Monday, 4 May 2020

பிரபாகரன்யமும்" - பிரசாந் கிசோர் கூலிப்படையும்...

2012 வருடம். நான் பிரான்சின் கிரினோபில் நகரில் இருந்து பாரீஸ் நகரை சுற்றி பார்க்க மனைவி மற்றும் நண்பர்களோடு சென்றிருந்த நேரம். ”கார் தி நார்ட்” மெட்ரோ ரயில் நிலையத்தில் நண்பனின் வருகைக்காக கத்திருந்த நேரம். இரண்டு அல்ஜீரிய இளைஞர்கள் எங்களை நெருங்கி, பிரபாகரா, எல்.டி.டி.யி, சிரி லங்கா என்று கத்திகொண்டு சென்றார்கள். அப்போது எனது பக்கத்தில் இருந்த நண்பர் ராமகிருஸ்ணன் என்பவர் எனை பார்த்தார். 2008 ஆஸ்திரேலியா தொடங்கி, 2014 இறுதியில் சிலி வரையில், ஆய்வின் நிமித்தமாக உலகின் பல நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பை பெற்றவன் என்ற முறையில், நான் பார்த்த்த, உலகின் எல்லா நாடுகளிலும் ஓர்மொழி பேசும் தமிழர்களின் தலைவராக நீக்கமற நிறைந்து காணப்படும் ஒரே தமிழரின தலைவர். மேதகு. வே. பிரபாகரன் அவர்கள் மட்டுமே.



இன்னும் உலகின் பல நாடுகளில் தமிழர்கள் என்றால் அவர்கள் இலங்கையில் இருந்து வந்தவர்கள் என்றே நினைக்கும் அயல் நாட்டினரும் உண்டு. அப்படிப்பட்ட தலைவரை கொண்டிருக்கும் ஒரு இனத்தின் மீது எவருக்கு பொறாமை வராமல் இருக்கும் ?. எதிரிகள் கூட குறைசொல்ல முடியாத மனித சமுதாயத்தின் மாபெரும் தலைவரை எப்படி நயவஞ்சகர்களால் கொண்டாடிட முடியும்?. அதுவும் ஆண்டாண்டு காலமாய் தமிழர்களின் தலையில் மிளகாய் அரைத்து காலம் தள்ளுகின்ற தென்னாட்டு பிராமண திராவிடர்களுக்கும், ஆரியர்களுக்கும் எப்படி இந்த வரல்லாற்றுத் தலைவனை ஏற்றுக்கொள்ள முடியும் ?

தலைவர் பிறந்தநாளை கொண்டாடுகின்ற நவம்பர் மாதம் என்றாலும் சரி, மாவீர்ர்களை நினைவுகூறும் நவம்பர் மற்றும் தமிழின படுகொலையை நினைவுகூறும் மே மாதம் என்றாலும் சரி இந்த திராவிட அறிவாளிகள் வரிசையாக நின்று தலைவர் பிரபாகரனை வசைப்பாட தொடங்கிவிடுவார்கள். ஏனெனில் அவர்கள் பெரியாருக்கு பிறகு கருணாநிதியை இந்த இனத்தின் தலைவராக கட்டமைத்தால் மட்டுமே வண்டி ஓட்ட முடியும் என உறுதியாக நம்புகிறார்கள்.

தமிழர்களின் வாழ்வியலில், பிம்ப அரசியல், தனிநபர் கொண்டாட்டங்கள் இருத்து வந்துள்ளன என்றாலும் அன்று பாடியவனும், பாடப்பட்டவனும் சத்தியம் பேசியவர்கள். தமிழர் வாழ்வியலில் ”படாண்திணை” என்ற ஒரு வாழ்வியல் ஒழுக்கமே இருக்கிறது. அப்படி கவிகளினால் பாடபெறாவிடாலும், காலத்தினால் பாடப்பெற்ற ஆண்மகன் தான் எங்கள் புறநானூற்று பெருமாவீரன் பிரபாகரன்.



தமிழ்த்தேசிய தலைவர் மேதகு, வே. பிரபாகரன் அவர்களின் பெயரும் அவரின் புனித்தன்மையும் இந்த மண்ணில் நிலைபெறக் கூடாது என்பதும், 2009 இக்கு பிறகான திராவிடர்களின் வேலைத்திட்டத்தில் முக்கியமானது தமிழ்த் தேசியத்தலைவரை தூற்றுதல்.

டாச் அசோக் தொடங்கி, மனுசயபுத்திரன் தொடங்கி, ஆழி செந்தில்நாதன் இன்னும் திமுக எம்.பி செந்தில்குமார் வரை நீள்கிறது இந்த பிரபாகரனை அவதூறு செய்யும்பணி. இன்னும் தமிழின திராவிட தலைவர் வீரமணி, லுலூ சங்க பஞ்சாயத்து தலைவர் கொ. மணி, பூனை மீசைக்காரர் சுப.வீ போன்றோர்கள் செஞ்சோற்று கடன் தீர்க்க வாய்திறக்கவில்லை. லுலுசங்க தலைவர் பிரபாகரன் என்ற பெயரை நாயிக்கு வைப்பதில் தவறில்லை என்றும், வைகோவின் அகில உலக அறக்கட்டளை நிறுவனர் மே-17 இயக்க திருமுருகன் காந்தி அவர்கள், பிரபாகரனை விமர்சிப்பது திராவிட கூடாரத்தின் இருக்கும் ஆரிய சித்தனை என திருவாய் மலர்ந்திருக்கிறார். இன்று ஒட்டுமொத்த திமுகவும் பிரசாந்த் கிஷோர் என்ற ஆரிய சிந்தனையை நம்பியே இருப்பது இந்த திருமுருகன் காந்திக்கு தெரியாது இருப்பது வியப்பு.

இவர்களுக்கு எல்லாம் என்னதான் பிரச்சனை ?
என உற்று நோக்கினால், பிரபாகரன் எனும் பெருமாவீரனும், அவரின் பெயரின் பின்னே உருவாகும் தமிழ்த்தேசிய விடுதலை சிந்தனை எழுச்சியுமே ஆகும். அப்படி எனில் திராவிடர்கள் பிரபாகரனை கொண்டாடி அரசியல் இலாபம் பெறலாமே என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது “பொருந்தா காமம்” மாக கலைஞர் கருணாநிதி காலத்திலேயே போய்விட்டது திமுகவினருக்கு.

திராவிடர்கள் ஏன் பிரபாகரனியத்தை சிதைக்க வேண்டும் ?

இறந்துபோன தத்துவமான திராவிட்தின் வாழ்க்கை பிரபாகரனியம் பிறக்கும் இட்த்தில் முடிந்துவிடும். அது எப்படி ? என நீங்கள் கேட்கலாம். நீண்ட நெடிய வரலாற்றை கொண்ட இந்த தமிழினத்திற்கு வரலாறு எப்படி சுதந்திரதிற்கு பிறகானது போல எழுதப்பட்டதோ, எத்தனையோ விடுதலை போராட்ட தியாகிகள் இருந்த இந்த மண்ணில் கொள்ளைக்காரன் கட்டப்பொம்மன் பெயர் மட்டும் எப்படி பெரிது படுத்தப்பட்ட்தோ, சாதி ஒழிப்பு, சமூகநீதி, பெண்விடுதலை, ஆரிய வர்ணாசிரம எதிர்ப்பு என எல்லா தளங்களிலும் போராடிய வைகுண்டரும், வள்ளலாரும் வாங்காத பெயரை, அகில இந்திய காங்கிரசின் கமிட்டி தலைவராக இருந்த ஈரோட்டு பெரியார் எப்படி பெற்றுக்கொண்டாரோ அதேபோல ஒரு நுண்ணரசியல்தான் இந்த செயலும்.

ஆரியர்களுக்கும், திராவிடர்களுக்கும் பெரிய வித்தியாசம் எதுவுமில்லை. ஆரியர்கள் தமிழர்களின் அடையாளங்களை தனதாக்கி கொள்வார்கள், திராவிடர்கள் அந்த அடையாளங்களை சிதைத்து விடுவார்கள்.

ஆட்சி அதிகாரத்தை பிடிக்க திமுகவினர் காட்டும் கொறளிவித்தை கொஞ்சம்-நஞ்சம் இல்லை. ஆனால் கொறளி வித்தையை கண்டு அனுதாப படவோ, அல்லது அதை உண்மையென்று நம்பவோ இங்கே யாரும் இல்லை.

திமுகவினரை பொருத்தவரை பிரசாத் கிசோர் கொடுக்கப்பட்ட செயல்திட்டங்களில் மிக முக்கியமான இரண்டு திட்டங்களில் திமுகவினர் பொருந்தாமல் துடிப்பது கண்கூடாக தெரிகிறது. ஒன்று கிராம கோவில்கள் மற்றும் பூசாரிகளை வளைப்பது, மற்றொன்று, தமிழ்த்தேசிய அரசியலின் அடையாள பிம்பங்களை சிதைப்பது.

இரண்டாவதாக கொடுக்கப்பட்டிருக்கும் வேலைத்திட்டம் நெடுநாட்களாக திரைமறைவில் திராவிட கட்சிகள் செய்துவருகின்ற வேலைத்திட்டம் என்றாலும் கூட திரைமறைவில் செய்துவந்த வேலையை இப்போது வெளிப்படையாக செய்ய வேண்டிய கையறுநிலை அவர்களுக்கு இருப்பதுவே காலக்கொடுமை.

உண்மையில் சொல்லபோனால் பிரபாகரன் என்ற ஒரு சொல் ஒரு தனிமனிதனின் சொல் என்பதை தாண்டி, ஒரு இனத்தின் பெருமை மிகு குறியீடாக இந்த மண்ணில் 2009 இக்கும் பிறகான தமிழர் நிலத்தில் நிலைகொண்டு நிற்கிறது. இந்த மாபெரும் செயலை செய்துகாட்டியவர் அண்ணன் செந்தமிழன் சீமான். ஒருவேளை இந்த மண்ணின் அரசியல் குறியீடாக தலைவர் பிரபாகரன் மாறிப்போகாமல் இருந்திருந்தால், தலைவரின் மீது வெளிப்படையாக விமர்சனம் செய்கின்ற தேவை திமுகவினருக்கு இல்லாதிருந்திருக்கலாம். ஆனால் தேசியத்தலைவரை கட்சியின் தலைவராக ஏற்றுகொண்டு நகருகின்ற நாம்தமிழர் கட்சியை திமுகவினர் களத்தில் எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.

பிரசாந் கிசோரை பொருத்தவரை நாம் தமிழர் கட்சியை களத்தில் வீழ்த்த எந்தவித தத்துவார்த்த செயல்திட்டமும் தன்னிடம் இல்லை என்பதை வெளிப்படையாக ஏற்றுகொண்ட நிலையில், அவர் இரண்டுவிதமான முடிவுக்கு வருகிறார். 

நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மீது அவதூறு பரப்புவது. அப்படித்தான் திமுக மற்றும் ரஜினி கூட்டியக்கங்கள் விஜயலெச்சுமியை கையில் எடுத்து தோற்று நின்றது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மீது தொடுத்த அவதூறுகள் தோற்ற நிலையில், கட்சியில் இலட்சினையாக இருக்கும் தலைவரை பொதுவெளியில் அவமதிப்பது என தொடர்கிறது. தலைவர் பிரபாகரனை திமுகவினர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டர்கள் என்றாலும், இதுநாள்வரை வெளிப்படையாக விமர்சிக்காமல் இருந்தார்கள், ஆனால் இன்று இந்த நிலைகளை அடைய திமுகவின் தேர்தல் வெற்றிக்கான யுக்திகள் என்றே நினைக்கலாம்.

உண்மையில் திமுகவிற்காக பிரசாந் கிசோர் பிடிக்கின்ற எல்லா பிள்ளையாரும் மூஞ்சூராக போகிறது. அப்படித்தான் இதுவும். ஈழமும், அங்கே நடந்த படுகொலையும் திமுக கடந்து போகவேண்டிய அவசியம் இருக்கு. ஏனெனில் அந்த படுகொலையில் திமுகவிற்கு 100 % விகிதம் பங்கு இருக்கு. 

ஆனால் தமிழ்த்தேசிய இனத்திற்கு மிக முக்கிய கடமைகளில் ஒன்று அரசியல் அதிகாரத்தை அடைவது, அதைவிட மிகமுக்கியமான ஒன்று என்னவெனில் திமுக இனி அதிகாரத்திற்கு வரவே கூடாது என்பது. நாம்தமிழரின் அரசியல் கள வெற்றி என்பது இதுதான். திமுக என்பது இனி எழக்கூடாது. அதுதான் அந்த மண்ணில் இறுதிப்போரில் கொல்லப்பட்ட எமது உறவுகளுக்கு நாம் செலுத்துகின்ற நன்றிக்கடன்.

இந்த தளத்தில் இவர்களின் பேச்சு, தமிழ்த்தேசிய தலைவரை இந்த மண்ணில் அவமதித்துவிடும் என்றால் அது நடக்க கூடிய செயலா ?.

உண்மையில் திமுக தனது இறுதிச்சடங்கிலாவது ஒரளவு மரியாதையோடு இந்த மண்ணில் புதைக்கப்பட வேண்டும் என அதன் தலைவர் ஸ்டாலின் நினைத்தால், தலைவர் பிரபாகரனை விமர்சிக்க வேண்டாம் என தனது கட்சியினருக்கு கட்டளையிடுங்கள். இல்லையெனில், திமுகவை புதைக்க இந்த மண்ணில் சவப்பெட்டிக்கூட கிடைக்காது.

பிரபாகரன் என்ற பெருமாவீரன் பெயரை உரக்க சொல்லுவோம்...!

இந்த உலகிற்கு, அந்த பெயர் சுமக்கும் விடுதலையே, விடிவுகாலமாய் அமையும் நாளை தமிழர்களுக்கு…!

No comments:

Post a Comment