Saturday 19 December 2020

இன அழிப்பின் உயிர்வாழும் ஆதாரங்கள்

 செம்மொழி எனப் போற்றப்படும் தமிழ் மொழியின் சொந்தக்காரர்கள் வரலாற்றுக்காலம் முழுவதும் அந்நியரால்அழிக்கப்பட்டு வந்தனர். ஆனால், தமிழ் மொழியின் செழுமையோ அதன் பண்பாட்டுப் பரிமானமோ மாறாது இயற்கை உற்பவம் காத்து வந்தது. அவ்வாறே 2009இல் ஏற்பட்ட அழிவுகளையும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளத் தலைப்பட்டனர்.
தமிழர்களின் அடிப்படை உரிமைகளை நசுக்கிய இலங்கை அரசு, அவர்களின் உரிமைப் போராட்டத்தினை பயங்கரவாதமாகச் சித்தரித்து உலக அனுசரணையினைப் பெற்றது. ஈற்றில் பாரிய இனப்படுகொலையினை நிகழ்த்திவிட்டு சுமார் 150,000 தமிழ் மக்களை 2 வருட காலத்தில் கொன்று விட்டு, அவர்களை நினைவு கூறத் தடையுடன் அவமதிக்கும் காட்சியினை உலகம் 5 வருடங்களாகக் கண்டும் வாழாதிருக்கின்றது.


இலங்கையின் வட கிழக்குப் பிரதேசத்தின் ஈழத் தமிழர் தமது பாரம்பரிய பூமியில் சுயாட்சி நிறுவ எடுத்த முயற்சிகளுக்கு சர்வதேச அனுசரணையுடனும் இராணுவ அடக்குமுறையுடனும் தற்காலிக முற்றுப் புள்ளி வைத்துள்ளது.


தாம் செய்த அட்டூழியங்களினையும் அதர்மத்தினையும் ஏற்று உணராத அரசுடனே அல்லது அவ்வரசு சார்ந்த இனத்துடனோ நல்லிணக்கம் என்பது மயானத்தில் நிலவும் மௌனத்திற்குச் சமன். இதனையே இலங்கை அரசு கடந்த காலங்களில் யுத்த வெற்றி விழாவாகக் கொண்டாடியது. ஆனால், ஐந்தாவது வருடம் சமாதான வெற்றி விழாவாகக் கொண்டாகின்றது.


இன்று இலங்கையில் சிறுபான்மைத் தமிழர்கள் இராணுவ அடக்குமுறை, பௌத்த மேலாதிக்கம், அரசியல் அடக்குமுறை, சிங்கள மயமாக்கல், நிர்வாக அடக்குமுறை என்பனவற்றினால் மிகவும் பாரதூரமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.


வடக்கு கிழக்கில் தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. கிழக்கு மாகாணத்தின் 50% மேற்பட்ட நிலப்பரப்பு இலங்கை சுதந்திரமடைந்த பின் சிங்களக் குடியேற்றங்களுக்காக அபகரிக்கப்பட்டு விட்டது. இதனைக் கல்லோயாத் திட்டத்தில் இருந்து அண்மைய மேய்ச்சல் நிலக் குடியேற்றங்கள் வரை அவதானிக்கலாம். அதேபோல், வட மாகாணத்திலும் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார்போன்ற மாவட்டங்களில் திட்டமிட்ட குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் உயர் பாதுகாப்பு வலயம், இராணுவப் பாதுகாப்புத் தேவை என பல பிரதேசங்கள் தமிழ் மக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்டுள்ளன. இவையாவும் அநீதியானவை.


வடக்கு – கிழக்கு பொது நிர்வாக சேவைகளும் இராணுவ புலானய்வு அதிகாரிகளால் அதாவது, இளைப்பாறிய இராணுவ அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகின்றது.


வெளிப்படையான அரசியல் நடத்தக்கூடிய சூழல் வட கிழக்கில் இல்லை. ஒன்றில் இலங்கை அரசின் பின்புலத்தில் அரசியல் நடத்தவேண்டும். அன்றேல் இந்திய அரசின் பின்புலத்தில் அரசியல் நடத்தவேண்டும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை மக்கள் தமிழ் தேசியத்தின் அரசியல் சக்தியாகக் கருதுகின்றார்கள். ஆனால், அதில் உள்ள முக்கிய தலைவர்கள் நம்பிக்கைத் துரோகிகளாக உள்ளமையும் மக்களுக்கு தெரியும். ஆனால், கால ஓட்டத்தின் திசையில் எதிர்கொள்ள மக்கள் மௌனம் காக்கின்றனர். துப்பாக்கியுடன் உள்ள எதிரியினை விட நயவஞ்சக அரசியல்வாதியின் நிழல் ஆபத்து அற்றது என்ற நிலையிலேயே தமிழ் மக்கள் உள்ளனர்.


2014இல் சிங்கள மருத்துவ நிபுணர் ஒருவர் என்னிடம் கூறினார், “ஜப்பானில் அணுகுண்டு போட்டதால்தான் அமைதி ஏற்பட்டது. அதேபோல், வன்னியில் எவ்வளவு மக்கள் அழிந்தாலும் காரியமில்லை, எமக்கு அமைதி ஏற்பட்டுவிட்டது.”


தமிழ் மக்களுக்கு உரிய அரசியல் தீர்வினைப் பெற்றுக்கொள்ள தமிழ் மக்களுக்கு, இலங்கையில் நடைபெற்றது இன அழிப்பு என்பதனை இந்திய நாடாளுமன்றமும், ஐ.நாவும் ஏற்றுக் கொள்ளல் வேண்டும். இன அழிப்பிற்கு பின்னான சமூகத்திற்கு எவ்வாறு அரசியல் அபிலாசைகளை மீட்டெடுக்கலாம் என்பதனை அனைத்துலக மனித நேயச்சட்டங்களின் ஊடாக பெற்றுக் கொள்ளலாம்.


ஈழத்தமிழர்களை பொறுத்தவரை நாம் எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு யாரையும் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கம் இல்லை. ஆனால், தொடர்ந்து எம்மீது இழைக்கப்படும் அநீதிகளில் இருந்து விடுபட்டு, மானிட முன்னேற்றத்தில் எமது இருப்பினையும் பங்களிப்பினையும் வழங்குவது மிகவும் அவசியம்.


இறுதியாக தமிழைரைப் பயங்கரவாதியாக்கும் அணுகுமுறையினை இந்த உலகம் தவிர்க்க வேண்டும். சிங்கள மக்களும் தமிழின அழிவின் ஆழத்தினை உணரவேண்டும். கடல்கோள் வந்தபோது என்னருகில் இருந்த சிங்கள பெண் மருத்துவ நிபுணர் கூறினார், “ஐயோ யாழ்ப்பாணம் முழுவதும் அழிந்தால் நல்லது. ஒரு பிரச்சினையும் இல்லை” என்று. இது நடந்தது 2004ஆம் ஆண்டு. அதேபோல், 2014இல் சிங்கள மருத்துவ நிபுணர் ஒருவர் என்னிடம் கூறினார், “ஜப்பானில் அணுகுண்டு போட்டதால்தான்அமைதி ஏற்பட்டது. அதேபோல், வன்னியில் எவ்வளவு மக்கள் அழிந்தாலும் காரியமில்லை, எமக்கு அமைதி ஏற்பட்டு விட்டது.” இவை சிங்கள மருத்துவ நிபுணர்களால் எனக்குக் கூறப்பட்டது. எனவே, சாமானிய சிங்கள மக்களின் மனநிலை எவ்வாறானது என்பதனை ஆராயவேண்டிய தேவை இல்லை.


புலிகளை பயங்கரவாதிகளாகப் பார்க்கும் உலகம் சமாதானப் பேச்சு வார்த்தையில் அவர்களை முடக்கியே 2008–2009இல் தமிழின அழிவினைச் செய்தது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது நிகழும் சிங்கள மயமாதல்களும் பௌத்த விகாரைகள் அமைப்பும் வரலாற்றுக் திரிவுகளும்.


மத்திய வங்கிக் குண்டு வெடிப்பினை உலகம் பாரிய பயங்கரவாத தாக்குதலாகக் கருதுகின்றது. அன்றைய காலத்தில் யாழ். குடா நாட்டில் மக்கள் மீது பாரிய இராணுவ நடவடிக்கைகள் நிகழ்ந்தன. பொது மக்கள் மருத்துவ வசதிகள், தொடர்பாடல் வசதிகள் இல்லாத சூழலிலேயே இச்சம்பவம் நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் அனுபவங்கள், தமிழருக்கு யாழ். குடா நாட்டில் ஏற்படாது இருக்க, மத்திய வங்கித் தாக்குதல் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அன்றேல் முள்ளிவாய்க்கால் போன்று யாழ். குடா நாட்டிலும் இலட்சக்கணக்கான மக்கள் அன்று அழிக்கப்பட்டு இருப்பர்.


ஆயுத முனையில் எல்லாவற்றையும் செய்யலாம் என்ற மனோபலம் சிங்கள மக்களிடம் ஏற்பட்டுவிட்டது. இவற்றிற்கு எதிராகக் கருத்துக் கூறுவதற்குத் தடையாக பாரிய இராணுவ அச்சுறுத்தல்கள் உள்ளன.

தமிழ் பிரதேசத்தில் இராணுவ சிப்பாய்கள் செய்யும் அடாவடிகளுக்கு நீதி இல்லை. ஆனால், அவர்கள் விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு வந்து, காவல்துறை மீது கை வைக்கும்போது உடனடி மரண தண்டனை விதிக்கும் நிலைமையில் தற்போதைய சமாதானத்தின் வெற்றி உள்ளது.


பல இராணுவ வீரர்கள்மற்றும் இனவாதத்தினைத் தூண்டும் அரசியல்வாதிகள்,பௌத்த பிக்குகள் மனநோயாளிகளாகவும்,போதைப் பொருள் உபயோகிப்பவர்களாவும்,சிறுவர்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்வர்களாகவும் இருக்கின்றனர்.


மூன்று இலட்சம் மக்களின் சுவாசப் பாதையில் இரசாயன நுண் உலோக பதார்த்தங்களின் தாக்கம் நிரந்தர ஆதாரமாக தேங்கி உள்ளது. மேலும், இவர்களின் குருதியில் இப்பதார்த்தங்களால் வாழ்தகவை குறைக்கும் நச்சு பதார்த்தம் ஏற்பட்டு உள்ளது. அதனை Genocidal Factors எனலாம். இதனால், அவர்களின் உடலில் இயற்கையாகக் காணப்படும் Co enzyme Qஇன் அளவு குறைவாகக் காணப்படும். இது இன அழிப்பிற்கு ஒரு உயிர் வாழும் ஆதாரம்.


இதனை இலங்கை மருத்துவ உலகமோ மனித உரிமை மேம்பாட்டாளார்களோ கருத்தில் எடுக்கவில்லை. பயங்கரவாதம் அழிக்கப்பட்டுவிட்டது என்றும் – சமாதானம் ஏற்பட்டு விட்டது என்றும் – மார் தட்டுகின்றனர். ஆனால், போதைப் பொருள் பாவனையும், பாதாள உலக நடவடிக்கைகளும் உண்மைப் பயங்கரவாதமாக உருவெடுத்து உள்ளது. அடுத்து, விடுதலைப் புலிகளை அழிக்க ஒற்றைக்காலில் நின்ற பாரத அரசு, இன்று தனது தென்கோடியில் கண்ணிற்கு மையிட்டவாறு பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவலைக் கண்காணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.


புதிய இந்திய அரசு, தமிழகத்தில் உள்ள சுமார் 2 இலட்சம் ஈழ அகதிகளை மீளக்குடியேற்றுவதிலும் இலங்கை – இந்திய ஒப்பந்தந்தை முழுமையாக அமுல்படுத்த மீளவும் இந்திய இராணுவத்தினை இலங்கைக்கு தரை வழியாக இராமர் பாலம் மூலம் அனுப்புவதிலும் கவனம் செலுத்தின் ஈழத் தமிழரின் பாதுகாப்பினை மாத்திரமின்றி இந்தியாவின் பிராந்திய வல்லரசு நிலையினையும் உறுதிப்படுத்தலாம். அவ்வாறு அமையின் தமிழர்கள் தம்மில் உள்ள ஏக்க நிலையினை துறப்பர்.


தற்போது நடைபெறும் சிங்களக் குடியிருப்புக்கள், நில அபகரிப்புக்கள், இராணுவ ஆதிக்கம் என்பனவற்றை எதிர்கொள்ள இந்திய அரசின் பாதுகாப்பு தமிழ் மக்களுக்கு அவசியமாக உள்ளது. ஏனெனில், பாதுகாப்புக் காரணங்களைக் கூறியே இலங்கை அரசின் சட்டம் முதல் நிர்வாகம் வரை தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதற்கு தடையாக உள்ளது.


முட்டாள்களிடம் இருந்து நீதியை எதிர்பார்ப்பது முட்டாள்தனம். அதேபோல காலம் கடந்த நீதி என்பது அநீதிக்குச் சமன். இதனை முற்று முழுதாக ஈழத்தமிழர் அறிந்துவிட்டனர். இன்று உலகம் இன அழிப்புநடைபெற்றமைக்கு பல்வேறு கணினித்தரவுகளை வைத்துள்ளது. அவற்றில் யுத்தம் நிகழ்த்த முறை, மக்கள் மீது ஏறிகணை, விமானக் குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்ட செய்மதிப் படம், சர்வதேச அணுசக்தி நிறுவனத்தில் அதிர்வுப் பதிவுகள், தமிழ் மக்களுக்காக கடனாகவும் அன்பளிப்பாகவும் கொடுக்கப்பட்ட ஆயுத உபகரணங்கள், அவற்றினை செயற்படுத்துவதற்கான தொழில்நுட்ப உதவிகள், இராஜதந்திர உதவிகள், தமிழ் மக்கள் கொல்லப்பட்ட காட்சிகள், கைது, சித்திரவதை, பாலியல் கொடுமை என இவை யாவற்றுக்கும் மேலாக இறந்தவர்களின் உண்மையான புள்ளி விபரங்கள் இவையாவும் இன அழிப்பினை சுட்டி நிற்கின்றன. இவற்றிற்கு மேலாக மூன்று இலட்சம் மக்களின் சுவாசப் பாதையில் இரசாயன நுண் உலோக பதார்த்தங்களின் தாக்கம் நிரந்தர ஆதாரமாக தேங்கி உள்ளது.


மேலும், இவர்களின் குருதியில் இப்பதார்த்தங்களால் வாழ்தகவை குறைக்கும் நச்சு பதார்த்தம் ஏற்பட்டு உள்ளது. அதனை Genocidal Factors எனலாம். இதனால், அவர்களின் உடலில் இயற்கையாகக் காணப்படும் Co enzyme Qஇன் அளவு குறைவாகக் காணப்படும். இது இன அழிப்பிற்கு ஒரு உயிர் வாழும் ஆதாரம். அடுத்து 2003 தொடக்கம் 2009 வரை பிறந்த குழந்தைகளில், வன்னியில் பாரிய வெடிப்புச் சத்தங்களால் மூளை நரம்புகளின் இயற்கையான பரம்பல் பாதிக்கப்பட்டு நிரந்தர மாற்றத்திற்கு உள்ளாகி உள்ளனர்.


இதனை நவீன மருத்து ஆய்வுமுறைகளால் நிரூபிக்கலாம். இதுவும் ஓர் உயிர் வாழும் மருத்துவ உதாரணமாகும். அடுத்து உயிர் தப்பியவர்களின் உடலில் உள்ள எறிகனைச் சிதறல்கள், குண்டுவீச்சின் சிதறல்கள் என்பனவும் உயிர்வாழும் ஆதாரங்களாகும். அடுத்து ஏற்பட்ட உளத்தாக்கங்களும் சமூக உள மாற்றங்களும் மிகவும் பெரிய மாற்றங்களாகும்.


பாரிய அழிவினைச் சந்தித்த சமூகம் மீண்டும் மீண்டும் அழியாது இருப்பதற்கு அச்சமுகம் கல்வியில் முன்னேற வேண்டும். இதற்கு இன்று நவீன தொழில்நுட்பம் எமக்குக் கைகொடுக்கும். கணினிக் கல்வி, சட்டக்கல்வி, இராஜதந்திரக் கல்வி, தமிழ் மொழிக் கல்வி, அறநெறிக் கல்வி என்பவற்றில் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.


இன்று உலகில் நடைபெறும் விஞ்ஞான ஆராய்ச்சிகளை ஒரு கணப்பொழுதில் கணினிகள் மூலம் எம்மால் பெற்றுக்கொள்ள முடியும். இது எமது 30 வருட யுத்தத்தில் எமக்கு ஏற்பட்ட வெற்றிடத்தினை விரைவாக நிரப்பும்.


இதனை நாம் கடந்த ஐந்து வருடத்தில் அனுபவரீதியாக கண்டுள்ளோம். எனவே, நாம் நம்பிக்கையுடன் நன்னெறிகளுடனும் வாழ்வோம்.


இறுதியாக எமது அரசியல் தலைவர்கள் இளம் சந்ததியினருக்கு நேர்மையான அரசியலை கற்பிக்க வேண்டும். உணர்ச்சி அரசியலை பத்திரிகைகளினால் கூறிவிட்டு, அதற்கு எதிர்மாறாக நடைமுறையில் செயற்படுவதைத் தவிர்க்க வேண்டும்.


நாடாளுமன்ற தெரிவுக் குழுவினால் எமக்கு அரசியல் தீர்வு ஏற்பட்டுவிடாது. ஏனெனில், அது சிங்களப் பெரும்பான்மையினரைக் கொண்டது. தமிழ் மக்களுக்கு உதிரித் தீர்வுகள் தேவையில்லை. மாறாக அமைதியாக இருந்து எமது கல்வியிலும், தொழில்நுட்ப வளர்ச்சியிலும், பொருளாதார வளர்ச்சியிலும் கருத்தாக இருப்போம்.


இன்று பூகோளமயமட்ட அரசு (Global Government) மற்றும் இலத்திரனியல் அரசு (e-government)போன்ற மாற்றங்கள் ஏற்படுவதற்கான சூழலே உள்ளது. அந்நிலையில், தமிழர்கள் கல்வியறிவிலும் தொழில்நுட்ப அறிவிலும் சிறந்த இடத்தினை பெற முயற்சிக்க வேண்டும்.


இராணுவ அடக்குமுறையின் மூலம் முழு இலங்கையும் பொருளாதாதர ரீதியிலும், அரசியல் ரீதியிலும் தொடர்ந்து கட்டுப்படுத்த நினைக்கும் அரசுக்கு புலிகளின் மீள் உருவாக்கம் என்ற நாடகம் தேவையாக உள்ளது. இதனால் சிறையில் உள்ள அப்பாவித் தமிழ் இளைஞர்களும் அவர்களது உறவினர்களும் சுட்டுக்கொல்லப்படுகின்றனர்.


இது மிகவும் அயோக்கியமான செயலாகும். எனவே, மாபெரும் அழிவுகளை 2009இல் சந்தித்த தமிழ் மக்களுக்கு மீண்டும் மீண்டும் அழிவுகளை ஏற்படுத்துவற்காக இந்த வக்கிர யுக்தி கையாளப்படுகின்றது. இந்நிலையில், தமிழ் மக்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த ஐ.நா. அமைதிப்படையினையோ அல்லது இந்திய படையினையோ உதவுமாறு இராஜதந்திர ரீதியில் அழுத்தம் கொடுக்கவேண்டும். இதன் மூலமே இலங்கையில் நீடித்த சமாதானத்தினை உறுதிப்படுத்தலாம்.


அடுத்து ஜனநாயகச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் என்பன கடந்த 5 ஆண்டுகளில் கட்டுப்படுத்தபட்டதாகவே உள்ளது. ஊடகங்களும் சில சார்பு நிலைகளை எடுத்துள்ளன. இவை யாவும் எதிர்மறையான சமாதானப் போக்குகளே. எம்மிடையே உள்ள வேறுபாடுகள் கலைவதற்கு எமக்கிடையே உள்ள கருத்து முரண்பாடுகளை ஆக்கபூர்வமாக முன் வைத்தல் அவசியம். அதன் மூலமே மாற்றுக் கருத்துக்களை ஆக்கபூர்வமாக உருவாக்கலாம். இத்தகைய சிந்தனைகளே நடைமுறையில் மனித மேன்பாட்டிற்கான பலனைத் தரும்.

Friday 27 November 2020

சங்கரின் சாவு எப்படி நிகழ்ந்தது?

 சங்கரின் சாவுக்கு திகதி குறிக்கப்பட்டுவிட்டதையும், அது புதிய சரித்திரம் ஒன்றை படைக்கப்போவதை அறியாமல் தான் 1982ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் நாள் யாழ்பாணத்தின் காலை விடிந்தது என தொல்லியற்துறை மாணவன் திபாகரன் எழுதியுள்ள வரலாற்றின் பதிவுகள் ஆவணத்தொகுப்பில் குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

1982ல் சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலில் காயமடைந்த போராளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவப்பொருட்களை வணக்கத்துக்குரிய பிதா சிங்கராயர் அவர்கள்தான் கொள்வனவு செய்திருந்தார்.

அவரது ஆச்சிரமத்தை எதிர்பாராதவிதமாக சோதனையிட்டபோது பொலிஸாரிடம் அம்மருந்துப் பொருட்களுக்கான பற்றுச்சிட்டைக்கள் அகப்பட்டுவிட்டன.

அதனால் கைதாகிய பிதா சிங்கராயர் கொடுமையான விசாரணயின் போது உண்மைகளைச் சொல்லிவிட்டார்.

போராளிகளுக்கு சிகிச்சையளித்த அருட்சகோதரரும், வைத்தியருமான இரட்டையர்கள் சின்னராசா, குருகுலராசா ஆகிய இருவரும் கைதாகினர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட கடுமையான விசாரணையின் போது யாழ். பல்கலைக்கழக பொருளியல் விரிவுரையாளர் ச.நித்தியானந்தன் வீட்டில் சிகிச்சையளிப்பட்மை தெரியவந்துள்ளது. உடனே அவர் வீட்டை நோக்கிப் படையினர் பாய்ந்தனர்.

அன்று நல்லுரில் நாவலர் வீதியும், டக்கா வீதியும் சந்திக்கும் சந்தி மூலையிலுள்ள பொருளியல் விரிவுரையாளர் ச.நித்தியானந்தன் வீட்டில் சாவகச்சேரி பொலிஸ் நிலைய தாக்குதலில் காயமடைந்த சீலன் உள்ளிட்ட நான்கு போராளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து வெளியேறும் போது மகிழ்ச்சியின் நிமித்தம் புலி வீரர்களுக்கு விருந்துபசாரம் நிகழ்ந்துள்ளது.

போராளிகள் இருவர் இருவராக சென்று உணவருந்திவிட்டு திரும்பிவிட்டனர். மாலை 3:30 மணியளவில் இறுதியாக அங்கு சென்ற லெப்.சங்கர் வீட்டினுள்ளே விரிவுரையாளருடன் உணவருந்திக் கொண்டிருந்தார்.

அவ்வேளை வீட்டனுள் சிங்களப்படை திடீரென தேடுதல் வேட்டைக்காக புகுந்துள்ளனர். உடனே சங்கர் வீட்டின் பின்புறமாக ஓடிச்சென்று கிலுவை வேலியை வேகமாக பாய்ந்து தாண்டும்போது இராணுவத்தின் துப்பாக்கி ரவை ஒன்று சங்கரின் அடிவயிற்றுப் பகுதியில் படுகாயப்படுத்தியது.

இரத்தம் பீறிட்டுக்கொண்டிருக்க டக்கா வீதியில் குதித்து ஓடிக்கொண்டிருந்த சங்கரை அவ்வீதியால் மிதிவண்டியில் வந்துகொண்டிருந்த ஈரோஸ் இயக்க உறுப்பினரும், பல்கலைக்கழக மாணவருமான செல்வின் தனது கரங்களால் தாங்கிப்படித்து மிதிவண்டியில் ஏற்றிக்கொண்டு வேகமாக திருநெல்வேலியில் உள்ள போராளிகளின் மறைமுக முகாம் நோக்கி விரைந்தார். மாலை 4 மணிக்கு குமாரசாமி வீதி 41ம் இலக்க மறைமுக முகாம் வீட்டில் பாதுகாப்பாக சங்கர் சேர்க்கப்பட்டார்.

மாலைநேரம் போராளிகளும், ஆதரவாளர்களும் விரைவாக தொழிற்பட தொடங்கினர். மருத்துவர் கெங்காதனிடம் அவசர உதவி கோரப்பட்டது. அன்றைய பதற்ற நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல முடியாது.

ஆகையால் தனியிடத்தில் சிகிச்சையளிக்க மருத்துவர் இசைந்ததற்கிணங்க தீவிர ஆதரவாளரும், பல்கலைக்கழக மாணவருமான ஜெயரெட்டி தனது காரில் ஏற்றிக்கொண்டு செல்ல சங்கருக்கு தனியிடத்தில் சிகிச்சையளிக்கப்பட்டது.

ஆனால் உள்ளக இரத்தக்கசிவுக்கு யாழ்பாணத்தில் வைத்து சிகிச்சையளிப்பது பாதுகாப்பற்றது என்பதை காரணம் காட்டி தமிழகம் கொண்டு செல்லும்படி மருத்துவர் ஆலோசனை வழங்கினார். அன்றிரவு சங்கர் கொக்குவில் அம்பட்டப்பலத்தடியில் உள்ள ஒரு வீட்டில் (ரவிசேகரின் அறையில்) பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டார்.

ஐந்து நாட்களாக தமிழக படகுப்பயணம் பல்வேறு தடைகளால் தாமதப்பட்டு நவம்பர் 26 இரவு தமிழகம் நோக்கி பயணப்பட்டார். சங்கரை மேலதிக சிகிச்சைக்காக தமிழகம் கொண்டு செல்ல அன்று இயக்கத்திலிருந்து விலகியிருந்த அன்ரன் சிவா (சிவகுமார் தற்போது கனடாவில்) நியமிக்கப்பட்டார்.

27ம் நாள் அதிகாலை தமிழக கரையினை அடைந்த சங்கரை இயக்க ஆதரவாளாரான மூதாட்டி ஒருவரின் வீட்டில் தங்க வைத்துவிட்டு அன்ரன் சிவா, தலைவரை சந்திக்க மதுரைக்குச் சென்று தகவல் சொல்லி மதுரையில் இருந்து போராளிகள் வாகனம் ஒன்றை கொண்டு சென்று சங்கரை தனியார் வைத்தியசாலை ஒன்றில் இரகசியமாக அனுமதித்தனர்.

எனினும் ஏற்கனவே மூதாட்டி வீட்டில் படுகாயத்தின் வேதனையில் முனகிக்கொண்டிருந்த சங்கர் தாகம் மேலிட தண்ணீர் கேட்க மூதாட்டி கோப்பி தயாரித்து வழங்கியுள்ளார்.

கோப்பி அருந்தியதும் ஒவ்வாமையால் விரைவான உள்ளக இரத்தப்பெருக்கு ஏற்பட்டு சுயநினைவை இழந்த சங்கர், தம்பி தம்பி என தலைவரை நெடுநேரம் அழைத்துக் கொண்டே மாலை 6:05க்கு தமிழகத்தின் மதுரை மண்ணில் அவர் மூச்சு நின்று போனது.

அன்றைய காலச்சூழலில் சங்கரின் வித்துடலை பூரண மரியாதைகளுடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று தகனம் செய்ய முடியாது.

எனவே சங்கரை தமிழ்நாட்டின் திருநெல்வேலிப் பகுதியைச் சேர்ந்த வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர் எனவும், நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார் எனவும், அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்கு நிதிவசதி இல்லையெனவும் கூறி, மரணச்சான்றிதழ் ஒன்றினைப் பெற்று அந்த தனியார் மருத்துவமனையிலிருந்து இரவுநேரம் எடுத்துச்சென்று மதுரையிலுள்ள ஒரு சுடுகாட்டில் மூத்த போராளிகளான பேபி, பொன்னம்மான், தேவர், கிட்டு மற்றும் நெடுமாறன் ஐயாவும் அவரின் கட்சித் தொண்டர்கள் சிலரோடும் சென்று அப்பையா அண்ணர் சங்கரது உடலுக்குத் தீ மூட்டினார்.

பின் அஸ்தியை சேகரித்து பாதுகாப்பாக வைக்கப்பட்டு, மறுவருடம்தான் சங்கரது மரணச்செய்தி பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டு அஸ்தியும் கையளிக்கப்பட்டுள்ளது.

அன்றிலிருந்து மாவீரர் விதைப்பு உதயமாகியது. இன்று அந்த நவம்பர் 27 தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் குறியீட்டு நாளாய் பரிமாணமித்திருக்கிறது. சங்கரின் அடிச்சுவட்டை பின்பற்றி நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட தேசத்தின் புதல்வர்கள் தாயக விடிவிற்காக தம்மை ஆகுதியாக்கி விடுதலைப் போருக்கு உரமாயினர்.

இம்மாவீரர்கள் தம் இளமைக்காலத்தை துறந்தவர்கள், பணம், பதவி, பட்டம், புகழ், ஆசைகளை புறந்தள்ளியவர்கள், இலட்சிய வேட்கையேடு நெருப்பாற்றில் நீந்தியவர்கள், சொல்லணாத்துன்பங்களை தோளில் சுமந்து தமிழ் மக்களுக்கு ஒளியூட்டியவர்கள், எதற்கும் விலைபோகதவர்கள், அவர்கள் விலைமதிப்பற்றவர்கள், தமிழீழ மக்களின் விடுதலைக் கனவையும் நெஞ்சில் சுமந்து களமாடியவர்கள் இத்தகைய மாவீரர்களின் கனவு சுமந்து நாம் தொடர்ந்து போராடுவோம் என இந்நாளில் தமிழிழ மக்கள் உறுதிகொள்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tuesday 17 November 2020

இலங்கையில் தமிழர் பிரதேசங்கள்

 இலங்கையில் ஏறக்குறைய மூன்றிலொரு பகுதியிலே தமிழ்மொழி பேசுவோர் பல நூற்றாண்டுக்காலமாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த வரலாறு கி.மு ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்னரே ஆரம்பமாகி விட்டது. எமக்கடுத்த தலைமுறையினரின் ஆய்வுகளும் இலங்கைத் தொல்பொருளியல் திணைக்களத்தின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றுவருகின்ற ஆய்வுகளும் அண்மையில் கந்தரோடையிலும் போர்க்காலத்தில் இடித்தழிக்கப்பட்ட யாழ்ப்பாணக் கோட்டைப் பகுதியிலும் மேற்கொள்ளப்பட்ட அய்வுகளும் இதற்கு வலுச்சேர்க்கின்றன.
ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியாளரிற் போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் இலங்கையிலே தமிழர் வாழும் பிரதேசங்களைப் பற்றியும்  தமிழ்மொழி வழங்கும் பிராந்தியங்களைப் பற்றியும் தாம் நேரடியாகக் கண்டும் கேட்டும் அறிந்தவற்றையும் சில சமயங்களில் ஆவணச்சுவடிகளிற் பதிவாகியுள்ளவற்றைப் பார்த்தும் மிகத்தெளிவாகவும் ஆதாரபூர்வமாகவும் வர்ணித்துள்ளனர். 'நீர்கொழும்பிலிருந்து யாழ்ப்பாணப் பட்டினம் வரையுள்ள பகுதிகளில் வாழ்கின்றவர்கள் தமிழ்மொழியை சீராகப் பேசுகின்றனர். இலங்கையில் அவர்களே அதிக தயக்கமின்றி க் கிறிஸ்தவ சமயத்தை ஒப்புக்கொண்டவர்கள்' என்பது இலங்கை பற்றிப் 17ஆம் நூற்றாண்டில் ஒரு விரிவான வரலாற்று நூலை எழுதிய பாதிரியாரான பெர்ணாஓ த கேறோஸ் என்பவரின் குறிப்பாகும். 

இதனைக் காட்டிலும் உலாந்தக்காரரான  பிலிப்பூஸ் வோல்டே என்னும் பாதிரியார் கூறுவன மிகவும் அழுத்தமானவை. அவர் மேல்வருமாறு எழுதகின்றார். 

'இலங்கையில் வாழ்கின்றவர்கள் சிங்களத்தை மட்டும் பேசவில்லை, அவர்கள் தமிழ்மொழியினையும் பேசுகின்றார்கள். நீர்கொழும்பு தொடக்கம் கொழும்பு, களுத்துறை, கவருவலை, அலுத்கம, காலி, வெலிகம, மாத்தறை, தேநுவரை முதலான இடங்களில் உள்ளவர்கள் சிங்களத்தைப் பேசுகின்றார்கள். சோழ மண்டலக் கரைக்கு அண்மையிலுள்ளனவாகிய, இலங்கையின் மற்றெல்லாப் பகுதியிலும் வழங்கும் மொழி தமிழேயாகும். சோழ மண்டலத்திலுள்ளவர்கள் முற்காலங்களில் சென்று தங்கள் தேசத்திலே குடியேறினார்கள் என்றும், அதன் விளைவாகவே தங்கள் ஆதியான முன்னோர்களின் நாட்டுக்குரியதான தமிழ்மொழி அங்கெல்லாம் வழங்குகிசதென்றும் யாழ்ப்பாணப் பட்டினத்தவர்கள் சொல்வதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன்' 

கண்டி இராச்சியத்தில் நெடுங்காலம் தடுப்புக்கைதியாக வைக்கப்பட்டிருந்த பிரித்தானியரான ரொபர்ட் நொக்ஸ் எழுதிய 17 ஆம் நூற்றாண்டுக்குரிய நூலிலுள்ள குறிப்பு இதனை மேலும் தெளிவுப் படுத்துகின்றது. அவர் தமிழரின் தேசம் என்பதைப் பற்றி மேல்வருமாறு குறிப்பிடுகின்றார். 

'நாங்கள் வியாழக்கிழமை பொழுது மதியத்தைக் கடக்கும்வரை பிரயாணஞ்செய்தோம். அப்பொழுது குருந்து ஓயா என்று சொல்லப்படுகின்ற ஆற்றைக் கடந்தோம். அது நீராட்டமின்றி வரட்சியான நிலையில் காணப்பட்டது. அது கண்டி அரசனுடைய இராச்சியத்திற்கும் தமிழரின் தேசத்திற்கும் இடையிலான எல்லையாகும், எனினும் நாங்கள் தமிழர்கள் வாழும் நாட்டை அடைந்துவிட்டதால் சற்று ஏக்கமடைந்தோம். அந்த மக்களின் புரவலனாகிய வன்னியனார் அச்சத்தின் காரணமாக உலாந்தக்காரருக்கு திறை செலுத்துகின்றான், ஆயினும் அவன் கண்டி அரசன்மேற் கூடிய அனுதாபங் கொண்டவனாவான்.'

தமிழரின் தேசம் என்று ரொபர்ட் நொக்ஸ் குறிப்பிடுவது அடங்காப்பற்று வன்னியிலுள்ள மிகப்பெரிய பிரிவான பனங்காமம் பற்று என்பதாகும். வேறோரிடத்தில் தமிழர் தேசம் என்பதை கொய்லத் வன்னிநாடு (கயிலாய வன்னி நாடு) அவர் குறிப்பிடுகின்றார். கயிலாய வன்னியன் அடங்காப்பற்று வன்னியில் மிகவும் பிரசித்தமானவன். யாழ்ப்பாணம் மீது போர்த்துக்கேயர் படையெடுத்துச் சென்ற போது அங்கு எதிராக போரிட்ட சங்கிலி குமாரனுக்கு துணையாகவிருந்த வன்னியரிற் கயிலாய வன்னியன் முதன்மையானவன். போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியதும் கயிலாய வன்னியன் நல்லூருக்குச் சென்று திறைசெலுத்த மறுத்துவிட்டான். மற்றைய வன்னிபங்களும் அவனின் தலைமையை ஏற்றுக்கொண்டதோடு பறங்கியரிடம் சென்று திறை செலுத்துவதை மறுத்துவிட்டன.

தென்னிந்தியாவிலிருந்தும் காலாகாலமாக கி.மு ஏழாம் நூற்றாண்டு முதலாக இலங்கையின் கரையோர மாகாணங்களிற் பெருங் கற்பண்பாட்டு மக்கள் குடியேறினார்கள்.அவர்கள் அமைத்த குடியிருப்புக்களை அடிப்படையாகக் கொண்டு ளகிராமங்கள், நகரங்கள், பண்டமாற்று நிலையங்கள், குறுநில அரசுகள் என்பன உருவாகின. ஆடங்காப்பற்று வன்னியிலுமு; இந்த மாற்றங்கள் இடம்பெற்றன. ஆங்கு காணப்படும் பிராமிச் சாசனங்கள் அதற்குரிய ஆதாரங்களாகும்.

இராசதானிகளை மையமாகக் கொண்ட, பரம்பரை வழியான குடியாட்சி முறை வலுப்பெற்ற பொழுதிலும் பூர்வகாலத்தில் உற்பத்தியான சிற்றரசுகள் ஏதோவொரு வகையில் தொடர்ந்தும் நிலைபெற்றன. சுயாட்சி உரிமையும் அதிகாரமும் கொண்ட அந்நிலப் பிரிவுகளைப் 13ஆம் நூற்றாண்டு முதலாக வன்னி என்று குறிப்பிட்டனர். அது தமிழ்,சிங்களம்,பாளி ஆகிய மொழிகளில் அமைந்த நூல்களிலே பொது வழக்காகி விட்டது. தமிழகத்திலுள்ள மரபொன்றின் மூலமாகவே இவ் வழமை இலங்கையில் ஏற்பட்டது.

தமிழர் வாழும் பகுதிகளான  அடங்காப்பற்று, திருகோணமலைப் பிரதேசம், மட்டக்களப்புப் பிரதேசம் என்பவற்றில் வன்னிச் சிற்றரசுகள் நெடுங்காலம் நிலைபெற்றன. யாழ்பப்hணத்தில் ஆரியச் சக்கரவர்த்திகளின் ஆட்சி ஏற்படுவதற்கு முன்பு யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் சில காலம் சாவகர் ஆட்சி புரிந்தனர். அவர்கள் திருகோணமலையினைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்தனர் போலத் தெரிகின்றது. தம்பலாகாமத்தில் நிலை கொண்டிருந்த ஜகதப்ப கண்டன் என்னும் பெயருடைய படை கலிங்க மகானைச் சிறைப் பிடித்ததென்பதை அங்குள்ள கல்வெட்டொன்றின் மூலம் அனுமானித்துக் கொள்ளமுடிகின்றது.

17 ஆம் 18 ஆம் நூற்றாண்டுகளில் ஒல்லாந்தர் அடங்காப்பற்று என்பதையே வன்னி என்று குறிப்பிட்டனர். அதிற் பனங்காமம், கரிகட்டுமூலை, கருநாவல் பத்து, முள்ளியவளை, மேல்பத்து, தென்னமரவடி என்னும் ஆறு பிரிவுகள் இருந்தன். ஆவற்றின் ஆட்சியாளர் வன்னிபம்ஃவன்னியனார் என்ற பதவிப் பெயர்களை பெற்றவர்கள். முற்காலங்களில் அவர்களின் ஆட்சியுரிமை சந்தன வழிமுறையாகுமு;. ஆதனை ஒல்லாந்தர் ஒப்புக் கொள்ளாதமையும் இரு சாராருக்கும் இடையிலே தகராறுகள் ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்றாகும். ஆவர்களுக்குச் சில சீர்வரிசைகளும் அதிகாரங்களும் உரித்தானவை. முற்காலங்களில் அவர்கள் தங்கள் ஆட்சிப் புலங்களில் எல்லா விதமான அதிகாரங்களையுங் கொண்டிருந்தனர்.அவர்கள் நல்லூர் இராசதானிக்குப் போகும் சமயங்களிலே வரிசைகளோடும் வாத்தியங்களோடும் செல்வது வழமை. அரசாங்கத்தில் அரசனுக்கு அடுத்தபடியிலுள்ள நிலை வன்னிபங்களுக்குரியதாகும். ஆவர்கள் அரசரைப் போல முடிசூடிக்கொள்ளவில்லை. நாணயங்களை வழங்கவில்லை. முற்றெல்லா வகையிலும் அரசரைப் போன்றவர்கள் என்பதால் ஜரோப்பியரிற் சிலர் வன்னிபங்களை 'அரசர்' என்று குறிப்பிட்டனர். தமிழரசர் காலத்தில் செட்டிகுளம் பற்றிலும் வன்னியரின் ஆட்சி நிரவியது. ஆனாற் போர்த்துக்கேயர் அதனை கைப்பற்றி, வன்னியரின் ஆட்சியை ஒழித்து விட்டனர்.

தமிழ் நூல்களில் அடங்காப்பற்று வன்னியின் வரலாறு தெளிவாக விளக்கப்படவில்லை. திருகோணமலை பிரதேசத்திலும் வன்னியரின் ஆட்சி நிலவியது. அங்கு திருகோணமலை, தம்பலாகாமம், கட்டுக்குளம், கொட்டியாரம் என்னும் நான்கு பற்றுக்கள் வன்னியரின் ஆட்சியின் கீழ் இருந்தன. அந் நான்கு பிரிவுகளிலும் தலைமுறை தலைமுறையாக ஆட்சிபுரிந்த வன்னியரின் பெயர்ப்பட்டியல்கள் கோணேசர் கல்வெட்டு என்னும் ந}லில் அமைந்திருக்கின்றமை ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவர்களில்  இருவரின் பெயர்கள் சாசனங்களில் பதிவாகியுள்ளமையும் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

பழுகாமம், போரதீவு, மட்டக்களப்பு, உன்னரசகிரி, நாடுகாடு, சம்மாந்துரை, பாணமை, கோறளைப்பற்று என்னும் வன்னிப்பரிவுகள் முற்காலத்து மட்டக்களப்பு தேசத்தில் அடங்கியிருந்தன. அங்கு 17ஆம் நுற்றாண்டிலே கண்டி மன்னரின் மேலாதிக்கம் ஏற்பட்ட பின்னும் வன்னிபங்கள் சுயாட்சி உரிமை பெற்றிருந்தது குறிப்பிடற்குரியது. ஊள்ளூர் நிர்வாகம், இறைவரி நிர்வாகம், நீதிப்பரிபாலனம் என்பன அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. கனிசமான அளவு படைகளையும் அவர்கள் கொண்டிருந்தனர். இராச்சியத்தின் பிரதானமான விடயங்கள் தொடர்பாகத் தேசத்துப் பிரதானிகள் இராசதானியிற் கூடிய பொழுது கிழக்கிலங்கை வன்னிபங்களும் இராசதானிக்கு அழைக்கப்பட்டனர்.

வன்னி நிலப்பகுதியிலே தமிழ்மொழியே வழங்கியதென்றும் அம்மொழியைப் பேசும் சமூகங்களைச் சேர்ந்தவர்களே அங்கு வாழ்ந்தனரென்றும் அங்கு ஒரு காலகட்டத்தில் ஆட்சி புரிந்த போர்த்துக்கேய, ஒல்லாந்த அதிகாரிகளும் அவர்களின் தேசங்களை சேர்ந்த வரலாற்று ஆசிரியர்களும் குறிப்பிட்டுள்ளனர். பிரித்தானியர் ஆட்சியிலும் அதற்கு பின் 1956ஆம் ஆண்டு வரையிலும் இந்நிலை தொடர்ந்தும் காணப்பட்டது என்பதை குடித்தொகை மதிப்பீட்டு விபரங்கள் உறுதிப்படுத்துகின்றன. இங்கு வழங்கும் தமிழ் மொழியிலே சிங்கள மொழிக் கலப்பு சிறிதளவேனும் ஏற்படவில்லை என்பது மொழியியல் ஆய்வுகளின் முடிவாகும். புத்தளம், கற்பிட்டி, யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டகளப்பு தேசம் என்பன இந்நிலப்பகுதியில் அடங்கிய தனித்துவமான பிரதேசங்கள, புவியியல்சார் நிலைகளும் வரலாற்று அம்சங்களும் ஒவ்வொரு பகுதுpயுமு; சிறப்புக்களுக்கு ஏதுவானவை. வாணிபம,; பண்பாடு, சமய நெறிகள், சமூகவழமைகள் ஆகிய துறைகளில், இந்நிலைப்பகுதியிலே தென்னிந்தியச் செல்வாக்கு காலகாலம் ஏற்பட்டுள்ளது. அது ஆதிகாலம் முதலாகத் தொடர்ச்சியாக ஏற்பட்ட ஒன்றாகும்.

இங்கு வரையறை செய்யப்பட்ட ஜந்துநிலப்பகுதிகளில் புத்தளம், கற்பிட்டி ஆகியவற்றிலே தமிழ்மொழி பேசுவோரின் நிலை பெருமளவிற்கு பலவீனமாகிவிட்டது. மொழி மாற்றம், குடியேற்றத்திட்டங்களின் மூலம் குடித்தெகையில் ஏற்பட்ட மாற்றம், சமயமாற்றம் முதலியன இதற்கான காரணங்களாகும். அண்மைக்காலத்தில் ஏற்பட்ட நிகழ்சிகளின் விளைவாக இதற்கமைய மாற்றம் யாழ்ப்பாணம், வன்னி ஆகிய மையப் பகுதியிலும் ஏற்படக் கூடிய சாத்தியம் தென்படுகிறது.

கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலம் முதலாகவே அப்பகுதிகளிற் சுயாட்சி உரிமை கொண்ட குறுநில அரசுகள் இருந்தன. ஜரோப்பியரின் ஆட்சிக் காலங்களில் அவை பலவீனமாகிக்; காலப்போக்கில் அழிந்து விட்டன. இப்பகுதிகளில் விளங்கிய குறுநில பகுதிகளைப் 13ஆம் நூற்றாண்டு தொடக்கம், தமிழக வளமையினை அடிப்படையாகக் கொண்டு வன்னி என்றும் அவற்றின் அதிபர்களை வன்னியனார் இலல்து வன்னிபம் என்றும் குறிப்பிட்டனர். ஆதனால் வன்னிகள்   13ஆம் நூற்றாண்டில் உற்பத்தியானவை என்ற கருத்து வரலாற்று ஆய்வாரள்களிடையே நிலவி வந்துள்ளது. அந்தக் கருத்தினைமுற்றாக நிராகரிக்க வேண்டிய நிலை இப்பொழுது ஏற்பட்டுள்ளது. இந்நிலை புதிய ஆய்வுகளின் விளைவாக உருவாகியுள்ளது. வன்னிகளின் வரலாறு, பூர்வ காலத்து சிற்றரசுகளின் உற்பத்தியோடு தொடர்புடையதாகும். அது கிறிஸ்தாப்தத்திற்கும் முற்பட்டது.

வன்னியும் நாகரும்

வன்னியில் மலைப் பாறைகளில் வெட்டப்பட்ட பிராமிக்கல்வெட்டுக்கள் ஐம்பத்து நான்கு இது வரை அடையாளங் காணப்பட்டுள்ளன. அவை மகாகட்சக்கோடி(04), எறுப்பொத்தானை(12), பெரியபுளியங்குளம்(35), வெடிக்கிநாறிமலை(03) ஆகிய இடங்களில் உள்ளன. அவை யாவும் ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை.

பூர்வீகமான நுண்கற்காலப் பண்பாடு, தென்னிந்திய உற்பத்தியுடைய பெருங்கற் பண்பாடு, பௌத்த சமயம், அதன் தொடர்பு மொழியான பிராகிருதம் ஆகியவற்றின் சங்கமத்தின் விளைவாக ஏற்பட்ட சமூக, பண்பாட்டு மாற்றங்கள், அரசின் உருவாக்கம் என்பவற்றை அவை பிரதிபலிக்கின்றன. எனவே ஆவணங்களை அடிப்படையாக கொண்ட வன்னி நாட்டு வரலாறு இவற்றைப் பற்றிய ஆய்வு முயற்சிகளோடு ஆரம்பமாகின்றது. ஆனால் வரலாற்றறிஞர்கள் இக்கண்ணோட்டத்தில் இந்த ஆவணங்களை ஆராய முன்வரவில்லை. காலநிலை இதற்கொரு காரணமாகலாம். இங்கே குறிப்பிட்ட சாசனங்கள் அனைத்தும் பிரகிருத மொழியில் அமைந்தவை. இலங்கையின் ஏனைய பகுதிகளிற் கிடைத்துள்ள சாசனங்களைப் போல இச்சாசனங்களும் பௌத்த சமயம் தொடர்பானவை. சங்கத்தாருக்கு உபாசகர் நிலையில் உள்ளவர்கள் குகைகளைத் தானம் பண்ணியமை பற்றியவை.

வவுனியா மாவட்டத்துச் சாசனங்கள் ஒரு பல்லினப் பண்பாட்டுச் சமூகத்தின் அம்சங்களை வெளிப்படுத்துகின்றன. சங்கத்தாரின் இலக்கிய மொழியும் பிரகிருதம் என்பதால் அதிலே சாசனங்களை எழுதியுள்ளனர். பிடக நெறியிற் புகுந்த உபாசகரின் பெயர்களும் பிரகிருத மொழிப் பெயர்களாகி விட்டன. அது சைவர்களினதும் வைணவர்களினதும் பெயர்கள் பெரும்பான்மையும் சமஸ்கிருத மொழி வழியான பெயர்களாக உள்ளதைப் போன்றது. பிற்காலங்களில் இஸ்லாமியராக மாறியவர்களின் பெயர்கள் அரபுமொழிப் பெயர்களாகவும், கிறிஸ்தவ சமயத்துக்கு மாறியவர்களின் பெயர்கள் மேனாட்டுப் பெயர்களாகவும் மாறிவிடுவதுண்டு. 

எனவே ஒருவரின் பெயரினைக் கொண்டு அவரதும் அவரது முன்னோர்களினதும் பேச்சு வழக்கு மொழியினை அடையாளப்படுத்தலாகாது. ஆயினும் பௌத்தம் பரவியதன் விளைவாகப் பிரகிருதம் அமோகமான செல்வாக்கைப் பெற்றது. தென்னிலங்கையிற் பழைய பூர்வீகமான மொழி வழக்கு மெல்ல மெல்ல மறைந்து விட்டது. பிரகிருதத்தை அடிப்படையாக கொண்ட ஒரு புதிய மொழி காலப்போக்கில் உருவாகியது. அதுவே சிங்களம்ஃ கலப்பு மொழியான பிரகிருதத்தின் அம்சங்கள் அதிலும் உள்ளன. 

இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களிற் பௌத்தம் மூலமாகப் பிரகிருதம் பெருஞ் செல்வாக்குப் பெற்றபோதும் அங்கு பிரகிருதமயமாக்கம் ஏற்படவில்லை. அங்கெல்லாம் பரவிய பூர்வகுடிகளோடு கலப்புற்ற பெருங்கற் பண்பாட்டு மக்களின் மேலோங்கிய செல்வாக்கினாலே தாய்மொழி வழக்கு உறுதியாகிவிட்டது. வன்னிநாட்டு இடப்பெயர்கள் எல்லாம் தமிழ்ப் பெயர்கள். அவற்றிலும் 90 வீதமானவை குளம் என்பதை பின்னொட்டாக கொண்டவை. பிராகிருதத்திற் சொற்கள் மெய்யெழுத்தில் முடிவதில்லை. எனவே உயிரேறி வரும். எனவே குளம் எனுஞ்சொல் குளம என்றாகிவிடும். வடமத்திய மாகாணத்தலும் வடமேல் மாகாணத்திலும் குளம என்ற சொல்லுடன் முடியும் பெயர்கள் அனேகமானவை. வன்னி நாட்டில் குளம் குளம என்று மாற்றம் பெறாமை அங்கு நாட்டார் மொழி வழக்கில் பிராகிருத மயமாக்கம் ஏற்படவில்லை என்பதன் அறிகுறியாகும்.

பொதுவாக ஆதிவாசிகளின் மொழி வழக்கிலுள்ள பெயர்கள் நெடுங்காலம் நிலைபெறுவதுண்டு. ஆயினும் இலங்கையின் தொன்னைக்காலத்து ஆதிவாசிகளான நுண்கற்கால மக்கள் நிலையான குடியிருப்புக்களையும் அவற்றின் பயனாக உருவாகக் கூடிய ஊர்களையும் குளஙடகளையும் அமைத்திருக்கவில்லை. எனவே கிராமிய வாழ்க்கையும் அதற்கு ஆதாரமான உற்பத்தி முறையும் செயற்கை முறையிலான நீர்நிலைகளும் பெருங்கற் பண்பாட்டு மக்கள் குடியிருப்புக்களை ஏற்படுத்தியதன் விளைவாகவே தோன்றின. அவர்கள் தமிழ் திராவிட மொழியில் பேசியதால் நீர் நிலைகளைக் குளமென்று குறிப்பிட்டனர். வன்னியிலுள்ள ஊர்கள் பெரும்பான்மையும் குளம் என்ற சொல்லை பின்னொட்டாக கொண்டவை. குளத்தை ஏரி என்று சொல்வதும் தமிழ் வழக்கு. ஏரி என்பதன் தமிழ் வழக்கு சிங்கள வடிவம் ஏரிய என்பதாகும். மின்னேரிய என்பது அதற்கு உதாரணமாகும்.

பெருங்கற் பண்பாட்டு மக்களின் ஆதியான குடியிருப்புக்களின் அண்மையிற் செயற்கை முறையிலான நீர்த்தேக்கங்கள் தென்னிந்தியப்பிரதேசங்களிற் காணப்பட்டன. அப்பண்பாட்டிற்குரிய மக்கள் இலங்கையிற் சென்று குடியேறிய பொழுது அவர்கள் உருவாக்கிய குடியிருப்புக்களிலே தமது அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான நீரினைப் பெறுவதற்கும் பயிர்ச்செய்கைக்கும்  வேண்டிய  சிறிய குளங்களை அமைத்துக் கொண்டனர் என்பது பொருத்தமான சிந்தனையாகும். அவர்களுக்கு முன் அங்கு வாழ்ந்த நுண்கற்காலப்பண்பாட்டு மக்களைப் பொறுத்தவரையில் இது சாலக்காரியம் ஏன்எனில் அவர்கள் உற்பத்தி செய்யாதவர்கள் உலோகக் கருவி பயன்படுத்தாதவர்கள் எனவே பெருங்கற் பண்பாட்டின் செல்வாக்கின் விளைவாகவே வன்னியிலே கிராமங்களும் அவற்றுக்கு வேண்டிய குளங்களும் உருவாகின கிராமங்களும் அவற்றின் வயல்களும் குளங்களை ஆதாரமாக கொண்டு அமைந்ததால் குளம் என்பது அவற்றின் பெயர்களில் ஒரு பகுதியாகியது. 

இலங்கையிலே காணப்படும் பிராமிக்கல்வெட்டுக்களில் வவுனியா மாவட்டத்தில் உள்ளவற்றிலே தான் தமிழ்மொழியின் செல்வாக்கு மிகக் கூடுதலாகக் காணப்படுகின்றது. அவற்றிலே வேள், வேலு, பருமக(ன்), பருமகள், அபி(அவ்வி) எனும் சொற்கள் வருகின்றன. தமிழர் இனப் பெயர் குறிக்கும்  ஒரு சாசனங்கள் அவற்றிடையே காணப்படுகின்றன். தமிழ் பிராமி வடிவங்களுக்கு சிறப்பான ழ,ற,அ,ம,ளி என்னும் எழுத்துக்கள் காணப்படுகின்றன. ள என்னும் எழுத்து இவற்றிடையிலே தான் மிகக்கூடுதலான் இடங்களில் காணப்படுகின்றது. அது பருமகள், பருமக நுகுய வேள், சிகரமள, நுகுயமள, பருமக அஸ அதேக வேள் என ஐந்து இடங்களிலே சொற்களின் இறுதி எழுத்தாக அமைந்துள்ளது. அஸ அடேக வேள் என்ற தொடரிலுள்ள இறுதிச் சொல்லை ஒரு பதவிப் பெயரைக் குறிக்கும் சொல்லாக கொள்ளலாம். அச் சொல் அடங்கிய கல்வெட்டு மேல்வருமாறு அமைந்துள்ளது. 

பருமக அஸ அதே வேளஸ ஜாயா திஸாய லெணே

(பருமகனும் குதிரைகளின் அதிபதியுமாகிய வேளாது மனைவி திஸாவின் குகை)
இதில் வரும் வேள் என்ற சொல்லை இருவிதமாக விளக்கலாம். ஒன்று அவன் குதிரை அணி ஒன்றைக் கண்காணிப்பவன் அதனால் வேள் என்னும் பட்டம் பெற்றவன். மற்றது வேள் அவனது இயற்பெயர் என்பது நாக பரத என்னும் சமூப்பெயரட்கள் இலங்கைப் பிராமிச் சாசனங்களிலே சில இடங்களில் ஆட்களின் இயற்பெயராகவோ அப்பெயரின் ஒரு பகுதியாகவோ இடம்பெறுவது குறிப்பிடக்குரியது. அவன் குதிரைகளின் அணி ஒன்றுக்கு பொறுப்பானவன் பிரதேசத்து அரசனிடமிருந்து அவன் அப் பதவியைப் பெற்றிருத்தல் கூடும். அவன் பருமகன் என்ற பட்டம் பெற்றவன் குதிரைகளைப் பற்றிய சாசனக் குறிப்பு பெருங்கற்பாண்டுச் சின்னங்களை நினைவுபடுத்துவதாகும்.

இச் சாசனம் மிகுந்த முக்கியத்துவம் கொண்டது. அதில் வரும் பருமகன் வேள்(வேள் என்ற சொல்லின் பிராகிருத வடிவம்) என்பன தமிழ்ச் சொற்கள்.
தமிழ் மொழிக்குச் சிறப்பாக உரிய ளகரம் வேறொரு கல்வெட்டில் மூவரின் பெயர்களில் வருகின்றது, அதன் வாசகம் மேல்வருவதாகும்:

    பறுமக நுகுய வேள புதந
    ஸிகற மளஸ ச நுகுய மளஸ ச வெணே

    (பறுமகன் நுகுய வேளின் புதல்வாரன ஸிகரமள,நுகுயமள என்போரின் குகை)
ஏன்பன இரு சகோதரரின் பெயர்கள்.அவற்றிலே பின்னொட்டாக வரும் மள என்பது மள்ள(ன்) என்னுந் தமிழ்ச்சொல்லின் பிராகிருத வடிவம் என்று கருதலாம்.பிராகிருதத்திற் சொற்களின் இடையே வரும் மெய்யெழுத்துக்கள் இரட்டிப்பதில்லை.தமிழ் பிராமிச் சாசனங்களிலும் அதுவே நிலையாகும். எனவே மள்ள என்னும் திராவிடஃதமிழ் மொழிச் சொல் பிராகிருத ஆவணங்களில் மள என்றே வரும். முள்ளன் என்பது அம் மொழியில் மள ஆகிவிடும். இவ்வடிப்படையில் நோக்குமிடத்து மள்ளர் என்னும் சமூகப் பிரிவைச் சேர்ந்தவர்கள் கி.மு,இரண்டாம்,முதலாம் நூற்றாண்டுகளிலே தெற்கு வன்னியில் வாழ்ந்தனர் என்று கருதமுடிகின்றது.பழந் தமிழ் தமிழ் நூல்களில் மள்ளரைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்யமை இங்கு கவனித்தற்குரியது.

நுகுய என்னுஞ் சொல் மேற்குறித்த சாசனத்தில் இருவரின் பெயர்களின் முற்பகுதியாக வருகின்றது.அதனைப் பிராகிருதச் சொல்லாகவோ கொள்ள முடியவில்லை.அது பூர்வீகக் குடிகளான நுண்கற்காலப் பண்பாட்டு மக்களின் மொழி வழக்கிலிருந்து வந்த ஒன்றாகலாம்.வேறு பல பெயர்களும் இவ்வண்ணமானவை என்பது ஆழமான ஆய்வுகளின் மூலமாக உறுதியாகும் .
வேல் என்ற சொல் ஒருவரின் பெயரின் பின்னொட்டாக வருகின்றது.அது பஸிதவேல் என்பவனின் மகளான றோகிநி ஸிமுநி என்பவள் குகையொன்றைச் சங்கத்தாருக்கு கொடுத்தமையினை மேல்வருமாறு வர்ணிக்கின்றது.

பறுமக.மித-ஜயா பறுமக-ஸதந ஸத-ஜித(h)பறுமகள் புஸாய லெணே

பருமக(ன்) என்னும் பட்டம் பெற்றவன் பருமகன் மிதனுடைய  மனைவியும் பறுமகன் ஸதந் ஸத (சாத்தன்) சா(த்)தனுடைய மகளுமான புஸாவின் குகை  பறு(ரு)மக என்னும் பட்டத்திற்குரிய பெண் ஒருத்தியை பறுமகள் என்று குறிப்பிடுகின்றமை இச்சாசனத்திற்குரிய சிறப்பம்சமாகும். பறுமகள் என்பது சாசனங்கள் பலவற்றிலே பரு(று)மக என்று சொல்லப்படும் பட்டப்பெயரின் பெண்பால் வடிவம் என்பது இதனாலே தெளிவாகிறது. இலங்கைச் சாசனங்களிலே தமிழ்மொழிக்கு சிறப்பாக உரிய எழுத்துக்களில் ஒன்றான ள இடம்பெறுவதை ஒப்புக்கொள்ளாத பரணவிதான அவற்றிலே காணப்படும் இந்த எழுத்தை லு என்று பிழையாக அடையாளங் கண்டுள்ளார்.ஆனால் அவர் வெளியிட்ட பிராமிச்சாசனங்கள் பற்றிய தொகுப்பு நூலில் லு என்ற எழுத்து என்றவாறு அமைந்துள்ளது. 

பரு(று)மக என்ற சொல்லின் பெண்பால் வடிவமான பருமகள் என்பது தமிழ்சொல் என்பதாற் பரு(று)மக என சாசனங்களில் இடம்பெறும் சொல். பரு(று)மகன் என்ற தமிழ் திராவிட மொழிச் சொல்லின் பிராதிக வடிவம் என்று கருதுகின்றது. பருமக என பொதுவாக சாசனங்கள் குறிப்பிடும் சொல் பருமகன் என்ற கோலத்தில் இருசாசனங்களில் அமைந்துள்ளது. அவற்றில் ஒன்று றிற்றிகல ஆண்டியகந்த எனும் இடத்தில் உள்ளது.அதன் முற்பகுதியினை பருமக உதி புதஹ என்று பரணவிதான வாசித்துள்ளார். ஆயினும் அச்சாசனத்தின் புகைப்படத்தில் பருகம எனும் சொல்லை அடுத்து தமிழ் பிராமிக்குரிய ன என்னும் எழுத்தின் வடிவம் காணப்படுவதால் சாசனத்தின் முதலாவது சொல்லை பருமகன் என்று அடையாளம் காணலாம் இரண்டாவதுசாசனம் அண்மையில் எம்மால் அடையாளம் காணப்பட்ட வெல்லாவெளி கல்வெட்டு; அது இரு சொற்கள் அடங்கிய குறும் கல்வெட்டு.அதன் வாசகம் 'பருமகன் ஸமுத' என்பதாகும் இதில் இரு சொற்கள் மட்டுமே காணப்படுகின்றன அதில்  ஸமுதஹ என்பவனின் பெயர் எழுதப்பட்டுள்ளது. பருமகன் என்பது அவனுக்குரிய அடைமொழியாக வருகின்றது. தலைமகன் என்பதைக் குறிக்கும் பரு(று) மகன் என்ற தமிழ்சொல் வடிவத்திலே பிராகிருதமயப்படுத்தப்படாத நிலையில் காணப்படுகின்றமை சாசனத்துக்குரிய சிறப்பம்சம். இக்கல்வெட்டு 2200 ஆண்டுகளுக்கு முற்பட்டது. அந்தக்காலத்திலே தமிழ்மொழி பேசியோர் வெல்லாவெளியில் வாழ்ந்தமைக்கு இச்சாசனம் சான்றாகும். அதன் 'ற,ம,ன' என்னும் மூன்று எழுத்துக்களும் தமிழ் பிராமிக்குரிய வரிவடிவங்களாகும். 

வவுனியா மாவட்டத்தில் உள்ள 54 கல்வெட்டுக்களிலே 18 கல்வெட்டுக்கள் பரு(லு)மக(ன்) என்ற பட்டப்பெயரைக் குறிப்பிடுகின்றன. அவற்றுள் நான்கில் அச்சொல் இரண்டு வௌ;வேறான இடங்னளில் காணப்படுகிறது. அந்நான்கினுள் ஒன்றிலே பறுமகள்  என்ற சொல் 'பறுமக' என்பதன் பெண்பால் வடிவமாக மேலதிகமாக வருகின்றது. 

எருப்பொதானையிற் காணப்படும் கல்வெட்டில் ஆண்கள் இருவர் பறுமக என்று வர்ணிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் இயற்பெயர்கள் மித, சா(த்)த(ன்), சாத்த(ன்) என்பனவாகும். அவை பிராகிருதமயமான தமிழ்ப்பெயர்கள் போல தெரிகின்றன. அவர்கள் மாமன் மருமகன் முறையானவர்கள். அந்த முறைக்கு ஏதுவானவள். பருமகள் எனும் பட்டம் பெற்ற புஸா. அவள் பறுமக எனும் பட்டம் பெற்ற மித என்பவனின் மனைவி. மற்றவன் அவளுடைய தகப்பன். பருமகஃபறுமக என்ற பட்டம் பெண்களுக்கும் உரியது என்பதற்கு இச்சாசனம் சான்றாகிறது. ஆனால் அது அவளுக்கு பாரம்பரியமாக வந்ததா? அல்லது பருமகன் ஒருவனின் மனைவி என்ற வகையில் அவளை பருமகள் என்று அழைத்தனரா? என்பது வருங்கால ஆய்வுகளின் மூலம் தெளிவாக்கப்படவேண்டியது. 

அரச குடும்பத்து இளைஞரை அ(ய்)ய என்றும் இளம்பெண்களை அபி என்றும் சொல்லும் வழமையினை பிராமிச்சாசனங்கள் மூலமாக அறியமுடிகிறது. இச்சொற்கள் தமிழ்ஃ திராவிட மொழிமூலமானவை என்பதும் இங்கு கவனத்துக்குரியது. 

பருமக(ன்) என்பது ஒரு நிர்வாகப் பதவிப்பெயராகச் சாசனங்களில் பயன்படுத்தப்படவில்லை. அது தலைமகனைக் குறிக்கும் பட்டப் பெயராகவே வருகின்றது. இங்கு ஆய்வுக்குட்படுத்தப்பட்ட சாசனங்களில் ஒன்றில் மட்டுமே பருமக என்பது இனக்குழுவின் பெயரோடு தொடர்புபடுத்தப்பட்ட வகையில் சொல்லப்படுகின்றது. அது நாகருக்கும் உரியதென்பதை அதனால் அறியமுடிகின்றது. குறிக்கிட்ட சாசனம் 'உபாஸாகியான நாகை' என்னும் பெண்ணை 'பருமக ஹடகன்' என்பவனின் மனைவி என்று வர்ணிக்கின்றது. 
இருவிடயங்களில் பருமக என்ற அடைமொழி வேள் எனும் பெயர்ஃபதவி பெற்றவர்களின் அடைமொழியாக வருகின்றது. (பருமக நுகு ய வேள், பருமக அஸ அதேக வேள்) தெற்கு வன்னியில் கிடைத்துள்ள கல்வெட்டுக்களில் வேள் என்ற சொல் சிலவிடங்களில் பதிவாகியுள்ளதால் பல ஊர்கள் அடங்கிய ஆட்சிப்புலங்களில் வேள் நாடுகள் உருவாகியிருந்தனவென்று கருதுவதற்கு இடமுண்டு. அத்தகைய அமைப்புக்கள் ஒருசிறு இராட்ச்சியமாக அமைந்துவிட்டன. 

நாகர் அங்கு இராட்ச்சிமொன்றினை அமைத்து விட்டனர். ராஜநாகனைப் பற்றிய குறிப்பு பெரிய புளியங்குளத்திலுள்ள நான்கு கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. அவற்றின் வாசகங்களில் அதிக வேறுபாடுகள் இல்லை. அவற்றுள் ஒன்றின் முற்பகுதி மேல் வருமாறு உள்ளது. 

ராஜநாக ஜிதா – ராஜ உதி ஜாயா
அபி அநுராதி ச ராஜா உதி ச
காராபித ஸே இமே லெணே
சதுதி ஸ ஸகாய    
      
 (நாஜநாகனின் மகளும் ராஜா உதியின் மனைவியுமான அபி அநுராதியும் ராஜா உதியும் செய்வித்த இந்தக்குகை நாற்திசை சங்கத்தாருக்கும் உரியது.) 
கணவணும் மனைவியும் இணைந்து குகையினைத் தானம் பண்ணினார்கள். கணவன் அரசன் என்பதால் அவனை ராஜா  என்று சாசனம் குறிப்பிடுகிறது. அவனது மனைவியான அநுராதி அபி எனும் சிறப்புப் பெயர் கொண்டவள். அரச குலத்துப் பெண்களை அபி என குறிப்பிடுவது சாசன வழக்கு. தென்னிலங்கையில் உள்ள பிராமிச் சாசனங்கள் பலவற்றில் அபி எனும் பெயர் காணப்படுகின்றது. அவற்றில் அது அய(அய், ஐ)  என்ற சொல்லின் பெண்பால் வடிவமாகவே வருகின்றது. கீழ்வரும் வாநகம் நல்ல உதாரணமாகும். 

த மராஜ புத ம'hதிஸ அய'
ஜிதா அப ஜவேரா
அயப ய புத திஸ அய'ஜாயா'
அபி ஸவேராய தாநே  ஸக ஸ
தி நே 

(தமராஜனின் மகனான மஹாதிஸ அய்யனின் மகள் அபி ஸவேரா. அய்(யன்) அபயனின் மகன் திஸ அய்யனின் மனைவியான அபி ஸவேராவினால் சங்கத்தாருக்கு தானம் வழங்கப்பட்டது.)

இந்தச் சாசனம் அரசனின் மகனான மஹதிஸ எனும் இளவரசனை அய்(அய்) என்றும் அவனது மகனான ஸவேராவை அபி என்றும் குறிப்பிடுகிறது. அவளது கணவன் திஸ அய்யன். அவன் அய்(யன்) அபயவினுடைய மகன். அய்(ஐ) அபி(அவ்வி) என்பன திராவிட மொழிச்சொற்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

பெரிய புளியங்குளத்துச் சாசனம் ராஜா என்ற பதவி நிலையிலுள்ள இருவரை குறிப்பிடுகின்றது. அவர்கள் இரண்டு தலைமுறையைச் சேர்ந்தவர்கள். மாமன் மருமகன் என்ற உறவு முறை கொண்டவர்கள். ராஜநாகனின் பின்பு அவனது மருமகனாகிய உதி, ராஜா என்னும் பதவியைப் பெற்றான். அவர்களின் பதவிப் பெயரான ராஜா என்பது சம காலத் தமிழகத்து வேளிர் எனும் பட்டத்தினைப் போன்றது. ஏறக்குறைய இரண்டாயிரத்து இருநூறு வருடங்களுக்கு முன்பு வன்னியிற் குறுநில அரசுகள் தோன்றி விட்டன. அவற்றில் ஒன்றைப் பற்றி மட்டுமே சாசனங்கள் மூலம் அறிய முடிகின்றது. நாகர் குலத்தவர் அதிகாரம் செலுத்திய அரசினைப் பற்றிப் பெரிய குலத்துக் கல்வெட்டுகள் தெளிவுபடுத்துகின்றன. பிற்காலத்து வன்னி இராச்சியங்களுக்கு இவையே மூலமானவை.  சமகாலத்தில் நாகர் அதிகாரம் செலுத்திய குறுநில அரசுகள் யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பு தேசத்திலும் தோன்றின. வேறுசில இடங்களிலும் அவை தோன்றியிருந்தன.  


பேராசிரியர்.சி.பத்மநாதன்
வரலாற்றுத்துறை
பேராதனைப் பல்கலைக்கழகம்

Monday 26 October 2020

இலங்கை பாராளுமன்றத்தில் ஜனாதிபதி சர்வாதிகாரத்தை வலுப்படுத்தும் அரசியலமைப்பு திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டன

 நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதிக்கு பரந்த சர்வாதிகார அதிகாரங்களை வழங்கும் அரசியலமைப்பின் 20 வது திருத்தம், இலங்கையின் ஆளும் கட்சியால் வியாழக்கிழமை பாராளுமன்றத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டது. நாட்டை ஆளுவதற்கு வரம்பற்ற அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கு தன்னை அனுமதிக்க வேண்டும் என்று ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்ட புதிய திருத்தத்தை நிறைவேற்றுவதன் மூலம், ஜனாதிபதி இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) ஆளும் கூட்டணி, 225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 156 வாக்குகளைப் பெறுவதில் வெற்றிகண்டது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) உடன் இணைந்த முஸ்லிம் கட்சிகளைச் சேர்ந்த பல பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை ஆதரித்தனர். நாட்டிற்கு "வலுவான ஜனாதிபதி" ஒருவர் தேவை எனக் கூறி ஐ.ம.ச. உறுப்பினர் ஒருவரும் இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தார்.

தனது அதிகாரங்களை பலப்படுத்திக்கொள்வதில் மிகவும் ஆர்வமாக உள்ள ஜனாதிபதி இராஜபக்ஷ, வாக்களிப்பு நட்பதற்கு முன்னர் பாராளுமன்றத்திற்கு வந்து, தனது கட்சி உறுப்பினர்கள் திருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

ஜனாதிபதியின் சில அதிகாரங்களை கட்டுப்படுத்தி, 2015 இல் அறிமுகப்படுத்தப்பட்ட 19 வது திருத்தத்தை புதிய திருத்தம் ரத்து செய்கிறது. 19 வது திருத்தத்தில், ஜனாதிபதியனவர், தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றத்தை நான்கரை ஆண்டுகளுக்குள் கலைப்பதைத் தடுப்பது, உயர் அரச அதிகாரிகள் மற்றும் நீதிபதிகளை நியமிக்க சுயாதீன ஆணையங்களை அமைத்தல், பிரதமரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே ஜனாதிபதியால் அமைச்சர்களை நியமித்தல் மற்றும் நீக்குதல் ஆகியவை அடங்கும்.

புதிய திருத்தமானது மக்களின் இறையாண்மையை ரத்து செய்வதாக அறிவிக்க கோரி, ஐ.ம.ச., தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய கட்சி (ஐ.தே.க.) மற்றும் பல குழுக்களும் உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தன. இந்தத் திருத்தத்திற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை மற்றும் மக்கள் கருத்துக் கணிப்பு தேவை என்று அறிவிக்குமாறு நீதிமன்றத்தை அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

எனினும், மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், திருத்தத்தின் சில பிரிவுகளில் சில மாற்றங்களை முன்மொழிந்து அதை நிறைவேற்றிக்கொள்வதற்கு பச்சை கொடி காட்டியது. திருத்தத்தின் அடிப்படை சர்வாதிகார விதிகளை மாற்றக்கூடாது என்று உயர் நீதிமன்றம் பரிந்துரைத்தது. அது முன்மொழியப்பட்ட மாற்றங்களுடன், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மசோதாவை நிறைவேற்ற முடியும் என்று உயர் நீதிமன்றம் முடிவு செய்தது. அதன்படி, வாக்களிப்பதற்கு முன்னர், அரசாங்கம் திருத்தத்தில் பல மேற்பரப்பு மாற்றங்களைச் செய்தது.

புதிய அரசியலமைப்பு திருத்தங்களில், பிரதமர் மற்றும் அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்கவும் அல்லது நீக்கவும்; தேர்தல் நடந்து இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்றத்தை கலைக்கவும்; தேர்தல், பொலிஸ், மனித உரிமைகள், லஞ்சம் மற்றும் ஊழல் மற்றும் நிதி ஆணைக் குழுக்களின் தலைவர்களை நியமிக்கவும் இது ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கிறது. உயர் நீதிபதிகள் மற்றும் சட்டமா அதிபரை நியமிக்கும் அதிகாரமும் ஜனாதிபதிக்கே உள்ளது.

இந்த சிரேஷ்ட அதிகாரிகளை நியமிக்கும் போது ஆலோசனை வழங்கவதற்காக பிரதமர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அடங்கிய பராளுமன்ற சபை ஒன்று அமைக்கப்படும். ஆனாலும், ஜனாதிபதி அந்தக் கருத்துக்கு கட்டுப்பட்டிருக்க மாட்டார்.

ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. தலைவரும் அமைச்சருமான ஜி.எல். பீரிஸ், 20 ஆவது திருத்தத்தில் கூறப்பட்டுள்ளபடி, ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடுப்பதில் இருந்து அவருக்கு விலக்களிப்பு வழங்குவது பற்றி மக்கள் கருத்துக் கணிப்பு நடத்தப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அதை நீக்குவதாக அறிவித்தார்.

20 வது திருத்தத்தை அறிமுகப்படுத்திய நீதி அமைச்சர் அலி சப்ரி, இதில் புதிதாக எதுவும் இல்லை என்றும், அது 1978 அரசியலமைப்பை மீண்டும் நிலைநாட்டுவது மட்டுமே, என்றும் கூறினார். அந்த அரசியலமைப்பின் கீழேயே, கடந்த நான்கு தசாப்தங்களாக நாடு ஆட்சி செய்யப்பட்டு வருகிறது, அதனால் பயப்பட ஒன்றுமில்லை. “மக்களின் அதிகாரத்தை மீண்டும் ஒரு முறை பயன்படுத்த ஜனாதிபதிக்கு உதவுவதறக்கு நாங்கள் முயற்சிக்கிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.

"ஜனாதிபதியானவர் மக்களின் அதிகாரத்தைப் பயன்படுத்துவது" பற்றிய சப்ரியின் கூற்று நகைப்புக்குரியதாகும். சுதந்திரத்திற்கு பிந்தைய அரசியலமைப்புகள் அனைத்தும், ஆளும் வர்க்கக் கட்சிகள் அனைத்தும், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதற்கான சதித்திட்டங்களாகவே இருந்தன. இன்று, பரந்த சர்வாதிகார அதிகாரங்களைக் கொண்ட 1978 அரசியலமைப்பு இராஜபக்ஷவுக்கு தேவைப்படுவது ஏன் என்று அமைச்சர் சப்ரி சொல்லவில்லை.

இலங்கையில் ஆளும் உயரடுக்கு ஆழ்ந்த அரசியல் நெருக்கடியில் சிக்கியிருந்த நேரத்திலேயே, அப்போது ஆட்சியில் இருந்த ஐ.தேக. அரசாங்கத்தால், 1978 நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதியை கொண்டுவரும் அரசியலமைப்பை அறிமுகப்படுத்தி, அதன் தலைவர் ஜே.ஆர். ஜயவர்தன ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திறந்த சந்தை பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் போது, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் சமூக உரிமைகளை நசுக்கும் போது தலைதூக்கும் எதிர்ப்பை நசுக்குவதற்காக ஜனாதிபதியின் சர்வாதிகார அதிகாரங்கள் பயன்படுத்தப்பட்டன. தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்டவர்களையும் பிளவுபடுத்தவும், பலவீனப்படுத்தவும், அடக்கவும், 1983 இல் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான 30 ஆண்டுகால இனவாத உள்நாட்டுப் போர் தூண்டிவிடப்பட்டது.

உலகளாவிய நெருக்கடியால் ஆழமடைந்துள்ள பாரிய பொருளாதார, அரசியல் மற்றும் சமூக அமைதியின்மை நிலவும் ஒரு புதிய சகாப்தத்தின் மத்தியில், இராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் தவிர்க்க முடியாது வளர்ந்து வரும் வர்க்கப் போராட்டங்களை நசுக்குவதற்குத் தயாராகி வருகின்றனர். உலகளாவிய தொற்றுநோயின் கடந்த பத்து மாதங்களில், மற்ற நாடுகளைப் போலவே இலங்கையின் நெருக்கடியும் பெருகியுள்ளது.

இலங்கையில் சர்வாதிகாரத்தை நோக்கிய நகர்வானது, பாசிச மற்றும் சர்வாதிகார ஆட்சிகளை நோக்கி நகர்வதற்கு உலகம் பூராவும் உள்ள ஆளும் வர்க்கங்கள் முயற்சிப்பதன் ஒரு பகுதியாகும். பாசிச சக்திகளை அணிதிரட்டுகின்ற டிரம்ப் நிர்வாகம், நவம்பர் தேர்தலில் சதித்திட்டத்தை மேற்கொள்ள திட்டமிடுகின்றது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எதேச்சதிகார அரசாங்கத்தின் அதிகாரங்களை பலப்படுத்துகிறார்.

இந்த அதிகாரங்களைத் தாண்டிச் சென்று ஒரு புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதாக இராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். அந்த அரசியலமைப்பு "நாட்டின் அடையாளத்தை பலப்படுத்தும்" என்று சப்ரி பாராளுமன்றத்தில் கூறிய போதிலும், அவர் அதை விரிவாக கூறவில்லை. தன் கைக்கு பரந்த அதிகாரங்களை எடுத்துக்கொள்ளும் அதே வேளை, இராஜபக்ஷ, கடந்த ஆண்டு நவம்பரில் பதவியேற்றதிலிருந்து, பல பிரதான அரசாங்க பதவிகளுக்கு ஓய்வு பெற்ற மற்றும் சேவையில் உள்ள இராணுவ ஜெனரல்களை நியமிக்க நடவடிக்கை எடுத்தார்.

தனக்கு சர்வாதிகார அதிகாரங்கள் வேண்டும் என்று இராஜபக்ஷ பலமுறை காட்டியுள்ளார். அக்டோபர் 9, ஆளும் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டிய அவர், 20 வது திருத்தம் தொடர்பான "கருத்து வேறுபாடுகளை" கலந்துரையாடினார். ஜனாதிபதிக்கு வலுவான அதிகாரங்கள் தேவை என்று அனைவரும் ஒப்புக்கொண்டனர். ஆனால், இரட்டை குடியுரிமை உள்ளவர்களை அரசாங்க பதவிகளை வகிக்க அனுமதிப்பதை சில சிங்கள தீவிரவாத குழுக்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் விமர்சித்தனர்.

பேச்சுவார்த்தைகளில் சில விமர்சகர்கள் “மௌனமாக்கப்பட்டனர்" என்றும் “அவர் (இராஜபக்ஷ) கலந்துரையாடலில் தலையிட்ட போது, ’நான் வேலை செய்ய வேண்டும்’ என்று அடிக்கடி வலியுறுத்தினார்" என்றும் சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தொற்றுநோயின் அதிகரித்து வரும் தாக்கம் மற்றும் பொருளாதாரத்தின் சரிவுக்கும் மத்தியில், அவரது அரசாங்கம் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீது இடைவிடாத தாக்குதலை நடத்தும். நேற்று, கோவிட் -19 நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியது. நாட்டின் பல பகுதிகள் தற்போது ஊரடங்கு உத்தரவின் கீழ் உள்ளன. எனினும், ஏனைய நாடுகளில் ஆட்சிகளைப் போலவே, தொழிற்சாலைகளை திறந்து வைக்க முடிவு செய்துள்ள இலங்கை அரசாங்கம், ஆபத்தான சூழ்நிலையின் கீழ் தொடர்ந்து வேலைசெய்யுமாறு தொழிலாளர்களிடம் கூறுகிறது.

19 ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்திய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்களிப்பை புறக்கணித்த போதிலும், புதிய திருத்தத்திற்கு வாக்களிக்குமாறு தற்போது ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் தனது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை வெட்கமின்றி வற்புறுத்தினார்.

போலி ஆர்ப்பாட்டங்கள் மற்றும் விமர்சனங்களுடன், இலங்கையின் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தின் மூலம் புதிய சட்டங்களை நிறைவேற்ற அரசாங்கத்தை அனுமதித்தன. அவர்களில் பலர் 19 வது திருத்தத்தின் "சாதகமான அம்சங்களை" பற்றி பெருமையாகக் கூறி, அவற்றை அப்படியே வைத்திருக்குமாறு அரசாங்கத்திடம் வீண் வேண்டுகோள் விடுத்தனர்.

தற்போது எதிர்க்கட்சியில் இருக்கும் இந்த கட்சிகள், 2015 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் போது சிறிசேனவின் பின்னால் அணிதிரண்டு, வெகுஜன அதிருப்தியை சுரண்டிக்கொள்வதற்காக நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிப்பதாக பிரச்சாரம் செய்தன. முந்தைய ஆட்சிகளைப் போலவே, சிறிசேனவின் “ஐக்கிய அரசாங்கமும்” ஆட்சிக்கு வந்தபின் இந்த வாக்குறுதியைக் கைவிட்டு, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு எதிராக திரும்பியது.

அண்மையில் ஐ.தே.க. இல் இருந்து பிரிந்து சென்று உருவாக்கப்பட்ட எதிர்க்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச, ஒரு ஜனநாயக ஆட்சி முறைக்காக “(நிறைவேற்று அதிகாரம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறைக்கு இடையில்) சமநிலைப்படுத்தும்” சக்தி இருக்க வேண்டும் என்றார். அவரது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், “20 வேண்டாம்” என்ற பதாதைகளை ஏந்தியவாறு மோட்டார் வாகன ஊர்வலத்தில் வந்தனர். எனினும் ஐ.தே.க. 1978 அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது ஏன்? மற்றும் பல தசாப்தங்களாக அதைப் பராமரித்து வந்தது ஏன்? என்பதை அவர் விளக்கவில்லை.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைவர் அனுர குமார திசாநாயக்க. “வரம்பற்ற அதிகாரமானது பழங்குடித் தலைவர்கள் மற்றும் மன்னராட்சி அரசர்களின் கைகளிலேயே இருந்தது. இந்த அரசியலமைப்பு அந்தக் காலத்திற்கு மீண்டும் திரும்புவதாகும்,” எனக் ககூறினார்.

இந்த வாய்ச்சவடால்கள் ஒருபக்கம் இருக்க, அவர் 2004 இல் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கத்தில் சேர்ந்து, எதேச்சதிகார நிறைவேற்று ஜனாதிபதி பதவிக்கு ஜே.வி.பி.யின் ஆதவை கொடுத்தார். கொடூரமான இனவெறி பிரச்சாரம் செய்த ஜே.வி.பி. புலிகளுக்கு எதிரான போரை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி அதிகாரங்கள் தேவை எனக் கூறி அதை தூக்கிப்பிடித்தது.

ஜனாதிபதி இராஜபக்ஷ கட்டியெழுப்பும் சர்வாதிகாரத்தின் உண்மையான இலக்கு தொழிலாள வர்க்கமே என்பதை மூடிமறைப்பதே அவர்களின் போலி விமர்சனங்களின் நோக்கமாகும்.

Tuesday 29 September 2020

தமிழீழ விடுதலைப் பாடல்களும் எஸ்.பி. பாலசுப்பிரமணியமும்.

 பிரபல பின்னணிப் பாடகர் S.P.பாலசுப்பிரமணியம் அவர்கள் 25.09.2020 அன்று சுகயீனம் காரணமாக காலமானார். அவர் தமிழீழ விடுதலைப் பாடல்கள் சிலவற்றை பாடியிருந்தார். அவர் பாடிய பாடல்களையும், பாடிய சந்தர்ப்பங்களையும் ஓவியர் புகழேந்தி அவர்கள் நினைவு கூர்ந்து எழுதிய நினைவுப் பதிவு ஒன்றை எமது இலக்கு இணையத்திற்காக பிரத்தியேகமாக அனுப்பியிருந்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காக பாடல் ஒலிப்பேழை  தயாரிப்பு பொறுப்பை என்னிடம் விடுவதாக தமிழீழத் தேசியத் தொலைகாட்சி பொறுப்பாளர் போராளி சேரலாதன் சொன்னபோது, “சேரா, நான் பாடல் எழுதுகின்றவனும் இல்லை, இசையமைக்கின்றவனும் இல்லை, பாடுகின்றவனும் இல்லை.  எப்படி அதை நான் செய்யமுடியும்” என்றேன்.  “அதனால் தான் அண்ணா, உங்களிடம் அப்பொறுப்பைக் கொடுக்கின்றோம்” என்றார்.

முதல் ஒலிப்பேழை – கடற்புலிகளுக்காக செய்தோம்.  கவிஞர் காசி ஆனந்தன் மூன்று பாடல்கள எழுதினார்.  புலவர் புலமைப்பித்தன் அவர்களை சந்தித்து, பல ஆண்டுகாலம் இயக்கத்துடன் விடுபட்டிருந்த தொடர்பை புதுப்பித்தேன்.  அவர் மூன்று பாடல்களை எழுதினார்.  (1. இது கடற்புலிப்படை, 2. மனித சுனாமி தான்.. 3. நாம் நீரிலும் வெடிக்கும் எரிமலைகள்).  கவிஞர் புதுவை இரத்தினதுரை, கு. வீரா., போன்றவர்களின் பாடல்களும் இருந்தன.

பாடல்கள் அனைத்திற்கும் அற்புதமான எழுச்சி மிகுந்த இசையை இசையமைப்பாளர் தேவேந்திரன் அமைத்திருந்தார்.  பாடல்களை, S.P பாலசுப்பிரமணியம், S.M. சுரேந்தர், திப்பு, கார்த்திக், T.L. மகாராசன், மனோ, சுஜாதா, கல்பனா, மாணிக்கவிநாயகம், சத்தியன், ஹரீஸ் ராகவேந்திரா போன்ற தமிழ்த்திரையுலகின் புகழ்பெற்ற பாடகர்களை பாடவைத்தேன்.

“இத்தொகுப்பில் S.P பாலசுப்பிரமணியம் அவர்களை எப்படியாவது பாடவைத்து விடுங்கள் அண்ணா” என்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி பொறுப்பாளரும் போராளியுமான சேரலாதன் என்னிடம் கேட்டபிறகு, புலவர் புலமைப்பித்தன் அவர்களிடம் செய்தியைக் கூறினேன். அவர் S.P.B அவர்களுடன் எனக்கு தொடர்பைத் ஏற்படுத்தித் தந்தார்.

அப்போது (2006-2007) S.P.B ஜெயா தொலைக்காட்சியில் குழந்தைகளுக்காக ஒரு நிகழ்ச்சியை (என்னோடு பாட்டுப் பாடுங்கள்) நடத்திக்கொண்டிருந்தார். நானும் அந்நிகழ்வை தொடர்ந்து பார்ப்பதுண்டு. ஒரு இசைப் பேராசிரியர் வகுப்பு எடுப்பது போல் இருக்கும். “அந் நிகழ்வை பதிவு செய்து தலைவர் பிரபாகரன் அவர்கள் தொடர்ந்து பார்த்து வருகிறார். இசையைக் கற்றுக்கொள்பவர்களையும் இசையில் ஆர்வமுள்ளவர்களையும் பார்க்கச் சொல்வதன் மூலம் நிறைய கற்றுக்கொள்ளலாம் என்று பலரையும் பார்க்கச் சொல்லியிருக்கிறார். தலைவருக்கு மிகவும் பிடித்த நிகழ்வு” என்று சேரலாதன் என்னிடம் கூறியதோடு   எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களை சந்திக்கும் போது இதைக் கூறுங்கள் அண்ணா என்றார்.

முதல் ஒலிப்பேழைக்காக பாடல் பதிவுக்கு வந்தபோது சந்தித்தேன். அதுதான் முதல் சந்திப்பு. 21.06.2007 அன்று சாலிகிராமத்தில் உள்ள ஒலிப்பதிவுக் கூடத்தில் அந்த சந்திப்பு நிகழ்ந்தது. முதல் சந்திப்பு போல் இல்லாமல் பல நாட்கள் பழகியதுபோல் மிக இயல்பாக இருந்தது. சந்தித்த உடனே தலைவர் குறிபிட்டதாக சேரலாதன் கூறிய செய்தியைக் கூறினேன். மிகவும் மகிழ்ந்தார். “அவர் பார்த்து கருத்துக் கூறியது எனக்குப் பெருமை” என்றும் நெகிழ்ந்தார். இதை தலைவருக்கும் பகிர்ந்தேன்.

S.P. பாலசுப்பிரமணியம் ஒலிப்பதிவுக் கூடத்தில் என்னோடும் இசையமைப்பாளர் தேவேந்திரன் அவர்களோடும்  சில நிமிடங்கள் பொதுவான உரையாடலுக்குப் பிறகு தான் பாடவேண்டிய பாடல் வரிகளைக் கேட்டுப் பெற்று தான் கொண்டுவந்திருந்த ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தில் எழுதினார். மிகவும் வியந்து அதுகுறித்து அவரிடம் கேட்டேன் “திரைப்படப் பாடலாக இருந்தாலும் அல்லது தனி தொகுப்புப் பாடலாக இருந்தாலும் தன்னுடைய இந்த பதிவேட்டில் பாடல் வரிகள், எந்தத் தேதியில், யாருடைய இசையமைப்பில், எந்த ஒலிப்பதிவுக் கூடத்தில் பதிவு செய்யப்பட்டது என்பதை எழுதி வைப்பது எனது வழக்கம்” என்று கூறினார்.

அதன் பிறகு பாடலின் இசைக்கோர்வையை தன்னுடைய Tape Recorder இல் பதிவு செய்து தரக்கூறி பாடலை அதனோடு இணைத்து ஒருமுறைக்குப் பலமுறைப் பாடிபார்த்தபிறகு பாடல் பதிவுக்குத் தயாரானார்.

அன்று அவர் பாடியப் பாடல் கவிஞர் கு.வீரா எழுதிய

“உலக மனிதம் தலைகள் நிமிரும்

விடுதலைப் போரின் வீரத்திலே”

என்றபாடல். அந்தப் பாடலை அவர் எழுதிக் கொண்டிருக்கும் போதே ஒவ்வொரு வரிகளையும் உள்வாங்கி “உணர்வோடும் உண்மையோடும் கவித்துவத்தோடும் எழுதியிருக்கிறார்” என்று வீராவைப் பாராட்டினார். இசையைக் கேட்டபிறகு  தேவேந்திரனையும் பாராட்டினார்.

“எங்கள் மண்ணில் நாங்கள் வாழ

எவரும் தடுத்தல் சரிதானா

சொந்த மண்ணில் வாழும் உரிமை

எமக்கு என்ன கிடையாதா

குண்டை போட்டார் கூச்சல் போட்டோம்

எவரும் அதனைக் கேட்கவில்லை

குண்டை போட்டார் குண்டே போட்டோம்

கூடா தென்றால்  ஞாயமில்லை”

என்று சரணத்தில் வருகின்ற வரிகள் S.P. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான வரிகள். மிகவும் அற்புதமாக அப்பாடலை பாடினார். பாடி முடித்ததும் நானும் தேவேந்திரனும் அவரைப் பாராட்டினோம்.

‘எங்களின் கடல்’ தொகுப்பில் இறுதிப் பாடலாக அதை வைத்தோம்.

இரண்டாவதாக இம்ரான் பாண்டியன் படையணிக்காக ‘ஈட்டிமுனைகள்’ என்றத் தலைப்பில் ஒரு பாடல் ஒலிப்பேழையை தயாரித்தோம்.

அனுராதபுர விமானப்படைத் தளம் தாக்குதல் ‘எல்லாளன் நடவடிக்கை’ குறித்த ஒலிப்பேழை தொகுப்பையும் மூன்றாவது முறையாக தயாரிக்கும் பொறுப்பு என்னிடமே வழங்கப்பட்டது.  அத்தொகுப்பிற்கும் இசையமைபாளர் தேவேந்திரன் தான்.

“இத்தொகுப்பில், S.P பாலசுப்பிரமணியம் அவர்களை எப்படியாவது இரண்டு பாடல்களையாவது பாடவைத்து விடுங்கள் அண்ணா” என்று தொடக்கத்திலிருந்தே வலியுறுத்தி வந்தார் சேரலாதன்.

“அள்ளித்தின்ற ஆனா எழுதிய – அன்னை மண்ணைக் கடக்கிறோம். அன்னியச் சேனை கோட்டை இருக்கும் அனுராதபுரத்திற்கு நடக்கிறோம்” என்ற யோ. புரட்சியின் பாடலையும்,

“வானத்திலேறியே வந்து வந்து குண்டு

போட்டவன் கோட்டையிலே – துட்ட

காமினிமுன்னர் எல்லாளனை வீழ்த்திய

கோட்டையின் வாசலிலே” என்ற புதுவை இரத்தினதுரையின் பாடலையும் S.P பாலசுப்பிரமணியம் மிக அற்புதமான உணர்ச்சிகளோடும், சங்கதிகளோடும் அவருக்கே உரிய தனித்துவத்தோடும் பாடியிருந்தார்.

இதே காலகட்டத்தில் எல்லாளன் திரைப்படப் படப்பிடிப்பு தமிழீழத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.  அத்திரைபடத்திற்கான அண்ணன் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் எழுதிய

“தாயக மண்ணே! தாயக மண்ணே!!

விடைகொடு தாயே! விடை கொடு

தலைவனின் தேசப் புயல்களுக்காக வழிவிடு தாயே! வழிவிடு”

என்ற பாடலை எனக்கு அனுப்பிய சேரலாதன், உடனடியாக தேவேந்திரன் அவர்களை இசை அமைக்கச் செய்து, S.P பாலசுப்பிரமணியம் அவர்களை பாடவைத்து அனுப்பி வையுங்கள் அண்ணா” என்றார், சேரலாதன்.

அண்ணன் கவிஞர் புதுவை இரத்தினதுரை, பாடல் காட்சிப்படுத்தலுக்கு ஏற்ற வகையில் இசைக்கோர்வை எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்தும் பிற விடயங்கள் குறித்தும் நீண்ட நேரம் என்னிடம் கைபேசியில் உரையாடினார். அன்பைப் பொழிந்தார். நெகிழ்ந்தார். அதன் பிறகு அவரோடு தொடர்பே இல்லை.

அப்பாடல் தொகுப்பிற்கு இடையில் இப்பாடலையும் இசையமைத்து, S.P.B அவர்களைக் கொண்டு பாடச்செய்து உடனடியாக அனுப்பினேன்.  மிகவும் அற்புதமாக அப்பாடலை S.P.B பாடியிருப்பார்.  புதுவையின் வரிகளுக்கு ஏற்ற இசையை தேவேந்திரன் கோர்த்திருந்தார்.  காட்சிப்படிமங்களாக விரியும் அந்த இசைக்கான வரிகளுக்கு S.P.B  தன் குரலால் உயிர் கொடுத்திருந்தார்.

அந்தப் பாடலில் இருந்த உயிர்த்துடிப்பு மிக்க காட்சிப் படிமங்கள் திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்படவில்லை.

காற்றும் தமிழும் உள்ளவரை அவரும் வாழ்வார்.

-ஓவியர் புகழேந்தி-