Friday 25 December 2015

மரணத் தருவாயில் அலெக்ஸாண்டரின் மூன்று விருப்பங்கள்

மரணத் தருவாயில் அலெக்ஸாண்டர் தனது தளபதிகளை அழைத்து தனது இறுதி ஆசையாக மூன்று விருப்பங்களைக் கூறுகிறார்.



1)என்னுடைய சவப்பெட்டியை தலை சிறந்த மருத்துவர்கள்தான் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும் !

2)நான் இதுவரை சேர்த்த பணம்,தங்கம்,விலை உயர்ந்த கற்கள் போன்றவைகளை என்னுடைய இறுதி ஊர்வலத்தின் பாதையில் தூவிக்கொண்டு செல்ல வேண்டும்.!

3)என் கைகளை சவப்பெட்டியின் வெளியில் தொங்கிக்கொண்டு வரும்படி செய்ய வேண்டும்.!

தளபதிகளில் ஒருவர் அலெக்ஸாண்டரின் அசாதாரண விருப்பத்தால் மிகவும் ஆச்சரியப்பட்டு அதனை விவரிக்கும்படி கேட்டார். அதற்கு அலெக்ஸாண்டரின் பதில்கள்தான் மிகவும் முக்கியமானவை.!!

*தலைசிறந்த மருத்துவர்களால்கூட என்னை நோயிலிருந்து காப்பாற்ற முடியாது, சாவை தடுக்க முடியாது என்பதை உலகத்திற்கு தெரியப்படுத்துவதற்காக !

*நான் இந்த பூமியில் சேகரித்த. கைப்பற்றிய பொருட்கள் பூமிக்கே சொந்தமானவை என்பதை தெரியப்படுத்துவதற்காக.!

*எனது கைகள் காற்றில் அசையும்போது, மக்கள் வெறும் கையுடன் வந்த நான் வெறும் கையுடன் போவதை உணர்ந்து கொள்வார்கள்.!!

நாம் இந்த பூமியில் பிறக்கும்போது கொண்டு வருவதெல்லாம் நாம் இந்த பூமியில் வாழும் காலமாகிய “நேரம் மட்டுமே:”

உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நீங்கள் கொடுக்கும் விலை உயர்ந்த பரிசு உங்களின் நேரம் மட்டுமே.!!

No comments:

Post a Comment