ஒரே விதமாகத்தான் சிந்திக்கிறார்கள். ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் அப்படிச் சிந்திக்கிறார்களா?
கைதிகள் விவகாரத்தில் மட்டுமல்ல. ஒட்டுமொத்த தமிழ் அரசியலை எடுத்துக்கொண்டால்  மூன்றாவது ஜெனிவாத் தீர்மானத்தின் பின்னரான  தமிழ் அரசியல் எனப்படுவது  தமிழ் மக்களை  அதிகம்  சட்ட விழிப்பூட்ட வேண்டிய  ஒரு தேவையை வேண்டி நிற்கிறது.  தமிழ் மக்கள் முன்னெப்பொழுதையும் விட ஆகக் கூடிய அளவில்  சட்ட விழிப்பூட்டப்பட வேண்டிய ஒரு சமூகமாகக் காணப்படுகிறார்கள்.  ஐ.நா. மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கைக்குப் பின்  ஈழத் தமிழர்கள்  ஏன் அதிகம்  சட்ட விழிப்பூட்டப்பட வேண்டும்? என்பதற்குப் பின்வரும் காரணங்களைக் கூறலாம்.

முதலாவது,  தமிழ் மக்களிடம் இப்பொழுதுள்ள ஓரே ஆயுதம் சாட்சியங்கள்தான். எவ்வளவுக்கு எவ்வளவு சாட்சியங்கள்  பரந்தளவில் ஒன்று திரட்டப்படுகின்றனவோ அந்தளவுக்கு அந்தளவு தமிழ் மக்கள்  தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிரான பரிகார நீதியைக் கோர முடியும். எனவே, சாட்சியங்களை சக்திமிக்கவர்களாக்குவதற்குச் சமூகத்தை சட்டவிழிப்பூட்ட வேண்டும்.

வரப்போகும் விசாரணைப் பொறிமுறையானது குற்றம் செய்தவர்களை தண்டிப்பதை விடவும்  மன்னிப்பதையே  இறுதி நோக்கமாக கொண்டிருக்கக் கூடும். எதுவாயினும் அதில் பங்கேற்று அதன் போதாமைகளை அம்பலப்படுத்துவதற்கு தமிழ் மக்களை அதிகரித்த அளவில் சட்ட விழிப்புடையவர்களாக மாற்ற வேண்டும்.  ஒவ்வொரு சாட்சியும் தன்னை  சமூகத்தின் கூட்டுச் சாட்சியத்தின் பிரிக்கப்படவியலாத ஓர் அங்கமாக கருத வேண்டும். தனது சாட்சியமானது நீதிக்கான நீண்ட பயணத்தின் ஒரு பகுதி என்பதை உணர வேண்டும். அதாவது ஒவ்வொரு சாட்சியும் ஒரு செயற்பாட்டாளராக இயங்க வேண்டும்.

இரண்டாவது, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் அறிக்கையானது பயங்கரவாத தடைச்சட்டத்தை அகற்றுமாறு கோருகிறது.  பயங்கரவாத தடைச்சட்டமும் நல்லாட்சியும் ஒன்றாக இருக்க முடியாது.  பயங்கரவாத தடைச்சட்டத்தையும் வைத்துக்கொண்டு நல்லிணக்க முயற்சிகளைப் பற்றி உரையாட முடியாது.  பயங்கரவாத தடைச்சட்டத்தை தன்னுள் கொண்டிருக்கும் ஒரு நீதிபரிபாலன கட்டமைப்பானது போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களின்  நம்பிக்கையை  பெற முடியாது.  பயங்கரவாத தடைச் சட்டத்தை வைத்திருக்கும் ஒரு நீதிபரிபாலன கட்டமைப்பானது எந்த ஒரு வெளிநாட்டு  நிபுணத்துவ உதவியோடும் கூடிய  எந்த ஒரு  வெற்றிகரமான கலப்புப் பொறிமுறையையும் உருவாக்க முடியாது.  எனவே,  ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த ஆறரை ஆண்டுகளின் பின்னரும் எந்த ஒரு “பயங்கரவாதத்திற்கு” எதிராக அந்தச் சட்டத்தை வைத்திருக்க வேண்டும்?. ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று சொல்லும் ஒரு நீதி பரிபாலன கட்டமைப்பானது அந்தப் போராட்டம் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகளின் பின்னரும் யாருக்கு எதிராக அந்தச் சட்டத்தைத் தொடர்ந்தும் பேணுகிறது?. இது இரண்டாவது.

மூன்றாவது, பயங்கரவாத தடைச்சட்டம்  இருக்கும் வரை அரசியல் கைதிகளின் விவகாரத்தைத் தொடர்ந்தும் ஒரு சட்டப் பிரச்சினையாகவே கையாள முடியும். இச்சட்டத்தைக் கொண்டு வந்த ஜெயவர்த்தனா ஆயுதமேந்திய தமிழர்களை பயங்கரவாதிகள் என்று அழைத்தார். அதே சமயம்  ஆயுதமேந்திய சிங்கள இளைஞர்களை அதாவது ஜே.வி.பி.யினரை நாசகார சக்திகள் என்று விழித்தார். இரண்டு சொற்பிரயோகங்களுக்கும் இடையிலேயே இனச்சாய்வு இருக்கிறது.

எனவே பயங்கரவாத தடைச்சட்டம்  எனப்படுவது  தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு சட்ட ஆவணம் என்பதை ஏற்றுக் கொள்வதில் இருந்தே  நல்லிணக்க முயற்சிகளை மெய்யான பொருளில் தொடங்க முடியும். நல்லாட்சியையும் மெய்யான பொருளில் ஸ்தாபிக்க முடியும். இது மூன்றாது.

நான்காவது –  இனப்பிரச்சினைக்கான தீர்வும்  அரசியலமைப்பு மறு வரைபும் ஒன்றுதான். இலங்கைத்  தீவின் அரசியல் அமைப்பை பல்லினத் தன்மைமிக்கதாகவும் பல்வகைமைக்குரியதாகவும்  மாற்றி எழுதாமல் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் கண்டடைய முடியாது. அதாவது ஒற்றையாட்சிக்கு வெளியே போக முடியாது.

அரசியலமைப்புச் சீர் திருத்தம் அல்லது அரசியலமைப்பை மறுவரைபு செய்தல் போன்ற விவகாரங்கள் அவற்றின் ஆழமான பொருளில் முன்னெடுக்கப்படுமோ இல்லையோ தெரியாது. ஆனால் அப்படி ஒரு நிலைமை வரும்போது தமிழ் மக்கள் எவ்வளவுக்கு எவ்வளவு சட்ட விழிப்பூட்டப்படுகிறார்களோ அது அவ்வளவுக்கு அவ்வளவு தமிழ் மக்களைப் பாதுகாக்கும். எனவே முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு தமிழ் மக்களை சட்ட விழிப்பூட்ட வேண்டிய ஒரு தேவை  தமிழ் சட்டவாளர்களுக்கும் சட்ட நிபுணர்களுக்கும்  சட்டச் செயற்பாட்டாளர்களுக்கும்  சட்டத்துறைசார் புலமைச் செயற்பாட்டாளர்களுக்கும் ஏனைய துறைசார் புத்திஜீவிகளுக்கும், செயற்பாட்டாளர்களுக்கும், சிவில் அமைப்புககளுக்கும், ஊடகங்களுக்கும்  உண்டு.  மிகக் கூடுதலான அளவு அரசியல் விலங்குககளைக் கொண்டுள்ள ஆனால் மிகக் குறைந்த அளவே அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒரு  மக்கள்  மத்தியில் அதைச் செய்யப்போவது யார்?

அடுத்ததாக  கைதிகளின் விவகாரத்தை பரந்தகன்ற தளத்தில் ஓர் அரசியல் போராட்டமாக முன்னெடுப்பதற்குரிய தயாரிப்புக்களோடு தமிழ் மக்கள் காணப்படுகிறார்களா என்று பார்க்கலாம்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை அகற்றுவதா இல்லையா என்பது ஓர் அரசியல் தீர்மானமே! தமிழ் மக்களுடைய ஆயுதப் போராட்டம் பயங்கரவாதமா இல்லையா என்று முடிவெடுப்பது ஓர் அரசியல் தீர்மானமே.  அது ஓர் அரசியல் பண்புமாற்றமே. அதைப்போலவே அரசியல் கைதிகளை விடுவிப்பதா இல்லையா என்பதும் ஓர் அரசியல் தீர்மானமே.  இப்படிப்பட்ட அரசியல் தீர்மானங்களை எடுக்கக் கூடிய ஓர் அரசியல் சூழல் ஆட்சிமாற்றத்தின் பின்னரும் ஏன் ஏற்படவில்லை? அல்லது  நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற புதிய அரசாங்கத்தின் கீழும் ஏன் ஏற்படவில்லை?.  ஆட்சி மாற்றதிற்கும் நல்லாட்சிக்கும் எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி ஆதரவை வழங்கிய கூட்டமைப்பு  இது தொடர்பில் என்ன முடிவுகளை எடுக்கும்?

கடந்த ஆண்டு  ஆட்சி மாற்றத்திற்கான உள்மட்டச் சந்திப்புக்கள்  நிகழ்ந்தபொழுது  முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கூட்டமைப்பின் தலைவரிடம் கேட்டாராம் “எழுத்துவடிவ உடன்படிக்கைகள் எவையும் இன்றி சிங்களத் தலைவர்களை எப்படி நம்புகிறீர்கள்?” என்ற தொனிப்பட. அதற்கு கூட்டமைப்பின் தலைவர் சொன்னாராம்.  “எவ்வளவு மையைச் சிந்தி  உடன்படிக்கை எழுதுகிறோம் என்பது இங்கு முக்கியம் அல்ல. எவ்வளவு நம்பிக்கையைக் கட்டி எழுப்புகிறோம் என்பதே இங்கு முக்கியம்” என்று.

ஆயின்  கடந்த பத்து மாதங்களாக  கட்டி எழுப்பப்பட்ட நம்பிக்கைகளின் பிரகாரம் கைதிகளின் விடயத்தில் தீர்வு கிடைக்குமா? கிடைக்காவிட்டால் கூட்டமைப்பும் ஏனைய தமிழ்க் கட்சிகளும் என்ன செய்யும்? குறிப்பாக ஒரு புறம் தீவிர தமிழ்த் தேசியத்தைப் பேசிக்கொண்டு இன்னொரு புறம் இலங்கை  பொலிஸ் மெய்க்காவலர்களைத் தங்களோடு வைத்திருக்கும்  தமிழ் அரசியல்வாதிகள்  என்ன செய்யப் போகிறார்கள்?