எந்தச் சமயம் எந்தக் கருத்தை முன்வைத் தாலும் ஆத்மா என்பது தொடர்பில் அத்தனை சமயங்களும் ஒற்றுமைப்பட்டு நிற்பதைக் காண முடியும்.
அதில் ஆத்மா அழிவற்றது என்ற கருத்தை எந்த சமயமும் நிராகரிக்கவில்லை.
ஆதிச் சமயமாகிய இந்து சமயம் மறுபிறப்புக் கோட்பாட்டை வலியுறுத்துகிறது. இதனை பெளத்தமும் ஏற்றுக் கொள்கிறது.
கத்தோலிக்கம் மறுபிறப்பை ஏற்கவில்லை யாயினும் இறப்புக்கு பின்பான வாழ்வு என்ப தைக் கூறத் தவறவில்லை.
ஆக, மனித உயிர் பிரிந்த பின்பு அதற்கு ஒரு வாழ்வு உண்டு என்பதை யாராலும் நிராகரித்து விட முடியாது.
எனவே எம்மோடு வாழ்ந்து எம் வாழ்வுக்கு வித்தாகிய எங்கள் முன்னோர்களின் - எங்க ளுடன் வாழ்ந்து போனவர்களின் ஆத்மா சாந்தியடையும் சடங்குகளையும் இல்வாழ் வில் இருப்பவர்கள் செய்தாக வேண்டும்.
இதனையே வள்ளுவப் பெருமான் தென் புலத்தார் பற்றிக் கூறி;
இல்வாழ்வானின் கடமைகளில் தென்புலத் தார் என்று கூறப்படும் உயிரிழந்தவர்களின் இறப்புக்கு பின்பான வாழ்வுக்கு தேவையான சடங்குகளையும் பிதிர்க்கடன்களையும் செய் தாக வேண்டும் எனக் கட்டளையிடுகிறார்.
எனவே உயிரிழந்தவர்கள் காற்றாகிப் போய் விட்டனர். காற்றோடு கலந்து விட்டனர். இறப் புக்கு பின்பான வாழ்வென்பது கற்பனையும் கட்டுக்கதையும் என்று யாரும் நிராகரித்து விடா தீர்கள்.
இதை ஏன் சொல்கிறோமெனில் பிதிரர்க ளின் சாபம் மிகவும் மோசமானது.
உயிரிழந்து போன ஆத்மாக்கள் தமக்கான ஆத்ம ஈடேற்றத்தை தமது உறவுகளிடம் இருந்தே வேண்டிக் கொள்கின்றன.
தங்கள் உறவுகள் தமது ஆத்ம ஈடேற்றத் தின் பொருட்டு நினைவுகூருவதும் அவர்களுக் காக மோட்ச தீபம் ஏற்றுவதும் குறித்த ஆத்மாக் களைச் சாந்திப்படுத்தும்.
எனவே கொடும் போரில் அவல மரணத் தைச் சந்தித்த எங்கள் உறவுகளின் ஆன்ம ஈடேற்றத்துக்காக நாம் அனைவரும் பிரார்த் தனை செய்வோம்.
ஆலயங்கள், தேவாலயங்கள் தோறும் ஆத்ம ஈடேற்றத்தை வழிபாடுகளை மேற் கொள்வோம்.
அவர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து எங்களைக் காப்பாற்றினர்.
எனவே அவர்களுக்காக எங்கள் நினை வேந்தல் நாளை மே 18இல் உணர்வுபூர்வமாக; பக்திபூர்வமாக உள்ளத்தால் நினைந்து ஏற்று வோம் போற்றுவோம்.
No comments:
Post a Comment