Friday 15 March 2019

தன்னிலை இழந்து தடுமாறும் தலைவன் இருந்த கிளிநொச்சி!

கிளிநொச்சி என்றால் கடந்த பத்தாண்டுக்கு முன் நினைவுக்கு வருவது அழகான தமிழ்பெயர்களுடன் கூடிய வாணிபங்கள்.தெருக்களில் காலைமாலையும் பல்வேறு சீருடைகளுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் பல்வேறு கட்டமைப்புக்களின் பணியாற்றும் பணியாளர்கள்.மிக அமைதியாகவும் நேர்த்தியாகவும் திட்டமிட்டு நடத்தப்படும் தெருவெளி அரங்குகள் புத்தகவெளியீடுகள் போர்எழுச்சிக்கூட்டங்கள் மகளிர் சந்திப்புக்கள் முத்தமிழ் கலை அரங்குகள் சமகால அரசியல் அரங்குகள்.மாவீரர்களின் பேரோடு இலங்கும் தெருக்கள் குறுக்குகள்.தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் மையப்பணிமனைகள் ஊடக நிறுவனங்கள் நீதிபரிபாலன கட்டமைப்புக்கள் பொருண்மிய கட்டமைப்புக்கள் இப்படி ஒரு தமிழீழ அரசாங்கத்துக்குரிய ஒரு அடையாளத்தை கிளிநொச்சி இந்த உலகுக்கு பறைசாற்றியிருந்தது.அதற்கு மக்களும் போராளிகளும் இணைந்து நீண்ட காலமாக பாடுபட்;டிருந்தனர்.அத்தகைய ஒரு அடையாளக்கட்டமைப்பு உருவாக ஆயிரக்கணக்கில் மாவீரர்கள் தம்மை ஈகம் செய்திருந்தார்கள்.இத்தனைக்கும் பின்னணியில் சர்வதேசம் அறிந்த ஒரு தமிழீழ அரசாங்கத்தின் மையமாக மரியாதைக்கு உரியதாக இருந்தது. கிளிநொச்சி தீர்மானங்களுக்காக இந்த உலகம் காத்திருந்தது.




இன்னுமொருபடி மேலே சொல்லப்போனால் தமிழர்களின் பெருந்தலைவர் பிரபாகரனின் காலடித்தடத்தை தாங்கியதாக கிளிநொச்சி மண் நிமிர்ந்து இருந்தது 2009ற்கு பின் அந்த அழகான கிளிநொச்சி எவ்வாறு தன்னிலை இழந்து இழந்து வந்து இன்று அது தமிழர்களின் அசிங்கங்களை உலக்குக்கு அறிவிக்கும் நிலமாக மாற்றப்பட்டுள்ளது.2009க்கு பின்னும் போராட்ட உணர்வு கொண்ட மக்கள் கூட்டத்தின் ஜனநாயக வழிப்போராட்டங்கள் முறிகண்டியில் தொடங்கியதில் இருந்து அது போராட்ட குணமுள்ள மக்களால் முள்ளிவாய்க்காலில் தங்கள் உறவுகளின் உயிர்களை கொடுத்த மக்களால் மாவீரர்களின் குடும்பங்களால் போராட்ட உணர்வுள்ள பல உணர்வாளர்களால் அச்சுறுத்தல் நெருக்குவாரங்கள் மத்தியில் தொடர்ந்தும் முன்னைய ஒரு கிளிநொச்சியை உணர்வுடன் கட்டிக்காக்கும் முனைப்பு இருந்தது.

ஆயினும் அது மெள்ள மெள்ள தன்னிலை இழந்து இழிகர நிலைக்கு சென்றிருப்பதற்கு சுட்டிக்காட்டக்கூடிய நேரடிக்காரணம் விடுதலைக்கான அரசியல் அற்ற பதவி நோக்கிய அரசியலே காரணம். இந்த பதவி நோக்கிய அரசியலில் சூத்திரதாரிகள் இருவர் ஒருவர் முன்னை நாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் மற்றையவர் தமிழ் தேசிய போர்வையுடன் அரசியல் அரங்கில் நுழைந்த இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்.இங்கே சந்திரகுமார் முதலில் வெளிப்படையாக ஈபிடிபியில் இருந்துகொண்டு மகிந்தராஜபக்சவின் அரசாங்கத்தில் கிளிநொச்சி பிரதிநிதியாக அபிவிருத்தி அரசியலில் ஈடுபட்டவர். சந்திரகுமார் அபிவிருத்தி அரசியலில் ஈடுபட சிறீதரன் இனப்பிரச்சனைக்கு அபிவிருத்தி அரசியல் எதிரானது எனக்கூறி சந்திரகுமாரின் அரசியலை விமர்ச்சித்தபடி தன்னுடைய தமிழ்த் தேசிய போர்வையிலான அரசியலை வளர்த்து வந்தார். பின் இறுதியாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் சந்திரகுமார்  பேசிய அபிவிருத்தி வேண்டாம், இனப்பிரச்சனைக்கான தீர்வே முக்கியம் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை முக்கியம் சிறைக்கைதிகளின் விடுதலை முக்கியம் என்பதற்காக மக்கள் கண்ணை மூடிக்கொண்டு சிறீதரனுக்கு சுமார் 72ஆயிரம் வாக்குகளை வழங்கி அதிகூடிய வாக்குகளை பெற்றவராக்கி சிறீதரனின் கண்கணை மறைத்தனர்.அபிவிருத்தி அரசியல்பேசிய சந்திரகுமார் தோற்றுப்போனார். தோற்றுப்போனபின் ஈபிடிபியில் தான் விலகுதாக அறிவித்து கிளிநொச்சியில் ஒரு புதிய கட்சியை உருவாக்கி கிளிநொச்சியில் ஒரு அலுவலகத்தையும் அமைத்து செயற்படத் தொடங்கினார்.

இதன் பிறகு சிறீதரன் தான் பெற்ற 72ஆயிரம் வாக்குகளும் தனக்கு கிடைத்ததே தவிர அது எதற்காக தனக்கு வழங்கப்பட்டது என்பதை அவர் கடந்த வந்தபாதையில் சென்று படிப்பதற்கு நினைக்கவில்லை. சிறீதரன் வழங்கிய வாக்குறுதிகள் காற்றில் பறக்கத்தொடங்கின சிறீதரனின் தேசியத்துள் அடங்கியிருந்த போலித்தனமும் கலைய ஆரம்பித்தது. குறிப்பாக அரசாங்கத்தோடு கூட்டுச்சேர்ந்துகொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவிகளை பெற்றுக்கொண்டார். தன்னிடம் வந்து தன்னை புகழ்ந்து பாடியவனுக்கெல்லாம் ஜேபி வாங்கிக்கொடுத்து அசத்தினார். கண்ணை மூடிக்கொண்டு மலையசமுகத்தை வடக்கத்தையான் என்றார் பின் தான் அதை சொல்லவில்லை என்றார். இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை தவிர்த்து ஒரு உள்ளக விசாரணைக்கு உடன்படுமாறு ஒரு தீர்மானத்தை சர்வதேசமும் அரசாங்கமும் திணித்தபோது கண்ணைமூடிக்கொண்டு அதை ஏந்திய கூட்டமைப்பை சேர்ந்தவர்களில் சிறீதரனும் ஒருவராக இருந்தார்.இந்த தருணத்தில் சந்திரகுமாரையும் சிறீதரனையும் ஒப்பிட்ட கிளிநொச்சி மக்கள் பிரதேச சபை தேர்தலில் சந்திரகுமாருக்கு வாக்குகளை அள்ளிவழங்க கிளிநொச்சியில் தனது இருப்பு கேள்விக்குறியாகும் நிலையை அடுத்து சிறீதரன் கிளிநொச்சியில் கரைச்சி பளை ஆகிய பிரதேச சபைகளை கைப்பற்ற சிறீலங்கா சுதந்திரகட்சியோடும் ஐக்கிய தேசிய கட்சியோடும் கூட்டுச்சேர்ந்தார். இப்பொழுது கிளிநொச்சியில் கொள்கை அடிப்படையில் சிறீதரனும் சந்திரகுமாரும்  இன்னும் சொல்லப்போனால் ரணிலின் பூரண ஆசீர்வாதத்தை கிளிநொச்சி மண்ணிலேயே முதுகு தடவி பெற்ற சிறிதரனும் சந்திரகுமாரும் ஒருவரே எனும் நிலைப்பாட்டிற்கு மக்கள் வந்தனர். கிளிநொச்சியில் இரண்டு பெரும் அணிகள் சிறீதரன் அடியாட்கள்.சந்திரகுமாரின் குழு உருவாகியுள்ளது.

அடுத்து வடக்கு முதலமைச்சராக இருந்து விக்னேஸ்வரனை பதவி இறக்குவதிலே மிகுந்த வெறியுடன் சிறீதரன் செயற்பட்டார்.தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் கிளிநொச்சியில் கட்சிக்காரியாலயங்களோ கூட்டங்களோ தன்னை அறியாமல் நடக்கக்கூடாது என்பதில் சிறீதரன் குறியாக இருந்தார். அவ்வாறு தமிழ் தேசியக்கூட்டமைப்பில் உள்ள ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கிளிநொச்சியில் அனுசரணை வழங்குகின்ற மக்கள் துரோகிகளாக சிறீதரன் ஆதரவு ஊடகங்களால் வசைபாடப்பட்டனர். ஒரு புறத்தில் கிளிநொச்சியில் சந்திரகுமார் தலைஎடுக்கக்கூடாது என்றும் இன்னொரு புறத்தில் எட்டாத கனியான சம்மந்தன் கதிரைக்காக விக்னேஸ்வரனோடும் விக்னேஸ்வரன் கதிரைக்காக அடிக்கடி சம்மந்தனோடும் உரசல்களை வளர்த்த சிறீதரன் தமிழ் தேசியம் என்ற கொள்கையை கோட்டை விட்டதுடன் இறுதியில் சம்மந்தன் காலடியில் நெளியும் புளுவாகி கிளிநொச்சியை ஒரு பிரதேச வாதம் கொண்ட சாதிய பாகுபாடு கொண்ட கட்சிப்பாகுகொண்ட ஒரு முரண்பாண்டு மையமாக வளர முழு முதற்காரணமானவர்.


கிளிநொச்சியில் நடக்கக்கூடிய காணாமல் ஆக்கப்பட்ட போராட்டங்கள் தொடக்கம் மாவீரர் துயிலும் இல்லம் வரை தன்னுடைய கட்டளைக்கு ஆடுவதாக அமையவேண்டுமென சிறீதரன் விரும்பினார். இதன் காரணமாக புனிதமான மாவீரர்துயிலுமில்லமும் ஒரு முரண்பாட்டு மையமாக்கப்பட்டு அசிங்கப்படுத்தப்பட்டது. அதேவேளை காணாமல் ஆக்கப்பட்ட போராட்டங்களிலும் தன்னுடைய தன்னோடு நிற்கின்ற கூட்டங்களின் அரசியல் தலையீட்டை நுழைத்து அவற்றையும் கூறுபோட்டு முரண்பாடுகளை ஏற்படுத்தினார்;. இப்பொழுது சிறீதரனால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்குள் இரண்டு அணி. சந்தைக்குள் இரண்டு அணி இரணைமடுகுளத்துள் இரண்டு அணி. கல்வி நிர்வாகத்துக்குள் இரண்டு அணி. மலையக மக்களுக்குள் இரண்டு அணி. விளையாட்டு மைதானங்களுக்குள் இரண்டு அணி. விவசாயிகளுக்குள் கிளிநொச்சியில் தமிழரசுக்கட்சிக்குள்ளும் இரண்டு அணி அதாவது சிறிதரனின் வீட்டுக்குள்ளேயே இரண்டு அணி. அநேகமாக நீங்கள் கிளிநொச்சியில் எந்தத்துறைக்குள் நுழைந்தாலும் இரண்டு முரண்பட்ட அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன அதன் மூலகர்த்தா சிறீதரன்.சிறீதரனோடு தற்பொழுது இருக்கின்ற வரலாற்றின் உயிர்வலி அறியாத கூட்டங்கள்.


இந்த முரண்பாட்டின் சர்வாதிகார போக்கின் உச்சம்தான் மிகவும் உணர்வுபூர்வமான உயிர்களோடு சம்மந்தப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தில் சிறீதரன் ரவுடிகள் நடத்திய அராஜகம் அசிங்கம் அருவருப்பு எல்லாம். அநேகமாக சமுக வலைத்தளங்களில் உலவிக்கொண்டிருக்கும் கிளிநொச்சி போராட்டத்தில் நடந்த முரண்பாடுகளுக்கு காரணமாக காணொளிகளில் தோன்றுகின்றவர்கள் அனைவரும் சிறீதரனின் அலுவலகத்தில் நெருக்கமான தரப்பு. இன்னும் சொல்லப்போனால் சிறீதரனின் அலுவலகத்தில் நாள்முழுதும் தூங்கும் தரப்பு. தான் தப்பிக்கொள்ள சிறீதரன் வழமையாக போடும் ஆதாரத்தை காட்டு பதிவி விலகுவேன் விளையாட்டு ரணில் எழுத்து மூலம் தந்தால்தான் ஆதரவு வழங்குவேன் விளையாட்டு இனி செல்லாது என்பதை கிளிநொச்சியில் ஊடவியலாளர்களுக்கு சிறீதரனின் ரவுடிகளால் விடுக்கபட்ட எச்சரிக்கையின் பின்னான விளைவுகள் புரியவைத்திருக்கும்.


குறிப்பாக காணாமல் போனவர்களோடு முழுமையாக சம்மந்தப்பட்ட தங்கள் பிள்ளைகள் தொடர்பில் தீர்மானத்தை எடுக்கவேண்டிய பாதிக்கபட்டவர்களோடு சம்மந்தப்பட்ட ஓஎம்பி அலுவலத்தை வேண்டும் என தெருவில் போகும் ஒரு பொறுக்கிப்பயல் எவ்வாறு தீர்மானிக்க முடியும் என்பதுதான் இன்று கிளிநொச்சியில் இழிகரநிலைமை.சர்வதேச விசாரணை வேண்டுமா வேண்டாமா காணாமல் போனவர்களுக்கான ஓஎம்பி அலுவலகம் சிறீலங்காவில் வேண்டுமா வேண்டாமா என்பதை முழுமையாக தீர்மானிக்கும் தகுதியும் பொறுப்பும் தார்மீகமும் அந்த தாய்மார்களுக்கும் மனைவிமாருக்கும் பிள்கைளுக்குமே உரியதே தவிர ஒரு அரசியல்வாதியின் பின்னே வேட்டியை பிடித்துத்திரிகின்ற ஒரு கோணங்கி தீர்மானிக்கலாமா.இல்லை கிளிநொச்சியை தன்னுடைய கோணங்கிகள் தான் தீர்மானிக்கவேண்டும் என்கிறது கிளிநொச்சியில் சிறீதரனின் தீர்மானம்.இதுதான் கடந்த 25த் திகதி கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்தில் நுழைந்து சில ரவுடிகள் நடந்துகொண்டு விதத்திற்கும் காரணமும்.

No comments:

Post a Comment