Sunday 29 November 2015

அமெரிக்க இராணுவத்தை பற்றிய சில வியக்கவைக்கும் தகவல்கள்!!!

அமெரிக்கா, உலகின் மாபெரும் வல்லரசு நாடு. யார் வீட்டுக்குள்ளும் புகுந்து அட்டூழியம் செய்யும் உரிமத்தை தங்களுக்கு தாங்களே அளித்துக் கொண்டு, அ….’ராஜ’கம் செய்யும் பண்புடைய முடிசூடா மன்னர்கள். தொழில்நுட்பத்தை அவ்வளவு நுட்பமாக கையாளும் திறன் கொண்டவர்கள்.



உலகின் முதன்மை தொழில்நுட்பங்கள் மற்றும் வேறு யாரும் அறிந்திராத அறிவியலை எல்லாம் தங்களது இராணுவப்படையில் வைத்திருக்கும் ஆணவம் தான் அவர்களை, அழையா விருந்தாளியாக போர் தொடுக்க வைக்கிறது.

திமிர் மட்டுமின்றி திறமையும் நிறைய உள்ளவர்கள். அமெரிக்க இராணுவத்தைக் கண்டு அஞ்சும் படை நிறையவே உண்டு. இனி, அமெரிக்க இராணுவத்தை பற்றிய சில வியக்கவைக்கும் தகவல்கள் குறித்துப் பார்க்கலாம்….

“ரே பேன்” – Ray Ban கண்ணாடிகள்

“ரே பேன்” – Ray Ban கண்ணாடிகள் கடந்த 1929ஆம் ஆண்டு அமெரிக்க வான்படை லெப்டினன்ட் ஜெனரல் ஜான், ஓர் நிறுவனத்திடம், விமான ஓட்டும் விமானிகளுக்கு தலைவலி, குமட்டல் வராமல் இருக்க, சூரிய கதிர்களை எதிர்க்க ஓர் சிறப்பு கண்ணாடி வடிவமைக்க கேட்டுக்கொண்டார். அந்த கண்ணாடி தான் இப்போது உலக புகழ்பெற்று திகழும் “Ray-Ban” ஆகும், கதிர்களை தடுப்பது என்பது இதன் பொருள்.

சத்தம் குறைவான வெல்க்ரோ

பொதுவாக நாம் அணியும் செருப்பகளில் இருக்கும் பொருள் தான் வெல்க்ரோ (ஒட்டப பயன்படுவது). இதில் நல்ல சத்தம் வரும். ஆனால், அமெரிக்க இராணுவத்தில் 95% குறைவான சத்தம் வரும் ஸ்பெஷல் வெக்ரோவை பயன்படுத்துகின்றனர்.

அதிக இராணுவவீரர்கள் டிசம்பர் 31, 2013 வரை 1,369,532 பேர் அமெரிக்க இராணுவத்தில் இருந்துள்ளனர் மற்றும் 850,880 பேர் ரிசர்வ் படையில் இருந்துள்ளனர். மொத்தமாக சேர்த்தால் 2.2 மில்லியன் பேர் ஆவார்கள். இது, வெர்மான்ட் (Vermont), அலாஸ்கா (Alaska) மற்றும் வியோமிங் (Wyoming) போன்ற பகுதிகளின் மக்கள் தொகையை விட அதிகமானது ஆகும்.

சொந்தமான நிலம்

அமெரிக்க இராணுவத்திற்கு மட்டுமே 24,000 சதுர மைல் தூர அளவு நிலம் சொந்தமாக இருக்கிறது. இதை ஒன்று சேர்த்தல், அமெரிக்காவில் இதுதான் 42வது மாபெரும் பகுதியாக இருக்கும்.

அதிக செலவு

2014 ஆம் ஆண்டின் கணக்கின்படி, அமெரிக்கா தங்கள் நாட்டின் இராணுவத்திற்காக 580 பில்லியன் டாலர்கள் செலவு செய்துள்ளது. இதுவே, உலகில் ஓர் தனி இராணுவப்படைக்கு செய்யப்பட்ட அதிகபட்ச செலவாகும். இதற்கு அடுத்த இடத்தில சீனா உள்ளது (129 பில்லியன் டாலர்கள்)

“டாப் கன்” திரைப்படம்

கடந்த 1986ஆம் ஆண்டு வெளிவந்த “டாப் கன்” (TOP GUN) என்ற திரைப்படத்தை கண்டு, 500% அதிகமானவர்கள் கடற்படை விமானிகளாக சேர முன் வந்தார்களாம்.

சிறப்பு ஆணுறை

அமெரிக்க இராணுவத்தில் சிறப்பு ஆணுறை ஒன்று வழங்கப்படுகிறதாம். அது ஒரு லிட்டர் தண்ணீரை கொள்ளும் அளவு திறன் வாய்ந்ததாம் (அதுல எதுக்கு தண்ணி… புடிக்கணும்!!!!)
உலகம் முழுதும் உள்ளது

சமீபத்திய தகவல்களின் படி, அமெரிக்க இராணுவத்தின் அமைப்பிடம் உலகம் முழுதும் 74 நாடுகளில் இருக்கிறதாம்

ரோபோட்

கடந்த 1968ஆம் ஆண்டு, அமெரிக்க இராணுவம் “வாக்கிங் டிரக்” என்ற ஓர் ரோபோட்டை உருவாக்கியது. இதன் வலிமையைக் கொண்டு ஓர் காரையே தூக்கிக்கொண்டு ஐந்து மைல் வேகத்தில் நடக்க முடியுமாம். ஆனால், இதை அவர்கள் பயன்படுத்தவே இல்லை என கூறப்படுகிறது.

ரோபோட் கடந்த 1968ஆம் ஆண்டு, அமெரிக்க இராணுவம் “வாக்கிங் டிரக்” என்ற ஓர் ரோபோட்டை உருவாக்கியது. இதன் வலிமையைக் கொண்டு ஓர் காரையே தூக்கிக்கொண்டு ஐந்து மைல் வேகத்தில் நடக்க முடியுமாம். ஆனால், இதை அவர்கள் பயன்படுத்தவே இல்லை என கூறப்படுகிறது.

அதிக உயிர்சேதம் ஏற்பட்ட போர்

அமெரிக்க உள்நாட்டு போர் தான் மிகவும் கோரமானது என்று கருதப்படுகிறது, இந்த போரில் ஏறத்தாழ 7,50,000 போர் வீரர்கள் உயிரிழந்தனர். அதிகபட்சமாக போர் வீரர்கள் இறந்த போராக இது கருதப்படுகிறது.

No comments:

Post a Comment