Friday 6 August 2021

விடுதலை புலிகளின் ஆயுத மௌனிப்பிற்கான போரியல்காரணம்...

 இலங்கையில் விடுதலை புலிகளின் ஆயுதபோராட்டம் மௌனிக்கப்பட்டு 11 வருடங்கள் முடிவடைந்துவிட்டன. ஆனால் இன்றுவரை புலிகளின் ஆயுதப்போராட்டம் எவ்வாறு அழிக்கப்பட்டது என்ற போரியல்ரீதியான ஆய்வுகள் தமிழ் சமூகத்திடம் முறையாக போய் சேரவில்லை அல்லது தமிழ் சமூகமும் போரியல்ரீதியான அறிவில் இன்னும் கூமுட்டையாக இருப்பதால் அறிந்து கொள்வதில் பெரும் ஆர்வம் காட்டவில்லை என்றுதான் கருதவேண்டியுள்ளது.



எனது பல பதிவுகளில் விடுதலை புலிகளின் ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்ததற்கான மூல காரணியாக உலக ஒழுங்கையே குறிப்பிட்டு வந்திருக்கிறேன். இன்று இலங்கை இராணுவத்தின் வெற்றிக்கு பல ஆய்வாளர்கள் பல காரணிளை முன்வைக்கும் போதிலும் , அவையெல்லாம் இந்த மூல காரணத்தில் இருந்து பிறந்த காரணிகளே.

போரியல்ரீதியாக புலிகளின் ஆயுத மௌனிப்பை ஆய்வு செய்யும்போது , வெறும் மொட்டையாக இதுதான் காரணம் என்று மனதிற்குள் தோன்றியதை சொல்லிவிட்டு கடந்து போகமுடியாது. அதை நிறுவவேண்டும். எப்படி உலக ஒழுங்கின் அணுகுமுறை போர்களத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியது, அது எப்படி புலிகளுக்கு பாதகமாக அமைந்தது என்பதை நிறுவவேண்டும். எதையும் விஞ்ஞானரீதியாக, அறிவுபூர்வமாக நிறுவப்பட முடியாதாயின், அதை ஆய்வாக கருத முடியாது.

என்னுடைய பதிவையே எடுத்துகொண்டால் நான் பல பதிவுகளில் மூலகாரணியாக உலக ஒழுங்கையே குறிப்பிட்டிருக்கிறேன். அதிலிருந்து பிறந்த காரணிகளில் , போர்களத்தில் பெரும் பாதகத்தை புலிகளுக்கு ஏற்படுத்திய மிக முக்கிய காரணியாக நான் எப்போதும் குறிப்பிடுவது
 ‘ புலிகளுக்கான கடல்வழி ஆயுத விநியோகம் துண்டிக்கப்பட்டதையே’. 

இதை முறையாக நிறுவ போனால் நீண்ட பதிவாக எழுதவேண்டிவரும். அதனால் உங்களுக்கு புரிதலை ஏற்படுத்துவதற்காக, மிக சுருக்கமாக இதை எப்படி இலங்கை உலக ஒழுங்கின் ( குறிப்பாக அமெரிக்கா, இந்தியாவின்) உதவியுடன் செய்து முடித்தது, இது போர்களத்தில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியது என்பதை விளக்கியிருக்கிறேன்.

1. உலக ஒழுங்கின் உதவியுடன் இலங்கை கடற்படை புலிகளின் கடல்வழி ஆயுத விநியோகத்தை துண்டித்தல்.

இந்த முதல் பகுதியை விளக்க Sri Lankan navy chief Adm.Jayanath Colombage எழுதிய Asymmetric Warfare At Sea: The Case of Sri Lanka என்ற புத்தகத்தில் உள்ள அடிப்படை தகவல்களையும், Maritime interdiction in counterinsurgency : the role of the Sri Lankan Navy in the defeat of the Tamil Tigers என்னும் ஆய்வுகட்டுரையையும் எடுத்துகொண்டுள்ளேன்.

இவை இரண்டும் இலங்கை கடற்படையினருக்கு அமெரிக்காவும், இந்தியாவும் எப்படி புலிகளின் floating warehouses தாக்கியழிக்க உதவின என்பதை விவரிக்கின்றன. 

it became very important for the Sri Lankan navy to cut off the LTTE’s ammo and weapons supply. And when it was discovered that the LTTE was storing its munitions in floating warehouses in international waters away from the main shipping lines, the help of the US Ambassador and the US Defense Attache was sought making use of the US Global War on Terror.

“They (the US embassy officials) agreed to provide necessary target information after verifying the tactics and methods used by the SLN (Sri Lankan navy) to attack these floating warehouses,” Adm.Colombage writes.

“The US side wanted assurance that we will not attack any innocent ship or civilians unless they are 100 % LTTE combatants. Once the procedure was explained, they were satisfied and positioned a satellite onto the probably area that we gave them.”

“Then one day, in September 2007, we got an intelligence report saying that they (the Americans) had detected some suspicious vessel in the area,” Adm.Colombage says.
But this posed a major challenge to the SLN. The question was how to reach that distant place, stay there for a while, and sail back to base.

According to a former Director of Naval Intelligence, the destruction of the floating armories deprived the LTTE of a large quantity of 152 mm, 130 mm and 122 mm artillery shells and 122 mm mortar rounds among other ammo. MV Koshia, destroyed in September 2007, had 29,000 artillery shells. The LTTE also lost electronic warfare and communication equipment; high powered outboard motors; water scooters; jet skies; swimmer delivery vehicles; radars; GPSs and other war-like material. MV Matsushima had torpedoes, bullet proof vehicles, light aircraft and tons of explosives besides artillery shells.

அடுத்தது Maritime interdiction in counterinsurgency : the role of the Sri Lankan Navy in the defeat of the Tamil Tigers ஆய்வுகட்டுரையிலிருந்து சில பகுதிகள். ( இந்த தகவல் உள்ளடங்கிய பக்கம் படமாக இணைக்கப்பட்டுள்ளது)

The process of locating and destroying the LTTE cargo vessels required a coordinated and sustained effort. Sri Lanka successfully located the floating arms warehouses through both domestic and international intelligence gathering. A Sri Lankan Navy officer described his experience with the first attempts to track down the LTTE vessels:

“It all began in 2006 when we started to conduct aerial reconnaissance. The Indian Navy sent a Dornier aircraft to Colombo. I was the first one to go onboard. We went to the equator on an aerial patrol. We spotted one ship without [hull identification] and we came back and reported it. We sent our ships to go after the vessel but by the time they arrived, the ship had gone... Sri Lanka began its own reconnaissance effort with navy aircraft and India continued to conduct aerial missions to locate the LTTE ships.”

In addition to cooperation with India, the United States also provided intelligence to the SLN on the location of the LTTE arms warehouses. Through the collection of Signals Intelligence (SIGINT) and Imagery Intelligence (IMINT), U.S. Pacific Command passed the location of the LTTE cargo vessels to Sri Lankan Naval commanders.The intelligence proved critical in locating the more remote LTTE vessels that were loitering more than a thousand nautical miles from Sri Lankan waters.

2. கடல்வழி ஆயுத விநியோகம் முற்றாக துண்டிக்கப்பட்டதால் புலிகளுக்கு களத்தில் போரியல்ரீதியான பின்னடைவு

இதை விளக்குவதற்கு முன்பு போர்களத்தின் அடிப்படை பண்புகள் உங்களுக்கு தெரியவேண்டும். இதை பலமுறை முன்பு விளக்கியிருக்கிறேன். 

போரின் வெற்றியை தீர்மானிக்கும் மிக அடிப்படையான காரணிகள் இரண்டுதான்.

* படைகளின் எண்ணிக்கை ( number of troops)
* ஆயுதங்களின் நவீனதன்மை அதன் எண்ணிக்கை , அதன் சூட்டுவலு( weapons technology ,quantities and fire power)

இலங்கையின் மொத்த சனத்தொகையில் சிங்களவர்களின் சதவீதம் 72%. இலங்கை தமிழர்கள் 12%. மக்கள் சனத்தொகைக்கு ஏற்பவே MILITARY PARTICIPATION RATIO ( MPR) இருக்கும். ஆக எந்தவொரு கட்டத்திலும் இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கை புலிகளை விட பல மடங்கு அதிகமானதாகவே இருக்கும். 

இலங்கை அரசு உலக ஒழுங்கால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு state power. விடுதலை புலிகள் non state military force. 
ஒரு State power இனால் கொள்வனவு செய்யக்கூடிய கனரக ஆயுதங்களை (tanks, artillery , helicopters, fighter planes) ஒரு non state actor இனால் பெற்றுகொள்ள முடியாது.

ஆனால் புலிகள் இந்த இரண்டு போரியல் காரணிகளும் தமக்கு பாதகமாக இருந்தாலும் , தலைவர் பிரபாகரனது பிரமிக்க வைக்கும் போரியல் உத்திகளை கொண்டு போரியல் விதிகளையே தலைகீழாக்கியிருந்தார்கள்.

தங்களது ஆளணி பற்றாக்குறை, கனரக ஆயுதங்கள் இல்லாமைக்கு மாற்று வழியாக தங்களது பீரங்கி, மோட்டார் தாக்குதல்களை புதுமையான போரியல்உத்திகளோடு பயன்படுத்தினார்கள். 

அதில் ஒன்றுதான் அழித்தொழிப்பு சமர்களில் அமெரிக்க பாணியிலான shock and awe வகையிலான தாக்குதல்கள் நடத்துவது. இலங்கை அதிக எண்ணிக்கையிலான கனரக ஆயுதங்களை வைத்திருந்த போதும் புலிகள் தங்களது அழித்தொழிப்பு , முறியடிப்பு சமர்களில் பயன்படுத்திய சூட்டுவலு செறிவாக இருந்தது. இது இலங்கை இராணுவத்திற்கு அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியதுடன், அவர்களது உளவியலை பெருமளவு பாதித்தது.

In the asymmetrical land war that was going on in Sri Lanka, with the LTTE out-manned and out-gunned, the LTTE was using ammunition and area weapons like artillery and mortars liberally to strike terror in the heart of the enemy.

It did not show the restraint and conservatism conventional armies generally show in using their ammo. For the LTTE, firing had to be well-targeted and also exceptionally heavy, to make up for the shortage of men and artillery pieces.

As Seelan, a former “Sea Tiger” said: “When army fired a shell, we fired about 20 shells. We fired a lot of shells like mortars and artillery.”

The heavy shelling from the LTTE did have a devastating effecting on the Sri Lankan army. A former Army Commander said: “Casualties due to artillery and mortars were the heaviest on our side. I think it was more than 50 percent”.

இலங்கை இராணுவம் பெரியளவிலான இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்கும்போது ஒரே சமயத்தில் பல முனைகளை திறக்கும். அதன்மூலம் புலிகள் தங்களது ஆளணியை பலமுனைக்கும் அனுப்பும்போது அவர்களது எதிர்ப்பு பலவீனமாகும் என்ற அடிப்படையில். ஆனால் புலிகள் இந்த ஆளணி பற்றாக்குறைக்கு மாற்றுவழி கண்டுபிடித்தார்கள். குறைவான ஆளணியுடன் , துல்லியமான உளவுதகவல்களை கொண்டு( HUMINT) , இலக்குகள் மீது துல்லியமான , செறிவான சூட்டு தாக்குதல்களை நடத்தி பெரும் இராணுவ நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் சரியான நேரத்தில், சரியான இலக்கின் மீது அழித்தொழிப்பு சமரை நடத்துவார்கள். 

இந்த போரியல் உத்தியை ஈழப்போர் 3 நெடுக பயன்படுத்தினார்கள்.

ஆனால் ஈழப்போர் 4 ஆரம்பித்தபோது அமெரிக்கா, இந்தியாவின் உதவியுடன் இலங்கை கடற்படை புலிகளின் கடல்வழி ஆயுத விநியோகத்தை துண்டித்துவிட்டதால் , இம்முறை புலிகளுக்கு பெருமளவிலான ஆயுதப்பற்றாக்குறை ஏற்பட்டது. கடைசிவரையில் அழித்தொழிப்பு சமரையே நடத்தமுடியாத நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பல முனைகளில் நகர்ந்த இலங்கை இராணுவத்தின் முன்னேற்றத்தையும் தடுத்து நிறுத்த கூடிய செறிவான, சூட்டுவலு கூடிய தாக்குதல்களை நடத்த ஆயுதங்கள் இல்லாமல் போனது.

நான் குறிப்பிட்ட போரின் வெற்றியை தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றான ஆயுதங்கள் புலிகளுக்கு வருவது முற்றாக தடைபட்டு போனது.

இதை இலங்கையின் கடற்படை தளபதியின் வார்த்தைகளிலேயே சொன்னால் , பின்வருமாறு வரும்.

Between September 2006 and October 2007, the SLN succeeded in destroying eight large LTTE warehouse ships containing over 10,000 tons of war-related material.” Vice Admiral Karannagoda later described the contents of the ships:

“These vessels were carrying over 80,000 artillery rounds, over 100,000 mortar rounds, a bullet-proof jeep, three aircraft in dismantled form, torpedoes and surface-to-air missiles. There were a large number of underwater swimmer delivery vehicles and a large quantity of diving equipment. There was radar equipment as well as outboard motors with high horsepower.”

இதை இலங்கை கடற்படை உலக ஒழுங்கின் உதவி இல்லாமல் செய்திருக்கவே முடியாது. காரணம் பிரமாண்டமான சர்வதேச கடற்பரப்பில் திரியும் ஆயிரக்கணக்கான சரக்கு கப்பல்களில் புலிகளின் சரக்கு கப்பலை track செய்வதென்பது அமெரிக்காவின் செய்மதி உளவுதகவல் இன்றி இலங்கையால் கண்டுபிடித்திருக்கமுடியாது.

அத்துடன் சர்வதேச கடற்பரப்பில் தொலை தூரத்திற்கு செல்லக்கூடிய நீண்ட தூர கடற்படை கப்பல்களை உதவியாக இலங்கை கடற்படைக்கு கொடுத்தது இந்தியாவே. ( சர்வதேச கடற்பரப்பில் எவ்வளவு தொலை தூரத்தில் புலிகளது ஆயுத கப்பல்கள் அழிக்கப்பட்டன போன்ற தகவல்களை உள்ளடக்கிய படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது)

முன்பு சொன்னது போல விடுதலை புலிகளின் ஆயதப்போராட்டத்தின் மௌனிப்புக்கு போரியல்ரீதியாக மூல காரணியிற்கு பிறந்த பல காரணிகள் உண்டு. அதில் மிக முக்கியமான , போரின் போக்கையே மாற்றியமைத்த காரணிதான் ‘ புலிகளின் கடல்வழி விநியாக துண்டிப்பு’

க. ஜெயகாந்த்

No comments:

Post a Comment