Thursday 29 August 2019

தாயகத்தின் தாய் – ச.பொட்டு அம்மான் [புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர்]

அம்மா எமக்கு அறிமுகமான அந்தநாள் இப்போது நினைவில் இல்லை. அது மணிமனைக் கோவைகளை பரிசீலித்தே அறிய வேண்டியதான ஒன்றாக எம் நினைவுப்பதிவுகளில் இருந்து மறந்து போய்விட்டது.எதொவொரு இலக்கத்தாலும் நினைவில் வைத்திருக்க வாகாகத்தெரிவு செய்யப்பட்ட வழமையல்லாத ஏதோவொருயெராலும், கறிப்பிடப்பட்டிருக்கக்கூடிய அம்மாவின் கோவையும்பொல் ஒன்றாகத்தான் தூங்கும். ஆனால் அம்மா எல்லோரையும் போன்ரவரல்ல.

என்றென்றும் மறக்கப்பட முடியாதவராக அந்த அம்மா எம் நிணைவுப்பதிவுகளில்…. கரீர் என்ற கறுப்பு நிறமும், மெலிவான மலர்ந்த முகமும் சளசள வென்ற ஒயாத கதையுமாய்… நகைச்சவை உணர்வுமிக்க ஒரு புலனாய்வாளனால் தமிழகத்து சிரிப்பு நடிகைகளது பெயரில் ஒன்றை புனைபெயராக அம்மாவில் வெளிப் பார்வைக்குத் தெரியும்.சில பெண்பிள்ளைகளுடன் இளையவனாய் ஒரேயொரு மகன் என்பது அந்த மகன் மீது அதீத அன்புக்கு காரணமாய் அமைவது இயல்புதான். அம்மாவுக்கும் அப்படித்தான். சில பெண் சகோதரிகளுடனான அந்த ஒரேயொரு மகன் மீது கொள்ளைப் பாசம்.

காலத்தின் தேவையாக அந்த ஒரேயொரு மகன் போராளியாக ஆனபோது, அம்மாவின் அந்த அதீத பாசத்திற்க்கு சோதனை வந்தது. அந்தச் சோதனை எல்லா அம்மாமாருக்கும் வருவது போன்றபாசத்தின்தளத்தில் எழும்வேதனை மட்டுமல்ல.

******

அம்மா அந்தக் காலத்து பழசுதான். ஆனால் பழமையில் ஊறிய பிற்போக்கு வாதியல்ல. இளமைக்காலத்தில் இருந்தே சமூகத்தின் மீதான பார்வையை செலுத்தக்கூடியவர். எம்மினத்தின் அரசியல் பயணத்தின் அம்சங்களை காலத்தால் அறிந்தவர். மென்முறையில் எழுந்த அரசியல் கோரிக்கைகள் ஆக்கிரமிப்பு வன்முறைகளால் ஒடுக்கப்பட்டதை கண்ணால் கண்டறிந்து குமறியவர். அரசியல் மென்முறைகள் அக்கிரமிப்பு வன்முறைகளால் ஒடுக்கப்பட்டதன் மறவடிவமாக அரசியல் வன்முறை வடிவம் கொண்டதை ஆரம்ப காலத்தில் இருந்தே வியப்புடன் பார்த்தவர்.

காலம் தன்பாட்டில் ஓடி, அம்மா குடும்பமாகி, பிள்ளைகள் பெற்று வளர்த்து..ஒருசராசரி பெண்ணாக, தாயாக ஆனார். இது வரை அம்மாவால் அப்படியாக வாழவும் முடிந்தது. ஆனாலும் மனதில் ஆயுதப் போராட்ட நியாயத்தின் கடமைக்காய் தன் கடைசிப்பிள்ளை அம்மாவின் பாசத்தை கொள்ளை கொண்ட செல்லமகன் ஆயுதம் ஏந்தப்புறப்பட்டதை அம்மா எப்படி எதிர்கொள்வது? பெற்ற பாசமா? இனத்தின் சோகமா? என்ற தர்ம சோதனையில் அம்மா குழம்பி மகனது ஆயுதப்போர் வடிவத்தெரிவை மனதால் எற்று சமநிலைக்கு வர காலம் பிடித்தது.

*****

இப்போது மகன் போராளி. தெருவில் போகவர அம்மாவை எதரிகொள்வான். மகன் இப்போது வளர்ந்து விட்டான். வளர்ந்தவனையே கூட கழந்தையாய் பார்க்கும் அம்மா மனம், இப்போது மகனைக் கண்டு வியந்தது தன்ர சின்னப்பிள்ளை இப்போது எபரிய ஆளாய், ஏதேதோ வேலையாய் அங்கிங்கு ஓடித்திரிவது அம்மாவுக்கு சொல்ல முடியாத பெருமைதான்.இயக்கத்தில் இணைந்த காலத்தில் மகன் சின்னப்பெடியன். வயதுக்கே உரிய வேகமான செயற்பாடும் குழப்படியும் கொண்ட இளைய போரளி. அவன் செய்யும் குழப்படிகள், வாங்கும் தண்டனைகள் எதுவும் அம்மாவுக்குத் தெரியய நியாயமில்லைத்தான். அதே போல் வடமராச்சி பொறுப்பாளர் தண்டனை கொடுத்து களைத்துப்போயா அல்லது இவன்தான் தண்டனை செய்து களைத்தப்போயா என்னவோ ஆள் நெல்லியடியில் இருந்து சாவகச்சேரிக்கு நடந்தெ வந்து சேர்ந்தும் அம்மாவுக்கு தெரிய எந்தநியாயமும் இல்லைத்தான்.

இதற்கிடையில் மகன் சண்டைக்களத்தில் என்ற செய்தியை மட்டுமே கேள்விப்பட்டு கவலைப்பட்ட அம்மா. கடும் சண்டை என்ற செய்தியால் எல்லா அம்மாக்களையும் போல அம்மாவும் பதறிக் கொண்டிருந்த ஒரு பொழுதில் மகன் காயமடைந்த செய்தி, பதறிய மனதுடன் அம்மா ஓடித்திரிந்தும், மகனின் நண்பர்கள் மூலம் அவன் நிலையறிந்து துடித்ததுமாக கழிந்தது நாட்கள். அம்மாவுக்கு மகனின் சுகநலன் அறியும் தொடர்புகளும் ஏற்பட்டுவிட்டன. ‘இதுவொரு சின்னக்காயம் இன்னும் கொஞ்ச நாள்ள காம்புக்கு வந்திடுவான்” என்று பொறுப்பாளர் சொல்லும் பொய்யான கதையை மீறி’ வயிற்றுக்காயம்” பதிணைந்து தையலுக்கு மேல் போட்டிருக்கு” ‘இன்னும் சாப்பிடத் தெடங்கேல்ல” என்று உண்மைகளை அறிந்துவிடும் அளவுக்கு அம்மாவுக்குத் தொடர்புகள் எற்பட்டு அதனை தொடர்ந்து மருத்துவனைக்கு போய்வரவும் தொடங்கிவிட்டா.

மருத்துவமனை’கெதியாக என்னை துண்டு வெட்டி விடுங்கோ உடனே சண்டைக்குப் போகவேணும்” உறுதியின் வெளிப்பாடுகள்.

"என்ர இடத்தில ஆமியின்ர பொடியும் ஆயுதமும் இருக்கு காவு குழு அனுப்புங்கோ”

‘……….” எம்மையா? எதிரியையா? என சிந்திக்க வைக்கும்

எழுத்தில் சொல்லமுடியாத வசவுகள். மருந்தின் மயக்கத்தில் தம் நிலை மறந்து உளறல்கள்.

’ஜயோ தங்கேலாமல் கிடக்கு பெத்தடினைப் போடுங்கோ…..ஓ…”

வேதனை தாங்கேலாமல் கிடக்கு இந்தக் காலை வெட்டுங்கோ” கேட்போரின் கண்களில் இரத்தம் கசிய வைக்கும் வேதனைக்குரல்கள்.

மருந்துக்களின் நெடியை மீறிய புண்களின் மணம்.

******

மகனைப் பிரிந்திருந்த அம்மா தனது பாச உணர்வுகளும் அடிமனத்து விடுதலை உணர்வுக்குமாக ஒரு வடிகாலை தேடிக்கொள்ள, காயமடைந்த போராளிகளை பராமரிப்பவர்களில் ஒருவராகிவிட்டார். இந்தக் காலம் அம்மாவுக்கு விடுதலைப் போரை முன்னை விட கூடுதலாகவே அறிமுகம் செய்து வைத்தது. காயமடைந்த போராளிகளுடனான பரிச்சயமும், பழக்கமும் அம்மாவுக்கு போராட்டத்தின் இன்னொரு பக்கத்தை அறிமுகம் செய்து வைக்க அவவுக்கே தெரியாமல் அம்மா கொஞ்சம் கொஞ்சமாய் மாறிப்போனார்.

வெளியில் இருந்து போராட்டச் செய்திகளை மட்டும் கேட்பதற்கும், வெற்றிகளை கேட்டு மகிழ்சி அடைவதற்கும் அப்பால் அந்தச் செய்திகளின் உருவாக்கத்தின் யதார்த்தம் அம்மாவை அதிகமாக சிந்திக்க வைத்தது.

விட்டுக் கொடுக்கப்பட முடியாததான இவ்விடுதலைப் போராட்டம் இத்தனை கடினமானதா? இவ்வளவு கண்ணீரை வரவழைப்பதா? இழப்புக்களை குறைத்தோ அல்லது குறைக்கவோ ஏதாவது செய்யமுடியாதா? அம்மா அரசியல், இராணுவ வித்தகத்தடன் சிந்தித்தாவோ? இல்லையோ? அம்மாவாகச் சிந்தித்தா. எல்லாப் போராளிகளையும் தன் பிள்ளையாய் பார்த்த அம்மாவாக சிந்தித்தா..

*******


எம் தாயகத்தில் விளைவிக்கும் ஆக்கிரமிப்பு கொடுமையின் ஒரு சிறு பங்காவது எதிரியின் கோட்டைக்குள் திருப்பிக் கொடுக்கப்படுவது அம்மா திருப்தியுடன் பார்க்கும் செய்திதான். அதுவுமல்லாது எதிரியின் பெரும் நிலைகள் அவ்வப்போது ஆங்காங்கே அழிக்கப்படுவதும் அது எதிரிக்கு ஏற்படுத்தும் அதிர்ச்சியும் அம்மா அறிவார். அதில் எம் போராளிகள் இங்க போல் பெரும் இழப்புக்களை சந்திப்பதில்லை என்பதும் அம்மாவுக்கு தெரியும்.

ஏற்கனவே எரிபற்று நிலையில் இருந்த அம்மாவின் மனம்தான் இந்த வழியை நாடிப்போனதோ அல்லது அம்மாவை அறிந்து சந்தித்த அந்த போராளிகள்ததான் அம்மாவின் மனதில் தீயை மூட்டினரோ? என்னவோ? அம்மா இப்போது புலனாய்வுத்துறையின் ஆள், முகவராம் வெளிவேலைக்கான முகவாரம்.

அம்மா இப்போது மாறி விட்டா. முன்பு குடும்பம் அயலவர் என்று எல்லா இடமும் செய்தி சொல்லி மருத்துவமனை சென்று வருபவர். இப்போது சுருக்கமாக வேறெங்கோ தனியாகப் போய்வரத்தொடங்கிவிட்டா. மருத்துவமனை போய்வர நேரம் இருக்குதோ இல்லையோ அம்மா இப்ப அங்கை எல்லாம் போய்வரக்கூடாதம். மருத்துவமனை என்றில்லை. இயக்கம் இருக்கிற இடம் ஒன்றுக்கும் போய் வரவும் கூடாதாம்.இயக்கத்திற்கு ஆதரவாக கதைக்கக் கூடாதாம்.

அம்மாவுக்கு தன்னையே நம்ப முடியாதபடி ஆச்சிரியம் கலந்த பெருமை சி.ஜ.ஏ, கே.ஜி.பி மொசாட் என்று புலனாய்வு அமைப்புக்களை பட்டியலிடுவதுடன் எங்கட வேலைத்திட்டம் என்று ஏதோ விளக்கங்கள். அம்மாவுக்கு எதுவெது விளங்குகிறதோ? இல்லையோ? மனதுக்குள் குறுகுறுவென்று ஆர்வ முனைப்பு.

அம்மாவுக்குள் இப்போது வேறொரு உலகம் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. அவர் இப்போது இன்னொரு ஆளாகவும் செயற்படக் கூடியவராக ஆகிவிட்டார்.தலைநகர் அதிர்ந்தது” தற்கொலையாளி அடையாளம் காணப்பட்டார் ‘புலிகளைத் தேடி வலைவிரிப்பு” சூத்திரதாரி தலைமறைவு” அடையாளம் காணப்பட்டவரின் பெயர் போலியானதென பொலிசார் தெரிவிப்பு” உலகமே செய்திகளை வியப்புடன் நோக்கும். சூழ உள்ள சுற்றத்தினரும் கூட தங்களுக்கு எல்லாம் தெரியும் என்பது போல செய்திகளும் கற்பனைகளுமாக கதைகதையாய் பீற்றித்திரிவார். எல்லாவற்றையும் அமைதியாக அமத்தலாக பார்த்தபடி பட்டுக்கொள்ளாமல் இருப்பா அம்மா.

ஆக, அம்மாவுக்குள் இப்போ வேறொரு உலகம் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. அவ்வப்போது வந்து அன்பு மகனை பார்த்துக்கொள்வது தவிர மற்றும்படி எவ்வளவோ மாறிப்போனா அம்மா.

*****

இதற்கிடையில் அம்மாவுடன் மகனுக்கு சரியான கோபமாம். அம்மாவின் அக்கா பெரியம்மா – மூலமாக செய்தியனுப்பியிருந்தான்.’ இட இவர் பெரிய மனுசானாகி இப்ப இவருக்கு கோபமும் வருமே” என செல்லமாய் சொல்லிவிட்டிருந்தா அம்மா.இவனது போராளி நண்பனொருவன் ஊர்ப்பக்கமாய் வந்தபோது’ சின்னதாய் ஒரு மூஸ் அடித்து அம்மாவிடம் போய் இவனது சுகநலன் சொல்லியுள்ளான். அவனுக்கு சாப்பாடு கொடுக்காமல் அனுப்பிவிட்டவவாம் அம்மா. போய்வந்தவன் குறையாகவோ இல்லை பகிடியாகவோ சொன்னானோ அல்லது அவன் சொல்லாமல்விட இவன்தான் கதைவிட்டு அறிந்தானோ என்னவோ? ஆளுக்கு சரியான கோபம்.

அம்மா வழமையில் அப்படியில்லை. எல்லோரையுயம்’ குறிப்பாக போராளிகளை” உபசரிப்பதில் அதுவும் சக்திக்கு மீறியே உபசரிப்பதில் முன்னிப்பவர்தான். அன்று அந்த ஏழைத்தாய்க்கு என்ன கஸ்ரமோ வசதிக்குறைவோ?

வீம்புக்காக அம்மாவில் கோபம் போட்டாலும் அவ்வப்போது பெரியம்மாவின் வீடு வந்து’ அம்மாவில் இப்போதும் கோபம்தான்” என்று சொல்லிப் போவான்.

மகன் பெரியம்மா வீடு வந்து. அம்மாவில் கோபம் சொல்லி நிற்பதும். அம்மாவின் சமையல் வேலிக்குள்ளால் பயணித்துபெரியம்மா வீடு வந்து மகனிடம் சேர்வதும் நல்லதொரு நாடகம். அம்மாவின் கை மணம் தெரிந்தும் தெரியாதது போல நல்ல சாப்பாடு என பெரியம்மாவை புகழ்ந்து விட்டு போகும் பிள்ளையை வேலியால் பார்த்திருப்பா அம்மா. தான் பார்ப்பது தெரிந்தால் அவருக்கு இன்னும் எழுப்பமாய்ப் போய்விடும் என அம்மா, மறைவாய் நின்று சிரிப்பது தெரியாமல் அம்மாவை தேடுவான் பிள்ளை.

அன்றைய சுகமும் இன்றைய சோகமுமாய் ஆகிப்போன சின்னச்சின்ன ஞாபகங்கள் இப்படி எத்தனை?

******


காலம் கொஞ்சம் ஓடிப் போக மகன் இப்போது முதிர்ந்தவனாகி விட்டான். அம்மா எதிர்பார்க்க முடியாதபடி என் அவனே கூட எதிர்பார்க்காமல் பொறுப்புள்ளவனாகிப் போனான். இயக்கத்தின் ஆசிரியர் அணியொன்றின் உதவியாளன் என்பதும், அவ் ஆசிரியர் அணியுடனும் அவர்தம் பணியுடனும் அவனுக்கேற்பட்ட ஈடுபாடுமாக அவனைப் படிப்படியாக முதிர்ந்தவனாக ஆக்கிவிட்டதோ?

சண்டை அணியில் நிற்கும் போது நண்பர்கள் செய்தது போல அவனும் கரும்புலி விண்ணப்பக் கடிதம் எழுதிக் காத்திருந்தது பழையகதை. இப்போது மொழிப்பெயர்ப்புத் திரைப்பட உருவாக்கற்பொறுப்பை கைமாற்றிக் கொடுத்து விட்டு, அவன் கரும்புலிக்கான அழைப்பை ஏற்றுக்கொண்டதே புதிய நிலை.

அணிசேர்ப்பு, தொடர்வகுப்பு,கடும்பயிற்சி,எதிரியின் தலைநகர் அறிமுகமென தயார்படுத்தல்களுடன், தனிமைப்படுத்தப்பட்ட முகாம் வாழ்வுமாக மகனும் இப்போ வேறொரு உலகிற்கு மாறிப்போனான்.

********

மகன் வழிதெருவில் எதிர்படாமல் போனதும், வழமைபோல தேடிப்போன இடத்தில் சரியான பதில் இல்லாது போனதும் அம்மாவுக்கு என்னவோ போலானது. காணாத மகனை தெருவில் கண்டபோது அவனது புதிய கூட்டாளிகளும், வழமையல்லாத நடை, உடை,பாவனையும் அம்மாவுக்கு எதையெதையோ எண்ணவும் வைத்தது. அம்மாவும் இப்போதும் பழைய அப்பாவி அம்மா இல்லையே.

மகன் இவ்வழியில் கரும்புலியாய் தெரிவு செய்யப்பட்டுவிட அம்மா வெளிவேலைகளில் இருந்து நிறுத்தப்படுவது தவிர்க்க முடியாததாக ஆனது.’ தேவை ஏற்படும் போது அவசரமாக அழைக்கப்படுவீர்கள்” என்ற விளக்கத்தை அம்மாவால் முற்றாக நம்பவோ, புறக்கணிக்கவோ முடியவில்லை. தனக்கு கூறப்படுவது போலிக்காரணம் என்று தெரிந்தாலும் அதற்கு மேல் அம்மாவாலும் ஒன்றும் செய்யமுடியாமல் போக அம்மா, வழமையான அம்மாவாக வாழத்தொடங்கிவிட்டா.

அம்மாவின் சந்தேகத்தை இன்னும் அதிகரிக்க அல்லது தீர்த்து வைக்க காரணமாக இன்னொரு செய்தியும் வந்து சேர்ந்தது. அம்மாவின் உறவுக்கார பெண்மணியொருவர் கொழும்பில் இருந்து வந்திருந்தார். மகனை கொழும்பில் கண்டதை அம்மாவுக்குச் சொன்னது மட்டுமின்றி, தன்னைக் கண்டதை அம்மாவுக்குச் சொல்ல வேண்டாமென்று அவன் சொன்னதையும் வலு கவனமாய் மறக்காமல் சொல்லிவிட்டுப் போனார்.அம்மாவின் மனப்புதிர் மெல்ல மெல்ல விடுபட்டுப்போகும் காலத்தின் ஒரு நாளில்,’சொல்லாமல் கொள்ளாமல் திடுதிப்பென்று” வீடு வந்தான் மகன். பழைய கோபத்தை நினைவூட்டுவதும் செல்லம் கொஞ்சுவதுமாய், அதே பழைய மகனாய்……..ஒரே கொண்டாட்டம். வீடு நிறைந்து போனது. அப்பாவி அப்பாவுக்கும் அக்காளுக்கும், உறவுகளுக்கும் மகனது வீடு வருகையின் காரணம் தெரியாமல் ஒரே கொண்டாட்டம். அம்மாவுக்கு மட்டும் என்ன தெரியும்? ஒன்றுமே தெரியாதுதானே.’மகனது புதிய நடை, உடை பாவனையில்,வித்தியாசம் விளங்காது”‘அவன் கொழும்புக்கு போனதும் தெரியாது”‘அவனது அன்ரி வந்து ஒன்றுமே சொல்லவும் இல்லை” ஒரே மகிழ்ச்சி வீடு நிறைந்த மகிழ்ச்சி..

பிள்ளை ‘அம்மாவை தனக்கு சாப்பாடு ஊட்டி விடக்கேட்டது’ அம்மாவுக்கு நான் தான் தீத்துவேன் என்று கூறி உணவூட்டிவிட்டதும் ஏன் என்று வீட்டில் மற்றயோருக்குத் தெரியாது.’தம்பி இப்ப தான் செல்லம் கொஞ்சுது என்று அவர்கள் பரிகசித்து பேசும் போதும் அம்மா கண்ணீர் மறைத்து, முகம் சிரித்து,’உணர்வு மறைத்து உணவூட்டி…. வீட்டில் ஒரே சிரிப்பும் கொண்டாட்டமும் தான். அம்மாவுக்குத்தான் ஒன்றும் தெரியாதே.

மகன் முகாம் திரும்ப முன்புபோல் அவசரப்படவும் இல்லை. எல்லோரிடமும் விளையாட்டும் , கதையுமாய் கொண்டாடி, உணவுண்டு, பாய்போட்டு நித்திரை கொண்டு அவன் முகாம் திரும்பும் வேளையில் அன்றைய பொழுது இரவைத் தொட்டுவிட்டிருந்தது.

அன்று அவன் சொல்லிவிட்டுப் போனது போல தனயாக வரவில்லை அரை டசினுக்கு அதிகமான அவனது நண்பர்களால் வீடு மீண்டும் களைகட்டியது. அவனது அம்மா,அப்பா, அக்காக்கள், வந்திருந்த அனைவருக்கும் அம்மா, அப்பா,அக்கா ஆயினர். அத்தனை பிள்ளைகளும் மாறி மாறியும் ஒன்றாயும் அம்மா…..என்று உறவு சொல்லி அழைக்க வீடு களைகட்டியது.

ஒன்றும் தெரியாத அப்பாவி அப்பாவும் அக்காக்களும் அவனது புதிய நண்பர்களின் உற்சாகத்தில் கரைந்து போயினர் அம்மாவும் தான். அவவுக்கும் தான் ஒன்றுமே தெரியாதே. அவவும் சேர்ந்து அந்த உற்சாகத்தில்…….. வந்திருந்த எல்லோருக்கும் தடல்புடலாய் சமையல், சாப்பாடு என்று வீடு அமர்க்களப்பட்டபோதும், குசினியும் முற்றமுமாய் பம்பரமாய் சுழன்ற போதும் அப்பாவி அப்பாக்கும் அக்காக்களுக்கும் ஒன்றுமே தெரியாதே…. அம்மாவுடன் வீடே வாசல் வரை வழியனுப்ப அவர்கள் புறப்பட்டு போயினர்.

******

அவர்கள் விடைபெற்று போயினர். அந்தத்தாயின் வழியனுப்பலின் பின்னர் அவர்கள் தாயகத்திடமும் விடை பெற்றுப் போய்……போய் விட்டனர்.

நல்ல சூரியனின் பெயரால் கொடியோரின் ஆக்கிரமிப்புக் கதிர்கள் விலிகாமத்து மண்ணை சுட்டெரித்த காலத்தின் ஒரு பொழுதில் அவர்கள் எதிரியின் கோட்டைக்குள் புதுவரலாறு படைத்தனர்.

வீரமும் அர்பணிப்பும் மட்டுமன்றி மனிதாபிமான நிதானமும் நிறைந்த அவர்களது வெற்றிச் செய்தியால் உலகமே உறைந்து நின்ற வேளையில், தமிழீழத்து எல்லோரையும் போலவே அவனது குடும்பத்திலும் மகிழ்ச்சி வளிப்பாடுகள். ஆனால் அம்மா மனதில்?…

******

மகனது பொறுப்பாளர்களை அம்மா சந்திக்கும் அந்த நாள் வந்தேவிட்டது. மகன் எங்கே? என்பதற்கான வழமையயான பதில்கள் அம்மாவிடம் எடுபடாமல் போக, சந்திக்க வேண்டியது தவிர்க்க முடியாததாக ஆகிப்போனது.

மனுசியின்ர வாயை முதலே அடைச்சுப்போட வேணும். கதைக்க விட்டால் தப்பேலாது” என்ற சிந்தனையில் மகன் நிற்குமிடம் அவனைச்சந்திப்பதில் உள்ள வசதிக் குறைவு…என பொருத்தமற்ற பொய்யான பதில்களுடன் பொருப்பாளர்.

‘மகன் தூரத்தில்…., மட்டகளப்பில்…நிற்கிறான்…வர கொஞ்சம் காலம் செல்லும்” அம்மாவின் முன்னால் இரத்தம் நீராகிப்போன பொருபாளரின் வார்த்தைகள்.

அவரது உயிரற்ற வார்த்தைகளை மீறி அம்மாவின் உறுதியான கேள்வி. ‘எப்படி என்ர மகன் கடைசி வரைக்கும் சரியாக செயற்பட்டவனே………?

‘எனக்கு எல்லாம் தெரியும். நான் பெத்து வளத்த பெடியன் அவன் சொல்கிறது பொய் எண்டு எனக்குத் தெரியாதே” ‘உப்பிடி எத்தனை பொய்களை எனக்கு நீங்கள் சொல்லித்தந்திருப்பியள்”

‘வீட்ட வந்து அவன் நித்திரை கொள்ளேக்க அவன்ர பொக்கற்றுக்குள்ள பார்த்தன் வட்டுக்கோட்டை அடையாள அட்டை வச்சிருந்தவன்” என்ர பிள்ளை அம்மாவுக்கு சொல்லேலாதெண்டு எனக்குத் தெரியும். அதில நான் ஏதும் பிழை விட்டிடக்கூடாது என்று தான் நானும் அவனோடை ஒன்றும் கதைக்கேல்லை.

‘செய்தியை கேட்டுப்போட்டு அக்கா வீட்டை ஒடிப்போய் ரூபவாகினிதான் பார்த்தனான்” முகம் தெரியாததால ஒருதருக்கும் விளங்கேல்லை – பெத்ததாய் எனக்கு தெரியாமல் போகுமே.

‘றெயில் தண்டவாளத்துக்குப் பக்கத்துல கிடக்கிறான் என்ரபிள்ளை…”

அடக்கி வைத்ததெல்லாம் வெடித்ததால் குமுறி அழும் அம்மாவிடம் சொல்ல வார்த்தைகள் இல்லை. உலகத்தில் உள்ள பொய்கள் எல்லாம் எங்கோ ஓடிப்போக விக்கித்து நினறவரிடம் அம்மா அந்த கடிதத்தைக் கொடுத்தா.

தன் வீரச்சாவு வெளிப்படும் வேளையில் அம்மாவுக்கு கொடுக்கவென மகன் எழுதிய கடிதம்.

எங்கோ பிசகுப்பட்டு முன்கூட்டியே அம்மாவின் கையில். எண்ணற்ற தடவைகள் படிந்துறைந்த போன அந்தக் கடிதத்தில் அவன் எல்லாம் எழுதியிருந்தான்.

முத்தாய்ப்பான வரிகள்… உன் கடன் தீர்க்காமல் போகின்றேனம்மா. தமிழீழத்தில் அடுத்த பிறப்பில் உன் வயிற்றில் பிள்ளையாகவே என்னைப் பெற்றிடு அம்மா இப்பிறப்பில் தீர்க்காத உன் கடன் எல்லாம் அப்பிறப்பில் தீர்த்திடுவேன் அம்மா

அம்மா தாயே உங்களை எமாற்ற உங்களின் பிள்ளைகள் நாங்கள் எத்தனை திட்டங்கள் போட்டோமம்மா. ஒன்றுமே கூறாது நீ நின்றதும் வென்றதும் எவ்வண்ணம் தாயே.

தாயகத்தின் தாயே உங்களிடம் நாங்கள் தோற்றுத்தான் போனோமம்மா…

*********

ஆசிரியரை பற்றி….

விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தரான பொட்டம்மான் பற்றி உலகத்திற்கு தெரிந்தவவைகளில் அனேகமானவை புனைவுகளே. புலனாய்வு நடவடிக்கை பணிப்பாளர்களின் துரதிஸ்டம் அவரையும் வாழ்கை முழுவதும் பிடித்திருந்தது. இயற்கையான தனது வெளிப்பாடுகளையும், உணர்வுகளையும் வெளிப்படுத்தும் சுதந்திரம் மட்டுப்பட்டிருந்தது. அவர் ஒரு படைப்பளியாகவும், தீவிர வாசகராகவும் இருந்தார் என்பது பலர் அறியாதது. வன்னியிலிருந்த வெளியான பத்திரிகைகளிலும், இலக்கிய சஞ்சிகைகளிலும் எப்பொழுதாவது எழுதிக்கொண்டிருந்தார். வெளிச்சம் சஞ்சிகையில் அவர் எழுதிய சில கதைகளில் இதுவும் ஒன்று.

Tuesday 27 August 2019

பகத் சிங் எனும் மாவீரன் !

பகத் சிங் இந்தியாவின் விடுதலை வரலாற்றில் ஒரு தனித்துவமான நாயகன். புரட்சிகரமான ஆயுதம் ஏந்திய ஒரு வீரனாக மட்டுமே நம்மில் பலருக்கு அவரைத்தெரியும். பகத் சிங் கண்ட கனவுகள்,கொண்டிருந்த கொள்கைகள்
பிரமிப்பானவை.பதினான்கு வயது இருக்கும் பொழுது பகத் சிங் ஊருக்கு எண்ணற்ற பேர்
வந்திருந்தார்கள். முதலில் யாருமே அந்தப்பக்கம் போகவே இல்லை. என்ன விஷயம் என்று பகத் சிங் கேட்டார். குரு கிரந்த்தசாஹிப் துப்பாக்கி சூடு சம்பவத்தில் மக்களை கொன்று அரசுக்கு எதிராக வந்திருக்கும் கூட்டம் அது என்றார்கள். “அவர்களை முன்னின்று வரவேற்க வேண்டியது நம்முடைய கடமைஇல்லையா ?” என்று கண்களில் ஒளி மின்ன கேட்டு வரவேற்றான் பகத் சிங். ஊரே அவன் பின்னர் அணி திரண்டது.

லாலா லஜபதி ராய் போலீஸ் தடியடியில் கொல்லப்பட்ட பொழுது அதற்கு பழிதீர்க்க உறுதி பூண்டு ராஜகுரு,சுக்தேவ்,ஆசாத் உடன் இணைந்து திட்டமிட்டார்பகத் சிங். அதற்கு காரணமான ஸ்காட்டை கொல்வதற்கு பதிலாக சாண்டர்சை கொன்றுவிட்டார்கள், ஆங்கிலேய அரசாங்கம் அப்பொழுதே இவர்களை தேடிக்கொண்டு இருந்தது

ஏப்ரல் எட்டு அன்று தான் அது நடந்தது. போலீஸ் படைகளுக்கு எல்லையற்ற அதிகாரம் கொடுக்கும் கொடூரமான சட்டத்தை நிறைவேற்ற லாகூரில் மத்திய சட்டமன்றம் கூடியிருந்தது. பகத் சிங் மற்றும் பட்டுகேஸ்வர் தத் இருவரும் இணைந்து மக்கள் இல்லாத இடத்தில் தான் குண்டுகளை வீசினார்கள். இன்குலாப் ஜிந்தாபாத்,ஏகாதிபத்தியம் ஒழிக என்று குரல் கொடுத்துக்கொண்டே அதை செய்து முடித்தார்கள் அவர்கள். தப்பிக முயலாமல் கம்பீரமாக் சரணடைந்தார்கள்.

புரட்சி என்பது எளிய மக்களை கொல்வது அல்ல என்று பகத் சிங் தெளிவாக பதிவு செய்கிறார். கேளாத ஆங்கிலேயரின் செவிட்டு காதுகளுக்கு உறைக்கும் வண்ணம் குண்டுகளால் பேசினோம் என்று கம்பீரமாக சரணடைந்த பின்னர் கோர்ட்டில் சொன்னார் பகத் சிங்.வழக்கு விசாரணையின் பொழுது எப்படி வெடிகுண்டு தயாரிப்பது என்றெல்லாம் விளக்கமாக வகுப்பு எடுக்க எல்லாம் செய்தார் அவர். சிறையில் அடிப்படை வசதிகளே இல்லாத சூழலில் வாழ நேர்ந்தது. சாப்பாடு வாயில் வைக்கவே முடியாது,ஒழுங்கான மருத்துவ வசதிகள்,கழிப்பறை எதுவும் கிடையாது. இதையெல்லாம் எதிர்த்து உண்ணாநோன்பு இருந்து உரிமைகளை பெற்றார்கள் தோழர்கள்.

பகத் சிங் இக்காலத்தில் எழுதிய கடிதங்கள் எல்லாம் குறிப்பிடத்தக்கவை.
அங்கே இருந்த சிக்கல்களை பற்றி ஒரு கடிதத்திலும் புலம்பவில்லை அவர். ‘மூலதன’த்தில் இருந்து, ரூசோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’, வால்ட்விட்மேனின் கவிதை வரிகள், லெனினின் தத்துவங்கள் ,உமர் கய்யாமின் கவிதைகள் என்று எக்கச்சக்கமாக தான் வாசித்தவற்றை பதிவு செய்கிறான் பகத் சிங்.

சுரண்டலற்ற,எல்லாருக்கும் சமநீதி கிடைக்கும் சமுதாயம் விடுதலைக்கு
பின்னர் அமைய வேண்டும் என்றும் அது சார்ந்து என்ன செய்ய வேண்டும் என்று அப்பொழுதே பதிவுகள் செய்கிறார் பகத் சிங். மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகள் மதவாதம் ஒழிய மக்களுக்கு தெளிவை உண்டு செய்ய வேண்டும் என்றும் எண்பது வருடங்களுக்கு முன்பே இருபது வயது இளைஞன் ஒருவன் பதிவு செய்திருக்கிறான் என்பதை நீங்கள் நம்பத்தான் வேண்டும். ‘ஒரு நாய் நம் மடியில் அமரலாம். நம் சமையலறைக்குள் செல்லலாம். ஆனால் ஒரு மனிதன் தொட்டுவிடக்கூடாது…விலங்குகளை நாம் வழிபடுகிறோம். ஆனால் மனிதர்களோடு மட்டும் நெருங்க முடியவில்லை.’  என்று ஜாதியத்துக்கு எதிராகவும் குரல் கொடுத்திருக்கிறார் பகத் சிங்.பகத் சிங்கின் அப்பா அரசிடம் மகனை விடுவித்து விடுங்கள் என்று மன்னிப்பு கேட்டார். பகத் சிங் தன் தந்தையை தான் இனிமேல் தந்தை என்று கொள்ளமாட்டேன். அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த உறவு முறிந்து போனது என்று கடிதம் எழுதுகிறார். அம்மாவுக்கு பகத் சிங் எழுதும் கடிதம் கண்ணீரை வரவைக்க கூடியது. “என் பிணத்தை வாங்க வராதே அம்மா. நீ என் பிணத்தை வாங்கினால் கண்ணீர் விட்டு அழுவாய். அந்த அழுகையில் என் மரணத்தின் விதையில் எழவேண்டிய தாக்கம் எழாமல் போகும் !” என்று குறிக்கிறார்.

சாகிற நாட்கள் நெருங்கிக்கொண்டு இருந்த பொழுது எடை கூடிக்கொண்டே போனது. பகத் சிங்குக்கு. நாட்டுக்காக சாகப்போகிறோம் என்கிற பெருமிதம் அலை மொத்த தூக்கு மேடையை தொடுகிற பொழுது ,”மரணத்தை புன்னகையோடு எதிர்கொள்ளும் ஒரு புரட்சியாளனின் முகத்தை பார்க்கும் பேறு பெற்றீர்கள் நீங்கள் !” என்று விட்டு பகத் சிங் மரணத்தின் வாசலை தொட்டார்.- நன்றி தமிழ் தி ஹிந்து

அன்றைக்கு பகத் சிங் கொஞ்சம் தாமதாக தான் தூக்கு மேடை வந்தார். இறுதிவரை நாத்திகனாக இருந்த அவர் அந்த இடைவெளியில் என்ன செய்தார் என்று கேட்கிறீர்களா ? “சாவதற்கு முன் கொஞ்ச நேரம் கொடுங்கள் வந்து விடுகிறேன் “என்றார் . “ஏன்?” என கேட்டதற்கு,”ஒரு புரட்சியாளன் இன்னொரு புரட்சியாளன் உடன் பேசிக்கொண்டு இருக்கிறேன் .வந்து விடுகிறேன்!” என்றார் .அவர் கையில் இருந்தது லெனின் அவர்களின் அரசும் புரட்சியும் நூல் தான்.

Monday 19 August 2019

கவரிமான் எங்கு வசிக்கிறது ? - ஒரு உண்மை வரலாறு !

கவரிமான் எங்கு வசிக்கிறது ? - ஒரு உண்மை வரலாறு ! முடி விழுந்தால் தற்கொலை செய்து கொள்ளுமா..?  எப்படி தற்கொலை செய்து கொள்ளும்?* 
"மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின் .

என்கிறார் வள்ளுவர்..( 969ம் குறளில் )

கவரிமான் மயிர் உதிர்ந்தால் தற்கொலை செய்து கொள்ளும். அதே போல மானம் மிக்கவர்கள், தம் பெருமைக்கு பாதிப்பு ஏற்பட்ட்டல் தற்கொலை செய்து கொள்வார்கள் என்பது பொதுவாக இந்த குறளுக்கு கூறப்படும் விளக்கம்..

ஆனால் இப்படி ஒரு மான் இருப்பது பற்றி அறிவியல் புத்தகங்களில் இல்லையே ?

குழப்பமாக இருக்கிறது அல்லவா?

அந்த குறளை கவனமாக பாருங்கள்..

அதில் சொல்லப்ப்ட்டு இருப்பது கவரி மான் அல்ல..

*கவரி மா…*

ஆம்..

கவரி மா என்று ஒரு விலங்கு இருக்கிறது..

அதைத்தான் நம் மக்கள் கவரி மான் என்று குழப்பி விட்டனர்..

புறனானூற்றில் இது குறித்த குறிப்பு இருக்கிறது..

"நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி

தண் நிழல் பிணி யோடு வதியும்

வட திசை யதுவே வான் தோய் இமயம்"…

இமயமலை பகுதியில் , கவரிமா என்ற விலங்கு நரந்தை எனும் புல்லை உண்டு , தன் துணையுடன் வாழும் என்பது இதற்கு அர்த்தம்.

அதாவது கவரிமா என்பது தமிழ் நாட்டு விலங்கு அல்ல… இமயமலையில் வாழும் விலங்கு என்பது முதல் ஆச்சரியமாக இருக்கும் பலருக்கு ஆனால் புறனாநூறும்,  திருவள்ளுவமும் இமயமலையில் வாழுகின்ற விலங்கு பற்றி பேசிய காலத்தில் *இமயம் முதல் குமரி வரை* தமிழ்தான் மக்கள் பேசினார்கள் என்பதை அறிந்து உணர்ந்தவர்கள் ஆச்சர்ய பட மாட்டார்கள். 

கவரிமா என்பது மான் வகையை சார்ந்தது அல்ல.. *மாடு வகையை சார்ந்தது* என்பது அடுத்த ஆச்சரியம்..

வள்ளுவர் சொன்னது இதைத்தான் !!

இந்த கவரி மா குறித்து பதிற்று பத்து போன்றவற்றில் குறிப்புகள் உள்ளன.

முடி சடை போல தொங்க கூடிய விலங்குதான் கவரிமா…

இந்த முடியை வெட்டி எடுத்து செயற்கை முடி உருவாக்குவது வழக்கம்..

கவரி என்பதில் இருந்துதான் *சவரி* முடி என்ற இன்றைய் சொல் உருவானது..

மா என்பது மிருகங்களுக்கு உரிய பொதுவான சொல்.

சரி..

இந்த குறளுக்கு அர்த்தம் என்ன?

பனி பிரதேசத்தில் வாழும் கவரிமாவுக்கு , அதன் முடி கடுங்குளிரில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது..

அதன் முடி நோயினால் உதிர்ந்தாலோ, மனிதர்களால் வெட்டப்பட்டாலோ, குளிரினால் இறந்து விடும்.. 

அதே போல சில மனிதர்கள், அவர்கள் பெருமைக்கு பங்கம் வந்து விட்டால், அவர்கள் வாழ்வது சிரமமாகி விடும்…

எனவே, குறள் சொல்வதில் தவறு இல்லை..

பெரும்பாலானான உரைகளும் தவறு இல்லை..
ஆனால் 
ஆனால் கவரிமா வை கவரிமான் என புரிந்து கொள்வது தவறு.. 

பண்டைய தமிழர்கள் வாழ்ந்த எல்லை இன்றைய தமிழ்மாநிலம் என எண்ணுவதும் தவறு. ...

இமயம் முதல் குமரி வரை *தமிழ் பேசிய மக்களே வாழ்ந்தனர்* என்பதே உண்மை வரலாறு. 

தமிழில் இருந்து உடைந்த மொழிகளே தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற பல மொழிகள்.  

Saturday 17 August 2019

நரிகளுக்கும், பச்சோந்திகளுக்கும் தேசியத் தலைவர் பிரபாகரனை புரிந்துகொள்வது கடினமே...!

தலைவர்பிரபாகரனின் உயர்ந்த பண்புகள்…தலைவர் பிரபாகரனின் தோற்றம் வரை, தமிழர்களின் வீரவரலாறாக சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வரலாறே எமக்கு ஊட்டப்பட்டது. பரம்பரை பரம்பரையாக தமிழர் மரபில் கடத்தப்பட்டு, தமிழர்களை நெஞ்சுநிமிர வைத்தவர்கள் இந்த மன்னர்கள்.

ஆனால், தமிழரை மட்டுமல்லாது இந்த உலகத்தையே தன் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தவர் எமது தலைவர் பிரபாகரனே. செல்லும் இடமெல்லாம் தமிழருக்குக்கென்று ஒரு அடையாளத்தை கொடுத்தவர்கள் புலிகளென்றால் அது மிகையாகாது.

முகம் தெரியாத ஒரு வெள்ளையனிடமோ அல்லது கருப்பனிடமோ நீ யார் என்று அவர்கள் கேட்கும் கேள்விக்கு, தமிழன் என்று கூறிப்பாருங்கள், உடனே அவர்களிடமிருந்து வரும் கேள்வி “தமிழ்ப் புலியா” எனப் புன்னகையுடன் வெளிவரும்.!தமிழ்மொழியை தாய்மொழியாக்கொண்டவர்களுக்கு புலிகளே இன்று அடையாளம். இங்கே தான் புலி எதிர்ப்பாளர்கள் வெளிவருகின்றனர். பிரபாகரன் என்னும் தாரகமாத்திரம் தமிழரை ஒன்றிணைவதை, தமிழர் விரோத சக்திகள் விரும்புவதில்லை.

இதனால் தான் எமது முன்னோர்களான வீரமன்னர்களின் வரலாற்றையும் மறைத்தனர்.

இப்போது, உலகத்தமிழரை ஒன்றிணைக்கும் ஒரே சொல்லாக தலைவர் பிராப்பகரனே இருக்கின்றார் என்பதால், இன்று தலைவரை இளம் தலைமுறையினர் நெஞ்சில் வைத்து சுமக்கின்ரனர்.இதன் அபாயத்தை உணர்ந்த புலி எதிர்ப்பு சக்திகள், தலைவர் பிரபாகரனுக்கு சேறடிக்கும் முயட்சியில் இறங்கியுள்ளது. அதற்கு அவர்கள் சமூகவலைத்தளங்களையே பாவிக்கிறனர். இதில் பிரதான பங்கு வகிப்பவர்கள் யாரென்று பார்த்தால் 2009 வரை முக்காடு போட்டு மறைப்பில் திரிந்த சிலரே ஆகும்.

எமது மக்களால் தேசத்துரோகிகளாக முத்திரை குத்தப்பட்டு, தமிழர் மரபிலிருந்தே ஒதுக்கப்பட்ட சிலரே இதில் முன்னிக்கின்றனர். இதில் பலர் தங்கள் தவறை உணர்ந்து ஒதுங்கி விட்டனர். சிலர் இப்போது மீள் சுழற்சியில் தயார்படுத்தப்பட்டு களம் இறக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின்முக்கிய பணி தலைவருக்கு சேறடிப்பது, புலிகளின் வீரத்தையும் தியாகத்தையும் கொச்சைப்படுத்துவதே முதல் நோக்கம். அவர்களின் நோக்கம் தலைவரை பெரும் கொலைகாரன் போல சித்தரிப்பதேயாகும்.!
புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் அல்லது தண்டனைகளை இன்று அது ஒரு குற்றம் போல நிறுவ முற்படுகின்றனர். இந்த தண்டனைகளை புலிகள் ஏன் வழங்கினர் என்பதை நாசுக்காக மறைத்துவிடுகின்றனர்.
இவர்கள் போன்றவர்களிடம் இளையதலைமுறையினர் மிக அவதானமாக இருக்கவும். தயவு செய்து இவர்களை கடந்து போங்கள். இவர்கள் விரிக்கும் மாயவலையில் சிக்காதீர்கள்.எனது பதிவுகள் ஊடாக நான் கடந்துவந்த பாதைகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள்?

அந்த பயணங்களின் போது தலைவருடனான எனது சந்திப்பில் “நான் எவ்வாறு தலைவரைப் புரிந்து கொண்டேன்.?

எனது பார்வையில் தலைவர் எப்படியானவர் என்பதை,1988களின் மணலாற்றில் வைத்து ஒரு வருட காலம் அவருடன் பயணித்த போதும், பின்னர் வேறு துறையில் பயணித்தபோது, அவருடனான சந்திப்புகள் மூலம், நான் அவரைப்புரிந்து கொண்டதை, உங்களோடு பகிர விரும்புகின்றேன்.! தலைவரைப்பற்றி பலர் கூறியதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். நான் கூறப்போவது எனது பார்வையில் அவர் எப்படியானவர்.?

இந்திய இராணுவ முற்றுகையின் போது, அந்த நேரங்களில் முகாமில் போராளிகள் என்ன உணவை உண்டார்களோ, அதுவே அவரது உணவாகவும் இருந்தது. தனக்கென்று ஒருபோதும் சிறப்பான உணவை சமைத்து அவர் உண்டதில்லை.!

நேரத்தில் கஞ்சியோ அல்லது பருப்பும் சோறும் என்றாலும் அது போராளிகளுக்கு கிடைத்துவிட்டதா என்பதை உறுதி செய்தபின்பு தான் தனது உணவுக்கு தயாராவார். பருப்பும் சோறும் என்றாலும் அந்த உணவை ரசனையோடு உண்பார். யாரவது தன்னை பார்க்கவந்தால், நலம் விசாரித்தபின் அவரது கேள்வி “சாப்பிட்டியா”..!அவர் தன்னுடன் நிற்கும் போராளிகளுக்கு மட்டுமல்லாது, போராளிகள் அனைவரும் இரவு உணவருந்தியதும் பல் துலக்க வேண்டுமென்றும், மலசல கூடம் சென்று வந்ததும் சவக்காரம் இட்டு கைகழுவ வேண்டும் என்பதையும் தந்தைக்குரிய கண்டிப்புடன் கூறுவார்/அதை நாம் கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்துவார். அதை கடைப்பிடிக்க (மறந்துபோய் விடுதல்) தவறியோரை தண்டனைகள் மூலம் நல்வழிப்படுத்துவார்.
உணவுகளைவீணாக்குவது அல்லது பராமரிப்பு பொருட்களை (சம்பூ,சவற்காரம்,உடைகள்,பாதணிகள் போன்றவை) வீணாக்குவதை கடுமையாகக் கடிந்துகொள்வார். அது மக்கள் பணம் என்பதை அடிக்கடி போராளிகளுக்கு வலியுறுத்துவார்.

இது எனக்கு கிட்டண்ணை கூறியது.!ஆரம்பகாலங்களில் தானும் ரஞ்சண்ணையும், போராட்டம் சம்பந்தமாக வெளியில் சென்று களைத்துப்போய் முகாம் திரும்பினாள். தாங்கள், கழட்டிப்போட்டுவிட்டு சென்ற அழுக்கான உடைகளை (உள்ளாடைகள் உட்பட) தலைவர் தனது ஆடைகளுடன் சேர்த்து துவைத்து வைத்திருப்பாராம்.  அத்தோடும் தங்களுக்கு சமைத்து தருவதற்கும் அவர் ஒரு போதும் பின்நின்றதில்லை என்பார் பெருமையாக. இது தான் எங்களின் தலைவர். இதே பழக்கம் போராளிக்குள்ளும் கடைசிவரை இருந்தது.

புலிகளமைப்பில்எல்லா போராளிகளுக்கும் தலைவருடன் நிற்கும் சந்தர்ப்பம் அமைவதில்லை, அவருடன் நிற்கும் போராளிகளுக்கு சுகயீனம் என்றால், ஒரு தாயின் பரிவும், அன்பும் நிச்சையம் கிடைக்கும். அந்த உண்மையான கருணையை நானும் அனுபவித்தேன்.!

புன்னகையுடன்தாக்குதலுக்கு போராளிகளை அனுப்பிவிட்டு, தனது மன இறுக்கத்தை வெளிக்காட்டாது, உண்ணும் உணவில் நாட்டமில்லாது, அவர்கள் வரவுக்காக காத்திருப்பார்.

வீரச்சாவடைந்தபோராளிகளின் உடல்கள் மீதான அஞ்சலிகளின் போதோ அல்லது பின்னரோ, அவர் அழுததை நான் கண்டதில்லை. ஆனால், அந்த மரணத்திற்கு காரணமானவர்களை பழிவாங்கும் எண்ணத்தை, தன்னுள் விதைத்து, அதை நிச்சையம் ஒரு நாள் நிறைவேற்றுவார்.பழிவாங்கும் எண்ணம் எப்போதும் அவருடன் இருப்பதை கண்டுள்ளேன்.
வரலாற்று நாவல்களைப்படிப்பதில் மிகுந்த ஆர்வமுடையவர், அதைப்போராளிகளும் படிக்க வேண்டுமென்று எங்களுக்கும் வலியுறுத்துவார். அதன் தாக்கம் இன்றுவரை என்னுள் தொடர்கின்றது.
2ம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்த பின்னர்போ, ராளிகள் தலைவருக்கு எழுதும் கடிதங்களை, அவரே படிக்கும் பழக்கமுடையவர். இதனால் இரவு நித்திரைக்கு செல்வது தாமதமாகின்றது என்பதால் பொறுப்பாளர்களால், முக்கியமான பிரச்னை இல்லாவிட்டால் தலைவருக்கு கடிதமெழுத்துவதை தவிர்க்கும் படி, அண்ணைக்கு தெரியாமல் அன்புக்கோரிக்கை விடப்பட்டது. காரணம் இரத்த அழுத்த தாக்கம் அன்றைய நேரம் தலைவரிடம் இனம் காணப்பட்டமையே இதற்கு காரணம்.

தனக்கு தெரியாத எந்த விடையமானாலும், அது பற்றித் தெரிந்த, சிறிய போராளிகளாக இருந்தாலும் கேட்டுத்தெரிந்து கொள்வதற்கு அவர் பின்நின்றதில்லை. அவரிடம், எமது எந்தக்கேள்விக்கும் சரியான பதில் இருக்கும்.!

#ஒருசிறியபோராளியின் கூற்று, சரியாக அவருக்கு தோன்றினால், அதை ஏற்பதற்கு, ஒரு போதும் அவர் தயங்கியதில்லை.

# எந்த நெருக்கடியான சந்தர்ப்பத்திலும் அவர் நிதானம் இழந்ததில்லை. அந்த நேரத்தில் அவரது முடிவுகள் தெளிவாகவே அவரிடமிருந்து பிறக்கும்.

#போராளிகளுடன்உரிமையுடன் உரையாடுவதே அவரது தனிச்சிறப்பு. அம்மான் தொடங்கி சிறிய போராளிவரை அந்த உரிமை,பாகுபாடின்றி தொடரும்.

#பொறுப்பாளராகஇருந்தாலும் சரி போராளியாக இருந்தாலும் சரி பிழைகளுக்கான(யுத்த பின்னடைவுகளுக்கு) தண்டனை பாகுபாடின்றி கிடைக்கும். இதில் அம்மான் தொடங்கி பானு அண்ணை, பால்ராஜ் அண்ணவரை பெரும் பாலும் எல்லாத்தளபதிகளும் பாகுபாடின்றி தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

#1990இல் ஈழப்போர் தொடங்கிய நேரம், பலாலியில் இருந்து எதிரி முன்னேறிக்கொண்டிருந்தான். அப்போது போராளிகள் அணியொன்று குப்புளான் பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த நேரம், அதிகாலை 3மணிக்கு எழுந்து ரோந்தில் சென்று வந்த அணியை, திடீர் என்று அங்குவந்த தலைவர், போராளிகளுடன் உரையாடும் போது, மாசிப்பனியினால் தலைமுழுவதும் ஈரமாக இருந்த போராளிகளை தொட்டுப்பார்த்து மனம் வருந்தினார்.

தன்னுடன் வந்த ரிச்சர்ட் (இவர் பின்னர் மரணமடைந்துவிட்டார்) என்பவரை அனுப்பி, எல்லோருக்கும் ரெஸ்சீன்(மெழுகுத்துணி) கொண்டு தொப்பி தைத்து கொடுத்தபின்,அவரை முகாம் திரும்பும்படி கூறிச்சென்றார். அன்று இரவே போராளிகள் எல்லோருக்கும் அந்த தொப்பி வந்துசேர்ந்தது.!

#ஒரு சந்திப்பின் பின் ஒரு பயணத்தின் போது ஒரு கர்ப்பணிப் பெண்னொருவர், கைவேலிக்கும், சுதந்திரபுரத்துக்கும் இடையில் கொளுத்தும் வெய்யிலில், ஒரு குழந்தையையும் தூக்கி சுமந்தபடி நடக்கமுடியாது சென்றதை கண்டா தலைவர், பாதுகாப்பு போராளிகளின் எச்சரிக்கையை கடிந்து வாகனத்தை நிறுத்தி, அந்த பெண்மணியை வாகனத்தில் ஏற்றியபின் தான் தெரியும், சுகவீனமுற்ற கணவனால் வரமுடியாமையால் நிவாரணப்பொருட்கள் வாங்குவதற்கு புதுக்குடியிருப்பு செல்வதை அறிந்து தனது போராளியொருவரையும், அந்த தாயுடன் துணைக்கு அனுப்பி தமிழ்ச்செல்வண்ணை ஊடாக அந்தக் குடும்பத்துக்கு உதவவைத்தார்.

#அது போலவே தான் தேராவில் பகுதியில் வைத்து கட்டுத்துவக்கு வெடித்து காயமுற்ற ஒருவரை தனது பாதுகாப்பையும் பொருட்படுத்தாது வைத்திய சாலைக்கு அனுப்புவதற்கு தான் இறங்கி காட்டில் நின்றுகொண்டு, அவர்களுக்கு உதவ முன்வந்தார். இந்த சந்பவத்தில் கூடயிருந்த அம்மான் பின்னைய நாட்களில் அடிக்கடி எமக்கு சொல்வதற்கு தவறவில்லை.

#மன்னார் பேசாலை, இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் கிறிஸ்தவ மக்களின் இறந்தவர்களின் நினைவு நாள் நிகழ்வொன்று அவர்களின் இறந்தோரைப்புத்தைக்கும் சேமக்களையில் பூசையின் நிறைவின் பின் அதில் பங்குபற்றிய இராணுவ உளவுத்துறை அதிகாரியை மேஜர்.ஜோனுடன் சென்ற இன்னொரு போராளி சுட்டு கொன்றுவிட்டார். நீண்டநாள் இலக்கு புலனாய்வுத்துறை போராளிகளால் அன்று அழிக்கப்பட்டது.

இதற்கு கிறிஸ்த்தவ மக்கள் தங்கள், புனித நாளில் இந்த தாக்குதல் நிகழ்ந்தமையால் தமது கண்டனத்தை கடிதம் மூலம் தலைவருக்கு தெரிவித்தனர். தலைவர், அந்த தவறை உணர்ந்து, அதற்கான மன்னிப்பை அரசியல்துறை ஊடாக அந்த மக்களுக்கு தெரிவித்தார்.

இந்த தாக்குதலை வழிநடத்திய புலனாய்வு அதிகாரியை பதவி குறைத்து தாக்குதல் மேற்கொண்ட போராளிக்கு ஒரு மாதம் பங்கரில் அடைக்கப்பட்டார். இது வெளித்தெரியாத போதும், கிறிஸ்தவ மக்களின் நம்பிக்கையில் தலைவரோ அல்லது போராளிகளோ தலையிட்டதில்லை இதுவும் தலைவரின் பெரும் சிறப்பு. இப்படி பல சம்பவங்கள் இருந்தபோதும், இந்த மூன்று சம்பவங்களும் போதும்,” தலைவர் எமது மக்களை எந்தளவு தூரம் நேசித்தார்” என்பதைக்காட்டுவதற்கு.!

#1997ம் ஆண்டு திருநெல்வேலியில் வைத்து, உளவுஇயந்திரத்தில் வந்த சிங்கள இராணுவத்தினர் மீது ஒரு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் நான்கு பெண் சிப்பாய்கள் உட்பட 14 சிங்களப்படையினர் பலியாகியிருந்தனர். இது வெற்றிகரமான தாக்குதல் என்றபோதும், எம் மக்களுக்கு எந்த சேதமும் வரக்கூடாது என்று கண்ணும் கருத்துமாக இருந்தபோதும் திடீர் என்று அவ்விடத்துக்கு வந்த இரண்டு மாணவிகளும் பலியாகினர்.

இதனால் சினம் கொண்ட தலைவர், இந்த தாக்குதலை மேற்கொண்ட அதிகாரியையும், போராளியையும் மூன்று மாதம் 4×4 கம்பிக்கூட்டினுள் அடைத்து தண்டனை வழங்கினார். பொறுப்பாளர் என்ற ரீதியில் அம்மானும் கடும் திட்டை வாங்கினார். வெளித்தெரியாத போதும் இப்படியான அசம்பாவிதங்களை தலைவரின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும்.!

#புத்தூரில் ஒரு சம்பவம். குறிப்பிட்ட இடமொன்றில், இராணுவ முகாமுக்கு அருகில் உள்ள பற்றையினுள், கள்ளிறக்கும் ஒருவரால், ஒரு கானில் கள்ளு மறைத்து வைக்கப்படும். இதை குறிப்பிட்ட காவலரணில் நிக்கும் சிப்பாய்கள் ஒவ்வொருத்தராக வந்து,அந்தக் கள்ளைக் குடித்துவிட்டு செல்வார்கள்.

இதை அறிந்த உளவுத்துறைப் போராளிகள் அந்த கள்ளுக்கானுக்குள், தங்களிடமிருந்த இரண்டு சயனைட் குப்பிகளை உடைத்து சயனைட் பவுடரை போட்டுவிட்டு வந்தனர். அதை அருந்திய நான்கு இராணுவத்தினர் மாண்டனர்.

போராளிகளின் பார்வையில் இது வெற்றிகரமான தாக்குதல். ஆனால், இந்த தாக்குதலின் பின் சம்பந்தப்பட்ட போராளியுடன் அம்மானும் தலைவரை சந்திக்கப் போன போது தலைவர் கூறினார். இந்த சம்பவம் என்னைத் தலைகுனிய வைத்துவிட்டது. வீரர்கள் ஒரு போதும் எதிரியை நஞ்சுவைத்து, நயவஞ்சகமாக கொல்லமாட்டார்கள்.

நேருக்கு நேர் மோதியே வெல்வார்கள் என்பதை மிகுந்த கோபத்துடன் கூறித்திட்டினார். திட்டுவாங்கியபின், அந்த போராளிக்கு ஒரு மாத பங்கரும், பொறுப்பாளருக்கு கடும் திட்டும் கிடைத்தது.

போரில் கூட தனக்கென ஒரு விதிமுறையை வைத்து, அதை போராளிகளிடம் எதிர் பாக்கும் தலைவர்.! இப்படி ஆயிரம் விடையங்கள் இருந்த போதும், பதிவின் நீளம் காரணமாக முக்கியமானவற்றை மட்டும் உங்களோடு பகிர்ந்துள்ளேன்.!இது தான் எங்கள் தலைவன். எதிரிக்கு கூட வீரமரணம் தான் கிடைக்கவேண்டும் என்பதில் உறுதிகொண்ட தலைவன்.! 

உறுதியில் உருக்கை ஒத்த குணம் கொண்ட போதும் மனத்தால் குழந்தை போன்றவர். நகைச்சுவைகளை ரசித்து மனம் விட்டுச்சிரிக்கும் அழகு தனியழகே..

ஒரு சிலரைத்தவிர தமிழர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு, அவரை ஒரு போதும் கண்ணால் காணாதபோதும், அன்புசெய்யும் ஒரு தலைவன், எமது தலைவன் மட்டுமே.!

நன்றி

ராஜ் ஈழம்..