Friday, 20 July 2018

அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 42

ஏர் லங்கா’ விமானத்தில் குண்டு வைத்த ‘தமிழிழீழ இராணுவம்': அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- (பகுதி-42)


“ரெனா” என்பது அமரர் அமிர்தலிங்கத்தின் இரண்டாவது மகன் பகீரதனால் ″தமிழ் தேசிய இராணுவம்” என்னும் குழுவையே குறிக்கும். இதன் தோற்றமும் அழிவும் குறித்து முன்னமே விளக்கியிருந்தேன். தம்பாபிள்ளை   மகேஸ்வரன் தலைமையில் இயங்கிய இயக்கம் “தமிழிழீழ இராணுவம்” .   இது சுருக்கமாக TEA என்று அழைக்கப்பட்டது. ஒபரோய் தேவன் உருவாக்கிய இயக்கம் “தமிழீழ விடுதலை இராணுவம்”. சுருக்கமாக (TELA) என்று அழைக்கப்பட்டது. ஜெகன் உருவாக்கிய இயக்கம் உருவாக்கிய இயக்கம் “ரெலி” என்று சுருக்கமாக அழைக்கப்பட்டது. ரெலோ, ரெனா, ரெலா, ரெலி பெயர் குழப்பம் தலை சுற்ற வைக்கிறதல்லவா? இவற்றில் உடைபாபாடுகளோடு தற்போது மிஞசியிருப்பது “ரெலோ” மட்டுமே.. (தொடர் கட்டுரை)


தவறு திருத்தம்:
சென்ற வாரம் ஒரு பெயர் குழப்பம். ஒரேவிதமான பெயர்கள் காரணமாக ஏற்பட்ட குழப்பம். தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் தலைமையில் இயஙங்கிய இயக்கத்தின் பெயர் “ரெனா” என்று குறிப்பிட்டுவிட்டேன.
“ரெனா” என்பது அமரர் அமிர்தலிங்கத்தின் இரண்டாவது மகன் பகீரதனால் ″தமிழ் தேசிய இராணுவம்” என்னும் குழுவையே குறிக்கும்.
இதன் தோற்றமும் அழிவும் குறித்து முன்னமே விளக்கியிருந்தேன்.
தம்பாபிள்ளை மகேஸ்வரன் தலைமையில் இயங்கிய இயக்கம் “தமிழிழீழ இராணுவம்” . இது சுருக்கமாக TEA என்று அழைக்கப்பட்டது.
ஒபரோய் தேவன் உருவாக்கிய இயக்கம் “தமிழீழ விடுதலை இராணுவம்”. சுருக்கமாக (TELA) என்று அழைக்கப்பட்டது.
ஜெகன் உருவாக்கிய இயக்கம் உருவாக்கிய இயக்கம் “ரெலி” என்று சுருக்கமாக அழைக்கப்பட்டது.
ரெலோ, ரெனா, ரெலா, ரெலி பெயர் குழப்பம் தலை சுற்ற வைக்கிறதல்லவா? இவற்றில் உடைபாபாடுகளோடு தற்போது மிஞசியிருப்பது “ரெலோ” மட்டுமே.
தம்பாபிள்ளை மகேஸ்வரன் லன்டனில் இராசயன விஞ்ஞானம் படித்தவர்.
பானாங்கொடை சிறையிலிருந்து தப்பி ஓடி. பின்னர் மீண்டும் கைதானார். மட்டக்களப்பு சிறையுடைப்பு மூலமாக இவரும் வெளியே வந்தார்.
பனாங்கொடை சிறையிலிருந்து தப்பியதை வைத்து “பனாங்கொடை மகேஸ்வரன்” என்று அழைக்கப்பட்டார்.
பாரிய கொள்ளை
1984இல் நடைபெற்ற வங்கிக்கொள்ளையென்று பரபரப்பாக பேசப்பட்டது. மட்டக்களப்பில் காத்தான்குடி மக்கள் வங்கியல் புகுந்த இளைஞர் கோஷ்டியொன்று அங்கிருந்த நகைகளையும், பணத்தையும் சுருட்டிக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டது.
கொள்ளைபோன நகைகளும், பணமும் மூன்று கோடி ரூபாய்களுக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.
இலங்கையில் நடைபெற்ற மிகப் பாரிய வங்கிக்கொள்ளை என்ற பெயரையும் அந்த நடவடிக்கை சம்பாதித்துக் கொண்டது.
தமிழீழ இராணுவம் (TEA) கச்சிதமாக மேற்கொண்ட நடவடிக்கையே அதுவாகும்.
மட்டக்களப்பில் உள்ள பன்குடாவெளியில் சில வீடுகளில் கொண்டுபோய் நகைகளை புதைத்து வைத்தனர்.
பொலிசாரின் தேடுதல் வேட்டையின் தீவிரம் குறையும் போது நகைகளை யாழ்பாணத்திற்கும், தமிழ் நாட்டுக்கும் கொண்டு செல்வதுதான் நோக்கம்.
நகைகளை புதைத்து வைத்த வீடொன்றில் இருந்த பெண்மணிகளுக்கு ஒரு யோசனை “பெரும் தொகையாக புதைக்கப்பட்டுள்ள நகைகளில் கொஞ்சம் எடுத்து விற்றுவிட்டால் என்ன?”
யோசனையை நிறைவேற்றினார்கள். தமிழீழ இராணுவத்தை சேர்ந்த சிலருக்கும் அந்த யோசனையில் பங்கிருந்தது.
செங்கலடியில் உள்ள நகைக்கடையில் நகைகளை கொடுத்து பணம் பெறப்பட்டது.
தகவல் கசிந்தது
இதற்கிடையே தமிழீழ இராணுவ இயக்கத்தினரால் புதைத்து வைக்கப்பட்ட நகைகளில் பெரும்பகுதி யாழ்பாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஒரு பகுதி நகைகள் மட்டும் தொடர்ந்தும் பன்குடாவெளியில் உள்ள இரு வீடுகளில் பொலிதீன் பைகளில் போட்டு புதைக்கப்பட்டிருந்தன.
செங்கலடியில் நகைகளின் விற்பனை மூலமும, இரகசியத்தை பேணமுடியாத இயக்க உள்நிலை காரணமாக பொலிசாருக்கு தகவல் கசிந்துவிட்டது.
பன்குடாவெளியில் உள்ள வீடொன்றை ஏறாவூர் பொலிசார் சுற்றிவளைத்தனர். வீட்டுக்குள் தமிழீழ இராணுவ முக்கியஸ்தர் வரதன் சிக்கிக்கொண்டார்.
வளவைத் தோண்டினார்கள். தோண்டத் தோண்ட தங்க நகைகள் வந்துகொண்டிருந்தன.
பொலிசாரின் தீவிர கவனிப்பில் வரதன் தனக்குத் தெரிந்த தகவல்களையெல்லாம் ஒப்பிவித்தார்.
பன்குடாவெளியில் மற்றொரு வீட்டில் புதைக்கப்பட்டிருந்த நகைகளும் மீட்கப்பட்டன.
யாழ்பாணம் சங்கானையிலும் ஒரு வீட்டிலிருந்தும் நகைகள் கைப்பற்றப்பட்டன. மீண்டும் கைப்பற்றிய நகைகளின் பெறுமதி 12 இலட்சம் ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டது.
மீதி நகைகள் தமிழீழ இராணுவத்தால் தமிழ்நாட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டன.
ராஜயோகம்
வாகனங்கள் அலுவலகங்கள், தம்பாப்பிள்ளை மகேஸ்வரனின் உறவினர்களின் ஆதிக்கம் என்பவற்றின் மத்தியில் தமிழ் நாட்டில் ராஜபோகம் நடத்தியது தமிழீழ இராணுவம்.
கொள்கை, கோட்பாடு, இயக்க்கட்டுப்பாடு என்பவை பற்றி துளியும் கவலைப்படாத இயக்கங்களில் தமிழீழ இராணுவமும் ஒன்று.
ஏற்கனவே இருந்த கொஞ்ச நஞ்சக் கட்டுப்பாட்டையும் திடீரென்று கிடைத்த காற்றில் பறக்கச் செய்துவிட்டன.
இதற்கு ஒரு உதாரணம் கூறுகிறேன்.
தமிழ் நாட்டில் கோடியக்கரையில் தமிழீழ இராணுவமுகாம் ஒன்று இருந்தது.
கடற்கரைக்கும் முகாமுக்கும் வாகனங்களில் மின்னல் வேகத்தில் பறந்து திரிவார்கள்.
பாடசாலைகள் விடும் நேரத்தில் என்றால் வேகம், வெட்டி ஓடும் லாவகம் மேலும் அதிகமாக இருக்கும்.
ஒரு நாள் அந்த விபரீதம் நடந்தது.
கண்மண் தெரியாமல் வந்த வந்த தமிழீழ இராணுவ வாகனம் பாடசாலை சிறுவர்கள் மீது மோதியது. சிறுவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள்.
கத்திகள், பொல்லுகளோடு ஊரே திரண்டுவிட்டது. பொலிஸ் தலையிட்டு காப்பாற்றியது,
பயங்கரத் திட்டம.
தமிழ் நாட்டில் இருந்த தம்பாப்பிள்ளை மகேஸ்வரனுக்கு பயங்கரமான திட்டம் ஒன்று மூளையில் உதித்தது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து கொழும்பு வரும் “ஏர் லங்கா” விமானத்தில் ஒரு குண்டை வைத்துவிடவேண்டும.
குறித் நேரத்தில் வெடிக்கும் (டைம் பாம்) அந்தக் குண்டு, விமானம் கொழும்பு விமான நிலையத்தில் தரையிறங்கி, பயணிகள் வெளியேறிய பின்னர் வெடிக்கும்.
திட்டத்தை நிறைவேற்ற மீனம்பாக்கம் விமானநிலையத்தில் பணிபுரிந்த சிலரது உதவியும் பெறப்பட்டது.
ஏர் லங்காவில் பணியாற்றிய இந்தியாவை சேர்ந்த இருவரை கைக்குள் போட்டுக்கொண்டார்கள.
பயணிகளின் பொதிகளோடு குண்டு வைக்கப்பட்ட சூட்கேசையும் சேர்த்துவிடவேண்டும்.
பொதுகளோடு பொதியாக அது விமானத்தில் கொழும்பு போய்ச சேர்ந்துவிடும்.
திட்டமிட்டபடி 1984 ஆகஸ்ட் இரண்டாம் திகதி சென்னை விமான நிலையத்திற்கு சூட்கேசில் குண்டு சென்றது.
பொதிகளோடு பொதியாக சூட்கேஸ் வைக்கப்பட்டு, விமானத்தில் ஏற்றப்படத் தயாரானது.
சுங்க அதிகாரிகளில் ஒருவருக்கு அந்த சூட்கேசில் சந்தேகம் வந்துவிட்டது. சூட்கேசை எடுத்து, அது யாருடையது என்று பயணிகளிடம் விசாரித்தார்.
வந்தது ஆசை
அந்த சுங்க அதிகாரி சூட்கேசை தூக்கிக்கொண்டு தனது அறைக்குச் சென்றார்.
அவர் நினைத்திருந்தால் உடனடியாகவே சூட்கேசை திறந்து பரிசோதித்திருக்கலாம். செய்யவில்லை. அதற்கு காரணம் இருந்தது.
“சூட்கேசுக்குள் கடத்தல் தங்கம்தான் இருக்க வேண்டும். பாரமாக வேறு இருக்கிறது. மெல்ல அமுக்கிக் கொண்டால் என்ன? என்று அந்த அதிகாரிக்கு ஆசை வந்துவிட்டது.
தனது காலடியில் மேசைக்கு கீழே சூட்கேசை பத்திரமாக வைத்துக்கொண்டார்.
சூட்கேஸ் கைமாறிவிட்டது. விமானத்தில் ஏற்றப்படவில்லை. சென்னை விமான நிலையத்துக்குள் வெடித்துவிடப்போகிறது என்று தமிழ் ஈழ இராணுவ உறுப்பினர்களுக்கு விளங்கிவிட்டது.
பயணிகள் அனுப்ப வந்த பார்வையாளர்கள் போல் நின்று அனைத்தையும் அவர்கள் கவனித்துக்கொண்டிருந்தார்கள்.
விமான நிலையத்தை விட்டு வெளியே ஓடி, பொதுத் தொலைபேசி ஒன்றில் இருந்து விமான நிலையத்தோடு தொடர்பு கொண்டனர்.
“விமான நிலையத்தில் ஒரு சூட்கேசுக்குள் குண்டு இருக்கிறது. உடனே அப்புறப்படுத்துங்கள்”என்று தொலைபேசியில் தகவல் சொன்னார்கள்.
“ தங்கத்தை கடத்த முற்பட்டவாகள் தான் கயிறு விடுகிறார்கள்” என்று நினைத்து சுங்க அதிகாரி அலச்சியமாக இருந்துவிட்டார்.
மறுபடியும் தொலைபேசியில் தகவல் சொன்னார்கள்.
“அனாமதேய மிரட்டல், வழக்கமான ஏமாற்று” என்று நினைத்து பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் தம்பாட்டில் இருந்துவிட்டனர்.
மூன்றாவது தடவை சூட்கேசின் நிறத்தையும் கூறி தகவல் சொல்லப்பட்டது.
சந்தேகம்

தகவல் அறிந்த சுங்க அதிகாரிக்கும் “உண்மையாக இருக்குமோ? என்று சந்தேகம் வந்துவிட்டது. ஊழியர் ஒருவரை அழைத்து சூட்கேசை வெளியே கொண்டு செல்லுமாறு பணித்தார்.
சூட்கேசோடு ஊழியர் செல்ல, சுங்க அதிகாரியும், பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் கூடவே சென்றனர்.
விமான நிலைய கட்டிடத்தைவிட்டு அவாகள் வெளியேற முன்னர்.
குண்டு வெடித்தது!!
பயங்கரமான சப்தம்!!
எங்கும் ஒரே புகை மூட்டம்.
கட்டிடம் இடிந்து வீழ்நதது.
இலங்கையர் உட்பட முப்பதுக்கு மேட்பட்டோர் பலியானார்கள். நூறுபேர்வரை காயமடைந்தனா.
தமிழ் நாடெங்கும் அதிர்ச்சி. தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் திவிர புலன் விசாரனைக்கு உத்தரவிட்டார்.
ஈழப் போராளிகள் குண்டு வைத்திருப்பார்கள் என்று தமிழக மக்கள் நம்ப மறுத்தார்கள்.
தமிழக மக்களை பலியாக்கும் நடவடிக்கையை ஈழப்போராளிகள் ஒரு போதும் செய்யமாட்டார்கள் என்ற நம்பிக்கையும் அதற்கு காரணமாகும்,
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஈ.பி.ஆா.எல்.எப் சூட்டோடு சூட்டாக சென்னையில் சுவரொட்டிகளை ஒட்டியது.
“மீனம்பாக்கம் வெடி குண்டு அமெரிக்க சி.ஐ.ஏயின் சதி. தமிழக மக்களுக்கும் ஈழப் போராளிகளுக்கும் இடையே விரிசலை தூண்டும் முயற்சி”
என்ற வாசங்களோடு அந்தச் சுவரெட்டிகள் காணப்பட்டன.
இதேநேரம் எம்.ஐி.ஆரை இந்திய மத்திய அரசு தொடர்பு கொண்டது. மிக முக்கியமான செய்தியொன்றை அவாகுள் எம்.ஐி.ஆரின் காதில் போட்டார்கள்.
எம்.ஐி.ஆர் குழம்பி போனார்.
தொடரும்…

No comments:

Post a Comment

அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 70

கிட்டவுக்குக் கிட்டிய பிரபலம்: கிட்டுவுக்கும் பிரபாகரனுக்கும் பிரச்சனை?? -(அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-70) 1986 இன் மத்திய பகுத...