Wednesday 24 April 2019

இலங்­கையின் அழகை ரசிக்க வந்து உயிரிழந்த ஒவ்­வொரு வெளி­நாட்­ட­வ­ருக்குப் பின்னும் ஒவ்­வொரு கதை நீள்­கி­றது...!

அழ­கான இலங்­கையின் கடலை ரசித்­த­படி தங்கள் நாளை சந்­தோ­ச­மா­கத்தான் ஆரம்­பித்­தி­ருப்­பார்கள். யாருக்கும் எதுவும் தெரிந்­தி­ருக்க வாய்ப்­பில்லை இதுதான் நமது கடைசிக் காலை என்று.



ஆம்! இலங்­கையின் அழகை ரசிக்க வந்த வெளிநாட்­ட­வர்கள் அலங்­கோ­ல­மா­கிப்போய் திரும்பிப் போகி­றார்கள். அதில் இலங்­கையைச் சுற்றிப் பார்க்க வந்­த­வர்கள் வெள்ளைத் துணியில் சுற்றிப் போகி­றார் கள்.

கடந்த ஞாயி­றன்று இலங்­கையில் நிகழ்ந்த தொடர் வெடிகுண்டுத் தாக்­கு­தலில் மொத்தம் 35 வெளிநாட்­ட­வர்கள் பலி­யா­னார்கள். அந்த ஒவ்­வொரு வெளி­நாட்­ட­வ­ருக்குப் பின்­னாலும் ஒவ்­வொரு கதை நீள்­கி­றது...

இந்­தி­யாவின் மக்­க­ளவைத் தேர்தல் பிர­சாரம் முடிந்து இலங்­கைக்கு ஓய்­வெ­டுக்க வந்த கர்­நா­ட­காவைச் சேர்ந்த மதச்­சார்­பற்ற ஜனதா கட்­சியின் 7 பேர், டென்மார்க் நாட்டின் பெரும் பணக்­கா­ரரின் இரு புதல்விகள், இலங்­கைக்கு உதவி புரிய வந்த ஒரு குடும்­பத்தின் தலைவி என்று ஒரு பெரும் சோகக் கதையே நீள்­கி­றது.

டென்மார்க் நாட்டின் பிர­பல தொழி­ல­திபர் அன்ட்­ரஸன் ஹாவல்க் பாவ்ல்ஸ்ன். உயிர்த்த ஞாயிறு பண்­டி­கையை முன்­னிட்டு இலங்­கைக்கு குடும்­பத்­துடன் சுற்­றுலா வந்­தி­ருந்தார். 
போர்ப்ஸ் பட்­டி­ய­லின்­படி, டென்மார்க் நாட்டின் முதல் பணக்­காரர் இவர். 

பல்­வேறு தொழில் நிறு­வ­னங்கள் இவ­ருக்கு உள்­ளன. இவரின், சொத்து மதிப்பு 5.9 பில்­லியன் அமெ­ரிக்க டொலராகும். 
இலங்­கையில் நடந்த குண்­டு­ வெ­டிப் பில் அன்ட்­ர­ஸனின் நான்கு குழந்­தை­களில் மூன்று குழந்­தைகள் பலி­யா­கி­யுள்­ளன. 

குழந்­தை­களைப் பலி கொடுத்த அன்ட்­ர­ஸ­னுக்கு ஸ்கொட்­லாந்து நாட்டின் ஒரு சத­வீத நிலம் சொந்­த­மா­னது. இந்த நாட்டில் அன்ட்­ர­ஸ­னுக்கும் இவரின் மனைவி ஆன்னே ஸ்டார்ம் பென்­ட­சர்­ஸ­னுக்கும் சொந்­த­மாக 200,000  ஏக்கர் நிலம் உள்­ளது. பிரித்தானியாவில் அதி­க­ளவில் நிலம் சொந்­த­மாக வைத்­தி­ருப்­ப­வர்­களில் இவ­ருக்கு இரண்­டா­வது இடம். 12 பெரிய தோட்­டங்­களும் உள்­ளன. 

பெண்கள் உடை­யான வேரோ மோடா, ஜேக் அண்ட் ஜோன்ஸ் ஜீன்ஸ் போன்­றவை அன்­டர்­ஸ­னுக்குச் சொந்­த­மான `பெஸ்ட் செல்லர்' நிறு­வ­னத்தின் தயா­ரிப்­புதான். 

"இலங்கை ஓர் அழ­கான நாடு. இந்த உயிர்த்த ஞாயிறு விடு­மு­றையை அங்கு கழிக்­கலாம்" என்று தன் குழந்­தை­க­ளிடம் கூறி கொழும்­புக்கு அன்ட்­ரஸன் சுற்­றுலா அழைத்து வந்­துள்ளார். வந்த இடத்தில் குழந்­தை­களைப் பறி­கொ­டுத்­து­ விட்டு கண்ணீர் மல்க நிற்­கிறார். 

அன்ட்­ர­ஸ­னுக்கு ஆறுதல் சொல்ல எம்­மிடம் வார்த்­தை கள் இல்லை!
இந்­தி­யாவில் தற்­போது நடை­பெற்­று­வரும் மக்­க­ளவைத் தேர்­தலில் கடு­மை­யான பிர­சா­ரத்தை முடித்­துக்­கொண்டு இலங்­கைக்கு ஓய்­வெ­டுக்க கர்­நா­ட­காவின் ஜனதா தளம் கட்­சியைச் சேர்ந்த 7 பேர் இங்கு வந்­துள்­ளனர்.

இங்கு வந்­த­வர்­களைக் காண­வில்லை என்று உற­வி­னர்கள் இலங்­கைக்கு படை­யெ­டுத்து வரு­கின்­றனர். 

இதில் பெங்­க­ளூ­ருவைச் சேர்ந்த ஹனுமந்த் ராயப்பா, ரங்­கப்பா, புரு­ஷோத்தம், நாக­ராஜ ரெட்டி மற்றும் சிக்­க பள்­ளாப்­பூரைச் சேர்ந்த சுப்­ர­மண்யா, கேச­வராஜ், சிவ­குமார் ஆகிய 8 நிர்­வா­கிகள் கொழும்பிலுள்ள ஷங்­கிரிலா நட்­சத்­திர ஹோட்­டலில் தங்­கி­யி­ருந்­தனர். 

இந்த ஹோட்­டலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 15 பேர் உயி­ரி­ழந்­தனர்.

இந்தக் குண்­டு­வெ­டிப்பில் சிக்­கி­யோரில் 10 இற்கும் மேற்­பட்டோர் இந்­தி­யர்கள் என தகவல் வெளி­யா­கி­யுள்­ளன.

இந்நிலையில் இந்­திய வெளி­யு­ற­வுத்­துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ம.ஜ.த.வைச் சேர்ந்த ஹனுமந்த் ராயப்பா, ரங்­கப்பா ஆகிய இரு­வரும் குண்­டு வெ­டிப்பில் பலி­யாகி விட்­டனர் என கர்­நா­டக முத­ல­மைச்சர் குமா­ர­சா­மிக்கு தகவல் கொடுத்­துள்ளார். இத­னி­டையே ம.ஜ.த. கட்­சியின் உறுப்­பினர் விஸ்­வ­நாத்தின் மரு­ம­கனும், யல­ஹங்கா பகுதி ம.ஜ.த. செய­லா­ள­ரு­மான புரு­ஷோத்தும் மருத்­துவ­ம­னையில் சிகிச்சை பல­னின்றி நேற்று உயிரி­ழந்­துள்ளார். 



இரத்தம் தோய்ந்த ஆடையுடன் குடும்­பத்தைத் தேடி...

இங்­கி­லாந்து நாட்டின் அழ­கிய குடும்பம் ஒன்று கணவன், மனை­வி­ மற்றும் இரண்டு பிள்­ளைகள் இந்தக் குண்­டு­வெடிப்பில் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மனைவி, பிள்ளைகளை இழந்த ஒரு குடும்பத் தலைவனின் தவிப்பு, போராட்டம், சோகம் என்று அனைத்தும் கலந்த ஒரு மனநிலையை என்ன எழுதியும் மாளாது.

இறுதியில் இவர் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளையும் இழந்து அநாதரவாகத்தான் தற்போது சுற்றித் திரிகிறார்.
அழகான இலங்கை அலங்கோலமாகிக் கிடக்கிறது. இலங்கை மண்ணை ரசிக்க வந்தவர்களும் புதையுண்டு போனார்கள்...


அருந்தப்பு தப்பினேன் ராதிகா


''அடக் கட­வுளே இலங்­கையில் குண்­டு­வெ­டிப்­புகள். எல்­லோ­ருக்கும் கடவுள் துணை நிற்­கட்டும். இப்­போ­துதான் கொழும்பில் சினமன் கிராண்ட் ஹோட்­ட­லி­லி­ருந்து வெளி­யே­றினேன். அங்கு குண்­டு­வெ­டிப்பு நடந்­துள்­ளது. என்னால் இதை நம்ப முடி­ய­வில்லை. அதிர்ச்­சி­யாக உள்­ளது" என்று பகிர்ந்­தி­ருந்தார் தென்­னிந்­தியத் திரைப்­பட நடிகை ராதிகா சரத்­குமார்.


அந்த ஹோட்டலில்தான் காலை உணவருந்தினேன்


இலங்­கையில் நடந்த தற்­கொலை குண்டுத் தாக்­கு­தலில் இந்­திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அணில் கும்ப்ளே உயிர் தப்­பி­யுள்ளார்.

விடு­மு­றையைக் கழிப்­ப­தற்­காக கும்ப்ளே இலங்கை வந்­துள்ளார். கொழும்பில் குண்டுத் தாக்­குதல் நடத்­தப்­பட்ட ஹோட்டல் ஒன்­றி­லேயே அவர் தங்­கி­யி­ருந்­துள்ளார். தான் உட்­பட குழு­வினர் குண்­டு வெ­டிப்பு நடந்த ஹோட்­ட­லி­லேயே உண­வ­ருந்­தி­ய­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். இது தொடர்பில் கும்ப்ளே டுவிட்டர் செய்­தி­யொன்றைப் பதி­விட்­டுள்ளார். அதில் “அழ­கான இலங்­கைக்கும் அதன் மக்­க­ளுக்கும் பிரார்த்­தனை” செய்து கொள்வதாக அவர்  குறிபிட்டுள்ளார்.

No comments:

Post a Comment