Tuesday 30 April 2019

போதிதர்மர் சீனாவுக்குப் பலமென்றால் பிரபாகரன் இலங்கைக்கு பலமல்லவா!

தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றி இப்போது அதிகமாகப் புகழ்ந்து பேசுபவர்கள் சிங்கள மக்களும் சிங்கள அரசியல் தலைவர்களும் என்றால் அது மிகையன்று.2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம்  திகதி வன்னிப் போர் முடிவுற்றது.
போர் முடிவுற்றதும் போர் வெற்றி விழாக் கொண்டாட்டத்தை நடத்துவதில் அன்றைய ஆட்சியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.

பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்றொழித்துவிட்டு, தமிழ்க் குழந்தைகளை யாருமற்ற அநாதைகளாக்கிவிட்டு, வெற்றி விழாக் கொண்டாட்டம் செய்கின்ற மனநிலை உடையவர்களாக சிங்கள ஆட்சியாளர்கள் இருந்தார்கள் என்பதை எண்ணிப் பார்க்கும் போது கன்னத்தின் ஓரங்கள் நனைந்து கொள்கின்றன.

தமிழ் என்ற ஒரே காரணத்துக்காக, தமிழ் மக்களையும் தமிழ்க் குழந்தைகளையும் கொன்றொழித்த கொடூரம் சகிப்பதற்குரியதல்ல.

தவிர, விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து விட்டோம்; விடுதலைப் புலிகளை அழித்து விட்டோம் என்ற திமிர்த்தனத்துடன்  ஆட்சியாளர்களும் படைத்தரப்பும் நடந்து கொண் டதை தமிழ் மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.

இவை ஒருபுறமிருக்க, விடுதலைப்புலிகள் கொள்கையுடன் போராடியவர்கள் என்று ஜனாதிபதி மைத்திரியும் விடுதலைப்புலிகள் பொதுமக்களை இலக்குவைத்துத் தாக்குதல் நடத்தவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வும் இப்போது கூறியுள்ளனர்.இவ்வாறு விடுதலைப் புலிகளை தென் பகுதி ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் சிங்கள மக்களும் இப்போது புகழ்ந்து பேசுவது என்பது ஒரு தொடக்கப்புள்ளி மட்டுமே.

எதிர்காலத்தில் எதற்கும் விடுதலைப் புலிகளை உதாரணம் காட்டி அவர்கள் உயர்வான வர்கள், இலட்சிய வேட்கை கொண்டவர்கள் என்று இந்த நாட்டின் பெரும்பான்மையினர் அடிக்கடி பேசுவது தவிர்க்க முடியாததாகும்.

இங்கு நாம் கேட்பதெல்லாம், உலகம் முழுவதும் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பை அதன் தலைவனைப் புகழ்ந்து பேசியது.அந்த அமைப்பின் கட்டமைப்பு, நிர்வாக ஒழுங்கு, ஒழுக்கம், உரிமை மீது கொண்ட பற்றுறுதி, புலனாய்வு நுட்பம், மிக உயர்ந்த போர்த்திறன் எனப் பல விடயங்களைச் சுட்டிக் காட்டி விடுதலைப் புலிகளை உலகநாடுகள் புகழாரம் சூட்டியபோது; இந்த நாட்டின் எதிர் காலப் பாதுகாப்புக்குரியவர்களாக விடுதலைப் புலிகளை ஆக்க வேண்டும், அவர்களுடன் சமரசம் செய்து அவர்களையும் இந்த நாட்டின் இறைமைக்கான பாதுகாவலர்களாக மாற்ற வேண்டும் என்று தென்பகுதிப் பெரும்பான்மை நினைக்கவில்லையே. இது ஏன்?

இந்தியாவிலிருந்து சீனாவுக்குச் சென்ற போதிதர்மரைத் தங்களோடு வைத்திருக்க வேண்டும். அதுவே தங்கள் நாட்டுக்கான பலம் என்று சீனர்கள் நினைத்தார்கள்.புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்த நாட்டின் ஒரு பெரும் பலம் என்று நீங்கள் நினைத் திருந்தால், இன்று இந்த நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பயங்கரம் கிட்ட நெருங்கியிருக்குமா? அல்லது இலங்கையில் தாக்குதல் நடத்த வேண்டு மென்ற நினைப்புத்தான் மதத் தீவிரவாதத்துக்கு ஏற்பட்டிருக்குமா என்ன? 

அழிப்பதுதான் தீர்வு என்றால், இப்போது எழுந்துள்ள பிரச்சினை எதற்கானது என்பதை ஒரு கணம் சிந்தியுங்கள்.  

courtesy: valampurii

Sunday 28 April 2019

மனித நேயத்தோடு முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றினார்கள்:

யாழில் இருந்து சுமார் 29 வருடங்களுக்கு முன்னர்(1990) முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இந்த விடையம் இன்று வரை சர்சையாக இருந்து வந்தது. ஆனால் விடுதலைப் புலிகள் மனிதநேய அடிப்படையில் தான் முஸ்லீம்களை யாழ் மண்ணில் இருந்து அனுப்பி வைத்தார்கள். அன்று என்ன நடந்தது தெரியுமா ?


யாழ் செம்மா தெருவில் அமைந்துள்ள ஒஸ்மானியா கல்லூரிக்கு பின்னால், விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்று அமைந்திருந்தது. அங்கே சங்கிலியன் என்னும் போராளி ஒருவர் முஸ்லீம் வீடு ஒன்றில் வழமைக்கு மாறகாக சிலர் வந்து செல்வதை கண்டு சந்தேகமுற்றார். அவர் சென்று குறித்த வீட்டில் உள்ளவர்களை விசாரணைக்கு உட்படுத்தியவேளை அவர்கள் பெரும் பதற்றத்தோடு காணப்பட்டார்கள். இதனை அடுத்து புலிகளின் வேவுப்படை பிரிவு அங்கே சென்று விசாரணைகளை நடத்திக்கொண்டு இருக்க சோதனைப் பிரிவு சோதனைகளை நடத்த. வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் இருந்து பொலித்தீன் பைகளில் கட்டப்பட்ட நிலையில் ஆயுதங்கள் மீட்க்கப்பட்டது.
1990களில் யாழ்ப்பாணத்திற்கு பொருளாதாரத் தடை இருந்தது. அதாவது உணவுப் பொருட்களை மட்டுமே கொழும்பில் இருந்து யாழ் கொண்டு செல்ல முடியும். அந்த வேளைகளில் லாரி உரிமையாளர்களாக இருந்த பல முஸ்லீம்கள் கொடிகட்டிப் பறந்தார்கள். அதிலும் “முபீன்” என்னும் பெரும் செல்வந்தரிடம் 40க்கும் அதிகமான லாரிகள் இருந்தது. இவர் உணவு பொருட்களை யாழ் கொண்டு வரும் வேளை. சிங்கள அரசு கொடுத்துவிட்ட பெருந்தொகையான ஆயுதங்களையும் கொண்டு வந்து யாழில் பல முஸ்லீம்களிடம் கொடுத்து அதனை மறைவாக வைத்திருக்க சொல்லி இருந்தார். ஏன் எதற்கு என்று சொல்லவில்லை.
இதனை கண்டறிந்த புலிகள் சகல வீடுகளையும் சோதனை போட்டு பெரும் தொகையான ஆயுதங்களை மீட்டார்கள். உடனே புலிகளின் மத்திய குழு கூடி ஒரு முடிவை எட்டினார்கள். அது அதிர்சியான முடிவு தான். யாழில் இருந்து முஸ்லீம்களை மனித நேயத்தோடு அனுப்பி வைப்பது. அவர்கள் தமது உடமைகளை எடுத்துச் செல்லலாம். வீடுகள், வியாபார நிலையங்கள் மற்றும் காணிகளை விடுதலைப் புலிகள் பாதுகாப்பார்கள். மீண்டும் வரும்போது கையளிக்கப்படும். இதுவே எட்டப்பட்ட முடிவு. அதனை சுட்டறிக்கையாக அச்சடித்து உடனே அனைத்து முஸ்லீம் மத தலைவர்களிடம் கொடுத்தார்கள். வழி அனுப்பி வைத்தார்கள்.
நாங்கள் உயிரைக் கொடுத்து சிங்களவனிடம் இருந்து, எமக்கான உரிமை வேண்டும். தனி அரசு ஒன்று அமைந்தால் தான் தமிழர்கள் நிம்மாதியாக வாழ முடியும் என்று போராடுகிறோம். போராட்டத்தில் எங்களுக்கு உதவி செய்ய வேண்டாம். காட்டிக் கொடுத்தாலும் பரவாயில்லை. ஆனால் நீங்கள், ஆமி காரன் முன்னேறி வந்தால் , வந்த ஆமிக்காரனுக்கு ஆயுத சப்பிளை செய்ய ஆயுதங்களை இப்பவே தயார் செய்து வைத்திருக்கிறீகள். எங்கள் போராட்டத்தை அதள பாதாளத்தில் தள்ள பார்கிறீர்கள். உங்களில் நல்லவர் யார் ? கெட்டவர் யார் என்று நாம் விவாதிக்க வரவில்லை. எனவே நீங்கள் போரில் இறக்காமல் இருக்கவும். பாதுகாப்பாக இருக்கவுமே உங்களை நாம் அனுப்பி வைக்கிறோம் என்று மதிப்போடு கூறி மனித நேயத்தோடு அனுப்பி வைத்தார்கள் புலிகள்.
இன்று யாழில் குண்டு வெடிக்கவில்லையே…. அன்று புலிகள் எடுத்த முடிவு. இன்று இதனை எத்தனை பேர் சரி என்று சொல்கிறார்கள். அன்று எதிர்த்தவர்கள் கூட இன்று மனம் மாறியுள்ளார்களே… இதுவே புலிகளுக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றியாகும்.

Wednesday 24 April 2019

இலங்­கையின் அழகை ரசிக்க வந்து உயிரிழந்த ஒவ்­வொரு வெளி­நாட்­ட­வ­ருக்குப் பின்னும் ஒவ்­வொரு கதை நீள்­கி­றது...!

அழ­கான இலங்­கையின் கடலை ரசித்­த­படி தங்கள் நாளை சந்­தோ­ச­மா­கத்தான் ஆரம்­பித்­தி­ருப்­பார்கள். யாருக்கும் எதுவும் தெரிந்­தி­ருக்க வாய்ப்­பில்லை இதுதான் நமது கடைசிக் காலை என்று.ஆம்! இலங்­கையின் அழகை ரசிக்க வந்த வெளிநாட்­ட­வர்கள் அலங்­கோ­ல­மா­கிப்போய் திரும்பிப் போகி­றார்கள். அதில் இலங்­கையைச் சுற்றிப் பார்க்க வந்­த­வர்கள் வெள்ளைத் துணியில் சுற்றிப் போகி­றார் கள்.

கடந்த ஞாயி­றன்று இலங்­கையில் நிகழ்ந்த தொடர் வெடிகுண்டுத் தாக்­கு­தலில் மொத்தம் 35 வெளிநாட்­ட­வர்கள் பலி­யா­னார்கள். அந்த ஒவ்­வொரு வெளி­நாட்­ட­வ­ருக்குப் பின்­னாலும் ஒவ்­வொரு கதை நீள்­கி­றது...

இந்­தி­யாவின் மக்­க­ளவைத் தேர்தல் பிர­சாரம் முடிந்து இலங்­கைக்கு ஓய்­வெ­டுக்க வந்த கர்­நா­ட­காவைச் சேர்ந்த மதச்­சார்­பற்ற ஜனதா கட்­சியின் 7 பேர், டென்மார்க் நாட்டின் பெரும் பணக்­கா­ரரின் இரு புதல்விகள், இலங்­கைக்கு உதவி புரிய வந்த ஒரு குடும்­பத்தின் தலைவி என்று ஒரு பெரும் சோகக் கதையே நீள்­கி­றது.

டென்மார்க் நாட்டின் பிர­பல தொழி­ல­திபர் அன்ட்­ரஸன் ஹாவல்க் பாவ்ல்ஸ்ன். உயிர்த்த ஞாயிறு பண்­டி­கையை முன்­னிட்டு இலங்­கைக்கு குடும்­பத்­துடன் சுற்­றுலா வந்­தி­ருந்தார். 
போர்ப்ஸ் பட்­டி­ய­லின்­படி, டென்மார்க் நாட்டின் முதல் பணக்­காரர் இவர். 

பல்­வேறு தொழில் நிறு­வ­னங்கள் இவ­ருக்கு உள்­ளன. இவரின், சொத்து மதிப்பு 5.9 பில்­லியன் அமெ­ரிக்க டொலராகும். 
இலங்­கையில் நடந்த குண்­டு­ வெ­டிப் பில் அன்ட்­ர­ஸனின் நான்கு குழந்­தை­களில் மூன்று குழந்­தைகள் பலி­யா­கி­யுள்­ளன. 

குழந்­தை­களைப் பலி கொடுத்த அன்ட்­ர­ஸ­னுக்கு ஸ்கொட்­லாந்து நாட்டின் ஒரு சத­வீத நிலம் சொந்­த­மா­னது. இந்த நாட்டில் அன்ட்­ர­ஸ­னுக்கும் இவரின் மனைவி ஆன்னே ஸ்டார்ம் பென்­ட­சர்­ஸ­னுக்கும் சொந்­த­மாக 200,000  ஏக்கர் நிலம் உள்­ளது. பிரித்தானியாவில் அதி­க­ளவில் நிலம் சொந்­த­மாக வைத்­தி­ருப்­ப­வர்­களில் இவ­ருக்கு இரண்­டா­வது இடம். 12 பெரிய தோட்­டங்­களும் உள்­ளன. 

பெண்கள் உடை­யான வேரோ மோடா, ஜேக் அண்ட் ஜோன்ஸ் ஜீன்ஸ் போன்­றவை அன்­டர்­ஸ­னுக்குச் சொந்­த­மான `பெஸ்ட் செல்லர்' நிறு­வ­னத்தின் தயா­ரிப்­புதான். 

"இலங்கை ஓர் அழ­கான நாடு. இந்த உயிர்த்த ஞாயிறு விடு­மு­றையை அங்கு கழிக்­கலாம்" என்று தன் குழந்­தை­க­ளிடம் கூறி கொழும்­புக்கு அன்ட்­ரஸன் சுற்­றுலா அழைத்து வந்­துள்ளார். வந்த இடத்தில் குழந்­தை­களைப் பறி­கொ­டுத்­து­ விட்டு கண்ணீர் மல்க நிற்­கிறார். 

அன்ட்­ர­ஸ­னுக்கு ஆறுதல் சொல்ல எம்­மிடம் வார்த்­தை கள் இல்லை!
இந்­தி­யாவில் தற்­போது நடை­பெற்­று­வரும் மக்­க­ளவைத் தேர்­தலில் கடு­மை­யான பிர­சா­ரத்தை முடித்­துக்­கொண்டு இலங்­கைக்கு ஓய்­வெ­டுக்க கர்­நா­ட­காவின் ஜனதா தளம் கட்­சியைச் சேர்ந்த 7 பேர் இங்கு வந்­துள்­ளனர்.

இங்கு வந்­த­வர்­களைக் காண­வில்லை என்று உற­வி­னர்கள் இலங்­கைக்கு படை­யெ­டுத்து வரு­கின்­றனர். 

இதில் பெங்­க­ளூ­ருவைச் சேர்ந்த ஹனுமந்த் ராயப்பா, ரங்­கப்பா, புரு­ஷோத்தம், நாக­ராஜ ரெட்டி மற்றும் சிக்­க பள்­ளாப்­பூரைச் சேர்ந்த சுப்­ர­மண்யா, கேச­வராஜ், சிவ­குமார் ஆகிய 8 நிர்­வா­கிகள் கொழும்பிலுள்ள ஷங்­கிரிலா நட்­சத்­திர ஹோட்­டலில் தங்­கி­யி­ருந்­தனர். 

இந்த ஹோட்­டலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 15 பேர் உயி­ரி­ழந்­தனர்.

இந்தக் குண்­டு­வெ­டிப்பில் சிக்­கி­யோரில் 10 இற்கும் மேற்­பட்டோர் இந்­தி­யர்கள் என தகவல் வெளி­யா­கி­யுள்­ளன.

இந்நிலையில் இந்­திய வெளி­யு­ற­வுத்­துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ம.ஜ.த.வைச் சேர்ந்த ஹனுமந்த் ராயப்பா, ரங்­கப்பா ஆகிய இரு­வரும் குண்­டு வெ­டிப்பில் பலி­யாகி விட்­டனர் என கர்­நா­டக முத­ல­மைச்சர் குமா­ர­சா­மிக்கு தகவல் கொடுத்­துள்ளார். இத­னி­டையே ம.ஜ.த. கட்­சியின் உறுப்­பினர் விஸ்­வ­நாத்தின் மரு­ம­கனும், யல­ஹங்கா பகுதி ம.ஜ.த. செய­லா­ள­ரு­மான புரு­ஷோத்தும் மருத்­துவ­ம­னையில் சிகிச்சை பல­னின்றி நேற்று உயிரி­ழந்­துள்ளார். இரத்தம் தோய்ந்த ஆடையுடன் குடும்­பத்தைத் தேடி...

இங்­கி­லாந்து நாட்டின் அழ­கிய குடும்பம் ஒன்று கணவன், மனை­வி­ மற்றும் இரண்டு பிள்­ளைகள் இந்தக் குண்­டு­வெடிப்பில் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மனைவி, பிள்ளைகளை இழந்த ஒரு குடும்பத் தலைவனின் தவிப்பு, போராட்டம், சோகம் என்று அனைத்தும் கலந்த ஒரு மனநிலையை என்ன எழுதியும் மாளாது.

இறுதியில் இவர் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளையும் இழந்து அநாதரவாகத்தான் தற்போது சுற்றித் திரிகிறார்.
அழகான இலங்கை அலங்கோலமாகிக் கிடக்கிறது. இலங்கை மண்ணை ரசிக்க வந்தவர்களும் புதையுண்டு போனார்கள்...


அருந்தப்பு தப்பினேன் ராதிகா


''அடக் கட­வுளே இலங்­கையில் குண்­டு­வெ­டிப்­புகள். எல்­லோ­ருக்கும் கடவுள் துணை நிற்­கட்டும். இப்­போ­துதான் கொழும்பில் சினமன் கிராண்ட் ஹோட்­ட­லி­லி­ருந்து வெளி­யே­றினேன். அங்கு குண்­டு­வெ­டிப்பு நடந்­துள்­ளது. என்னால் இதை நம்ப முடி­ய­வில்லை. அதிர்ச்­சி­யாக உள்­ளது" என்று பகிர்ந்­தி­ருந்தார் தென்­னிந்­தியத் திரைப்­பட நடிகை ராதிகா சரத்­குமார்.


அந்த ஹோட்டலில்தான் காலை உணவருந்தினேன்


இலங்­கையில் நடந்த தற்­கொலை குண்டுத் தாக்­கு­தலில் இந்­திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அணில் கும்ப்ளே உயிர் தப்­பி­யுள்ளார்.

விடு­மு­றையைக் கழிப்­ப­தற்­காக கும்ப்ளே இலங்கை வந்­துள்ளார். கொழும்பில் குண்டுத் தாக்­குதல் நடத்­தப்­பட்ட ஹோட்டல் ஒன்­றி­லேயே அவர் தங்­கி­யி­ருந்­துள்ளார். தான் உட்­பட குழு­வினர் குண்­டு வெ­டிப்பு நடந்த ஹோட்­ட­லி­லேயே உண­வ­ருந்­தி­ய­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். இது தொடர்பில் கும்ப்ளே டுவிட்டர் செய்­தி­யொன்றைப் பதி­விட்­டுள்ளார். அதில் “அழ­கான இலங்­கைக்கும் அதன் மக்­க­ளுக்கும் பிரார்த்­தனை” செய்து கொள்வதாக அவர்  குறிபிட்டுள்ளார்.

*"வாழும் போதே 'நரகமாகும்' வெனிசுலா"*

*"வாழும் போதே 'நரகமாகும்' வெனிசுலா"*வாழ்வாதாரம் வீழ்ச்சியடைந்தால், வாழும் போதே நரகம் உறுதி.

இது ஒரு தனிநபருக்கோ, குடும்பத்துக்கோ, 
ஒரு ஊருக்கோ அல்ல, 

ஒரு நாட்டுக்கே நடந்திருக்கிறது. 

அதுவும் இன்றைய உலகப் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் எண்ணெய் வளம் அதிகமாக உள்ள நாட்டுக்கே நடந்திருக்கிறது. 

ஒருகாலத்தில் லத்தீன்- அமெரிக்க நாடுகளிலேயே பணம் கொழிக்கும் மிக செழிப்பான நாடாக *வெனிசுலா* இருந்தது. 

இன்று,.. 
வெனிசுலா வாழத் தகுதியில்லாத நாடாக மாறிவிட்டது. 

நாட்டிலிருந்து கிட்டதட்ட 50 லட்சத்துக்கும் மேலானோர் வெளியேறிவிட்டனர். 

இவையனைத்தும் வெனிசுலா அரசின் மிகத் தவறான நிர்வாகத்தினாலும், 
போட்டி நாடுகளின் சூழ்ச்சியினாலும் நடந்தது. 

வெனிசுலாவின் இன்றைய நிலை, உலக நாடுகளின் எதிர்கால பற்றிய 'நிகழ்கால உதாரணம்.' 

அதிக எண்ணெய் வளம் மிக்க நாடு. 

ஆனால், 
இன்று நாட்டில் 90 சதவீத மக்கள் உணவு கூட கிடைக்காத நிலையில் வறுமையில் இருக்கிறார்கள். 

எப்படி இந்த நிலைக்கு வெனிசுலா ஆளானது?

2010-ல் ஆரம்பித்தது வெனிசுலாவின் இருண்ட காலம். 

அப்போது அதிபராக இருந்த ஹியாகோ சாவேஸ் வெனிசுலா மக்களுக்காக சில முடிவுகளை எடுத்தார். 

அதாவது, 
அனைத்தையும் 
'அரசு மயமாக்குவது.'

எண்ணெய் வளத்தைப் பெரிதும் நம்பியிருந்தது வெனிசுலா பொருளாதாரம். 

எண்ணெய் மூலம் கிடைத்த வருமானத்தை வைத்து மக்களுக்கான கல்வி மற்றும் அடிப்படை வசதிகளை அரசே வழங்கும்படியான கொள்கை அது.

ஆரம்பத்தில் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட 'இந்த கொள்கை அவர்களுக்குப் பாதகமாகும்' என்று அவர்கள் சற்றும் நினைக்கவே இல்லை.

உற்பத்தி நிறுவனங்களை எல்லாம் கையகப்படுத்தி...

ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள் வசம் ஒப்படைத்தார் அதிபர். 

உணவு உற்பத்தியை இராணுவத்திடம் கொடுத்தார். 

அவர் போட்ட கணக்கு ஒன்று, நடந்தது ஒன்று. 

ஆட்சி அதிகாரத்தின் எல்லா நிலைகளிலும் ஊழல் தான் அதிகரித்தது. 

அரசு அதிகாரிகள், 
அனைத்து துறைகளையும் சுரண்டி சொந்த வீட்டில் அடுக்கினர். 

எந்தத் துறையையும் அதிகாரிகள் வளர்க்க முற்படவில்லை.

இதனால் நாட்டின் அனைத்து உற்பத்தி துறைகளும் முற்றிலுமாக பாதித்தது. 

பெரும் பற்றாக்குறை உருவானது. 

*உணவுப் பொருள்களுக்கான தட்டுப்பாடு ருத்ர தாண்டவமாடியது.*

அத்துடன் அயல்நாட்டு நிறுவனங்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் தொழில் தொடங்க அனுமதி மறுக்கப்பட்டது. 

இதனால் அந்நியச் செலாவணி பெருமளவில் பாதிக்கப்பட்டது.

2010-ல் ஆரம்பித்த இந்தப் போக்கு 2014-ல் மிகக் கடுமையான திருப்பத்தைச் சந்தித்தது. 

எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பியிருந்த வெனிசுலா இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. 

பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை 100 டாலரிலிருந்து 50 டாலராக பாதியாகக் குறைந்தது. 

வெனிசுலாவின் 96 சதவீத வருமானம் எண்ணெய் ஏற்றுமதியில்தான் கிடைத்து வந்தது.

எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்தவுடன், மாற்று பொருளாதாரமாக எந்தத் துறையும் இல்லாததால் நாட்டின் பணவீக்கத்தையும், விலைவாசியையும் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. 

வெனிசுலாவின் பொருளாதாரமே சுக்குநூறானது. 

விவசாய உற்பத்தி முற்றிலும் முடங்கிப் போனது. 

இதனால், 
இப்போது எங்கும் பஞ்சம், பட்டினி தலைவிரித்தாடுகிறது. 

விமான சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டன.

*அனைத்தும் முடங்கின.*

*உணவு பொருள் உற்பத்தியியில்லாமல்...*

*ஒரு முட்டைக்கு...*
*ஒரு மூட்டை பணம்.*

'அதை கொடுத்தாலும் கிடைக்குமா?' 
என்பது சந்தேகமே... 

ஒவ்வொரு நாளும் விலை அதிகரித்துக்கொண்டே இருப்பதால், விலை நிர்ணய முறையை வர்த்தகர்கள் நீக்கிவிட்டார்கள். 

அவர்கள் சொல்வதுதான் விலை. 

உணவு, தண்ணீர் உட்பட அனைத்து பொருள்களும் மிகப்பெரும் பற்றாக்குறையில் இருக்கிறது.

காரணம் பணவீக்கம். 

2014-ல் 69 சதவீதமாக இருந்த பணவீக்கம் 2016-ல் பொருளாதார நெருக்கடி மிகவும் அதிகரித்ததால், 800 சதவீதமாக உயர்ந்தது. 

இதற்கே அதிர்ச்சியா? 

இரண்டே வருடங்கள்... 

2018-ல் வெனிசுலாவின் பணவீக்கம் 16,98,488 சதவீதமாக உயர்ந்தது. 

வெனிசுலாவின் நாணயமான *பொலிவரியன் இன்று டாலருக்கு நிகரான மதிப்பு மில்லியனில் இருக்கிறது.*

வெனிசுலாவின் கடன் 105 பில்லியன் டாலர். அதன் கையில் இருப்பது வெறும் 10 பில்லியன் டாலர்.

இன்று, 
மாட மாளிகைகளில் வாழ்ந்தவர்கள் நிலையோ ரொம்ப மோசம்... 

பணம் மூட்டை மூட்டையாக குப்பை கிடங்கில் தீ வைத்து எரிக்கப்படுகிறது. 

வெனிசுலாவின் அரசியல்வாதிகள், உயர் பதவியில் இருந்த அதிகாரிகள் என எல்லா நிலை மக்களையும் இந்தப் பொருளாதார நெருக்கடி பாதித்து வருகிறது. 

இதனால், இங்கு உணவுக்காக கொலை நடப்பதில் முதலிடம். 

2017-ல் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில், உணவுப் பற்றாக்குறையால் சராசரியாக 75 சதவீதம் பேர் 8 கிலோ எடை குறைந்துள்ளனர். 

இன்று, 90 சதவீதம் பேர் *வாழ்வாதார* வறுமையில் வாழ்கிறார்கள். 

தினசரி உணவுக்காகப் பிச்சையெடுக்கும் நிலையில் நாட்டின் பாதி சதவீதத்தினர் இருக்கிறார்கள். 

நாட்டிலிருந்து லட்சக்கணக்கானோர் வெளியேறியிருக்கிறார்கள். 

வெளியேற நினைப்பவர்கள் பாஸ்போர்ட் கூட எடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

வெனிசுலாவில் நடிகைகள் மட்டுமல்ல ஆசிரியர், வழக்கறிஞர் என மிக மரியாதையாக வாழ்ந்து வந்த பெண்கள் கூட பாலியல் தொழிலாளிகளாகப் பல்வேறு நாட்டில் தஞ்சமடையும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். 

மேலும், வீட்டுப் பெண்களின் நிலையைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. 

திருடர்களும், தீவிரவாதிகளும் அதிகரித்து வருகின்றனர். 

பணம் பத்தும் தான் செய்யும்... 

ஆனால், 
*பஞ்சமும், பசியும் "எதையும்" செய்யும்.*

பணத்திமிரையும், பசியையும் ஒரே தராசில் வைத்துப் பார்த்தால்...

*'பசியின் முன் பணத்திமிர் மண்டியிட்டு விடும்'* என்பது வெனிசுலாவில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் சாட்சி. 

இன்றைய நிலையில், வெனிசுலாவை மீட்பது என்பது, கிட்டதட்ட மணலைக் கயிறாகத் திரிக்கும் சவால்தான். 

தினந்தினம் மக்கள் பலியாவது மட்டும்தான் நடந்து கொண்டிருக்கிறது. 

இந்த நிலையில், இப்போது வெனிசுலாவுக்கு உதவ எந்த நாடோ அமைப்போ தயாராக இல்லை. 

உலக நாடுகளுக்கு வெனிசுலாவின் இன்றைய நிலை 'ஒரு பாடம்.'

ஏனெனில்... 

*விவசாயத்தை மதிக்காத* எந்த நாட்டுக்கும் ஏற்படக்கூடியது தான் வெனிசுலாவின் இந்த நிலை. 

இன்றைய பணமய பொருளாதாரத்தில்... 
போட்டி நாடுகள் எந்த சூழ்ச்சியையும் செய்யலாம். 

நம்முடைய 'திறமையான ஆட்சியாளர்கள்...'

தாங்கள் செய்யும் செயலும், தாங்கள் எடுக்கும் முடிவும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அறிந்து செயல்பட்டால் மட்டுமே இதுபோன்ற ஒரு நிலை உருவாகாமல் தடுக்கலாம். 

*'இன்றைய ஆதாயத்தை மட்டுமே கணக்கில் வைத்து'* எதைத் திட்டமிட்டாலும் அந்த நாடு நாசமாகும் நிலைதான் ஏற்படும். 

*'நீண்டகால அடிப்படையிலான வளர்ச்சித் திட்டங்கள்'* தான் மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும்.

அதேசமயம் ஒவ்வொரு தனிநபருக்கும் தங்களின் 'பொருளாதாரம் என்பதை விட...

*வாழ்வாதாரம்*' குறித்து தெளிவு வேண்டும். 

இந்தியாவில் தற்போது 'நுகர்வு' என்பது அளவுக்கு மீறிப் போய்க்கொண்டிருக்கிறது. 

நாலைந்து செல்போன் வைத்திருக்கிறோம். 

வீடு முழுக்க ஆடைகளால் நிறைந்திருக்கின்றன. 

நிறுத்த இடமில்லை என்றாலும் நாலைந்து கார்களை வாங்குகிறோம். 

இதனால் வேகமான வளரும் பொருளாதாரமாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறோம். 

ஆனால், நீடித்து வாழ வேண்டுமென்ற ஆசையிருப்பவர்கள், 
*'வாழ்வாதாரத்தை'* தான் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வெனிசுலா, 
'அரசு மயமாக்கலை' முன்னெடுத்தது... 
வீழ்ச்சியடைந்தது. 

இதே போன்று, 
தனியார் மய கொள்கையிலும் சில பாதிப்புகள் உண்டு. 

ஆகவே, 
ஆளும் அரசு... 
மக்களின் வாழ்வாதாரத்தை மட்டுமே கருத்தில் கொண்டு... 

நன்றாக அலசி ஆராய்ந்து... 

துணிந்து...
நல்ல முடிவுகள் எடுக்க வேண்டும். 

அப்போது தான் நாடும், 
நாமும் நலமுடன் வாழ முடியும். 

நம்மிடம் எவ்வளவு பணம் இருந்தாலும்...

விவசாயி, *விவசாயம் செய்தால் தான் சோறு.* 
என்பதை மறந்து விடக்கூடாது. 

வெனிசுலா நிலை நாளை நமக்கும் வரலாம்..!

காரணம்...

கிராமங்களில் 

நூறு நாள் வேலைத் திட்டம்.

இது நல்ல திட்டம் போல தான் தோன்றும். 

ஆனால்,
நிஜத்தில் நடப்பது...

அங்கு, ஒப்புக்கு தான் வேலை.

'ஓய்வு எடுக்கும்' வேலை தான் அங்கு பிரதானமாக  நடக்கிறது...

சிலர், ஏழைகளின் உடல் நலனை காக்க...! 
'பீடி சுற்றுவார்கள்.'

இதனால், பாதிப்பு...

நமது நாட்டில் விவசாயம் செய்பவர்களுக்கு தான். 

விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல்...

விவசாய பணிகள் தான் முடக்கி போகிறது.

இதனால், விவசாயம் செய்ய முடியாத நிலை.

மீறி...
'அதிக சம்பளம் கொடுத்து, குறைவாக வேலை செய்பவர்களை' வைத்து விவசாயம் செய்தாலும்...

விவசாயத்தில் நஷ்டம்.

இதனால் பல விவசாயிகள் விவசாயத்தை படிப்படியாக விட்டு வருகிறார்கள். 

இந்த நிலை... 

இது நமது மக்கள் அனைவருக்கும் அடிக்கபடும் *எச்சரிக்கை மணி!*

வளங்கள் உள்ளவரை மட்டுமே நம்மால் பணத்தைப் புரட்ட முடியும். 

பணத்தையெல்லாம் சேர்த்த பிறகு இறுதியில் வளங்கள் இல்லாத நிலை வரும்போது... 

அந்தப் *பணத்துக்கு எந்த மதிப்பும் இருக்காது.*

'ஒரு பொருளுக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்' என்பதை வைத்தே அந்தப் பணத்தின் மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது. 

வாங்குவதற்கு பொருளே இல்லை, 

'பணம் மட்டும் கட்டுக் கட்டாய் இருக்கிறது' என்றால் அந்தப் பணத்துக்கு எந்த மதிப்பும் இல்லை. 

அப்போது, 
நாமும் மூட்டைகளில் பணத்தைக் கொண்டு போய் கொடுத்து... 
முட்டை தான் வாங்கி வரலாம்.

விவசாயத்தை கைவிட்ட எந்த நாடும் வாழாது.

வளராது....!

ஆகவே,
*விவசாயம் காப்போம்...*

அதற்கான *வழிவகை செய்வோம்...*🙏🏻

*"10 லட்சம் கொடுத்தால் ஒரு பர்கர் வாங்கலாம்.."*

வெனிசூலாவை ஆட்டிப்படைக்கும் பண வீக்கம்.. மக்கள் அவதி!👇🏻

Tuesday 2 April 2019

தமிழ் அரசியலில் நடப்பது என்ன?

ஏமாற்றாதே ஏமாறாதே... என்பது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த அடிமைப் பெண் என்ற சினிமாப் படத்தில் வரும் பாடல் வரிகளாகும்.
 
நம்ப நட, நம்பி நடவாதே என்ற பழமொழியைப் புதுப்பித்து கவிஞர் வாலி கொடுத்த புதுவடிவமே மேற்போந்த பாடலாகும்.
 
ஏமாற்றுதல் மிக மோசமான கொடுஞ்செயல். அதிலும் நம்ப வைத்து ஏமாற்றுதல் என்பது நம்பிக்கைத் துரோகம் என்பதன் பாற்பட்டதாகும்.
 
நம்பிக்கைத் துரோகம் செய்பவர்கள் ஏழு பிறப்புக்கும் தங்கள் பாவத்தை கழுவாய் செய்ய மாட்டார்கள் என்று சமயதத்துவங்கள் கூறிநின்றாலும் இன்னமும் நம்பவைத்து ஏமாற்றுகின்ற நாடகங்கள் மனித சமூகத்தில் நடக்கவே செய்கிறது.
 
அதிலும் ஏமாற்றுகின்ற வடிவங்கள் வேறுபட்டவையாக இருப்பதுதான் விசித்திரம். 

இப் போதெல்லாம் ஏமாற்றுகின்றவர்கள் தொலைபேசி, மின்னஞ்சல் உள்ளிட்ட தகவல் தொடர்பாடல் முறைகளினூடு ஏமாற்றுகின்றனர்.
 
உங்களுக்கு ஐந்து இலட்சம் ரூபாய் பணம் அதிர்ஷ்டத்தின் மூலம் கிடைத்திருக்கிறது. அதைப் பெற்றுக் கொள்வதற்கு முன்னதாக ஐம்பதாயிரம் ரூபாயை எமக்கு அனுப்பி வையுங்கள் என்றவாறான ஏமாற்றுத்தனங்களுக்குக் குறைவே இல்லை.
 
என்ன செய்வது ஏமாறுபவர்கள் நம் மத்தியில் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் நம்மோடு இருக்கவே செய்வர்.
 
இது ஒரு கதை. ஒரு நாட்டு மன்னனை ஒருவன் சந்தித்தான். மன்னா நான் அயல் நாட்டில் வசிக்கும் நெசவாளி. மிகத்தரமான ஆடைகளை நெய்யும் திறன் என்னிடம் இருக்கிறது. நீங்கள் அனுமதித்தால், உங்களுக்கு மிகவுயர்ந்த தரத்தில் ஆடை நெய்து தருவேன் என்றான்.
 
நெசவாளியை நம்பிய மன்னன் ஆடை தயாரிப்புக்காகப்  பெருந்தொகைப் பணத்தைக் கொடுத்தான்.
 
சில மாதங்கள் ஆகிய பின்பு மீண்டும் அந்த நெசவாளி மன்னனிடம் வருகிறான். வரும் போது கையில் எதையோ ஏந்தி வைத்திருப்பது போன்ற பாவனையில் கையை வைத்திருந்தான்.
 
மன்னா உங்களுக்கான ஆடை தயாராகி விட்டது. இதில் நவரத்தினங்கள் பதிக்கப்பட் டுள்ளன. ஆனால் ஒரு முக்கிய விடயம் உண்டு.
 
இந்த ஆடையானது அறிவாளிகளுக்கும் நல்லவர்களுக்கும் மட்டுமே தெரியும் என்றான்.

நெசவாளி கூறிய அந்த விடயத்தை மன் னர் சபையில் இருந்த மந்திரி பிரதானிகளும் செவிமடுத்தனர்.
 
என் கையில் வைத்திருக்கும் இந்த மிக உயர்ந்த பெறுமதியான ஆடை எப்படியிருக்கிறது மன்னா என்று கேட்டான் நெசவாளி.
 
மன்னனுக்கு ஆடை தெரியவே இல்லை. இருந்தும் நல்லவர்களுக்கும் அறிவாளிகளுக்கும் மட்டுமே அந்த ஆடை தெரியும் என்று ஏலவே நெசவாளி கூறியதால், ஆடை பிர மாதம் என்றான் மன்னன்.
 
மன்னனைப் போலவே அமைச்சர்களுக்கும் அந்த ஆடை கண்ணுக்குத் தெரியவில்லை யானினும் அவர்களும் மிகச் சிறந்த ஆடை எனக் கூறினர்.
 
இப்போது மன்னனுக்கு ஆடை அணிவிக் கப்படுகிறது. அந்தோ! ஆடையின்றி மன்னன் நிர்வாணமாகக் காட்சி தருகிறான்.
 
அனைவருக்கும் மன்னன் நிர்வாணமாக நிற்பது தெரிகிறது. இருந்தும் ஆடை தெரியா விட்டால், அறிவற்றவர் என்றும் நல்லவர் அல்ல என்றும் ஆகி விடும் என்பதால் எல்லோரும் ஆடை பிரமாதம் என்று கூறினர்.
 
மன்னனை வீதி உலா கொண்டு செல்கின்றனர்.  அந்த வீதியில் ஆடு மேய்த்துக் கொண்டு நின்ற சிறுவன் ஒருவன் மன்னனைப் பார்த்து விட்டு, இங்கே பாருங்கள் மன்னர் நிர்வாணமாகப் போகிறார் என்றான். 
 
அப்போதுதான் நிலைமை புரிந்தது. இதுதான் எங்கள் தமிழ் அரசியலில் இப்போது நடக்கிறது.