Friday, 29 June 2018

அல்பிரட் துரையப்பா முதல் காமனி வரை -பகுதி- 17

தமிழீழ விடுதலைப்  புலிகளின்  பொறுப்பை தன்னிடம்  தரும்படி பிரபாகரன் கேட்டார்.  தலைவரே  முடிவினை  எடுக்கவேண்டும்.  அதற்கு மறுபேச்சு  இருக்கக்கூடாது.  அப்படியானால் தான் சரியான இயக்கமாக வளரமுடியும் என்று சொன்னார் பிரபாகரன். பிரபாகரன் இந்த  நிபந்தனையை  விதித்தபோது   புலிகளது செயற்குழுவில்  ஏழுபேர்  இருந்தனர். பிரபாகரன், கலாபதி,  கடாபி, அன்ரன்,ராகவன், சாந்தன், சீலன் ஆகியோரே அந்த ஏழு பேர்.   ஒருவரிடம்  தனித்தலைமை கொடுக்கப்படுவது  சர்வாதிகாரப் போக்குக்கு வழிவகுக்கும் .  எனவே பிரபாகரனிடம் தனிதலைமை  கொடுக்கப்பட கூடாது  என்று  கலாபதி,  கடாபி,  ராகவன்  ஆகியோர் எதிர்த்தனர். செயற்குழுவில்  மூன்று  பேர்  பிரபாகரன்  கருத்துக்கு  ஆதரவாகவும், ஏனைய மூன்று பேர் எதிராகவும் நின்றனர்.  இந்த நிலையில் செயற்குழுவில்  இருந்த   சாந்தன் (இவர் கீயூபா இளைஞர் மாநாட்டில்  கலந்து கொண்டவர்)  இயக்கத்தை விட்டு  ஒதுங்கினார். (தொடர் கட்டுரை)


தமிழீழ விடுதலைப்  புலிகளின்  பொறுப்பை தன்னிடம்  தரும்படி பிரபாகரன் கேட்டார்.  தலைவரே  முடிவினை  எடுக்கவேண்டும்.  அதற்கு மறுபேச்சு  இருக்கக்கூடாது.  அப்படியானால் தான் சரியான இயக்கமாக வளரமுடியும் என்று சொன்னார் பிரபாகரன்.
பிரபாகரன் இந்த  நிபந்தனையை  விதித்தபோது   புலிகளது செயற்குழுவில்  ஏழுபேர்  இருந்தனர். பிரபாகரன், கலாபதி,  கடாபி, அன்ரன்,ராகவன், சாந்தன், சீலன் ஆகியோரே அந்த ஏழு பேர்.
ஒருவரிடம்  தனித்தலைமை கொடுக்கப்படுவது  சர்வாதிகாரப் போக்குக்கு வழிவகுக்கும் .  எனவே பிரபாகரனிடம் தனிதலைமை  கொடுக்கப்பட கூடாது  என்று  கலாபதி,  கடாபி,  ராகவன்  ஆகியோர் எதிர்த்தனர்.
செயற்குழுவில்  மூன்று  பேர்  பிரபாகரன்  கருத்துக்கு  ஆதரவாகவும், ஏனைய மூன்று பேர் எதிராகவும் நின்றனர்.  இந்த நிலையில் செயற்குழுவில்  இருந்த   சாந்தன் (இவர் கீயூபா இளைஞர் மாநாட்டில்  கலந்து கொண்டவர்)  இயக்கத்தை விட்டு  ஒதுங்கினார்.
கலாபதி  ஒரு  காதல் விவகாரத்தின்  காரணமாக   இயக்கத்தை விட்டு விலகினார்.   (யாழ் மேயர்  துரையப்பா  கொலை நடவடிக்கையில்  பங்கு கொண்டவர் கலாபதி )  ராகவன் இயக்க அலுவல் காரணமாக  இந்தியா  சென்றிருந்தார்.
இந்நிலையில்  கடாபி மாத்திரமே  செயற்குழுவில் பிரபாகரனுக்கு  எதிராக    நின்றார்.  எனினும் பிரபாகரனிடமே தனித்தலைமை கொடுக்கப்பட்டிருந்தது.
ஒரே தலைவர். அவர் சொல்வதே கொள்கை. அவர் உத்தரவே இறுதியானது – உறுதியானது  என்ற  நிலை உருவானது.
செயற்குழு  கூடி முடிவொடுப்பது என்ற  நிலை முடிவுக்கு வந்தது.  கடாபி  பின்னர்  படிப்படியாக  இயக்கத்தை விட்டு ஒதுங்கினார்.
மாத்தையாவின் தலைமை.
பிரபாகரன்  தமிழ்நாட்டில்  தலைமறைவாக  இருந்தபோது   இங்கே இயக்கத்தை  வழி நடத்தியவர்களில்  மூவர்  முக்கியமானவர்கள்.
மாத்தையா, சீலன், குண்டப்பா (ரகு) ஆகியோரே அந்த மூவர்.
மாத்தையாவே  பிரபாகரன்  நாட்டில் இல்லாத  வேளைகளில் தலைமை வளங்கினார்.
மாத்தையா -சீலன் -குண்டப்பா (ரகு)  ஆகியோர்களில்  பொறுப்பாளராக  இருக்கத்தகுந்தவர் யார்  என்று இங்கே  இருந்த புலிகளின்  மத்தியில்  ஓர் இரகசிய   வாக்கெடுப்பு   நடந்ததது.
அதில் மாத்தையாவே வெற்றி பெற்றார்.  பிரபாகரனுக்கு  அடுத்த தலைவராகவும்  மாத்தையாவே  புலிகளால்  மதிக்கப்பட்டார்.
இதேவேளையில்  புலிகளிலிருந்து  ஒதுங்கிய   செல்லக்கிளி அம்மான்  பம்பாய் சென்று  கடத்தல்  தொழிலில்  ஈடுபட்டார்.
பம்பாயில் ஒரு  ‘தாதா’   போல  செல்லக்கிளி விலாசமாக  இருந்தார் .
அது பிரபாவுக்கு பிடிக்கவில்லை. இயக்கத்துக்காக வியாபாரம் செய்வது  தவறல்ல. இயக்கத்தை விட்டு விலகி  தனிப்பட்ட இலாபத்துக்காக தவறான  வழியில்  செல்வது  தவறு. என்பது  பிரபாவின்  கருத்து.
எனவே  பம்பாயிலிருந்த   செல்லக்கிளியுடன்  பிரபாகரன் எந்தவித தொடர்பும் கொள்ளவில்லை.
இதேவேளை  உமா  மகேஸ்வரன்  தலைமையிலான  தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் வளரத்தொடங்கியது.  “சுந்தரம் புலிப்படை”  என்ற பெயரையும்  உமா மகேஸ்வரன் அணியினர்  பயன்படுத்தி  வந்தனர்.
Umamakeswaran
முதல் மோதல்
1982 ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி.     தமிழ் நாட்டில்   சென்னையில்  “பாண்டி பஸார்”   எனும் ஒரு பகுதி இருக்கிறது.
சன நெரிச்சல்  மிகுந்த பகுதி அது.
அங்குள்ள  உணவு  விடுதி  ஒன்றுக்கு   மோட்டார் சைகிள்  ஒன்றில்   உமா மகேஸ்வரனும்  ஜோதீஸ்வரன் எனும் கண்ணணும் வந்தனர்.
அதே சமயத்தில்  அங்கு பிரபாகரனும்  அவரோடு   சிவகுமார்  என்பவரும்   அங்கு தற்செயலாக வந்தனர்.  பிரபாகரன் உமா மகேஸ்வரனை கண்டுவிட்டார்.
தன்னால்   மரணதண்டனை  விதிக்கப்பட்டவர்  கண்ணெதிரில்  நிற்கிறார்   என்றால்  என்ன செய்யலாம் ?
உடனே தனது கைதுப்பாக்கியை   எடுத்த  பிரபாகரன்   உமா மகேஸ்வரனை      நோக்கி சுடத்தொடங்கினார்.   அப்போது  பாண்டி  பஸார் பகுதியல்  நின்ற  பொலிசார்   இருபகுதியினரையும்  உடனடியாக  கைதுசெய்தனர்.
அப்போது தமிழக முதல்வராக  இருந்தவர்  எம்.ஜி.ஆா.
பிரபாகரனையும்  உமா மகேஸ்வரனையும்  வெளியே விடவேண்டாம். உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று பொலிசாருக்கு தெரிவித்துவிட்டார்  எம்.ஜி.ஆா.
தமிழ்  நாட்டில்  ஈழப்போராளிகளுக்குள்  நடந்த முதல்   மோதல்  சம்பவம்   அதுதான். பத்திரிகைகளில்  அந்தச் செய்தி  வந்தபோது  தமிழ்  நாட்டினை சேர்ந்த  இலங்கைத்  தமிழர்கள்  மீது பற்றுக்கொண்ட  பிரமுகர்கள்  கவலை தெரிவித்தனர்.
“போராளிகள்  தமது  ஆயதங்களை  தமது   நாட்டில்  வைத்துவிட்டு  வரவேண்டும்  இங்கு வந்து  தமிழ்நாட்டின்  சட்டம், ஒழுங்குக்கு  அச்சுறுத்தலாக  இருக்கக்கூடாது.  அதனை  தமிழக  அரசு அனுமதிக்காது”.   என்று விளக்கியிரந்தார்  எம்.ஜி.ஆர்.
(பிரபாகரன்  உமாவை சுட்டபோது..,     பிரபாகரனையும், சிவகுமாரனையும்  தமிழக  பொலிசார் கைது செய்து கொண்டு சென்றபொது எடுக்கப்பட்ட படம்)
(இந்த சம்பவம் பற்றி உமாவிடம் கேட்டபோது….
பாண்டி பசாரில் உள்ள கீதா கபேயில் டீ அருந்திவிட்டு வெளியில் வரும்போது கண்ணன் “முழியன் வாறன் ” என்று சொல்லும்போது வெடி விழுந்தது .வெடி விழுந்தது கண்ணனின் காலில் ,என்ன ஏது என்று தெரியாமல் சுற்றி நின்ற சனம் பிரபா  ராகவன் இருவரையும் பொத்தி பிடித்துவிட்டது .தன்னிடம் இருந்த கை துப்பாக்கியை குப்பைக்குள் எறிந்துவிட்டு தான் மாறிவிட்டதாக சொன்னார் .
இனி சென்னையில் சில நாட்கள் இருக்க கூடாது என்று முடிவெடுத்து லண்டனில் இருந்து வந்த டொலர்கள் அடங்கிய பாக்குடன் கும்மிடிப்பூண்டி ஸ்டேசனில் அடுத்தநாள் காலை ரெயின் வருமட்டும் படுத்திருக்க தற்செயலாக வந்த போலிஸ் தட்டி எழுப்ப ஓட வெளிக்கிட்டு போலிஸ் சுட்டதில் அவ்வளவு டொலர் நோட்டுகளும் காற்றில் பறந்து என்ன நாட்டு பணம் என்று தெரியாமலே அதிகாலை அந்த சேரி சனங்கள் அதை பொறுக்கியது கண் கொள்ளா காட்சி என்று சொன்ன நினைவு .
இதுதான் எங்கள் மலரும் நினைவுகள்.)
ஓற்றுமை முயற்சிகள்
இதே சமயம்  கைதுசெய்யப்பட்ட  ஈழப்போராளிகளை  இலங்கை அரசிடம் ஒப்படைக்க கூடும்  என்று தகவல்கள் வெளியாகின.
ஆனால் எம்.ஜி. ஆர் அதனை மறுத்தது. கைது செய்யப்பட்ட  நால்வரும்   நீதிமன்றத்தில்  நிறுத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.  இயக்கங்களுக்குள்  ஒற்றுமை  ஏற்படுத்தும்  முயற்சிகளில்  பலா ஈடுபட்டனர்.
ஈரோஸ் அமைப்பிலிருந்து   விலகியிருந்த   “அருளர்”  சென்னையில்  ஈ.பி.ஆர்  எல் எஃப்  அலுவலகத்தில்  தங்கியிருந்தார்.  இயக்கங்கள் மத்தியில்  ஒற்றுமை  முயற்சியில்  அவரும்  ஈடுபட்டிருந்தார்.
புலிகள் என்ற பெயரை  உமா மகேஸ்வரன்  அணியினர்  பயன்படுத்தக்கூடாது  என்று பிரபாகரன் கூறினார்.
அதனை உமா மகேஸ்வரன் அணியினரும்  ஏற்றுக்கொண்டனர்.
  • புலிகள் – இராணுவ விவகாரம்

  • புளொட்- அரசியல் விவகாரம்

  • ஈ.பி.ஆா. எல. எஃப்  மாணவர் விவகாரம்

  • ஈரோஸ் -புனரமைப்பு, புனர் வாழ்வு விவகாரம் …என்று  பொறுப்புக்களை பகிர்ந்து கொள்வது.  இதுதான் அருளரின் திட்டம்.
அருளரின் திட்டத்தை  கேட்ட  இயக்கங்களுக்க கோபம் வந்துவிட்டது.
இத்திட்டத்தை  முன்வைக்கும்போது   அருளர்  ஈ.பி.ஆா. எல. எஃப்  அலுவலகத்திலிருந்து   புளொட் அமைப்பினரோடு   சென்று தங்கியிருந்தார்.   அவரது   திட்டத்தால்  ஏற்பட்ட கோபத்தால்   புளொட்  அமைப்பினரும்   அருளரோடு  முரண்பட்டுக்கொண்டனர்.
ஈ.பி.ஆா. எல. எஃப்  அலுவலகம் சென்ற   அருளர் தாக்கப்பட்டார்.
“தனக்கடா  உத்தியோகம் தன் பிடரிக்குச்  சேதம்”  என்ற கதையாக  அருளரின் திட்டம்  முடிந்தது.
லங்கா  ராணி
ஆனாலும்  அருளர் எழுதிய  “லங்கா  ராணி”  என்ற நாவல் ஈழப்போராட்டத்தில்   முதன்முதலில் வெளிவந்த  சிறந்த இலக்கிய படைப்பாகும் என்பதை மறக்கமுடியாது.
இனக்கலவரத்தால்   தெற்கிலிருந்து வடக்குநோக்கி      தமிழ் அகதிகளை சுமந்து  சென்ற  கப்பலில் கதை   நடக்கிறது.
கதையின்  ஊடே ‘ஈழம் ஏன் அவசியம் -அந்த ஈழம் எவ்வாறு அமைய வேண்டும்’ என்று எழிமையான விளக்கங்கள் உரையாடல்களாக அமைந்துள்ளன.
நெல்லியடி தாக்குதல்
1981ம் ஆண்டு  மே மாதம் 31 ஆம் திகதி  யாழ்பாணத்தில் ஆரம்பித்த   அரச பயங்கரவாதம்  இலங்கையெங்கும்  தமிழர்களை   எரித்தது.
அதன் பின்னர் சரியாக  ஒருவருடத்தின் பின்னர் – 1982ம் ஆண்டு  யூலைமாதம் 2ம் திகதி  புலிகள் ஒரு தாக்குதல் நடவடிக்கைக்கு தயாரானார்கள்.
யாழ்பாணத்திலிருந்து  16 மைல்  தூரத்தில்  இருக்கிறது  நெல்லியடி.  அங்கு ரோந்து ஈடுபடும் பொலிசார் மீது குறிவைத்தனர்.
திடீர் தாக்குதல். புலிகளது துப்பாக்கிகள் வேட்டுக்களைப்  பொழிந்தன.  நான்கு பொலிசார் கொல்லப்பட்டனர். மூன்று  பொலிஸார்  படுகாயமடைந்தனர்.
பொலிஸ் கொனஸ்டபிள் குணபால,  பொலிஸ் கொனஸ்டபிள் மல்லவராட்சி, பொலிஸ் கொனஸ்டபிள் அருந்தவராஜா, ஜீப் சாரதி அரியரட்ண ஆகியோரே கொல்லப்பட்டவர்கள்.
ஆயதங்களை  கைப்பற்றிக்கொண்டு  புலிகள் மின்னல்  வேகத்தில் தப்பிச்சென்றனர்.
அந்த தாக்குதலை தலைமை தாங்கி     நடத்தியவர்  சங்கர் என்றழைக்கப்படும்  எஸ். சத்தியநாதன்.
பிரபாகரனின் அணுகுமுறை
தனித் தலைமை  என்றபோதிலும்   கொரில்லா இயக்கத்துக்குரிய விதிகளை  பிரபாகரன்  நுட்பமாகக்  கையாண்டார்.
எதிரி எங்கே பலவீனமாக இருக்கிறானோ அங்கே தாக்கு.
தாக்குவதற்கு கிடைக்கும் எந்தவொரு வாய்பையும்   தவறவிடக்கூடாது.
அதற்கான திட்டங்களை வகுத்து  நிலைமைக்கு ஏற்ப செயற்படும் சுதந்திரம்
கொரிலா அணிதலைவர்களுக்கு  இருந்தால்தான்  கொரிலாக்கள் போர்க்குணத்தோடு செயற்படமுடியும்.
எல்லாவற்றையும்  தலைமையிடம்  இருந்தே   எதிர்பார்க்கதொடங்கினால்  நடவடிக்கைகளின் வேகம் தடைப்படும்.
சிறந்த பொறுப்பாளர்களை  நியமித்து  முன்முயற்சி   எடுத்து செயற்படும் சதந்திரத்தை கொடுக்கவேண்டும்.
அதே  சமயம்   தலைமையின்  உத்தரவுக்கு உடனடியாக  கட்டுப்படும் வகையிலும் இருக்கவேண்டும்.
இதுதான்  பிரபாகரன்  தலைமையின் கீழ்  புலிகள் நடத்திய தாக்குதல் வெற்றிகரமாக  அமைந்தமைக்கு காரணம். சாதனைகளின் அறுவடைக்கும் அதுதான் காரணம்.
1977 இல்  பதவிக்கு வந்த ஜே.ஆர் 1982ல் ஜனாதிபதித் தோ்தலை சந்திக்க தயாரானார்.
ஜனாதிபதித் தோ்தல்
ஜே.ஆா அரசின் ஐந்தாண்டு கால  ஆட்சி தமிழர்களுக்கு  பயங்கரவாதத்தையும், இனக்கலவரத்தையும்  பரிசாக வழங்கியிருந்தது.
ஜனாதிபதி  தேர்தலில்  தனக்கு வாக்களிக்குமாறு  கேட்டார் ஜே.ஆர்.
யாழ்பாணத்திற்கு  தேர்தல்  பிரசாரத்துக்காக     வரப்போவதாக  திகதியும்  குறித்தார்.
ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்கப்போவதாக  அறிவித்தது   தமிழர்  விடுதலைக் கூட்டணி.  அதன் மூலம்  ஜே.ஆர் அரசின் செல்லப்பிள்ளைகளாக  கூட்டணி  மாறிவிட்டது   என்ற  கருத்தை   உடைத்துவிடலாம்  என்பதுதான் கூட்டணியின் திட்டம்.
தேர்தலை    பகிஷ்கரிக்கப்போவதாக  அறிக்கை விட்டபோதும்  எதிர்ப்  பிசரச்சார நடவடிக்கையில் ஈடுபடாமல் இருந்தது கூட்டணி.
ஜே.ஆாின் நட்பை  இழக்கவும் விரும்பவில்லை.  தமிழர்களினதும், இளைஞர்களினதும் கோபத்தையும்  சம்பாதிக்கவும் விரும்பவில்லை என்பதுதான்  கூட்டணியின் நிலையாக   அமைந்தது.
ஜே.ஆரை எதிர்ப்பது   போல ஒரு முகம்
ஜே.ஆரின்  திருவடிக்கு  விசுவாசமாக காவடி  தூக்குவது இன்னொரு முகம்.
கூட்டணிக்கு இருப்பது இரண்டு முகம்
என்று கண்டனம் தெரிவித்து  ஈழமாணவர் பொதுமன்றம்  (G.U.E.S) ஜே.ஆரின் வருகையை  இயக்கங்கள் எதிர்த்தன. புலிகள் தமது பாணியில் எதிர்ப்பு தெரிவித்து விட்டனா.
பாலத்தில் குண்டுகள்
1982ம்  ஆண்டு செப்படம்பர் 26ம் திகதி  ஜே.ஆர் யாழ்பாணம் சென்றார்.  அதே தினத்தில் யாழபாணத்தில்  காரைநகரில் உள்ள பொன்னாலை பாலத்தில்  வெடிகுண்டுகளை  புதைத்துவிட்டு  காததிருந்தனர் புலிகள்.
அந்த பாலத்தின் வழியாகத்தான் காரைநகர்  கடற்படைமுகாமை சேர்ந்த  கடற்படையினர்   யாழ்.நகருக்கு வரவேண்டும.
ரோந்து  நடவடிக்கைக்காகவும், குடிநீர் எடுத்துச் செல்லவும்  கடற்படை வாகனங்கள்  அந்த பாலம் வழியாக வந்து செல்வதுண்டு.
அன்றும் வரிசையாக கடற்படை வாகனங்கள்  பாலம் வழியாக வந்துகொண்டிருந்தன.
நேரம் அதிகாலை 6.30 மணி.  குண்டுகளை வெடிக்கவைத்ததில் சிறு தவறு.
கடற்படை வாகனங்கள்  தப்பிக் கொண்டன.  பாலம் பெரும் சேதமடைந்தது.  குண்டுகள் வெடித்த சத்தம்   மூன்று மணிநேரம் தொடர்ந்து கேட்டது.
குறி தவறியபோதும்  ஜே.ஆருக்கு  தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பாக அந்த நடவடிக்கை அமைந்தது.
இலங்கை  படையினருக்கு  எதிராக  முதலாவது  நிலக்கண்ணி  வெடித்தாக்குதல்  முயற்சியாகவும்  அது  அமைந்தது.
அந்த தாக்குதல்  தோல்வியில் முடிந்ததால்  மற்றொரு  பாரிய   தாக்குதலுக்கு திட்டமிட்டனர் புலிகள்.
தாக்குதலுக்கு தலைமை   தாங்கும் பொறுப்பு  சார்ல்ஸ்  அன்ரனி என்னும் சீலனிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்ந்து வரும்…

அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 16

தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இளைஞர்களுக்கும் இடையிலான விரிசல் அதிகமாகியது. உமா-சுந்தரம் குழுவினர் தமிழீழ விடுதலைக் கழகம் (புளொட்) என்னும் பெயரில் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். 1981ம் ஆண்டு  தைப்பொங்கல் தினத்தை  முன்னிட்டு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்  பொங்கல்  வாழ்த்துக்களை  வெளியிட்டது. அதேசமயம் புலிகள் என்ற பெயரையும் உமா-சுந்தரம் குழுவினர் பயன்படுத்தி வந்தனர். ‘புதிய பாதை’பத்திரிகையும் தொடர்ந்து வெளிவந்து கூட்டணியினரை சாடிக்கொண்டிருந்தது. சுந்தரம் ஒரு சுறுசுறுப்பான போராளி. ஆயுதங்களைக் கையாள்வதிலும் தேர்ச்சியானவர். ஆனைக்கோட்டை பொலிஸ் நிலையத் தாக்குதலில் துணிச்சலாகச் செயற்பட்டு அந்தத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி முடித்தவர் சுந்தரம். சுந்தரத்தை ‘மண்டையில் போடவேண்டும்’ என்று முடிவு செய்தார் பிரபாகரன்.
அச்சுக்கூடத்தில் சிந்திய இரத்தம் – இலங்கை வரலாற்றில் பெரும் கொள்ளை


பிரபாவின் முடிவு
1981ம் ஆண்டில் நடைபெற்ற அரச பயங்கரவாதம் ஆயுதப் போராட்டமே ஒரே பாதை என்ற நம்பிக்கைக்கு உரமிட்டது.
தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இளைஞர்களுக்கும் இடையிலான விரிசல் அதிகமாகியது. உமா-சுந்தரம் குழுவினர் தமிழீழ விடுதலைக் கழகம் (புளொட்) என்னும் பெயரில் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். 1981ம் ஆண்டு  தைப்பொங்கல் தினத்தை  முன்னிட்டு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்  பொங்கல்  வாழ்த்துக்களை  வெளியிட்டது.
அதேசமயம் புலிகள் என்ற பெயரையும் உமா-சுந்தரம் குழுவினர் பயன்படுத்தி வந்தனர்.‘புதிய பாதை’பத்திரிகையும் தொடர்ந்து வெளிவந்து கூட்டணியினரை சாடிக்கொண்டிருந்தது. சுந்தரம் ஒரு சுறுசுறுப்பான போராளி. ஆயுதங்களைக் கையாள்வதிலும் தேர்ச்சியானவர். ஆனைக்கோட்டை பொலிஸ் நிலையத் தாக்குதலில் துணிச்சலாகச் செயற்பட்டு அந்தத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி முடித்தவர் சுந்தரம்.
சுந்தரத்தை ‘மண்டையில் போடவேண்டும்’ என்று முடிவு செய்தார் பிரபாகரன். யாழ் வெலிங்கடன் திரையரங்குக்கு முன்பாக இருந்தது சித்திரா அச்சகம். அங்கு தான் ‘புதிய பாதை’பத்திரிகை அச்சிடப்பட்டது.  ஆக்கங்கள் கொடுக்கவும் அச்சிடப்பட்ட ஆக்கங்களை சரிபிழை பார்க்கவும் சுந்தரம் சித்திரா அச்சகத்திற்கு வந்து செல்வார். சுந்தரத்தை அச்சகத்தின் உள்ளே வைத்து சுடவேண்டும் என்று திட்டமிடப்பட்டது.
சுந்தரத்துக்கு குறி
2.1.1982 அன்று வழக்கம் போல சித்திரா அச்சகத்திற்கு வந்தார் சுந்தரம். அவர் உள்ளே சென்று அச்சிடப்பட்ட ஆக்கங்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அச்சகத்தின் ஜன்னல் ஒன்றின் வழியாக சுந்தரத்தை குறி பார்த்தது ஒரு கைத்துப்பாக்கி. வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. சுந்தரத்தின் உயிர்பிரிந்தது. முதன் முதலில் இயக்கமோதல் பகிரங்கத்திற்கு வந்தது அன்று தான்.
இயக்கங்களின் முரண்பாடு துப்பாக்கியால் தீர்க்கப்பட்ட முதல் சம்பவமும் அது தான். அதற்கு முன்னர் புலிகள் இயக்கத்தின் உள் இயக்கப் பிரச்னையில் சரவணன் எனப்படும் பற்குணரசா, மட்டுநகர் மைக்கல் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
ஆனால் இரு பிரிவாக இயங்கிய அமைப்புக்களிடையே நிலவிய முரண்பாடு துப்பாக்கியால் தீர்க்கப்பட்டது சுந்தரம் கொலையில் தான் ஆரம்பித்தது. அச்சகத்தில் வைத்து சுந்தரம் கொல்லப்பட்டதிலும் ஒரு நோக்கம் இருந்தது.
‘புதிய பாதை’ பத்திரிகையை அச்சிடுவதற்கு வேறு   ஒரு அச்சகமும் முன் வராமல் இருக்கவேண்டும். அதற்கான அச்சுறுத்தலாகவே ‘புதிய பாதை’ அச்சிடப்பட்ட அச்சகத்தில் வைத்தே சுந்தரத்தை பிரபா அணியினர் தீர்த்துக் கட்டினார்கள். சுந்தரம் கொலை நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உயர்மட்டக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
அக்கூட்டத்தில் பேசிய அமிர்தலிங்கம் ‘புதிய பாதை’ வெளிவராமல் தடுப்பதாகக் கூறியிருந்தார் என்று ‘புதிய பாதை’குழுவினர் தெரிவித்தார்கள். ‘சுந்தரம் புலிப்படை’என்ற பெயரிலும் பிரசுரங்கள் வெளியாகியிருந்தன. இயக்க மோதல்களை வேதனையோடு நோக்கினார்கள் மக்கள். பிரசுரங்கள் பரபரப்பாக வாசித்தறியப்பட்டன.
பிரபா அணி விளக்கம்
சுந்தரம் தமது இயக்க ஆயுதங்களை ஒப்படைக்க மறுத்தார் என்றும் தமது இயக்க பெயரை பயன்படுத்தினார் என்றும் அதனால் மரணதண்டனை விதிக்கப்பட்டதாகவும் பிரபாகரன் அணியினர் கூறினார்கள். இயக்க மோதல்கள் பகிரங்கத்துக்கு வந்தமை இலங்கைப் புலனாய்வுப்பிரிவுக்கு வாய்ப்பாக அமைந்தது.
‘புதிய பாதை’தொடர்பாகவும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட்டன. இதனால் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் என்ற பெயரில் பகிரங்கமாக இயங்க முடியாமல் போனது.
தமிழ் இளைஞர் பேரவை விடுதலை அணி என்ற பெயரில் இயங்கிய இளைஞர்கள் பலர் உமா மகேஸ்வரன் தலைமையில் செயற்பட முன் வந்தனர். அவர்களில் ஒருவர் மட்டக்களப்பைச் சேர்ந்த இரா.வாசுதேவா. இரா-வாசுதேவாவை அமைப்பாளராகக் கொண்டு தமிழீழ விடுதலைகக் கழகம் என்றும் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தலைமறைவாக இயங்கியது. அதன் தலைமையில் மக்கள் அமைப்பாக ‘தமிழீழ விடுதலைக் கழகம்’ பகிரங்கமாகச் செயற்பட்டது. புலனாய்வுத்துறையினரை ஏமாற்றவே அந்த முயற்சி.
நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும்  ஜெகன்- குட்டிமணி

மற்றொரு திட்டம்
இதற்கிடையே ஒரு முக்கிய நடவடிக்கை பற்றி கூறவேண்டும். பிரபாகரன் அணியினரும் குட்டிமணி – தங்கத்துரை குழுவினரும் மீண்டும் ஒரு பாரிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர். நீர்வேலியில் இருந்து வங்கியில் இருந்து பெருந்தொகையான பணம் யாழ்நகர் வங்கிக்கு கொண்டு செல்லப்படும் தகவல் அவர்களுக்கு கிடைத்தது.
பலத்த பொலிஸ் காவலோடு பணம் கொண்டு செல்லப்படுவது வழக்கம். எனவே – மிகத் திட்டமிட்டு துணிச்சலான தாக்குதல் ஒன்றை நடத்தவேண்டும். சற்றுப் பிசகினாலும் திட்டம் தோல்வி அடைந்துவிடும். பணம் கொண்டு செல்லும் முறையையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஓரிரு தடவை கண்காணித்தனர். நடவடிக்கைக்கு தயாராகினர். பிரபாகரன், குட்டிமணி, தங்கத்துரை, சிறீ சபாரத்தினம், ஒபராய் தேவன் போன்ற முக்கியமானவர்களே நேரடியாக களத்தில் இறங்கினார்கள்.
தாக்குதல்
வாகனங்கள் பணத்தோடும் பொலிசாரோடும் வந்தன. தாக்குதல் ஆரம்பமானது. பாதுகாப்புக்கு வந்த பொலிசார் கொல்லப்பட்டனர். பணம் போராளிகளது கைக்கு வந்தது. 1981ம் ஆண்டு நடைபெற்ற அந்த கொள்ளை நடவடிக்கையே இலங்கையில் நடைபெற்ற மிகப் பெரிய கொள்ளை என்று அப்போது வியக்கப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் பெறுமதி 82லட்சம் ரூபாய்கள். அப்போது இது மிகப் பெரிய தொகை.
இலங்கை அரசு திகைத்துப் போனது. யாழ்ப்பாணம் எங்கும் தேடுதல் வேட்டை நடத்தியது. 82லட்சம் ரூபாய் பணத்தோடு யாழ் திருநெல்வேலி சந்திக்கு அருகாமையில் இருந்த ஒபராய் தேவன் வீட்டில் மறைந்து இருந்தனர் குட்டிமணி, தங்கத்துரை பிரபாகரன் குழுவினர்.
“தாக்குதல் நடவடிக்கையின் போது பொலிசார் ஒருவரது துப்பாக்கி பிரபாகரனை குறிபார்த்தது. அதனைக் கண்டுவிட்ட சிறீசபாரத்தினம் தனது துப்பாக்கியால் அந்த பொலிஸ்காரரைச் சுட்டார். இல்லாவிட்டால் பிரபாகரன் கதை முடிந்திருக்கும்.” இது நீர்வேலிக் கொள்ளையின் பின்னர் குட்டிமணியால் கூறப்பட்ட சம்பவம்.
சிறீ சபாரத்தினம் உயரமாக இருப்பார். அதனால் ரோல் சிறீ என்று இயக்க வட்டாரங்களில் அழைக்கப்பட்டார். நீர்வேலி வங்கிக்கொள்ளை நடவடிக்கையைப் பற்றிய விசாரணைகளிலிருந்து புலனாய்வாளர்கள் சில தகவல்களை கண்டறிந்தனர். பிரபாகரன்,குட்டிமணி, தங்கத்துரை ஆகியோர் தீவிரமாகத் தேடப்பட்டனர். ‘நீர்வேலி வங்கிக்கொள்ளைப் பணம் பிரபாகரனிடம்’ என்று பொலிசார் தெரிவித்த செய்தி பிரபாகரனின் சிறுவயதுப் புகைப்படத்தோடு பத்திரிகைகளில் வெளிவந்தன.
தங்கத்துரையின் திருமணம்
தேடுதல் வேட்டை தீவிரமானதால் தமிழ்நாட்டில் சென்று தங்கிருக்கலாம் என்று குட்டிமணி-தங்கத்துரை ஆகியோர் முடிவு செய்தனர். ஏற்கனவே தமிழ்நாட்டில் தங்கியிருந்தபோது தங்கத்துரையின் இதயத்தை திருடிவிட்டார் ஒரு பெண்.
அவரது பெயர் நவமணி – பி.ஏ.பட்டதாரி. 1980ம் ஆண்டு தங்கத்துரைக்கும் நவமணிக்கும் தமிழ்நாட்டில் திருமணம் நடந்திருந்தது. மனைவியைத் தமிழகத்தில் விட்டு தாயகம் வந்த தங்கத்துரை கடமையைச் செய்துவிட்டு தலைமறைவு வாழ்க்கைக்காக மீண்டும் தமிழகம் செல்லத் தயாரானார். கடற்கரையில் படகு தயாராக காத்து நின்றது. கடற்கரை மணலில் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
திடீரென்று அங்கே வருகிறது பொலிஸ் படை. எதிர்த்துப் போராடும் தயார் நிலையில் இல்லை. எதிர்பாராத சம்பவம்.மூவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்தபோது பொலிசாருக்கு விசயம் தெரியாது. தலைக்கு 5லட்சம் விலை வைத்து தேடப்பட்டவர்களையே தாம் கைது செய்திருக்கின்றோம் என்பது பொலிசாருக்கு தெரியாது.
மூன்று கடத்தல்காரர்கள் சிக்கியிருக்கின்றார்கள் என்றே பொலிசார் நினைத்தார்கள். இன்ஸ்பெக்டர் நவரத்தினராசா தலைமையிலான பொலிஸ் கோஷ்டியினர் மூவரையும் கைது செய்தனர். பொலிஸ் நிலையத்திற்கு மூவரும் கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கிருந்த பொலிஸ்காரர் ஒருவர் குட்டிமணியை அடையாளம் கண்டு கொண்டார். (குட்டிமணி முன்னர் 73ல் கைதாகி 76 ல் விடுதலையானவர்) நிலையத்திற்கு அப்போது தான் தம்மால் கைது செய்யப்பட்டவர்கள் எத்தனை ஆபத்தானவர்கள் என்று கைது செய்த பொலிசாருக்கு தெரிய வந்தது. பொலிஸ் நிலையம் உஷாரானது. தகவல்கள் பறந்தன. உடனடியாக மூவரும் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விலகாத மர்மம்
குட்டிமணி –தங்கத்துரை ஆகியோர் படகில் ஏறுவதற்குச் செல்லும் நேரத்தில் பொலிசாருக்கு ஒரு தகவல் சென்றடைந்தது. கடத்தல் நடவடிக்கை ஒன்று நடக்கப்போவதாகவும் கடத்தல்காரர்களது நடமாட்டம் கடற்கரையில் இருப்பதாகவும் அந்த தகவல் தெரிவித்தது. அந்த தகவலை யார் கொடுத்தார்கள்? நோக்கம் என்ன? என்பது இதுவரை விடை அறியப்படாத மர்மமாகவே இருக்கிறது.
கைது செய்யப்படும் முன்னரே குட்டிமணி – தங்கத்துரை குழுவினர் ‘தமிழ் ஈழ விடுதலை இயக்கம்’ என்ற பெயரிலேயே இயங்க ஆரம்பித்திருந்தனர். தமிழ் இளைஞர் பேரவையில் இருந்து முத்துக்குமாரசாவாமி தலைமையில் உருவாகிய தமிழ் ஈழ விடுதலை இயக்கம் செயலிழந்து போனது.அதனால் அந்தப் பெயரையே தமது இயக்கத்திற்கு சூட்டிக்கொண்டனர் குட்டிமணி, தங்கத்துரை குழுவினர்.
குட்டிமணி- தங்கத்துரை ஆகியோர் கைது செய்யப்பட்ட பின்னர் சிறீ சபாரத்தினம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
நீதிமன்றத்துக்கு  அழைத்துச் செல்லப்படும் தங்கதுரை
தமிழீழ இராணுவம்
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில்  இருந்து ஒபரோய் தேவன் பிரபாகரனோடு முரண்பட்டார். அவர் தனித்து வெளியேறி சென்னையில் இருந்த ஈபிஆர்எல்எவ் தலைவர் க.பத்மநாபாவோடு சேர்ந்து கொண்டார்.
ஒபரோய் தேவனை ஈபிஆர்எல்எவ் உறுப்பினராக சேர்;த்துக் கொள்வதை அப்போது சென்னையில் இருந்த ரமேஷ், சிவா போன்ற ஈபிஆர்எல்எவ் முக்கிய உறுப்பினர்கள் எதிர்த்தனர். அதன் பின்னர் யாழ்ப்பாணம் திரும்பிய ஒபரோய் தேவன் தமிழ்ஈழ இராணுவம் (ரெலா) என்னும் அமைப்பை உருவாக்கினார்.
தனியார் கடைகளில் வீடியோ, டெக் போன்றவற்றை கொள்ளையடித்தமையால் அவருக்கு ஏற்பட்ட கெட்ட பெயர் புலிகளுக்கு சாதகமாக அமைந்தது. ஒபரோய் தேவனை பிரபாவின் உத்தரவுப்படி 1983ல் புலிகள் யாழ்.நகரில் நீராவியடி என்னுமிடத்தில் வைத்துச் சுட்டுக் கொன்றனர். குட்டிமணி- தங்கத்துரை கைது செய்யப்பட்ட பின்னர் பிரபாகரன் தலைமையிலான புலிகளும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினரும் சில காலம் மட்டுமே சேர்ந்திருந்தனர்.
புலிகள் இயக்கத்தை பலப்படுத்த பிரபாகரன
ஒரு நிபந்தனை விதித்தார். புலிகளது தலைவிதியை தீர்மானித்த நிபந்தனை அது.
(தொடரும்)

அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 15

“தம்பி பிரபாகரன்  தமிழீழத்தை  மீட்டெடுத்து தளபதி அமுதரின் காலில் சமர்ப்பிப்பார்” என்று பேசிவிட்டார் காசி ஆனந்தன். அப்போது அமுதரோடு  பிரபா முரண்பட்டிருந்த  நேரம். காசியானந்தனை  கூப்பிட்டனப்பினார்  பிரபாகரன்.  அவ்வாறான பேச்சுக்களை நிறுத்துமாறு  பிரபாகரன் கண்டிப்பாக தெரிவித்து விட.. கப்சிப்  ஆகிவிட்டார் காசியானந்தன். அதன் பின்னர் மறந்தும் கூட அமுதரைப் போற்றிப் பேசியதில்லை அவர். இப்போது மீண்டும் 1981 மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தலுக்குச் செல்லலாம்.
“தம்பி பிரபாகரன்  தமிழீழத்தை  மீட்டெடுத்து தளபதி அமுதரின் காலில் சமர்ப்பிப்பார்”
என்று பேசிவிட்டார் காசி ஆனந்தன்.
அப்போது அமுதரோடு  பிரபா முரண்பட்டிருந்த  நேரம்.
காசியானந்தனை  கூப்பிட்டனப்பினார்  பிரபாகரன்.  அவ்வாறான பேச்சுக்களை நிறுத்துமாறு  பிரபாகரன் கண்டிப்பாக தெரிவித்து விட.. கப்சிப்  ஆகிவிட்டார் காசியானந்தன்.
அதன் பின்னர் மறந்தும் கூட அமுதரைப் போற்றிப் பேசியதில்லை அவர்.
இப்போது மீண்டும் 1981 மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தலுக்குச் செல்லலாம்.
தியாகருக்கு குறி
மாவட்ட சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி சார்பாக தiலைமை வேட்பாளராகப் போட்டியிட்டவர் தியாகராசா. தமிழ் காங்கிரஸ் கட்சி சார்பில்; போட்டியிட்டு வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினராகிய பின்னர் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சென்றவர்.1977 பொதுத்தேர்தல் தோல்விக்குப் பின்னர் ஐக்கிய தேசியக்கட்சியில் சேர்ந்திருந்தார்.
தியாகராசாவுக்கு முன்னர் கொழும்பில் குறி வைக்கப்பட்;டது பற்றி ஏற்கனவே கூறியிருந்தேன். இப்போது 1981 இல் மீண்டும் குறிவைக்கப்பட்டது.கூட்டம் ஒன்றில் உரையாற்றிவிட்டு தனது காரை நோக்கிச் சென்றார் தியாகராசா.
திடீரென்று துப்பாக்கி ஒன்று வெடித்தது. குறி தவறவில்லை.
தியாகராசாவின் உயிர் பிரிந்தது. உமா- சுந்தரம் குழுவில் இருந்த ஜெயா மாஸ்டர் என்பவரே அச்சம்பவத்தில் முக்கிய பங்கு வகித்தார். 1981ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி யாழ்ப்பாணத்தின் நாச்சிமார் கோவிலடியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
அன்று தான் மாவட்;ட அபிவிருத்தி சபை தேர்தலுக்கான பிரசாரங்கள் நிறைவு பெறும் நாளாகும். அக்கூட்டத்தை குழப்புவதன் மூலமாக தேர்தலில் மக்கள் வாக்களிக்காமல் தடுக்கலாம் என்று உமா –சுந்தரம் குழுவினர் நினைத்தனர்.
அதற்கான திட்டம் வகுக்கப்பட்டது. கூட்டம் குறித்த நேரத்தின் பின்னரே ஆரம்பித்தது. கூட்;டத்தில் தாக்குதல். கூட்டத்திற்கு பாதுகாப்பாக பொலிசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.
சைக்கிள்களில் வந்திறங்கிய இளைஞர்கள் கூட்டத்திற்கு பாதுகாப்பாக நின்ற பொலிசாரை நோக்கிச் சுட்டனர். வேட்டுச் சத்தம் கேட்டவுடன் கூட்டத்தினர் பரபரப்படைந்தனர். அப்போது யாழ்.மாநகரசபை மேயராக இருந்தவர் விசுவநாதன்.
அவர் வேட்டுச் சத்தத்தை பட்டாசுச் சத்தம் என்று நினைத்துவிட்டார். ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்துகின்றார்கள் என்று நினைத்து, “ பதட்டப்படாதீர்கள், பட்டாசுச் சத்தம் தான் கேட்கிறது|| என்று விசுவநாதன் கூறிக்கொண்டிருந்தபோது இரண்டு பொலிசார் இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கொண்டிருந்தனர்.
விபரீதம் புரிந்து கூட்டத்தினர் சிதறி ஓடினார்கள் இளைஞர்கள் தப்பிச் சென்றனர். இரண்டு பொலிசார் (கொல்லப்பட்ட) அந்த தாக்குதலில் முக்கிய பங்கு வகித்தவர்களில் ஒருவர் தற்போது புளொட் அமைப்பின் தலைவர்களில் ஒருவராக உள்ள மாணிக்கதாசன். 83ல் வெலிக்கடை படுகொலையில் கொல்லப்பட்ட றொபேட்டும் அத்தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர்.
இரண்டு பொலிசார் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியறிந்த பொலிசார் இரவோடு இரவாக கண்மூடித்தனமான தாக்குதல்களில் ஈடுபடத் தொடங்கினர்.


எரிந்து யாழ்ப்பாணம்
நாச்சிமார்கோவிலடியில் ஆரம்பித்து யாழ்.நகர் வரையான தனியார் கடைகளும் வீடுகளும் பொலிசாரால் தீ வைக்கப்பட்டன. யாழ்ப்பாணத்திலிருந்து அப்போது வெளியாகிய ஒரேயொரு தினசரியான ஈழநாடு பத்திரிகைக் காரியாலயமும் எரிக்கப்பட்டது.
யாழ்- சுபாஸ் விடுதியில் வந்து தங்கியிருந்தனர் முக்கிய அமைச்சர்கள்.
காமினி திசநாயக்கா, இனவாதத்தின் மொத்த வடிவமாக விளங்கிய சிறில் மத்தியூ ஆகியோர் யாழ் நகர் எரியும் காட்சியை கண் நிறையக் கண்டனர். மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் தில்லுமுல்லுகள்  செய்யும் திட்டத்தோடு ஒரு குண்டர் படையையும் அவர்களால் அழைத்;து வரப்பட்டிருந்தது.
நாச்சிமார் கோவிலடி தாக்குதலையடுத்து யாழ் நகரை எரிப்பதற்கு அந்த குண்டர் படையும் பயன்படுத்தப்பட்டது. யாழ்ப்பாண மக்கள் கல்வியை பிரதானமாக வைத்தே முன்னேறி வருபவர்கள்.யாழ்ப்பாண மக்களுக்கு வழங்கும் மிக உயர்ந்த தண்டனை  யாழ்.நூலகத்தை எரிப்பது தான் என்று திட்டமிடப்பட்டது.எரிப்பதற்கு எரிபொருள் வேண்டுமல்லவா?
கொழும்பிலிருந்தும் அனுராதபுரத்தில் இருந்த  பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திலிருந்தும் பெற்றோல் நிறைந்த தாங்கிகள் யாழ்நகருக்கு வரவழைக்கப்பட்டன. அப்போது பெற்றோலியக்கூட்டுத்தாபனத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் காமினி லொக்குகே. சிறில் மத்தியூவின் அமைச்சின் கீழ் இருந்தது அந்தக் கூட்டுத்தாபனம். குhமினி லொக்குகே சிறில் மத்திய+வின் விசுவாசி. இவர் பின்னர் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியில் அமைச்சராகவும் இருந்தார்.
பெற்றோல் தாங்கிகள் வந்து சேர்ந்ததும் நூலக எரிப்பு ஆரம்பமானது. ஆசியாவின் மிகச் சிறந்த நூலகத்தை திட்டமிட்டு மூட்டிய தீ சாம்பலாக்கியது.
தமிழர்களுக்கு எதிரான அந்தக் கலாச்சார படுகொலைக்கு காமினி திசநாயக்காவும் சிறில் மத்திய+வும் காரணம் என்று கூட்டணியினரும் குற்றம் சாட்டினார்கள். ஆவேசப்பட்டது போல பேசினார்கள்.
1994 நவம்பரில் காமினி கொல்லப்பட்ட பின்னர் கூட்டணியினர் விடுத்த அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது:
“மிகச்சிறந்த ஜனநாயகவாதியை இழந்துவிட்டோம்’’
யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் திரு.யோகேஸ்வரனின் வீடு யாழ்ப்பாணத்தில் இருந்தது. அங்கும் பொலிசார் புகுந்தனர். திரு.யோகேஸ்வரனும் அவர் மனைவியும் பின்புற வழியால் ஓடி உயிர் தப்பினார்கள். வீட்டை பொலிசார் தீயிட்டுக் கொழுத்தினார்கள்.
யாழ்.நகரில் இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமைச் செயலகமும் அங்கிருந்த ஆவணங்களும் தீக்கிரையாகின.
திட்டமிட்டு இட்ட தீயில் யாழ் நகரம் எரிந்து கொண்டிருந்தது. இலங்கை முழுவதும் இனக்கலவரத் தீயில் தமிழர்கள் எரிந்து கொண்டிருந்தார்கள்.
ஜே.ஆர்.அரசாங்கமோ அதன் படைகளோ நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம். ஒரு கடுமையான பாடம் படிப்பிப்பதன் மூலமாக தமிழர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதை ஜே.ஆர்.அரசாங்கம் விரும்பியது போல கோரமான நடவடிக்கைகளை கோலோச்சின.
எரிக்கப்பட்ட யாழ் நூலகம்
உணர்த்திய உண்மை
தமிழ் மண்ணில் கூட  தமிழ் பேசும் மக்கள் தமது கலாச்சாரத்தை தமது தனித்துவங்களை, தமது உயிர்களை உயிரிலும் மேலான அறிவாலயங்களை பாதுகாக்க முடியாது என்ற உண்மையை அடித்தும் சுட்டும் எரித்தும் உணர்த்தியது ஜே.ஆர்.அரசாங்கம்.
தீவெங்கும் எரிந்த தீ இளைஞர்கள் நெஞ்சங்களில் பற்றிக் கொண்டது.
அகிம்சை மீதான நம்பிக்கை செத்துப் போனது.
மகாத்மா காந்தி சொன்ன “செய் அல்லது செத்துமடி” ஆயுதப் போராட்டத்தால் வாங்கிக் கொள்ளப்பட்ட கோஷமானது.
ஆயுதப் போராட்டம் மீது தமிழ் மக்களும் நம்பிக்கைகொள்ள ஆரம்பித்தனர்.
அதேசமயம் அரச பயங்கரவாதத்திற்கு எதிர்ப்பை காட்டும் வகையில் 1981 ஜூனில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு மக்கள் வாக்களித்தனர்.
அடக்கு முறைக்கு பதிலடி கொடுக்கும் ஓர் ஆவேசமான வெளிப்பாடாக வாக்களிப்பு அமைந்திருந்தது.
81ல் நடைபெற்ற அரச பயங்கரவாதத்திற்கு தமது நடவடிக்கையே காரணம் எனக் கூறப்பட்டு விடும் என்று நினைத்த உமா-சுந்தரம் குழுவினர் நாச்சிமார் கோவிலடித் தாக்குதலுக்கு உரிமை கோராமல் இருந்துவிட்டனர்.
இதேவேளை இயக்க மோதல்களும் தோன்றத் தொடங்கின.
உமா-சுந்தரம் குழுவினரை ஒழித்துக் கட்டத் திட்டம் தீட்டப்பட்டது.பிரபாக வகுத்த திட்டம் அது
(தொடரும்)
(15)இந்தப் பகுதியில் கட்டம் இடப்பட்ட செய்தி
குரும்பசிட்டி கொள்ளை
யாழ்ப்பாணம் குரும்பசிட்டியில் வன்னியசிங்கம் நகை அடைவு கடையில் பிரபாகரன் அணியினரும் குட்டிமணி – தங்கத்துரை குழுவினரும் இணைந்து நடத்திய கொள்ளை பற்றி கடந்த வாரம் (பகுதி 14) குறிப்பிட்டிருந்தேன்.
கொள்ளை நடவடிக்கையை எதிர்த்த பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டிருந்ததாக நினைவு என்று கூறியிருந்தேன்.
அதில் ஒரு திருத்தம்:
அச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் இரண்டு பேர். ஒருவரது பெயர் குலேந்திரன். இன்னொருவர் பெயர் ஐயாத்துரை. காயப்பட்டவர்கள் மூவர். அக்கொள்ளை நடவடிக்கைக்கு தகவல் கொடுத்து உதவியவர் நகை அடைவு நிலைய உரிமையாளரான வன்னியசிங்கத்தின் மைத்துனர் தான் என்பதும் குறிப்பிடத் தவறிய விடயம்.

அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 115

இந்தியப் படையினர் ஹெலியில் இருந்து சாவகச்சேரி சந்தையை நோக்கி ஏவப்பட்ட ஷெல்கள்!! எங்கும் பரவிக் கிடந்த சடலங்கள்!! (அல்பிரட் துரையப்பா முதல்...