Monday 29 May 2017

தமிழர்களுக்கு தொடரும் அநீதி – (சமகால பார்வை)

வெலி­வே­ரிய- ரது­பஸ்­வெ­லவில் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுத்­த­மான குடி­நீ­ருக்­காகப் போராட்டம் நடத்­திய பொது­மக்கள் மீது, கண்­மூ­டித்­த­ன­மான துப்­பாக்­கிச்­சூடு மற்றும் தாக்­கு­தல்­களை நடத்த இரா­ணு­வத்­தி­ன­ருக்கு உத்­த­ர­விட்ட குற்­றச்­சாட்டில் பிரி­கே­டியர் அனுர தேசப்­பி­ரிய குண­வர்த்­தன கடந்த வியா­ழக்­கி­ழமை கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருக்­கிறார்.

போராட்டம் நடத்­தப்­பட்ட பகு­திக்கு இரா­ணு­வத்­தி­னரைக் கொண்டு சென்ற இவரே, அங்கு கட்­ட­ளை­களைப் பிறப்­பித்­தி­ருந்தார். அந்தச் சம்­ப­வத்தில் 14 வயது மாணவன் உள்­ளிட்ட மூவர் கொல்­லப்­பட்­ட­துடன் 33 பேர் காய­ம­டைந்­தனர்.

மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில் இரா­ணு­வத்­தினர் மீதும் அர­சாங்­கத்தின் மீதும் சிங்­கள மக்கள் மத்­தியில் வெறுப்பு ஏற்­ப­டு­வ­தற்கு இந்தச் சம்­ப­வமும் ஒரு காரணம்.

ஆட்­சியை இழந்த பின்னர் மஹிந்த ராஜபக் ஷ தனது தோல்­விக்­கான கார­ணிகள் பற்றிக் கூறிய போது, ரது­பஸ்­வெல சம்­ப­வத்­தையும் நினை­வு­ப­டுத்­தி­யி­ருந்தார்.

ஆனால், மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சி யில் இருந்த வரைக்கும், இந்தச் சம்­பவம் தொடர்­பான நியா­ய­மான விசா­ர­ணை­களை நடத்­தவோ, இந்தச் சம்­ப­வத்­துக்குக் கார­ண­மான படை அதி­கா­ரிகள் மீது நட­வ­டிக்கை எடுக்­கவோ இல்லை. அதற்குப் பதி­லாக பிரி­கே­டியர் தேசப்­பி­ரிய குண­வர்த்­த­ன­வுக்கு துருக்­கியில் உள்ள இலங்கை தூத­ர­கத்தில் பாது­காப்பு ஆலோ­சகர் பதவி வழங்கி கௌரவம் அளிக்­கப்­பட்­டி­ருந்­தது.

பிரி­கே­டியர் தேசப்­பி­ரிய குண­வர்த்­தன இறு­திக்­கட்டப் போரில் முக்­கிய பங்­காற்­றிய படை அதி­கா­ரி­களில் ஒருவர். இறு­திக்­கட்டப் போரில் 58 ஆவது டிவிசன் மன்னார் தொடக்கம் முள்­ளி­வாய்க்கால் வரை தொடர்ந்து போரில் பங்­கேற்­றி­ருந்­தது. பெரு­ம­ளவு இடங்­களைக் கைப்­பற்­று­வ­திலும், விடு­தலைப் புலி­களைத் தோற்­க­டிப்­ப­திலும் கணி­ச­மான பங்கை ஆற்­றி­யி­ருந்­தது.

அதே­வேளை இந்த டிவிசன் மீது பொது­மக்­களின் இலக்­குகள் மீது கண்­மூ­டித்­த­ன­மாக பீரங்கித் தாக்­குதல் நடத்­தி­யமை, சர­ண­டைந்த புலிகள் காணாமல் ஆக்­கப்­பட்­டமை அல்­லது படு­கொலை செய்­யப்­பட்­டமை உள்­ளிட்ட போர்க்­குற்­றங்கள், மனித உரிமை மீறல்கள் போன்ற குற்­றச்­சாட்­டு­களும் சுமத்­தப்­பட்­டுள்­ளன.

வெள்­ளைக்­கொ­டி­யுடன் சர­ண­டைந்­த­தாக கூறப்­பட்ட புலி­களின் அர­சி­யல்­துறைப் பொறுப்­பாளர் பா. நடேசன், உள்­ளிட்­ட­வர்கள் படு­கொலை செய்­யப்­பட்ட சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பட்­டதும் இந்த டிவிசன் தான்.

நடேசன், புலித்­தேவன், கேணல் ரமேஸ் உள்­ளிட்­ட­வர்கள் 58 ஆவது டிவிசன் படை­யி­ன­ருடன் நடந்த சண்­டையில் கொல்­லப்­பட்­டனர் என்­பதை இரா­ணுவத் தலை­மை­யகம் அப்­போது ஏற்றுக் கொண்­டி­ருந்­தது. ஆனால் அவர்கள் சர­ண­டைந்த பின்னர் கொல்­லப்­பட்­டனர் என்­பதை இரா­ணுவம் ஏற்­க­வில்லை. எவ்­வா­றா­யினும் இத்­த­கைய சம்­ப­வங்­க­ளுக்கு 58 ஆவது டிவி­சனே பொறுப்­பாக இருந்­தது.

போரின் முடிவில் சர­ண­டைந்த எழிலன் உள்­ளிட்ட புலிகள் இயக்க உறுப்­பி­னர்கள் தொடர்­பான ஆட்­கொ­ணர்வு மனுக்கள் மீது முல்­லைத்­தீவு நீதி­மன்­றத்தில் நடந்து வரும் விசா­ர­ணை­களில் 58 ஆவது டிவி­சனின் கட்­டளை அதி­கா­ரி­யாக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்­திர சில்­வாவை விசா­ரிக்க வேண்டும் என்று கோரப்­பட்டு வரு­வதும் குறிப்­பி­டத்­தக்­கது.

இவ்­வா­றாக இறு­திக்­கட்டப் போரில் முக்­கிய சாத­னை­களை நிலை­நாட்­டி­ய­தாக கூறப்­பட்ட அதே­வேளை, அதி­க­ளவு சர்ச்­சை­க­ளையும் சந்­தித்து வரும் 58 ஆவது டிவி சன் அப்­போது பிரி­கே­டியர் சவேந்­திர சில்­வாவின் தலை­மையின் கீழ் செயற்­பட்­டி­ருந்­தது.

மன்னார் தொடக்கம் முள்­ளி­வாய்க்கால் வரை முன்­னே­றிய இந்த டிவி­சனில் மூன்று பிரி­கேட்கள் உள்­ள­டக்­கி­யி­ருந்­தன. அவற்றில் ஒன்றின், அதா­வது 58-1 பிரி­கேட்டின் கட்­டளை அதி­கா­ரி­யாக இருந்­தவர் தான் பிரி­கே­டியர் தேசப்­பி­ரிய குண­வர்த்­தன. அப்­போது அவர் லெப்.கேண­லாக பத­வியில் இருந்தார்.

இறு­திக்­கட்டப் போர் தொடர்­பாக 58 ஆவது டிவி­சனின் மீது ஏரா­ள­மான குற்­றச்­சாட்­டுகள் இருந்த போதிலும், அந்த படைப்­பி­ரிவின் எந்­த­வொரு அதி­காரி மீது இன்­னமும் விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­டவோ, நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டவோ இல்லை. ஆனால், பிரி­கே­டியர் தேசப்­பி­ரிய குண­வர்த்­தன ரது­பஸ்­வெல சூட்டுச் சம்­ப­வத்தில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருக்­கிறார். இவரே இந்தச் சம்­ப­வத்தில் துப்­பாக்கிச் சூடு நடத்­து­வ­தற்கு ஆணை பிறப்­பித்­தி­ருந்தார். ஆனாலும் அவர் கைது செய்­யப்­ப­டு­வ­தற்கு நான்கு ஆண்­டுகள் இழு­பறி ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

சிங்­கள மக்கள் மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­தல்­களில் தொடர்­பு­டைய இரா­ணுவ அதி­கா­ரிகள் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தற்கே இந்­த­ளவு காலம் சென்­றி­ருக்­கி­றது.

இலங்­கையில் இரா­ணு­வத்­தி­னரும் அதி­கா­ரி­களும் தண்­ட­னையில் இருந்து தப்­பித்தல் வழக்­க­மா­ன­தொரு நடை­மு­றை­யா­கவே இருந்து வந்­தி­ருக்­கி­றது. இந்த நிலையை மாற்­றி­ய­மைக்க வேண்டும் என்று மனித உரிமை அமைப்­பு­களும், ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையின் அறிக்­கை­களும், கூட்­டங்­களும் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வந்­தி­ருக்­கின்­றன.

படை­யினர் தண்­ட­னையில் இருந்து தப்­பிக்கும் நிலைமை முடி­வுக்குக் கொண்டு வரப்­ப­டாத வரையில் குற்­றங்­களைக் குறைக்க முடி­யாது என்றும், இத்­த­கைய நிலை குற்­றச்­செ­யல்­களை ஊக்­கு­விப்­ப­தா­கவும் சர்­வ­தேச அளவில் வலி­யு­றுத்­தப்­பட்டு வந்­தது. ஆனாலும், முன்­னைய அர­சாங்­கமும் சரி, இப்­போ­தைய அர­சாங்­கமும் சரி குற்­றச்­சாட்­டுக்­குள்­ளான படை­யினர் மீது நட­வ­டிக்கை எடுப்­பதில் ஆர்­வத்தை வெளிப்­ப­டுத்­த­வில்லை.

குற்­றச்­சாட்­டு­களை எதிர்­கொள்ளும் படை­யினர் பாது­காக்­கப்­படும் நிலை தொடர்­கி­றது. போருடன் தொடர்­பு­டைய குற்­றச்­சாட்­டு­களில் இருந்து படை­யி­னரைப் பாது­காப்பேன் என்று நாட்டின் ஜனா­தி­ப­தியே உறுதி கூறு­கின்ற அள­வுக்கு நிலைமை இருக்­கி­றது.

குற்­ற­வா­ளிகள் என்று நிரூ­பிக்­கப்­ப­டா­வி­டினும், குற்­றச்­சாட்­டு­களை எதிர்­கொண்­டுள்­ள­வர்­க­ளுக்கு அர­சாங்­கமே பாது­காப்பு அளிக்­கின்ற ஒரு பொறி­முறை இன்­னமும் இலங்­கையில் காணப்­ப­டு­கி­றது.

குற்­றச்­சாட்­டு­களில் சம்­பந்­தப்­பட்ட படை­யினர் மீது அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்கத் தயங்­கு­கி­றது, அச்சம் கொண்­டி­ருக்­கி­றது, குற்­றம்­சாட்­டப்­பட்ட படை அதி­கா­ரி­க­ளுக்கு உயர் பத­விகள் வழங்கி கௌர­விக்­கி­றது என்று அண்­மையில் ஐரோப்­பிய ஒன்­றிய நாடா­ளு­மன்­றத்தில் 52 உறுப்­பி­னர்­களால் முன்­வைக்­கப்­பட்ட, ( ஜி.எஸ்.பி ) பிளஸ் சலுகை தொடர்­பான பிரே­ரணை ஒன்றில் கூட சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருக்­கி­றது.

இலங்­கையில் பார­பட்­ச­மற்ற நீதிப் பொறி­முறை ஒன்று இருப்­ப­தாக அர­சாங்கம் கூறிக் கொண்­டாலும், தமி­ழர்­க­ளுக்­கான நீதியும், பெரும்­பான்­மை­யி­னத்­த­வ­ரான சிங்­க­ள­வர்­க­ளுக்­கான நீதியும் ஒன்­றாக இருக்­கி­றது என்று கூற முடி­யாது.

ஏனென்றால், தமி­ழர்­க­ளுக்கு எதி­ராக இழைக்­கப்­பட்ட ஏரா­ள­மான மனித உரிமை மீறல்கள், குற்­றங்கள் தொடர்­பாக இன்­னமும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை. ஆனால் சிங்­க­ள­வர்­க­ளுக்கு எதி­ரான குற்­றங்கள், மீறல்கள் குறித்து தாம­த­மா­க­வேனும் விசா­ர­ணைகள் நடத்­தப்­படும் நிலை உள்­ளது.

ரது­பஸ்­வெல படு­கொலை தொடர்­பான விசா­ர­ணை­யா­கட்டும், லசந்த விக்­கி­ர­ம­துங்க படு­கொலை விசா­ரணை ஆகட்டும், ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொட கடத்தல், ஊட­க­வி­ய­லா­ளர்கள் கீத் நொயார், உபாலி தென்­னக்கோன் தாக்­கப்­பட்ட சம்­ப­வங்­க­ளா­கட்டும் எல்­லாமே இதற்­கான உதா­ர­ணங்கள் தான்.

ரது­பஸ்­வெல சம்­பவம் நடந்து நான்கு ஆண்­டுகள் ஆகப் போகின்ற நிலை­யி­லேனும், துப்­பாக்­கிச்­சூடு நடத்த உத்­த­ர­விட்ட அதி­காரி கைது செய்­யப்­பட்­டி­ருக்­கிறார். லசந்த படு­கொ­லை­யுடன் தொடர்­பு­டைய படை அதி­கா­ரிகள் பல ஆண்­டு­க­ளுக்குப் பின்னர் கைது செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார்கள். அது­போலத் தான் பிரகீத் எக்­னெ­லி­கொட,உபாலி தென்­னக்கோன், கீத்­நொயார் தாக்­கப்­பட்ட வழக்­கு­க­ளிலும் இரா­ணுவ அதி­கா­ரிகள் பல ஆண்­டுகள் கழித்து கைது செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

இந்த வழக்­கு­களில் இன்­னமும் தீர்ப்­புகள் அளிக்­கப்­ப­டாத போதும், விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன, சந்­தேக நபர்­க­ளான படை அதி­கா­ரிகள் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

ஆனால், மேற்­படி சம்­ப­வங்கள் நடந்த கால­கட்­டங்­களில் வடக்­கிலும் கிழக்­கிலும் தெற்­கிலும் தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான,ஏரா­ள­மான படு­கொ­லைகள் நடந்­தி­ருக்­கின்­றன. கடத்­தல்­களும், காணாமல் ஆக்­கப்­ப­டு­தல்­களும் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொல்­லப்­பட்டு, கடத்­தப்­பட்டு, காணாமல் ஆக்­கப்­பட்டு இருக்­கி­றார்கள்.

ஆனால் இவை தொடர்­பான எந்த வழக்­கு­களும் விசா­ரிக்­கப்­ப­டு­வதும் இல்லை, சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் என்று குற்­றம்­சாட்­டப்­படும் படை அதி­கா­ரிகள் உள்­ளிட்ட எவரும் கைது செய்­யப்­ப­டவும் இல்லை. இது­போலத் தான், ஏனைய மனித உரிமை மீறல்கள், போர்க்­குற்­றச்­சாட்­டு­களின் நிலையும் உள்­ளது.

இறுதிப் போரில் சர­ண­டைந்து காணாமல் ஆக்­கப்­பட்­டுள்ள எழிலன் உள்­ளிட்­ட­வர்கள் தொடர்­பாக முல்­லைத்­தீவு நீதி­மன்­றத்தில் நடக்­கின்ற விசா­ர­ணை­களை அரச தரப்பு இழுத்­த­டித்து வரு­கி­றது. கடை­சி­யாக நடந்த விசா­ர­ணையில், சம்­பவம் நடந்த போது 58 ஆவது டிவி­சனின் கட்­டளை அதி­கா­ரி­யாக இருந்­தவர் மேஜர் ஜெனரல் சவேந்­திர சில்­வாவே என்றும், அவ­ரி­டமே, அது­பற்றி அறிய வேண்டும் என்றும், ஓய்­வு­பெற்ற மேஜர் ஜெனரல் சாணக்ய குண­வர்த்­தன கூறி­யி­ருந்தார்.

அதை­ய­டுத்து, மேஜர் ஜெனரல் சவேந்­திர சில்­வாவை நீதி­மன்­றத்­துக்கு அழைத்து விசா­ரணை நடத்த வேண்டும் என்று பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் தரப்பு சட்­டத்­த­ரணி கோரிக்கை முன்­வைத்த போது, அதற்கு அர­ச­த­ரப்பு கடும் எதிர்ப்பை வெளி­யிட்­டது. மேஜர் ஜெனரல் சவேந்­திர சில்­வா­வுக்கு அழைப்­பாணை அனுப்­பாமல் தடுப்­ப­தற்கு அர­ச­த­ரப்பு கடும் பிர­யத்­த­னங்­களை எடுத்து வரு­கி­றது.

ஒரு பக்­கத்தில் சிங்­கள மக்கள் மீதான தாக்­கு­தல்­களில் சிங்­கள ஊட­க­வி­ய­லா­ளர்கள் மீதான தாக்­கு­தல்­களில் தொடர்­பு­டை­ய­வர்கள் படை அதி­கா­ரி­க­ளாக இருந்­தாலும், நீண்ட இழு­ப­றிக்குப் பின்­ன­ரா­வது சட்­டத்தின் முன் நிறுத்தும் சூழல் இருக்­கி­றது.

ஆனால் தமி­ழர்­க­ளுக்­கான நீதி அவ்­வா­றா­னது அல்ல. ஒன்றில் நீதியின் முன் நிறுத்­தப்­ப­டாத நிலை காணப்­ப­டு­கி­றது. அல்­லது குற்­ற­வா­ளி­களை தப்­பிக்க விடும் சூழல் காணப்­ப­டு­கி­றது.

காணா­மல்­போனோர் தொடர்­பாக பர­ண­கம ஆணைக்­குழு உள்ளிட்ட பல்வேறு விசாரணைக் குழுக்களால் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, கடத்தல்களில் ஈடுபட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ அதிகாரிகள், படையினரின் விபரங்கள், பாதிக்கப்பட்ட தரப்பினரால் தெளிவாக முன்வைக்கப்பட்டிருந்தன.

ஆனாலும் அவர்கள் மீது எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை, நடவடிக்கை எடுக்கப்படவுமில்லை. இதுபோன்ற பாரபட்சமான நீதி முறை தான் இன்னமும் இலங்கையில் நீடித்துக் கொண்டிருக்கிறது,

வடக்கிலும், கிழக்கிலும் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நீதிக்கான எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றன. அவர்களின் நம்பிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து கொண்டிருக்கின்றன.

அதேவேளை, ஒரு பக்கத்தில் இராணுவத்தினரைப் பாதுகாப்போம் என்று சூளுரைத்திருக்கின்ற அரசாங்கம் இன்னொரு பக்கத்தில் பாதிக்கப்பட்ட சிங்கள மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக அவர்களின் நலன்களையும் உதாசீனப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது.

போரில் பாதிக்கப்பட்ட தரப்பினரின் நிலையில் இருந்து நீதியை வழங்காமல், வெற்றியைப் பெற்ற தரப்பில் இருந்து நீதியை வழங்குகின்ற நடைமுறை நீடிக்கின்ற வரையில், இலங்கையில் பக்கசார்பற்ற, பாரபட்சமற்ற, நடுநிலையான நீதி முறைமை இருக்கிறது என்று எவராலும் கூற முடியாது.

Thursday 18 May 2017

கடைசி தமிழன் இருக்கும் வரை மறக்க முடியாத மே 18!

மாவீரர்கள் சூழ்ச்சியினால் வீழ்ந்து போன வலியினைப் பற்றி நிறைய கட்டுரைகளை வலைப்பக்கத்தில் எழுதியிருக்கிறேன். 
 
 
 
சானல் 4 ஒவ்வொரு முறை ஈழப் படுகொலைகளைப் பற்றி காணொளி வெளியிட்ட போதும் அது அமீரக நேரம் அதிகாலை மூன்றறை மணியாயிருக்கும், இரவு முழுதும் கண்விழித்து நமது பெண்களும் பிள்ளைகளும் அலறி அழும் காட்சிகளைப் பார்த்து கையாலாகாதவனாய் வான் பார்த்து அழுதிருக்கிறேன். 
 
 பதுங்கு குழிக்குள் இருந்து சிறுமியொறுத்தி அப்பா வாங்கோல் வாங்கோல் என்று அலறிக் கொண்டிருந்த போதே குண்டு விழுந்து செத்துப் போன தகப்பானாயும் நானிருந்தேன், குழிக்குள் இருந்து கதறிய பிள்ளையாயும் நானிருந்தேன், மரத்தடியில் குலுக்கோஸ் பாட்டில்களைக் கையில் பிடித்துக் கொண்டு தலைக்காயத்திலிருந்து கட்டுக்களை மீறி வழியும் இரத்தத்தை துடைத்தபடி, தங்களைச் சுற்றி மொய்க்கும் ஈக்களை விரட்டிக் கொண்டு காமிராக்களைப் பார்த்த விழிகளை எல்லாம் எப்படி மறக்க? 
 
 
சூழ்ச்சியால் ஒன்றரை லட்சத்திற்கும் மேலான நம் தொப்புள் கொடி உறவுகள் கொன்றழிக்கப்பட்ட தினத்தை வலியோடு தூக்கிச் சுமந்து கொண்டிருக்கிறது இந்த அவல மே 18. 
 
 சகோதரி இசைப்பிரியா வெள்ளை வேட்டியைக் கொடி போன்ற தன் மேல் சுற்றிக் கொண்டு காயத்தோடு இருந்த புகைப்படத்தையும், பின் ஆடையின்றி வீழ்த்தப்பட்டு கிடந்த புகைப்படத்தையும், மேலே கட்டம் போட்ட ஊதா கையிலியோடு தகப்பனை தாயை வாழ்க்கையை ஈழ மண்ணுக்காக தொலைத்து விட்டு அரை டிராயரோடு அமந்திருந்த மாவீரனின் மகனை ஒரு புகைப்படத்திலும், பின் அவனே வேறொரு புகைப்படத்தில் குண்டடிபட்டு மண்ணில் வீழ்ந்து கிடந்த காட்சியையும் இந்த ஈனக் கண்களால்தான் பார்த்தேன். 
 
காலங்கள் உருண்டோடி விட்டன. இன்று வெவ்வேறு சூழல்களைத் தமிழினம் பேசி, சிரித்து நகர்வது போலத் தெரிந்தாலும் ஈழத்தில் நிகழத்தபட்ட கொடுமையை மானமுள்ள கடைசித் தமிழன் இருக்கும்வரை மறக்கமாட்டான். 
 
 பலமான கேள்வியொன்றை சர்வதேசம் நம்மிடம் கேட்டு வைத்திருக்கிறது. பதிலை உடனே கொடுக்க முடியாத காலச் சூழலில் நாமெல்லோரும் ஊமைகளாக்கபட்டு விட்டோம் என்றாலும்.... சரியான நேரத்தில் எமது பிள்ளைகளால் இந்த மே பதினெட்டில் கேட்கப்பட்ட கேள்விக்குக் சரியான பதில் உலகம் அலற கொடுக்கப்படும். 
 
அந்த பதிலே வீழ்ந்த எம் இனத்தின் மீட்சி என்று காலம் கவனமாய் குறிப்பெடுத்தும் கொள்ளும்.
 
 ஈழப் போரில் கொல்லப்பட்ட எம் தமிழ்ச் சொந்தங்களுக்கு வீரவணக்கங்கள்
 
. #மே 18 -தேவா சுப்பையா