மாபெரும்
அண்டவெளி புதிர்களில் ஒன்று தான் பிளாக் ஹோல் எனப்படும் கருங்குழிகள். உள்
சென்ற ஒளி கூட வெளியேற முடியாத ஒற்றை வழிப்பாதையான பிளாக் ஹோல்களின்
வலுவான ஈர்ப்புச் சக்தியானது கற்பனைக்கு அடங்காததாகும்.
![]() |
Add caption |
கண்களுக்கு
புலப்படாத பிளாக் ஹோல்களின் இருப்பை தாக்கங்கள் மூலமாகவே உணர்ந்து கொள்ள
முடியும் அதனால் தான் இவைகளை கருங்குகுழி என்று அழைகின்றனர். அந்த அளவு
ஆபத்தான பிளாக் ஹோல்களில் ஒன்று 26 ஆண்டுகள் கழித்து சமீபத்தில் விழித்து
கொண்டுள்ளதை விண்வெளி வீரர்கள் கண்டறிந்துள்ளனர்.


பிளாஸ்மா வெடிப்பு :
சுமார்
26 ஆண்டுகளுக்கு பின் இயங்க ஆரம்பித்துள்ள பிளாக் ஹோல் ஒன்று விண்வெளியில்
மாபெரும் பிளாஸ்மா வெடிப்பு ஒன்றை கட்டவிழ்த்து விட்டுள்ளது.


அளவு :
மேலும் அந்த வெடிப்பானது ஒளியின் வேகத்தோடு ஒப்பிடும் அளவு நிகழ்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


பதிவு :
மிகவும் அரிதான இந்த செயலின் நம்பமுடியாத காட்சிகளை நிகழ்விற்கு பின், விண்வெளி வீரர்கள் வீடியோ பதிவு செய்துள்ளனர்.


பகுதி :
வி404 சிக்னி (V404 Cygni) என்ற நட்சத்திர அமைப்பின் ஒரு பகுதி தான் இந்த பிளாக் ஹோல் என்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.


12 மடங்கு :
மேலும் இந்த குறிப்பிட்ட பிளாக் ஹோல் ஆனது சூரியனை விட 12 மடங்கு பெரியது என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.


46 க்வாட்ரில்லியன் மைல்கள் :
மேலும்
இந்த பிளாக் ஹோல் ஆனது பூமியில் இருந்து சுமார் 46 க்வாட்ரில்லியன்
மைல்கள் (quadrillion miles) தொலைவில் உள்ளது என்பதையும் கண்டறிந்துள்ளனர்.


அமைதி :
கடந்த
சில ஆண்டுகளாக தனது நட்சத்திர அமைப்பில் இருக்கும் நட்சத்திரங்களிடம்
இருந்து பிளாஸ்மாக்களை அமைதியாக உறிஞ்சு கொண்டுருந்துள்ளது.


வெப்ப வாயு :
விளைவாக பிளாக் ஹோல் தனை சுற்றி அளவுக்கு அதிகமான வெப்ப வாயு சுருளாயமைந்து (hot gas spiraled) கொண்டதால் வெடிப்பை நிகழ்த்தியுள்ளது.


பிளாக் ஹோல் ஜெட் :
இது போன்ற வெடிப்பை வான்வெளி ஆராய்ச்சியாளர்கள் பிளாக் ஹோல் ஜெட் (black hole jet) என்று குறிப்பிடுவார்கள்.


பாய்ச்சசப்பட்டன :
அந்த வெப்பமான பிளாஸ்மாவில் வெடிப்பில் இருந்து ரேடியோ அலைகள், எக்ஸ்-ரே ஒளி, மற்றும் புலப்படும் ஒளி பாய்ச்சசப்பட்டன.


தொலைநோக்கி :
இந்த
வெடிப்பானது மிகவும் பிரகாசமாக புலப்படும் என்பதால் இதை பூமியில் இருந்து
கொண்டு 14 இன்ச் தொலைநோக்கி மூலம் கூட பார்க்க முடியும் என்று கூறியுள்ளது
ஆக்ஸ்போர்டு அறிவியல் வலைப்பதிவு பல்கலைக்கழகம்.

செயற்கைகோள் எச்சரிக்கை :
விண்வெளி
வீரர்கள் இந்த பிளாக் ஹோல் வெடிப்பின் ஆரம்பத்தை தவறவிட்டனர் என்பதும்,
வெடிப்பில் இருந்து வெளியேறிய எக்ஸ்-ரே தாக்கத்தினை பதிவு செய்து
செயற்கைகோள் ஒன்று எச்சரிக்கை செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆய்வு :
ஆய்வு :
எச்சரிக்கை கிடைத்ததும் அனைத்து வான்வெளி ஆராய்ச்சியாளர்களின் கவனமும் அதன் மீது திரும்பி, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.


சம்பவம் :
சுமார் 7800 ஆண்டுகளுக்கும் முன் இதே போன்று வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.


வெளிப்பாடு :
வி404
சிக்னி நட்சத்திர அமைப்பு 1989, 1956, மற்றும் 1938 ஆகிய ஆண்டுகளில் சில
வெளிப்பாடுகளை நிகழ்த்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
30 நாட்கள் :
30 நாட்கள் :
மேலும்
இந்த பிளாக் ஹோல் இன்னும் 30 நாட்களுக்கு பிளாஸ்மா வெடிப்பை நிகழ்த்திக்
கொண்டே இருக்கும் என்றும் வான்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
30 நாட்கள் கழித்து இந்த பிளாக் ஹோல் மீண்டும் பழைய நிலைக்கு அதாவது அமைதியான தூக்கத்திற்க்கு சென்று விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது, இது போன்ற பிளாக் ஹோல் ஜெட் சம்பவங்களை சூப்பர்மாசிவ் பிளாக் ஹோல்களோடு ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்ய விஞ்ஞானிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

30 நாட்கள் கழித்து இந்த பிளாக் ஹோல் மீண்டும் பழைய நிலைக்கு அதாவது அமைதியான தூக்கத்திற்க்கு சென்று விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது, இது போன்ற பிளாக் ஹோல் ஜெட் சம்பவங்களை சூப்பர்மாசிவ் பிளாக் ஹோல்களோடு ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்ய விஞ்ஞானிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

புரிதல் :
அதன்
மூலம் தான் நமது பால்வெளி மண்டலம் பற்றிய அதிகப்படியான புரிதலை பெற
முடியும் மற்றும் வருங்கால நிகழ்வுகளை அதிகம் கணிக்க முடியும் என்கின்றனர்
விஞ்ஞானிகள்.
நடுப்பகுதி :
நடுப்பகுதி :
நமது பால்வெளி மண்டலத்தின் நடுப்பகுதியிலும் ஒரு மாபெரும் பிளாக் ஹோல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment