Friday 6 August 2021

புலிகள் பாசிஸ்டா?

 தமிழ் தேசிய நினைவு நாட்களின் போது எல்லாம் இலக்கியவாதிகள் என்கிற பெயரில் வெளிநாடுகளில் பதுங்கி இருக்கும் பத்மநாபா தலைமையிலான EPRLF கும்பலை சேர்ந்த சிலர் 

புலிகள் இயக்கம் ஒரு பாசிஸ்ட் என்றும் ராஜபக்சே தேசியவாதிகளாகவும் கதை எழுத தொடங்கி விடுகிறார்கள் 

1980 க்ளில் வடக்கு கிழக்கு எங்கும் தோட்டு தில்லை , மொட்டை மாமா , கொட்டடி மணி , சின்னத்தம்பி , சுருள்வான் என ஊர் தெருப்பொறுக்கிகள் பெயர்களை சூட்டி கொண்டு இலங்கை மற்றும் இந்தியா ஆமி சகிதம் நரபலி எடுத்த இந்த கும்பல் இப்போது இலக்கியவாதிகளாக மாறி ஜனநாயக பாடம் நடத்துகிறார்கள் 

புலிகள் பாசிஸ்டா, கொன்றது சரியா தவறா என்பதெல்லாம் எங்களுக்கு தெரியாது.

ஆனால் 1980 க்ளில் நடந்த ஒரு சில சம்பவங்களை மட்டும் பதிவு செய்கின்றோம் . அதற்கு பிறகு முடிவு உங்களுடையது.

சம்பவம் 1
மானிப்பாய் பகுதிக்கு ஈ.பி.ஆர்.எல்.எஃப். இராணுவப் பொறுப்பாளராக நிசாம் என்பவர் இருந்தார் . 

அவரது சொந்தப் பெயர் பிரபாகரன். இணுவிலைச் சேர்ந்தவர். யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைக்கு புலிகள் இயக்கப் பொறுப்பாளராக இருந்தவர் பாரத். 

சுதாகர் கோஷ்டி பாரத்தைத் தேடிச் சென்றது. 

பாரத் வீட்டுக்குள் புகுந்தது. அங்கு பாரத் இல்லை. பாரத் இல்லாவிட்டால் என்ன? பாரத்தின் தங்கை அழகாக இருந்தாள். அந்தப் பெண்மீது பாய்ந்தான் சுதாகர். அழுதாள். துடித்தாள். மன்றாடினாள். பாய்ந்தவர்களுக்கு மனம் இரங்கவில்லை. 

பாலியல் வல்லுறவுக்கு உள்ளானாள். அத்தோடு விட்டார்களா? பாலியல் வல்லுறவுகொண்டுவிட்டு அப்பெண்ணின் உடலை துப்பாக்கிக் குண்டுகளால் சல்லடையாக்கிச் சென்றார்கள். 

அப்பெண்ணின் பெயர் ரஞ்சி.

சம்பவம் 2
EPRLF உறுப்பினர்களில் இருந்த இன்னுமொருவரின் ராஜா. 

அவருக்கு ஒரு பெண்மீது காதலுக்கு வீட்டார் எதிர்ப்புத் தெரிவித்தனர். 

இந்த ராஜா என்கிற தனது சகாவிற்க்காக ஆயுதம் ஏந்தி களம் புகுந்தார் சுதாகர். 

சாதாரண களமல்ல. ஒரு முகாமைத் தாக்கும் தீவிரத்துடன் குறிப்பிட்ட பெண்ணின் வீட்டை நோக்கி மோட்டார் ஷெல்கள் ஏவப்பட்டன. துப்பாக்கி வேட்டுக்கள் பொழியப்பட்டன. 

கதவை உடைத்து உட்பிவேசித்து வெற்றிகரமாக பெண்ணைக் கைப்பற்றிச் சென்றனர். புலிகள் ஆதரவாளர்கள் என்று சந்தேகிக்கப்படுவோர் வீடுகளில் கொள்ளையடிப்பது, பணம் கறப்பது போன்ற நடவடிக்கைகளால் தனக்குச் சொந்தமாகவே பணம் திரட்டிக்கொள்ளவும் சுதாகர் மறக்கவில்லை.

சம்பவம் 3
மானிப்பாய் பகுதிக்கு ஈ.பி.ஆர்.எல்.எஃப். இராணுவப் பொறுப்பாளராக இருந்த நிசாம் என்பவன் படுகொலைகளில் தனிச் சாதனையாக 87 பேரை கொலை செய்தவர். 

மண்வெட்டியால் தலையை வெட்ட, வெட்டப்பட்ட தலை எப்படித்துடித்தது என்பதை விபரிப்பதில் இவர் கோஷ்டியில் இருந்த சிலருக்கு அலாதிக்குஷி. 

நிசாமால் கொல்லப்பட்டவர்களில் சுன்னாகத்தைச் சேர்ந்த கஜன் போன்ற சிலர்தான் புலிகள் இயக்கத்தினர். ஏனையோர் பெரும்பாலும் அப்பாவிகள்.தனது சகோதரியின் கணவரையும் புலிகள் இயக்க ஆதரவாளர் என்று குற்றம் சாட்டிச் சுட்டுக் கொன்றார் நிசாம்.

சம்பவம் 4
ஈ.பி.ஆர்.எல்.எஃப். யாழ் மாவட்ட இராணுவப் பொறுப்பாளராக இருநதவர் ரவீந்திரன். இயக்கப் பெயர் ராபீக்.பத்மநாபாவின் தலைமையின் பலவீனங்கள் தடுமாற்றங்கள் என்பவற்றை புரிந்துகொண்ட ராபீக் தனது பங்குக்கு தானும் பணம், நகை சேர்த்து வைப்பதில் தவறில்லை என்ற முடிவுக்கு வந்தார்.

ராபீக்குடன் சுதாகருக்கு நெக்கம் அதிகமானது. சுதாகருக்கும் நிசாமுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் ராபீக் சுதாகர் பக்கம் நின்றதால், நிசாம் இயக்கத்தை விட்டு வெளியேறினார். 

வெளியேறியவர் வெறுங்கையுடன் செல்லவில்லை. திரட்டிய பணம், சுருட்டிய நகை சில ஆயுதங்கள் என்பவற்றுடன் வெளியேறினார்.கொழும்புக்கு ஓடிய நிசாம் அங்கு அட்டகாசம் செய்தார். கொழும்பு 
தங்குவிடுதி ஒன்றில் ஏ.கே.47 துப்பாக்கிகள் இரண்டு, பிஸ்டல் இரண்டு என்பவற்றுடன் கைது செய்யப்பட்டார். 
தற்போது இந்த சமூக விரோதி மட்டக்களப்பில் குடும்பஸ்தராக இருக்கிறார்.

சம்பவம் 5.
இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு காலம் அது. அன்று ஒரு நாள் திடீரென்று இந்திய இராணுவமும் ஈபிஆர்எல்எப் இயக்கமும் சேர்ந்து எமது ஊரை சுற்றிவளைத்து நூற்றுக்கணக்கான இளைஞர்களை கைது செய்து ஊர் கோயிலின் முன் சுடு மணலில் படுக்க வைத்திருந்தார்கள்.

நானும் எனது அண்ணாவையும் கைது செய்திருந்தபடியால் எனது அம்மாவுடன் அந்த இடத்திற்கு சென்றிருந்தேன்.

ஈபிஆர்எல்எப் இயக்கத்தினர் அடையாளம் காட்டும் இளைஞர்களை தனியாக பிரித்து வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.

எஞ்சியிருந்தவர்கள் முன் ஒரு ஜீப் திடீரென்று வந்து நின்றது. இந்திய இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்க ஒரு தாடிக்காரர் வந்து இறங்கினார்.

எமக்கு பக்கத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருத்தர் 'அவர் யார்?"என மற்றவரை மெதுவாகக் கேட்டார். "அவர்தான் பத்மநாபா" என்றார் அவர்.

கேட்ட மாத்திரத்தில் கேட்டவரிடமிருந்து சிறுநீர் பிரிந்து சாரம் ஈரமாகிவிட்டது.

தமிழ் திரைப்படங்களில் சாரத்துடன் சிறுநீர் கழிக்கும் இந்த மாதிரி நகைச்சுவை காட்சி அடிக்கடி வருவதுண்டு. ஆனால் என்னால் சிரிக்க முடிவதில்லை. காரணம் பத்மநாபாவின் பெயரை கேட்டவுடன் அந்த அப்பாவி அண்ணர் அடைந்த பதட்டமும் விளைவாக அவர் கழித்த சிறுநீருமே எனக்கு ஞாபகத்தில் வரும். 

ஏனெனில் இந்திய இராணுவத்தடன் சேர்ந்து "புலிகளை அழிக்கிறோம்" என்ற போர்வையில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி இளைஞர்களின் குதத்தினுள் கொக்ககோலா போத்தலை செருகியவர் பத்மநாபா.

இவ்வாறு இலங்கை மற்றும் இந்தியா ராணுவத்தின் கூலிப்படையாக சொந்த மக்களையே காசுக்காக துடிக்க துடிக்க கொலை செய்த EPRLF கும்பல ஜனநாயகம் குறித்தும் எங்களுக்கு பாடம் நடத்துகின்றது.

புலிகளை பாசிட் என்கிறது . மகிந்த ராஜபக்சே குடும்பத்தை தேசிய வீரர்கள் என்கிறார்கள் 

தங்களை இலக்கியவாதிகளாக உருமாற்றி இருக்கும் இந்த கும்பலை சேர்ந்த பலர் தங்களை தாங்களே அறிவுஜீவிகளாக கற்பனை பண்ணி கொள்ளுகின்றார்கள் 

கால கொடுமை

No comments:

Post a Comment