Tuesday 21 May 2019

"உன்னால ஒன்னும் பண்ண முடியாது" சொல்லி அடிக்கும் விளாமிதிர் புதின்!

கடந்த பெப்ரவரி  மாதம், ரஷ்ய போர் விமானமான மிக் -31 ஒன்றில் முன் எப்போதும் காணப்படாத ஒரு ஏவுகணை இருப்பது, புகைப்படத்தில் பதிவானது. ஆரம்பத்தில் அதுவொரு சாதாரண ஏவுகணையாக இருக்கக்கூடும் என்று எண்ணப்பட்டது, பின் சமீபத்தில் கிடைக்கபெற்றுள்ள ஒரு புரிதலின் வழியாக, அந்த ஏவுகணையின் விபரீதம் தெரிய வந்துள்ளது.

வெளியான தகவலின்படி, புகைப்படத்தில் பிடிபட்ட ஏவுகணை ஆனது ஒரு செயற்கைகோள் எதிர்ப்பு ஆயுதமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக இது 2022 ஆம் ஆண்டில் போர் செய்ய தயாராக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதை அமெரிக்க புலனாய்விற்கு கிடைத்த மூன்று உளவுத்துறை தகவல்களுமே உறுதி செய்துள்ளன.

செயற்கைகோள் எதிர்ப்பு ஆயுதமா, அப்படி என்றால்?




ஒரு ஆதாரத்தின் படி, (அடையாளம் கூற விரும்பாத ஒரு நபரின் படி) சந்தேகிக்கப்படும் ரஷ்யாவின் ஆன்டி சாட்டிலைட் மிஸைல் ஆனது ஒரு விண்வெளி வெளியீட்டு வாகனத்துடன் இணைக்கப்படும், பின் புவியின் குறைந்த சுற்று வட்டப்பாதையில் உள்ள, எதிரி நாடுகளின் தொடர்பு மற்றும் புகைப்படங்கள் எடுத்து அனுப்பும் செயற்கைகோள்களை இலக்காகக் கொண்டு உலாவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் சர்வதேச விண்வெளி நிலையம் மற்றும் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி ஆகியவைகள் பூமியின் குறைந்த சுற்று வட்டப்பாதையில் தான் பயணம் செய்கின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

எப்போது சிக்கியது?




ஒரு "மாற்றியமைக்கப்பட்ட" ரஷ்ய மிக் -31 விமானம் ஆனது, சூப்பர்சோனிக் ஏவுகணைக்கு நிகரான ஒரு மர்மமான ஏவுகணையை சுமந்து செல்லும் புகைப்படங்கள், கடந்த செப்டம்பர் மாதம் நடுப்பகுதியில் வெளியானது. ஆக இதன் ஆரம்ப கால சோதனையானது செப்டம்பர் மாதம் முதல் வாரமே தொடங்கி இருக்கலாம் என்கிற ஒரு ஆதாரம். இதுவொரு கேபிடிவ் கேரி டெஸ்ட் ஆகவும் இருக்கலாம், அதாவது விமான பயணத்தின் போது எவ்வாறு இருக்கும் போன்ற மதிப்பீடுகளை செய்யும் ஒரு சாதனையாகவும் இருக்கலாம் என்கிறது மற்றொரு ஆதாரம்.



எப்போது நேரடியான வெளியீட்டு சோதனைகளை  சந்திக்கும்?



"ஆயுதம் மற்றும் விமான சட்டகம் ஆகியவை விமானத்தின் போது ஒன்றாகச் செயல்படுகின்றன என்ற நம்பிக்கையை பெறுவதற்காகவே இம்மாதிரியான சோதனைகள் நடத்த படுகின்றன" என்கிறது சிஎன்பிசி. மேலும் இதன் அடுத்தக்கட்ட சோதனை ஆனது 2019 ல் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தாது அடுத்த ஆண்டு இவ்வகை ஆயுதமானது வெளியீட்டு சோதனைகளை சந்திக்கும் என்று அர்த்தம். மேலும், அமெரிக்க புலனாய்வு அறிக்கையின், இந்த ஏவுகணை வருகிற 2022 ஆம் ஆண்டில் ரஷ்ய ஆயுதக் களத்தில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவின் விளக்கம் என்ன?




இதுசார்ந்த கேள்விக்கு விளக்கம் அளித்த ரஷ்ய அணுசக்தி படைகளின் இயக்குனர் பவெல் போட்விக், ""இது எனக்கு புரிகிறது, இது எனக்கும் தெரியும், இது ஒரு செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதமாக இருக்க சாத்தியக்கூறுகள் உள்ளது" என்று கூறியுள்ளார். மேலும் மாஸ்கோ இதற்கு முன்பு இது போன்ற அமைப்புகளில் பணியாற்றி உள்ளது என்றும் கூறியுள்ளார். "இம்மாதிரியான ஒரு திறனை கொண்டு இருப்பது ரஷ்யாவிற்கு நல்லது தான் என்றும் அவர் கூறியுள்ளார். சீனாவும் அமெரிக்காவும் இதேபோன்ற ஆயுதங்களை உருவாக்கியுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.



நீண்ட காலமாகவே வளர்ச்சி அடைந்து வருகிறது!




வெளியான புகைப்படங்களை பற்றி கருத்து கூறிய, ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தின் இயக்குனரான தாமஸ் கரோக்கோ. "காற்றின் வழியாக தொடங்கப்படும் இயக்க-எதிர்ப்பு செயற்கைக்கோள் ஆயுதங்கள் நீண்ட காலமாக வளர்ச்சி அடைந்து கொண்டு தான் வருகின்றன. அது சீனா, அமெரிக்கா, தற்போது ரஷ்யாவால் நிரூபிக்கப்பட்டுள்ளன" என்று கூறி உள்ளார்.

தீயாய் வேலை செய்யும் ரஷ்யா!




செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் எந்த வகையிலும் புதியவை அல்ல. விளாமிதிர் புதின், தனது நாட்டிற்கு வளர்ந்துவரும் இராணுவ ஆயுதங்களைப் பற்றி அறிவித்த பிறகு, எட்டு மாதங்களுக்குள் இந்த புதிய வெளிப்பாடு வந்துள்ளது என்றால் ரஷ்யா எவ்வளவு தீவீரமாக உழைக்க வேண்டும் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

உங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை!




"கடந்த 15 ஆண்டுகளாக ஆயுத தயாரிப்பில் ரஷ்யாவை முந்தும் முனைப்பின் கீழ் வேலை செய்த அனைவர்க்கும் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக சட்டவிரோதமான தடைகளை அறிமுகப்படுத்திய உங்களால் ரஷ்யாவைக் கட்டுப்படுத்த முடியவில்லை" என்று விளாமிதிர் புதின் கடந்த மார்ச் மாதம் கூறி இருந்ததை மீண்டும் குறிப்பிட்டு காட்ட விரும்புகிறோம்.

No comments:

Post a Comment