Wednesday 24 April 2019

*"வாழும் போதே 'நரகமாகும்' வெனிசுலா"*

*"வாழும் போதே 'நரகமாகும்' வெனிசுலா"*



வாழ்வாதாரம் வீழ்ச்சியடைந்தால், வாழும் போதே நரகம் உறுதி.

இது ஒரு தனிநபருக்கோ, குடும்பத்துக்கோ, 
ஒரு ஊருக்கோ அல்ல, 

ஒரு நாட்டுக்கே நடந்திருக்கிறது. 

அதுவும் இன்றைய உலகப் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் எண்ணெய் வளம் அதிகமாக உள்ள நாட்டுக்கே நடந்திருக்கிறது. 

ஒருகாலத்தில் லத்தீன்- அமெரிக்க நாடுகளிலேயே பணம் கொழிக்கும் மிக செழிப்பான நாடாக *வெனிசுலா* இருந்தது. 

இன்று,.. 
வெனிசுலா வாழத் தகுதியில்லாத நாடாக மாறிவிட்டது. 

நாட்டிலிருந்து கிட்டதட்ட 50 லட்சத்துக்கும் மேலானோர் வெளியேறிவிட்டனர். 

இவையனைத்தும் வெனிசுலா அரசின் மிகத் தவறான நிர்வாகத்தினாலும், 
போட்டி நாடுகளின் சூழ்ச்சியினாலும் நடந்தது. 

வெனிசுலாவின் இன்றைய நிலை, உலக நாடுகளின் எதிர்கால பற்றிய 'நிகழ்கால உதாரணம்.' 

அதிக எண்ணெய் வளம் மிக்க நாடு. 

ஆனால், 
இன்று நாட்டில் 90 சதவீத மக்கள் உணவு கூட கிடைக்காத நிலையில் வறுமையில் இருக்கிறார்கள். 

எப்படி இந்த நிலைக்கு வெனிசுலா ஆளானது?

2010-ல் ஆரம்பித்தது வெனிசுலாவின் இருண்ட காலம். 

அப்போது அதிபராக இருந்த ஹியாகோ சாவேஸ் வெனிசுலா மக்களுக்காக சில முடிவுகளை எடுத்தார். 

அதாவது, 
அனைத்தையும் 
'அரசு மயமாக்குவது.'

எண்ணெய் வளத்தைப் பெரிதும் நம்பியிருந்தது வெனிசுலா பொருளாதாரம். 

எண்ணெய் மூலம் கிடைத்த வருமானத்தை வைத்து மக்களுக்கான கல்வி மற்றும் அடிப்படை வசதிகளை அரசே வழங்கும்படியான கொள்கை அது.

ஆரம்பத்தில் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட 'இந்த கொள்கை அவர்களுக்குப் பாதகமாகும்' என்று அவர்கள் சற்றும் நினைக்கவே இல்லை.

உற்பத்தி நிறுவனங்களை எல்லாம் கையகப்படுத்தி...

ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள் வசம் ஒப்படைத்தார் அதிபர். 

உணவு உற்பத்தியை இராணுவத்திடம் கொடுத்தார். 

அவர் போட்ட கணக்கு ஒன்று, நடந்தது ஒன்று. 

ஆட்சி அதிகாரத்தின் எல்லா நிலைகளிலும் ஊழல் தான் அதிகரித்தது. 

அரசு அதிகாரிகள், 
அனைத்து துறைகளையும் சுரண்டி சொந்த வீட்டில் அடுக்கினர். 

எந்தத் துறையையும் அதிகாரிகள் வளர்க்க முற்படவில்லை.

இதனால் நாட்டின் அனைத்து உற்பத்தி துறைகளும் முற்றிலுமாக பாதித்தது. 

பெரும் பற்றாக்குறை உருவானது. 

*உணவுப் பொருள்களுக்கான தட்டுப்பாடு ருத்ர தாண்டவமாடியது.*

அத்துடன் அயல்நாட்டு நிறுவனங்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் தொழில் தொடங்க அனுமதி மறுக்கப்பட்டது. 

இதனால் அந்நியச் செலாவணி பெருமளவில் பாதிக்கப்பட்டது.

2010-ல் ஆரம்பித்த இந்தப் போக்கு 2014-ல் மிகக் கடுமையான திருப்பத்தைச் சந்தித்தது. 

எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பியிருந்த வெனிசுலா இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. 

பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை 100 டாலரிலிருந்து 50 டாலராக பாதியாகக் குறைந்தது. 

வெனிசுலாவின் 96 சதவீத வருமானம் எண்ணெய் ஏற்றுமதியில்தான் கிடைத்து வந்தது.

எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்தவுடன், மாற்று பொருளாதாரமாக எந்தத் துறையும் இல்லாததால் நாட்டின் பணவீக்கத்தையும், விலைவாசியையும் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. 

வெனிசுலாவின் பொருளாதாரமே சுக்குநூறானது. 

விவசாய உற்பத்தி முற்றிலும் முடங்கிப் போனது. 

இதனால், 
இப்போது எங்கும் பஞ்சம், பட்டினி தலைவிரித்தாடுகிறது. 

விமான சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டன.

*அனைத்தும் முடங்கின.*

*உணவு பொருள் உற்பத்தியியில்லாமல்...*

*ஒரு முட்டைக்கு...*
*ஒரு மூட்டை பணம்.*

'அதை கொடுத்தாலும் கிடைக்குமா?' 
என்பது சந்தேகமே... 

ஒவ்வொரு நாளும் விலை அதிகரித்துக்கொண்டே இருப்பதால், விலை நிர்ணய முறையை வர்த்தகர்கள் நீக்கிவிட்டார்கள். 

அவர்கள் சொல்வதுதான் விலை. 

உணவு, தண்ணீர் உட்பட அனைத்து பொருள்களும் மிகப்பெரும் பற்றாக்குறையில் இருக்கிறது.

காரணம் பணவீக்கம். 

2014-ல் 69 சதவீதமாக இருந்த பணவீக்கம் 2016-ல் பொருளாதார நெருக்கடி மிகவும் அதிகரித்ததால், 800 சதவீதமாக உயர்ந்தது. 

இதற்கே அதிர்ச்சியா? 

இரண்டே வருடங்கள்... 

2018-ல் வெனிசுலாவின் பணவீக்கம் 16,98,488 சதவீதமாக உயர்ந்தது. 

வெனிசுலாவின் நாணயமான *பொலிவரியன் இன்று டாலருக்கு நிகரான மதிப்பு மில்லியனில் இருக்கிறது.*

வெனிசுலாவின் கடன் 105 பில்லியன் டாலர். அதன் கையில் இருப்பது வெறும் 10 பில்லியன் டாலர்.

இன்று, 
மாட மாளிகைகளில் வாழ்ந்தவர்கள் நிலையோ ரொம்ப மோசம்... 

பணம் மூட்டை மூட்டையாக குப்பை கிடங்கில் தீ வைத்து எரிக்கப்படுகிறது. 

வெனிசுலாவின் அரசியல்வாதிகள், உயர் பதவியில் இருந்த அதிகாரிகள் என எல்லா நிலை மக்களையும் இந்தப் பொருளாதார நெருக்கடி பாதித்து வருகிறது. 

இதனால், இங்கு உணவுக்காக கொலை நடப்பதில் முதலிடம். 

2017-ல் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில், உணவுப் பற்றாக்குறையால் சராசரியாக 75 சதவீதம் பேர் 8 கிலோ எடை குறைந்துள்ளனர். 

இன்று, 90 சதவீதம் பேர் *வாழ்வாதார* வறுமையில் வாழ்கிறார்கள். 

தினசரி உணவுக்காகப் பிச்சையெடுக்கும் நிலையில் நாட்டின் பாதி சதவீதத்தினர் இருக்கிறார்கள். 

நாட்டிலிருந்து லட்சக்கணக்கானோர் வெளியேறியிருக்கிறார்கள். 

வெளியேற நினைப்பவர்கள் பாஸ்போர்ட் கூட எடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

வெனிசுலாவில் நடிகைகள் மட்டுமல்ல ஆசிரியர், வழக்கறிஞர் என மிக மரியாதையாக வாழ்ந்து வந்த பெண்கள் கூட பாலியல் தொழிலாளிகளாகப் பல்வேறு நாட்டில் தஞ்சமடையும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். 

மேலும், வீட்டுப் பெண்களின் நிலையைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. 

திருடர்களும், தீவிரவாதிகளும் அதிகரித்து வருகின்றனர். 

பணம் பத்தும் தான் செய்யும்... 

ஆனால், 
*பஞ்சமும், பசியும் "எதையும்" செய்யும்.*

பணத்திமிரையும், பசியையும் ஒரே தராசில் வைத்துப் பார்த்தால்...

*'பசியின் முன் பணத்திமிர் மண்டியிட்டு விடும்'* என்பது வெனிசுலாவில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் சாட்சி. 

இன்றைய நிலையில், வெனிசுலாவை மீட்பது என்பது, கிட்டதட்ட மணலைக் கயிறாகத் திரிக்கும் சவால்தான். 

தினந்தினம் மக்கள் பலியாவது மட்டும்தான் நடந்து கொண்டிருக்கிறது. 

இந்த நிலையில், இப்போது வெனிசுலாவுக்கு உதவ எந்த நாடோ அமைப்போ தயாராக இல்லை. 

உலக நாடுகளுக்கு வெனிசுலாவின் இன்றைய நிலை 'ஒரு பாடம்.'

ஏனெனில்... 

*விவசாயத்தை மதிக்காத* எந்த நாட்டுக்கும் ஏற்படக்கூடியது தான் வெனிசுலாவின் இந்த நிலை. 

இன்றைய பணமய பொருளாதாரத்தில்... 
போட்டி நாடுகள் எந்த சூழ்ச்சியையும் செய்யலாம். 

நம்முடைய 'திறமையான ஆட்சியாளர்கள்...'

தாங்கள் செய்யும் செயலும், தாங்கள் எடுக்கும் முடிவும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அறிந்து செயல்பட்டால் மட்டுமே இதுபோன்ற ஒரு நிலை உருவாகாமல் தடுக்கலாம். 

*'இன்றைய ஆதாயத்தை மட்டுமே கணக்கில் வைத்து'* எதைத் திட்டமிட்டாலும் அந்த நாடு நாசமாகும் நிலைதான் ஏற்படும். 

*'நீண்டகால அடிப்படையிலான வளர்ச்சித் திட்டங்கள்'* தான் மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும்.

அதேசமயம் ஒவ்வொரு தனிநபருக்கும் தங்களின் 'பொருளாதாரம் என்பதை விட...

*வாழ்வாதாரம்*' குறித்து தெளிவு வேண்டும். 

இந்தியாவில் தற்போது 'நுகர்வு' என்பது அளவுக்கு மீறிப் போய்க்கொண்டிருக்கிறது. 

நாலைந்து செல்போன் வைத்திருக்கிறோம். 

வீடு முழுக்க ஆடைகளால் நிறைந்திருக்கின்றன. 

நிறுத்த இடமில்லை என்றாலும் நாலைந்து கார்களை வாங்குகிறோம். 

இதனால் வேகமான வளரும் பொருளாதாரமாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறோம். 

ஆனால், நீடித்து வாழ வேண்டுமென்ற ஆசையிருப்பவர்கள், 
*'வாழ்வாதாரத்தை'* தான் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வெனிசுலா, 
'அரசு மயமாக்கலை' முன்னெடுத்தது... 
வீழ்ச்சியடைந்தது. 

இதே போன்று, 
தனியார் மய கொள்கையிலும் சில பாதிப்புகள் உண்டு. 

ஆகவே, 
ஆளும் அரசு... 
மக்களின் வாழ்வாதாரத்தை மட்டுமே கருத்தில் கொண்டு... 

நன்றாக அலசி ஆராய்ந்து... 

துணிந்து...
நல்ல முடிவுகள் எடுக்க வேண்டும். 

அப்போது தான் நாடும், 
நாமும் நலமுடன் வாழ முடியும். 

நம்மிடம் எவ்வளவு பணம் இருந்தாலும்...

விவசாயி, *விவசாயம் செய்தால் தான் சோறு.* 
என்பதை மறந்து விடக்கூடாது. 

வெனிசுலா நிலை நாளை நமக்கும் வரலாம்..!

காரணம்...

கிராமங்களில் 

நூறு நாள் வேலைத் திட்டம்.

இது நல்ல திட்டம் போல தான் தோன்றும். 

ஆனால்,
நிஜத்தில் நடப்பது...

அங்கு, ஒப்புக்கு தான் வேலை.

'ஓய்வு எடுக்கும்' வேலை தான் அங்கு பிரதானமாக  நடக்கிறது...

சிலர், ஏழைகளின் உடல் நலனை காக்க...! 
'பீடி சுற்றுவார்கள்.'

இதனால், பாதிப்பு...

நமது நாட்டில் விவசாயம் செய்பவர்களுக்கு தான். 

விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல்...

விவசாய பணிகள் தான் முடக்கி போகிறது.

இதனால், விவசாயம் செய்ய முடியாத நிலை.

மீறி...
'அதிக சம்பளம் கொடுத்து, குறைவாக வேலை செய்பவர்களை' வைத்து விவசாயம் செய்தாலும்...

விவசாயத்தில் நஷ்டம்.

இதனால் பல விவசாயிகள் விவசாயத்தை படிப்படியாக விட்டு வருகிறார்கள். 

இந்த நிலை... 

இது நமது மக்கள் அனைவருக்கும் அடிக்கபடும் *எச்சரிக்கை மணி!*

வளங்கள் உள்ளவரை மட்டுமே நம்மால் பணத்தைப் புரட்ட முடியும். 

பணத்தையெல்லாம் சேர்த்த பிறகு இறுதியில் வளங்கள் இல்லாத நிலை வரும்போது... 

அந்தப் *பணத்துக்கு எந்த மதிப்பும் இருக்காது.*

'ஒரு பொருளுக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்' என்பதை வைத்தே அந்தப் பணத்தின் மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது. 

வாங்குவதற்கு பொருளே இல்லை, 

'பணம் மட்டும் கட்டுக் கட்டாய் இருக்கிறது' என்றால் அந்தப் பணத்துக்கு எந்த மதிப்பும் இல்லை. 

அப்போது, 
நாமும் மூட்டைகளில் பணத்தைக் கொண்டு போய் கொடுத்து... 
முட்டை தான் வாங்கி வரலாம்.

விவசாயத்தை கைவிட்ட எந்த நாடும் வாழாது.

வளராது....!

ஆகவே,
*விவசாயம் காப்போம்...*

அதற்கான *வழிவகை செய்வோம்...*🙏🏻

*"10 லட்சம் கொடுத்தால் ஒரு பர்கர் வாங்கலாம்.."*

வெனிசூலாவை ஆட்டிப்படைக்கும் பண வீக்கம்.. மக்கள் அவதி!👇🏻

No comments:

Post a Comment