Thursday, 17 May 2018

பிரித்தானிய அரச குடும்பத்து விதிமுறைகளை அசால்ட்டாக மீறிய இளவரசி டயானா

சாதாரண குடும்பத்தில் பிறந்து காலத்தால் அழியாத கனவு நாயகியாக இன்றும் மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கும் இளவரசி டயானா பிரித்தானிய அரசு குடும்பத்து விதிமுறைகளை பின்பற்றாமல் வாழ்ந்த முதல் நபர் ஆவார்.தனது 19 வயதில் இளவரசர் சார்லஸை கரம்பிடித்து பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் நுழைந்த இவர், உலகம் முழுவதும் உள்ள அடித்தட்டு மக்களின் மனதில் விரைவில் இடம்பிடித்தார்.



சாமன்ய மனிதரை கூட தொட்டு பேச தயங்கும் அரச குடும்பத்தில், தொழுநோயளிகளையும், எய்ட்ஸ் நோயாளிகளையும் சந்தித்து கைகுலுக்கி கொண்டதே இவரை மக்களின் இளவரசியாக உலகுக்கு அடையாளப்படுத்தியது. திருமணத்திற்கு முன்னர் நர்சரி பள்ளியில் ஊதியத்திற்கு வேலை பார்த்த முதல் அரச குடும்பத்து மணமகள் ஆவார்.

 அதுமட்டுமின்றி அரச குடும்பத்தில் திருமணம் நடைபெறும்போது, உங்கள் அனைவரின் கீழ்படிதலோடு இந்த திருமணம் நடைபெறுகிறது என்ற வார்த்தை மணமக்களால் எழுதப்படும்.ஆனால், அதனை மீறிய முதல் பெண் இவர் ஆவார். கீழ்படிதல் என்ற வார்த்தையை என்னுடைய சம்மதத்துடன் என்று மாற்றினார். இதனையே, வில்லியம் கேட் தங்கள் திருமணத்தின் போது கடைபிடித்தனர்.



அரச குடும்பத்து பெண்களுக்கு பிரசவம் பார்ப்பதற்கு மருத்துவர்கள் தான் அரண்மனைக்கு வருவார்கள். ஆனால், இளவரசி டயானா லண்டனில் உள்ள செயின்ட் மேரி மருத்துவமனையில் குழந்தை பெற்றுக்கொண்டார்.தனது குழந்தைகள் பிற குழந்தைகள் போன்று சாதாரணமாக வளர வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்காக அதிக சிரமங்களை எடுத்துக்கொண்டார்.

அரச குடும்பத்து பெண்களில் தனது குழந்தைகளுக்கு தாய்ப்பாலுட்டிய முதல் பெண் ஆவார். இளவரசர்களுக்கு பாடம் கற்றுக்கொடுக்க ஆசிரியர்கள் தான் அரண்மனைக்கு வருவது வழக்கம். ஆனால், அந்த நடைமுறையை மாற்றி தனது இருகுழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.



ஆடை முதல் உணவு வரை அனைத்திலும் கவனம் செலுத்துவார். தான் எங்கு சென்றாலும் தன்னுடனேயே தனது குழந்தைகளையும் அழைத்து செல்வார். டிஸ்னிலேண்ட் மற்றும் மெக்டொனால்டு ஆகிய இரு இடங்களுக்கும் தனது குழந்தைகளையும் அடிக்கடி அழைத்து செல்வார்.

இன்றுவரை அரச குடும்பத்து பெண்களில் மிகவும் ஸ்டைலிஷ் பெண் யாரென்றால் அது டயானா தான். அந்த அளவுக்கு இவரது ஆடைகள் மிகவும் பேஷனான இருக்கும். டயானா வாழ்ந்த காலத்தில் இங்கிலாந்து பத்திரிகைகளுக்கு அவர்தான் எப்போதும் முதல் பக்க கதாநாயகி. 

துரத்தித் துரத்திப் படமெடுத்தார்கள்.தன் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னைகளை மறக்க, பல சமூக நலத் திட்டங்களில் இன்னும் அதிகமாக ஈடுபட ஆரம்பித்திருந்தார் டயானா.சாமான்ய மக்களுடன் கைகுலுக்க அரச குடும்பத்து உறுப்பினர்கள் தயங்கியபோது, உலகத் தொழு நோயாளிகள், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள் என அனைவருடனும் சகஜமாக நெருங்கி பழகியதன் மூலம் இவர் பிரித்தானிய இளவரசி கிடையாது, உலக மக்களின் இளவரசி என நிரூபனமானது.

சார்லஸை விவாகரத்து செய்துகொண்ட பின்னர் கூட, பொது இடங்களில் மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டார், பொது நிகழ்ச்சிகளிலும் அதிகமாக கலந்துகொண்டார். இளவரசியாக இருந்தபோது இவரை துரத்திய பார்பரஸிகள் இவர் அரண்மனையை விட்டு வெளியேறிய பின்னர் கூட பின் தொடர்ந்தனர்.

எனது இதயத்தை பின்பற்றியே நான் செல்கிறேனே தவிர விதிமுறைகள் எழுதப்பட்ட புத்தகத்தை அல்ல. இது இளவரசி டயானா கூறியதுதான்.

No comments:

Post a Comment