Sunday 9 July 2017

நான் சகாதேவனாக இருந்தால் தமிழரசுக் கட்சியைக் காப்பாற்ற...

மகாபாரதப் போரை  நிறுத்துவதற்கு ஏதும் வழியுண்டோ என்ற கேள்வி எழுகிறது. விடை தெரியாமல் பலரும் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கின்றனர்.

போர் மூண்டால் அழிவுதான் மிச்சம் என்பதை தர்மத்தின்பால் நிற்போர் உணர்கின்றனர்.

எனினும் அதர்மத்தவர்கள் போர்தான் வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பது தெரிகிறது.

போரைத் தடுப்பதற்கான எத்தனையோ உபாயங்கள் கையாளப்பட்டன. தூது முயற்சிகள், சமாதானப் பேச்சுவார்த்தைகள்,  விட்டுக் கொடுப்புக்கள் என எதுவும் செல்லுபடியற்றதாக குரு சேத்திரப் போரைத் தவிர வேறு வழியில்லை என்றாயிற்று.

இந்நிலையில் சகாதேவன் மட்டும் ஆழ்ந்த சிந்தனையில் உள்ளான். பாண்டவர்களில் அவன்தான் சோதிடன்.

போரை நிறுத்த ஓர் உபாயம் கூறலாம் என்கிறான். என்ன உபாயம்? கண்ண பரமாத் மாவை கட்டிப் போட்டால் பாரதப் போரை நிறுத் தலாம் என்கிறான் அவன்.

பாராளக் கன்னன் இகல் பார்த்தனை 
முன் கொன்று அணங்கின் 
காரார் குழல் களைந்து காலில் தளை பூட்டி 
நேராகக் கைபிடித்து நின்னையும் நான்  
கட்டுவேனால் வாராமல் காக்கலாம் மாபாரதம் என்பது சகாதேவனின் அறிவுரை.

பாரதப் போரை நடத்தி அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதுதான் கண்ண பரமாத்மாவின் கடமை. அதைச் செய்யாமல் விடுவது எங்ஙனம்? ஆகையால் போர் மூழ்கிறது.

அட, இதை இவ்விடத்தில்  ஏன் சொல்கிறீர்கள்  என்று நீங்கள் கேட்கலாம். அவ்வாறான கேள்விக்குப் பதில் உண்டு.

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை  ஆளுநரிடம் கையளித்ததன் மூலம் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கான மக்கள் செல்வாக்கு எக்காலத்திலும் இல்லாதவாறு வீழ்ச்சி கண்டுள்ளது.

தமிழர்களின் பழமையான அரசியல் கட்சிக்கு ஏற்பட்ட வீழ்ச்சி அனைவருக்கும் கவலை தரக் கூடியதுதான்.
ஆனால் என்ன செய்வது! அந்தக் கட்சியின் எதிர்காலம் பற்றி இம்மியும் சிந்திக்காமல் தங்களின் நலனை மட்டுமே கருத்தில் கொள்பவர்கள் அந்தக் கட்சியில் இருந்து மேலாதிக்கம் செய்யும் போது யார்தான் என்ன செய்ய முடியும்?

தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துப் பற்றி மூத்த அரசியல் தலைவர் இரா.சம்பந்தரும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும் நன்கு உணர்ந்துள்ளனர்.

கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்று அவர்கள் கடும் முயற்சி செய்யும் ஒவ்வொரு கணமும் அவர்களின் முயற்சியை சாண் ஏற முழம் சறுக்குவது போல வடக்கு மாகாண சபையில் இருக்கக்கூடிய தமிழரசுக் கட்சி உறுப்பினர்களின் நடவடிக்கை அமைகிறது.

இஃது தமிழரசுக் கட்சி மீதான வெறுப்பை மேன்மேலும் அதிகரிக்கிறது. இந்நிலையில் தமிழரசுக் கட்சி வீழ்ச்சியடைவது விதியாயிற்றோ என்று எண்ணினாலும் அந்தக் கட்சியைக் காப்பாற்ற ஒரு வழியுண்டு. 

அது கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகிய மூவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக செயற்படுவதாக மட்டுமே இருக்க முடியும்.
 
 
courtesy:valampuri

3 comments:

  1. Great blog you've got here.. It's difficult to find good quality writing like yours these days. I truly appreciate individuals like you! Take care!! paypal login my account

    ReplyDelete
  2. Nice post. I love to keep up the good work.... International applicants may apply for an e visas for India. Read on to get deeper insight about e visa via India e visa.

    ReplyDelete
  3. Hello, thanks for sharing this content with us, I am fully indebted to you for your help. Ethiopia Business visa, It takes just a few minutes to fill out the online form for Ethiopian Business Visa, Ethiopian Business Visa. Within 1 to 3 working days, you can receive your Ethiopia Visa.

    ReplyDelete