இலங்கைத் தமிழ் மண்ணில் பிறந்த எவரும் , இனிமேலாவது , இராவணன் என்ற ஒரு தமிழ் மன்னன் , வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை என்று கூறக்ககூடாது.
Tuesday, 25 August 2020
#கன்னியா_மலையில்_காணப்படும் #இராவணனின்_தாயின்_சமாதி அது தொடர்பான ஆய்வுகளும், ஆதாரங்களும்
Monday, 10 August 2020
தொடரும் கைதுகளும் ஊடக சுதந்திர மறுப்பும்
இலங்கையில் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் பல ஆயிரம் போராளிகள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பலர் புனர்வாழ்வளிக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டு அவரவர் குடும்பங்களுடன் சேர்ந்து வாழ அனுமதிக்கப்பட்டனர்.
விடுதலைப்புலிகளை முற்றாக அழித்து விட்டோம் இலங்கையில் எந்த பயங்கரவாதிகளும் இல்லை இலங்கையில் வாழுகின்ற அனைத்து இன மக்களும் சுதந்திரமாக நிம்மதியாக வாழலாம் என்று சர்வதேச சமூகத்திற்கு கொக்கரித்த ராஜபக்ச அரசு மீண்டும் 2020 இல் சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி பீடம் ஏறி உள்ளது. 2009 யுத்தம் முடிவுக்குப் பின்னர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் ஜனநாயக ரீதியாக பொதுச்சேவைகள், மற்றும் அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவது உலகம் அறிந்த உண்மை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாகவும் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகவும் இலங்கையில் மீண்டும் கொடுங்கோல் ஆட்சி நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கோரோனோ என்கின்ற கொடிய வியாதி இலங்கை மக்களையும் விட்டு வைக்கவில்லை. இதனால் அன்றாடம் கூலி வேலை செய்து நமது வாழ்க்கையை நடத்திவந்த மக்கள் அன்றாட உணவுத் தேவைகளுக்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்தனர். இதன் காரணமாக சர்வதேச சமூகத்தில் வாழ்கின்ற ஈழ உறவுகள் ஈழத்தில் வாழுகின்ற தமிழர்களுக்கு அத்தியாவசிய உதவிகளை வழங்கி ஓரளவுக்கு பசி பட்டினியில் இருந்து மீட்டு வந்தமை அனைவரும் அறிந்ததே. மக்களுக்கு நேரடியாக சென்று உதவிகளை வழங்கிய முன்னாள் போராளிகள் மற்றும் இளைஞர்கள் யுவதிகள் என அனைவரையும் பின்தொடர்ந்த இலங்கை குற்றப்பிரிவு புலனாய்வுத் துறையினரும், பயங்கரவாத தடுப்பு பிரிவினரும் தங்கள் கை வரிசைய காட்ட ஆரம்பித்துள்ளனர்.
இது மட்டுமல்ல புலம்பெயர்ந்து வாழுகின்ற ஈழ உறவுகள் ஈழத்தில் மக்களுக்கு உதவி செய்யும் விபரங்களையும் திரட்டி வெளிநாடுகளில் வாழுகின்ற புலம் பெயர் உறவுகளையும் இலக்கு வைத்து மிகவும் நெருக்கடியான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அது மட்டுமல்லாது ஈழத்தில் நடக்கும் கைது நடவடிக்கைகள் தொடர்பான செய்தி ஊடகங்களில் பதிவு செய்வதற்கு தடைகளை விதித்து வருகின்றனர். இதனால் பத்திரிக்கை சுதந்திரம் முற்றாக மறுக்கப்பட்ட நிலையில் ஈழத்தில் நடக்கும் கைதுகள் மற்றும் கொலைகள் தொடர்பான செய்திகள் சர்வதேச சமூகத்திற்கும் உள்நாட்டிலேயே வாழுகின்ற மக்களுக்கும் சென்றடையாதவாறு மிகவும் கச்சிதமாக காய் நகர்த்தி வருகின்றனர் இலங்கை புலனாய்வு துறையினர். எது எப்படி இருப்பினும் சில கைது நடவடிக்கைகள் அம்பலமாகியுள்ளது.
கடந்த 29 ஆம் தேதி அன்று அதிகாலை 3.30 மணி அளவில் முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பகுதியில் சமூக சேவையாளர்கள் இருவர் வெள்ளை வாகனத்தில் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அல்பிரட் சிவலிங்கம் (வயது: 44) என்பவரும், அருள்நேசன் (வயது:42) என்பவரும் கிளிநொச்சி மாவட்டம் விநாயகர் புரத்தைசேர்ந்த கலா (வயது: 44) என்ற குடும்ப பெண்ணும், யாழ் மாவட்டம் மானிப்பாயை சேர்ந்த கந்தசாமி, ரமேஷ் (வயது:38) என்பவரும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றமை, விடுதலைப்புலிகளை மீள உருவாக்கம் செய்தல் போன்ற குற்றச்சாட்டின் பேரில் கொழும்பிலுள்ள நான்காம் மாடி குற்றத் தடுப்பு பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். எந்தவித நீதிமன்ற ஆணையும் இன்றி இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் பல இளைஞர்களை கைது செய்து காலவரையின்றி தடுத்து வைத்து சித்திரவதை செய்வது இலங்கையில் வாழ்கின்ற இளைஞர்களுக்கும் மக்களுக்கும் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
01.07.2020 தொடக்கம் 10.08.2020 வரையிலான காலப்பகுதிக்குள் 30 க்கு மேற்பட்டவர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணையத்தில் சம்பந்தப்பட்ட உறவினர்களால் புகார் அளிக்கப்பட்டுள்ளதும், புகார்கள் தொடர்பாக விசாரணை செய்வதை இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் தடுத்து நிறுத்துவதாகவும் மனித உரிமைகள் ஆணையத்தில் உள்ள பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.. உலகத்தில் நடக்கும் கேளிக்கை செய்திகளை முதன்மையாக வெளியிடும் இணைய ஊடகங்கள் இலங்கை அரசோடு ஒத்து தமிழ் மக்களின் பிரச்சனைகளை பதிவு செய்வதில் தயக்கம் காட்டி வருவது உலகத்தில் வாழுகின்ற தமிழர்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Lankasri, IBC Tamil, Tamil win, JVP news போன்ற ஊடகங்கள் இலங்கையில் தமது அலுவலகங்களை பரந்த அளவில் திறந்துவைத்து தமிழர்களின் பெயரை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் நோக்கோடு இயங்கி வருவதோடு இலங்கை அரசால் தமிழ் மக்களுக்கு ஏற்படும் இன்னல்களை செய்திகளாக பதிவு செய்வதில் தயக்கம் காட்டி வருகிறது இதனால் மக்களிடையே ஊடகங்களின் நம்பிக்கை அற்றுப் போகின்றமை மிகுந்த கவலை அளிக்கிறது. ஒரு மாத காலத்துக்குள் 30 பேர் கைது செய்யப்படும் எந்தவிதமான செய்திகளும் இணைய ஊடகங்களிலோ, பத்திரிகைகளிலோ, தொலைக்காட்சி செய்திகளிலோ வெளிவராதவாறு இலங்கை அரசு பத்திரிக்கை சுதந்திரத்தை முடக்கியுள்ளது.
2009ஆம் ஆண்டு லட்சக்கணக்கில் தமிழர்களை கொன்றழித்த ராஜபக்சே அரசுகள் மீண்டும் ஆட்சி பீடம் ஏறி உள்ளதால் தமிழர்களின் வாழ்க்கை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்படும் என்பது யதார்த்தமான உண்மை.. சர்வதேச மனித உரிமை விதிகளை தூக்கி எறிந்துவிட்டு எந்த வித அச்சமும் இன்றி நினைத்ததை நடத்தி முடிக்கும் இலங்கை ஏகாதிபத்திய அரசுகள் மீது சர்வதேச சமூகம் ஒரு நல்ல தீர்வினை எடுக்காத பட்சத்தில் மீண்டும் இலங்கையில் இரத்த ஆறும், இன அழிப்பும் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
இந்த வாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை மனித உரிமைகள் தொடர்பாக பல அச்சங்களை வெளியிட்ட போதிலும் இலங்கை அரசு அவற்றைக் கண்டுகொள்ளாது தொடர்ந்து இராணுவ பிறர் கண்ணங்களையும், வீதிச் சோதனைகளையும் முடுக்கிவிட்டு தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பல நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. இதனால் அன்றாட வாழ்க்கையை தொடரும் மக்கள் நாள்தோறும் அச்சத்துடன் தங்கள் வாழ்க்கையை தொடர வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே இலங்கை அரசு மீது சர்வதேச சமூகமும், நமது அண்டை நாடான இந்திய அரசும் எப்படிப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள போகின்றது என்பதே உலகத்தில் வாழ்கின்ற அனைத்து தமிழர்களுக்கும் எதிர்பார்ப்பாக உள்ளது.
சர்வதேச சமூகம் ஈழத் தமிழர்கள்மீது கரிசனை கொள்ளுமா? தமிழர்களின் அவல நிலை மாறுமா? ஒரு நிம்மதியான சந்தோசமான வாழ்க்கையை தொடர்வதற்கான நல்ல தீர்வினை சர்வதேச சமூகம் பெற்றுத் தருமா என்பதே ஈழத்தமிழர்களின் அவா……!
எழுத்து:
வன்னி வாணன்
10.08.2020
Wednesday, 5 August 2020
ரஷ்யா அனுப்பிய கெமிக்கல்.. 12ம் எண் அறையில் நடந்த சம்பவம்.. லெபனான் வெடிப்பிற்கு முன் நடந்தது என்ன?
எப்படி வந்தது?
இந்த பார்சல் ரஷ்யாவில் இருந்து வந்தது.லெபனான் கடல் பகுதிக்கு அருகே 2013ல் இந்த பார்சல் வந்த போது, கடலில் ஏற்பட்ட காற்று காரணமாகவும், தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும், லெபனான் அரசு அனுமதியோடு இந்த ரஷ்யாவின் கப்பலை இங்கே நிறுத்தி உள்ளனர். இது தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமானது என்கிறார்கள். அதன்பின் இந்த கப்பலை மீண்டும் துறைமுகத்தில் இருந்து அனுப்ப லெபனான் துறைமுக அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
அங்கேயே வைத்தனர்
கிடங்கில் வைத்து பின் பணம் பார்க்கலாம் என்று முடிவு செய்துள்ளனர். அம்மோனியம் நைட்ரேட் விலை குறைவானது என்பதால் அதற்கு உரியவரும் (பெயர் வெளியிடப்படவில்லை) அதை உரிமை கோராமல் விட்டுவிட்டார். இதையடுத்து அதில் இருந்து அம்மோனியம் நைட்ரேட் கிடங்கில் வைக்கப்பட்டது. அங்கிருக்கும் அறை 12 மிகவும் பெரியது என்பதால், அங்கு மொத்தமாக 2750 அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டது.
ஆனால் அதன்பின்
ஆனால் அதன்பின் இந்த அம்மோனியம் நைட்ரேட்டை அங்கு யாரும் வாங்க முன்வரவில்லை. இதனால் இதை என்ன செய்வது என்று தெரியாமல் கஸ்டம்ஸ் அதிகாரிகள் குழம்பி போய் இருக்கிறார்கள். மீண்டும் அதை ஓனருக்கே விற்க முயன்றால், அவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து அந்நாட்டு நீதிபதிகள் குழுவிற்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பி உள்ளனர். இந்த அம்மோனியம் நைட்ரேட் மூட்டைகளை என்ன செய்வது என்று கேட்டு இருக்கிறார்கள்.
கடிதம் எத்தனை
ஒருமுறை அல்ல மொத்தம் 6 முறை இது போல கடிதம் அனுப்பி உள்ளனர். 2014, 2015, 2016, 2016 (மீண்டும்), 2017, 2018 என்று ஆறு முறை கடிதம் அனுப்பி உள்ளனர். ஒவ்வொருமுறை இதை மக்களிடம் விற்றுவிடுங்கள், ராணுவத்திற்கு விற்றுவிடுங்கள், குண்டுகள் தயாரிக்கும் அதிகாரபூர்வ நிறுவனங்களுக்கு விற்று விடுங்கள் என்று ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் ஒருமுறை கூட அம்மோனியம் நைட்ரேட்டை வாங்க யாருமே முன் வரவில்லை.
சிக்கல் கடைசியாக எழுதிய கடிதத்தில், அம்மோனியம் நைட்ரேட் மூட்டைகளை யாரும் வாங்கவில்லை. இதை பாதுகாப்பாக வைக்கும் வசதி எங்களிடம் இல்லை. இதனால் இதற்கு தக்க வழியை ஏற்படுத்திக் கொடுங்கள் என்று கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு நீதிபதிகள் குழுவில் இருந்து பதில் வரவே இல்லை. இதன்பின் அந்த அம்மோனியம் நைட்ரேட் விஷயத்தை அப்படியே கஸ்டம்ஸ் குழுவும் மறந்துவிட்டது.
விதி விளையாடியது
இங்குதான் விதி விளையாடி இருக்கிறது. அம்மோனியம் நைட்ரேட் என்பது மொத்தமாக குவிக்கப்பட்டு இருந்தால் வெப்பத்தை வெளியிடும். அதேபோல் வருடம் செல்ல செல்ல வெப்பம் அதிகரிக்கும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் மொத்தமாக இந்த அம்மோனியம் நைட்ரேட் நெருப்பை உருவாக்கும். தீயே இல்லாமல் நெருப்பை உருவாக்கும் சக்தி கொண்டது இந்த அம்மோனியம் நைட்ரேட். அந்த கிடங்கில் இப்படித்தான் மொத்தமாக அம்மோனியம் நைட்ரேட் குவித்து வைக்கப்பட்டு இருந்தது.
12ம் எண் அறை
சரியாக 12ம் எண் அறையில் அம்மோனியம் நைட்ரேட் குவித்து வைக்கப்பட்டு இருந்தது. அதில் 6 வருடம் போனதாலும், மொத்தமாக ஒரே இடத்தில் அடைத்து வைக்கப்பட்டு இருந்ததாலும் அழுத்தம் அதிகரித்து வெப்பம் வெளியாகி உள்ளது. இந்த வெப்பமே வெடிப்பிற்கு காரணமாக மாறி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இந்த 12ம் எண் அறையில் இருந்த கெமிக்கல் வெடித்துதான் இவ்வளவு பெரிய சேதம் ஏற்பட்டு இருக்கும் என்று தற்போது வல்லுநர்கள் குழு தெரிவிக்கிறது.
Tuesday, 4 August 2020
ஹாலிவுட் விரும்பாத உண்மைக் கதை – கொரோனாவிடம் தொற்றுப் போன அமெரிக்கா !:
கொரோனா வைரஸ் தோன்றிய நாடான சீனா, அமெரிக்காவை விட நான்கு மடங்கு மக்கள் தொகையைக் கொண்டிருந்தாலும் கொரான தொற்று மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையில் அமெரிக்காவோடு ஒப்பிடும் போது பத்தில் ஒரு பங்கையே கொண்டிருக்கிறது.வல்லரசு அமெரிக்காவின் பிரம்மாண்டமான இராணுவ புள்ளிவிவரங்கள் உருவாக்கியிருக்கும் வலிமையை கோவிட் 19 விவரங்கள் கலைத்துப் போட்டுவிட்டன. உலகளாவிய மக்கள் தொகையில் ஐந்து சதவீதத்தை கொண்டிருக்கும் அமெரிக்கா, உலகளாவிய கோவிட் 19 தொற்றுகளில் 32 சதவீதத்தைக் கொண்டிருக்கிறது. அதாவது உலக அளவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட மக்களில் மூன்றில் ஒருவர் அமெரிக்கராக இருக்கிறார். போலவே உலக கொரோனா மரணங்களின் 32 சதவீதத்தை அமெரிக்காவே வைத்திருக்கிறது.
மருத்துவமனைகளில் இருக்கும் ஊழியர் பற்றாக்குறை, அது ஏற்படும் மன அழுத்தம், மருத்துவமனைகளின் பொது அரங்குகள் மற்றும் உணவகங்களை கூட நோயாளிகளுக்கான படுக்கைகளை போட்டு பயன்படுத்த வேண்டிய நிலை, மருத்துவமனை நிர்வாகங்கள் வென்டிலேட்டர்களை வாங்குவதற்கு காட்டும் தயக்கம் போன்றவற்றையும் அந்த மருத்துவர் பட்டியிலிடுகிறார்.நியூயார்க் நகரில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர், அவரும் பிற சுகாதரத்துறை நிபுணர்களும் எதிர்கொள்ளும் சிரமங்களை பட்டியலிடுகிறார். ஒரு முறை மட்டும் பயன்படுத்த வேண்டிய முகமூடி மற்றும் கவச ஆடைகளை மீண்டும் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. சில நேரம் இவை இல்லாமலும் பணியாற்றுகிறார்கள். சில இடங்களில் தொற்றிலிருந்து பாதகாத்துக் கொள்ள பெரிய குப்பை பைகளை அணிந்து வேலை செய்கின்றனர்.
ட்ரம்ப் முட்டாள் போல பேசுகிறார். ஹாலிவுட் ஹீரோக்களின் அமெரிக்க பெருமிதத்தை வெட்டித்தனமாக பீற்றுகிறார். ஆரம்பத்தில் கொரோனா வைரசால் பெரிய பாதிப்பு இல்லை என்றார். பின்னர் பாதிப்பு ஏற்பட்ட பிறகு சீன வைரஸ் என்று சீனாவின் மீது பழி போட்டார். பின்னர் உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதியை நிறுத்தினார். இவையெல்லாம் டிரம்ப் எனும் ஒரு தனிநபரின் பிரச்சினை போன்று புரிந்து கொள்வது தவறு. அமெரிக்காவின் மருத்துவத் தோல்வி என்பது டிரம்பையும் தாண்டியது.பரவலாகி அழிவை ஏற்படுத்தும் தொற்று நோய் மற்றும் சரிந்து வரும் பொருளாதார நெருக்கடிகள்…. என இரட்டை நெருக்கடிகள் அமெரிக்க மக்களை சூழ்ந்துள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவும், நிதி உதவியையை வழங்கவும் துரிதமான மற்றும் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதாக டிரம்ப் நிர்வாகத்தை குறை கூறுவது எளிது. உண்மையில் நெருக்கடிகளின் வேர்கள் டிரம்பின் காலத்திற்கு முன்பே ஆழப் புதைந்து விட்டன. எந்த ஒரு அதிபராக இருந்தாலும் அவரது நிர்வாகத்தின் கீழ் அமெரிக்கா தொற்று நோய் பேரிடர் காலத்தில் மோசமாகித்தான் போயிருக்கும்.