Sunday 1 November 2015

தமிழுக்கு எது இருண்ட யுகம் – நவீன விளக்கம்

சேரரும், சோழரும், பாண்டியரும் தமிழ் நாட்டுக்குள் தமக்குள் தாமே யுத்தம் புரிந்து வெந்து கிடந்த காலம் அது.



பல்லாயிரக் கணக்கில் உயிர்கள் பறிபோய். அவர்களின் மனைவிமார் விதவைகள் ஆக்கப்பட்டு, பலர் அங்கவீனர்களாக்கப்பட பின்னர். மக்கள் மத்தியில் வெறுமையான உணர்வு ஏற்பட ஆரம்பித்திருந்தது.

சங்ககாலத்தின் இறுதிப் பகுதி அது. காதலையும், வீரத்தையும் போற்றிப் போற்றி சளைத்துபோன சங்கத்தமிழ் மக்களின் மனங்கள் ஏதோ ஒரு மாற்றத்தை எதிர் பார்த்தது. “தமிழுக்கு இருண்ட யுகம் ஆரம்பமானது”
உயிர் பிழைக்க ஓடும் எதிரியின் முதுகில் வேல் எறிந்து பழக்கம் இல்லாதவன் தமிழ் இனத்தவன். ஆனால் மற்ற இனத்தவரும் அவ்வாறே என்று எண்ணியது தான் தவறு.

கி.பி 3ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வட இந்தியாவில் இருந்து புறப்பட்ட ஒரு கூட்டம் தமிழ் நாட்டுக்குள் புகுந்தது. போரினால் காயப்பட்டு வெந்து கிடந்த தமிழரின் மனங்களில் அறநெறி அன்பு என்னும் போர்வையில். சமண சமயத்தையும், பௌத்த மதத்தையும் புகுத்த ஆரம்பித்தது. (தமிழ்நாட்டை சூறையாடிய பின்னர் தான் மதம் பரப்பினர் என்பது சில வரலாற்றாசிரியர்களின் கருத்து )
சங்கத் தமிழர்களின் வாழ்வியலை இருள் சூழத் தொடங்கியது. கி.பி 3ம் நூற்றாண்டில் சூழ்ந்த இருள் மேகங்கள்
6 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல்லவ மன்னர்களின் படையெடுப்பின் பின்னர் தான் சிறிது சிறிதாக விலக ஆரம்பித்தது.

சுமார் 300 வருடங்கள் தமிழுக்கு தனித் தமிழ் வரலாறு இல்லாது அழித்தனர் ஆரியக் கூட்டத்தினர்.

அக்காலத்தில் சமணமும் பௌத்தமும் தழைத்து வளரத் தொடங்கியது. தமிழ் எழுத்துக்களுக்குள் “ஜ,ஷ,ஸ,ஹ,க்ஷ,ஸ்ரீ” போன்ற வடமொழி எழுத்துக்கள் கலக்கப் பட்டது. இந்திரன் ஐயனார் சுப்பிரமணியர் முதலான ஆரியத் தெய்வங்கள் தமிழனின் சமயத்துக்குள் பலவந்தமாக புகுத்தப்பட்டது.

சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற பௌத்த சமண சமயங்களின் பெருமை கூறும் நூல்கள் தோற்றம் பெற்றன. மேலோட்டமாக பார்த்தால் தமிழ் ஊசலாடிக் கொண்டிந்தது. கிட்டத்தட்ட இன்றைய நிலை.

அன்று தமிழ்நாட்டில் தமிழனுக்கு எந்த ஒரு அடையாளமும் இருக்கவில்லை. தஞ்சை பெரியகோவில், மாமல்லபுர சிற்பங்கள், கங்கை கொண்ட சோழபுரம் உட்பட பல அடையாள சின்னங்களும் பிற் காலத்திலேயே தோற்றம் பெற்றது.

அன்று தமிழ் நாட்டுக்கு வடக்கே சாதவாகன வம்சத்தினரின் கீழ் இருந்த சில இடங்களை ஆட்சி புரிந்த பல்லவர் மட்டும் படையெடுத்து தொண்டை மண்டலத்தையும், சோழ மண்டலத்தையும் கைப்பற்றாது இருந்தால். இன்று ஒரு தமிழனும் எஞ்சி இருக்க மாட்டான். ஆரியத்தின் பிடியில் சிக்கி ஒட்டு மொத்தமாக இனமாற்றம் செய்யப்பட்டிருப்போம்.
இன்றைய நிலையும் சங்கமருவிய கால நிலையும் ஒன்று தான். ஈழத்தில் இனக்கலப்பு முடிந்தாகி விட்டது. புலம்பெயர் நாடுகளில் 99% நடந்தாகி விட்டது. தமிழ்நாட்டில் என்ன நிலை என்று கூறமுடியவில்லை. தெரிந்தவர்கள் கூறுங்கள்.

இன்று எங்களை மீட்க பல்லவரும் இல்லை. ஈழத்தில் இருந்த புலிக்கொடி பொறித்த சோழ வம்சாவளியையும் அழித்து விட்டோம். அருகி வரும் நாம் வெகு விரைவில் அழிந்த இனங்களின் பட்டியலில் இணைக்கப்பட்டு விடுவோம். அதுவும் உலக நாடுகளின் அங்கீகாரம் கிடைத்தால் மட்டுமே

No comments:

Post a Comment