Wednesday 20 November 2019

புலிகள் பன்றிகளை கொல்லாது...

விடுதலைப்-புலிகள் இயக்கம் எப்போதும் பன்றிகளை கொல்வதில்லை. அது தமிழகத்து பன்றிகளாக இருந்தாலும்சரி, டெல்லி பன்றிகள் என்றாலும் சரி, இத்தாலி பன்றிகள் என்றாலும் சரி...

அதுவும் ஏற்கனவே செத்து நாற்றமெடுத்த பன்றிகளை...



இங்கே பிழைப்புக்காகவும், ஓட்டுக்காகவும் புலிகளின் பெயரைச் சொல்ல வேண்டியது. அங்கே விடுதலைப் புலிகளால் உயிருக்கு ஆபத்து என்று கதற வேண்டியது.

இதுவும் ஒரு பிழைப்பு.இப்படியும் ஒரு பிழைப்பு.

புலிகள் எப்போதும் உங்களை சீண்டாது. நாற்றமெடுத்த பிறவிகள் என்று ஒதுங்கிதான் இருக்கும்.

அதைவிட உங்களை கருவறுப்பதாக சபதமெடுத்திருந்தது சீக்கிய இனம். அமிர்தசரஸ் பொற்கோயில் ப்ளு-ட்ஸடார் ஆப்ரேஷன் நினைவிருக்கின்றதா?

ஆமாம், அந்த சீக்கிய இனம் இந்திராகாந்தியை சொல்லி வைத்து செய்தது. நாங்கள் எல்லாம்கூட அழுதோம். இந்திரா மட்டுமல்ல, குடும்பத்தையே கருவறுப்போம் என சபதமெடுத்தார்களாம்.

அதைத்தான் அந்த ‘நேமிசந்த் ஜெயின்’ என்கிற சந்திராசாமி சொன்னான். “சொல்லி வை அவனிடம் (ராஜிவ்). அவன் அம்மா சிதறியதைப் போல் அவனும் சிதறி சாவான்” என்று ஆசிரமத்திற்குள் ஆவேசமாக கூறி சபதமெடுத்ததாக உடனிருந்தவன் ஜெயின் கமிஷனில் சாட்சி சொன்னான்..

சந்திராசாமி சொன்னபடியே ராஜிவ்காந்தி இறந்தார். அதற்கும் நாங்கள் அழுதோம். அந்த சந்திராசாமியை விசாரிக்காமல் கடந்த பத்தாண்டுகால காங். ஆட்சியில் காலாட்டிக்கொண்டே இருந்துவிட்டு இப்போது வந்து புலிகளால் உயிருக்கு ஆபத்து என்பது அயோக்கியத்தனம் இல்லையா.

(#காங்கிரஸ்கட்சி தலைமை #மன்மோகன் சிங்கை பத்தாண்டுகள் பதவியில் வைத்து அழகு பார்த்ததே சீக்கிய இனத்தின் கோபத்தை தனிக்கத்தான் என்பது உண்மையா?)
ஆக, இப்படியாக நீங்கள் வடக்கே பழி தீர்த்த பல இனக்குழுக்களின் கோபம் மிச்சம் இருக்கலாம். அவர்கள் யாரேனும் உங்களை பழி தீர்க்கலாமே ஒழிய புலிகள் ஒரு போதும் உங்களை சீண்ட மாட்டார்கள்.

அதுவும் கூட்டுச்சேர்ந்து ‘முற்றாக அழித்து ஒழித்து விட்டோம்’ என அறிவித்துவிட்ட பிறகு எப்படி பழி தீர்ப்பார்கள்.? டிஆர்பாலுதான் சொல்ல வேண்டும்.
சொக்கத்தங்கம் சோனியா மீது இவ்வளவு அக்கறை இருக்கும் திமுக பிறவிகள் என்ன செய்திருக்க வேண்டும்.?

ராஜிவ் கொலையில் உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற ஜெயின் கமிஷன் பரிந்துரையில் பிரதமர் வாஜ்பாய் அமைத்த #CBI-யின் #MDMA- விசாரணை குழு இன்றும் ‘விசாரிப்பதாக’ உள்ளதே. கடந்த பத்தாண்டு கால காங்.கட்சி ஆட்சியில் அதை விசாரிக்கச் சொல்லி போராடியிருக்கலாமே? ஏன் செய்யவில்லை?
போகட்டும்...

திமுக-வின் டி.ஆர். பாலு அப்படி பேசியதைப் போன்று, யாராவது ஒரு சீக்கிய எம்.பி எழுந்து, ‘சீக்கிய தீவிரவாத அமைப்புகளால் சோனியாவின் உயிருக்கு ஆபத்து உள்ளது’ என்று பேசிவிட்டு ஊர்போய் சேரமுடியுமா?

ஆனால், தமிழகத்தில் உள்ள எம்.பி.க்கள் அப்படி பேசிவிட முடிகிறது என்றால் இங்கு உணர்வாளர்களாக இருக்கும் திராவிட கம்பெனிகள் பலவும் ‘டபுள் ஏஜன்ட்’ தொழிலில் இருப்பதுதான் காரணம்..

பா.ஏகலைவன்

No comments:

Post a Comment