Monday 25 November 2019

யார் இந்த பிரபாகரன்…?

தமிழன் யார் என்பதை அகிலமே திரும்பிப் பார்க்க வைத்தவர் ஒரு நாட்டின் வரலாற்றை மாத்தரமல்ல உலகின் பெரும் பகுதி  வரலாற்றையே தலைகீழாக புரட்டிப் போட்ட ஈழப் போராட்டத்தின் நாயகன் பெயர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உலகத் தமிழினத்தின் எண்ணம், சொல், செயல், மாற்றமடையக் காரணமானவர் பிரபாகரன்.




தமிழர்களுக்கு தமிழுணர்வை ஊட்டியவர். சோம்பிக் கிடந்த இனத்தைத் தட்டியெழுப்பினவர் என்பதோடு நிறுத்த முடியாது. பூமிப் பரப்பெல்லாம் தமிழின் விதை விதைக்கக் காரணமானவர் அவர்தான.; சென்ற இடத்தில் மறைந்து வாழ்ந்த தமிழர்களை நான் தமிழன் என்று துணிந்து சொல்ல வைத்தவர் பிரபாகரன் தான் .

இனித் தமிழர் வரலாறு தூக்க நிலைக்குத் திரும்ப வாய்ப்பில்லை அவர் அடியெடுத்த போராட்ட மரபு தொடரும். கூலிகள் என்றும் வந்தேறு குடிகள் என்றும் நாதியற்றவர்கள் என்றும் தூற்றப்பட்ட உலகத் தமிழர்களை வலிமை பெற்று உரிமை கோர வைத்தவர் தலைவர் பிரபாகரன்.

இணையத்தில் தமிழ் உலகின் முக்கிய மொழிகளில் ஒன்றாகத் திகழக் காரணமானவர் தமிழியலுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் ஊக்கு கருவியாகத் திகழ்பவர் தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாடு, தமிழன் தோற்றம், வளர்ச்சி பற்றிய ஆய்வுக்குத் தோன்றாத் துணையாக நிற்பவர்
பலரை வரலாறு படைக்கின்றது ஒரு சிலர் வரலாற்றைப் படைக்கிறார்கள் அந்தச் சிலரில் ஒருவர் பிரபாகரன். மிக விரைவில் பிரபாகரன் யுகம் தோன்றும் அப்போது உலகம் நினைத்துப் பார்க்காத உயரத்திற்க்குத் தமிழினத்தைப் பிரபாகரன் தூக்கிச் சென்று நிறுத்தியதைத் தமிழினம் உணரும்.

அன்று தொட்டு இன்று வரை தமிழரின் போரட்டம் அற வழியைத் தழுவி நிற்கின்றது அகிம்சை வழியிலும் சரி, ஆயுத வழியிலும் சரி தமிழர் வரித்துக் கொண்ட போராட்டம் தர்மத்தின் நியமத்தில் நெறிப்பட்டு நிற்கின்றது அவர் நடத்திய ஈழவிடுதலைப் போர் தார்மீக அடிப்படையிலானது. அது தமிழர்களின் ஆன்மபலமாகவம் இருந்து வருகிறது.


சிங்களவர்கள் உண்மையான புத்த மதத்தினராக இருந்தால் தமிழீழ விடுதலைப் போருக்கான அவசியம் இராது சமாதானப் பேச்சென்றாலும் சரி, போர் என்றாலும் சரி, சிங்களவர்கள் நேர்மை, நிதானம், காருண்யம் அற்றவர்களாக வெளிப்படுகிறார்கள் சிங்களப் பயங்கரவாதம் ஈழத் தமிழர்களின் தேசிய ஆன்மாவில் விழுத்திய வடுக்கள் என்றுமே மாறப்போவதில்லை.

“ விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் புரட்சிகர அரசியல் பாதை’ என்று பிரபாகரன் மிகச் சுருக்கமாகக் கூறியிருக்கிறார். அவர் தொடர்ந்து பேசுகிறார் விடுதலை என்ற இலட்சியத்தை நாம் இலகுவாகத் தேர்ந்தெடுக்கவில்லை. வரலாறுதான் அதை எம்மிடம் வலுக்கட்டாயமாகக் கையளித்துள்ளது சுதந்திரம் வேண்டுவதைத் தவிர வேறு வழி எதையும் வரலாறு எமக்கு விட்டு வைக்கவில்லை .



தமிழர்களை ஏமாற்றுவதும் அடிமை கொள்ளும் நோக்குடன் இன அழிப்புச் செய்வதும் சிங்கள தேசத்தின் பாரம்பரிய நடைமுறை. தற்காக புத்த மதத்தைத் துணைக்கு அழைக்க அவர்கள் தயங்கியதில்லை சிங்கள மக்களின் பாலி மொழி இதிகாசமான மகாவம்சத்தின் நாயகனான துட்ட காமினி போர் மரபை மீறீத் தமிழ் மன்னன் எல்லாளனை வஞ்சகமாகக் கொன்றான் பல்லாயிரம் தமிழர்களையும் அதே போரில் அவன் கொன்றான்.

இரத்த வெறி அடங்கியபிறகு அவன் சோர்வடைந்து மாளிகை உப்பரிகையில் படுத்திருந்தான் உயிர்ப்பலி அவனை துயரடையச் செய்ததாக மாகவம்சம் கூறுகிறது அவனுக்கு ஆறதல் மொழி கூறுவதற்காக எட்டு புத்த பிக்குகள் வான் மூலம் பறந்து அவனிடம் வந்து சேர்ந்தனர்.
புத்த மதத்தைச் செராதவர்களைக் கொல்வதில் பாவமில்லை என்ற ஞான உபதேசத்தை பிக்குகள் மன்னனுக்கு வழங்கி அவனுக்குப் புத்துணர்ச்சி ஊட்டியதாக மகாவம்சம் கூறுகிறது அண்மையில் புத்த பிக்கு ஒருவர் வெளியிட்ட ஆங்கில ஆய்வு நூலில் சிங்கள தேசியத்தின் அதியுச்சம் துட்டகாமினியின் தமிழ்ப் படுகொலைகளின் போது எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிங்கள பௌத்தம் என்ற புதிய மதத்தைச் சிங்களப் பேரினவாதிகள் உருவாக்கியுள்ளனர் திவ்வியஞான சபையைச் சேர்ந்த (Theosophical society ) காலஞ்சென்ற  கிருஷ்ணமூர்த்தி கொழும்பு வந்த போது இதைக் கடுமையாகச் சாடியுள்ளார் .

சிறிலங்கா தனது அரசியல் சாசனத்தின் மூலம் புத்த மதத்திற்கு மேலிடம் வழங்கியுள்ளது புத்த மதத்தைத் பாதுகாத்தல் அரசின் பொறுப்பு என்று அரசியல் சாசனம் இடித்துரைக்கிறது. சிறிலங்கா மதச் சார்புள்ள நாடு. படிப்படியாகப் பிற மதங்களின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது
தமிழ் நாட்டிலும் தமிழீழத்திலும் தமிழர் மத்தியில் புத்த மதம் முன்னர் செழித்தோங்கி இருந்தது 7ம் நூற்றாண்டில் தொடங்கிய சிவ மதத்தின் மறுமலர்ச்சிக்குப் பிறகு இரு பகுதிகளிலும் புத்த மதம் மங்கிவிட்டது ஆனால் வரலாற்றுச் சின்னங்கள் கிடைக்கின்றன.


ஈழத் தமிழர் வாழும் பகுதிகளில் புத்த சின்னங்களும், புத்த கோயில்களின் எச்சங்களும் காணப்படுகின்றன இவை சிங்கள பௌத்தத்தின் அடையாளங்கள் என்று சிங்கள பௌத்த பேரினவாதிகள் புதிய வரலாறு படைக்கின்றனர் யாழ் கந்தரோடையிலுள்ள புத்த மத இடிபாடுகள் சிங்கள பௌத்தத்திற்கு உரியவை என்ற வாதம் நிறுவப்படுகிறது.
கந்தரோடை இடிபாடுகளுக்கு சிங்களப் பெயர் சூட்டப் பட்டுள்ளதோடு சிங்களப் புத்த பிக்குகளும் அங்கு நிலைகொண்டுள்ளனர் பிக்குகளின் பாதுகாப்பிற்காக சிங்கள இராணுவ அணி நிறுத்தப்பட்டுள்ளது பாலஸ்தீன அரபு மக்களின் பூர்வீக நிலத்தை ஆக்கிரமிக்கும் யூத அரசு போலி வரலாற்று செய்திகளைக் கூறுவது வழமை.

பழைய ஏற்பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட பெயர்களை ஆக்கிரமிப்புச் செய்த நிலத்திற்குச் சூட்டியபின் அது புராதான கால யூத நிலம் என்று உரிமை  கோருவது இஸ்ரேலிய நடைமுறை இதைச் சிங்கள அரசும் பின்பற்றுகிறது சிறிலங்கா சுதந்திரம் பெற்ற நாட்தொட்டுத் தமிழர் நிலத்தில் சிங்களக் குடியேற்றங்கள் இடைவிடாது நடக்கின்றன.



எந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் வெப்ப வலய மேம் பாட்டுத் திட்டம் என்ற பெயரில் சிங்களக் குடியேற்றம் தமிழர் எதிர்ப்பையும் மீறி முன்னெடுக்கப் படுககின்றது இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படை தமிழர்களை விரட்டுவதற்கும் குடியேற்ற வாசிகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

தமிழர் நிலத்திற்க்குப் புதிய சிங்களப் பெயர் சூட்டும் செயற்பாடு இன்னுமோர் பக்கத்தில் நடக்கிறது பெயர் மாற்றம் செய்யப்பட்ட தமிழ் மண்ணின் பட்டியல் மிக நீளமானது மிக அண்மையில் முல்லைத்தீவு மூலதூவ என்றும் கிளிநொச்சி கிரானிக்கா என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இனப் படுகொலையின் அங்கமாகவும் சிங்களக் குடியேற்றத்தை பார்க்கலாம் மணலாறில் வாழ்ந்த தமிழ்க் குடும்பங்கள் nஐனரல் ஐhனகா பெறேரா தலைமையிலான இராணுவத்தால் சுட்டும் வெட்டியும் கொன்று விரட்டப்பட்டுள்ளன.


ஓரு தமிழ்க் கிராமத்திற்கு ஐhனகாபுர என்று தன்னுடைய பெயரை அவர் சூட்டியுள்ளார் குடியேற்றத்தின் மூலம் தமிழர்கள் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, மணலாறு ஆகிய பகுதிகளில் சிறுபான்மையினராக ஆக்கப்பட்டுள்ளனர் இப்போது வடக்கில் குடியேற்றம் தொடங்கிவிட்டது.

குடியேற்றத்தின் மூலம் இனப் பிரச்சனைக்குத் திர்வு காணமுடியும் என்று கூறும் புவியியல் ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன. வடக்கு கிழக்கில் தமிழர் வாழும் நிலம் சிங்களவருடைய நிலம் என்று வாதிடும் சிங்களப் பேரினவாதிகள் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக இலங்கையில் நிலவிய சோழர் ஆட்சியின் போது தாம் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்.


தாம் குடியேறும் நிலத்திற்கு தாமே சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்லவென்றும் வாதிடுகிறார்கள். இது போதாதென்று 1956 தொடக்கம் காலத்திற்கு காலம் அரசு ஆதரவு பெற்ற சிங்களக் காடையர்கள் இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்புடன் தமிழர் மீது தாக்குதல் நடத்தினார்கள். உயிரிழப்புக்களையும் சொத்திழப்புக்களையும் தமிழர்கள் சந்தித்தனர் 1983ல் இது உச்சம் அடைந்தது.

பாதிக்கப்பட்ட தமிழர்கள் வெளிநாடுகடுளுக்குத் தப்பியோடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது தமிழ் டயஸ் போறா எனப்படும் புலம்பெயர் தமிழர் சமூகம் அனைத்துலக மட்டத்தில் தோன்றியது உலகத் தமிழர் என்றால்  புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் என்ற கருத்து நிலவுவதற்கு இது தான் காரணம்

தமிழர் தாயகம் மனிதப் புதைகுழிகள் நிறைந்த பூமி மட்டு அம்பாறைத் தமிழுறவுகள் கொடுத்த விலை மிக அதிகம் கொக்கட்டிச் சோலையிலே தமிழர் வீடுகள் குடிசைகள் தோறும் எண்ணற்றோர் உயிரிழந்துள்ளனர் வடக்கில் செம்மணி, வயாவிளான் என்பன கொன்று புதைக்கப்பட்டவர்களுக்குச் சாட்சி பகர்கின்றன இறுதியாக இப்போது முள்ளிவாய்க்காலில் மீண்டும் புதைகுழி.

வரலாறு எமது வழிகாட்டி என்று சொன்ன தமிழீழத்  தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் “ சிங்களப் பயங்கரவாதம் எமது தேசிய ஆன்மாவில் விழுத்திய வடுக்கள் என்றுமே மாறப் போவதில்லை ‘என்று அடித்தக் கூறியுள்ளார் .



பிரபாகரனின் தனிப்பெரும் பண்புகளை இங்கு எடுத்துக் காட்டலாம் குறைந்த பேச்சு, நிறைந்த கேள்வி, தனித்த சிந்தனை, கருத்தில் தெளிவு சாதனைக்கு மதிப்பு எனலாம் அவர் மேடை போட்டு முழங்கியதில்லை. வேட்டி சால்வை அணிந்து அரசியல்வாதி வேடம் தரித்ததில்லை தந்தவனுக்கே திருப்பி கொடு இது தான் அவருடைய செய்தி அடித்தவனைத் திருப்பியடி என்பது இந்தச் செய்தியின் சாரம்சம் அறிவு ரீதியாகவும் விஞ்ஞான ரீதியாகவும் தமிழீழனம் வளர வேண்டுமென்டு ஆசைப்பட்டு அதற்காக உழைத்தவர் விடுதலைப் பெற்ற தமிழீழம் பொருளாதார சுபீட்சம் காணவேண்டுமென்டு திட்டமிட்டார்.

சாதி ஒழிப்பிற்கு அவர் முன்னுரிமை அளித்தார் சீதனக் கொடுக்கல் வாங்கலைத் தடைசெய்தார் மதச் சமத்துவத்தைப் பேணினார் தமிழீழ காவல்துறையை உருவாக்கி சட்ட ஒழுங்கை அமுலாக்கினார் ; எல்லாவற்றிக்கும் மேலாக அவர் பெண்கள் வாழ்வில் புரட்சிகர மாற்றத்தைத் ஏற்படுத்தினார் ஒரு புதுமைப் பெண்னை, புரட்சிகரப் பெண்னை தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாக்கினார்கள் அதன் தாக்கம் நிரந்தரமானது.

தேசியத் தலைவர் அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் “ மகளீர் படையணினின்  தோற்றமும் வளர்ச்சியும் எழுச்சியும் எமது இயக்கம் படைத்த மாபெரும் சாதனைகளில் ஒன்று “ என்று சொன்னார்.

தன்னாட்சி பெற்ற தமிழீழத்திற்கான அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்காக உலகின் தலைசிறந்த அரசறிவியல் பேராசியர்களையும் புலிகள் அமைப்பில் உறுப்பியம் பெற்;ற வல்லுனர்களையும் ஒன்றிணைத்து ஒரு  வரைவைத் தயாரித்தார் சாசனவியலாளர்களால் அந்த வரைவு போற்றி பாதுகாக்கப்படுகிறது.



ஒடுக்கப்பட்ட இனம் தொடர்ந்து ஒடுங்கியிராது என்பதற்கு பிரபாகரன் தொடுத்த விடுலைப் போர் சாட்சியாக அமைகிறது பிரபாகரன் நேத்தாஜி சுபாஸ் சந்திரபோசை நேசித்தார். அவரைப் போலவே பிரபாகரன் தூய்மையாக வாழ்ந்தார் நேத்தாஜியின் போராட்டப் பங்களிப்பு இன்னும் சரிவர கணிப்பி;டப் படவில்லை. மழங்ககடிக்கப் படுகிறது என்று கூடச் சொல்லலாம்.

தமிழினத்தை கடந்த முப்பதிற்கும் மேலான வருட காலம் வழிநடத்தி வரும் பிரபாகரன் அவர்களின் தாக்கம் உலகத் தமிழினத்தால் மிக நன்றாக உணரப்படுகிறது. உலக தமிழ்ச் சமுதாயத்தில் எது நடந்தாலும் அவருடைய தாக்கம் இல்லாமல் நடக்க முடியாதளவிற்கு அவர் முத்திரை பதித்துள்ளார்.

Wednesday 20 November 2019

புலிகள் பன்றிகளை கொல்லாது...

விடுதலைப்-புலிகள் இயக்கம் எப்போதும் பன்றிகளை கொல்வதில்லை. அது தமிழகத்து பன்றிகளாக இருந்தாலும்சரி, டெல்லி பன்றிகள் என்றாலும் சரி, இத்தாலி பன்றிகள் என்றாலும் சரி...

அதுவும் ஏற்கனவே செத்து நாற்றமெடுத்த பன்றிகளை...



இங்கே பிழைப்புக்காகவும், ஓட்டுக்காகவும் புலிகளின் பெயரைச் சொல்ல வேண்டியது. அங்கே விடுதலைப் புலிகளால் உயிருக்கு ஆபத்து என்று கதற வேண்டியது.

இதுவும் ஒரு பிழைப்பு.இப்படியும் ஒரு பிழைப்பு.

புலிகள் எப்போதும் உங்களை சீண்டாது. நாற்றமெடுத்த பிறவிகள் என்று ஒதுங்கிதான் இருக்கும்.

அதைவிட உங்களை கருவறுப்பதாக சபதமெடுத்திருந்தது சீக்கிய இனம். அமிர்தசரஸ் பொற்கோயில் ப்ளு-ட்ஸடார் ஆப்ரேஷன் நினைவிருக்கின்றதா?

ஆமாம், அந்த சீக்கிய இனம் இந்திராகாந்தியை சொல்லி வைத்து செய்தது. நாங்கள் எல்லாம்கூட அழுதோம். இந்திரா மட்டுமல்ல, குடும்பத்தையே கருவறுப்போம் என சபதமெடுத்தார்களாம்.

அதைத்தான் அந்த ‘நேமிசந்த் ஜெயின்’ என்கிற சந்திராசாமி சொன்னான். “சொல்லி வை அவனிடம் (ராஜிவ்). அவன் அம்மா சிதறியதைப் போல் அவனும் சிதறி சாவான்” என்று ஆசிரமத்திற்குள் ஆவேசமாக கூறி சபதமெடுத்ததாக உடனிருந்தவன் ஜெயின் கமிஷனில் சாட்சி சொன்னான்..

சந்திராசாமி சொன்னபடியே ராஜிவ்காந்தி இறந்தார். அதற்கும் நாங்கள் அழுதோம். அந்த சந்திராசாமியை விசாரிக்காமல் கடந்த பத்தாண்டுகால காங். ஆட்சியில் காலாட்டிக்கொண்டே இருந்துவிட்டு இப்போது வந்து புலிகளால் உயிருக்கு ஆபத்து என்பது அயோக்கியத்தனம் இல்லையா.

(#காங்கிரஸ்கட்சி தலைமை #மன்மோகன் சிங்கை பத்தாண்டுகள் பதவியில் வைத்து அழகு பார்த்ததே சீக்கிய இனத்தின் கோபத்தை தனிக்கத்தான் என்பது உண்மையா?)
ஆக, இப்படியாக நீங்கள் வடக்கே பழி தீர்த்த பல இனக்குழுக்களின் கோபம் மிச்சம் இருக்கலாம். அவர்கள் யாரேனும் உங்களை பழி தீர்க்கலாமே ஒழிய புலிகள் ஒரு போதும் உங்களை சீண்ட மாட்டார்கள்.

அதுவும் கூட்டுச்சேர்ந்து ‘முற்றாக அழித்து ஒழித்து விட்டோம்’ என அறிவித்துவிட்ட பிறகு எப்படி பழி தீர்ப்பார்கள்.? டிஆர்பாலுதான் சொல்ல வேண்டும்.
சொக்கத்தங்கம் சோனியா மீது இவ்வளவு அக்கறை இருக்கும் திமுக பிறவிகள் என்ன செய்திருக்க வேண்டும்.?

ராஜிவ் கொலையில் உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற ஜெயின் கமிஷன் பரிந்துரையில் பிரதமர் வாஜ்பாய் அமைத்த #CBI-யின் #MDMA- விசாரணை குழு இன்றும் ‘விசாரிப்பதாக’ உள்ளதே. கடந்த பத்தாண்டு கால காங்.கட்சி ஆட்சியில் அதை விசாரிக்கச் சொல்லி போராடியிருக்கலாமே? ஏன் செய்யவில்லை?
போகட்டும்...

திமுக-வின் டி.ஆர். பாலு அப்படி பேசியதைப் போன்று, யாராவது ஒரு சீக்கிய எம்.பி எழுந்து, ‘சீக்கிய தீவிரவாத அமைப்புகளால் சோனியாவின் உயிருக்கு ஆபத்து உள்ளது’ என்று பேசிவிட்டு ஊர்போய் சேரமுடியுமா?

ஆனால், தமிழகத்தில் உள்ள எம்.பி.க்கள் அப்படி பேசிவிட முடிகிறது என்றால் இங்கு உணர்வாளர்களாக இருக்கும் திராவிட கம்பெனிகள் பலவும் ‘டபுள் ஏஜன்ட்’ தொழிலில் இருப்பதுதான் காரணம்..

பா.ஏகலைவன்

Saturday 9 November 2019

பெர்லின் சுவர் : உடைப்பும் பின்னணியும்..

ஜெர்மனி என்ற ஒரே நாடாக இருந்ததை கிழக்கு மற்றும் மேற்காக பிரித்தது மட்டுமல்லாமல், தாய் ஒரு பக்கம், பெற்ற பிள்ளைகள் ஒரு பக்கம் என குடும்பத்தையே இரண்டாக பிரித்து, பெர்லின் மக்களை கதற வைத்தது பெர்லின் சுவர்.




உலகையே தனது ஆளுகைக்கு உட்படுத்த நினைத்த நாஜி தலைவர் ஹிட்லர், ரஷ்யாவின் எல்லைப் புறத்தை கபளீகரம் செய்து கொண்டிருந்தபோது ரஷ்யாவின் இரும்பு மனிதர் ஸ்டாலின் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்துடன் கூட்டு வைத்து, புதிய உத்வேகத்துடன் ரஷ்ய படையை அமைத்து ஜெர்மானியரை ஓட, ஓட விரட்டி அடித்ததுடன் ஜெர்மனியை வீழ்த்தி, அதனைக் கைப்பற்றினார். எதிரிகளின் கையில் ஜெர்மன் வீழ்ந்ததை அறிந்து கொண்ட ஹிட்லர், பதுங்குக்குழியில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்து போனதாகத் தகவல். அதன் பிறகு ஒட்டு மொத்த ஜெர்மனியை இந்த நான்கு நாடுகளும் கூறுபோட்டுக் கொண்டன.


மேற்கு ஜெர்மனியை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவை தங்களது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தன. கிழக்கு ஜெர்மனி ரஷ்யாவுடன் இருந்தது. இது நடந்தேறியது 1949ம் ஆண்டு.


வல்லரசுகள் கைப்பற்றிய மேற்கு ஜெர்மனி பொருளா தாரத்தில் அசுர வேகத்தில் முன்னேறியது. ஆனால், கிழக்கு ஜெர்மனியோ கம்யூனிஸ ஆட்சியில் பொருளாதாரத்தில் வீழ்ச்சிப்பெற்றது. இதனால் கிழக்கு ஜெர்மனி மற்றும் கிழக்குப் பெர்லின் மக்கள் வேலைவாய்ப்பைத் தேடி மேற்கு ஜெர்மனிக்குப் படையெடுத்ததுடன் கொஞ்சம் கொஞ்சமாக அங்கே குடியேறினர். இதனைத் தடுக்கும் பொருட்டு, 1961ல் மேற்கு பெர்லின் நகரைச் சுற்றி கிழக்கு ஜெர்மனி சுவர் எழுப்பியது. இதனை, "பெர்லின் சுவர்' என்றழைத்தனர்.


பெர்லின் நகரை இரண்டாகப் பிரித்த இந்த சுவரின் நீளம் 43.1 கி.மீ., கான்கிரீட்டால் கட்டப் பட்ட இந்தச் சுவரின் உயரம் 4 மீட்டராகும். இதே போன்று மேற்கு பெர்லின் நகரை முற்றிலுமாகத் தடை செய்த கிழக்கு ஜெர்மனியின் எல்லை சுவர் 111.9 கி.மீ., ஆகும். இந்தச் சுவரின் மேல் முள் கம்பிகள் போடப்பட்டன. எல்லையோரத்தில் 302 கண்காணிப்புக் கோபுரங்கள் எழுப்பப் பட்டன. பாதுகாப்புப் பணியில் 14,000 எல்லை வீரர்கள் மற்றும் 601 ரோந்து வாகனங்களும் இருந்தன.


இதனால் ஜெர்மனியர்களின் ரத்த உறவு அந்நியர்களால் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு பகுதியிலிருந்து அவரவர் சொந்தபந்தங்களைப் பார்க்க வேண்டுமென்றால் பாஸ்போர்ட் விசா எடுத்து விமானம் மூலம் போக வேண்டும். அது மட்டுமல்ல... உணவுப் பொருட்களும் அவ்வழியேதான் செல்ல வேண்டும்.


இந்தப் பிரிவினை 1961லிருந்து 1986ம் ஆண்டு வரை நீடித்திருந்தது. இந்நிலையில் 1987ல் அமெரிக்க அதிபர் ரீகன் சோவியத் ரஷ்ய அதிபர் கோர்பச்சேவுடன் இந்தப் பெரிய சுவரை இடித்துவிட்டு, இரு பகுதி மக்களும் ஒன்றாக இணைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.


இக்காலக்கட்டத்தில் கிழக்கு ஜெர்மனியில் புரட்சி ஏற்பட்டு, மக்கள் பல அவலங் களை சந்தித்தனர். நிலைமை மோசமடைந்து, 1989ம் ஆண்டு நவம்பர் 4ல் கிழக்கு ஜெர்மனி அரசு கவிழ்ந்தது. அதன் பிறகு இரு தரப்பு மக்களும் செக்போஸ்ட்களைத் தாண்டிச் செல்ல ஆரம் பித்தனர்.


எதிர்ப்புகள் இல்லாததனால் அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 9ம் தேதி இரு நாட்டுக்கும் இடையிலிருந்த சுவரை இடித்தனர். 30 ஆண்டுகள் சொந்த பந்தங்களை பிரிந்த மக்கள், மகிழ்ச்சியில் ஒருவருக்கு ஒருவர் கட்டியணைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். 1999ம் ஆண்டு இரு ஜெர்மனி நாடுகளையும் பழையபடி ஒன்றாக இணைத்தனர். 


நாட்டையே கூறுபோட்ட அந்த பெர்லின் சுவரை மக்கள் இடித்து இருபது ஆண்டுகள் நிறைவடைந்த மகிழ்ச்சியில் ஜெர்மனி மக்கள் கொண்டாடினர்; இன்றும் அந்நிகழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.

Friday 1 November 2019

தமிழக தலைவர்கள் கோமாளிகளா அல்லது தமிழக மக்கள்தான் ஏமாளிகளா? surjith

தப்பு செய்தவனுக்குத் தண்டனை தருவதற்குப் பதிலாகப் பரிசு தருவது இந்தியாவில் மட்டுமே நடக்கக்கூடியது

இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்க ஆழ்துளைக் கிணறு விபத்துகள் நடந்த வண்ணம் தான் உள்ளன. ஆனால் பல தேசங்கள் தங்கள் தவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொண்டன.. ஆனால் இது போல் பல நிகழ்வுகள் இந்தியாவில் பலமுறை நடந்தும்  நாட்டை ஆளும் அரசுகள் மெத்தனமாகவே இருக்கின்றன. இதற்குக் கட்சி வேறுபாடுகள் இல்லை....


அமெரிக்காவில் இதே நிகழ்வு 1987 ல் நடந்தது குழந்தை  58 மணிநேரத்திற்குப் பின்பு காப்பாற்றப் பட்டது குழந்தை பெற்றோரிடம் உயிரோடு கொடுக்கப்பட்டது அதே நிகழ்வு இத்தனை ஆண்டுகள் கழித்து இந்தியாவில் நடந்திருக்கிறது  என்ன குழந்தைக்குப் பதிலாகப் பெற்றோர்களுக்கு லட்சக் கணக்கில் அரசு பணம் கொடுத்து இருக்கிறது. அமெரிக்க நாடும் மக்களும் சுயநல மிக்கவர்கள்தான் ஆனால் இந்தியர்களைப் போலப் பண வெறி பிடித்தவர்கள் அல்ல..

இப்போது சுர்ஜித்துக்கு நடந்த நிகழ்விற்குப் பின் அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்து எமர்ஜின்ஸிகால அடிப்படையில் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளை மூட  நடவடிக்கை எடுக்காமல்   அரசியல் சுயநலம் கருதி இறந்தவர்களின் பெற்றோர்களுக்குப் பரிசு பணத்தை லட்சக்கணக்கில் அள்ளிக் கொடுக்கின்றது

பொறுப்புடன் தன் பிள்ளையையே பார்த்துக்கொள்ளாத பெற்றோர்களுக்கு தண்டனை கொடுக்காமல் அவர்களுக்கு லட்சக் கணக்கில் அதுவும் அரசு பணத்தை தன் சொந்த பணம் போல அள்ளிக் கொடுக்கிறார் தமிழகத்தை ஆளும் முதலமைச்சர் சரி அவர்தான் அப்படி என்று பார்த்தால் அதைக் கண்டிக்க வேண்டிய எதிர்க்கட்சி தலைவர் அவர் பங்கிற்கு அவரும் லட்சத்தில் அள்ளிக் கொடுக்கிறார்  .  மக்களின் எமோசனலை தங்களின் சுயனலங்களுக்காக் இவர்கள் பயன்படுத்துகிறார்கள் இதில் வேற எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் மிக நல்ல ஆஸ்டியை தருவேன் என்றும் ஸ்டாலின் சொல்லுகிறார். தட்டிக் கேட்க வேண்டிய நேரத்தில் இவரும் எடப்பாடியைப் போலவே செயல்பட்டால் எடப்பாடி ஆண்டால் என்ன ஸ்டாலின் ஆண்டால் என்ன எல்லாம் ஒன்றுதான்


தண்டனை கொடுக்க வேண்டியவர்களுக்குத் தண்டனைக்குப் பதிலாகப் பணத்தை அள்ளிக் கொடுத்ததால் சுர்ஜித்தி அம்மா இப்போது சுர்ஜித்திற்கு கோவில் கட்ட வேண்டும் என்பதுதான் அவரின் ஆசையாம் என்பதைப் பேட்டியில் சொல்லுகிறார்..


டேய் நீங்கள் எல்லாம் லூசா அல்லது தமிழக மக்கள்தான் லூசாடா?


 அமெரிக்க போன்ற நாடுகளாக இருந்தால் இந்நேரம் பிள்ளைகளின் பெற்றோர்கள் கம்பி எண்ணிக் கொண்டிருப்பார்கள்... இங்கு நான் சின்ன  நான் பார்த்த ஒரு உண்மை சம்பவத்தைச் சொல்ல விரும்புகிறேன்...


 அமெரிக்க போன்ற நாடுகளாக இருந்தால் இந்நேரம் பிள்ளைகளின் பெற்றோர்கள் கம்பி எண்ணிக் கொண்டிருப்பார்கள்... இங்கு நான்  பார்த்த ஒரு உண்மை சம்பவத்தை சொல்ல விரும்புகிறேன்...

எனது குடியிறுப்பு பகுதியில் நடந்த சம்பவம் இது.. எனது குடியிறுப்பு பகுதியில் மழை நீர் ஒடுவதற்காக சிறிய கால்வாய் ஒன்று உண்டு இதில் எப்போதும் அரை அடியில் இருந்து ஒரு அடிவரை தண்ணீர் ஒடிக்கொண்டிருக்கும் இந்த கால்வாயில் சிறு பாறைகளும் மரம் செடி கொடிகளும் உண்டு.. அந்த பகுதியில் உள்ள வீட்டின் பின்புறத்தில் இடு ஒடிக் கொண்டிருக்கிறது,,,, சம்பவம் நடந்த வீட்டின் பின்னால் பெரிய நிலப்பரப்பும் அதை ஒட்டி சற்று சரிவுடன் கூடிய இந்த கால்வாய் இருக்கிறது சம்பவதன்று  பக்கத்துவீட்டு பெண்மணியிடம் அந்த குழந்தையின் தாயார் நின்று பேசிக் கொண்டிருந்தார்.. அவரின் 2 வயது குழந்தையும் அருகில் விளையாடிக் கொண்டிருந்தது.. இந்த 2 பெண்மணிகளும் இந்திய பெண்மணிகள்தான்.. இந்த பெண்கள் பேச்சு சுவாராஸ்யத்தில் குழந்தையை கவனிக்கவில்லை . விளையாடிக் கொண்டிருந்த அந்த குழந்தை தவறி அந்த் கால்வாயில் விழுந்து இறந்துவிட்டது . சிறிது நேரம் கழித்து குழந்தையை தேடிய பெண்மணி கால்வாயில் அவரின் குழந்தையை  பார்த்துவிட்டு போலீஸுக்கு தகவல் கொடுக்க உடனே ஆம்புலன்ஸ் போலீஸ் அனைவரும் வந்து பார்த்து குழந்தை இறந்துவிட்டதை உறுதிபடுத்திவிட்டு உடனே அந்த பெண்மணியை குழந்தையை பொறுப்புடன் பார்த்து வளர்க்க தெரியாததால் கைது செய்ததுடன் வீட்டில் இருந்த மற்றொரு குழந்தையையும் நீங்கள் வளர்க்க தகுதி இல்லாதவர் என்று தூக்கி சென்றுவிட்டது.. அதன் பின் கணவர் வந்து நல்ல வக்கிலை அமர்த்தி வாதாடி நாங்கள் இந்தியாவிற்க்கே போய்விடுகிறோம் குழந்தையை எங்களிடம் கொடுத்துவிடுங்கள்  பேசி இறுதியில் குழந்தையுடன் இண்டியா சென்றுவிட்டார்கள்.


இங்கே எல்லாம் இப்படித்தான் இங்கு தண்டனைகள் கிடைக்கும் சில சமயங்களில் யாராவது குழந்தையை காரில் வைத்துவிட்டு அவசர அவரமாக கடையில் உள்ளே சென்று ஏதாவது வாங்க சென்று இருந்தால் அதை பார்த்து  யாரவது போலீஸில் ரிப்போர்ட் செய்தால் அந்த குழந்தையின் பெற்றோருக்கு தண்டனை கிடைப்பது மட்டுமல்ல  அவர்களின் குழந்தையை ஃபாஸ்டர் பேரண்ட்ஸ்சிடம் (Foster parents are people who officially take a child into their family for a period of time, without becoming the child's legal parents. The child is referred to as their foster child. 0கொண்டு போய்விட்டுவிடுவார்கள்.  இந்தியாவில் அப்படி செய்யாமல் தவறு இழைத்த பெற்றோர்களுக்கு தண்டனை தறுவதற்கு பதிலால பரிசை கொடுத்தால் குற்றங்கள் கூடத்தானே செய்யும்..


சுர்ஜித்திற்கு நடந்த சம்பவம் போல அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ளது மிட்லேண்ட் நகரம். அங்கு 1987 ஆம் ஆண்டு ஜெஸிகா மெக்லியூர் என்ற ஒன்றரை வயது குழந்தை தன் வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தது. தாயின் கண்காணிப்பில் விளையாடிக் கொண்டிருந்த அந்தக் குழந்தை திடீரென வீட்டின் பின்னால் இருந்த மூடப்படாத 22 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது.

உடனே  தாய் மீட்புக்குழுவிற்கு தகவல் சொல்ல, விரைந்து வந்தது தீயணைப்புத் துறை வாகனங்களும், மீட்புப் படையும். எளிமையாக மீட்டுவிடலாம் என நினைத்த மீட்புப்படைக்கு நம் ஊரைப் போலவே அங்கிருந்த பாறைகள் சவாலாக இருந்தது. அப்போது அமெரிக்காவில் அறிமுகமாகியிருந்த வாட்டர் ஜெட் கட்டிங் இயந்திரத்தை பயன்படுத்தி குழந்தையை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. பக்கவாட்டில் துளையிட்டு மீட்புக்குழு வீரர் ஒருவர் உள்ளே இறங்கினார். கிட்டத்தட்ட 50 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஜெஸிகா மெக்லியூர் உயிருடன் மீட்கப்பட்டாள். நாடே அதனைக் கொண்டாடியது. தன் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஜெஸிகாவிற்கு இப்போது வயது 33 ஜெஸிகாவை மீட்ட கையோடு நாட்டில் கவனிப்பின்றி கிடந்த அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் போர்க்கால அடிப்படையில் மூடியது அமெரிக்க அரசு. மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். அமெரிக்காவில் ., ஜெஸிகாவிற்கு பிறகு இன்று வரை ஒரு ஆழ்துளைக் கிணறு விபத்து கூட நிகழவில்லை...


சுஜித்தின் மரணத்திற்கு பிறகாவது விழிக்குமா இந்தியா