Friday 31 May 2019

யாழ் நூலகம் எரித்துச் சாமபலாக்கப்பட்ட சம்பவம்...

ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அடையாளத்தை அழி, என்பார்கள். வடக்கில் குறிப்பாக யாழ்ப்ப்பானத்தில் தமிழ் மக்களின் புலமைச் சொத்தாக கருதப்பட்டு வந்த யாழ் நூலகம் எரித்துச் சாமபலாக்கப்பட்ட சம்பவம் வரலாற்றில் என்றுமே துடைக்க முடியாத கறையாக ஆகி விட்டிருக்கிறது.



தமது தமிழ் மரபையும், வரலாற்றையும் ஆவணப்படுத்தி வைத்திருக்கும் ஒரு தொல்பொருள் வைப்பகமாகவும் தான் பேணப்பட்டு வந்தது. மீளப் பெற முடியாத அரிய நூல்களையும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னரான ஏடுகளும் கூட அங்கு பாதுகாககப்பட்டு வந்தன. அந்த நூலகம் அரசு கொடுத்தத்தல்ல. அன்றைய தமிழ் புலமையாளர்கள் சேர்ந்து உருவாக்கியது. பின்னர் தான் அது மாநகர சபை கையேற்று நடத்தியது.


70களின் இறுதியில் வடக்கு கிழக்கெங்கும் தொல்பொருள் ஆய்வுகள் என்கிற பேரில் கண்டு பிடிக்கப்பட்டவற்றைக் கொண்டு ஆதலால் வடக்குகிழக்கு முழுவதும் சிங்களவர்களின் பிரதேசங்கள் என்று நிறுவும் வேலைத்திட்டம் தொடங்கப்பட்டிருந்தது. தமிழர்களின் தாயகக் கோட்பாட்டை மறுத்தொதுக்குவதற்கான இந்த வேலைத்திட்டத்தில் அரசின் உதவியுடன் பல்வேறு இனவாத அமைப்புகள் பல முனைகளில் திட்டமிட்டு மேற்கொண்டிருந்தன. 77 இனக் கலவரத்தை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் கூட சாட்சியமளித்த பல இனவாத சக்திகள் கலவரத்தைப் பற்றி பேசுவதை இந்த தொல்பொருள் ஆதாரங்களைப் பற்றியே அதிகம் பேசின என்பது அந்த சாட்சியங்களில் இருந்து காண முடியும். மடிகே பஞ்ஞாசீல தேரர், ஹரிச்சந்திர விஜேதுங்க, எச்.எம்.சிறிசோம போன்றோர் அங்கு பெரிய அறிக்கைகளையே சமர்ப்பித்தனர். அவை சிறு கை நூல்கலாவும் கூட சிங்களத்தில் வெளியிடப்பட்டன.



யார் இந்த சிறில் மெத்தியு

அந்த பாதையில் வளர்த்தெடுக்கப்பட்டவர் தான் சிறில் மெத்தியு. இலங்கையின் வரலாற்றில் பல இனவாதிகளை உருவாக்கிய முக்கிய கோட்டையாக  அன்றிலிருந்து இன்றுவரை திகழ்வது களனி பிரதேசம். அந்தத் தொகுதியின் ஐ.தே.க. அமைப்பாளர் சிறில் மெத்தியு. 1977 தேர்தலில் களனி தொகுதி மக்களால் வெற்றியடையச் செய்யப்பட்டவர் சிறில் மெத்தியு. அதே தொகுதியைச் சேர்ந்தவர் ஜனாதிபதி ஜே.ஆர். ஜே.ஆர் சிறில் மெத்தியுவுக்கு தொழில் மற்றும் விஞ்ஞான அலுவல்கள் அமைச்சராக நியமித்தார். 1980ஆம் ஆண்டு சிறில் மெத்தியு தனது அதிகார பலத்துடன் வடக்கில் அகழ்வாராய்ச்சிகளை விஸ்தரிப்பதற்காக அதிகாரிகளை அனுப்பி தனது வழிகாட்டலின் பேரில் மேற்கொண்டார்.

இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக “அரச தொழிற்துறை பௌத்த சங்கம்” என்று ஒன்றை ஆரம்பித்து திருமலையில் புல்மூடை – குச்சவெளி பிரதேசத்தில்  “அரிசிமலை ஆரண்ய சேனாசனய” என்கிற ஒரு பௌத்த தளத்தை  ஆரம்பித்தார். சிறில் மெத்தியு தயாரித்த அறிக்கையை அதிகாரபூர்வமாகவே இலங்கையின் கலாசார உரிமைகள் பற்றி யுனெஸ்கோ நிறுவனத்திடம் கையளித்து அந்த பிரதேசங்களை பாதுகாத்து தருமாறும் முறைப்பாடொன்றை செய்தார். அந்த அறிக்கை இன்றுவரை சிங்கள தேசியவாதிகளால் போற்றப்பட்டுவருகிறது. வடக்கு கிழக்கு சிங்களவர்களின் பூர்வீக உடமை என்கிற வகையில் அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது.




வடக்கு கிழக்கு பகுதிகளில் பௌத்தமதமும், அதன் செல்வாக்கும் இருந்திருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் அந்த வரலாற்றை சிங்களத்துடன் இணைத்து சிங்கள பௌத்த வரலாறாக புனையும் சிங்கள பேரினவாதம் அதை காலாகாலமாக செய்து வருகிறது. தமிழ் பௌத்தம் என்கிற ஒன்று இருந்தது என்பதையும், அதன் செல்வாக்குக்குள் தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்கிற உண்மையை ஏற்றுக்கொண்டு, அதை உறுதி செய்வதன் மூலமே சிங்கள பௌத்த புனைவுகளுக்கு பதிலடி கொடுக்க முடியும் ஆனால் யாழ் – சைவ – தமிழ் மையவாத மரபு அதற்கு இடங்கொடுப்பதில்லை. தமிழ் பௌத்தத்தை கொண்டாட அந்த மரபு இடங்கொடுப்பதில்லை. வெகு சில ஆய்வுகளையே அப்படி காண முடிகிறது.

தமிழர்களுக்கு உரிமை கோருவதற்கு அங்கு ஒன்றும் இல்லை. அது பயங்கரவாதக் கோரிக்கைகளே என்று நிறுவும் வகையில் அவர் நூல்களை எழுதி பிரசுரித்தார். “கவுத கொட்டியா?” (புலிகள் யார்? - 1980), “சிஹளுனி! புதுசசுன  பேராகனிவ்” (சிங்களவர்களே பௌத்தத்தைக் காத்திடுங்கள்!) என்கிற நூல்கள் மிகவும் மோசமான இனவாத நூல்கள். தன்னை தீவிர சிங்கள பௌத்தனாக ஆக்கிக்கொண்ட சிறில் மெத்தியு தமிழ் விரோத போக்கையும், வெறுப்புணர்ச்சியையும் வளர்த்துக்கொண்டிருந்தவர்.

யாழ் நூலக எரிப்புக்கு சிறில் மெத்தியு மட்டும் பொறுப்பில்லை. அதற்கு ஏதுவான இனவாத அலை ஏற்கெனவே வளர்தெடுக்கப்பட்டு, நிருவனமயப்படுத்தப்பட்டுத் தான் இருந்தது. ஆனால் சிறில் மெத்தியு அந்த உடனடி நிலைமைகளுக்கு தலைமை கொடுத்தார் என்பது வெளிப்படை. இந்த காலத்தில் சிறில் மெத்தியு பாராளுமன்றத்தில் சிறில் மெத்தியு ஆற்றிய உரைகளில் இனவாத விசர்நாயொன்றின் கர்ஜனைகளைக் காண முடியும். 

சிறில் மெத்தியுவின் இந்தப் போக்கை ஐ.தே.க அரசாங்கமும் ஜே.ஆறும் கண்டுகொள்ளவில்லை. தமிழ் மாணவர்களின் பல்கலைக்கழக நுழைவை சிறில் மெத்தியுவால் சகிக்கக் கூட முடியவில்லை. எம். சிவசிதம்பரம் சிறில் மெத்தியுவுக்கும் இடையில் பாராளுமன்றத்தில் கடுமையான வாதம் நிகழ்ந்தது. தமிழ் மாணவர்களை குறுக்குவழியில் பல்கலைக்கழகத்துக்கு அனுப்புவதற்காக வினாத்தாள் திருத்துனர்கள் மோசடி செய்து அதிக புள்ளிகளை வழங்கினார்கள் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அந்த விவாதத்தில் அவரை ஆதாரத்தை முன்வைக்கக் கோரியபோதும் கையில் ஒரு கடுதாசியை வைத்துக் கொண்டு கடைசி வரை சமர்ப்பிக்கவில்லை. ஆனால் இன்று வரை சிங்கள நூல்களில் சிறில் மெத்தியு கூறியது உண்மை என்றே பதிவு செய்யப்பட்டுள்ளதையும் காண முடிகிறது. 
“நாம் எதனையும் ஏற்றுக்கொள்வோம்; ஆனால், நேர்மையற்றவர்கள் என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது... கஷ்டப்பட்டு படித்துப் புள்ளிகள் பெறும் மாணவர்களை நோகடிகின்ற, இழிவுசெய்கின்ற கருத்துக்கள் இவை” அவர் ஆத்திரத்துடன் உரையாற்றினார்.

வடக்கில் எழுச்சியுற்ற தமிழர் உரிமை இயக்கங்களை எதிர்கொள்ள இப்படியான சக்திகள் சிங்களத் தரப்புக்கு தேவைப்பட்டுக்கொண்டிருந்தது. குறிப்பாக அரசாங்கத்துக்குள்.

ஐ.தே.வின் மானப் பிரச்சினைக்கு விலை

வடக்கில் தமிழ் இளைஞர்களின் எழுச்சி அரசாங்கத்துக்கு ஒரு பெரும் சவாலாகவே இருந்தது. 77 கலவரம் நிகழ்ந்து அதன் மீதான விசாரணையும் கூட அந்த சூட்டைத் தணிய வைக்கவில்லை. மாவட்ட சபைகள் தேர்தலில் கூட்டணியுடன் போட்டியிட்டு எப்பெரும் விலையைக் கொடுத்தாவது பல ஆசனங்களைக் கைப்பற்ற வேண்டும் என்று களம் இறங்கியது ஐ.தே.க. அருவருக்கத்தக்க தேர்தல் மோசடிகளில் இறங்கியது பற்றி பல சர்வதேச அறிக்கைகள் கூட சுட்டிக் காட்டியுள்ளன. வாக்குப் பேட்டிகள் சூறையாடப்பட்டன. பொலிசாரின் கெடுபிடிகள் சாமான்ய மக்களுக்கு அதிரித்திருந்தன.

இந்த நிலையில் ஐ.தே.க நியமித்திருந்த பிரதான வேட்பாளரான தியாகராஜா தமிழ் இயக்கங்களால் குறி வைக்கப்பட்டிருந்தார். அவர் மே 24 அன்று அவர் கொல்லப்பட்டார். ஐ.தே.கவுக்கு இது பேரிடியாக இருந்தது. வெற்றி வாய்ப்புகள் கைநழுவிப் போவதை உணர்ந்த அவர்கள் இதனை தமக்கேதிறான் சவாலாகவே பார்த்தனர்.

தேர்தல் பணிகளை நேரில் நின்று கவனிப்பதற்காக ஜே.ஆர், அமைச்சர் சிறில் மெத்தியுவையும், மெத்தியுவுக்கு நெருக்கமான அமைச்சர் காமினி திசாநாயக்கவையும் அவர்கள் தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், அமைச்சரவையின் செயலாளர் ஆகியோரைக் கொண்ட ஒரு சிறப்புக் குழுவை மே 30 ஞாயிறு அன்று யாழ்ப்பாணத்துக்கு அனுப்பினார். அதைவிட ஏற்கெனவே அதிகளவில் பொலிசார் குவிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்துக்கு மேலதிகமாக வெளி மாவட்டங்களிலிருந்து 500 பொலிசாரிக் கொண்ட ஒரு பெரும்படையும் அனுப்பப்பட்டது. ஒரு பெரும் அசம்பாவிதத்துக்கான முஸ்தீபுகள் மேற்கொள்ளப்படுவதை யாழ்ப்பாண மக்கள் அறிந்திருக்கவில்லை.

தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே இருந்த நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் பரபரப்புமிக்கதாக இருந்தது.  மே.31ஆம் திகதி தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் யாழ்ப்பாணம் நாச்சிமார் அம்மன் கோவிலடியில். இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புக் கடமையில் இருந்த மூன்று பொலிஸார் இளைஞர் சிலரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்கள். இரண்டு பொலிஸார் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்கள்.

அரச பயங்கரவாதம்

சொற்ப நேரத்தில் அங்கு விரைந்த ஆயுதமேந்திய பொலிஸ் படையொன்று தமது வெறியாட்டத்தைத் தொடங்கியது. வீதியில் கண்டவர்களையெல்லாம் அடித்து துன்புறுத்தினர். வீதி வெறிச்சோடியது. ஆத்திரத்தில் அருகில் இருந்த அனைத்தையும் சின்னாபின்னப்படுத்தினர். 150க்கும் மேற்பட்ட கடைகள் கொள்ளையிடப்பட்டும் தீயிடப்பட்டும் நாசம் செய்யப்பட்டன. அருகிலிருந்த கோவிலுக்கு தீவைத்த அவர்கள், தொடர்ந்து அருகிலிருந்த வீடுகளையும் வீதியிலிருந்த வாகனங்களையும் தீக்கிரையாக்கத் தொடங்கினர். 

பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீடு சாம்பலாக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது. யோகேஸ்வரனும் அவரது மனைவியும் மயிரிழையில் உயிர் தப்பியோடினர். ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. அதன் ஆசிரியர் கோபாலரத்தினம் கொடூரமாக தாக்கப்பட்டார். தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைமைக் காரியாலயமும் தீ வைத்து நாசமாக்கப்பட்டது. நான்கு தமிழர்கள் வீதிக்கு இழுத்து வரப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். யாழ்ப்பாணப் பெரிய கடையில் கட்டியெழுப்பப்பட்ட திருவள்ளுவர் சிலை, ஓளவையார் சிலை, சோமசுந்தரப் புலவர் ஆகியோரின் சிலைகளும் உடைத்து துவம்சம் செய்யப்பட்டன.

இந்த ஆராஜகத்தை யாழ்ப்பாண விருந்தினர் விடுதியில் இருந்தபடி இயக்கிக் கொண்டிருந்தார்கள். சிறில் மெத்தியு, காமினி திசாநாயக்க தலைமையிலான குழு. ஏற்கெனவே இறக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான காடையர்களும் தம் பங்குக்கு கொள்ளைகளிலும், நாசம் செய்வதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். இத்தனைக்கும் அவசரகால சட்டம், அமுலில் தான் இருந்தது. சகலதும் முடிந்த பின்னர் தான் காலம் கடந்து  ஜூன் 2அன்று ஊரடங்கு சட்டத்தைப் பிறப்பித்தது அரசாங்கம். அந்த சட்ட நடவடிக்கைகள் காடையர்களுக்கு பாதுகாப்பையும், பாமரர்களுக்கு இழப்பையும் தான் தந்தது. மொத்தத்தில் சொல்லப்போனால் அரச பயங்கரவாதம் இந்த சட்டங்களின் மூலம் மேலதிக அதிகாரங்களுடனும், வசதிகளுடனும் மக்களை கட்டிப்போட்டு சூறையாடியது. அவர்களின் சொத்துக்களை அளித்து சின்னாபின்னமாக்கியது.

இரவிரவாக நடந்த இந்தக் கொடுமைகளுக்கு இடைவேளை கொடுக்கவில்லை. அவர்களின் நாசகர தாகமும் அடங்கவில்லை. மறுநாளும் தொடர்ந்தது ஜூன் 1 அவர்கள் யாழ் பொது நூலகத்துக்குள் நுழைந்தார்கள். அங்கிருந்த 97,000க்கும் மேற்பட்ட நூல்களையும், காலங்காலமாக பாதுக்காக்கப்பட்டு வந்த ஓலைச்சுவடிகளையும், பல கையெழுத்து மூலப் பிதிகளையும் சேர்த்து கொளுத்தினார்கள். வரலாற்று முக்கியத்துவம் பெற்ற “யாழ்ப்பாண வைபவ மாலை”யின் ஒரேயொரு மூலப் பிரதியும் அழிக்கப்பட்டவற்றுக்கு உதாரணம்.

இரவிரவாக தீயில் பொசுங்கிக்கொண்டிருந்த அந்த புலமைச் சொத்துக்களுடன், பல்லாயிரக்கணக்கானோரை உருவாக்கிய அந்த நூலகம் எரிந்துகொண்டிருந்ததை யாழ். புனித பத்திரிசிரியார் கல்லூரியின் மேல்மாடிக் கட்டடத்தில் வாழ்ந்து வந்த 74 வயதுடைய தாவீது அடிகள் இதனைக் கண்ணுற்ற அதிர்ச்சியில் மாரடைப்பில் உயிர்துறந்தார்.
இலங்கையின் அரச பயங்கரவாதம் காலத்துக்கு காலம் கலவரங்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தலைமை கொடுத்து வந்திருக்கிறது தான். இதற்கு முந்திய 1939, 1956, 1958, 1977 முக்கிய கலவரங்களின் போதும் அழிவுகளை ஒவ்வொரு கோணத்தில் கண்ணுற்றிருக்கிறோம் ஆனால் 1981 இல் அழித்தவற்றில் தலையாய இழப்பாக, மறக்கவும், மன்னிக்கவும் முடியாத இழப்பாக பதிவானது யாழ் நூலக அழிப்பு.

Tuesday 28 May 2019

ரஜினி கிண்டும் அரசியல் உப்புமா.. வீட்டு வாசலை தாண்டாத "சூப்பர் அரசியல்".. பின்னணியில் பலே திட்டங்கள்

இன்னும் போயஸ் தோட்டத்து வீட்டு வாசலைத் தாண்டவில்லை ரஜினிகாந்த்தின் நூதன அரசியல். வரலாறு காணாத அரசியல் இது. பட்டும் படாமல் பேசிக் கொண்டிருக்கிறார்.. அது ஸ்டெர்லைட் ஆக இருந்தாலும் சரி, டிமானிடைசேஷன் ஆக இருந்தாலும் சரி. ஆனால் அகில இந்திய அளவில் ரஜினி தூக்கி பிடிக்கப்படுகிறார்.. ஏன்?


பக்காவான திட்டமாக ரஜினியை பார்க்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். பாஜகவுக்கு எப்போதுமே வெற்றி முகம்தான் தேவை. அதுவும் அப்போதைக்கு வெற்றித் தேடித் தருவதாக இருக்க வேண்டும். ஒரு காலத்தில் வாஜ்பாய் அத்வானி, பின்னர் மோடி அமித் ஷா.
அத்வானியின் முகம் மங்கியபோது தூக்கி எறியப்பட்டார். பலரும் கூட இதுபோல ஒதுக்கப்பட்டவர்கள்தான். யஷ்வந்த் சின்ஹா, ஜஸ்வந்த் சிங், சத்ருகன் சின்ஹா என இந்த பட்டியல் மிக நீளமானது.

சிக்கல் இல்லை


இப்போது பாஜகவுக்கு தென்னிந்தியாவில் ஒரு சக்தி வாய்ந்த முகம் தேவை. கேரளாவில் தேடிப் பார்த்தது கிடைக்கவில்லை. ஆந்திராவில் வலை வீசிப்
பார்த்தது கிடைக்கவில்லை. கர்நாடகத்தில் பெரிதாக பிரச்சினை இல்லை.
சிக்கல் தமிழகத்தில்தான். இங்குதான் ஒரே மாங்காயில் பல மாமரங்களை
வீழ்த்தும் அபாரத் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.





பகடைக்காய்


அதிமுகவை தற்காலிக பகடைக் காயாக பாஜக பயன்படுத்தி வந்தது.
பாஜகவைப் பொறுத்தவரை ஓபிஎஸ்ஸோ, ஈபிஎஸ்ஸோ முக்கியமானவர்களே
அல்ல. அதிமுகவின் வாக்கு வங்கி மற்றும் செல்வாக்கு இதுதான்
முக்கியமானது. அதை வைத்து மெல்லக் காய் நகர்த்திய பாஜகவின் முக்கிய டார்கெட் ரஜினிதான்.





இதுதான் திட்டம்


அதிமுகவால் தமிழகத்திற்குள்தான் ஏதாவது காரியம் ஆகும். அதை
சரியாக செய்து வரும் பாஜகவின் மெகா திட்டம்தான் ரஜினியாக
சொல்கிறார்கள். அதாவது ரஜினிக்கு தமிழகத்தில் முகம் தேடித் தருவது.
அந்த முகத்தை பிரபலமாக்குவது. அதைக் கொண்டு அகில இந்திய
அளவில் தனக்கு பயன்படுத்திக் கொள்வது. இதுதான் திட்டம் என்கிறார்கள்.





சீர்குலைவு


ரஜினிக்கு இடையூறாக இங்கு இருப்பது திராவிடம். திராவிடக் கோட்டை
தமிழ்நாடு. இதைத் தகர்ப்பது என்பது மிக மிகப் பெரிய சமாச்சாரம்.
அங்குதான் பாஜகவின் சாதுரியம் விளையாடியது. அதிமுக இன்று
சீர்குலைந்து விட்டது, நிலை குலைந்து போய் விட்டது. நாளையே 
அதிமுகவின் சிதறிப் போனவர்கள் இணைந்து கை கோர்ப்பார்கள். 
ஆனால் குடுமி மட்டும் பாஜகவிடமே இருக்கும். காரணம், 
பக்காவாக எல்லோரும் சிக்கியுள்ளனராம்.





ஸ்டாலின்


அடுத்த சிக்கல் திமுக. அதற்குள் உரிய முறையில் ஸ்கெட்ச் போட்டுக் கொண்டிருப்பதாக பேசப்படுகிறது. அதைத் தாண்டி எப்படி ஸ்டாலின்
நிலை நிறுத்தப் போகிறார் என்பது மிகுந்த சுவாரஸ்யமான எதிர்பார்ப்பாகும்.
முதல் பரீட்சையில் அவர் வெற்றிகரமாக தேறி லோக்சபா தேர்தலில்
அதகளம் செய்து விட்டார். இதை பாஜக எதிர்பார்க்கவில்லை. இந்த
நிலையில்தான் ரஜினியை மீண்டும் வெளியில் விடுகிறார்கள்.

அரசியல் மைதானம்


ரஜினியின் செல்வாக்கை முதலில் நிலை நிறுத்த வேண்டும். அதற்குத்தான்
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு. அங்கு வைத்து அகில
இந்திய அளவில் ரஜினி மீது வெளிச்சம் பாய்ச்சப்படவுள்ளது. ரஜினியை
மெல்ல மெல்ல களம் இறக்கி தமிழக அளவில் அவருக்கென்று ஒரு
மைதானத்தை ஏற்படுத்திக் கொடுத்து அதில் விளையாட விட்டு, அதன்
பலனை கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா.. ஆம், மகாராஷ்டிரா என
மெல்ல எடுத்துச் செல்லும் திட்டம்தான் பாஜகவுடையது என்பது
அரசியல் நோக்கர்களின் கருத்தாகும்.





அரசியல்வாதி


ரஜினிக்கான அரசியல் அசைன்மென்ட் என்பது ரஜினிக்கே கூட முழுமையாக தெரியாது என்கிறார்கள். ஆனால் பாஜகவின் திட்டம் மெல்ல உருவெடுப்பதாக அடித்துச் சொல்கிறார்கள் அரசியல் அறிந்தவர்கள். இன்றைய ரஜினியின் பேச்சு
கூட எல்லோரையும் பகைத்துக் கொள்ளாதது போலவே இருந்ததைப் பார்த்திருக்கலாம்.. ராகுல் காந்தியைப் பாராட்டுகிறார், மோடியைப்
பாராட்டுகிறார், தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலைவீசியது என்கிறார்.
ஒரு அரசியல்வாதி ரேஞ்சுக்கு அவர் பேச ஆரம்பித்துள்ளார்.





தலை சுத்துகிறது


ரஜினியின் முகத்தில் பாஜக முகமூடி என்பது எந்த அளவுக்கு ஒர்க் அவுட்
ஆகும். அதை திமுக உள்ளிட்ட கட்சிகள் எப்படி சமாளிக்கும். கமல்
உண்மையிலேயே இதையெல்லாம் எதிர்த்து அரசியல் செய்யப் போகிறாரா
 அல்லது ஒரு கட்டத்தில் ரஜினியுடன் கை கோர்ப்பாரா.. சீமானின் நாம்
தமிழர் கட்சி இந்த எதிர்ப்பு சக்திகளை எப்படி முறியடிக்கும்..
எல்லாவற்றுக்கும் மேலாக தமிழக மக்கள் முன்பு அடுத்த சட்டசபைத்
தேர்தலில் என்னென்ன ஆப்ஷன்கள் இடம் பெறப் போகின்றன..
நினைத்தாலே தலை சுற்றிப் போகிறது போங்க.

Tuesday 21 May 2019

"உன்னால ஒன்னும் பண்ண முடியாது" சொல்லி அடிக்கும் விளாமிதிர் புதின்!

கடந்த பெப்ரவரி  மாதம், ரஷ்ய போர் விமானமான மிக் -31 ஒன்றில் முன் எப்போதும் காணப்படாத ஒரு ஏவுகணை இருப்பது, புகைப்படத்தில் பதிவானது. ஆரம்பத்தில் அதுவொரு சாதாரண ஏவுகணையாக இருக்கக்கூடும் என்று எண்ணப்பட்டது, பின் சமீபத்தில் கிடைக்கபெற்றுள்ள ஒரு புரிதலின் வழியாக, அந்த ஏவுகணையின் விபரீதம் தெரிய வந்துள்ளது.

வெளியான தகவலின்படி, புகைப்படத்தில் பிடிபட்ட ஏவுகணை ஆனது ஒரு செயற்கைகோள் எதிர்ப்பு ஆயுதமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக இது 2022 ஆம் ஆண்டில் போர் செய்ய தயாராக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதை அமெரிக்க புலனாய்விற்கு கிடைத்த மூன்று உளவுத்துறை தகவல்களுமே உறுதி செய்துள்ளன.

செயற்கைகோள் எதிர்ப்பு ஆயுதமா, அப்படி என்றால்?




ஒரு ஆதாரத்தின் படி, (அடையாளம் கூற விரும்பாத ஒரு நபரின் படி) சந்தேகிக்கப்படும் ரஷ்யாவின் ஆன்டி சாட்டிலைட் மிஸைல் ஆனது ஒரு விண்வெளி வெளியீட்டு வாகனத்துடன் இணைக்கப்படும், பின் புவியின் குறைந்த சுற்று வட்டப்பாதையில் உள்ள, எதிரி நாடுகளின் தொடர்பு மற்றும் புகைப்படங்கள் எடுத்து அனுப்பும் செயற்கைகோள்களை இலக்காகக் கொண்டு உலாவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் சர்வதேச விண்வெளி நிலையம் மற்றும் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி ஆகியவைகள் பூமியின் குறைந்த சுற்று வட்டப்பாதையில் தான் பயணம் செய்கின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

எப்போது சிக்கியது?




ஒரு "மாற்றியமைக்கப்பட்ட" ரஷ்ய மிக் -31 விமானம் ஆனது, சூப்பர்சோனிக் ஏவுகணைக்கு நிகரான ஒரு மர்மமான ஏவுகணையை சுமந்து செல்லும் புகைப்படங்கள், கடந்த செப்டம்பர் மாதம் நடுப்பகுதியில் வெளியானது. ஆக இதன் ஆரம்ப கால சோதனையானது செப்டம்பர் மாதம் முதல் வாரமே தொடங்கி இருக்கலாம் என்கிற ஒரு ஆதாரம். இதுவொரு கேபிடிவ் கேரி டெஸ்ட் ஆகவும் இருக்கலாம், அதாவது விமான பயணத்தின் போது எவ்வாறு இருக்கும் போன்ற மதிப்பீடுகளை செய்யும் ஒரு சாதனையாகவும் இருக்கலாம் என்கிறது மற்றொரு ஆதாரம்.



எப்போது நேரடியான வெளியீட்டு சோதனைகளை  சந்திக்கும்?



"ஆயுதம் மற்றும் விமான சட்டகம் ஆகியவை விமானத்தின் போது ஒன்றாகச் செயல்படுகின்றன என்ற நம்பிக்கையை பெறுவதற்காகவே இம்மாதிரியான சோதனைகள் நடத்த படுகின்றன" என்கிறது சிஎன்பிசி. மேலும் இதன் அடுத்தக்கட்ட சோதனை ஆனது 2019 ல் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தாது அடுத்த ஆண்டு இவ்வகை ஆயுதமானது வெளியீட்டு சோதனைகளை சந்திக்கும் என்று அர்த்தம். மேலும், அமெரிக்க புலனாய்வு அறிக்கையின், இந்த ஏவுகணை வருகிற 2022 ஆம் ஆண்டில் ரஷ்ய ஆயுதக் களத்தில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவின் விளக்கம் என்ன?




இதுசார்ந்த கேள்விக்கு விளக்கம் அளித்த ரஷ்ய அணுசக்தி படைகளின் இயக்குனர் பவெல் போட்விக், ""இது எனக்கு புரிகிறது, இது எனக்கும் தெரியும், இது ஒரு செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதமாக இருக்க சாத்தியக்கூறுகள் உள்ளது" என்று கூறியுள்ளார். மேலும் மாஸ்கோ இதற்கு முன்பு இது போன்ற அமைப்புகளில் பணியாற்றி உள்ளது என்றும் கூறியுள்ளார். "இம்மாதிரியான ஒரு திறனை கொண்டு இருப்பது ரஷ்யாவிற்கு நல்லது தான் என்றும் அவர் கூறியுள்ளார். சீனாவும் அமெரிக்காவும் இதேபோன்ற ஆயுதங்களை உருவாக்கியுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.



நீண்ட காலமாகவே வளர்ச்சி அடைந்து வருகிறது!




வெளியான புகைப்படங்களை பற்றி கருத்து கூறிய, ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தின் இயக்குனரான தாமஸ் கரோக்கோ. "காற்றின் வழியாக தொடங்கப்படும் இயக்க-எதிர்ப்பு செயற்கைக்கோள் ஆயுதங்கள் நீண்ட காலமாக வளர்ச்சி அடைந்து கொண்டு தான் வருகின்றன. அது சீனா, அமெரிக்கா, தற்போது ரஷ்யாவால் நிரூபிக்கப்பட்டுள்ளன" என்று கூறி உள்ளார்.

தீயாய் வேலை செய்யும் ரஷ்யா!




செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் எந்த வகையிலும் புதியவை அல்ல. விளாமிதிர் புதின், தனது நாட்டிற்கு வளர்ந்துவரும் இராணுவ ஆயுதங்களைப் பற்றி அறிவித்த பிறகு, எட்டு மாதங்களுக்குள் இந்த புதிய வெளிப்பாடு வந்துள்ளது என்றால் ரஷ்யா எவ்வளவு தீவீரமாக உழைக்க வேண்டும் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

உங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை!




"கடந்த 15 ஆண்டுகளாக ஆயுத தயாரிப்பில் ரஷ்யாவை முந்தும் முனைப்பின் கீழ் வேலை செய்த அனைவர்க்கும் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக சட்டவிரோதமான தடைகளை அறிமுகப்படுத்திய உங்களால் ரஷ்யாவைக் கட்டுப்படுத்த முடியவில்லை" என்று விளாமிதிர் புதின் கடந்த மார்ச் மாதம் கூறி இருந்ததை மீண்டும் குறிப்பிட்டு காட்ட விரும்புகிறோம்.

Thursday 16 May 2019

"பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி. என்ன வசீகரமென்றே எனக்கு விளங்கவில்லை"


 

"பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி. என்ன வசீகரமென்றே எனக்கு விளங்கவில்லை" - லண்டன் BBC தமிழ்ஓசையின் மூத்த செய்தியாளர் #ஆனந்தி! 

🎤விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை முதன் முதலாக சந்தித்து பேட்டி கண்ட பத்திரிகையாளர் நீங்கள்தான். அந்த சந்திப்பு பற்றிச் சொல்லுங்கள்!

📻லண்டனிலிருந்து கொழும்பு சென்றதுமே இலங்கை அரசின் கெடுபிடி ஆரம்பித்துவிட்டது. எனது பயணத்திட்டம் என்ன, பயணத்தின் நோக்கம் என்ன என்பது பற்றி எல்லாம் துருவித்துருவி விசாரிக்க ஆரம்பித்தார்கள். என்னை தொடர்ந்து கண்காணிக்கவும் செய்தார்கள்.



அப்போது கிட்டதட்ட வவுனியாவுக்கு முன் வரை மட்டுமே இலங்கை படைகளின் ஆதிக்கம் இருக்கும். அதுவரை சென்றேன். அதன் பிறகு புலிகளின் ஆதிக்கப்பகுதி. அதற்குள் வருவதற்குள் பல்வேறு தடைகள். அதையெல்லாம் மீறி புலிகள் ஆதிக்கப்பகுதிக்கு வந்தேன். பிறகு யாழ்ப்பாணம் சென்றேன். அங்குதான் அப்போது பிரபாகரன் இருந்தார்.

யாழ்ப்பானத்தில் அப்போது ஞானம் என்ற ஒரே ஒரு உணவு விடுதிதான் இருந்தது. அங்கே அறை எடுத்தேன்.

குளித்து முடித்து, புலிகளுக்க தகவல் சொல்லலாம் என்பது எனது திட்டம். நான் குளித்து வருவதற்கும், கதவு தட்டப்படுவதற்கும் சரியாக இருந்தது.

திறந்தால், சுப. தமிழ்ச்செல்வன் உட்பட சில புலிகள் நிற்கிறார்கள். என்னைக்குறித்து விசாரிக்கிறார்கள்.



நான் ஆச்சரிப்பட்டுப்போனேன்.

நான் வந்த தகவல் அதற்குள் அவர்களுக்கு சென்றுவிட்டது.

இதிலிருந்து ஒரு விசயத்தை என்னால் தெளிவாகப்புரிந்துகொள்ள முடிந்தது. ஈழ மக்கள், புலிகளின் மீது நம்பிக்கை கொண்டிருந்தனர். புதிதாக ஒருவர் வந்தால், புலிகளுக்கு தகவல் தெரிவித்துவிடுவார்கள்.

🎤ஓ.. அதன் பிறகு பிரபாகரனுடனான சந்திப்பு எப்படி இருந்தது?

📻பிரபாகரனை அவரது வீட்டில் வைத்து சந்திக்க சென்றேன். வாசலுக்கே வந்து அன்போடு வரவேற்றார்.

பலரும் நினைப்போது போல அவர் எப்போதுமே சீரியஸ் ஆன பேர்வழியாக இருப்பதில்லை. சகஜமாக பழகுவார். சில முறை நான் ஜோக் அடித்தபோதுகூட ரசித்து சிரித்தார்.

தானே எனக்கு நண்டு, இறால் என கடல் உணவுகளை சமைத்துக்கொடுத்தார். மிக அன்பான மனுசர் அவர்.



🎤தனக்கு எதிராக வைக்கப்படும் கேள்விகளை அவர் எப்படி எதிர்கொண்டார்?


📻விமர்சனங்களை அவர் வரவேற்றார். சந்திரிகா- புலிகள் குறுகிய கால சமாதானப் பேச்சுவார்த்தை காலத்திலும் வன்னிக்குச் சென்று பிரபாகரனை சந்தித்தேன். அவரிடம் சில கேள்விகள் கேட்கணு ம் என்றுதான் நானும் போனேன். ஆனால், அங்கு அவர் கட்டி வைத்திருந்த “செஞ்சோலை குழந்தைகள் இல்ல”த்தைப் பார்த்த பிறகு எனக்குள்ளேயே என்னையுமறியாத ஒரு மாற்றம் ஏற்பட்டது.

தாய் தந்தையரை உறவுகளை இழந்த குழந்தைகளுக்காக எத்தனை அக்கறையுடன் அந்த இல்லதைதை பிரபாகரன் அமைத்திருந்தார்! நெஞ்சு முழுக்க ஈரம் உள்ள மனுசனால் மட்டுமே அப்படி அமைக்க முடியும்!

அந்த செஞ்சோலை இல்லத்தை கண்டபோதே, என் மனதில் இருந்த கசடுகள் எல்லாம் கழுவப்பட்டு புதிதாக பிறந்த உணர்வு ஏற்பட்டது. வன்னியிலிருந்து திரும்பியதும், பி.பி.சியில் செஞ்சோலை பற்றிய நிகழ்ச்சி தயாரித்து “என் தெய்வம் வாழும் திருக்கோயில் நின்றேன்’ என்றுதான் தலைப்பிட்டேன்.

பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி. என்ன வசீகரமென்றே எனக்கு விளங்கவில்லை. நேரில் சந்தித்தபோது இவரா இத்தனை பெரிய போராளி அமைப்பின் தலைவர்.. குழந்தை முகமாக இருக்கிறாரே என்றுதான் தோன்றும்.

அவரை சந்தித்தபோது, “உங்கள் போராட்டத்தில் எத்தனை மக்களுக்கு, குழந்தைகளுக்கு கஷ்டம்” என்றுகூட கேட்க நினைத்தேன்.

ஆனால் அவரை பார்க்கும்போது அந்த கேள்வியே எழவில்லை.

🎤சரி, புலிகளின் ஆதிக்கத்தில் ஈழம் இருந்தபோது சர்வாதிகாரம் நிலவியதாக ஒரு விமர்சனம் உண்டு!

📻உண்மை அதுவல்ல. போராளிகளுக்கும் மக்களுக்கும் இடையேயான ஆழமான அன்பு, உறவு இருந்தது. மக்கள் தலைமை மீது கொண்டி ருக்கும் நம்பிக்கையும் மிக உறுதியானது. அங்குள்ளவர்களிடம் பேசியபோது ஒரு தகவல் கிடைத்தது.

எப்போதாவது உணர்ச்சிவசப்பட்டு போராளிகள் பொதுமக்களை அடித்தால்கூட “தலைவர் உங்களை இப்படி அடிக்கச் சொல்லித் தந்தவரோ?’ என்றுதான் கேட்பார்கள். அந்தளவுக்கு தலைமை மீது மக்களுக்கு நம்பிக்கை உண்டு.

அது மட்டுமல்ல.. போராளியாக இருப்பவர் தனது ஆயுதங்களைத் தவறாகப் பயன்படுத்தினால் உடனடியாக அமைப்பிலிருந்து நீக்கப்படுவார். அதோடு, அவர் தமிழீழ சிவில் நிர்வாக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார். சிவில் சட்டங்களின் படி அவருக்கு தண்டனை வழங்கப்படும்.

🎤பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர்., இந்திரா ஆகியோரிடம் மிகுந்த மரியாதை உண்டு என்று சொல்லப்படுவது உண்டு!

📻ஆமாம்.. எம்.ஜி.ஆர். மீது மிகுந்த பற்று வைத்திருந்தவர் பிரபாகரன். ஈழ மக்கள் அனைவருமே அப்படித்தான். எம்.ஜி.ஆர். இறந்தபோது, ஈழமக்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது. அதே போல இந்திராகாந்தி மறைந்தபோதும் ஈழமக்கள் மிகுந்த துயர் அடைந்தார்கள்.

🎤உங்களது ஈழப்பயணங்களின் போது வியக்க வைத்தது எது?

📻பல விசயங்களைச் சொல்லலாம். முக்கியமாக நான் ஈழ மக்களிடம் கேட்க விரும்பியது, சந்திரிகாவின் ஐந்தாண்டு கால தொடர் யுத்தம் மற்றும் கடுமையான பொருளாதாரத் தடையிலிருந்து எப்படி 5 லட்சம் மக்களை புலிகள் காப்பாற்றினார்கள் என்பதைத்தான்.

அதற்கு அம்மக்கள் கொடுத்த விடை நெகிழ்வூட்டியது. “ இப்படிப்பட்ட சூழலை தலைவர் பிரபாகரன் முன்னதாகவே அனுமானித்தார். தனக்கு அடுத்தபடியாக இருந்த இயக்க தலைவர்களை அழைத்தார். அப்போது அவர் முதலில் பேசியது மக்களுக்கான உணவு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு பற்றித்தான். அதன்படி எங்கள் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் விவசாயம் செய்யத் தகுதியுள்ள நிலங்களையெல்லாம் கவனத்துடன் கணக்கெடுத்தோம். பணப்பயிர்களை தடை செய்தோம். விதை நெல்கள் சேமித்தோம். இயற்கை விவசாயத்துக்கு பழகினோம். மேலும், எமது ஐந்து லட்சம் மக்களுக்கும் தேவையான வைட்டமின், புரதச் சத்து தேவைகளுக்கேற்றபடி பிற காய்கறி வகை களையும் விவசாயம் செய்ய வைத்தோம். இப்ப டித்தான் சந்திரிகாவின் கொடுமை யான பொருளாதாரத் தடையினை வெற்றி கண்டோம்” என்றனர்.

புலிகளை ஏதோ வன்முறையாளர் என்றே உருவகம் கொடுத்திருக்கும் பெரும்பாலான ஊடகங்களுக்கு இது தெரியாது. புலிகள், விவசாயம், அமைப்பு நிர்வாகம், கலை- பண்பாடு, நீர்வள மேலாண்மை என்று பல்வேறு துறைகளில் திட்டமிட்டு அரசாகவே இயங்கினர் என்பதே உண்மை.