கரும்புலிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு சிறப்புத் தாக்குதல் படையணியாகும். இது தமது இலக்கை நிறைவு செய்ய தற்கொலைத் தாக்குதலில் ஈடுபடத் துணியும் படையணியாகும். இவர்கள், உலகில் பயங்கரமானதும் கட்டுப்பாடு மிக்கதுமான தற்கொலை படையணியாக விளங்கினார்கள்.
1987 ஜூலை 5 முதல் 2007 ஜூன் 27 வரை 322 கரும்புலிகள் கடலிலும் தரையிலும் நடைபெற்ற சமர்களிலும் வேறு தாக்குதல்களிலும் மரணமடைந்துள்ளனர். இவர்களில் 81 பேர் தரைக்கரும்புலிகளும் 241 பேர் கடற்கரும்புலிகளும் ஆவர். பெரும்பாலானோர் இலங்கையில் எல்லைக்குள் மரணமடைந்தனர். இலங்கை குடியரசுத் தலைவர் ரணசிங்க பிரேமதாசா கரும்புலிகளின் தாக்குதலில் இறந்தவரெனக் கருதப்படுகின்றது.

கரும்புலிகளின்_படைப்பிரிவுகள்
தரைக் கரும்புலிகள்
மறைமுகக் கரும்புலிகள்
கடற் கரும்புலிகள்
வான் கரும்புலிகள்
தரைக் கரும்புலிகள்
மில்லர்
முதல் தரைக் கரும்புலித் தாக்குதலை 1987] ஜூலை மாதம், 5ம் தேதி இலங்கை இராணுவத்திற்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொலைப் போராளியான கரும்புலி கப்டன் மில்லர் தற்கொலைத் தாக்குதலாக நடத்தினார்.
கேப்டன் மில்லரினால் வடமராட்சி நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இராணுவமுகாமின் மீதே நடாத்தப்பட்டது. இத் தாக்குலைத் தொடர்ந்து ஆப்ரேசன் லிபரேசன் எனும் இலங்கை இராணுவ நடவடிக்கை முடக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு சிறப்புத் தாக்குதல் படையணியைச் சேர்ந்தவர்கள். போராட்டத்தின் முக்கியமான காலகட்டங்களில் தடைநீக்கிகளாகச் செயற்பட்டு மடிந்தவர்கள். தம் சுயத்தையே அழிக்கும் மனத்திடமும் விருப்பமும் கொண்டவர்கள். தற்கொடைத்தாக்குதலை நடத்துபவர்கள் கரும்புலிகள் என்ற பெயரால் அழைக்கப்படுவர். வீரச்சாவடையும் கரும்புலிகளுக்கு இராணுவநிலையோடு அவர்களின் சாவு அறிவிக்கப்படும்.
வித்துடல் இருந்தால் அதற்குரிய மரியாதையோடு விதைக்கப்படும். உடல் இல்லையென்றால் நினைவுக்கல் நாட்டப்படும். நினைவுநாட்களில் அவர்களின் பெயர், அடையாளங்கள் என்பன வெளிப்படுத்தப்பட்டு உரிய மரியாதையும், கெளரவமும் வழங்கப்பட்டு கல்லறையிலோ, நினைவுக்கல்லிலோ நினைவுகூரப்படுவர். ஆனால் இவையெதுவும் கிடைக்காமலும் பலர் போராட்டத்துக்காக உயிரை அர்ப்பணிக்கின்றனர். தற்கொலை தாக்குதலைச் செய்கின்றனர்.
இவர்களின் பெயர்களோ தகவல்களோ வெளிவிடப்பட மாட்டாது. எப்போதாவது எதிரி தன் விசாரணையில் சம்பந்தப்பட்டவரின் அடையாளங்களை உறுதிப்படுத்தினாலொழிய இவர்கள் பற்றிய தரவுகள் வெளியில் வராது. கல்லறைகளோ, நினைவுக்கற்களோ இவர்களுக்காக இருக்காது. மாவீரர் பட்டியலில் இவர்களின் பெயர்கள் இடம்பெறமாட்டாது. சம்பந்தப்பட்ட சிலருடன் மட்டும் உறங்கிப்போகும் உண்மைகள் இவர்கள். இவர்களே 'மறைமுகக் கரும்புலிகள்'.

முதல் கடற்கரும்புலித் தாக்குதலை 10.07.1990 அன்று இலங்கை இராணுவத்திற்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் கடற்கரும்புலிகளான மேஜர் காந்தரூபன், கப்டன் வினோத், கப்டன் கொலின்ஸ் ஆகியோர் தற்கொலைத் தாக்குதலாக நடத்தினர். இத் தாக்குதலானது யாழ் மாவட்டம் வல்வெட்டித்துறை கடற்பரப்பில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த சிறீலங்கா கடற்படையினரின் P 715 “எடித்தாரா” கட்டளைக் கப்பல் மீது நடாத்தப்பட்டது. இத்தாக்குதலில் அக்கப்பல் மூழ்கடிக்கப்படது
வான் கரும்புலிகள்
முதல் வான் கரும்புலித் தாக்குதலை 20.02.2009 அன்று சிறிலங்காவின் வான்படைத் தலைமையகம் மற்றும் கட்டுநாயக்கா வானூர்த்தித் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் வான் கரும்புலிகளான கேணல். ரூபன் , லெப்.கேணல். சிரித்தரன் ஆகியோர் தற்கொலைத் தாக்குதலாக நடத்தினர். இலக்கை அழிக்கும் நோக்கோடு சென்ற இந்த தற்கொலை வான்கரும்புலிகள் இலக்கை நெருங்குவதற்கு முன்னரே சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
முதல் வான் கரும்புலிகள்
விமானங்களில் ஒன்று கொழும்பு துறைமுகத்தின் மீது வட்டமிட்டு காலே ஃபேஸ் க்ரீனைக் கைப்பற்றியபோது, அது விமான எதிர்ப்பு துப்பாக்கியால் தாக்கப்பட்டது. இரவு 9:51 மணியளவில் இது சிற்றம்பலம் கார்டினர் மவத்தாவில் அமைந்துள்ள 15 மாடி உள்நாட்டு வருவாய் துறை (ஐஆர்டி) கட்டிடத்தின் 12 வது மாடியில் மோதியது. இதன் தாக்கம் விமானத்தில் வெடிபொருட்களைத் தூண்டியது, கட்டிடத்தின் ஒரு பகுதியை தீ ஆக்கிரமித்தது. இந்த விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர், மேலும் ஒரு இராணுவ அறிக்கை "புலிகளின் விமானியின் உடலின் பாகங்கள்" கட்டிடத்திற்குள் காணப்பட்டதாகக் கூறியது. விமானத்தின் பொறி கட்டிடத்தின் 12 வது மாடியில் காணப்பட்டது.
மற்றைய விமானமானது கடுமையான கனரக விமான எதிர்ப்பு துப்பாக்கிச் சூட்ட்டால் இலக்கினை நெருங்க இயலாத காரணத்தால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ள விமானப்படை தளத்தை நோக்கிச் சென்றது. இருப்பினும், இரவு 9:59 மணிக்கு விமானம் அடித்தளத்தை அடைவதற்குள் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த தாக்குதலில் 6 பொதுமக்கள் காயமடைந்தனர். விமானத்தின் இடிபாடுகள், விமானியின் உடலுடன் சேர்ந்து இராணுவத்தால் கண்டுபிடிக்கப்பட்டது. விமானியிடம் இரண்டு சயனைடு குப்பிகள் மற்றும் ஒரு சக்திவாய்ந்த வெடியுடை இருந்தது...
புலிகள் தியாகமும் வீரமும் இனத்தின் விடுதலைக்காய் உயிரை துச்சமென எண்ணிய அவர்களின் விடுதலை வேட்கையும் எழுத வார்த்தைகள் போதாது....இந்த நந்திகடல் மாதத்தில் இனத்தின் விடுதலைக்காய் உதிரம் சிந்திய மாவீரர்களின் தியாகத்தை போற்றுவோம்..
No comments:
Post a Comment