"ஆட்டம்ஸ்
ஃபார் பீஸ்" ("Atoms for Peace") அதாவது "அணு என்பது அமைதிக்காகத்தான்"
என்ற அணு சக்தி பற்றிய பிரபலமான வாசகத்தை உலக நாடுகள் அடிக்கடி, ஆங்காங்கே
பயன்படுத்தினாலும் கூட உண்மை நிலை என்னவோ சற்று எதிராகத்தான் இருக்கிறது.
அதற்கு
பாகிஸ்தான், ரஷ்யா, போன்ற நாடுகள் தான் நிதர்சனமான ஆதாரங்கள். அப்படியாக,
ரஷ்யாவை 'பின் தொடர்ந்து' போலிவியாவும் அந்த பட்டியலில் இணைய இருக்கிறது..!


அதிக கவனம் :
ரஷ்யா, அதிநவீன ஏவுகணை தொழில்நுட்பத்தில் மட்டுமில்லாது அணு ஆயுத தொழில்நுட்பத்திலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது.


முடிவு :
அப்படியான
ரஷ்யாவின் தொழில்நுட்பங்களை கொண்டு மாபெரும் செலவில் அணு ஆயுத கூடம் ஒன்றை
உருவாக்க தென் அமெரிக்கா நாடான போலிவியா முடிவு செய்துள்ளது.


300 மில்லியன் :
அதன்படி அந்த அணு ஆயுத கூடத்திற்கு சுமார் 300 மில்லியன் டாலர்களை போலிவியா ஒதுக்கியுள்ளது.
4 ஆண்டுகள் :
4 ஆண்டுகள் :
மேலும்,
ரஷ்ய தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக உள்ள அணு ஆயுத கூட பணிகளானது அடுத்த 4
ஆண்டுகளில் முடிந்து விடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


எவோ மொரல்ஸ் :
இந்த தகவலை போலி விய குடியரசுத்தலைவர் எவோ மொரல்ஸ் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஒப்பந்தம் :
இது
தொடர்பாக ரஷ்யாவின் அணு ஆற்றல் நிறுவனம் மற்றும் பொலிவிய ஹைட்ரோகார்பன்
எரிசக்தி அமைச்சகமும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

மேலும் அந்த ஒப்பந்தமானது அணு ஆற்றல் அமைதியான பயன்பாடுகளுக்கு மட்டுமே என்ற புரிதலின் கீழ் கையெழுத்தாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பங்கு :
ரஷ்ய
தொழில்நுட்பத்தின் கீழ் வடிவமைக்கப்பட இருக்கும் இந்த அணுசக்தி கூட
கட்டுமான பணிகளில் அர்ஜென்டினா போன்ற சில தென் அமெரிக்க நாடுகளும்
பங்குக்கொள்ள இருக்கிறது.


எல் அல்டோ :
இந்த அணு சக்தி கூடமானது, அணு உலை ஒன்றோடு சேர்த்து எல் அல்டோ நகரத்தில் கட்டப்பட இருக்கிறது.
No comments:
Post a Comment