Sunday 15 April 2018

காவிரி என்­பது வெறும் நீரல்ல

காவி­ரிப் படு­கைக்கு என்று ஒரு இர­சனை. அங்கே சிருங்­கா­ரம் சற்­றுத் தூக்­க­லாக இருக்­கும்.


சங்க காலத்­தி­லி­ருந்து மருத நிலத்­தின் அடை­யா­ளமே அது­தானே. வயிற்­றுக்கு மட்­டுமே சோறிட்டு வளர்க்­க­வில்லை காவிரி. இப்­படி ஒரு சிந்­த­னைக் கலாசா­ரத்­தை­யும் வளர்த்­தி­ருந்­தது.
அது பண்­பாட்­டுப் படைப்­பு­க­ளான இலக்­கி­யத்­துக்­கும், கலைக்­கும் ஊற்று. காவிரி சென்­று­கொண்­டி­ருக்­கும் வறட்­சிப் பாதை­யைப் பார்க்­கை­யில் ஒரு அச்­சம் ஏற்­ப­டு­கி­றது. தண்­ணீ­ரோடு சேர்த்து இவை­யெல்­லா­மும் காணா­மல் போய்­வி­டப் போகி­ன்றனவா? என்­ப­து­தான் அது.
கலா­சா­ரப் பிளவு
பேச்­சு­வாக்­கில், ‘ஆற்­றங்­கரை மர­மும் அரச வாழ்­வும்’ என்று இன்­றைய இளை­ஞன் ஒரு­வ­னுக்­குச் சொன்­னால், நிச்­ச­யம் அது அவ­னுக்­குப் புரி­யாது. ஆற்­றுப் படு­கையை ஆறு அரித்து ஓடும்­போது, அங்கே இருப்­பது அரச மர­மா­னா­லும் அது நிச்சயம் விழுந்­து­வி­டும்.
இன்று அர­ச­னாக இருப்­ப­வன் நாளையே அடி­மை­யா­கக்­கூ­டும். சொற்­கள் புரிந்­தி­ருந்­தா­லும் அவ­னால் அதன் அர்த்­தத்தை விளங்­கிக்­கொள்ள முடி­யா­த­ தற்­குக் கார­ணம், சிந்­த­னைக் கலா­சா­ரத்­தில் வந்த இடை­வெளி. ஆற்­றங்­கரை அரச மரம் இன்றைய இளைஞர்களின் பிரக்­ஞைக்கு அந்­நி­யம்.
சங்க இலக்­கி­ய­மான நற்­றி­ணைப் பாடல் ஒன்று மரு­தத்­தின் வளத்­தைப் பற்­றி­யது. அறு­வடை முடிந்­தது. தாளை மடக்கி உழுது மறு­ப­டி­யும் விதைக்க விதை கொண்­டு­சென்­றார்­கள்.
விதைத்­து­விட்டு கூடை­க­ளில் மீனைப் பிடித்­துக்­கொண்டு மீண்­டார்­கள், என்­ற­வா­றாக அமை­கி­றது அந்­தப் பாடல். வழி­யி­லி­ருந்த குட்­டை­க­ளில் மீன் பிடித்­தார்­கள் என்­று­தான் இதைப் புரிந்­து­கொள்­கி­றார்­கள்.
ஆனால் அதுவல்ல அதன் அர்த்­தம். வய­லி­லேயே மீன் கிடைக்­கும். அன்­றைய காவி­ரிக் காலத்­தில் அது சாத்­தி­ய­மா­யிருந்தது. வய­லில் மீன் கிடப்­பது இன்­றைய பிரக்­ஞைக்கு எட்­டாது. இது கால இடை­வெளி அல்ல.
தலை­முறை இடை­வெளி அல்ல. காவிரி காலத்­துத் தலை­முறை, காவி­ரிக்­குப் பிந்­தைய காலத்­துத் தலை­முறை என்று ஒரு பிரக்­ஞைப் பிளவு உரு­வா­கியுள்ளது. யதார்த்­த­மும் அது­வே­தானே.
காவி­ரிக்கரை­யில் நக­ரங்­கள் அமைந்­தன என்­பது பெரி­தல்ல. நக­ர­மைப்­புக்­குள்­ளேயே, கட்­டி­டக் கலைக்­குள்­ளேயே காவிரி வந்­தி­ருந்­தது. மதி­லைக் காவிரி வரு­டிக்­கொண்டு ஓட கரை­யில் கட்­டு­ம­லை­யாக இருக்­கும் கோயி­லடி ரெங்­க­நா­தர் கோயி­லைப் போல் அங்கு பல மாடக்­கோ­யில்­கள் உள்­ளன. பெரு­கி­வ­ரும் இடங்­க­ளி­லும் காவி­ரியை விட்டு வில­கா­ம­லி­ருக்­கும் ஒரு வாஞ்சை.
ஆங்காங்கே பரந்து நிறைத்­துக்­கொண்டு இந்­தச் சீமை­யைப் புனல் நாடாக்­கிக்­கொண்­டி­ருந்­தது காவிரி.
திரா­விட நக­ர­மைப்­பின் மைய­மான கோயில்­க­ளில் இருந்து திரு­மஞ்­சன வீதி ஒன்று காவி­ரிக்­குச் செல்­லும். இறை­வ­னின் அன்­றாட அபி­சே­கத்­துக்கு காவி­ரி­யி­லி­ருந்து தண்­ணீர் எடுத்­து­வ­ரு­வார்­கள்.
துலாக் காவிரி
ஆடிப்­பெ­ருக்­கில் தீர்த்­த­வா­ரிக்கு எங்­கள் ஊர் பெரு­மாள் ஆற்­றுக்­குச் செல்­வார். காவிரி வறண்­டு­விட்­ட­தால் அண்­டா­வில் தண்­ணீரை வைத்­துக்­கொண்டு ஆற்­றில் தீர்த்­த­வாரி நடக்­கி­றது. ஐப்­ப­சி­யில் காவிரி துலாக் காவி­ரி­யா­கும்.
மயி­லா­டு­து­றை­யில் பெரு­மா­ளுக்­கும் சிவ­னுக்­கும் துலாக் காவிரி தீர்த்­த­வாரி பெரிய விழா. இந்த ஆண்டு காவி­ரி­யில் வரத்து இல்­லா­மல் ஆழ்­து­ளைக் கிணற்றுத் தண்­ணீ­ரில் ஐப்­பசி கடை முழுக்கு நடந்­தது.
ஸ்ரீரங்­கம் பெரு­மா­ளுக்கு இந்த மாதத்­தில் காவி­ரி­யின் அம்மா மண்­டப படித்­து­றை­யி­லி­ருந்­து­தான் தீர்த்­தம். மற்ற மாதங்­க­ளில் அவ­ருக்­குத் தீர்த்­தம் கொள்­ளி­டத்­தி­லி­ருந்து வரும்.
துலாக் காவிரி என்று ஒரு காவிரி இனி வருமா?
மாசி மகத்­தன்று எல்­லாக் கோயில்­க­ளி­லி­ருந்­தும் சுவாமி குளத்­துக்கோ காவி­ரிக்கோ சென்று தீர்த்­த­வாரி நடக்­கும். கெட்டிமேளம் கொட்ட காளை வாக­னத்­தில் சுவாமி ஆற்­றில் இறங்­கும்­போது மக்­கள் காவிரி நீரை வாரி வாரி இறைத்­துக்­கொள்­வார்­கள்.
கங்­கை­யைத் தலை­யில் மறைத்த சிவன் காவி­ரி­யைக் காட்­டிக்­கொண்டு நிற்­பார். இப்­போது காவி­ரி­யும் மறைந்­ததே!
மன்­னார்­குடி ராஜ­கோ­பா­ல­னுக்கு ஆண்­டுத் திரு­வி­ழா­வின் இரண்­டாம் நாள் புன்னை மர வாக­னம். கோபி­கை­க­ளின் ஆடை­க­ளைக் கவர்ந்­து­கொண்டு வேணு­கோ­பா­ல­னாக சுவாமி புன்னை மரத்­தில் இருப்­பார். விழா பங்­குனி மாதம் நடக்­கும். அக்­க­ரை­யி­லி­ருந்து பாமனி ஆற்­றில் இறங்கி சுவாமி இக்­க­ரைக்கு ஏறு­வார்.
அவர் ஆற்­றில் இறங்கி வரும்­போது, ‘யமு­னை­யில் நடந்த ஜலக்­கி­ரீ­டை­யா­கவே அது தோன்­றும்’ என்­பார் எங்­கள் ஊர் பிர­சன்னா பாட்­டாச்­சா­ரி­யார். கோயில் விழாக்­க­ளில் காளை வாக­ன­மும், புன்னை மர­மும் நிஜ­மல்ல.
காவிரி நீர் நிஜம். காவி­ரி­யின் நிஜம் மற்­ற­வற்­றை­யும் அப்­போது பற்­றிக்­கொள்­ளும். இனி எல்­லாமே கற்­ப­னை­தானோ?
தியா­க­ரா­ஜ­ரின் இசை நாட­கம் ‘நௌகா சரித்­தி­ரம்’. அதில் வரும் கிருஷ்ண லீலை யமு­னை­யில் நடப்­ப­தா­கக் கற்­பனை. நாட­கத்தை இயற்­றி­ய­வர் காவி­ரிக் கரை­யில்­தான் வாழ்ந்­தார்.
அதற்­கும் மேற்கே வர­கூர் நாரா­யண தீர்த்­த­ரின் கிருஷ்ண லீலா தரங்­கி­ணி­யில் ஆரம்பித்து, மெலட்­டூர் பாக­வத மேளா, ஊத்­துக்­காடு வேங்­கட கவி­யின் பாடல்­கள், மாய­வ­ரம் கோபால கிருஷ்ண பார­தி­யின் ‘நந்­த­னார் சரித்­தி­ரம்’ வரை காவி­ரிக் கரை­யில் பிறந்­தவை. காவி­ரிக் கரை­யில் இனி கற்­பனை பிறக்­குமா?
ஆடிப்­பெ­ருக்­கில் புதுத் தம்­ப­தி­கள் மண மாலை­க­ளைக் காவி­ரி­யில் விடு­வ­தற்கு நீரில்லை. தமிழ் இலக்­கி­யத்­தின் புது­நீ­ரா­டல் பின்­ன­ணி­யில் இதைப் பார்க்க வேண்­டும். அப்­போது காஞ்­சி­யி­லி­ருந்து, நெல்­லை­யி­லி­ருந்து, ராம­நா­த­பு­ரத்­தி­லி­ருந்து மக்­க­ளைக் காவி­ரிக்கரை ஈர்த்­துக்­கொண்­டது. இங்­கி­ருப்­ப­வர்­களே இன்று வெளி­யி­டங்­க­ளுக்­குச் சென்­றால்­தான் பிழைக்­க­லாமோ?
காவி­ரி­யில் நீர்­வ­ரத்துக் குறைந்­த­தால் இங்கு இயற்­கைச் சூழ­லின் வலைப்­பின்­னல் குலைந்­து­போன கோல­மா­யிற்று. குளம், குட்­டை­க­ளில் ஏற்­றி­வைத்த விளக்­கா­கப் பூக்­கும் அல்லி, தாமரை, நீலோத்­ப­லத்­தைக் காண­வில்லை. சேறே இல்­லா­த­போது சேற்­றில் நடக்­கும் உம்­ப­ளச்­சேரி மாடும் இல்லை என்­றா­னது.
வண்­டலை விட்­டு­விட்­டோமே
அப்­போது காவி­ரி­யில் வந்­தது நீர்­மட்­டு­ மல்ல. வளத்­தைக் கொடுக்­கும் வண்­ட­லும் வந்­தது. உச்ச நீதி­மன்­றம் வழங்­கும் நீர் வந்­தா­லும் வண்­டல் வராது. வழி­யில் வண்­ட­லைத் தடுத்­துக்­கொள்­ளும் அத்­தனை அணை­கள், தடுப்­ப­ணை­கள்.
எவரும் இதைக் கணக்­கில்­கொள்­வ­தில்லை. டெல்­டாவை உரு­வாக்­கி­யது இந்த வண்­டல். இங்கு ஓடும் 36 நதி­க­ளில் 18 நதிகள் கடலை அடை­யும். மற்­றவை வண்­ட­லின் விசி­றிப் பரப்­பில் சுவர்ந்­து­ வி­டும். 26 ஆயி­ரம் கி.மீ. நீள­முள்ள வாய்க்­கால்­கள் வண்­ட­லைக் கடத்­திக் கடத்தி காவி­ரிக் கரையை உயிர்ப்­போடு வைத்­தி­ருந்­தன.
வண்­டல் படி­வ­தால் படுகை உரு­வா­கும், குறைந்து காணா­ம­லும் போகும். படு­கையை இடித்­தும் சேர்த்­தும் இடம் வல­மா­கப் புரண்டு காவிரி தன் போக்கை மாற்­றிக்­கொள்­ளும். ஆறு புரண்­டு­வி­டு­வ­தால் ஒரே கிரா­மம் ஆற்­றுக்கு இக்­க­ரை­யி­லும் அக்­க­ரை­யி­லு­மாக இருப்­ப­துண்டு. இந்த வண்­டல் காவி­ரிக் கரைக்கு வாலி­பத்­தின் வனப்­பைக் கொடுத்­தது. ஆனால் நாம் நீரை மட்­டும்­தானே கேட்­கி­றோம்!
பாசன அமைப்பை அந்­தந்­தக் கிரா­மமே பரா­ம­ரிக்­கும் அக்­க­றை­யும் இப்­போது மறைந்­து­விட்­டது. வரத்துக் குறைந்து முறைப்­பா­ச­னம் வந்­தது. இத­னால், ஒவ்­வொரு கிரா­மத்­தி­லும் கடை­ம­டைப் பகுதி ஒன்று உரு­வாகி அது இளைத்­துக்­கொண்­டி­ருக்­கி­றது.
நீரின் அளவு குறைந்­தது என்­ப­தை­விட உச்ச நீதி­மன்­றத்­தின் தீர்ப்­பில் நாம் அதி­கம் அஞ்ச வேண்­டி­யவை இரண்டு விடயங்கள் உள்ளன.
ஒரு பெரு­ந­க­ரின் குடி­நீர்த் தேவை, நதி­நீர்ப் பங்­கீட்­டுக்கு ஒரு அடிப்­ப­டை­யா­னது என்பது இவற்றில் ஒன்று. இங்கு நாம் எதிர்­பா­ராத வகை­யில் ஒரு நியா­ய­வி­யல் கோட்­பாடு உரு­வாகி அழுத்­த­மா­கி­யுள்­ளது.
அந்த நக­ரின் தேவை அதி­க­ரிக்­கும்­போ­தும் இதே கோட்­பாடு பின்­பற்­றப்­ப­டு­ மா­னால் விளைவு என்ன என்­பதை நாம் ஊகிக்­க­லாம்.
இரண்­டா­வது, மனித நாக­ரி­கத்­தைப் பற்­றி­யது. ஒரு நீரா­ தா­ரத்­துக்­குப் பெரு­ந­க­ரின் குடி­நீர்த் தேவை­யும், விவ­சா­யத் தேவை­யும் போட்டி. மனித நாக­ரி­கத்­தின் வளர்ச்சி பெரு நக­ரங்­க­ளைப் பெருக்­கும்.
இதை நிறுத்­தித் திருப்ப முடி­யாது. நாக­ரிக வளர்ச்சி என்­பது விவ­சா­யத்­துக்­குப் பகை­தானா? விவ­சாய வளர்ச்சி என்­றால் ஒரு போகத்தை இரண்டு போக­மாக்­கு­வது, அதை மூன்­றாக்­கு­வது, ஆண்­டுக்கு ஆண்டு உற்­பத்தி அதி­க­மா­வது என்ற வளர்ச்சி தொடர்­பான எமது மன வரைவு ஒரு உட்­பகை. வரு­மா­னம் பெருக வேண்­டும். ஆனால், விவ­சா­யம் ஆதா­யத்­துக்­கா­கத்­தானா? காவிரி என்­பது நீர் மட்­டும்­தானா?
உரி­மைக்­கான போராட்­டம்
காவிரி மேலாண்மை வாரி­யம் அமைக்க வேண்­டும் என்று ஒட்­டு­மொத்­தத் தமி­ழ­க­மும் தற்­போது கொதித்­துக் கொண்­டி­ருக்­கி­றது.
மேலாண்மை வாரி­யம் அமைக்க வேண்­டும் என்று இந்­திய மைய அரசுக்கு இந்­திய உச்­ச­நீ­தி­மன்­றம் உத்­த­ர­விட்ட பின்­ன­ரும் , அதற்­கான நகர்­வு­கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­ வில்லை.
இந்த ஓர வஞ்­ச­னை­யைப் பார்த்து அனல் கக்­கு­கி­றது தமி­ழ­கம். தமி­ழ­கத்­தில் தற்­போது இடம்­பெற்­று­வ­ரும் போராட்­டங்­கள் வெறும் வாழ்­வா­தா­ரத்­துக்­கான போராட்­டம் மட்­டு­மல்ல. அது உரி­மைக்­கான போராட்­ட­மும்­கூட.

No comments:

Post a Comment