Sunday 29 May 2016

ஈழத் தமிழ் மக்களுக்கு கருணாநிதி என்றும் ஆதரவாம்

நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் கலைஞர் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் பலமான எதிர்க்கட்சியாக தெரிவாகியுள்ளது. 

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைமை கிடைக் கப்பெற்ற கலைஞர் கருணாநிதிக்கு எங்கள் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா.சம்பந்தர் வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.

சம்பந்தரின் வாழ்த்தைக் கண்ட கலைஞர் கருணாநிதி உடனடியாகவே அதற்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியதுடன் அக்கடிதத்தில் ஈழத்தமிழர்களுக்கு என் ஆதரவு எப்போதும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 

ஈழத் தமிழர்களுக்கு கலைஞர் கருணாநிதியின் ஆதரவு எப்போதும் தேவையில்லை. 2006-2009 காலப்பகுதியில் அவரின் ஆதரவு ஈழத் தமிழர்களுக்கு இருந்திருந்தால், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போயிருக்கும்.

எத்தனையோ ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இன்றும் உயிர் வாழ்வதற்கு வாய்ப்புக் கிடைத்திருக்கும். இருந்தும் அதைக் கலைஞர் கருணாநிதி செய்யத் தவறினார். 
2006-2009 காலப்பகுதியில் தமிழகத்தின் முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதியின் ஆதரவுடனேயே மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடத்தியது. 

அன்று கருணாநிதி நினைத்திருந்தால் மத்திய அரசுடன் கதைத்து வன்னி யுத்தத்தை நிறுத்தியிருக்க முடியும். ஆனால் அவர் அதைச் செய்யவேயில்லை. 
தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தபோது இலங்கைத் தமிழர்களுக்கு காலம் உணர்ந்து செய்யவேண்டிய உதவியைச் செய்யாதவர் இப்போது இலங்கைத் தமிழர்களுக்கான தனது ஆதரவு என்றும் இருக்கும் எனக் கூறியமை ஆச்சரியத்துக்குரியதுதான். 

இந்த ஆதரவு என்பது கலைஞர் கருணாநிதியின் வழமையான பழக்கத்தின் தொடர் என்று கூறிக்கொள்ளாமே தவிர மற்றும்படி அவரின் ஆழ்மனதில் இருந்து கூறப்பட்டதல்ல இது என்பது தெட்டத்தெளிவு. 

எனினும் கலைஞர் கருணாநிதி எழுதிய கடிதத்தை நம்புவதற்கு எங்களிடமும் அரசியல் தலைமை உண்டு என்பதுதான் எங்களின் அறுந்த தலைவிதி. 
2008 களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்திப்பதற்கு திட்டமிட்டிருந்தது. 

வை.கோபாலசாமியின் உதவியுடன் இச்சந்திப்பு நடப்பதாக இருந்தது. பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திப்பதற்காக இந்தியா சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வை.கோபாலசாமியின் உதவியை நாடியதன் காரணமாக அந்த சந்திப்பு இடம்பெறுவதற்கு அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தடைசெய்திருந்தார்.  தன்னை மீறி இச் சந்திப்பு நடப்பதாக நினைத்த அவரின் கர்வம் அப்படியொரு தடையை செய்தது.

இவ்வாறாக நடந்து கொண்ட கலைஞர் கருணாநிதி இப்போது இலங்கைத் தமிழர்களுக்கு தனது ஆதரவு என்றும் இருக்குமென்றால், அது எங்கே? எப்போது? ஏன்? என்றவாறான கேள்விகள் எழுவது நியாயமானதே. 

இந்தக் கேள்விக்கான பதில், தமிழ் மக்கள் படும் துன்பத்திற்கு; அவலத்திற்கு கலைஞர் கருணாநிதியின் ஆதரவு என்றுமிருக்கும் என்பதாக அமையும்.

Thursday 19 May 2016

ஹிட்லர் காதலியுடன் நலமாக வாழ்ந்தார் : சர்ச்சைக்குரிய ஆவணம் வெளியீடு..!

அடால்ப் ஹிட்லர் - ஒரு வகையில் (இனப்படுகொலையால்) மனித இனத்தின் எதிரியாக கருதப்பட்டவர், 1945-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி அவர் இறந்ததாக வரலாறு கூறினாலும் இன்று வரையிலாக ஹிட்லரின் இறப்பு சார்ந்த விடயம் மிகவும் மர்மமான ஒன்றாகவே இருக்கிறது.

ஹிட்லரின் மரணம் மட்டுமல்ல, வரலாற்றில் நாம் கற்பனைக்கூட செய்து பார்க்க முடியாத பல விடயங்கள் போலித்தனம் நிறைந்ததாகவே உள்ளதென்பது தான் நிதர்சனம், அதற்கு மிகவும் பிரலமான ஒரு எடுத்துக்காட்டு தான் - ஹிட்லரின் மரணம்..!

 s20JBp4.jpg

சர்ச்சைக்குரிய ஆவணம் :

 அமெரிக்காவின் பெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷனின் அரசாங்க வலைத்தளம் ஒன்று ஹிட்லரின் மரணம் சார்ந்த சர்ச்சைக்குரிய ஆவணம் ஒன்றை வெளியிட்டது.

 Mk4ByNp.jpg

நீண்ட காலம் :

அதில் இரண்டாம் உலகப்போருக்கு பின்பு மிக நீண்ட காலம் நலமாக ஆண்டிஸ் மலைத்தொடரில் வாழ்ந்து வந்தார் என்று கூறப்பட்டுள்ளது.

 421EXqt.jpg

வரலாறு :

கடந்த 71 ஆண்டுகால வரலாற்று பக்கங்களோ ஏப்ரல் 30 ஆம் தேதி, 1945 ஆம் ஆண்டு ஹிட்லர் தனது நிலவறையில் தற்கொலை செய்து கொண்டார், அவரின் உடல் சோவியத் வீரர்களால் அடையாளம் காணப்பட்டு ரஷ்யாவிற்கு கொண்டு செல்லப்பட்டது என்கிறது.

 LVT40FT.jpg

பொய் :

 தற்போது வெளியாகியுள்ள ஆவணமானது இந்த வரலாற்றை பொய் என்று நிரூபித்து, திருத்தி எழுத வைக்குமா என்பது தான் இப்போதைய ஒரே கேள்வி..!

 VdTVGo0.jpg

நீர்மூழ்கி கப்பல் :

 மக்களை கொன்று குவித்த அடால்ப் ஹிட்லர் தனது மனைவியான இவா ப்ரௌன் உடன் நீர்மூழ்கி கப்பல் ஒன்றின் மூலமாக அர்ஜென்டீனா தப்பி சென்றார் என்கிறது எப்பிஐ வெளியிட்ட ஆவணம்.

 qkPIEdZ.jpg

அர்ஜென்டினா கடற்கரை :

அதாவது ஒரு மர்மமான நீர்மூழ்கியானது நாஜி அதிகாரிகளை அர்ஜென்டினாவின் கடற்கரைக்கு கொண்டு சென்று விட்டதாகவும் அந்த ஆவணம் தெரிவிக்கிறது.

 KaYE68i.jpg

தகவலாளர் :

1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு அடையாளம் தெரியாத தகவலாளர் ஒரு மர்மமான நீர் மூழ்கிகப்பலில் ஹிட்லரை சந்தித்துள்ளார், ஹிட்லரை சந்தித்த 4 ரகசியமான மனிதர்களில் அவரும் ஒருவர் என்கிறது வெளியான ஆவணம்.

 sZpcGqg.jpg

ஆதரவு :

அந்த தகவலாளர் மூலம் தான் ஹிட்லர் அர்ஜென்டீனாவிற்கு தப்பி சென்றார் என்றும், அர்ஜென்டீனா அரசாங்கம் அவருக்கு ஆதரவு அளித்து அவரை கடைசி வரை மறைத்து வைத்தது என்றும் ஆதாரத்தை அளிக்கிறது வெளியான ஆவணம்.

 SOSacL3.jpg

குறிப்பிடவில்லை :

வெளிப்படையான பல காரணங்களுக்காக அந்த தகவலாளரின் பெயர் எப்பிஐ ஆவணங்களில் குறிப்பிடவில்லை என்கிற போதும், அவர் போலித்தனமான ஒருவர் இல்லை என்று சில முகவர்கள் நம்புகிறார்கள்.

 c1UUNG7.jpg

சந்தேகம் :

இந்த புதிய சான்றுகள் மூலம் ஹிட்லர் தப்பித்து ஆண்டிஸ் மலைத்தொடருக்கு சென்று விட்டார் என்பதற்கு சாத்தியமான வாய்ப்பு இருக்கிறது என்று சர்வதேச புலனாய்வு சமூகத்தில் சந்தேகம் கிளம்பியுள்ளது.

மநகூவை 1.25 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது நோட்டா!

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளை விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக சட்டசபை தேர்தலில் தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ், மக்கள் நலக் கூட்டணி படுதோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில் மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளை விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
 
 
 
 இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறுகையில்,

தேர்தல் முடிவுகள்
 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பெயர்களை அரசு கெசட்டில் இன்று வெளியிட்ட பிறகு 232 தொகுதிகளுக்கான தேர்தல் நடவடிக்கைகள் முடிந்துவிடும்.

வாக்கு எண்ணிக்கை 
சில தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தாமதம் ஆனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தபால் வாக்குகளை விட வாக்குகள் வித்தியாசம் குறைவாக இருந்தால் தபால் வாக்குகள் மீண்டும் எண்ணப்படும். இதனால் தான் வாக்கு எண்ணிக்கை தாமதமாகியுள்ளது. Show Thumbnail

நோட்டா 
 தமிழகத்தில் நோட்டாவுக்கு 5 லட்சத்து 56 ஆயிரத்து 580 வாக்குகள் கிடைத்துள்ளது என்று ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். கடலூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் பி.செல்வத்தை(1,964) விட நோட்டாவுக்கு(2,062) அதிக வாக்குகள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 

மக்கள் நலக் கூட்டணி 
மதிமுகவுக்கு 3 லட்சத்து 71 ஆயிரத்து 599 வாக்குகள் கிடைத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3 லட்சத்து 7 ஆயிரத்து 303 வாக்குகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3 லட்சத்து 35 ஆயிரத்து 316 வாக்குகளும், தமிழ் மாநில காங்கிரஸுக்கு 2 லட்சத்து 30 ஆயிரத்து 711 வாக்குகளும் கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த கட்சிகளை விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தரப்புக்களை ஒற்றுமைப்படுத்த முள்ளிவாய்க்கால் ஒன்று போதாதோ!

முள்ளிவாய்க்காலில் நேற்றையதினம் தீபம் ஏற்றி உயிரிழந்த எம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இறுதிப் போரில் உயிரிழந்த எம் உறவுகளை நினைவு கூருவதென்பது எங்களின் உரிமையும் கடமையுமாகும்.



இருந்தும் தமிழ் அரசியல் தலைவர்கள் சிலர் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்துவதை தவிர்த்துக் கொண்டனர். 

முள்ளிவாய்க்காலுக்கு சென்று அஞ்சலி செலுத்தினால் அது அரச மட்டத்துச் செல்வாக்கை குறைத்துவிடும் என்று நினைத்து அவர்கள் முள்ளிவாய்க்காலுக்குச் செல்வதை தவிர்த்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றலாம்.

இருந்தும் போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை தடைசெய்ய முடியாது என்று அரசாங்கமே அறிவித்த பின்னர் முள்ளிவாய்க்காலுக்குச் சென்று எங்கள் உறவுகளை நினைந்து ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்துவது உயிரிழந்தவர்களை முன்னிறுத்தி பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்ற தமிழ் அரசியல் தலைமைகளின் கடமை. 

இருந்தும் தமிழ்த் தலைவர்கள் சிலர் முள்ளிவாய்க்கால் பக்கம் செல்வதை முற்றாகத் தவிர்த்துக் கொண்டதற்கு புலிகள் மீதான ஆத்திரம் காரணமோ என்று எண்ணத் தோன்றும். 

எது எப்படியாயினும் மகிந்த ராஜபக்­சவின் தந்தையார் ராஜபக்­சவின் நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்த் தலைவர்கள் முள்ளிவாய்க்காலை ஓரம் கட்டியமை எந்த வகையிலும் நியாயமாகத் தெரியவில்லை. 

பரவாயில்லை; கிடைக்கின்ற வெளிநாட்டு நிதி உதவிகள் கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சத்திலும் இவர்கள் முள்ளிவாய்க்காலை நினைக்காமல் இருந்திருக்கலாம்.
எது எப்படியாயினும் தமிழர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஒன்றுபட வேண்டும்.

தமிழர்களின் ஒற்றுமை ஒன்றுதான் அவர்களின் பலமாக இருக்க முடியும். இருந்தும் துரதிர்ஷ்டவசமாக தமிழ் அரசியல் தலைமைகளும் தமிழ் அமைப்புக்களும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஒற்றுமையை இழந்து தனித் தனி வழியில் பயணிக்கின்றன.

ஒரு அமைப்பு நல்லதைச் செய்ய நினைத்தால் மற்றைய அமைப்பு அதனை தடுத்து நிறுத்த கடுமையாகப் பாடுபடுகிறது.

பதவி ஆசையும் பெயர், புகழ் விருப்பமும் மேலோங்கி சதிராடுகிறது. உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுகின்ற வஞ்சகத்தனங்கள் தமிழினம் தழைத்தோங்க முடியாதவாறு வெட்டிச் சரிக் கின்றன. 
இத்தகைய நிலைமை தொடர்ந்தால் தமிழினம் தன் இனத்தால் அழிந்த இனம் என்ற கறை படிந்த வரலாற்றை தனதாக்கிக் கொள்ளும்.
 
ஆகையால்; அன்புக்குரிய தமிழ் அரசியல் தலைமைகளே! தமிழ் அமைப்புக்களே! உங்களிடம் கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். 


அந்தக் கருத்து முரண்பாடுகள் தமிழ் மக்களுக்கு நன்மை செய்யும் பொருட்டு ஏற்பட்டது என நீங்கள் கருதினால், ஒருகணம் முள்ளிவாய்க்காலை நினையுங்கள்.
 
முள்ளிவாய்க்கால் உங்கள் மனக்கண்ணில் தெரியுமாயின் தமிழர்கள் ஒற்றுமைப்படுவதில் எந்தத் தடையும் இருக்க முடியாது.

ஆம், முள்ளிவாய்க்கால் ஒன்றுபோதும் தமிழர்கள் ஒன்றுபடவும்; தமிழன் வாழ்ந்து காட்டுவான் என்பதை உறுதிப்படுத்தவும் முள்ளிவாய்க்கால் ஒன்று போதும்.    

coutesy: Valampuri