Wednesday, 29 April 2020

பிரபாகரனை எதிர்க்கும் சில முஸ்லிம்கள்

தற்பொழுது பிரபாகரனை எதிர்க்கும் சில முஸ்லிம்கள் காத்தான்குடி சம்பவம் மட்டக்களப்பு போன்ற ஏனைய சம்பவங்களை முன்னெடுத்து கொண்டு தமிழின தேசியத்தலைவர் பிரபாகரன் பெயரை அவமதிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்...
முஸ்லிம்களை தற்போது இருக்கின்ற திராவிட கட்சிகள் எப்படி மூளைச்சலவை செய்து தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்துகின்றனவே..

அது போலவே #இலங்கையிலும் சிங்கள அரசு அதாவது இலங்கை_அரசு  
விடுதலைப்புலிகளை நேரடியாக போரில் வெற்றி கொள்ள முடியாது என்பதை நன்கு அறிந்து தமிழினத்திலிருந்து இஸ்லாத்தை மட்டும் பிரித்து அவர்களுக்குள் இனக் கலவரம் ஏற்படுத்த பல்வேறு செயல்களைச் செய்தனர்..

தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் பலர் விடுதலைப் புலிகளில் இணைந்து சிங்கள அரசுக்கு எதிராக போரிட்டுக் கொண்டிருந்தனர்..

இது சிங்கள அரசுக்கு பெரும் நெருக்கடியாக அமைந்தது..

சில இஸ்லாமியர்களை தங்கள் கையிட்டு கொண்ட சிங்கள அரசு தவறான வழிநடத்தல் காரணமாக விடுதலைப் புலிகளில் இருந்து இஸ்லாமியர்களை பிரிப்பதற்கு பல சூழ்ச்சிகளை செய்தனர்..

அதன் விளைவாகவே...

1981 செப்டம்பர் 21 இல் இலங்கை முசுலிம்களுக்கெனத் தனியான அரசியல் கட்சி #சிறீலங்கா_முஸ்லிம்_காங்கிரசு என்ற பெயரில் உருவாக்கப்பட்டதை அடுத்து இலங்கை முசுலிம்கள் தமிழரில் இருந்து வேறுபட்ட இனம் என்ற கோட்பாடு மீண்டும் தலைதூக்கியது...
இதனால், 

[1]தமிழீழம் என்ற நாடு உருவாகினால் தாம் அந்த நாட்டில் சிறுபான்மையினராக ஆகிவிடுவீர்கள் என்ற அச்சத்தை முசுலிம்களிடையே இலங்கை அரச விதைத்தது..

[2] இலங்கை அரசு முஸ்லிம்களை மூளைச்சலவை செய்து தமிழீழக் கோட்பாட்டை #முசுலிம்_காங்கிரசு_கட்சி பலமாக எதிர்த்து வந்தது...

[3] அத்துடன் இலங்கை அரசு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள முசுலிம்களின் பகுதிகளில் #முசுலிம்_ஊர்க்காவல்_படைகளை உருவாக்கி அவர்களுக்கு ஆயுதங்களையும் அளித்து விடுதலை புலி மற்றும் தமிழர் இனங்களுக்கு எதிராக கலவர நிலையை வளர்த்து விட ஆரமித்தது.....

IBC தமிழ் கீழே குறிப்பிட்டுள்ள காணொளியில் கூறியது போன்று சிங்கள அரசின் ஆதரவோடு சில இஸ்லாமியர்களின் தவறான வழிகாட்டுதலோடு விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை தொடங்கியது இந்த வழி தவறிய சில இஸ்லாமிய அமைப்பு...

இதனை அறிந்த தலைவர் பிரபாகரன் முஸ்லிம்களுக்கு எதிராக எவ்வித தாக்குதல்களும் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது என திட்டவட்டமாக தெரிவித்தார்...

காத்தான்குடி மசூதி தாக்குதல் நடைபெற்று நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்ட போதும் இது ஒரு துன்பியல் சம்பவம் என ஒரு மாநாட்டில் குறிப்பிட்டார்..

ஆனாலும் விடுதலைப் புலிகளில் இருந்து விலகியவர்கள் அல்லது தமிழ்தேசிய பற்றுள்ளவர்கள் தங்களுடன் இத்தனை நாள் இருந்த இஸ்லாமியர்கள் தற்போது நமக்கு எதிராகவே ஆயுதம் ஏந்தி போராடு கிறார்கள் என்று சில கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்தனர்...

ஆனால் விடுதலைப்புலிகள் ஒருபோதும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை மேற்கொள்ள கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் தலைவர் பிரபாகரன்..

இதுகுறித்து கிளிநொச்சியில் செய்தியாளர் சந்திப்பின் போது சில முஸ்லிம்கள் ஈழத்தில் எங்களுக்கு எதிராக போராடி இருந்தாலும் பரவாயில்லை
போரில் வெற்றிபெற்றதும் முஸ்லிம்களுக்கு
தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று கூறினார்..
அந்த செய்தியாளர் சந்திப்பின் காணொளியின் லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது..

(https://youtu.be/BAKgnN8F7R0)

இதை நான் இப்போது ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் பல இஸ்லாமியர்கள் எங்கள் உயிரினும் மேலாக மதிக்கின்ற தமிழின தலைவர் பிரபாகரன் பெயரை அவமதித்து வருகின்றனர்...

இது எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை தருகிறது..

அந்த நாள் முதல் இந்த நாள் வரை உங்களை ஈழப்போரில் ஆயுதமாக பயன்படுத்துகின்ற சிங்கள அரசாக இருந்தாலும் சரி தற்போது தமிழகத்தில் ஆளுகின்ற திராவிட கட்சிகள இருந்தாலும் சரி அவர்கள் உங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொடுப்பது போல் கொடுத்துக்கொண்டு..

உங்களுக்குள்ளேயே பல முரண்பட்ட கருத்துக்களை உருவாக்கி உங்களுக்குள்ளே மோதவிட்டும் மற்றும் தமிழ் தேசியத்தலைவர்களை இழிவுபடுத்தும் செயலுக்கு உங்களை கருவியாக  பார்க்கின்றனர்..

இப்போது நடந்த முகநூல் சண்டையில் இறைத்தூதரையும் இஸ்லாத்தையும் தவறாக சித்தரித்தவர்களை கண்டித்துள்ளார்கள் எல்லாரும்..

ஆனால் தவறாக தலைவர் பிரபாகரனை சித்தரித்த அவர்களுக்கு ஒரு சிலர் மட்டும்தான் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து கொண்டிருக்கிறார்கள் பலர் விடுதலைப் புலிகளை இஸ்லாமியர்களுக்கு எதிராக தான் இன்னமும் கட்டமைத்துக் கொண்டும் பிரச்சினைகளை வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது...

தமிழ் தேசியத்தையும்,பிரபாகரனையும் ஏற்றுக் கொண்ட சிலரை தவிர பெரும்பான்மையான முஸ்லிம்கள் இன்னும் தலைவர் பிரபாகரனை ஏற்றுக்கொள்ளவே இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. அவர்களுக்குத் தான் இந்த விளக்கம்..
எல்லோரும் இனமாக ஒன்று சேர்வோம்..

Tuesday, 28 April 2020

கோரோனோ தடுப்பா…? இன அழிப்பா…..? மீண்டும் அழிவின் விளிம்பில் ஈழத்தமிழர்கள்……!

2020 உலகத்துக்கே சாபக்கேடான ஆண்டாக மாறியுள்ள இந்தச் சூழ்நிலையில் உலகத் தமிழினம் மட்டுமன்றி ஈழத்தில் வாழும் தமிழினமும் மிகுந்த அச்சத்திலும் வறுமையிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. 

2009 முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னர் மீண்டும் தமது வாழ்க்கையை கட்டியெழுப்பும் நோக்கோடும் மிகுந்த நம்பிக்கையோடும் பொருளாதாரம், கல்வி என்று ஈழத்தமிழினம் ஆகிய நாங்கள் எமது வாழ்வியலை கட்டியெழுப்பி கொண்டிருக்கின்ற இந்த வேளையில் கோரோனோ என்கின்ற கொடிய தொற்றுநோய் எமது இனத்தையும் விட்டுவைக்கவில்லை. எமது சொத்துக்களையும், பல ஆயிரக்கணக்கான உயிர்களையும் பறிகொடுத்து அதன் வலியிலிருந்து இன்னும் மீளாத சூழ்நிலையில் கண்ணீரோடும் துயரோடும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த வேளையில் மீண்டும் எமக்கு பேரிடி விழுந்துள்ளது. இது மட்டுமல்ல எமக்கு எதிராகவே சிங்கள இனவெறி யரசின் இனவழிப்பு க்கான அரசியல் சூழ்நிலைகள் மாற்றம் கண்டுள்ளது. ஈழத்தில் சிங்களப் பேரினவாத சக்திகளின் இராணுவ ஆட்சியைக் கொண்டுவரும் நோக்கோடு பதவிக்கு வந்த கோத்தபாய ராஜபக்க்ஷ அவர்கள் நினைத்ததைப் போன்று காலத்தின் சூழ்நிலை மாற்றம் கண்டது.
கோரோனோ என்கின்ற கொடிய நோய் உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. இந்தக் கொடிய நோய் ஈழமண்ணில் வாழும் மக்களையும் விட்டு வைக்கவில்லை. இதன் விளைவாக நடக்கவிருந்த பாராளுமன்றத் தேர்தல் கிடப்பில் போடப்பட்ட சூழ்நிலையில் சிங்கள இனவெறியரசின் ராணுவ ஆதிக்கம் அதிகரிக்கப்படடது. ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்டது. இதன் விளைவாக மக்கள் அச்சத்தில் வீடுகளுக்குள் முடங்கினர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை சாதகமாக பயன்படுத்தி பல கோரோனோ தனிமைப்படுத்தல் முகாம்கள் இலங்கையில் அமைக்கப்பட்டன. வடக்கு கிழக்கு பகுதிகள் எங்கும் இராணுவ பிரசன்னம் விரிவாக்கப்பட்டு தமிழர் தாயக பகுதியெங்கும் மக்கள் செறிந்து வாழ்கின்ற பகுதிகளில் கோரோனோ தடுப்பு தனிமைப்படுத்தல் முகாம்கள் அமைக்கப்பட்டு தென்னிலங்கையில் உள்ள கோரோனோ நோயாளிகளை இரவோடு இரவாக சிங்களப்படைகளின் பாதுகாப்புடன் அழைத்து வந்து யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் தங்க வைக்கப்படுகின்ற நிகழ்வு தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. 

தென் பகுதியிலுள்ள சீதுவல பகுதியில் கோரோனோ தொற்றுக்கு உள்ளான 71 சிங்கள அரசபடையினரை அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு முல்லைத்தீவு பகுதியில் உள்ள ஒரு இடைத்தங்கல் முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரையில் எந்தவிதமான கோரோனோ நோயாளிகளின் பதிவுகளும் இடம்பெறவில்லை என்பதும் இனிவரும் நாட்களில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் கொரோனோ தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்ச நிலையில் உள்ளனர். தென்பகுதி மக்களுக்கு வழங்கப்படுகின்ற நவீன மருத்துவ வசதிகளைப் போன்ற எந்தவிதமான மருத்துவ வசதிகளும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு வழங்கப்படாது இலங்கையில் உள்ள அனைத்து கொரோனோ நோயாளிகளும் வடக்கு கிழக்குக்கு அனுப்பப்பட்டு பராமரிக்கப்படுவது வட கிழக்கு தமிழ் மக்களை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியுள் ளது. தொடர்ச்சியான ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் மக்கள் அன்றாட வாழ்க்கை கூட வாழ முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 
பசி, பட்டினி என்று மக்களை வாட்டி வதைக்கும் இந்த சூழ்நிலையில் தமிழர்களுக்கு எந்த விதமான அத்தியாவசியப் பொருட்கள் கூட வழங்கப்படாது அனைத்து உதவிகளும் தென் பகுதி சிங்கள மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால் புலம் பெயர் தேசங்களில் வாழுகின்ற தமிழ் உறவுகளால் வழங்கப்படுகின்ற அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு சென்றடையாதவாறு இராணுவத்தினர் தடுத்து நிறுத்தி வருகின்றனர். அவற்றையும் மீறி மக்களுக்கு பொருட்கள் வழங்குபவர்களை இலங்கை புலனாய்வாளர்களும், பயங்கரவாத தடுப்பு பிரிவினரும் கண்காணித்து கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டும், எச்சரிக்கப்பட்டும், துன்புறுத்தப்பட்டும் வருகின்றனர். சிலர் காணாமலும் ஆக்கப்படுகின்றனர். சிலர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். ஊடக சுதந்திரங்கள் முற்றிலுமாக பறிக்கப்பட்டு செய்திகள் தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன. ஊடகவியலாளர்கள் கடுமையாக எச்சரிக்கப் படுகின்றனர். இதனால் உண்மை செய்திகளை வெளியில் கொண்டுவர முடியாது ஊடகவியலாளர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. 
சாதாரண நோய்களுக்கு கூட மருத்துவமனைக்கு செல்ல முடியாது இராணுவ மருத்துவர்களையே நாடவேண்டிய ஒரு இக்கட்டான காலகட்டத்தில் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. நாளுக்கு நாள் தமிழ் மக்கள் வாழும் வடக்கு கிழக்கு பகுதியில் ராணுவ சோதனைச் சாவடிகளும், கைதுகளும் அதிகரித்து வருகின்ற இந்த காலகட்டத்தைப் பயன்படுத்தி கோரோனோ என்கின்ற நோயை சாதகமாக்கி சர்வதேசத்தின் கண்களை மறைத்து தெளிவான ஒரு இனச் சுத்திகரிப்பை இலங்கை அரசு நிறைவேற்றி வருகின்றது. இப்படியான சூழ்நிலையில் வாழ்வா சாவா என்ற துர்ப்பாக்கிய நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
எத்தனையோ மக்கள் வசிக்காத இடங்கள் இருக்கின்ற போதும் எதற்காக மக்கள் செறிந்து வாழ்கின்ற தமிழ் பிரதேசங்களில் கோரோனோ தடுப்பு முகாம்களை இலங்கை அரசு நிறுவ வேண்டும் என்கின்ற கேள்வி எழுகிறது. இலங்கையின் தென்பகுதியில்1000 பாடசாலைக்கு மேல் செயலற்ற நிலையில் உள்ளது. தென் பகுதியிலுள்ள கோரோனோ நோயாளிகளை அந்த பாடசாலைகளில் தங்கவைத்து பராமரிக்கக் கூடிய சூழ்நிலைகள் இருந்தும் வடக்குக்கு அழைத்து வரப்பட்டு தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற பகுதிகளில் கொரோனா தடுப்பு முகாம்களை அமைத்து ஆயுதங்களின் சத்தமின்றி அமைதியான முறையில் தொடரும் இன அழிப்புக்கான நடவடிக்கைகளில் இலங்கை அரசு தீவிரம் காட்டி வருகிறது. கோரோனோ நோய் தொற்றுக்கு உள்ளான இராணுவத்தினரை தமிழ் மக்கள் வாழுகின்ற வடக்கு கிழக்கில் பணியமர்த்தி தமிழ் மக்கள் மத்தியில் நோயை பரப்பி இதன் மூலம் தமிழ் இனத்தை அழிப்பதற்கான ஒரு தந்திரோபாய நடவடிக்கையை இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது, இது அப்படி இருக்க தமிழகத்திலிருந்து போதைப் பொருட்கள் இலங்கை கடற்படையினரால் கொண்டுவரப்பட்டு தமிழர் தாயகப் பகுதி எங்கும் விற்பனை செய்யப்படுகிறது. தென் பகுதியிலுள்ள விபச்சார அழகிகள் வடக்கு கிழக்கு பகுதிக்கு அழைத்து வரப்பட்டு தமிழர்களுடைய கலாச்சாரம், பண்பாடு அனைத்தையும் சீரழிக்கின்ற வகையில் அனைத்து இடங்களிலும் விபச்சார தொழில் களைகட்டத் தொடங்கியுள்ளது. 

கோரோனோ தொற்று அதிகமாகி கொண்டிருக்கின்ற வேளையில் ஊரடங்கு உத்தரவை தளர்த்தி பேருந்துகளை இயக்கிய காரணத்தினால் 2 நாட்களில் மட்டும் 700க்கும் மேற்பட்ட நோயாளிகளை வடக்கு பகுதியில் இனம் காணப்பட்டுள்ளது. இந்தச் செயற்பாடுகள் அனைத்தையும் நாம் பார்க்கின்ற போது இது ஒரு இன அழிப்பின் இரண்டாம் கட்டத்தின் தொடக்கம் என்றே பார்க்க வேண்டியுள்ளது. சர்வதேச சமூகம் நோய்த் தொற்றுகளால் தள்ளாடிக் கொண்டு இருக்கின்ற இந்த வேளையில் அவர்களின் கண்களை மறைத்து ஒரு இன அழிப்பை தொடங்கியுள்ளது இலங்கை அரசு. இதன் அடிப்படையில் பார்க்கும்போது திட்டமிட்ட இன அழிப்பை மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கின்ற ராஜபக்ச அரசுகள் தொடங்கி உள்ளது என்பதையே பறைசாற்றி காட்டுகிறது. 2009ல் எமது இனத்தை ஈவு இரக்கமின்றி யார் அழித்தார்களோ அதே ராஜபக்ஷேகள் மீண்டும் ஆட்சிபீடம் ஏறி எமது இனத்தை அளிக்க தொடங்கியுள்ளார்கள்.

இதனால் மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே எமது இனத்தை இந்த திட்டமிட்ட இன அழிப்பில் இருந்து காப்பாற்ற வேண்டிய தேவை தமிழ் தலைவர்களுக்கும் தமிழ் இனத்துக்கும் உள்ளது என்பதை அனைவரும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இது மட்டுமல்லாது ஊரடங்கு உத்தரவும், ராணுவ பிரசன்னமும் வலுவான முறையில் நடைமுறையில் உள்ள காலப்பகுதிகளில் திட்டமிட்டு ஆட்கடத்தல்கள், படுகொலைகள், கைதுகள் என பல்வேறு இன சுத்திகரிப்பு வேலைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இதனால் நோய் தொற்று அச்சத்தில் வாழுகின்ற மக்கள் மேலும் பல இக்கட்டான நெருக்கடிகளையும், அச்சத்தையும் எதிர்நோக்கியுள்ளனர். 

2009 க்கு முன்னர் நடந்தவற்றைப் போன்று தமிழ் ஒட்டுக் குழுக்களும் துணை நிற்பது மிகவும் வேதனையளிக்கிறது. தமிழ் ஒட்டுக் குழுக்களுக்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ் ஒட்டுக்குழுக்கள் ஆயுதங்களுடன் நடமாடுவதை கவனிக்க முடிகிறது. அவர்கள் எந்தவித அச்சமுமின்றி சமூகப் பணியாளர்களை மிரட்டுவதும், தாக்குவதும் தொடர்கதையாகவே உள்ளது. இவ்வாறான நிகழ்வுகளை கண்டுகொள்ளாத தமிழ் அரசியல் தலைவர்கள் மௌனம் சாதித்து வருகின்றனர். மாறாக இலங்கை அரசின் இன அழிப்பு நாடகத்துக்கு துணை நிற்கின்றனர்.
கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் எதை நினைத்து ஆட்சி பீடம் ஏறினாரோ அதே கொள்கையில் உறுதியாக இருந்து கோரோனோ என்கின்ற நோயை சாதகமாக்கி தன்னுடைய இன அழிப்பு நாடகத்தை மிகவும் மதி நுட்பத்தோடு அரங்கேற்றி வருகிறார் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.23.04.2020 க்கு பின்னர் 26.04.2020 வரை உள்ள மூன்று நாட்களில் மட்டும் இரண்டு இளைஞர்கள் ராணுவ ஆதரவுடன் ஒட்டுக் குழுக்களால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.  “மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல்” தமிழ் மக்களுக்கு மீண்டும் மீண்டும் சிங்களப் பேரினவாத அரசு பல நெருக்கடிகளை கொடுத்து எமது இனத்தை அடியோடு அழித்து ஒழிக்க கங்கணம் கட்டி நிற்கின்றது என்பதனை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே கோரோனோ நோயில் இருந்து பாதுகாக்கும் வகையிலும் இன அழிப்பில் இருந்து மீழுகின்ற வகையிலும் தமிழ் மக்களாகிய நாம் அனைவரும் உறுதியோடும், நம்பிக்கையோடும் ஒற்றுமையாக பயணிக்க வேண்டிய ஒரு கட்டாய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். எனவே இதுவரைகாலமும் வரலாறு கற்றுத்தந்த பாடங்களை அனுபவமாக கொண்டு சிங்கள அரசின் திட்டமிட்ட இன அழிப்பில் இருந்து மீள வேண்டிய ஒரு தேவை தமிழ் மக்களாகிய எங்களுக்கு இருக்கின்றது.
ஆகவே இலங்கை அரசு அரங்கேற்றியிருக்கும் இன அழிப்பு நாடகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதையும் ஆட்கடத்தல்கள், படுகொலைகள், கைதுகள் என அனைத்து நடவடிக்கைகளையும், உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதனையும், ஒட்டுக் குழுக்களினால் மேற்கொள்ளப்படும் படுகொலைகளுக்கு இராணுவமும் பொலிசாரும் துணை நிற்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்பதையும் தமிழ் மக்களாகிய நாங்கள் இலங்கை அரசுக்கு வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம். இலங்கை அரசு இப்படிப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத பட்சத்தில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் போது தக்க பாடத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தமிழ்மக்கள் ஆகிய நாங்கள் தள்ளப்படுவோம் என்பதை மிகவும் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறோம். ஆகவே இலங்கை அரசு இப்படிப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும் என்பதனை sமீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறிக் கொள்கின்றோம்.
நாள்: 26.04 2020
எழுத்து:
வன்னி வாணன்

Sunday, 26 April 2020

வட்டுக்கோட்டை தீர்மானமும் தீர்க்கப்படாத இனப்பிரச்சினையும்!

1976ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்றோடு அத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாற்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் தமிழர் விடுதலைக் கூட்டணி இந்த தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது. மித வாத அரசியலில் தமிழ் தரப்புக்கள் சந்தித்த தோல்விகள் மற்றும் அனுபவங்களால் தனித் தமிழீழம் அமைக்கப்படவேண்டும் என்ற தீர்மானத்திற்கு நகர்ந்தமையே வட்டுக் கோட்டைப் பிரகனடம் ஆகும்.

தந்தை செல்வநாயகம் தலையில் கூடிய மாநாட்டில் 01. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட தமிழர் தாயகம் வேண்டும்.02.அதில் ஒரு தேசிய இனமாக தமிழரின் அரசியல் இலக்கை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் தன்னாட்சி உரிமை வேண்டும்.03. அதற்காக முழுமூச்சான பயணத்தை அஞ்சாத அர்ப்பணிப்புக்களோடு நாம் முன்னெடுக்கவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

ஒரு தேசிய இனத்தை பாதுகாக்கும் பொருட்டு தமிழீழ அரசை மீளளித்தல் மற்றும் மீள உருவாக்குதல் என்ற காரணத்தை இந்த தீர்மானம் கொண்டிருந்தது. இலங்கை 1948இல் சுதந்திரமடைந்த பின்னர் தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட, அதற்காக முப்பத்தெட்டு ஆண்டுகள் இலங்கை அரசுகளுடன் பேச்சுவார்த்தைகளும் போராட்டங்களும் இடம்பெற்ற நிலையில் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானம், தமிழர் விடுதலைப் போராட்டத்தில் மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது,

இதுவே ஆயுதப் போராட்டத்திற்கும் அடிதளமிட்ட நிகழ்வாகும். சுமார் நாற்பது வருடங்களாக மதிவாத அரசியலில் சந்தித்த தோல்விகளும் இலங்கை அரசின் உறுதியான தமிழர் ஒடுக்குமுறைச் செயற்பாடுகளும் ஆயுதப் போராட்டத்திற்கு வித்திட்டன. வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாற்பது ஆண்டுகள் கடந்துள்ளபோதும் இலங்கையின் இனப்பிரச்சினை தீர்க்கப்படாத ஒன்றாகவே தொடர்கிறது என்பதே இந்தத் தீர்மானத்தை இன்னும் உயிர்ப்பிக்கிறது.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு பேராதரவளிக்கும் முகமாக வடகிழக்கு தமிழ் மக்கள் பெரும் எழுச்சியோடு தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிட்ட தமது பிரதிநிதிகளை வெல்ல வைத்தார்கள். தனித் தமிழ் ஈழத்திற்கான ஆணையை அந்த தேர்தலில் வடகிழக்கு மக்கள் முன்வைத்தார்கள். அதனை ஒரு ஜனநாயகப் போராட்டமாக மேற்கொண்டார்கள். பிரிந்து செல்லல் மாத்திரமின்றி சாதியற்ற, பண்பாடு,பாரம்பரிய விழுமியங்களை பாதுகாக்கும், சம உரிமை கொண்ட ஒரு தேசத்தையே வட்டுக்கோட்டைத் தீர்மானம் பிரதிபலித்தது.

ஒரு இனம் ஒடுக்குமுறையை சந்திக்கின்றபோது, ஜனநாயகம், அதன் சுய உரிமைகள் மறுக்கப்படுகின்றபோது, அந்த இனம் பிரிந்து சென்று தனக்கான ஆட்சியை அமைக்க உரித்துடையது என்பதை அனைத்துலக மக்கள் சார்ந்த உரிமைக் கொள்கைகள் ஏற்றுக்கொள்கின்றன. இலங்கைத் தீவில் பூர்வீகமாக வாழந்த தமிழ் தேசிய இனம் இத்தகைய ஒரு தீர்மானத்திற்கு செல்லுகின்றது எனில் அது எத்தகைய ஒடுக்குமுறையை சந்தித்தது என்பதையே இங்கு புரிந்துகொள்ளப்ட வேண்டியது. ஆனால் நாற்பது ஆண்டுகள் ஆகியும் இலங்கை அரசியலில் அதைப் புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் துரதிஷ்டமானது.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை, இலங்கை அரசுகள் கடுமையாக விமர்சிப்பதன் அர்த்தம் என்பது அதன் பின்னாலுள்ள உண்மைகளையும் நியாங்களைளும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை வேட்கையையும் ஏற்கத் தயாரில்லை என்பதேயாகும். வட்டுக்கோட்டைத் தீர்மானம், ஓர் கடுமையான தீர்மானமாக கூறும் அரசுகள் என்ன தீர்வைத்தான் தமிழ் மக்களுக்கு வழங்கின? தமிழ் மக்களின் சுய உரிமை குறித்த பிரச்சினைக்கு – இலங்கையில் புரையோடிப் போன இனப்பிரச்சினைக்கு எந்தவொரு தீர்வையும் இதுவரையில் முன் வைக்காதது ஏன்? இதனைக் கடுமையான தீர்மானம் என்பதும் இதனை நிராகரிப்பதும் சுய உரிமை மறுப்புக்கான, பேரினவாத அதிகாரப் போக்கின் வெளிப்பாடே.

கடந்த பொதுத் தேர்தலில் சமஷ்டி அரசாட்சியை முன்வைக்க வேண்டும் என்று கோரி தமிழ் மக்கள் வாக்களித்திருந்தார்கள். வட்டுக்கோட்டைத் தனித் தமிழீழ தீர்மானத்தின் பின்னர், ஆயுதம் ஏந்தி தனி நாடு கோரி நடத்தப்பட்ட தீர்மானத்தின் பின்னர், 13ஆவது அரசியல் திருத்தம் தமிழ் மக்களால் நிராகரிக்கப்படும் நிலையில் இந்த சமஷ்டியை வடகிழக்கு மக்கள் வலியுறுத்தியுள்ளனர். வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாற்பது ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் சமஷ்டி கோரிக்கையை இலங்கை அரசு எவ்வாறு அணுகப் போகிறது என்பதே இனப்பிரச்சினை தொடர்பில் இலங்கை ஆட்சியாளர்கள் எத்தகைய கரிசனையை கொண்டுள்ளார்கள் என வெளிப்படுத்தப் போகிறது.

சமஷ்டித் தீர்வு பிரிவினையல்ல என்றும் வடகிழக்கை பூர்வீககமாகக் கொண்ட தமிழ் இனம் தன்னுடைய இறைமையை, இழந்த ஆட்சியை கோருவது அந்த இனத்தின் உரிமை என்றும் தமிழ் தலைமைகள் வலியுறுத்துகின்றன. அத்துடன் சமஷ்டி ஆட்சிமுறையே தமது இலக்கு என்றும் அதிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றும் தமிழ் தலைமைகள் மக்களிடத்தில் உறுதி வழங்கியுள்ளன. மறுபுறத்தில் சமஷ்டிக்கு இடமில்லை என்றும் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் இலங்கை அரசு சிங்கள மக்களிடம் சொல்கிறது.

முன்னைய காலத்தில் தமிழ் ஈழத்திற்கும், தயாரில்லை, மகிந்த ஆட்சியில் 13இற்கும் தயாரில்லை, இப்போது சமஷ்டிக்கும் தயாரில்லை என்றால் தென்னிலங்கையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக என்னதான் இருக்கிறது? தமிழ் மக்களுக்கு சுய நிர்ணய உரிமை உண்டென்று பெரும்பாலான சிங்கள மக்கள்,சிங்கள முற்போக்காளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் தமக்கிடையிலான அரசியல் அதிகாரப் போட்டிக்கான பேசு பொருளுக்காக ராஜபகச்வைப் போன்ற இனவாதிகள் அதனை குழப்புகின்றனர்.

ராஜபக்ச 13ஆவது திருத்ததச் சட்டத்தையே நடைமுறைப்படுத்த மறுத்தவர். பேரினவாதிகளைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களுக்கு எந்த உரிமையும் வழங்கக்கூடாது என்பதே அவர்களின் நிலைப்பாடு. சிங்களப் பேரினவாத அரசியலுக்குள் தமிழ் இனத்தை அழித்தொழிப்பதே அவர்களின் தீர்வு. சமஷ்டிக்கு இடமில்லை என்று ராஜபக்சக்களுகு அஞ்சி இன்றைய அரசு கூறுகிறதா? அப்படி எனில் ராஜபக்ச ஆட்சியும் தற்போதைய ஆட்சியும் தமிழரைப் பொறுத்தவரையில் ஒன்றல்லவா? தமிழ் மக்களின் உரிமையை அவர்களிடம் கொடுக்க வேண்டும் என்று பேசும் இன்றைய அரசாங்கம் சமஷ்டியை மறுப்பதன் ஊடாக “பேச்சு பல்லக்கு தம்பி பொடிநடை” என்று செயற்படுகிறதா?

வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றி நாற்பது ஆண்டுகள் ஆகியும் இலங்கையின் அரசியலும் இனப்பிரச்சினையும் தீர்வு குறித்த முனைப்புக்களும் சுய உரிமையை வழங்குதல் குறித்த அணுகுமுறைகளும் வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றிய அதே காலத்திலேயே உழல்கிறது. ஒரு வகையில் இது வரலாற்றை கற்க மறுக்கும் செயல். இவ்வளவு அனுபவங்களை சந்தித்த பின்னரும் ஒரு தேசிய இனத்தின் சுய உரிமைகளை மீளளிக்க தயங்குவதும் தடைகளை ஏற்படுத்துவதும் ஆரோக்கியமானதல்ல.

‘தமிழ் மக்களுக்கு எதுவும் கொடாதே’ என்பவர்களின் பேரினவாத வெறிக்கு செவிசாய்க்க வேண்டுமெனில், இது யாருடைய ஆட்சி? இங்கு வாழும் தமிழ் மக்களின் எதிர்காலம் எப்படியானதாய் இருக்கும்? அறுபது வருடங்காக போராடும் ஒரு இனம் எத்தகைய நிலையை அடையும்? முப்பது வருடங்களாக ஆயுதம் ஏந்திய இனம் எதனை உணரும்? இவைகளை குறித்து இலங்கையை ஆள்பவர்களும் நாமும் உலகமும் சிந்திக்க வேண்டும். இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயம் இனப்பிரச்சினையின் கர்த்தக்களால் மிகவும் ஆழமாக சிக்கல் படுத்தி, அதில் அவர்களின் நலன்கள் இங்கே அறுவடை செய்யப்படுகின்றன.

இலங்கையை தற்போது ஆட்சி செய்யும் அரசு தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை கொள்வதாக கூறுகிறது. தமிழ் மக்களின் உரிமையை அவர்களிடம் வழங்கியிருந்தால் ஆயுதம் ஏந்தியிரார்கள் என்கிறது. 2016 இல் தீர்வை முன்வைப்போம் என்று சொன்னார்கள். 2016ஆம் வருடத்தின் பாதிக் காலம் முடிந்த நிலையில் இன்னும் தீர்வு குறித்த முனைப்புக்கள் மந்தமாகவும் மறுக்கப்பட்ட நிலையிலும் உள்ளது தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்த எதிர்பார்ப்பை அவ நம்பிக்கைக்குள் தள்ளுகிறது.

தமிழ் மக்கள் மீதான தொடர் இன ஒடுக்குமுறையும், தமிழ் மக்களின் சுய உரிமை மறுப்பும், ஜனநாயக வழியின் தோல்வியுமே வட்டுக்கோட்டைப் பிரகடனத்தை தோற்றுவித்தது. இப்போதும் தமிழ் மக்களின் உரிமைகளை மறுத்து அவர்களை கடுமையான இன ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் பேச்சுக்கள் தென்னிலங்கையில் நிகழ்த்தப்படுகின்றன. பேரினவாதப் போக்கு வீழ்ச்சியுறாதநிலையில், வடகிழக்கு மக்கள் இன்று சந்தித்துக்கொண்டிருக்கும் வாழ்வு என்பது தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு தள்ளக்கூடியது என்பதே இன்றைய வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில் சுட்டிக்காட்டத்தக்கது.

தீபச்செல்வன்

பூமியை நேசித்த புலிகள்

நாம் வாழுகின்ற பூமிக்கு நம் வாழ்வில் ஒருமுறையாவது ஒரு நன்மையையாவது செய்கிறோமா என்று ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் நாம் இயற்கைக்கு எதிராக செய்த ஒவ்வொரு வினைகளுக்கும் இப்போது அறுவடை செய்து கொண்டிருக்கிறோம். அப்படி ஒரு பயங்கரமாகத்தான் கொரோனா போன்ற வைரஸ் தொற்றுக்களும் ஏற்பட்டுள்ளனவா என்றும் சந்தேகம் ஏற்படுகின்றது. இன்றைய சூழலில் பூமியின் உயிர்கோளத்தை பாதுகாக்கும் ஒரு வாழ்வை நாம் வாழ்கிறோமா என சிந்திப்பது அவசியமானது.

கடந்த சில வருடங்களின் முன்னர், இலங்கையின் அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் மாத்திரமே காடுகள் இயற்கையாக 100 வீதமாக காணப்படுவதாக கூறியிருந்தார். இலங்கை ஜனாதிபதி வெளிப்படையாக சொல்லாமல் விட்டாலும் தமிழீழ விடுதலைப் புலிகளாலும் அதன் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனாலுமே காடுகள் பாதுகாக்கப்பட்டன என்பதையே சொல்லுகிறார். இலங்கை அரசில் விவசாய அமைச்சு, வனவள பாதுகாப்பு திணைக்களம் என பல நிறுவனங்கள் உள்ளபோதும் காடுகளை பாதுகாக்க முடியவில்லை என்ற ஒப்புதலே இது.தமிழீழ விடுதலைப் புலிகள், இப் பூமியின் உயிர்கோளத்தை பாதுகாக்கின்ற அமைப்பாகவே இருந்தார்கள். இலங்கை அரசின் இன அழிப்பு தாக்குதல்களிலிருந்து மனித உயிர்களை பாதுகாப்பது முதல், இப் பூமியின் உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாப்பதற்காக பல்வேறு கட்டமைப்புக்களை அவர்கள் உருவாக்கியிருந்தனர். தமிழீழ வனவள பாதுகாப்பு அமைப்பு, தமிழீழ வானிலை அவதானிப்பு நிலையம், தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் இப்படி பல அமைப்புக்கள் உருவாக்கப்பட்டு, நிலத்தையும் நீரையும் காடுகளையும் உயிர்களையும் பாதுகாக்கின்ற பணிகள் நடைமுறையில் சாதிக்கப்பட்டன.

மறுபறமாக இன அழிப்பு போரின் மூலம், மனித உயிர்களை மாத்திரமின்றி, ஈழ மண்ணின் உயிர் பல்வகையை அழிக்கும் வேலைகளில் அரசு ஈடுபட்டது. விடுதலைப் புலிகள் இயக்கம் நாட்டிய மரங்களை இன்றுவரையில் இலங்கைப் படைகள் அழிக்கின்றமைதான் அவர்கள் இயற்கைக்கு செய்யுகின்ற பணி. புலிகள் இயக்கம் ஒரு மரத்தைப் போல, இம் மண்ணின் உயிரினத்தைப் போல விடுதலையையும் பூமியையும் நேசித்தார்கள் என்பதற்கு அவர்கள் இட்டுச் சென்ற பல தடயங்கள் சாட்சியமாகின்றது. புலிகளின் நிர்வாகம் பூமியை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதையும் உலகத்தவருக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது.நாம் வாழும் பூமியானது, அண்டத்தில் உள்ள பெரும் கோள். பேரண்டத்தின் அனைத்து கோள்களும் ரோமானிய கடவுளர்களின் பெயர்களால் அழைக்கப்பட பூமி மாத்திரமே நிலத்தின் பெயரால் அழைக்கப்படுகின்ற சிறப்பையும் கொண்டது. அதேபோல இவ் அண்டத்தில் பல கோள்கள் காணப்பட்டாலும் உயிரினங்கள் வாழுகின்ற ஒரே கோள் பூமியாகும். பூமியின் பௌதீக இயல்பினாலும், அது சூரியனை சுற்றி வருவதனாலும் உயிர்கள் நிலைபெறுகின்ற வாய்ப்பு ஏற்பட்டது.

இப் பூமியின் வரலாறு 4.5 பில்லியன் (450கோடி ஆண்டுகள்) வருடங்கள் எனப்படுகின்றது. அத்துடன் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் உயிரினங்கள் தோன்றியுள்ளதாகவும் ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளன. எனினும் உயிரினங்கள் வாழுவதற்கு உகந்த இன்றைய சூழல், இன்னும் 1.5 பில்லியன் ஆண்டுகளுக்கு மாத்திரமே நிலவும் என்று விஞ்ஞானிகள் எதிர்வு கூறியுள்ளனர். ஓசோன் மண்டலம் உருவாகி புவியின் காந்த மண்டலத்தோடு அகிலத்திலிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் கதிர்களைத் தடுத்ததால்தான் உலகில் உயிர்கள் தழைத்தன.

மனிதன் தான் வாழும் பூமியை பாதுகாக்கத் தவறியதன் விளைவாகவே, நில நடுக்கங்களும் சுனாமிகளும் வறட்சியும் பேரழிவுகளும் ஏற்படுகின்றன. இப் பூமியில் காணப்படும் அனைத்து உயிரினங்களின் வாழ்வும் ஒன்றுடன் ஒன்று தங்கியுள்ளதுடன் ஒன்றுடன்ஒன்று தொடர்பை கொண்டுள்ளன. ஒன்று இல்லாமல் ஒன்று வாழ முடியாத இந் நிலையை மனிதன் மாற்றியமைக்கத் தொடங்கியதன் விளைவாகவே பூமி முரண்பாடான வெளிப்பாடுகளை அல்லது எதிர்வினைகளைக் காட்டி வருகின்றது. இதன் ஒரு வெளிப்பாடாக கூட கொரோனாவை கருதுவதற்கும் சந்தர்ப்பங்கள் உள்ளன.

இன்றைக்கு காடழிப்பு உலகில் பெரும் பிரச்சினையாக காணப்படுகின்றது. வனம் வாழ்வின் அகம் என்பார்கள். மரமானது வாழ்வதற்கு நிழலை மாத்திரம் தருவதில்லை. உணவை தருகின்றது. அருந்த நீரை தருகின்றது. பூமியின் இயல்பை பேண உதவுகின்றது. மனிதர்கள் மாத்திரமின்றி பல்வேறு உயிரினங்களும் வாழ மரங்கள் உதவுகின்றன. இன்றைக்கு காடுகள் மிக வேகமாக அழிக்கப்படுகின்றது. குடியேற்றங்கள் உருவாக்கப்படுகின்றன. இதனால் காட்டு வளம் அழிகின்றது. அத்துடன் உலகின் தட்ப வெப்ப நிலையும் மாறி வருகின்றது.மரங்கள் அழிக்கப்படுகின்ற வேகத்திற்கு புதிய மரங்கள் நாட்டப்படுவதில்லை. அத்துடன் இயற்கையான மரங்களை அழித்துவிட்ட அதற்கு ஈடாக மரங்களை மனிதனால் நாட்டவும் முடியாது. கடந்த இருபது ஆண்டுகளில் ஒரு வீத மரம் மாத்திரமே நாட்டப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் சொல்லுகின்றன. உலகில் 30வீத காடுகள்தான் இன்றுள்ளன. அத்துடன் உலகில் நிமிடம் ஒன்றுக்கு அறுபது கால் பந்து மைதான அளவுக்குரிய காடுகள் அழிக்கப்படுகின்றன.

காடழிப்பு என்பது பூமியின் வளங்களை அழிக்கின்ற செயலுக்கான அடிக்கோலாகும். இதிலிருந்தே குடிநீருக்கான தட்டுப்பாடும் வறட்சியும் ஏற்படுகின்றது. இன்றைக்கு இந்தியாவில் வரட்சியால் விவசாயம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள். ஈழத்திலும்கூட ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய விவசாய நிலை இன்றில்லை. நீர் வளமும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. பணம் கொடுத்து குடிநீர் வாங்கும் கலாசாரத்திற்குள் 2009இற்கு பிறகான ஈழம் வந்திருப்பதும் அதிர்ச்சியான விசயமாகும்.

பெட்ரோல், டீசல், நிலக்கரி முதலிய எரிபொருட்களுக்குப் பதிலாக சூரிய சக்தியையும் இயற்கை சக்தியையும் பயன்படுத்த முடியும் என சூழலியலாளர்கள் கூறுகின்றனர். இதைப்போல மின்சாரத்தையும் இயற்கையாக பெற்றுக்கொள்ளுகின்ற வழிமுறைகளை நோக்கி மனிதன் நகர வேண்டும். வளி மண்டலத்திற்கு மேலே வாயு நிலையில் காணப்படும் ஓசோன் படலம், பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கு பெரும் பங்களிப்பு செய்து வருகின்றது. பூமியில் மனிதன் செய்யும் நாசகார வேலைகளால் ஓசோன் படலத்தில் மாசு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளது. இது பூமியின் அனைத்து உயிரினங்களையும் பாதிக்கும்.

அத்துடன் வன ஜீவராசிகளை பாதுகாப்பதும் பூமியை பாதுகாக்கின்ற வழி. பறவைகள், பட்சிகள், விலங்குகள் என அனைவருக்குமான பூமியில் அனைவருக்கும் இடமளிப்பதே பூமிக்கு பாதுகாப்பானது. அவற்றை அழிப்பது என்பது மனிதன் தன்னையும் பூமியையும் அழிக்கும் நாசகார வேலையன்றி வேறில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் நிலத்தை, மரத்தை, கடலை, நேசித்தததைப்போல அவர்கள் வழியில் நாமும் பூமியை நேசிப்போம். இயற்கைக்கு உகந்த வாழ்க்கையை இயற்கையுடன் இணைந்து வாழ்ந்து, இப் பூமியை பாதுகாத்து எங்கள் எதிர்காலச் சந்ததிகளுக்கு வளமான பூமியாக கையளிப்பது நம் பெரும் கடனாகும்.

கவிஞர் தீபச்செல்வன்.

Friday, 17 April 2020

முள்ளிவாய்க்கால்

ஒருவேளை உங்களுக்கு இலங்கை செல்லும் வாய்ப்புக் கிடைத்தால் நிச்சயம் முள்ளிவாய்க்காலுக்கு சென்று வாருங்கள். ஒரு அமைதியான மரண பயம் தொற்றிக்கொள்ளும். வங்கக்கடலிலும், நந்திகடலிலிருந்தும் வரும் ஓசையில் மரண ஓலத்தை நீங்கள் கேட்கக் கூடும். காற்றில் ரத்தவாடையை உணர்வீர்கள். தேகமெங்கும் குற்ற உணர்ச்சி உங்களை வாட்டிவதைக்கும். ஒரு இனத்தை மொத்தமாக அழித்துச் சமாதி கட்டிய வரலாற்றின் கொடூரச் செயல் அங்குதான் நிகழ்த்தப்பட்டது. பல நாடுகளின் கூட்டுச் சதியால் புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் ஒரு மாபெரும் இன அழிப்பு அங்குதான் நடத்தப்பட்டது. ஒன்பது  ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய தினத்தில்தான். 

இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்.2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் ஒரு செம்மறி ஆட்டுக்கூட்டம் போல அடைத்து வைக்கப்பட்டிருந்த மக்களுக்கு அடுத்த நொடிகூட மரணம் நிகழும் என்பது நன்றாகவே தெரிந்திருந்தது. 

ரத்தம் குடிக்கும் அசுரர்களுக்கு மத்தியில் மாட்டிக் கொண்டுவிட்டோம். இனி நம்மைக் காக்க எந்தக் கடவுளும் வரப்போவதில்லை என்பதை அவர்கள் நன்றாக உணர்ந்திருந்தார்கள். நம் குழந்தைகளின் ஒரு வேளை பசியையாவது போக்கிவிட மாட்டோமா என மரணப்பிடியில் மாட்டிக்கொண்ட அனைத்து மக்களின் எண்ணங்களும் ஒரேமாதிரியாக இருந்தது. பசியால் தமிழர்கள் அழியவேண்டும் என்று இலங்கை அரசு செய்த சதிதான் இறுதிகட்டப் போரின் போது பல குழந்தைகள் வற்றிய வயிறோடு இறந்துபோனதற்கு முக்கிய காரணம். 

ஒரு வருட காலம் மிகப்பெரிய இடம்பெயர்வில் சிக்கித் தவித்த மக்களை "முள்ளிவாய்க்கால் வாருங்கள் உங்களுக்கான அனைத்து உதவிகளும் அங்கே கிடைக்கும்" என்று இலங்கை அரசு தெரிவித்திருந்தது. உண்மையில் தமிழர்களைத் திட்டமிட்டே அங்கே அழைத்துச் சென்றனர். தோட்டாக்களாலும், ரசாயனக் குண்டுகளாலும் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு வேறு வழியில்லை. எப்படி, யூதர்களிடம் உங்களுக்கு ஒரு பாதுக்காப்பான இடத்தைத்  தருகிறேன் என்று சொல்லி எந்தப் புறமும் வெளியேற முடியாதபடி அடைக்கப்பட்ட ஒரு இடத்தைக் கொடுத்து பின், அவர்களை விஷ வாயு செலுத்தி ஹிட்லர் கொன்றாரோ. அதுபோல ஒரு நாடகம்தான் இங்கேயும் நடந்தேறியது. கொல்லப்பட போகும்போது அலறல் சத்தம் வெளியில் கேட்கக் கூடாது என்ற ஹிட்லரின் எண்ணத்தைவிட பெரிய அளவிலான கொடூரத்தை நிகழ்த்த ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு முடிவு செய்திருந்தது.2008 ஆம் ஆண்டு கடைசியில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கிளிநொச்சி, வவுனி ஆகிய மாவட்டங்களில் 4 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இருந்திருக்கின்றனர். ஆனால் முள்ளிவாய்க்கால் இடப்பெயர்வு காலத்தில் வெறும் 70 ஆயிரம் பேர் மட்டும்தான் போர்களத்துக்கு நடுவே இருக்கிறார்கள் என்று இலங்கை ராணுவ அமைச்சகம் தெரிவித்து இருந்தது. எதற்காக இலங்கை அரசு இப்படி ஒரு பொய்யைச் சொல்லவேண்டும். காரணம் முள்ளிவாய்க்காலில் புலம் பெயர்ந்த மக்களுக்கு உணவுபொருட்கள் விநியோகத்தை முற்றிலுமாக தடுக்கவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். வெறும் 70 ஆயிரம் மக்களுக்குக் கொடுக்கப்படும் உணவுப்பொருட்களானது எப்படி அனைவரின் பசியைப் போக்கும்? பசியின் காரணத்தால் அவர்களே செத்து மடிந்து போவார்கள் என்பது தான் இலங்கை அரசின் மிகப்பெரிய திட்டம். மே மாதம் தொடக்கம் முதல் நம் மக்களும், குழந்தைகளும் பசியால் இறக்கத் தொடங்கினார்கள். மே இரண்டாவது வாரத்தில் ஒரு கிலோ அரிசி 1000 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்திருக்கிறார்கள் என்று யுத்தம் முடிந்த பின் தகவல்கள் வெளிவந்தன. புலிகள் மட்டும் கொல்லப்படக் கூடாது ஒட்டுமொத்த தமிழ்மக்களும் கொல்லப்பட வேண்டும் என்று இலங்கை அரசு எப்போதோ முடிவு செய்துவிட்டது. அதன் விளைவுதான், ஒரு சிறிய பகுதியில் மக்கள் அடைக்கப்பட்டதும், ஏற்படுத்தப்பட்ட செயற்கை பஞ்சமும். 

முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

ஒரு புறம் வங்கக்கடல், மறுபுறம் நந்திக்கடல். இவைகளுக்கு இடையே சுமார் 5 கிலோ மீட்டர் சதுரப்பரப்பளவுக்கும் குறைவான பகுதியில் நம் மக்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு இருந்தனர். மே 16 ஆம் தேதி நள்ளிரவில் விடுதலைப்புலிகள் இங்குதான் மறைந்து இருக்கிறார்கள் என்று இலங்கை அரசு போர் புரிய ஆயத்தமானது. இல்லை, இன அழிப்பை நடத்த ஆயத்தமானது. இருபுறம் உள்ள கடலில் போர்க்கப்பல்களும், தரைவழியில் பீரங்கிகளும், ஆகாயத்தில் போர்விமானங்களும் முள்ளிவாய்க்காலை சுற்றி வளைத்தன. மே 17 ஆம் தேதி அதிகாலைப்பொழுதில் உலக நாடுகள் இந்தியா கொடுத்த அதிபயங்கர ஆயுதங்களாலும், ரசாயனக் குண்டுகளாலும் நம் இனத்தை அழிக்க ஆரம்பித்தனர். மக்களின் மரண ஓலங்கள் காதைக் கிழித்தெறிந்த போதிலும் அதை இந்தியாவில் மத்தியில் அப்போழுது ஆட்சி செய்த காங்கிரஸ் மற்றும் தமிழ்நாட்டில் ஆட்சி செய்த திமுக இருவர்களும்  இனைந்து தமிழர்களை கொன்றனர் . இந்தப் போரில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். இதே தினத்தில் புலிகளின் 6 படகுகளை இலங்கை ராணுவம் சுட்டு வீழ்த்தியதில் புலிகளின் வசம் இருந்தக் கடைசிப் பகுதிகளும் இலங்கை ராணுவம் கைப்பற்றியது. சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த இந்த யுத்தத்தில், இலங்கை அரசு ஒரு இன அழிப்பை நடத்தி 2009 ஆம் ஆண்டு இன்றைய தினத்தில் முடிவுக்கு கொண்டு வந்தது.

அன்றைய தினத்தில் ஜோர்டான் நாட்டிலிருந்து இலங்கைக்கு திரும்பிக் கொண்டிருந்த ராஜபக்சே கூறியது என்ன தெரியுமா? "இறுதிப்போரில் புலிகள் தோற்கடிக்கப்பட்டு, நாம் வென்றுவிட்டோம்" ஆனால் ஒரு இனப்படுகொலை செய்ததைப் பற்றி அவர் வாய் திறக்கவில்லை. ஐ.நா. தலையீட்டின் படி நடந்த விசாரணையில் 40,000 மக்கள்தான் இறந்தனர் என்று ஒரு பொய் கணக்கும் காட்டப்பட்டது.

இனப்படுகொலை நடந்து ஒன்பது  ஆண்டுகள் ஆகியிருக்கலாம். ஆனால் உலக நாடுகள் செய்த சூழ்ச்சியும் அதனால் உருவான வடுக்களும் வரலாற்றில் எத்தனை ஆண்டுகள் சென்று திரும்பி பார்த்தாலும் அதன் ரத்த வாடை காற்றில் வீசிக்கொண்டே இருக்கும்.

#கரும்புலி #தமிழினி அவர்களின் பதிவு. 

மீள்பதிவேற்றம்.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின்- CIPLA நிறுவனர் குவாஜா அப்துல் ஹமீத்.

உங்களுக்கு தெரியுமா?
இந்த"  ஹைட்ராக்ஸி குளோரோகுயின்"
மருந்தை தராவிட்டால்  அதன் விளைவுகளை  சந்திப்பீர்கள்  என்று  டிரம்ப்  மிரட்டினாரே  அந்த  மருந்தை இந்தியாவில்  தயாரிக்கும்  நிறுவனத்தின்   பெயர்   CIPLA    நிறுவனர்  குவாஜா  அப்துல் ஹமீத். பிரிவினையின் போது  பாகிஸ்தானுக்கு  வந்து விடுங்கள்  உங்களுக்கு  மகா கவுரவம்  தருகிறேன்  என்று  முஹம்மது அலி  ஜின்னா  அழைத்த போது  மகாத்மா காந்தி தான்  எனது தலைவர்   இந்தியா தான் எனது தாய் நாடு  நான்  இங்கேயே  இருந்து கொள்கிறேன்  என்று  சொன்னவர்  அவர். 

தப்லீக்  , எச்சில்,  நிர்வாணம்  , பயங்கரவாதிகள்   போன்ற  பொய் செய்திகளுக்கு  கொஞ்சம்  இடைவேளை  விட்டு விட்டு  இதைப் போன்ற உண்மை  வரலாறுகளையும்  கொஞ்சம்  படிக்கலாமே  

உஸ்மான் 

பாஜகவின் பல்வேறு ஊடகங்கள் மற்றும் பக்தர்கள் மூலம் இந்த நாட்டின் முஸ்லிம்கள் மதிப்பழிக்கப்படும் சூழலில், மற்ற அனைவரின் இதயங்களையும் கொள்ளை கொள்ளும் ஒரு கதை இங்கே.

1920 களில், இந்தியாவில் ஒரு பணக்காரர் தனது மகனை பம்பாயிலிருந்து ஐக்கிய இராச்சியத்திற்கு ஒரு கப்பலில் ஏற்றி சட்டம் படித்து பாரிஸ்டர் பட்டம் பெற்று ஒரு பேரறிஞராக மாற அனுப்பினார். அந்த நேரத்தில் நாட்டின் அனைத்து பெரிய தனவந்தர் குடும்பங்களிடையேயும் இதுதான் நாகரீகமாக இருந்தது. இருப்பினும், அந்த சிறுவன் ஒரு வழக்கறிஞராக விரும்பவில்லை. அவரது உள்ளம் முழுவதும் வேதியியலில் லயித்திருந்தது. அதுமட்டுமின்றி, வேதியியல் துறையோ அந்த நாட்களில் எதிர்காலம் இல்லாமல் தோன்றியது. 

ஆனால், அவரது தந்தை அவருக்கு சிறியதொரு வாய்ப்பைக்கொடுத்தார், அதாவது, அவரை கப்பலில் தனியே அனுப்பி வைத்தார். எனவே, கப்பல் புறப்பட்டு செல்லும்போது தனது தந்தையிடம் கை அசைத்துக் கொண்டிருந்தபடியே... கப்பலின் மேல் தளத்தில் நின்ற நம் கதாநாயகன் #க்வாஜா அப்துல் ஹமீத், தன் மனதினுள் மற்றொரு செயல்திட்டத்தை தீட்டிக்கொண்டிருந்தார். கடந்த நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களில், வேதியியல் மற்றும் வேதிப்பொருட்களின் ஆய்வில் முன்னணியில் இருந்த ஜெர்மனியில் தரையிறங்க முடிவுகட்டினார். லண்டன் நோக்கி சென்ற கப்பலில் இருந்து கடலில் குதித்தார். எப்படியோ ஜெர்மனியை அடைந்தார். அங்கே அவர் வேதியியல் பயின்று பட்டம் பெற்றார். ஒரு கம்யூனிஸ்டாக இருந்த ஒரு ஜெர்மன் யூத பெண்மணியை மணந்தார். நாஜிக்கள் மிகவும் வெறுத்த இரண்டு சமூகங்கள் இந்த தம்பதி. ஆனால் அவர்கள் அடோல்ஃப் ஹிட்லரின் 'கெஸ்டபோ' எனும் ரகசிய போலீஸ் வசம் பிடிபடுவதற்கு முன்பு, அவர்கள் ஜெர்மனியிலிருந்து தப்பி பாதுகாப்பாக இந்தியாவை வந்தடைந்தனர்.

க்வாஜா அப்துல் ஹமீத், 1935 ஆம் ஆண்டில்... Chemical, Industral and Pharmaceutical LAboratories எனும் வேதியியல், தொழில்துறை மற்றும் மருந்து ஆய்வகங்களை அமைத்தார், இதுவே, சுதந்திரத்திற்கு பல தசாப்தங்களுக்குப் பிறகு #CIPLA (சிப்லா) என பிரபலம் ஆகி சுருக்கப்பட்டது.

குவாஜா அப்துல் ஹமீத்... மகாத்மா காந்தி மற்றும் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பெரும் ரசிகராக இருந்தார். உண்மையான தேசியவாத மனப்பான்மையில், சாதாரண மக்களுக்கு மலிவான விலையில் பொதுவான மருந்துகளை தயாரிப்பதில் இறங்கினார். மலேரியா மற்றும் காசநோய்க்கான மருந்துகள் மட்டுமல்லாமல் பிற சுவாசக் கோளாறுகள், இருதய நோய்கள் மற்றும் வழக்கமான மற்றும் கீல்வாதம் ஆகியவையும் இதில் அடங்கும்.

1970 களில், சிப்லா நியூயார்க்கில் புரூக்ளினில் இருந்து ஒரு அமெரிக்க மருந்து நிறுவனத்தால் காப்புரிமை பெற்ற ப்ராப்ரானோலோல் என்ற மருந்தை தயாரிக்கத் தொடங்கியது, இது இரத்த அழுத்தம், ஒற்றைத் தலைவலி மற்றும் இதய நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் ஒரு இருதுருவ உலகில், அமெரிக்கா இந்தியாவின் நண்பராகவும் இல்லை; உண்மையான வல்லரசாகவும் இல்லை. டொனால்ட் டிரம்பைப் போலல்லாமல், அன்று உலகின் எந்தவொரு நாட்டிற்கும் அதன் கட்டளைகளுக்கு இணங்க அச்சுறுத்தல்களை வெளியிட வேண்டிய அவசியமுமில்லை.

அமெரிக்கா இந்திய அரசிடம் புகார் அளித்தது. ஆனால் கடந்த வாரம் நரேந்திர மோடியைப் போலல்லாமல், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி உடனடியாக சரணாகதிக்கு செல்லவில்லை. குவாஜாவின் மகனான யூசுப் ஹமீதுவிடம் பேசினார். அவர், கேம்பிரிட்ஜில் படித்த வேதியியல் பட்டதாரி, அப்போது அவர்தான் சிப்லா நிறுவனத்தின் இயக்கத்தை எடுத்துக் கொண்டு நடத்தியவர். "மருந்துப்பொருள் தொடர்பான காப்புரிமைச் சட்டத்தை எவ்வாறு மீறி இந்தியாவை  சிக்க வைக்கலாம்?" என்று திருமதி இந்திரா காந்தி கேட்டபோது, ​​யூசுப்,  தனது தந்தையின் கதையையும், அவர் ஏன் இந்த நிறுவனத்தை அமைத்தார் என்பதையும், குறைந்த விலையில் தரமான மருந்துகளை ஏழைகளுக்குக் கொண்டு வரவே அமைத்தார், என்பதையும் சொன்னார்.

ஆம். அவர் தனது நிறுவனத்தை தனது மகனிடம் ஒப்படைத்தபோது, ​​க்வாஜா யூசுப்பிடம் ஒரு விஷயத்தை மட்டுமே கூறியிருந்தார் - 'இந்த நிறுவனம் ஏன் நிறுவப்பட்டது என்பதை நினைவில் கொள். உலகெங்கிலும் உள்ள பிற மருந்து நிறுவனங்களைப் போலல்லாமல், நாம் இங்கு லாபம் ஈட்டுவதற்காக இருக்கவில்லை. ஆனால், தரமான மருந்துகளின் தேவைக்காக இறக்க நேரிடும் ஏழைகளுக்கு நிவாரணம் மற்றும் சுகாதார சேவையை வழங்குவதற்காகவே இருக்கிறோம்."
ஆம். அவர் செய்து கொண்டிருந்தது அவ்வளவுதான். 

ஏழைகளுக்கான அக்கறையுடன் பரிவு கொள்ளக்கூடிய திருமதி இந்திரா காந்தியிடம், யூசுப் இவ்வாறு கூறியதும், 'மருந்துப்பொருளை உற்பத்தி செய்வதை நிறுத்த வேண்டும்' என்ற அமெரிக்காவின் கட்டளையை இந்திய பிரதமர் நிராகரித்தார். அமெரிக்கர்கள் இதற்காகவும் மற்ற மீறல் செயல்களுக்காகவும் இந்திராவை கடுமையாக வெறுத்தனர், ஆனால், பிரதமர் இந்திராவுக்குள், எப்போதும் தனது சொந்த சக குடிமக்களின் நலன்களுக்கு முன்னுரிமை இருந்தது.

யூசுப்பின் ஆலோசனையின் பேரில், மருந்துகள் மீதான இந்திய காப்புரிமைச் சட்டத்தையும் பிரதமர் இந்திரா மாற்றி அமைத்தார். அதாவது, 'புதிய காப்புரிமை சட்டத்தின்படி, மருந்துப்பொருளை சேர்க்கக்கூடாது; ஆனால், அதன் உற்பத்தி செய்யும் செயல்முறையை மட்டுமே வேறு யாரும் காப்புரிமையில் மீறமுடியாது', என்று சட்டம் மாற்றப்பட்டது. இதனால், சிப்லா முன்னோக்கி சென்று ஏழைகளுக்கு முடிந்தவரை குறைந்த விலையில் பொதுவான மருந்துகளை தயாரிக்க முடிந்தது. அப்போதிருந்து சிப்லா, எயிட்ஸ்- எச்.ஐ.விக்கு சிகிச்சையளிக்க குறைந்த விலையில் மருந்து தயாரித்து, ஆப்பிரிக்க நாடுகள் உட்பட பல வளரும் நாடுகளுக்கு தருகின்ற நடவடிக்கைகளை விரிவுபடுத்தியது, அங்கு பெரும்பாலான எச்.ஐ.வி மற்றும் ஏழை நோயாளிகள் ஒரு காலத்தில் இருந்தனர்.

மலேரியா, லூபஸ் மற்றும் முடக்கு வாதம் ஆகியவற்றின் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் தயாரிக்கும் நிறுவனமும் இதுதான். இது பலவீனமான டிரம்ப் நிர்வாகத்தின் அச்சுறுத்தலின் கீழ் அமெரிக்காவிற்கு இவ்வளவு பெரிய அளவில் மருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு, ஏழை இந்தியர்களை வஞ்சிக்கிறது.

அந்த மருந்துப்பொருளை ஏற்றுமதி செய்வதில் டிரம்ப் இந்தியாவை மிரட்டுவதற்கு முன்பே, மலேரியா (மற்றும் காசநோய்) பொதுவாகக் காணப்படும் நாடுகள் எல்லாம், கொரோனா வைரஸ் தாக்குதலில்... மலேரியா கிட்டத்தட்ட இல்லாத நாடுகளை விட குறைவாக பாதிக்கப்படுவதை பம்பாயில் உள்ள சைஃபி மருத்துவமனையின் தொற்று நோய்களுக்கான சிறப்பு டாக்டர் ஹமீதுதீன் பர்தாவாலா எங்களில் சிலரிடம் கூறியிருந்தார். 

மலேரியா கிட்டத்தட்ட இல்லாத நாடுகள் எவை..? அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், கனடா போன்றவைதான்..! வேறுவிதமாகக் கூறினால், அதிகபட்ச தொற்றுநோய்களை சந்தித்த நாடுகள் அவை. ஜெர்மனியைப் பற்றி நான் நினைக்கும் போது... ஒருவேளை அன்று... நம் குவாஜா அப்துல் ஹமீத் மற்றும் அவரது மனைவி ஜெர்மனி நாஜியின் ரகசிய போலீஸ் ஆன 'கெஸ்டபோ'விடம் பிடிபட்டு வதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டு கொல்லப்பட்டிருந்தால்... இப்போது HCQ ஐ வழங்கியதற்காக இந்தியாவுக்கு மிகுந்த நன்றி தெரிவிக்கும் இந்த நாடுகள்... 'இன்று இவ்வுலகில் எங்கே இருந்திருக்கும்?' என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது..!

முஸ்லிம்களை மிகவும் அந்நியப்படுத்த செய்து கொடுமைப்படுத்திய மற்றும் இந்த நோயை மதவாதமாக்கிய இந்த நாட்டின் பேரினவாதிகளுக்கு இது இன்னும் பலமாக அடியாக விழுகிறது. இந்த உலகில் கர்மா போன்ற ஒன்று இருக்கிறது எனில், நீங்கள் இல்லையென்றாலும் உங்கள் எதிர்கால தலைமுறையினர் அதற்கு பலியாக வேண்டி இருக்கும். அவர்களில் பலருக்கு கடந்த காலங்களில் மலேரியா வந்திருக்கலாம். மற்றும் HCQ உடன் பரிந்துரைக்கப்பட்டிருக்கலாம், இது COVID-19 ஐ எதிர்க்க தேவையான நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்க உதவும்.

அவர்களிடையே ஏற்படக்கூடிய பல துன்பங்களுக்கு இந்த மருந்துடன் சிகிச்சை தேவைப்படும். தெரியாமல், அவர்கள் இந்த "முஸ்லீம்" நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பல பொதுவான மருந்துகளை எடுத்துக்கொண்டிருக்கலாம், மேலும் அவர்களின் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கும் நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கும்... இந்த ஹமீதுகளுக்கு நன்றிக்கடன் பட்டிருக்க வேண்டும்.

இந்த அழகிய நீதியை உண்மையைப் பற்றி கவலைப்படாமல் தெரிவிக்க விரும்புகிறேன் : சிப்லாவைப் போல... ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் சுகாதார சேவையை வழங்குவதற்கு இந்தியாவில் வேறு எந்த நிறுவனமும் இல்லை; ஏன், நிச்சயமாக இந்த உலகிலேயே இல்லை..! மேலும் அதன் ஆராய்ச்சி குறித்து அது கஞ்சத்தனமாகவும் இருக்கவில்லை, எவ்வளவோ செலவு செய்கிறது. அதுமட்டுமின்றி, பெரும்பாலும் மருந்து பொருட்கள் மற்றும் உற்பத்தி செயல்முறைகளைக்கூட மற்ற இந்திய மருந்து நிறுவனங்களுக்கு சிப்லா வழங்குகிறது. அதன் மூலம் மருந்து உற்பத்தியில் நம் நாட்டை சொந்தக்காலில் நிற்க வைக்கிறது.

1947ல் இந்தியா பிரிக்கப்பட்டபோது, பம்பாய்வாசியும், க்வாஜா அப்துல் ஹமீத் வாழ்ந்த அதே சமூக வட்டங்களில் வாழ்ந்தவருமான முஹம்மது அலி ஜின்னா, குவாஜாவுக்கு பாகிஸ்தானுக்கு கவுரமகா குடியேற அழைப்பு வழங்கினார். ஆனால், காந்திஜியுடன்தான் தங்கள் அனுதாபங்கள் இருக்கின்றன என்றுரைத்த குவாஜா அப்துல் ஹமீத், இதுவே தன் தாய்நாடு என்பதில் உறுதியாக இருந்து, இந்தியாவிலேயே தங்கத் தீர்மானித்தார்.

இப்படியும் இந்நாட்டில் முஸ்லிம்கள் உள்ளனர். பின்னர் இந்த குறிப்பிட்ட நிஜாமுதீன் சந்திப்பின் தப்லிகி ஜமாஅத்திகள் போன்ற முஸ்லிம்களும் இந்நாட்டில் உள்ளனர். (தொற்றுநோயைத் தொடர்ந்து நாடு முழுவதும் தங்கள் சொந்த சந்திப்புகளை ரத்து செய்த மற்ற தப்லீக் ஜமாதினர்கள் அல்ல; தப்லிகி ஜமாஅத்துக்கு கூட மும்பையில் இதேபோன்ற ஒரு சபையை நடத்த அனுமதி மறுக்கப்பட்டது) அதேபோல, இந்துக்கள் மற்றும் இந்துக்கள் உள்ளனர். ஒரு வகை இந்துக்கள் தங்களின் மதவெறிக்கு உடன்படாததால் மற்ற வகை இந்துக்களை கொலையும் செய்கிறார்கள்.

ஒரு சில மதவெறி பைத்தியங்களின் செயல்களுக்காக அனைத்து இந்துக்களையும் குறிவைப்பது சரியானதல்ல. அதேபோல், ஒரு சில தப்லீக் ஜமாஅத்திகள் ஒரு முழு சமூகத்தையும் உருவாக்குவதில்லை.

ஒரு சிலரின் செயல்களுக்காக நாம் அனைவரையும் அரக்கர்களாக்குவதை நிறுத்த வேண்டும்..!

நன்றிகள் 
தமிழில்  .முஹம்மது  ஆசிக்  

இங்கிலீஷில் எழுதிய கட்டுரையாளர் #சுஜாதா_ஆனந்தன்
வெளியிட்ட இணையதளம் :  நேஷனல் ஹெரால்ட்.

Thursday, 16 April 2020

அரசியல் சட்டமும் அம்பேத்கரும்!

சுதந்திர இந்தியாவுக்கு புதிய அரசியல் சட்டத்தை உருவாக்க வேண்டியிருந்தது. அம்பேத்கரை இந்தியாவின் சட்ட அமைச்சராக நேரு நியமித்தார். காந்தியும் இதற்கு சம்மதித்தார்.அம்பேத்கர் இதற்கு ஒப்புதல் அளித்து, பதவி ஏற்றுக் கொண்டார். நாடு முழுவதும் இருந்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்தன. முன்பு அவரை இகழ்ந்தவர்களும் இப்போது புகழ்ந்தார்கள். அமைச்சர் என்ற பொறுப்பு அவரை ஒரே நாளில் உயர்ந்த மனிதராக மாற்றியது.

இரவு பகல் பாராமல் இந்தியாவின் அரசியல் சட்டத்தை உருவாக்கும் வேலையில் தன்னை ஒப்படைத்துக் கொண்டார்.தனது பிறப்பு காரணமாக எத்தனையோ இன்னல்களையும் அவமானங்களையும் சந்தித்தவர் அம்பேத்கர். தனது மக்களுக்கு தகுந்த சட்டப் பாதுகாப்பை ஏற்படுத்துவதில் கவனமாக இருந்தார்.

தீண்டாமை ஒழிக்கும் 17 ஆவது பிரிவு,கொத்தடிமையாக நடத்தப்படுவதைத் தடுக்கும் 23 ஆவது பிரிவு, மத்திய அரசு, மாநில அரசுகளில் பல்வேறு பதவிகளுக்கும் தேர்வு செய்வதில் ஒதுக்கீடு வழங்கும் 235 ஆவது பிரிவு, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு அவர்களுடைய மக்கள் தொகைக்கு ஏற்ப மக்கள் சபையில் பிரதிநிதித்துவம் வழங்க இட ஒதுக்கீடு செய்யும் 330 ஆவது பிரிவு, இதேபோல் மாநில சட்டமன்றங்களிலும் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் 332 ஆவது பிரிவு. தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் பொருளாதார நலன்களை மேம்படுத்தவும், அவர்களை சமூக அநீதி மற்றும் எல்லா வகையான சுரண்டல்களில் இருந்தும் பாதுகாக்க அறிவுறுத்தும் 46 ஆவது பிரிவு.இப்படி பல பிரிவுகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க உத்தரவாதம் ஏற்படுத்தினார் அம்பேத்கர். ஆனாலும் அவர் சொன்ன வார்த்தைகள் மறக்க முடியாதவை...

“உரிமைகள் என்பவை சட்டத்தினால் காப்பாற்றப்படுவதில்லை. சமூகத்தின் சமூக உணர்வு மற்றும் நெறி உணர்வு ஆகியவற்றால்தான் பாதுகாக்கப்படுகின்றன”
 
புதிய அரசியல் சட்டத்தை உருவாக்கி அரசியல் நிரணய சபையிடம் ஒப்படைத்தார் அம்பேத்கர்.இந்தப் பணியில் ஒய்வு இல்லாமல் உழைத்ததால் அவர் சுகவீனமடைந்தார். எனவே, சிகிச்சை பெறுவதற்காகவும், ஓய்வு எடுப்பதற்காகவும் பம்பாய் வந்தார் அம்பேத்கர்.

வயதாகிவரும் நிலையில் தன்னைக் கவனித்துக் கொள்ள வாழ்க்கைத் துணை வேண்டும் என்று அம்பேத்கர் கருதினார்.

அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவ மனையில் பணியாற்றிய டாக்டர் சாரதா கபீர் என்பவர் அம்பேத்கரை நன்றாக கவனித்து வந்தார். மிகுந்த பரிவுடன் இருந்தார். அவரையே திருமணம செய்துகொள்ள அம்பேத்கர் முடிவு செய்தார். சாரதாவும் அவரை மணக்க சம்மதித்தார்.

பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த சாரதாவுக்கும் அம்பேத்கருக்கும் டில்லியில் உள்ள அவருடைய வீட்டில் பதிவு திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்திற்கு சில நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனர்.

ஆறு மாதங்கள் மக்கள் கருத்தறிந்த பிறகு நகல் அரசியல் சட்டத்தை அரசியல் நிர்ணய சபை விவாதத்திற்கு எடுத்துக் கொண்டது.
 315 சரத்துக்களையும், 8 படிமங்களையும் கொண்ட புதிய அரசியல் சட்டத்தை 1948 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதி தாக்கல் செய்து அம்பேத்கர் பேசினார். இதற்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டார்.

அப்போது பலத்த கரவொலி எழுந்தது. அம்பேத்கரை எல்லோரும் பாராட்டினார்கள். அப்போது, இந்த நகலைத் தயாரிக்கும்போது மேலாதிக்க சாதியினரின் தலையீடுகள் அதிகமாக இருந்ததை அவர் வெளிப்படுத்தினார்.

நவம்பர் 26 ஆம் தேதி இந்திய மக்களின் பெயரால் இந்த அரசியல் சட்டம் ஏற்கப்பட்டது. இதையடுத்து இன்னொரு முக்கியமான பிரச்சினையில் அம்பேத்கர் தனது கவனத்தைத் திருப்பினார். அதுதான் இந்துப் பெண்களுக்கு சொத்துரிமை, விவாகரத்து உரிமை வழங்க வகை செய்யும் மசோதா.

இது 1941 ஆம் ஆண்டு முடிவெடுக்கப்பட்டு, 1946 ஆம் ஆண்டு வாக்கில் தயாரிக்கப்பட்ட மசோதா. ஆனால், அதை நிறைவேற்ற விடாமல் ஆதிக்கச் சக்திகள் தடுத்து நிறுத்தியிருந்தன. அதை அம்பேத்கர் தன் கையில் எடுத்தார். அதற்கு உயிர்கொடுக்க விரும்பினார். ஆனால், அதை முதல் பொதுத் தேர்தல் முடிந்த பிறகுதான் எடுக்க வேண்டும் என்று சிலர் வற்புறுத்தினார்கள்.

பெண்களுக்கு உரிமைகள் கொடுப்பதை அப்போதும் சரி இப்போதும் சரி ஆதிக்க சக்திகள் கடுமையாக எதிர்த்தே வருகின்றன.
இன்றைய நிலையிலேயே மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைகள்  இப்படியென்றால், அன்றைய நிலையைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

நேரு ஒப்புதல் அளித்ததால் அந்த மசோதாவை மிகக் கவனமாக சீர்திருத்தினார். ஆனால், அதை அறிமுகப்படுத்துவதற்கு வல்லபாய் படேல் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார். பெண்களுக்கு உரிமைகள் கொடுத்தால் இந்துச் சமூகம் உடைந்து சிதறி விடும் என்று அவர் கூறினார். இருந்தாலும் 1951 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி இந்துச் சட்டம் குறித்த மசோதாவை அம்பேத்கர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது நாடாளுமன்றத்தில் இடம் பெற்றிருந்த பெண்கள் இந்தச் சட்டத்தை பாராட்டினார்கள். பெண்களுக்கு பிடித்திருந்தாலே ஆண்களுக்கு பிடிக்காமல் தானே போகும்.


கடைசிவரை அந்த மசோதாவை நிறைவேற்ற விடாமல் தடுத்து விட்டனர். அம்பேத்கர் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை.

“அழுவாரின்றி அழுங்குரல் ஓசையின்றி கொன்று புதைக்கப்பட்டு விட்டது” என்று கூறினார் அம்பேத்கர்.
 
இந்த ஏமாற்றத்தைத் தொடர்ந்து இனியும் சட்ட அமைச்சராக நீடிப்பது பயனற்றது என்று அம்பேத்கர் நினைத்தார். தனது பதவி விலகல் கடிதத்தை நேருவுக்கு அனுப்பினார்.

அம்பேத்கரின் கடினமான உழைப்பை நேரு பாராட்டினார். ஆனால், அம்பேத்கரின் உழைப்பும் தனது விருப்பமும் நிறைவேறாமல் போனதில் அவருக்கு வருத்தம் இருந்தது.

1952 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலுக்கு ஏற்பாடுகள் நடைபெறத் தொடங்கின. அம்பேத்கரின் அமைப்பு சோஷலிஸ்ட் கட்சியுடன் மட்டும் உடன்பாடு செய்து கொண்டு காங்கிரஸை எதிர்த்து போட்டியிட்டது.

மத்திய பம்பாய் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து அம்பேத்கர் போட்டியிட்டார். ஆனால், காங்கிரஸ் வேட்பாளரிடம் குறைந்த அளவு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். மார்ச் மாதத்தின நடுவில் மாநிலங்களவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. பம்பாய் மாநில சட்டமன்றத்தில் இருந்து 17 பேர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியிருந்தது. இந்தத் தேர்தலில் அம்பேத்கரும் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
 

அவருக்கு பலர் கொடுத்த ஆதரவு காரணமாக வெற்றி பெற்று மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 

ஜூன் மாதம் அவருக்கு அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது. அதை நேரில் சென்று பெற்றுக் கொண்டார். மாநிலங்களவையில் நேரு தலைமையிலான அரசாங்கத்தின் பல கொள்கைகளை அம்பேத்கர் கடுமையாக சாடினார்.

மொழிவழி மாநிலங்களை உருவாக்குவதில் நேரு அரசாங்கம் ஊசலாட்ட போக்கை கடைப்பிடித்தது. அதை அம்பேத்கர் வன்மையாக கண்டித்தார். ஆந்திர மாநிலம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்காக பொட்டி ஸ்ரீராமுலு உயிர்த்தியாகம் செய்தார். அதன்பிறகு 1953 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் உருவாக்குவதற்காக மசோதா தாக்கலானது. அதன்மீது நடைபெற்ற விவாதத்தில் அம்பேத்கர் பேசினார்...“நீங்கள்தானே அரசியல் சட்டத்தை உருவாக்கினீர்கள் என்று எதற்கெடுத்தாலும் என்னை கேட்கிறார்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் நான் ஒரு சவாரிக் குதிரையாக இருந்தேன். நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறப்பட்டேனோ அதைத்தான் செய்தேன். எனக்கு விருப்பம் இல்லாததையும் நான் செய்ய வேண்டியிருந்தது.”

“உங்களுடைய களங்கங்களுக்கு எல்லாம் என்னை குற்றம் சாட்ட விரும்புகிறீர்கள். நான் அரசியல் சட்டத்தை எழுதியதாக கூறுகிறீர்கள். ஆனால், தவறாக பயன்படுத்தப்பட்டால் அந்த அரசியல் சட்டத்தை எரிக்கும் முதல் நபராக நான்தான் இருப்பேன்”

அம்பேத்கரின் ஆவேசமான உரை அரசியல் சட்டத் தயாரிப்பு தொடர்பான பல ரகசியங்களை வெளிப்படுத்தியது. உண்மையில் அவரை உயர்ஜாதியினர் தங்களுடைய கருவியாகவே பயன்படுத்தி இருந்தார்கள்.

அரசியல் சட்டத்தின் 356 ஆவது பிரிவை முதன் முறையாக நேரு அரசாங்கம் பயன்படுத்தியது. அந்த நடவடிக்கையை அம்பேத்கர் கடுமையாக கண்டித்தார்.

அதுபோலவே, சென்னை மாகாணத்தில் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படாத ராஜாஜியை முதல் அமைச்சராக தேர்ந்தெடுத்ததை எதிர்த்தார். பம்பாயில் தோல்வியடைந்த மொரார்ஜி தேசாயை முதல்வராக தேர்ந்தெடுத்ததையும் கண்டித்தார். இரண்டு நடவடிக்கைகளும் ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றார்.

Tuesday, 14 April 2020

தையா சித்திரையா

தையா சித்திரையாமுதன்மைக் கட்டுரை: திருவள்ளுவர் ஆண்டு

சித்திரை தமிழரின் மரபார்ந்த புத்தாண்டு அல்ல என்ற மாற்றுக்கருத்து தமிழ்நாட்டில் 1970, 80களில் தோன்றியது. இக்கருத்து வலுப்பெற முக்கிய காரணம், தை முதலாம் தேதியில் துவங்கியதும், தமிழரின் ஆண்டுத் தொடராக முன்வைக்கப்பட்டதுமான திருவள்ளுவர் ஆண்டு, 1981இல் மதுரை உலகத்தமிழ் மாநாட்டில், ஆவணங்களில் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதே ஆகும். உண்மையில் மறைமலையடிகள் போன்றோரால் வைகாசி அனுடம் என்று நியமிக்கப்பட்ட திருவள்ளுவர் திருநாள் தை இரண்டாம் தேதிக்கு மாற்றப்பட்டதே, திருவள்ளுவர் ஆண்டு தை ஒன்றில் ஆரம்பிக்கக் காரணமாக இருந்தது. இப்பின்னணியில், தை முதல்நாள்தான் புத்தாண்டு என்று, திமுக அரசால் 2008 தை மாதம் 23 ஆம் நாள் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 2011இல் இது அதிமுக அரசால் ரத்து செய்யப்பட்டு மீண்டும் சித்திரை முதல் நாள் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது.

தைப்புத்தாண்டின் ஆதரவாளர்கள், 1921 ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகளாரின் தலைமையில் கூடிய அறிஞர் குழு ஆய்வு செய்து தை முதல் நாளே தமிழாண்டு பிறப்பு என முடிவு செய்தது என்றும், சங்க இலக்கியங்களில் தை மாதமே புத்தாண்டு என்ற குறிப்பு உள்ளதென்றும், புத்தாண்டன்று பிறப்பதாகச் சொல்லப்படும் அறுபது ஆண்டு வட்டத்தில் எதுவும் தமிழ்ப்பெயர் இல்லையென்றும் கூறினர். இதற்கு எதிராக, தை தொடர்பான சங்க இலக்கிய வரிகள் எதுவும் தைமாத நீராட்டு விழாவொன்றைக் குறிப்பிடுகின்றனவே அன்றி, புத்தாண்டைப் பாடவில்லையென்றும்,1921இல் அத்தகைய ஒரு மாபெரும் மாநாடு இடம்பெற்றதற்கான எந்தவொரு ஆவணங்களோ, மாநாட்டு இதழோ, அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களோ எதுவுமே பொதுவெளியில் வைக்கப்படவில்லையென்றும்1921இல் மறைமலையடிகள் இலங்கையில் தைப்பொங்கல்தான் கொண்டாடினார் என்றும் எதிர்வாதக் கூற்றுகள் எழுந்தன.

வடமொழி அறுபது ஆண்டுகள்

முதன்மைக் கட்டுரை: தமிழ் ஆண்டுகள்

சோழர் காலத்தில் ஊராட்சி நிர்வாகத்தில் பங்குபற்றி ஆண்டுக்கு ஒருமுறை உறுப்பினர் மாறிய ஆட்டை வாரியம், வடமொழியில் "சம்வத்சர வாரியம்" என்று அறியப்பட்டது. சூரியக்கணிப்பீடான ஆண்டுக்கணக்கு, வியாழ இயக்கத்துடன் தொடர்பான சம்வத்சரக் கணிப்பீட்டுடன் இணைத்துக் குறிப்பிடும் சாளுக்கியக் கல்வெட்டுகள் அதே சோழர் காலத்திலேயே தமிழகத்துக்கு வடக்கே கிடைத்திருக்கின்றன. எனினும், தமிழகத்தில், 14ஆம் 15ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களிலேயே வடமொழி அறுபது சம்வத்சர ஆண்டுகள் குறிப்பிடப்பட ஆரம்பிக்கின்றன. இப்பெயர்கள் பெரும்பாலும் சமயம் சார்ந்தே பயன்படுகின்றன என்பதாலும், வடமொழிப் பெயர் தகாது என்றால் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின் தமிழ்ப்பட்டியலைப் பயன்படுத்தலாம் என்றும், ஆனால் இடையில் வந்த வடமொழிப்பெயருக்காக பாரம்பரியமான தமிழ்ச் சூரிய நாட்காட்டியின் பின்னணியில் அமைந்த தமிழ்ப்புத்தாண்டை முற்றாகப் புறக்கணிப்பது பொருத்தமல்ல என்றும் எதிர்வினை ஆற்றப்பட்டது.
இக்காரணங்களால் தைப்புத்தாண்டு தொடர்பான வாதங்கள் நீர்த்துப்போயின.

வரலாறு

தமிழரிடையே புத்தாண்டு என்ற பண்டிகை வழக்கில் இருந்ததற்கான பழைய சான்றுகளைப் பெற்றுக்கொள்ளமுடியவில்லை. கார்காலத்தின் ஆரம்பமான ஆவணியை ஆண்டுத்தொடக்கமாக தமிழர்கள் கொண்டிருக்கக் கூடும் என்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. உதாரணமாக எட்டாம் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்குப் பிந்திய நிகண்டுகளில், ஆவணியே முதல் மாதம் என்ற குறிப்பைக் காணமுடிகின்றது. பொ.பி பதினான்காம் நூற்றாண்டில் தொல்காப்பியத்துக்கு உரைவகுக்கும் நச்சினார்க்கினியரும் ஆவணியே முதல் மாதம் என்கின்றார்.[1] ஆவணி முதல் மாதம் என்பது கணிப்பில் பயன்பட்டாலும், அதன் போது புத்தாண்டு என்று பண்டிகை கொண்டாடப்பட்டதா என்பது தொடர்பாக போதிய சான்றுகள் கிடைக்கவில்லை.

தமிழ் நாட்காட்டி இராசிச் சக்கரத்தை காலக்கணிப்பில் பயன்படுத்தும் ஒரு சூரிய நாட்காட்டி என்பதால், பன்னிரு இராசிகளில் முதல் இராசியான மேழத்தில் சூரியன் நுழையும் சித்திரையே முதல் மாதமாகக் கருதப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது.[2] சங்க இலக்கியமான நெடுநல்வாடையில் மேழமே முதல் இராசி என்ற குறிப்பு[3] காணப்படுவதால், அதை மேலதிக சான்றாகக் கொள்வர். எனினும், பத்தாம் நூற்றாண்டுக்குப் பிந்திய அகத்தியர் பன்னீராயிரம், பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த புட்பவிதி[4] முதலான நூல்களே தெளிவாக சித்திரை முதல் மாதம் என்று சொல்கின்றன. பங்குனியின் இறுதிநாட்களில் அல்லது சித்திரை முதல் நாளில் தான் வழக்கமாக வேங்கை மரம் பூக்கும். மலைபடுகடாம் "தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை" என்றும், பழமொழி நானூறு "கணிவேங்கை நன்னாளே நாடி மலர்தலால்" என்றும் பாடுவதால் இளவேனில் துவக்கமான சித்திரையே அக்காலத்தில் தலைநாளாக மிளிர்ந்தது என்றும் சொல்கிறார்கள்.[5]

இலங்கையில் தமிழரும் சிங்களவரும் சித்திரை ஒன்றையே புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள்.பொ.பி 1310இல் இலங்கையை ஆண்ட தம்பதெனியா மன்னன் மூன்றாம் பராக்கிரமபாகுவின் அரசகுருவான தேனுவரைப்பெருமாள் எழுதிய "சரசோதி மாலை" எனும் நூலில் வருடப்பிறப்பின் போது செய்யவேண்டிய சடங்குகள் விவரிக்கப்பட்டுள்ளன.[6] மேலும், இலங்கையின் திருக்கோணேச்சரம், 1622ஆமாண்டு சித்திரை மாதம், தமிழர் புத்தாண்டு அன்று கொள்ளையிடப்பட்டதாக போர்த்துக்கீசர் குறிப்புகள் சொல்வதையும் நாம் ஊன்றி நோக்கலாம்.
--